ஞாயிறு, 30 அக்டோபர், 2022

வெற்றி வேல்! வீர வேல்!

 

கந்தவேள் முருகனுக்கு அரோகரா! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

முருகனை சிந்திப்போம்-  பகுதி 6


ஆறுபடை வீடுகள் 

கந்த சஷ்டி நாட்களில் முருகனைச் சிந்தித்து வருகிறோம்.  இன்று
 6 வது நாள் .
பழனி ஆண்டவர்

காலம் காலமாய் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் யுத்தம் நடந்து
 கொண்டு தான் இருக்கிறது. முடிவில் நல்லது வெற்றிபெறும். தீயவை 
அழியும் என்பது நீதி.  அதுதான் கந்த சஷ்டி விழா நமக்கு உணர்த்தும் பாடம்.
சிவபக்தனாக இருந்தாலும் ஆணவத்தால் பாலகன் என்று ஏளனம்
 புரிந்து அவரை எதிர்த்து யுத்தம் புரிந்து, உடல் பிளவுபட்டு ஒரு பாதி
 சேவலாகவும், மறுபாதி மயிலாகவும் மாறினாலும் முருகனை
 எதிர்த்து போர் புரிந்தான், அவைகள் மீது திருநோக்கம் (அருள் பார்வை)
செய்து சாந்தப்படுத்தித் தஞ்சம் அடைய வைத்துச் சினம் கொண்ட 
சேவலையும்,செருக்குற்ற மயிலையும் தன்னிடம் பற்றுக் கொண்ட
 ஞானியாக மாற்றினார் முருகன்.

பகைவனுக்கும் அருளிய கருணை வள்ளல். சேவலைத் தேரில் 
கொடியாகவும், மயிலை வாகனமாகவும் வைத்துக் கொண்டார்.


வெற்றி வேல் வீரவேல் 

தாரகாசுரன்  (மாயை)

சிங்கமுகாசுரன்  (கன்மம்)
சூரபத்மன் (ஆணவம்)

சுற்றி நிற்காதே பகையே துள்ளி வந்த வேல்  சூரபதுமனை
 வீழ்த்திய காட்சிசூரபதுமனின் உடல் சேவலும், மயிலுமாக ஆனது 
ஞானமே வடிவானது சேவல்., மயில்

கடல் அலை போல் பக்தர்கள்  தலைகள்.

வெற்றி வேல் வீர வேல் 
சுற்றி வந்த பகைவர் தம்மை 
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல் 
ஞான சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல் 
சுற்றி வந்த பகைவர் தம்மை 
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல் 
ஞான சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல் 


ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல்
ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல்
மோதி அந்த குன்றழித்த சக்தி வேல்
மோதி அந்த குன்றழித்த சக்தி வேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்

மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்

வெற்றி வேல் வீர வேல் 
சுற்றி வந்த பகைவர் தம்மை 
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல் 
ஞான சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல் 


தெய்வம் உண்டு தெய்வம் உண்டு 
என்று சொல்லும் வெற்றி வேல்
தெய்வ பக்தி உள்ளவர்க்கு 
கை கொடுக்கும் வீர வேல்
தெய்வம் உண்டு தெய்வம் உண்டு 
என்று சொல்லும் வெற்றி வேல்
தெய்வ பக்தி உள்ளவர்க்கு 
கை கொடுக்கும் வீர வேல்
எய்த பின்பு மீண்டும்
கந்தன் கையில் வந்து நின்ற வேல்
எய்த பின்பு மீண்டும் 
கந்தன் கையில் வந்து நின்ற வேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி

காணும் எங்கள் சக்தி வேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
காணும் எங்கள் சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல் 
சுற்றி வந்த பகைவர் தம்மை 
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
 
ஞான சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல்.
..


//அடியேன் நினைத்தது : ஒரு சினிமா பாடல்... ஜானகி அம்மாவின் 
உன்னத
 குரலில்.//  என்று சொல்லி இருந்தார்.
தனபாலன் சொன்ன பாடல் இதுதான் என்று நினைக்கிறேன் 
காலத்தை வென்ற பாடல்.  'கொஞ்சும் சலங்கை' படத்தில் 
நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களுக்காகப் பாடிய 
இனிமையான பாடல். திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
 சொன்னதுபோல்  எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் தான்.

 நாதஸ்வர இசைச் சக்கரவர்த்தி, காருகுறிச்சி அருணாசலம் 
அவர்களுடன் ஜானகி அவர்களின் குரல் இழைந்து இணைந்து பாடுவது
 அற்புதம்.

                                                
என் தாய்மாமா அவர்கள் எழுதிய இந்த முருகன்  திருத்தல 
வரலாற்றில் நான் எழுதிய கதிர்காமம் பதிவும் இடம் பெற்று 
இருக்கிறது.  மாமா அவர்கள்  என்பதிவையும்  சேர்த்துக் கொண்டது 
அளவில்லா மகிழ்ச்சியைத் தந்தது. இதுவும் முருகனின் அருள்தான்.
                                                
   
  அவர்கள் கையெழுத்துப் போட்டு அந்தப் புத்தகத்தைத் தந்தார்கள். அவர்கள் கையெழுத்து  அழகாய் இருக்கும். அவர்கள் கம்யூட்டர் கற்றுக்
 கொள்ள வில்லை கதை, கட்டுரைகளை  அவர்கள் இறக்கும் 
வரை (84) அவர்களே எழுதித்தான்  அச்சேற்றக் கொடுப்பார்கள்.
  முருகன் அவர்களின் இஷ்ட தெய்வம். இன்று அவர்களையும் 
 நினைத்து வணங்கிக் கொள்கிறேன்.

இந்த ஆறு நாட்களும் முருகன் அருளால் முருகனைச் சிந்தித்து 
இருந்தோம். இதில் என்னுடன் தினம் தொடர்ந்து வந்த அனைவருக்கும்
 நன்றி.

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க சேவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.


வள்ளி கணவன் பெயரை தினம் சொல்லடா தம்பி
உன் வாழ்வு வளம் பெறவே! பாடல் அருமையாக இருக்கும் 

இந்த காணொளி அருமையாக இருக்கும், பாடல் கேட்டு இருப்பீர்கள்
மீண்டும் கேட்டுப் பாருங்கள்.

அருள் வடிவான  வள்ளி தேவசேனாபதியை  வணங்கி வாழ்வில்
 வளம் பெறுவோம்.

ஆறு நாளும் தொடர் பதிவில் முருகனை சிந்தித்தோம். 
தொடர்ந்து வந்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி நன்றி.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------------------------------
                                                             

17 கருத்துகள்:

 1. கந்தவேள் முருகனுக்கு அரோகரா!..
  வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!..

  முருகன் அருளால் தீமைகள் அழிந்து எங்கும் நன்மைகள் பெருகட்டும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
   முருகன் அருளால் தீமைகள் அழிந்து எங்கும் நன்மைகள் பெருகட்டும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. ஆறு நாட்களில் எத்தனை முருகன் பாடல்கள்...   அனுதினமும் முருகனை நினைந்து நினைந்து உருகி இருக்கிறோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   ஆமாம், ஆறு நாட்களும் முருகன் பாடல்களை தேடி தேடி கேட்டு மகிழ்ந்து மனம் உருகி இருக்கிறோம்.
   மன அமைதியை , மகிழ்வை அனைவருக்கும் தர வேண்டும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. ஸ்ரீராம், புதுயுக தொலைக்காட்சியில் நான் இந்த் ஆறு நாளும் போட்ட பாடலை வைத்து கொண்டு இருக்கீறார்கள். இப்போது மருதமலை பாடல் பாடி கொண்டு இருக்கிறது.

   நீக்கு
 3. இப்போத் தான் திருச்செந்தூர் சூர சம்ஹாரம் பார்த்தோம். தொடர்ந்து காட்டிய பழனி/போரூர்/வடபழனி போன்றவற்றின் தரிசனமும் கிடைத்தது. இங்கே வந்தால் உங்கள் தயவில் மிகவும் அருமையானதொரு பதிவு. படங்களுடன் மிக அருமை. கடைசிக் காணொளி வீடியோ வரவில்லை என்று சொல்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   பழனி/போரூர்/வடபழனி போன்றவற்றின் தரிசனமும் கிடைத்தது.//

   நானும் பார்த்தேன். காணொளி சில நேரம் வராது என்பதால் சுட்டி கொடுத்து இருந்தேன். அதை கிளிக் செய்தால் பார்க்கலாம்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.
   நீக்கு
 4. படங்கள் அனைத்தும் அழகு...

  கொஞ்சும் சலங்கை திரைப்படத்தின் பாடல் அற்புத பாடல்... மிக்க நன்றி அம்மா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

   படங்கள் அனைத்தும் அழகு...//

   நன்றி.

   //கொஞ்சும் சலங்கை திரைப்படத்தின் பாடல் அற்புத பாடல்... மிக்க நன்றி அம்மா//

   ஆமாம், அற்புத பாடல்தான்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 5. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. சஷ்டியின் இறுதிநாளான இன்று கந்தவேளின் பதிவு நன்றாக இருக்கிறது. சூரசம்ஹார படங்கள் அனைத்தும் அருமை. ஆம். ஆணவத்தை அழித்த முருகனை நாம் ஆயுள் முழுவதும் பற்றித் துதிப்போம். விளக்கம் அருமை.

  நீங்கள் முருகனின் பாடல்கள் கேட்டுள்ளேன். கொஞ்சம் சலங்கை படப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாதது. அதுபோல் சீர்காழி அவர்களின் பக்திப்பாடாலான "வள்ளிக் கணவன் பெயரை தினமும்" என்ற பாடலும் அருமையானது.

  உங்கள் மாமா அவர்கள் எழுதிய திருமுருகன் திருத்தலப் புத்தகம் நன்றாக உள்ளது. அவரின் கையெழுத்தும் மிக அருமையாக இருக்கிறது. அதில் அவர் உங்களைப்பற்றியும் புகழ்ந்து எழுதியிருப்பதைப் படித்தேன். இப்படி ஒரு சந்தர்ப்பம் தங்களுக்கு கிடைத்திருப்பதற்கு உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  உங்களுடன் இந்த சஷ்டியின் ஆறு நாட்களும் ஆறுமுகனை சிந்தித்தவாறு எங்களையும் அழைத்துக் கொண்டு பயணித்த உங்களுக்குத்தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.

  நேற்று உடனடியாக இந்தப்பதிவுக்கு என்னால் வர இயலவில்லை. மன்னிக்கவும் நான் ஒரு சில பாடல்களுடனான பதிவை தொகுத்து முருகனருளால் போட்டு விட்டு உடனே அந்த சண்முகா கோவிலுக்கு அவன் தரிசனம் காணச் சென்று விட்டோம். இரவு திரும்பி வர தாமதமாகி விட்டது.என் பதிவுக்கு உடனே வந்து கருத்துக்கள் தந்த உங்களுக்கு மிக்க நன்றி. உங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   கந்தவேளின் பதிவு நன்றாக இருக்கிறது. சூரசம்ஹார படங்கள் அனைத்தும் அருமை. //

   நன்றி.

   //ஆணவத்தை அழித்த முருகனை நாம் ஆயுள் முழுவதும் பற்றித் துதிப்போம். விளக்கம் அருமை.//

   முருகனை ஆயுள் முழுவதும் துதிப்போம்.


   // கொஞ்சம் சலங்கை படப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாதது. //

   ஆமாம் காலத்தை வென்ற பாடல்.

   //உங்களுடன் இந்த சஷ்டியின் ஆறு நாட்களும் ஆறுமுகனை சிந்தித்தவாறு எங்களையும் அழைத்துக் கொண்டு பயணித்த உங்களுக்குத்தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.//

   ஆறு நாளும் உடன் வந்து கருத்துக்கள் சொன்னது மகிழ்ச்சி.   //அதுபோல் சீர்காழி அவர்களின் பக்திப்பாடாலான "வள்ளிக் கணவன் பெயரை தினமும்" என்ற பாடலும் அருமையானது.//

   உறுதியுடன் நம்பி என்ற வரி மிகவும் பிடிக்கும்.
   மன உறுதி வேண்டும் எந்த செயல் செய்தாலும்.

   //உங்கள் மாமா அவர்கள் எழுதிய திருமுருகன் திருத்தலப் புத்தகம் நன்றாக உள்ளது. அவரின் கையெழுத்தும் மிக அருமையாக இருக்கிறது. அதில் அவர் உங்களைப்பற்றியும் புகழ்ந்து எழுதியிருப்பதைப் படித்தேன். இப்படி ஒரு சந்தர்ப்பம் தங்களுக்கு கிடைத்திருப்பதற்கு உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

   மாமா இருந்தால் இன்னும் எழுதி கொண்டே இருப்பார்கள், எழுத்து அவர்களின் உயிர் மூச்சு போல!

   நீங்கள் தொகுத்து வழங்கிய பாடல்களும் அருமை.
   கோயில் சென்று வந்தது மகிழ்ச்சி.
   நான் போக முடியவில்லை என்பதால் எங்கள் அண்ணி போய் வந்த முருகன் படம் அனுப்பினார்கள்.
   தொலைக் காட்சியில் நேரடி ஓளிபரப்பு பார்த்து விட்டேன்.
   உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.   நீக்கு
 6. படங்கள் அழழு.
  காணொலி கண்டு மகிழ்ந்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 7. அருமையான தரிசனங்கள் புகைப்படங்கள் வழியாக முருகன் அருளால்...

  கொஞ்சம் சலங்கை காலம் கடந்தும் நிற்கும் பாடல். காரைக்குறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வமும், ஜானகியம்மாவின் குரலும் போட்டி போடும் பாடல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //கொஞ்சம் சலங்கை காலம் கடந்தும் நிற்கும் பாடல். காரைக்குறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வமும், ஜானகியம்மாவின் குரலும் போட்டி போடும் பாடல்.//

   ஆமாம், மிக அருமையான வாசிப்பு, அருமையாக பாடி இருப்பார்.
   நாதஸ்வரம், பாடல், இசை எல்லாம் நம்மை மெய் மறக்க செய்யும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. அருமையான பதிவு தரிசித்து மகிழ்ந்தோம்.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு