பேரன் தயார் செய்த தீபாவளி வாழ்த்து
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
தீபாவளி என்றால் முன்பு தீபாவளி ஆண்டு மலர் வாங்குவோம்.
எல்லா வாரப்பத்திரிக்கைகளும் தீபாவளிக்கு சிறப்பாக இரண்டு புத்தகம் தருவார்கள். அதை தீபாவளிக்கு ஊருக்கு போகும் ரயில் பயணத்தில் படிக்க வாங்குவோம், குமுதம், குங்குமம், மங்கையர் மலர் எல்லாம். ரயிலில் நம்மிடமிருந்து அந்த புத்தகங்களை வாங்கி படிபவர்களிடம் நாம் இறங்கும் போது நினைவாக வாங்க வேண்டும். திருப்பி தராமலே போய் விடுவார்கள் சிலர்.
தொலைக்காட்சி வருமுன் தீபாவளி முடிந்த பின் மதியம் ஓய்வாக இருக்கும் போது இந்த தீபாவளி மலர்கள்தான் நமக்கு பொழுது போக்கு. அதில் ஆன்மீகம், சினிமா, நடிகர், நடிகையர் பேட்டிகள். தீபாவளி நகைச்சுவை துணுக்குகள். சிறுகதைகள்,
மற்றும் அருமையான விளம்பரங்கள் வரும். வெகு நாட்கள் படிக்க விஷயங்கள் இருக்கும்.
அப்படி 2002 ம் ஆண்டு வாங்கிய விகடன் பவழ விழா மலர் . புத்தகத்திலிருந்து சில காட்சிகள் இந்த பதிவில் இடம் பெறுகிறது. முதலில் பக்தி மனம் கமழும் ஓவியங்கள்.
திரு சில்பி அவர்களின் ஓவியம் இடம்பெறாத தீபாவளி மலரே இல்லை என்று சொல்லலாம். திரு. சில்பி அவர்கள் திருவெண்காடு கோயிலை படம் வரைந்து கொண்டு இருந்த போது பார்த்து இருக்கிறோம். அவருடன் பேசி இருக்கிறோம்.
திருவெண்காட்டில் தங்கி பல நாள் ஓவியம் வரைந்தார். அவர் ஊர் கும்பகோணம்.
கயிலை காட்சிகள் மணியம் செல்வன் அவர்கள் வரைந்தது எங்கள் கயிலை பயணத்தை நினைவு படுத்தியது. மகிழ்ச்சியான பயண அனுபவம் நினைவுகளில் நீங்காமல் இருக்க வேண்டும்.
விகடன் தாத்தா உருவான கதை
இப்படித்தான் எல்லோர் வீட்டிலும் நடக்கும்
சித்திரக்குறும்பு பார்த்து ரசித்து சிரிங்க
பிள்ளையார் , சட்ட நிபுணர் நல்லா இருக்கிறது அல்லவா?
ஆமாம் அங்கே என்ன சாமான்? "அது சாமான் இல்லை அம்மா நம்ம சாமா.
கல்கத்தாவில் குண்டு போட்டால் நமக்கு என்ன பயம்? ஏன்று கேட்ட முத்தண்ணா பூனை தள்ளி விட்ட பாத்திர வெடிக்கு எங்கு இருக்கிறார் பாருங்கள்
நிம்மதியாக பாடலை கேட்க நல்லவழி
நல்லா சொன்னார்- வீடாய் நினைக்க சொன்னால் காசு எதற்கு ?
உடற்பயிற்சி பார்த்து இருப்பீர்கள் சோம்பல் பயிற்சி பாருங்கள். "இது எதற்கு எங்களுக்கு தெரியுமே" என்று சொல்வீர்கள்.
ஜவுளி கடை கடையாக பெண்கள் ஏறி இறங்கும் நகைச்சுவை இல்லாமல் இருக்காது. காலையில் போனால் இரவு வரை தேர்ந்து எடுப்பார்கள் என்ற நகைச்சுவை துணுக்கு உண்டு.
இதில் கடை கடையாய் தன் மனைவியை தேடுகிறார்.
தீபாவளி என்றால் மைசூர் பாக் சிரிப்பு இல்லாமலா?
ஞாயிற்றுகிழமை பார்த்து கொள்ளலாம் என்று எத்தனை வேலையை தள்ளி வைத்து கடைசியில் ஞாயிறு வந்தவுடன் இன்று எந்த வேலையை முன்னாடி செய்யலாம் என்று யோசித்து களைத்து போய் தூங்குகிறார்.
பவழவிழா தீபாவளி மலர் செய்திகள், படங்களை ரசித்தீர்களா?
2022 ம் ஆண்டு "இந்து தமிழ் திசை தீபாவளி மலர்" 150 ரூபாய்
அதில் //பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் சோழர்கள் வரலாறு குறித்த ஆர்வம் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் சோழர்கள், காவிரி, தஞ்சை குறித்த பல்வேறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தஞ்சை பெரிய கோயிலின் கலைச் சிறப்புகள், தனித்தன்மைகள் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் அர. அகிலா, கோமகன் ஆகியோர் விரிவான கட்டுரைகள் எழுதி இருக்கிறார்கள்.// என்று வந்து இருக்கிறது.
"விகடன் தீபாவளி மலர்" தஞ்சை கோயில் அட்டை அற்புதமாக இருக்கிறது. விலை 110 ரூபாய். ஆன்மீகம், அறிவியல், இலக்கியம், இசை, பராம்பரியம், நகைச்சுவை, பயணம்,கலை, சினிமா, அரசியல், தொலைக்காட்சி, சுற்று சூழல், ஆளுமை என்று காலபெட்டகமாய் பக்கத்துக்கு பக்கம் சுவாரசியமாக குடும்பத்திற்கு ஏற்ற இதழாக வெளியாகி இருக்கிறது உங்கள் தீபாவளி மலர் என்று விளம்பரம் இருக்கிறது.
கலைமகள், அமுதசுரபி, தினமணி என்று தீபாவளி மலர் வாங்க தூண்டுகிறது.
தீபாவளி மலர் யாராவது வாங்கி இருக்கிறீர்களா?
மீண்டும் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.! வாழ்க வளமுடன்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
__-----------------------------------------------------------------------------------------
ம் இதழாக வெளியாகியிருக்கிறத
சொல்லி வைத்து தீபாவளி மலர் வாங்கிய காலம் எல்லாம் மலைஏறிப் போச்சு! இரண்டு மூன்று வகை தீபாவளி மலர்கள் நாங்கள் வாங்கினால், இன்னொரு மூன்று தீபாவளி மலர்கள் உறவில், நட்பில் வேறு யாராவது வாங்கி பின்னர் எக்சேஞ் செய்வதுண்டு.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//சொல்லி வைத்து தீபாவளி மலர் வாங்கிய காலம் எல்லாம் மலைஏறிப் போச்சு//
ஆமாம். வீட்டுக்கு பேப்பர் போடுகிறவர் முன்பே சொல்லி விடுங்கள் தீபாவளி மலர் வேண்டுமா என்று கேட்டு விடுவார்.நாங்களும் வேண்டுமென்றால் சொல்லி விடுவோம்.
//இரண்டு மூன்று வகை தீபாவளி மலர்கள் நாங்கள் வாங்கினால், இன்னொரு மூன்று தீபாவளி மலர்கள் உறவில், நட்பில் வேறு யாராவது வாங்கி பின்னர் எக்சேஞ் செய்வதுண்டு. //
நாங்களும் இப்படி பல மலர்களை படித்து இருக்கிறோம்.
சிலகாலம் முன்னர் கனவு இல்லம் என்று ஒல்லி கார், வீடு என்று பரிசளித்துக் கொண்டிருந்தனர். அதற்காகவும் வாங்கியதுண்டு! பேராசை! விகடன் துணுக்குகள் அபாரம். ஹ்ம்... அது ஒரு காலம்.
பதிலளிநீக்கு//சிலகாலம் முன்னர் கனவு இல்லம் என்று ஒல்லி கார், வீடு என்று பரிசளித்துக் கொண்டிருந்தனர். அதற்காகவும் வாங்கியதுண்டு! பேராசை! //
நீக்குஅப்போது எல்லாம் நாங்கள் விகடன் வாங்க வில்லை. நிப்பாட்டி விட்டோம்.
//விகடன் துணுக்குகள் அபாரம். ஹ்ம்... அது ஒரு காலம்.//
ஆமாம், அது ஒரு காலம் தான்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
பதிவு அழகிய மலராக அமைந்து விட்டது அம்மா... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
பழைய தீபாவளி மலர் செய்திகளை பகிர்ந்து கொண்டது அருமை.
பதிலளிநீக்குதங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குபழைய தீபாவளி மலர் செய்திகள் பகிர்வை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
தாங்கள் தொகுத்த தீபாவளி மலர் (இதுதான் சிறப்பான தீபாவளி மலர்) அருமையாக உள்ளது. அந்த காலத்தில் வீட்டில் வாங்கி வந்த தீபாவளி மலர்களை விபரம் தெரிந்த பின் படித்துள்ளேன். கதை, ஜோக்ஸ் படிக்கும் ஆர்வம் வந்த காலத்தில், அது ஒவ்வொருவர் கையாக மாறி வரும் போது அன்றைய நாள் ஆவலாக இருக்கும். வேலைகளை அப்படி அப்படியே போட்டு விட்டு படிக்கவும் அம்மா சத்தம் போடுவார்கள். (இத்தனைக்கும், வீட்டில் அம்மாவுக்கும், பாட்டிக்குந்தான் வேலைகள் அதிகம். இருந்தாலும் கையில் கதைப்புத்தகங்களை வைத்துக் கொண்டு படிப்பதற்கு நேரம் காலம் என்ற ஒன்று உண்டல்லவா? அந்த ரீதியில் சத்தம் போடுவார்கள்.) அந்த பழைய நினைவெல்லாம் வருகிறது.
சில்பி வரைந்த தெய்வீகமான ஓவியங்கள் அப்படியே தத்ரூபமாக இருக்கும்.சிறப்பான ஓவியர். நீங்கள் அவருடன் பேசியிருக்கிறீர்களா ? மகிழ்ச்சியாக உள்ளது.
உங்கள் கணவருடன் நீங்கள் சென்ற கயிலை பயணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் இருவரும் இணைந்திருந்த புகைப்படம் அழகாக இருக்கிறது.
அந்தக்காலத்தில் கம்பியில் செருகப்பட்டிருக்கும் கடிதங்கள் நகைச்சுவை நன்றாக உள்ளது. ஆக எதையுமே விட மனதில்லை. படித்து ரசித்தேன். எங்கள் அம்மா வீட்டிலும் இதேதான் முன்பு நிறைய இருந்தது. இப்போது கூட எங்கள் அம்மா, அப்பா எழுதிய கடிதங்களை நான் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். எனக்குப்பின் அவை வெளியேற்றப்பட்டு விடும். ஹா ஹா ஹா.
சங்கீத கச்சேரி அமைதியாக கேட்டு எடுக்கப்பட்ட முயற்சியில் கடைசியில் நால்வர்தான் அமர்ந்து பார்க்கிறார்கள். ஹா ஹா ஹா என்னவொரு கற்பனை படங்கள். இதையும் ரசித்தேன்.
இன்னமும் தாங்கள் அழகாக தொகுத்துத் தந்ததை பின் எல்லாவற்றையும் பார்த்து விட்டு பிறகு மீண்டும் வருகிறேன் சகோதரி. தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமையாக உள்ளது.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.//
நன்றி
//கதை, ஜோக்ஸ் படிக்கும் ஆர்வம் வந்த காலத்தில், அது ஒவ்வொருவர் கையாக மாறி வரும் போது அன்றைய நாள் ஆவலாக இருக்கும். //
ஆமாம், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆவலுடன் எதிர்பார்க்கும் புத்தகம் ஆனந்த விகடன்.
//சில்பி வரைந்த தெய்வீகமான ஓவியங்கள் அப்படியே தத்ரூபமாக இருக்கும்.சிறப்பான ஓவியர். நீங்கள் அவருடன் பேசியிருக்கிறீர்களா ? மகிழ்ச்சியாக உள்ளது.//
அப்போது எல்லாம் காமிரா இல்லை எங்களிடம் அதனால் படம் எடுத்து கொள்ளவில்லை.
//உங்கள் கணவருடன் நீங்கள் சென்ற கயிலை பயணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் இருவரும் இணைந்திருந்த புகைப்படம் அழகாக இருக்கிறது.//
நன்றி.
//இப்போது கூட எங்கள் அம்மா, அப்பா எழுதிய கடிதங்களை நான் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். எனக்குப்பின் அவை வெளியேற்றப்பட்டு விடும். ஹா ஹா ஹா.//
நானும் வைத்து இருக்கிறேன்.
நிறைய கிழைத்து போட்டு விட்டு கொஞ்சம் மட்டும் நினைவாக வைத்து இருக்கிறேன். கிழித்து போட்டு விட்ட மறுநாள் மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறேன். காலத்தை காட்டும் அருமையான கால பெட்டகம், பொக்கிஷம் அவைகள்.
//சங்கீத கச்சேரி அமைதியாக கேட்டு எடுக்கப்பட்ட முயற்சியில் கடைசியில் நால்வர்தான் அமர்ந்து பார்க்கிறார்கள். ஹா ஹா ஹா என்னவொரு கற்பனை படங்கள். இதையும் ரசித்தேன்.//
டிசம்பர் மாதம் இது போல நிறைய வரும் சிரிப்புகள்.
இன்னமும் தாங்கள் அழகாக தொகுத்துத் தந்ததை பின் எல்லாவற்றையும் பார்த்து விட்டு பிறகு மீண்டும் வருகிறேன் சகோதரி. //
வாங்க வாங்க மெதுவாக தீபாவளி வேலைகள் இருக்குமே!
பதிவை ரசித்து படித்து விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி.
தீபாவளி மலர்களின் தொகுப்பு மிக அருமை! திரு.சில்பியின் ஓவியங்கள் எல்லாம் எத்தனை அழகு பாருங்கள்! அறுபதுகளில் வெளி வந்த தீபாவளி மலர்களிலெல்லாம் அவரின் கடவுளார் திருவுருவங்கள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்! கரம் கூப்பி தொழத்தோன்றும்!
பதிலளிநீக்குஅவருடையது மட்டுமல்ல, நகைச்சுவைப்படங்களும் கூட` எத்தனை அற்புதம்! சாதாரண கோடுகளில்கூட எத்தனை பாவங்களை காட்டியிருக்கிறார்கள்!!
வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
நீக்குதீபாவளி மலர்களின் தொகுப்பு மிக அருமை!//
நன்றி.
திரு.சில்பியின் ஓவியங்கள் எல்லாம் எத்தனை அழகு பாருங்கள்! அறுபதுகளில் வெளி வந்த தீபாவளி மலர்களிலெல்லாம் அவரின் கடவுளார் திருவுருவங்கள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்! கரம் கூப்பி தொழத்தோன்றும்!//
ஆமாம். நேரடியாக பார்த்து ரசித்து வரைந்த படங்கள் அல்லவா அவர் படங்கள்.
//நகைச்சுவைப்படங்களும் கூட` எத்தனை அற்புதம்! சாதாரண கோடுகளில்கூட எத்தனை பாவங்களை காட்டியிருக்கிறார்கள்!!//
ஆமாம்.
//நகைச்சுவைப்படங்களும் கூட` எத்தனை அற்புதம்! சாதாரண கோடுகளில்கூட எத்தனை பாவங்களை காட்டியிருக்கிறார்கள்!!//
ஆமாம், அனுபவித்து வரைந்து இருக்கிரார்கள்.
இதை படிக்க ஆவலை தூன்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அன்பு சகோதரிக்கு இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குவாழ்த்துகளுக்கு நன்றி.
கோமதிக்கா முதல் படமே அழகு. ஆமாம் அக்காலத்தில் தீபாவளி மலர் என்று வந்ததை நான் ஓரிரண்டு பார்த்திருக்கிறேன். பாட்டி கல்கி, அமுதசுரபி, கலைமகள் இவை மூன்றும் சந்தா கட்டி வாங்குவார் எனவே தீபாவளி மலரும் வரும். அதிலும் நான் பார்த்தவை ஓரிரண்டுதான். பாட்டி ரொம்ப ஆர்வமாக வாசிப்பார். இது அப்பாவின் அம்மா....அம்மாவின் அம்மா எந்தப் புத்தகமும் இதழும் வாங்க மாட்டார் வீட்டில் அனுமதி இல்லை. நான் அங்குதான் கூட்டுக் குடும்பமாக வளர்ந்தேன் என்பதால் அதிகம் இப்படியானவற்றை வாசித்ததில்லை,
பதிலளிநீக்குகீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குதீபாவளி மலர் வாங்குவது டிவி. தொலைகாட்சி வரும் முன் மக்கள் ஆர்வமாக வாங்கினார்கள். இப்போது வாங்குபவர்கள் இருக்கிறார்கள்.
எங்கள் சித்தப்பா ஒருவர் நிறைய தீபாவளி மலர் வாங்குவார்கள். படித்து விட்டு எல்லோருக்கும் கொடுப்பார்கள் படிக்க.
நீங்கள் சொல்வது போல கூட்டு குடும்பத்தில் பெரியவர்கள் சொல்வதை இளையவர்கள் கேட்க வேண்டும்.
திரு சில்பி அவர்களின் ஓவியம் இடம்பெறாத தீபாவளி மலரே இல்லை என்று சொல்லலாம். திரு. சில்பி அவர்கள் திருவெண்காடு கோயிலை படம் வரைந்து கொண்டு இருந்த போது பார்த்து இருக்கிறோம். அவருடன் பேசி இருக்கிறோம்.
பதிலளிநீக்குதிருவெண்காட்டில் தங்கி பல நாள் ஓவியம் வரைந்தார். //
ஆஹா! அருமையான தகவல் மற்றும் உங்கள் அனுபவம். அதுவும் மாமாவும் வரைவாரே எனவே அவர்கள் பேசுவதற்கும் நிறைய இருந்திருக்கும்.
இங்குள்ள ஓவியத்தைப் பார்க்கறப்ப, நம்ம நெல்லை இன்று பகிர்ந்திருக்கும் ஓவியம் கூட இந்த ஸ்டைல் போல இருக்கு இல்லையா...நன்றாக வரைந்திருந்தார்!!!!
கீதா
//ஆஹா! அருமையான தகவல் மற்றும் உங்கள் அனுபவம். அதுவும் மாமாவும் வரைவாரே எனவே அவர்கள் பேசுவதற்கும் நிறைய இருந்திருக்கும்.//
நீக்குமாமா அவர் வரைவதை நாம் தொந்திரவு செய்வது போல இருக்கும் பேச்சு கொடுக்க கூடாது என்றார்கள். நான் தான் ஆர்வமாக பேசினேன். அவர் ஓவியங்களை புத்தகங்களில் பார்த்து இருக்கிறேன் என்றேன். ஒரு சில வார்த்தைகள் மாமா பேசினார்கள், அவர்களை பாராட்டி.
இங்குள்ள ஓவியத்தைப் பார்க்கறப்ப, நம்ம நெல்லை இன்று பகிர்ந்திருக்கும் ஓவியம் கூட இந்த ஸ்டைல் போல இருக்கு இல்லையா...நன்றாக வரைந்திருந்தார்!!!!//
ஆமாம், நன்றாக வரைந்து இருந்தார்.
ஓவியங்கள் அனைத்தும் செம....பார்த்து ரசித்தேன் கோமதிக்கா. நல்ல கலெக்ஷன்...பத்திரமாக வைச்சிருக்கீங்களே!!!
பதிலளிநீக்குகீதா
//ஓவியங்கள் அனைத்தும் செம....பார்த்து ரசித்தேன் கோமதிக்கா. நல்ல கலெக்ஷன்...பத்திரமாக வைச்சிருக்கீங்களே!!!//
நீக்கு2002 ம் வருஷம் தான் அதனால் பத்திரமாக இருக்கிறது.
ம செ தான் சென்று பார்த்த கயிலாயத்தை மிக அழகாக படைத்திருக்கிறார். வித்தியாசமாகப் பதிந்திருக்கிறார் இல்லையா....
பதிலளிநீக்குஉங்கள் கயிலாயபயணம் அருமையாக இருந்திருக்கும். எனக்கு ஆசையுள்ள பயணம். ஆனால் இனி அது வாய்க்குமா என்று தெரியவில்லை. படங்கள் அழகாக இருக்கின்றன கோமதிக்கா
கீதா
அருமையான தொகுப்பு.. மறக்க இயலாத சித்திரங்கள்.
பதிலளிநீக்குகயிலாய பயணம்..
இப்போது தீபாவளி மலர் எல்லாம் வாங்குவதற்கான உத்தேசம் எதுவும் இல்லை..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//மறக்க இயலாத சித்திரங்கள்.
கயிலாய பயணம்..//
ஆமாம்.
//இப்போது தீபாவளி மலர் எல்லாம் வாங்குவதற்கான உத்தேசம் எதுவும் இல்லை..//
நானும் வாங்கவில்லை. இப்போது தீபாவளி மலர் என்ன விலை என்று பார்த்தேன்.அதனால் அதை பகிர்ந்து கொண்டேன். வாங்குபவர்கள் இருக்கிறார்கள் தானே!
தஞ்சாவூரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு கருவூரார் சந்நிதியில் அமர்ந்தால் போதும்..
பதிலளிநீக்குஅதற்கு மேல் விகடன் குழுவினர் வந்து என்ன சொல்லி விடப்போகின்றனர்?..
அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகள்..
//தஞ்சாவூரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு கருவூரார் சந்நிதியில் அமர்ந்தால் போதும்..//
நீக்குஅங்கு நிறைய பேர் தியானத்தில் அமர்ந்து இருப்பார்கள்.
எல்லோருக்கும் அந்த பேறு கிடைக்குமா?
ஆதற்கு மேல் விகடன் குழுவினர் வந்து என்ன சொல்லி விடப்போகின்றனர்?..//
தெரியாதவர்களுக்கு தஞ்சை போக முடியாதவர்களுக்கு அவர்கள் சொல்வதை புத்தகத்தில் வாசிக்க கிடைக்குமே!
ஊங்கள் கருத்துக்கும், அன்பான நல் வாழ்த்துகளுக்கும் நன்றி.
கைலாயப் பகுதியில் அந்தக் கூடாரம் போன்று - கோயிலைச்சுற்றியோ? அப்பகுதியில் ஏன் இப்படிக் குப்பைகள்! எப்படி இந்த சாமான் எல்லாம் எடுத்துச் செல்கிறார்கள் ஆச்சரியம்...அப்பகுதியில் மக்கள் ஜீவிப்பது போன்ற எந்த அடையாளமும் இல்லை....
பதிலளிநீக்குஎனக்கு இப்பகுதிக்கு எல்லாம் செல்ல வேண்டும் என்று நெடுநாளைய ஆசை...
விகடன் தாத்தா உருவான விவரணம் ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது.
ஹாஹாஹாஹா இப்படித்தான் கிழிக்க வேண்டும் என்று நினைத்து ஏதேனும் ஒரு செண்டிமென்ட் டச் இருக்கும் உடனே வைத்துக் கொண்டு விடுவோம்!!! ரசித்தேன் யதார்த்த நகைச்சுவை! கோபுலு, சூப்பர்!!
சித்திரக் குறும்பு செம...தண்ணீர்ச் சண்டை, ஆயுத ஒழிப்பு சட்ட நிபுணர், பிள்ளை யார்?!! எல்லாமே அழகா வேறொரு கோணத்தில் பொருத்தமாக வரைந்திருக்கிறார் ஓவியர்!! செம...
சாமான் - சாமா - ஹாஹாஹா அந்த ஓவியத்தில் வலது புறம் கூலிங்க்ளாஸ் போல பம்மென்று குடுமி முடியுடன் ஒரு பையன்...அது டக்கென்று நாகேஷ் போலத் தோன்றியது!
சங்கீதக் கச்சேரியைக் கேட்க....ஒவ்வொரு வகயையும் நீக்கிட கடைசில யாருமே இருக்காமாட்டாங்க!! என்று நினைத்துக் கொண்டே வந்தால் அதேதான் கடைசியில்!!!..
ஹாஹாஹாஹா துப்பாக்கி முனையில் ஒரு சங்கீத ரசிகர்!!!???
அதானே வீடாய் நினைச்சா காசு கொடுக்கணுமா என்ன!!? அந்த ஜோக் ரசித்தேன்..
சோம்பல் பயிற்சி...ஹாஹா
ஜவுளிக் கடையில் மனைவியைத் தேடும் ஜோக் பல காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது இல்லையா...வேறு வேறு விதத்தில்...
கிருஷ்ணா ஸ்வீட் விளம்பரம் ஹாஹாஹா அவங்க மைசூர்பாக் அதிகமான நெய்யில் செஞ்சுருப்பாங்க....மைசூர்பாக் நகைச்சுவையும் காலம் காலமாகச் சொல்லப்படும் ஒன்று
ஹாஹாஹா ஞாயிற்றுக் கிழமை செய்யும் வேலையில் தூங்கும் வேலையும் இருக்குமாருக்கும்!!!
தீபாவளி மலர் எதுவும் வாங்கவில்லை கோமதிக்கா அப்படி வாங்கிய பழக்கமும் இல்லையே எனக்கு ஆசை இருந்தாலும்....
அனைத்தும் ரசித்தேன்...உங்கள் பதிவே தீபாவளி பூவானம்/பூச்சட்டி போல ஆகிவிட்டது!!!! அருமை கோமதிக்கா...
கீதா
//கைலாயப் பகுதியில் அந்தக் கூடாரம் போன்று - கோயிலைச்சுற்றியோ? அப்பகுதியில் ஏன் இப்படிக் குப்பைகள்! எப்படி இந்த சாமான் எல்லாம் எடுத்துச் செல்கிறார்கள் ஆச்சரியம்...அப்பகுதியில் மக்கள் ஜீவிப்பது போன்ற எந்த அடையாளமும் இல்லை....//
நீக்குயமத்வாரில் ஒரு சிறிய கோவில் உள்ளது. அதன் ஒரு வழியாகச்
சென்று மறுவழியில் வெளியே வரவேண்டும். அப்படி சென்று
வந்தால் யமபயம் கிடையாதாம். அங்கு யாரோ நம் துணிகளை போட்டு இருப்பார்கள் போலும் அதை பார்த்து மக்கள் எல்லாம் துணிகளை போட்டு இருக்கீரார்கள், அதற்கு பிறகு இது போல வண்ண கொடிகளை கட்டுகிறார்கள்.
அங்கு யாரும் வசிக்க வில்லை. வசிக்க முடியாது.
https://mathysblog.blogspot.com/2012/01/5.html எங்கள் கயிலை யாத்திரை சுட்டி நேரம் இருக்கும் போது படித்து பாருங்கள்.
அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.
மிகவும் ரசித்துப் படித்தேன்.
பதிலளிநீக்கு//இப்படித்தான் எல்லார் வீடுகளிலும் நடக்கும்// - உண்மைதான். அருமையான ஜோக் பதிவு இது. நாம் உட்கார்ந்து பார்த்து, எது தேவை, எது தேவையில்லை என்று பார்க்க ஆரம்பித்தால் நேரம் வீணாகும், எல்லாமே தேவையானதுபோலவே தோன்றும். கடந்த ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்தில் பார்க்காதவைகளைக் கண்ணைமூடிக்கொண்டு தூரப்போட்டுவிடலாம்.
சில்பி தெய்வீக ஓவியர். அவருடைய ஓவியங்கள், அந்தத் தலத்துத் தெய்வங்களைக் கண்முன்னே கொண்டுவரும் சக்தியுடையவை. ஸ்ரீரங்கம் ரங்கநாதர், ஷோளிங்கர் நரசிம்மர் - சொல்ல வார்த்தைகளே இல்லை
மிகவும் ரசித்துப் படித்தேன்.//
நீக்குநன்றி.
//நாம் உட்கார்ந்து பார்த்து, எது தேவை, எது தேவையில்லை என்று பார்க்க ஆரம்பித்தால் நேரம் வீணாகும், எல்லாமே தேவையானதுபோலவே தோன்றும். கடந்த ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்தில் பார்க்காதவைகளைக் கண்ணைமூடிக்கொண்டு தூரப்போட்டுவிடலாம்//
அதுதான் முடியாமல் இருக்கே! மகள் அப்படித்தான் சொல்வாள் எடுக்கவே எடுக்காத பாத்திரங்களை வைத்து கொண்டு என்ன செய்ய போகிறாய் என்று. யாராவது உறவினர் வந்தால் வேண்டுமே! என்பேன். இப்போது யார் வந்து வீடுகளில் வெகு நாள் இருக்கிறார்கள்? அப்படியே இருந்தாலும் நிறைய பேர் வந்தால் நம்மால் சமைக்க முடியவில்லை. வந்தவர்களை அழைத்து கொண்டு ஊர் சுற்றி பார்க்க ஓட்டலில் உணவு உண்ண என்று போகிறது.
எப்போதாவது படிக்க வேண்டும் என்று நினைத்தால் கடிதங்களை பத்திரபடுத்தி வைத்தால் படிக்கலாம்.
//சில்பி தெய்வீக ஓவியர். அவருடைய ஓவியங்கள், அந்தத் தலத்துத் தெய்வங்களைக் கண்முன்னே கொண்டுவரும் சக்தியுடையவை. ஸ்ரீரங்கம் ரங்கநாதர், ஷோளிங்கர் நரசிம்மர் - சொல்ல வார்த்தைகளே இல்லை//
ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான்.
உங்கள் கருத்துக்களை ஸ்பாம்(spam) இல்லை என்று சொன்னபின் பப்ளிஸ் செய்ய அனுமதி கொடுத்தது .
ஏன் இப்படி என்று தெரியவில்லை
உங்கள் கருத்துக்களை விடுவித்து வெட்டேன்.
அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி, நன்றி.
கைலாயம் முன்பு எடுத்துக்கொண்ட போட்டோவைப் பகிர்ந்திருக்கலாம்.
பதிலளிநீக்குநான் பத்திரிகைகள், தீபாவளி மலர் போன்றவற்றை இரண்டு மூன்று முறை படிக்காமல் யாரிடமும் தருவதில்லை. அதிலும் இரயில் பிரயாணங்களில் கொடுக்கவே மாட்டேன். ஒன்று சுகாதாரம் கருதி. இரண்டு, நாம் வாங்கிய பத்திரிகையை நாம் முழுவதுமாகப் படிக்காமல் பிறருக்குத் தருவது பிடிக்காது.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//கைலாயம் முன்பு எடுத்துக்கொண்ட போட்டோவைப் பகிர்ந்திருக்கலாம்.//
பின் பக்கம் தெரிகிறதே! கைலாயம். மணீயம் செல்வம் பகிர்ந்து இருக்கும் இடத்தில் நின்று எடுத்து கொண்ட படம்தான் அது.
கயிலையின் மேற்கு முகம் தெரிகிறது.
தார்ச்சன் என்ர இடம் சுற்றிலும் எட்டு மலைகள் சூழ்ந்திருக்க நடுநாயகமாக திகழௌம் கயிலாய் மலையின் கம்பீரம் என்று போட்டு இருக்கிறார் இல்லையா அந்த இடம் தான். இங்கிரிந்து தான் குதிரையில் , கால்நடையாக பரிக்கிரமா எங்கிற பிரதட்சணத்தை தொடர வேண்டும்.
வெள்ளையாக பனி மூடி கிடக்கிறது மலை.
ரயில் பயணத்தில் நம் கையில் நாலு புத்தகம் இருக்கும் போது ஒன்றை கொடுங்கள் படித்து விட்டு தருகிறேன் என்கிற போது மறுக்க முடியாது. செய்தி தாள்கள் வாங்கினாலும் அப்படித்தான் ஒரு பக்கம் படிக்கும் போது ஒரு பக்கம் பேப்பரை கேட்பார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
விகடன், குமுதம் பத்திரிகைகள், கல்கி தீபாவளி மலர் போன்றவை ஒரு காலத்தில் சூப்பராகவும், மிகவும் ரசிக்கும்படியும் இருக்கும். கடந்த 20 வருடங்களாக வருபவை..... அவற்றைப் பற்றிச் சொல்லிப் பிரயோசனமில்லை. நம் ரசனை மாறவில்லையா? அல்லது பெரும்பாலான வாசகர்கள் ரசனை மோசமாகிவிட்டதா என்று புரியவில்லை
பதிலளிநீக்குஇந்த கேள்வி புதன் கிழமைக்கு மாதிரி இருக்கே!
நீக்குவிகடன் புத்தகம் அளவு மாறிய போதே நான் நிறுத்தி விட்டேன் வாங்குவதை. பழைய விகடன் தான் தெரியும் புதுவிகடன் சில உறவினர், நட்பு வீடுகளில் , பல் மருத்துவர் ஆஸ்பத்திரியில் படித்து இருக்கிறேன். அவை மனதை கவரவில்லை. அதற்கு கரணம் தெரியவில்லை.
கல்கி பொன்னியின் செல்வன் முடிந்தவுடன் வாங்கவில்லை.அதுவரை வாங்கினோம். 13 வது அத்தியாத்திலிருந்து வாங்க ஆரம்பித்தோம். அதனால் மீண்டும் கல்கியில் வர ஆரம்பித்த போது 13 வாரம் மட்டும் வாங்கினேன்.
குமுதம் அம்மா வீட்டில் வாங்கியதுதான். மின்னல், மழை, மோகினி, கலீர் கலீர் , ஜாவர் சீத்தாராமன் எழுதிய கதை பெயர் மறந்து விட்டேன், அவையெல்லாம் அம்மா பைண்ட் செய்து வைத்து இருந்தார்கள்.
கல்கண்டு வாங்குவோம் அதில் நிறைய கதைகள் அம்மாவீட்டில் இருந்தது.
வாரப்பத்திரிக்கை எதுவும் இப்போது வாங்குவதில்லை. இணையம் வந்த பின் கதை புத்தகங்கள் வாசிப்ப்து குறைந்து இருக்கிறது. எந்த புத்தகம் கையில் கிடைத்தாலும் அட்டை முதல் கடைசி பக்கம் வரை ஒன்று விடாமல் படிப்பவள் இப்போது ஒரு புத்தகத்தை எடுத்தால் முடிக்க நாள் ஆகிறது. மனம் ஒன்றி படிக்க முடியவில்லை. தொடர் கதைகளும் விறு விறுப்பாய் இப்போது இல்லை.
கொரியன் நாடகங்கள் மனதை கவருகிறது இப்போது ஹாட் ஸ்டாரில் பார்க்கிறேன். குடும்பம் , அன்பு, பாசம், நேசம், காதல் ,உண்மையான நட்பு எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.
படிப்பது குறைந்து இருக்கிறது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ஹாட்ஸ்டாரில் என்ன என்ன பார்க்கிறீர்கள்?
நீக்குநீங்கள் எழுதியிருப்பது உண்மை. நான் பத்திரிகையின் அட்டை டு அட்டை படிப்பேன், விளம்பரம்கூட விடாமல். இப்போது எதையுமே ஒன்றிப் படிக்கும்படி ரசனையாகவே இல்லை. ஜாவர் சீதாராமன் கதை, உடல் பொருள் ஆனந்தி - அருமையான தொடர்.
அப்பா, கல்கண்டு, விகடன், துக்ளக் வாங்குவார். முன்பு கல்கி வாங்கினார் (70களில்). குமுதம் வாங்கவே மாட்டார்.
ஹாட்ஸ்டாரில் பிள்ளைகள் சொல்லும் நல்ல படங்கள் எல்லா மொழி படங்களும், கொரியன் தொடர் நாடகம் பார்க்கிறேன்.
நீக்கு//நீங்கள் எழுதியிருப்பது உண்மை. நான் பத்திரிகையின் அட்டை டு அட்டை படிப்பேன், விளம்பரம்கூட விடாமல். //
ஆமாம் முன்பு நமக்கு வேறு பொழுது போக்கு இல்லாததும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.
//ஜாவர் சீதாராமன் கதை, உடல் பொருள் ஆனந்தி - அருமையான தொடர்.//
ஓ! ஆமாம். நினைவுக்கு வந்து விட்டது. ராமுவின் ஓவியம் நினைவில் இருக்கிறது.
குமுதமும் ஒரு காலத்தில் நன்றாக இருந்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
இன்னொரு கருத்தைக் காணோமே
பதிலளிநீக்குதேடி போட்டு விட்டேன்.
நீக்குதீபாவளி மலர் குறித்த மலரும் நினைவுகளின் பகிர்வு அருமை. விகடன், தமிழ் இந்து தீபாவளி மலர்கள் குறித்த தங்கள் பார்வை நன்று. தீபாவளி மலர்கள் புத்தகங்கள் போல சேமிப்பில் வைக்கக் கூடியவை.
பதிலளிநீக்குதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குதீபாவளி மலர் குறித்த மலரும் நினைவுகளின் பகிர்வு அருமை. விகடன், தமிழ் இந்து தீபாவளி மலர்கள் குறித்த தங்கள் பார்வை நன்று. தீபாவளி மலர்கள் புத்தகங்கள் போல சேமிப்பில் வைக்கக் கூடியவை//
ஆமாம், ராமலக்ஷ்மி , புத்தக சேமிப்பில் வைக்கக் கூடையவைதான் அந்தக்கால தீபாவளி மலர்கள்.
இப்போது வாங்குவது இல்லை. இப்படி இருக்கிறதோ என்று தான் பார்த்தேன், இந்து பத்திரிக்கை, மற்றும் விகடன் விள்மபரங்கள் எல்லாம் படிக்க ஆவலை தூண்டுகிறது.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கு நன்றி.