முருகனைச் சிந்திப்போம் - 2
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - டி,எம் .எஸ்
அவர்கள்
பாடல்.
இன்று கந்த சஷ்டி இரண்டாவது நாள். என்ன எழுதலாம் என்று சிந்தித்துக்
கொண்டு இருக்கும்போது காலை ரேடியோ சிட்டியில் இந்தப்
பாடலையும் வைத்து சஷ்டி கவசம் இயற்றப்பட்ட வரலாறு
சொன்னார்கள். இந்தப் பாடல் எனக்குப் பிடித்த பாடல். உங்களுக்கும்
பிடிக்கும்.
கந்த சஷ்டி பாடலை எழுதியவர் பாலன் தேவராய சுவாமிகள்.
இவர் சிறந்த முருக பக்தர். அவர் பிறப்பு, எங்கு பிறந்தார் என்பது
எல்லாம் சரியாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரும்
ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள்.
இந்தப் பாடல் எழுதியது பல ஆண்டுகளுக்கு முன் என்கிறார்கள்.
இப்பாடல் எழுதப்பட்ட இடம் பற்றிக்கூறும்போது சிலர் பழனி
என்றும் சிலர் திருச்செந்தூர் என்றும் சொல்கிறார்கள்.
வரலாறுகள் எப்படி இருந்தாலும் நமக்கு நல்லதொரு கவசம் அவரால் கிடைத்து இருக்கிறது. மக்களை உடல் துன்பம், மனத்துன்பத்திலிருந்து ஆறுதல் படுத்த.
வரலாறுகள் எப்படி இருந்தாலும் நமக்கு நல்லதொரு கவசம் அவரால் கிடைத்து இருக்கிறது. மக்களை உடல் துன்பம், மனத்துன்பத்திலிருந்து ஆறுதல் படுத்த.
ஆறுபடை வீடுகளுக்கும் கவசம் பாடல் எழுதி இருக்கிறார். அவற்றில்
திருச்செந்தூர் கவசம் தான் மிக புகழ் பெற்றது. அதற்கு முக்கிய காரணமும்
உண்டு.
பாலன் தேவராய சுவாமிகள் வயிற்று வலியால் மிகவும்
கஷ்டப்பட்டார், எந்த வைத்தியத்தாலும் அவர் வயிற்றுவலி
குணமாகவில்லை. திருச்செந்தூர் வந்தார் செந்திலாண்டவரை தரிசனம்
செய்ய.
திருச்செந்தூர் ( நான் எடுத்த படங்கள்.)
திருச்செந்தூர் ( நான் எடுத்த படங்கள்.)
அப்போது கந்தசஷ்டி விழா நடந்து கொண்டு இருந்தது, அதைப்பார்த்தவுடன் , சஷ்டி விரதம் இருக்க ஆரம்பித்து விட்டார்.
தெய்வம் படத்தில் சீர்காழி, கோவிந்தராஜன் அவர்களும் டி.எம்
செளந்திராஜன் அவர்களும் பாடிய பாடல். இதில் சூரசம்ஹார நிகழ்ச்சி
நடக்கிறது. இந்தப் பதிவுக்கு பொருத்தம் என்று போட்டு இருக்கிறேன்
கடலில் நீராடி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தார் அப்போது
முருகப்பெருமான் அவருக்குக் காட்சி தந்து சஷ்டி கவசம் பாடும் படியும்
சொன்னார். இதற்குத்தான் இறைவன் தேவராயரை திருச்செந்தூர்
வரவழைத்து இருப்பார் போலும் வயிற்றுவலியை கொடுத்து .
பாலன் தேவராயரும் உடனே திருச்செந்தூர் சஷ்டி கவசம் பாடி விட்டார்.
அடுத்த 5 நாட்களில் மற்ற படைவீடுகளுக்கும் கவசம் பாடி விட்டார்.
இப்படி தனக்குக் கவசம் பாட வைத்து தேவராயர் வயிற்றுவலியைப்
போக்கினார்.
பாடலை எங்கு அரங்கேற்றுவது என்று சுவாமிகள் நினைத்தபோது
பாடலை எங்கு அரங்கேற்றுவது என்று சுவாமிகள் நினைத்தபோது
சென்னிமலையில் அரங்கேற்றம் செய்யச் சொன்னார் கனவில் வந்த முருகன்.
சஷ்டி கவசம் சென்னிமலையில் அரங்கேற்றப் பட்டது என்பதும்
சஷ்டி கவசம் சென்னிமலையில் அரங்கேற்றப் பட்டது என்பதும்
செவி வழி செய்திதான்.
நான் திருச்செந்தூர் சஷ்டிகவசம் மட்டுமே படித்து
நான் திருச்செந்தூர் சஷ்டிகவசம் மட்டுமே படித்து
இருக்கிறேன், மற்ற படைவீடுகளின் சஷ்டி கவசங்களைத் தேடி
இந்த கந்த சஷ்டி நாளில் படிக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.
மற்ற ஐந்து படை வீடுகளுக்கான கவச நூல்கள் பின்வருமாறு,
திருப்பரங்குன்றுறை திருமகன் கவசம்; பழனிப்பதி வாழ் அப்பன் கவசம்;
திருவேரகம் வாழ் தேவன் கவசம்; குன்றுதோறாடும் முருகன் கவசம்;
பழமுதிர்ச் சோலை பண்டிதன் கவசம் என்பன.
இவற்றைத் தேட வேண்டும் தேடிப் படிக்க வேண்டும்.
இவற்றைத் தேட வேண்டும் தேடிப் படிக்க வேண்டும்.
(முன்பு போட்டேன்
இப்படி படிக்க வேண்டும் என்று. )
பழனிப்பதி வாழ் அப்பன் கவசம் தேடி படித்து இருக்கிறேன்.
சஷ்டி முதல் நாள் தேடி படித்தேன். நாள் இன்னொரு கவசம் தேடி
படிக்க முருகன் அருள வேண்டும்.
மற்றவைகளை யும் படிக்க வேண்டும்.
எங்கள் மாமனார் அல்சர் வந்து வயிற்றுவலியால் துன்ப பட்டார்கள்
அப்போது அவர்கள் திருச்செந்தூருக்கு கந்த சஷ்டி சமயம் போய்
ஆறு நாள் அங்கு தங்கி ஒருவேளை உணவு எடுத்து விரதம்
இருந்தார்கள் . வயிற்று வலி சரியாகி விட்டது.என் கணவரின் இரு
அண்ணன்களும் திருச்செந்தூரில் நிறைய வருடங்கள்
விரதம் இருந்து இருக்கிறார்கள்.
நானும் என் கணவரும் சஷ்டி விரதம் இருப்போம். மாத சஷ்டி விரதமும்
இருப்போம். கந்த சஷ்டி விரதம் சமயம் ஒறு நாளில் 36 முறை
சஷ்டிகவசம் வாசிப்பார்கள் என் கணவர்.
இறைவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான் என்று
சொல்வார்கள்.
அப்படியே சோதனைகளைத் தந்தாலும் அதைத் தாங்கும்
மனவலிமையைத்
தரவேண்டும்.
நன்றி- கூகுள். இந்த படம் மட்டும் கூகுள்.
பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன் மாமயிலாய்போற்றி
முன்னியகருணையாறு முகப்பரம் பொருளே போற்றி
கன்னியர் இருவர் நீங்கா கருணை வாரிதியே போற்றி
என்னிரு கண்ணே கண்ணுள் இருக்கும் மாமணியே போற்றி
-திருச்செந்தூர்ப்புராணம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.
-------------------------------------------------------------------------------------------------------
நிறைவான செய்திகள்..
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி..
கந்தவேல் முருகனுக்கு அரோகரா..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குநேற்று பதிவு படித்து விட்டீர்களா?
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஸ்ரீ தேவராய ஸ்வாமிகளைப் பற்றிய தகவல்கள் எவருக்கும் தெரியாது..
பதிலளிநீக்குஅதனால் தான் ஆளுக்கு ஆள் அருகில் இருந்து பார்த்த மாதிரி ஏதேதோ சொல்லிக் கொண்டு இருக்கின்றனர் யூடியூப்புகளில்..
யூடியூப்புகளில் ஸ்ரீ தேவராய சுவாமிகளைப் பற்றி சொன்னதை கேட்கவில்லை.
நீக்குவரலாறுகள் எப்படி இருந்தாலும் நமக்கு நல்லதொரு கவசம் அவரால் கிடைத்து இருக்கிறது. மக்களை உடல் துன்பம், மனத்துன்பத்திலிருந்து ஆறுதல் படுத்த.
அது போதும் நமக்கு.
யூட்டியூப்பில் கண்ட மாதிரி கதை சொல்கின்றவர்கள் இக்கோயிலின் மற்றொரு காவல் நாயகத்தைப் பற்றியோ
பதிலளிநீக்குசண்முக மூர்த்தியை மலையாள மந்திரவாதிகள் கடத்திய பிறகு நடந்ததைப் பற்றியோ முருகனை மீட்டுக் கொண்டு வந்தவர்களுடன் அதிர நடந்து துணைக்கு வந்தவரைப் பற்றியோ பேச மாட்டார்கள்..
ஏனெனில் அவர்களுக்குத் தெரியாது..
திருச்செந்தூருக்கு நிறைய கதைகள் இருக்கிறது. நான் எடுத்து கொண்டது கவசங்களை பற்றி மட்டும் அதை பற்றி மட்டும் சொல்லி இருக்கிறேன்.
நீக்குஉங்கள் கருத்துக்களூக்கு நன்றி.
நீக்குஅழகான படங்கள் செய்திகள் அருமை. காணொளி பாடல்கள் வெகுசிறப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
கந்த சஷ்டி கவசம் நான் படித்திருக்கிறேன். அவ்வப்போது சொல்வேன் (காரணம்...என் அப்பாவிற்குத் தெரிந்த ஜோசியர் என்னிடம் கடிதத்தில் ஏதோ கேட்டிருந்தார். பிறகு அவர் என்னிடம், நான் சஷ்டியில் பிறந்ததால்-செவ்வாய்?, கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது என்றார். அதனால் பதின்ம வயதில் படிக்க ஆரம்பித்தேன்).
பதிலளிநீக்குமாமாவின் அல்சர், திருச்செந்தூரில் விரதம் இருந்த பிறகு குணமானது ஆச்சர்யம். ஒரு நாளில் 36 தடவைகளா? அவ்வளவு நேரம் மனத்தை ஒன்ற வைக்க முடியுமா?
திருச்செந்தூரின் கடலோரத்தில் - பாடலை மறக்க முடியுமா? அந்தப் படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பேர் பெற்ற பாடகர்-கள், குன்னக்குடி இசை என்று நினைவு
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//கந்த சஷ்டி கவசம் நான் படித்திருக்கிறேன். அவ்வப்போது சொல்வேன் (காரணம்...என் அப்பாவிற்குத் தெரிந்த ஜோசியர் என்னிடம் கடிதத்தில் ஏதோ கேட்டிருந்தார். பிறகு அவர் என்னிடம், நான் சஷ்டியில் பிறந்ததால்-செவ்வாய்?, கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது என்றார். அதனால் பதின்ம வயதில் படிக்க ஆரம்பித்தேன்).//
நல்லது. சிறு வயதில் ஏற்படுத்திய நல்ல பழக்கம் விடாமல் தொடர முடியும்.
மாமாவின் அல்சர், திருச்செந்தூரில் விரதம் இருந்த பிறகு குணமானது ஆச்சர்யம்.//
60 வயது அல்சர் வந்த போது, ஆஸ்துமா வேறு இருந்தது. அப்படியும் விரதத்தை கடை பிடித்தார்கள் அவர்கள் வயிற்றுவலி சரியாகி விட்டது. வயிர்றுவலி சரியாக மருத்துவர் நல்லா இருக்கும் பற்களை வேறு எடுக்கச் சொன்னார் அதையும் எடுத்தார்கள் 60 வயதில் அனைத்து பற்களையும் எடுத்து பல் செட் வைத்து கொண்டார்கள்.
//ஒரு நாளில் 36 தடவைகளா? அவ்வளவு நேரம் மனத்தை ஒன்ற வைக்க முடியுமா?//
இன்று கூட என் ஓர்படி பேசும் போது அத்தான் சஷ்டி அன்று 36 தடவை பொறுமையாக அமர்ந்து படிப்பார்கள் என்று அவர்களை நினைவு கூர்ந்தாள்.
மனம் ஒன்றி படிப்பார்கள். அவர்களுக்கு இஷ்ட தெய்வம் முருகன்.
//திருச்செந்தூரின் கடலோரத்தில் - பாடலை மறக்க முடியுமா? அந்தப் படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பேர் பெற்ற பாடகர்-கள், குன்னக்குடி இசை என்று நினைவு//
ஆமாம், அனைத்து பாடலும் மிக அருமையாக இருக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
நேற்றைய பதிவை இப்போது தான் படித்துக் கருத்துரை அளித்தேன்..
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி..
நேற்றைய பதிவை படித்தது அறிந்து மகிழ்ச்சி.
நீக்குமாலை நேரம் கூட்டு பிரார்த்தனை செய்தோம் 5 முதல் ஆறுவரை.
கந்தரநு பூதி, கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம் பாடினோம் இன்று.
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
உங்கள் இந்தப் பதிவைப் படிக்கும்போது நன் ஒருவகை வலியால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன். தாங்க முடியாத வலி.. ஆனால் தொடர்ந்து அல்ல... திருச்செந்தூர் சென்று வந்தால் சையாகும் என்பது தெய்வவாக்கு போல இருந்தாலும் இப்போதைக்கு செல்லவும் முடியாத சூழல். திருச்செந்தூர் முருகனை இங்கிருந்தே வேண்டிக்கொள்கிறேன்.. முருகா என் சிரமத்தைப் போக்கு. முருகா... முருகா...
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கைவலி முருகன் அருளால் விரைவில் நலமாகும்.
//திருச்செந்தூர் சென்று வந்தால் சையாகும் என்பது தெய்வவாக்கு போல இருந்தாலும் இப்போதைக்கு செல்லவும் முடியாத சூழல். திருச்செந்தூர் முருகனை இங்கிருந்தே வேண்டிக்கொள்கிறேன்.. முருகா என் சிரமத்தைப் போக்கு. முருகா... முருகா...//
கண்டிப்பாய் திருச்செந்தூர் முருகன் சிரமத்தைப் போக்குவார். இருக்கும் இடத்தில் இருந்தே அவனை நினைத்து வணங்குபவர்களுக்கும் அருள்வான் குமரன்.
முருகனைக் கூப்பிட்டு
முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!
உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற
மெத்த இன்பம் சேருமே!!//
என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.
நான் ஒரு கந்தர் சஷ்டி கவசம் மட்டுமே அறிவேன். தினசரி சொல்லவும் செய்கிறேன். மற்றபடி ஒவ்வொரு தலத்துக்குமான கவசம் நான் அறியேன்.
பதிலளிநீக்குஎனக்கும் கந்தர் சஷ்டி மட்டுமே தெரியும் .பாலன் தேவராய சுவாமிகளை பற்றி படித்த போதுதான் அவர் ஆறுபடை வீடுகளுக்கும் கவசம் பாடியது அறிந்தேன். தேடி படித்து கொண்டு இருக்கிறேன்.
நீக்குதெய்வம் படத்தில் எல்லாப் பாடல்களுமே நன்றாய் இருக்கும். இந்த பாடலும். சீர்காழி அவர்களும், டி எம் எஸ் அவர்களும் இணைந்து பாடியுள்ள பாடல் காட்சியிலும் இவர்களே தோன்றி பாடுவார்கள். இன்று வீட்டுக்கு வந்திருந்த என் கணினி மருத்துவர் (இன்னமும் ஆட்டம் காட்டுகிறது!) சஷ்டி விரதம் இருபிப்பதாகவும், ஞாயிறு அன்று திருச்செந்தூர் செல்லப்போவதாகவும் சொன்னார். இன்று என் உடன் பணிபுரிபவர் சஷ்டி விரதம் இருப்பதால் ஒருவாரம் லீவு போடப்போவதாய்ச் சொன்னார்.
பதிலளிநீக்குஆமாம், தெய்வம் படத்தில் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.
நீக்குசீர்காழி அவர்களும், டி எம் எஸ் அவர்களும் இணைந்து பாடியுள்ள பாடல் காட்சியிலும் இவர்களே தோன்றி பாடுவார்கள்//
ஆமாம், நன்றாக அமைதியாக நடித்து இருப்பார்கள்.
கணினி மருத்துவர் முருகனை தரிசனம் செய்து வந்து நன்றாக செய்து தந்து விடுவார் உங்கள் கணினியை.
//இன்று என் உடன் பணிபுரிபவர் சஷ்டி விரதம் இருப்பதால் ஒருவாரம் லீவு போடப்போவதாய்ச் சொன்னார்.//
நிறைய பேர் மூன்று வேலையும் உணவு எடுத்து கொள்ளாமல் விரதம் இருப்பார்கள் அவர்கள் வேலை எப்படி செய்ய முடியும்.திருச்செந்தூரில் சஷ்டி மண்டபத்தில் நீர் கூட பருகாமல் கடும் விரதம் இருப்பார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.
அத்தை சொல்வார்கள். இறைவன் அவர்களுக்கு மனபலம், உடல் பலம் எல்லாம் தருவார்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
படங்கள் அழகு. பகிர்வு அருமை .பாடல்கள் இனிமை
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
தங்கள் பதிவில் ஸ்ரீராம் அவர்களது பிரச்னையைப் படித்ததும் இப்போது தான் அவருடன் பேசினேன்..
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம் அவர்கள் பூரண நலம் பெறுவதற்கு அனைவரும் வேண்டிக் கொள்வோம்.
முருகா.. முருகா..
அன்பின் ஸ்ரீராம் அவர்கள் பூரண நலம் பெறுவதற்கு அனைவரும் வேண்டிக் கொள்வோம்.//
நீக்குகண்டிப்பாய் வேண்டிக்கொள்வோம்.
__/\__ __/\_
நீக்குஅனைத்தும் சிறப்பு...
பதிலளிநீக்குமுருகா சரணம்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
முருகா சரணம்.
மனதிற்கு நிறைவினைத் தந்த பதிவு.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய சஷ்டி இரண்டாம் நாளான பதிவு அருமையாக உள்ளது.
படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. திரு. டி. எம் எஸ் அவர்கள் பாடிய முதல் பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். அருமையான மறக்க முடியாத பாடல்.
அவரும், சீர்காழி அவர்களும் சேர்ந்து பாடும் தெய்வம் படப்பாடலும் அடிக்கடி கேட்டு மனப்பாடமாக ஆனதுதான். அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே அப்போது வெற்றி நடை போட்டவை.
சஷ்டி விரத மகிமையை தாங்கள் சொன்னது கேட்டு மெய்சிலிர்த்தேன். தங்கள் கணவர் ஒரு தினத்தில் கவசத்தை 36 தடவை ஒரே நோக்கோடு சொல்லியிருப்பது வெகு சிறப்பு. இறையருள் இல்லாவிட்டால் அவ்வாறு சொல்லுவது கடினம். அவருக்கு இறைவன் அருகிலிருந்து அருள் பாலித்திருக்கிறான். நானும் இறைவனையும், அவன் அருள் பெற்ற தங்கள் கணவரையும் வணங்கிக் கொள்கிறேன்.
கவச பாடல் இயற்றிய ஸ்ரீ தேவராயர் சுவாமியைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் இந்த கவசத்தை தவிர்த்து ஆறுபடைக்கும் கவசம் இயற்றியிருப்பததையும் படித்தேன். இப்போது உங்கள் மூலமும் தெளிவாக தெரிந்தது.
நான் சஷ்டி கவசம். கந்த குரு கவசம். பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் படிப்பேன். பாம்பன் சுவாமிகளும் இறையருளால் நோய் தீர்ந்து அதைப் பாடியிருக்கிறார்.
சகோதரர் ஸ்ரீராம் அவர்களும் உடல்நல பிணிகள் அகன்று நல்லபடியாக குணமடைய பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.இன்று நம் சகோதரி கீதாரெங்கன் அவர்களின் அப்பா எலும்பு முறிவுக்காக மருத்துவ மனையில் இருக்கிறார் என்று எபியில் படித்ததும் மனதுக்கு கஸ்டமாக உள்ளது அவரும் பூரண நலமடைந்திட இறைவனை வேண்டுகிறேன். இந்த சஷ்டி விழாவில் முருகப் பெருமான் கருணை கூர்ந்து அனைவரது நோய் தீர்த்து நல்லருள் தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குஇன்றைய சஷ்டி இரண்டாம் நாளான பதிவு அருமையாக உள்ளது.//
நன்றி.
//அவரும், சீர்காழி அவர்களும் சேர்ந்து பாடும் தெய்வம் படப்பாடலும் அடிக்கடி கேட்டு மனப்பாடமாக ஆனதுதான். அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே அப்போது வெற்றி நடை போட்டவை.//
ஆமாம்.
//சஷ்டி விரத மகிமையை தாங்கள் சொன்னது கேட்டு மெய்சிலிர்த்தேன். தங்கள் கணவர் ஒரு தினத்தில் கவசத்தை 36 தடவை ஒரே நோக்கோடு சொல்லியிருப்பது வெகு சிறப்பு. இறையருள் இல்லாவிட்டால் அவ்வாறு சொல்லுவது கடினம். அவருக்கு இறைவன் அருகிலிருந்து அருள் பாலித்திருக்கிறான். நானும் இறைவனையும், அவன் அருள் பெற்ற தங்கள் கணவரையும் வணங்கிக் கொள்கிறேன்.//
என் கணவர் அவர்கள் எந்த காரியம் செய்தாலும் சிந்தனை சிதறாமல் மனம் ஒன்றி செய்வார்கள்.
உங்கள் வணக்கத்திற்கு நன்றி. நான் அவர்களை கேட்டுக் கொள்வதும் அதுதான் எனக்கு மனவலிமை வைராக்கியம் தரும் படி வேண்டுவேன்.
//கவச பாடல் இயற்றிய ஸ்ரீ தேவராயர் சுவாமியைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் இந்த கவசத்தை தவிர்த்து ஆறுபடைக்கும் கவசம் இயற்றியிருப்பததையும் படித்தேன். இப்போது உங்கள் மூலமும் தெளிவாக தெரிந்தது.//
ஆமாம், நானும் இப்போதுதான் தேடி படிக்கிறேன்.
//நான் சஷ்டி கவசம். கந்த குரு கவசம். பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் படிப்பேன். பாம்பன் சுவாமிகளும் இறையருளால் நோய் தீர்ந்து அதைப் பாடியிருக்கிறார்.//
தெய்வம் ஆட்கொண்டு பாடவைக்கிறார், பாடுகிறார்கள்.
//சகோதரர் ஸ்ரீராம் அவர்களும் உடல்நல பிணிகள் அகன்று நல்லபடியாக குணமடைய பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.இன்று நம் சகோதரி கீதாரெங்கன் அவர்களின் அப்பா எலும்பு முறிவுக்காக மருத்துவ மனையில் இருக்கிறார் என்று எபியில் படித்ததும் மனதுக்கு கஸ்டமாக உள்ளது அவரும் பூரண நலமடைந்திட இறைவனை வேண்டுகிறேன்.//
ஸ்ரீராம், கீதாரெங்கன் அப்பா பூரண நலமடைய வேண்டுவோம். என் உறவினர் என் கணவருக்கு சித்தப்பா மகள் ஆஸ்பத்திரியில் இருக்கிறாள் மனம் சஞ்சலத்தோடு இருக்கிறேன்.
அவளும் நலம் பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டு இருக்கிறேன்.
//இந்த சஷ்டி விழாவில் முருகப் பெருமான் கருணை கூர்ந்து அனைவரது நோய் தீர்த்து நல்லருள் தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். //
பிரார்த்தித்து கொள்வோம்.
உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.