வியாழன், 6 அக்டோபர், 2022

நலம் தரும் நவராத்திரி - 4


சரஸ்வதி பூஜை அன்று  மாலை சாற்றும் முன் எடுத்த படம்.

நலம் தரும் நவராத்திரி - 3 சென்ற பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

எங்கள் குடியிருப்புக்கு பக்கத்தில் இருக்கும் "அருள்மிகு பொய்சொல்லா மூர்த்தி அய்யனார்" கோவில் நவராத்திரி விழா   நிகழ்வுகளை பற்றி  தொடர் பதிவாக  எழுதி கொண்டு இருப்பதில் நிறைவு பகுதி , மற்றும் உறவினர் வீட்டு கொலு வேறு இரண்டு கோவில் கொலு படங்கள்  இந்த பதிவில் இடம் பெறுகிறது.


 தங்கை பேரன் விடுமுறைக்கு தங்கை வீட்டுக்கு  வந்து இருந்தான், அவனை அழைத்துக் கொண்டு தங்கை எங்கள் வீட்டுக்கு வந்தாள், 

எங்கள் வீட்டுக்கு வந்த போது திருப்பரங்குன்றம் போக வேண்டும் பேரன்களுக்கு காட்ட   என்றதால் எல்லோரும் போனோம்.

மாலை 4 மணிக்கு போய் 50 ரூபாய் டிக்கட் வாங்கி பார்த்து விட்டோம்.  நிற்க விடவில்லை "போங்க  போங்க "என்று நகர வைத்து விட்டார்கள். அதனால் விரைவாக தரிசனம் முடிந்தது. 

அங்கு  எடுத்த நவராத்திரி விழா படங்கள்  :- 

அம்பாள் சிவ பூஜை செய்வது போல அலங்காரம்

சுவாமி இருக்கும் மண்டபத்தை சுற்றி வாகனங்களை அலங்காரமாக நிறுத்தி வைத்து இருந்தார்கள்.


கீழே முருகன் தெய்வானை  அலங்காரமாக இருந்தார்கள். தூரத்திலிருந்து படம் எடுக்க முடியும் பக்கத்தில் போக முடியாது. முருகனை வணங்கி வந்த  பின் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அய்யனார் கோவில் அழைத்து போனேன், கொலு பார்க்க.

செவ்வாய்க் கிழமை ஸ்ரீ மகா சரஸ்வதி அலங்காரம்.

  திருமதி . சுப்புலெட்சுமி குழுவினர்   பக்தி இன்னிசை பாடல்கள் பாடினார்கள்.

நிறைய நல்ல பாடல்கள் பாடி கொண்டே இருந்தார்கள் 7 மணியிலிருந்து 9 மணி வரை.  8.30 வரை அங்கிருந்து கேட்டோம். அப்புறம் வீட்டுக்கு வந்து விட்டோம். பால்கனியில் நின்று மற்ற பாடல்களை கேட்டோம். ஒவ்வொரு பாடலையும் ரசித்து பாடி கை தட்டுக்களை பெற்றார்கள்.

சரஸ்வதி பூஜை அன்று கோவில் முன் வாசலில் அவ்வளவு ஆட்டோக்கள், வேன்கள் பூஜை போட தயாராக நின்றது.

விஜய தசமி அன்று  வழக்காடு மன்றம் இருந்தது . 

தலைப்பு அம்மையா? அப்பனா? 

நடுவர் . அறநெறி அண்ணல். சண்முக ஞானசம்பந்தன் அவர்கள்

வழக்காடுபவர்கள் : முனைவர் . திருமதி தமிழ்செல்வி அவர்கள்

முனைவர். திருமதி செல்வராக்கு அவர்கள் இருவரும் 

தமிழ் பேராசிரியார்கள்  -  மதுரை தியாகராசர் கல்லூரி 

அன்று தம்பி வீட்டில் பேத்திக்கு "வித்யாரம்பம்" மகளுக்கு  "பிறந்த நாள் விழா" அதனால் வழக்காடு மன்ற பேச்சை கேட்க முடியவில்லை.


கோவில் நவராத்திரி விழா இனிதே நிறைவு பெற்றது.

விஜயதசமி அன்று காலையில்  வேறு இரண்டு கோவில்கள்  வீட்டுக்கு அருகில்  இருக்கும்  கோவில்களுக்கு  சென்று வந்தேன். பிள்ளையார் கோவில் என்று பேர் ஆனால் எல்லா சுவாமியும் இருக்கிறார்கள்.  சாய் பாபாவும் இருக்கிறார்.

முருகன், ஐயப்பன், பைரவர், மீனாட்சி சொக்க நாதர், பெருமாள், அனுமன் , நவக்கிரகங்கள் என்று எல்லோரும் இருக்கிறார்கள். எல்லா விழாக்களும் சிறப்பாக நடக்கும்.






சிருங்கேரி சாரதா பீடம்
உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை வெளி வாசல் பக்கம் இருந்து எடுத்தது .(அலை பேசியில்)

  வெள்ளை பட்டு உடுத்தி அம்மன் வெகு அலங்காரமாக இருந்தார். பார்த்து கொண்டே இருக்கலாம் அத்தனை அழகு.  ஹோமங்கள் நடந்து கொண்டு இருந்தது.  முதல் நாள் திருப்பரங்குன்றம் போய் வந்து கால் வலி அதனால் பக்கத்தில் நடக்கும் தூரத்தில் இருந்தாலும் ஆட்டோவில் போய் பார்த்து  விட்டு வந்து விட்டேன். நவராத்திரி நாளில் ஒரு நாளாவது இந்த இரண்டு கோவிலும் பாக வேண்டும் என்று நினைத்து போய் வந்து விட்டேன்.

சரஸ்வதி பூஜை (எங்கள்  வீடு) என் கணவர் இருந்தால் கொலு அம்மன் அலங்காரம் என்று இருந்து இருக்கும். பழைய நினைவுகளை தங்கை குடும்பத்தினர்  பேசினார்கள்.தங்கை மகள் "பெரியப்பா இருந்தால் எப்படி இருக்கும்! சரஸ்வதி அம்மன் முகம் அழகாய்  செய்வார்கள்  என் மகன்களுக்கு காட்டி இருப்பேன்" என்று சொன்னாள். மாவிலை தோரணம் கட்டுவது, சுவாமி படங்களுக்கு புது பொட்டு வைத்து மலர் அலங்காரம் செய்வது அவர்கள்தான். 
 

தம்பி வீட்டுக் கொலு பேரன் பேத்திகள் சின்ன குழந்தைகள் அதனால் இந்த ஆண்டு மேஜையில் சின்னதாக கொலு.



அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி மலர் அலங்காரம்


மலர் மற்றும் சோவி, குன்றுமணியால் அலங்காரம் 

இன்னும் வரும் நவராத்திரி கொலு படங்கள். மகன் வீட்டு கொலு, அவர்கள் போய் வந்த நண்பர்கள் வீட்டுக் கொலு.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

34 கருத்துகள்:

  1. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலும் இந்த ஆர்ப்பாட்டங்களைத் துவக்கி விட்டார்களா?  சிரமம்தான்.  கோவில் படங்களும் நவராத்திரிப் படங்களும் அழகு.  பெரியப்பாவை நினைவு கூர்ந்தது நெகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொலு படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

      தரிசித்து கொண்டேன் மிக்க நன்றி. விபரங்கள் நன்று.

      நீக்கு
    2. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழக வளமுடன்

      //கொலு படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.//
      நன்றி.


      //தரிசித்து கொண்டேன் மிக்க நன்றி. விபரங்கள் நன்று//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    3. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      திருப்பரங்குன்றத்தில் வெகு நாட்கள் முன்பே இப்படித்தான் ஸ்ரீராம்.
      சார் திருப்பரங்குன்றமே போக விருப்பபடமாட்டார்கள், பழமுதிர்சோலை அழைத்து போவார்கள் ஒவ்வொரு கிருத்திகைக்கும்.
      நவராத்திரி காலம் முழுவதும் உறவினர்கள் எல்லோரும் சாரை பற்றித்தான் பேசினார்கள்.

      நான் உனை நினைக்காத நேரம் இல்லை நாயகனே! என்பது போல இனி காலம் முழுவதும் நினைவுகளுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. படங்கள் அனைத்தும் அருமை...

    நிகழ்வுகள் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      படங்கள் அனைத்தும் அருமை...//

      நன்றி.

      //நிகழ்வுகள் சிறப்பு...//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. பட்ங்கள் அத்தனையும் அழகு கோமதிக்கா....ஒவ்வொரு கோவிலிலும் இப்படி நவராத்திரி கொண்டாட்டங்கள் நிகழத்தொடங்கிவிட்டன ...

    பக்கத்துக் கோயில் சரஸ்வதி அழகு...நல்ல அலங்காரம்.

    எப்படி மாமாவின் நினைவு இல்லாமல் போகும்? அவர்களின் கைவண்ணம் உதவிகள் எல்லாம் நிறைய மிஸ் செய்வீங்கன்னு தெரியும் கோமதிக்கா. அதுவும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்பவராச்சே. நினைவுகளைத் தவிர்க்க முடியாததுதான். தங்கை மகளும் அதை நினைவுகொண்டு சொன்னது நெகிழ்ச்சி...

    நவராத்திரி நாளில் ஒரு நாளாவது இந்த இரண்டு கோவிலும் பாக வேண்டும் என்று நினைத்து போய் வந்து விட்டேன்.//

    போய் வந்துவிட்டீர்கள் நல்ல விஷயம்.

    அனைத்தும் அருமை கோமதிக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      வீட்டு வேலைகள் முடிந்ததா?

      //பட்ங்கள் அத்தனையும் அழகு கோமதிக்கா....ஒவ்வொரு கோவிலிலும் இப்படி நவராத்திரி கொண்டாட்டங்கள் நிகழத்தொடங்கிவிட்டன ..//

      ஆமாம், சின்ன கோவிலாக இருந்தாலும் நவராத்திரி விழா சிறப்பாக நடக்கிறது.

      பக்கத்து கோவிலில் தினம் ஒரு அலங்காரம், சண்டி ஹோமம் நடந்தது ஒரு நாள் பர்க்க வேண்டும் என்று பார்த்து விட்டேன்.

      நீங்கள் சொல்வது போல மாமாவை மறக்க முடியுமா? முடியாது.
      என் காலம் முழுவதும் மறவா நிலை வேண்டும். உறவுகள் எல்லோரும் சரஸ்வதி பூஜை அன்று நினைத்து பேசினார்கள்.

      நினைத்தபடி இரண்டு கோவிலுக்கு சில நிமிடங்களில் பார்த்து வந்தேன்.
      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.


      .

      நீக்கு
  5. மலர் சோவி குன்றுமணி அலங்காரம் அட்டகாசம்..ரொம்ப ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்பி மகள் செய்த மலர் சோவி குன்றுமணி அலங்காரத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. அருள்மிகு பொய்சொல்லா மூர்த்தி அய்யனார் கோவிலில் சரஸ்வதி அம்மன் அலங்காரம் மிகவும் அழகாக இருக்கிறது. தரிசித்து கொண்டேன். அங்கு தினமும் நடக்கும், சொற்பொழிவுகள், பாட்டுக் கச்சேரி என தாங்கள் கேட்டு வந்ததற்கு மிகவும் சந்தோஷம். பட்டி மன்ற நிகழ்வும் நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால் அன்றைய தினத்தில் நடந்த வீட்டு நிகழ்வுகளில் அங்கு செல்ல முடியவில்லை என கூறியுள்ளீர்கள். வித்யாரம்பம் சேர்த்த குழந்தைக்கும், தங்கள் தம்பி மகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    திருப்பரங்குன்றம் கோவிலிலும், சுவாமி மண்டபம் சுற்றிலும், வாகனங்கள் நிறுத்தியது அழகாக உள்ளது. அதைதான் கொலு மாதிரி வைத்திருக்கிறார்களோ ? அம்மன் சிவனை பூஜிக்கும் விக்கிரங்களும் அழகாக இருக்கிறது. தாங்கள் அன்று கோவில் சென்று தரிசித்து வந்தது நல்லது.

    வேறு இரண்டு கோவில்களுக்கும் சென்று வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. தங்கள் வீட்டு சரஸ்வதி பூஜை நல்லபடியாக நடந்தது குறித்து மகிழ்ச்சி. தங்கள் கணவர் இல்லாதது பெருங்குறைதான். என்ன செய்வது.? அவர் செய்திருக்கும் சரஸ்வதி பூஜை நிகழ்வுகளை நீங்கள் முன்பு பதிவாக இட்டு நான் பார்த்துள்ளேன். அழகாக சரஸ்வதி சிலை செய்வார். அவர் நினைவுகள் எப்படி தங்களுக்கு வராமல் இருக்கும். விதியின் மாறும் காலங்களுடன் நாமும் ஓட வேண்டியதாய் உள்ளது.

    தம்பி வீட்டு கொலு மிகவும் நன்றாக உள்ளது. அம்மன், மலர் சோவி அலங்காரங்கள் அழகாக இருக்கிறது.

    கொலு என்றாலே அழகுதானே... . இன்னமும் தங்கள் மகன் வீட்டு கொலுவை காண்பதற்கு ஆவலாக உள்ளேன். பகிர்வனைத்திற்கும் மிக்க நன்றி சகோதரி .

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //சரஸ்வதி அம்மன் அலங்காரம் மிகவும் அழகாக இருக்கிறது. தரிசித்து கொண்டேன்.//
      ஆமாம், தினமும் நல்ல அழகாய் அம்மனை அலங்காரம் செய்து இருந்தார்கள்.

      //வித்யாரம்பம் சேர்த்த குழந்தைக்கும், தங்கள் தம்பி மகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      பள்ளியில் சேர்க்கவில்லை, வீட்டில் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
      விஜயதசமியில் அதை ஆரம்பிபோம் அதன் படி குழந்தை எழுதினாள்.
      அடுத்த வருடம் தான் பள்ளி சேக்க வேண்டும்.
      இருவரையும் வாழ்த்தியதற்கு நன்றி.
      ஆமாம், வாகனங்களை கொலு மாதிரி துடைத்து வைப்பார்கள். மீனாட்சி அம்மன் கோவிலிலும் வைப்பார்கள்.

      //அம்மன் சிவனை பூஜிக்கும் விக்கிரங்களும் அழகாக இருக்கிறது. தாங்கள் அன்று கோவில் சென்று தரிசித்து வந்தது நல்லது.//

      ஆமாம். சிவபூஜை செய்யும் காட்சியை பார்க்க முடிந்தது மகிழ்ச்சிதான்.

      //தங்கள் கணவர் இல்லாதது பெருங்குறைதான். என்ன செய்வது.? அவர் செய்திருக்கும் சரஸ்வதி பூஜை நிகழ்வுகளை நீங்கள் முன்பு பதிவாக இட்டு நான் பார்த்துள்ளேன். அழகாக சரஸ்வதி சிலை செய்வார். அவர் நினைவுகள் எப்படி தங்களுக்கு வராமல் இருக்கும். விதியின் மாறும் காலங்களுடன் நாமும் ஓட வேண்டியதாய் உள்ளது.//

      ஆமாம், சரியாக சொன்னீர்கள். விதியின் மாறும் காலங்களுடன் நாமும் ஓட வேண்டியதாகத் தான் இருக்கிறது.

      உங்கள் ஆவல் மகிழ்ச்சி அளிக்கிறது.
      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.




      நீக்கு
  7. ஸ்ரீ பொய் சொல்லா மூர்த்தி ஐயனார் கோயிலில் சரஸ்வதி அலங்காரம் மிகவும் அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      //ஸ்ரீ பொய் சொல்லா மூர்த்தி ஐயனார் கோயிலில் சரஸ்வதி அலங்காரம் மிகவும் அழகு..//

      ஆமாம், அழகாய் அலங்காரம் செய்து இருந்தார்கள்.

      நீக்கு
  8. வசூல் வேட்டைக்கான இடங்களாக ஆக்கி விட்டனர் நமது கோயில்களை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது! வெகு நேரம் நிற்கமுடியாதவர்கள், உடனே பார்த்துவிட்டு வேறு ஊர் திரும்ப என்பவர்களுக்கு டிக்கட் வாங்கி தான் சுவாமியை தரிசனம் செய்ய முடிகிறது.

      நீக்கு
  9. நேற்று அரசு அலுவலகம ஒன்றிற்கு காலையில் சாப்பிடாமல் சென்றது - ஒரு மணி நேரத்தில் வந்து விடலாம் என்று..

    விரைவு சேவை என்று பெயர்..

    மாலை ஐந்தரை மணிக்குத் தான் திரும்பினோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை ஐந்து வரை சாப்பிடாமல் இருந்தீர்களா?
      அங்கு பக்கத்தில் எதுவும் உணவு கடை இல்லையா?
      இனி எங்கு சென்றாலும் கொஞ்சம் தண்ணீர், உணவு கையில் எதற்கும் வைத்து கொள்ள வேண்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. ஒரு மணி நேரம் என்றதால் ஒரு கையளவே சாம்பார் சாதம் சாப்பிட்டு விட்டுச் சென்றோம்..

      மாலை வீட்டுக்கு வந்து தான் சாப்பிட்டேன்..

      சீர்மிகு நகரம் என்று சாலையோர சிறு கடைகள் பலவும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன..

      பிள்ளையார் முருகன் என்ற பேரில் அதற்குரிய அடையாளங்கள் இருந்தால் தான் அந்தக் கடையில் சாப்பிடுவது என்ற வழக்கம்..

      இறைவன் கைவிட மாட்டான்..

      நீக்கு
    3. கடைகள் இல்லையா?

      //பிள்ளையார் முருகன் என்ற பேரில் அதற்குரிய அடையாளங்கள் இருந்தால் தான் அந்தக் கடையில் சாப்பிடுவது என்ற வழக்கம்..//

      ஓ ! அப்படியா சரி சரி.

      இறைவன் கைவிடாமல் காக்கட்டும்.
      உங்கள் மறு மொழிக்கு நன்றி.

      நீக்கு
  10. ஆஹா கோமதி அக்காவின் தயவால் நாமும் திருப்பரங்குன்றம் பார்த்த பெருமை கிடைச்சிருக்குது, அழகிய படங்கள் நன்றாக இருக்குது.

    அம்மனின் 9 நாளும் அலங்காரமும், மலர் அலங்காரங்களும் சூப்பரோ சூப்பர், ஏதோ ஒரு தவறு.. அம்மன் அலங்காரத்தில் 1 வதும் 3 வதும் ஒரே படங்களைப் போட்டுவிட்டீங்கள், திருத்தி விடுங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      //ஆஹா கோமதி அக்காவின் தயவால் நாமும் திருப்பரங்குன்றம் பார்த்த பெருமை கிடைச்சிருக்குது, அழகிய படங்கள் நன்றாக இருக்குது.//

      இதற்கு முன் ஒரு பதிவு திருப்பரங்குன்றம் பதிவு போட்டு இருக்கிறேன் அதிரா. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பதிவு இரண்டு மூன்று போட்டு இருக்கிறேன்.

      அம்மன் அலங்காரம் மாலை இல்லாமல் ஒன்று மாலை போட்டபின் ஒன்றும் எடுத்தேன். மாலை இல்லா படம் மேலே போட்டு இருக்கிறேன்.
      மாலையோடு உள்ளதை கீழே போட்டு இருக்கிறேன்.

      நீக்கு
  11. சரஸ்வதி பூஜை 9 நாட்களும் கோலாகலமாக இருக்கும், ஆனால் முடிஞ்சதும் ஏதோ ஓய்வடைந்துவிட்டதுபோல கவலையாக இருக்கும்.

    நமக்கும் இங்கு வீட்டில் நவராத்திரியில் தொடங்கி கந்தசஸ்டி முடியும்வரை, ஒரே விரதக் களையும்.. சாம்பிராணி பூஜை, சைவம் என அமளியாக இருக்கும், பின்பு கந்தசஸ்டி பாரணை முடிஞ்சதும் ஒருவித கவலை வரும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சரஸ்வதி பூஜை 9 நாட்களும் கோலாகலமாக இருக்கும், ஆனால் முடிஞ்சதும் ஏதோ ஓய்வடைந்துவிட்டதுபோல கவலையாக இருக்கும்.//

      ஆமாம், வீடு , கோவில் எல்லாம் கொலு வைத்து கோலாகலமாக இருக்கும் பொம்மைகளை எடுத்து வைத்து விட்டால் வெறிச் என்று வெறுமை சூழ்ந்து கொள்ளும்.

      //நமக்கும் இங்கு வீட்டில் நவராத்திரியில் தொடங்கி கந்தசஸ்டி முடியும்வரை, ஒரே விரதக் களையும்.. சாம்பிராணி பூஜை, சைவம் என அமளியாக இருக்கும், பின்பு கந்தசஸ்டி பாரணை முடிஞ்சதும் ஒருவித கவலை வரும்:)//

      நீங்கள் விரதம் இருப்பது மகிழ்ச்சியே. விரதம் முடிச்சு மீண்டும் அசைவம் சமைக்க வேண்டுமே என்ற கவலையா?
      அல்லது விரதம் முடிந்து விட்டதே என்ற கவலையா? தூபம் தீபம் காட்டுவது தொடரலாம் தானே!



      நீக்கு
    2. அது கோமதி அக்கா, எங்கட பிள்ளைகளும் தாமாகவே தாமும் முழு நாட்களும் சைவமாக இருக்கப்போகிறோம் என, இப்போ சில வருடங்களாக இந் நாட்களில் சைவமாக இருப்பதால், வீடு ஒரு கோயில்போல இருக்கும், பின்பு, வியாளன், வெள்ளி , செவ்வாய் இந்த மூன்று நாட்கள் மட்டுமே சைவம்...

      நீக்கு
    3. மீண்டும் வந்து பதில் சொன்னது மகிழ்ச்சி.
      பிள்ளைகளும் விரதம் இருப்பது மகிழ்ச்சி.
      குடும்பமாக விரதம் இருந்தோம் ஞாயிற்று கிழமையில்.
      அது நினைவுக்கு வந்தது. குடும்பத்தினர் எல்லோரும் விரதம் இருப்பது மகிழ்ச்சிதான்.
      மூன்று நாள் சைவம் நல்லது.
      உங்கள் கருத்துக்கு நன்றி நன்றி.

      நீக்கு
  12. உங்கள் பேரனின் சாயலாகவே தங்கை பேரனும் இருக்கிறாரே.. கியூட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேரனின் சாயலாகவே இருக்கிறானா! மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
      பதிவு போடுங்கள்.
      படிக்க ஆவல்.

      நீக்கு
  13. அம்மன் அலங்காரம் அழகு. திருப்பரம் குன்றம்,நவராத்திரி கொலு படங்கள் நன்றாக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      மாதேவி பதிவு போடுங்கள்.

      நீக்கு
  14. சரஸ்வதியாக அம்மன் மிக அழகு. கொலு, நவராத்திரி வழிபாட்டுப் படங்கள் தகவல்கள் யாவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      அம்மன் அலங்காரத்தை , கொலுவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு