புதன், 19 அக்டோபர், 2022

எங்கள் குடியிருப்பு பறவைகள்!



நிஜமும், நிழலும் (புல் புல் பறவை)

பறவைகள்  பதிவுகள் போட்டு நாளாச்சு இல்லையா! அதனால் இன்று பறவைகள் பதிவு.

எதிர் பக்கம் இருக்கும் கோடி வீட்டில் சாப்பாடு வைக்கும் முறம் உடைந்து விட்டது, (வெயில் பட்டு பட்டு) அதில் வைத்த உணவு கீழே விழுந்து விட்டது 
கைபிடியில் இருக்கும் மழை நீரை குடிக்கிறது 


இன்று தண்ணீர் தான் உணவு என்று சொல்கிறதோ!

இரண்டு ஜோடி குருவிகள் பேசுகிறது. "நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்னுடன் பேசு"

நீங்களும் அது என்ன பேசுகிறது என்று உங்கள்   மனதில் தோன்றுவதை சொல்லுங்கள்.
குட்டிக் கரணம் போடவா?
இதோ பாரு!
இன்னும் ம்னது இறங்கவில்லையா?
சரி சரி இனி  சமாதானம் சரியா!

இரண்டு ஜோடி குருவிகளும்  மாலை நேரம் பேசி கொண்டு இருந்தது. இடது பக்கம் இருக்கும்  ஜோடி பேசுவதை சொல்லி இருக்கிறேன் வலது பக்கம் உள்ள குருவிகள் என்ன சொல்கிறது?


எதிர் பக்கம் கடை கோடி வீட்டில் உணவு எடுக்கும் ஆண் குயில்
 

பருப்பு சாதமா! மழை நேரம் கொஞ்சம் காரமாக சாம்பார் சாதம்,அல்லது வத்தக்குழம்பு சாதம்  வைத்து இருக்கலாம் என்று நினைக்கிறதோ!

"கருவேப்பிலை மரத்தில்காய்கள் பழுத்து இருக்கு வா சாப்பிடலாம்"
 

சாப்பிட்டால் கொஞ்சம் பறக்க வேண்டும் என்று பறந்து விட்டாயா?

இரண்டு மைனா பார்த்தால் நல்லது என்று பள்ளி பிள்ளைகள் சொல்வார்கள் இரண்டு மாடி  மேல் நின்று கொண்டு இருந்தது எடுக்க போகும் போது ஒன்று  பறந்து விட்டது.


முந்தின நாள் எடுத்த மைனா படங்கள்

இந்த மரத்தில் எல்லா பறவைகளும் வந்து அமர்ந்து இருக்கும் பறவைகளுக்கு பிடித்த மரம். மலர் அழகாய் இருக்கும்.




இரண்டு தினங்களுக்கு முன்  மாலை மழை பெய்து கொண்டு இருந்தது . மழையை ரசித்து கொண்டு இருந்தேன்.
புள்ளிச் சில்லை குருவிகளும் மழையில் நனைந்து மழையை ரசித்து கொண்டு இருந்தது. வெகு தூரத்தில் உள்ளது இந்த மரம். ஓரளவு தெரிகிறது தானே குருவிகள்.?

சாரல் மழை காற்று எப்படி இருக்கு?
நல்லா இருக்கு
துளித்துளி துளி மழைத்துளி பாடல் நினைவுக்கு வருதா?(புதுவெள்ளம்)

துளி  துளி  மழையாய் வந்தாளே! பாட்டு எனக்கு நினைவுக்கு வருது.(பையா)

சரம் சரமாக  மழை பெய்ய துவங்கி விட்டது.

நீங்களும் மழையை ரசிப்பீர்கள் தானே!

இன்று மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று காலண்டரில் போட்டு இருக்கிறது. கருமேகம் சூழ்ந்து இருக்கிறது, இடியும்
இடிக்கிறது.

தீபாவளி சமயம் தெருவோர வியாபாரிகளுக்கு பெரிய மழை வியாபாரத்தை பாதிக்கும் .அதனால் சாரல் மழை பெய்தால் போதும். தீபாவளிக்கு ஊருக்கு போய் மகிழ்ந்து இருக்க போகிறவர்களுக்கு  மழை வேண்டாம் என்று இருக்கும்.

ஆறுகள் எல்லாம் நிரம்பி வழிகிறது. பயிர்கள் நீரில் மூழ்கி கிடக்கிறது. விவசாயம் செய்து இருப்பவர்கள் கவலையாக இருக்கிறார்கள்.

 மழையை ரசிக்க பிடிக்கும் தான், ஆனால் யாருக்கும்  பாதிப்பு இல்லாமல் மழை பெய்தால் மகிழ்வேன். 
.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

---------------------------------------------------------------------------------------------

48 கருத்துகள்:

  1. படங்கள் நன்று.... குயில் காக்கை போல என் கண்ணுக்குத் தெரிகிறது.

    மழையை நான் மிகவும் ரசிப்பேன். நடக்கும்போதும் மழை வந்தால் அதில் நனைந்துகொண்டிருப்பேன். (மழை பெய்யும்போது நடக்க ஆரம்பித்தால் பிறர் ஏதேனும் நினைப்பார்களே என்பதனால் அப்போது நடப்பதில்லை)

    எந்த ஒன்றுக்கும் ஒரு எதிர்வினை இருக்கும். மழை பெய்யாமலேயே இருந்தால், வற்றல் போடுபவர்கள் மகிழ்வர் (ஒரு ஊரே இந்தியாவிற்காக வற்றல் போடுவதாக காணொளி பார்த்தேன்). மழை பெய்துகொண்டே இருந்தால் சிலருக்குக் கஷ்டம்... என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      //குயில் காக்கை போல என் கண்ணுக்குத் தெரிகிறது.//
      காகம் போல தான் இருக்கும் ஆண்குயில் ஆனால் கண் சிவப்பாக இருக்கும். தலை வேறு மாதிரி இருக்கும்.

      மழையை நான் மிகவும் ரசிப்பேன். நடக்கும்போதும் மழை வந்தால் அதில் நனைந்துகொண்டிருப்பேன்.//

      எனக்கும் மழையில் நனைய பிடிக்கும் அம்மாவிடம் த்ட்டு வாங்கி இருக்கிறேன். பள்ளி நாளில் மழை நனைந்து வீட்டுக்கு வரும் போது.

      (மழை பெய்யும்போது நடக்க ஆரம்பித்தால் பிறர் ஏதேனும் நினைப்பார்களே என்பதனால் அப்போது நடப்பதில்லை)

      ஓ ! நல்லதுதான்.

      //எந்த ஒன்றுக்கும் ஒரு எதிர்வினை இருக்கும். மழை பெய்யாமலேயே இருந்தால், வற்றல் போடுபவர்கள் மகிழ்வர் (ஒரு ஊரே இந்தியாவிற்காக வற்றல் போடுவதாக காணொளி பார்த்தேன்). மழை பெய்துகொண்டே இருந்தால் சிலருக்குக் கஷ்டம்... என்ன செய்ய?//

      ஆமாம், ஒருத்தர் மழை வேண்டாம் என வேண்டுவார், ஒருவர் மழை வேண்டும் என்பார். இயற்கையை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள் பெரியவர்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  2. பறவைக்காதலருக்கு தீனி போட ஏகப்பட்ட பறவைகள் வந்துவிட்டன போல....ஜேஜே என்று பறவைகளாய் இருக்க, நீங்கள் படங்களாய் எடுத்துத் தள்ளி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //பறவைக்காதலருக்கு தீனி போட ஏகப்பட்ட பறவைகள் வந்துவிட்டன போல....ஜேஜே என்று பறவைகளாய் இருக்க, நீங்கள் படங்களாய் எடுத்துத் தள்ளி விட்டீர்கள்.//

      ஆமாம், காலை முதல் மாலை வரை பறவைகள் சத்தம் கேட்கும். சில நேரங்களில் தான் படம் எடுக்க முடியும்.

      நீக்கு
  3. "காலை சரியா க்ரிப்பா  வச்சிருக்கியா?  இல்லாட்டா கீழ பாரு அங்க விழுந்துடுவே....

    ஆ...  உன்னைத் சொல்லிட்டு நான் காலை விட்டுட்டேன்!  நலலவேளை..   பிடிச்சுக்கிட்டேன்.

    பார்த்து..  பார்த்து...   இனி கோபப்படமாட்டேன்!

    ஏகப்பட்ட படங்கள்...  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காலை சரியா க்ரிப்பா வச்சிருக்கியா? இல்லாட்டா கீழ பாரு அங்க விழுந்துடுவே....

      ஆ... உன்னைத் சொல்லிட்டு நான் காலை விட்டுட்டேன்! நலலவேளை.. பிடிச்சுக்கிட்டேன்.//

      இதுவும் நன்றாக இருக்கிறது.

      //பார்த்து.. பார்த்து... இனி கோபப்படமாட்டேன்!//

      கோபம் போய்விட்டது மகிழ்ச்சிதான்.


      ஏகப்பட்ட படங்கள் இன்னும் எடுக்கலாம் வெகு தூரத்தில் இவ்வளவுதான் ஜூம் செய்து எடுக்க முடிந்தது. இன்னும் தெளிவாக தெரியும் தூரத்தில் எடுக்கலாம் என்றால் நாங்கு பறவைகளும் பிரேமுகுள் வர மாட்டேன் என்கிறது.

      நீக்கு
  4. இரட்டை வேடத்தில் புல்புல்!  அல்லது புல்புல்புல்புல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புல் புல் பறவைகள் அந்த வீட்டில் அடிக்கடி கண்ணாடி கதவில் தெரியும் தன் முகத்தை பார்த்து பேசும் கொத்தும், முன்பு போட்டு இருக்கிறேன்.
      இந்த முறை திரும்பி நிற்கும் அதன் பிம்பம் கண்ணாடியில் அழகாய் தெரிந்தது.

      நீக்கு
  5. நாம் ஏகாதசி விரதம் இருப்பதுபோல அவைகளுக்கு இன்று விரதமோ என்னவோ!  பாவம் பஞ்சத்துக்கு விரதம் இருக்கிறது பறவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அதற்கு இன்று விரதம்தானோ! அல்லது உணவு கிடைத்து விட்டதா தெரியவில்லை. நான் வைக்கும் தட்டில் சாதம் வைத்தேன் . பார்த்து கூடு திரும்புமுன் சாப்பிட்டு போச்சா தெரியவில்லை.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
      கணினி சரியாகி விட்டதா?

      நீக்கு
    2. ஓரளவுக்கு சரியாகி இருக்கிறது.  ஆனால் அவ்வப்போது மறுபடியும் படுத்துகிறது.  ஆபீஸ் வேலை வேறு ரொம்பப் படுத்தல்!

      நீக்கு
    3. ஓரளவு தான் சரியாகி இருக்கிறதா? பூரண்மாக சரி ஆகட்டும்.
      பணி ஓய்வு சமயத்தில் வேலை பளு அதிகமாக தான் இருக்கும் இல்லையா?

      இத்தனை தொந்திரவுகளுக்கு இடையிலும் பின்னூட்டங்களும் , மறு மொழியும் கொடுத்தற்கு நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்
      உரையாடலை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  7. பறவை மொழிகள் ரசிக்க வைத்தது சகோ.

    படங்கள் மிகவும் அழகாக, பசுமையாக இருக்கிறது.

    மழையை நமக்கு பாதுகாக்க தெரியவில்லை இதற்கு அரசுதான் பொறுப்பு. கண்மாய்கள் எல்லாமே பிளாட்டுகளாக்க அரசு அனுமதிக்கிறது. மனிதன் வாங்கிப்போட துடிக்கிறான். விவசாயத்தைக் பற்றிய கவலை யாருக்கும் இல்லை.

    அடுத்த தலைமுறைகள் உணவுக்கு கஷ்டப்படுவார்கள் என்பதை நினைக்கும்போது மனம் கனக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      பறவை மொழிகள் ரசிக்க வைத்தது சகோ.//
      நன்றி.

      //படங்கள் மிகவும் அழகாக, பசுமையாக இருக்கிறது.//

      மழை பெய்தவுடன் புற்கற்கள் பசுமையாக வளர்ந்து விட்டது, அதனாலதான் புள்ளிச்சில்லை குருவிகளின் வருகை அதிகமாய் இருக்கிறது.


      //மழையை நமக்கு பாதுகாக்க தெரியவில்லை இதற்கு அரசுதான் பொறுப்பு. கண்மாய்கள் எல்லாமே பிளாட்டுகளாக்க அரசு அனுமதிக்கிறது. மனிதன் வாங்கிப்போட துடிக்கிறான். விவசாயத்தைக் பற்றிய கவலை யாருக்கும் இல்லை.//

      மழையில் பீர்க்கை, புடலை, வாழை எல்லாம் மூழ்கி கிடப்பதை காட்டி வருத்தபட்டார்கள் . தொலைக்காட்சியில் பார்த்த போது மனம் மிகவும் கவலையானது.

      நீர் தேங்கினால் வடிகால் வசதி இல்லை . நெல் அளக்கும் இடத்தில் சரியான கட்டிடம் இருந்தால் அவை எல்லாம் மழையில் நனைந்து முளைக்காது. மயிலாடுதுறையில் ஆண்டு தோறும் விவசாயிகள் புலப்பல் இது. இன்னும் ஒரு நிவராணம் கிடைக்கமாட்டேன் என்கிறது.

      //அடுத்த தலைமுறைகள் உணவுக்கு கஷ்டப்படுவார்கள் என்பதை நினைக்கும்போது மனம் கனக்கிறது.//

      இலங்கையில் பஞ்சம் வந்து விட்டது மூன்று வருடங்களில் மற்ற நாடுகளும் எதிர் கொள்ளும் என்கிறார்கள். விழித்து கொண்டு தீர்வு கண்டு பிடித்தால் நல்லது.

      கண்மாய், விவசாய இடங்களில் வீட்டு மனை போடுவதை தடுக்க வேண்டும்.
      போன பதிவுக்கு (கொலு பார்க்க வாங்க) வரவில்லையே!
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. எல்லாப் பறவைகளின் படங்கள் அற்புதமாக உள்ளது

    முதல் படத்தில் நிழல் நிஜமாகிறது. படம் நன்றாக வந்துள்ளது. மழை நீரின் வாசனை அதற்கும் பிடித்து விட்டது போலும்.

    இரு ஜோடி காதல் பறவைகள். ஒன்றின் சந்தோஷமான ஒற்றுமையைப் பார்த்து பேசி இறுதியில் இன்னொரு ஜோடிக்கும் பிணக்கு தீர்ந்து விட்டது போலும். சரி....! நாமும் சண்டையை விட்டு விடலாம் என இறுதி படத்தில் சேர்ந்து அமர்ந்திருக்கிறதே...! உங்கள் கற்பனை உரையாடல் வெகுப்பொருத்தம்.

    குயிலின் படங்களும் மைனாக்களின் படமும் நன்றாக உள்ளன. மரங்கள், மற்றும் பூக்களும் அழகாக இருந்தால் பறவைகளுக்கும் பிடிக்கும் போலிருக்கிறது.

    மழையை ரசித்த பாடல்கள் அருமை. சரம் சரமாய் மழை படங்கள் அழகாக உள்ளது. எனக்கும் மழையை ரசிக்க மிகவும் பிடிக்கும். இதோ..! இப்போது இரண்டு மணி நேரமாக இங்கு நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.

    தீபாவளி சமயத்தில் மழை கொஞ்சம் போர்தான் அப்போதைய சின்ன வயது பருவத்தில்.... அப்போது. வெடிகள் வெடிக்க முடியாதே என ஏக்கமாக வருத்தமாக இருக்கும். இப்போது ஒன்றும் தோன்றவில்லை. இப்போது இங்கெல்லாம் அதிக வெடிகள் வெடிக்க தடை வேறு வந்திருக்கிறதே....!

    ஐப்பசி என்றாலே அடை மழை என்பது பழமொழியாயிற்றே....
    ஆனால் நீங்கள் சொல்வது போல் வியாபாரிகளுக்கு இந்த மழை ஒரு இடைஞ்சல். காலை வியாபாரத்தில் இந்த மழை தொந்தரவு தராமல் இரவு பெய்தால் கூட சரிதான். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
    //பதிவு அருமை. எல்லாப் பறவைகளின் படங்கள் அற்புதமாக உள்ளது//

    நன்றி.

    //முதல் படத்தில் நிழல் நிஜமாகிறது. படம் நன்றாக வந்துள்ளது.//
    நன்றி.

    //மழை நீரின் வாசனை அதற்கும் பிடித்து விட்டது போலும்.//

    மழை நீரின் மகிமை தெரிந்தவை எல்லா பறவைகளும் மழை நீரை குடிக்கும், குளிக்கும்.
    அந்த காலத்தில் மழை நீரை சேமிப்போம். மழை நீரில் சமைத்தால் உணவு சுவையாக இருக்கும், துணிகள், பாத்திரங்கள் பளிச் என்று இருக்கும்.


    //இரு ஜோடி காதல் பறவைகள். ஒன்றின் சந்தோஷமான ஒற்றுமையைப் பார்த்து பேசி இறுதியில் இன்னொரு ஜோடிக்கும் பிணக்கு தீர்ந்து விட்டது போலும். சரி....! நாமும் சண்டையை விட்டு விடலாம் என இறுதி படத்தில் சேர்ந்து அமர்ந்திருக்கிறதே...! உங்கள் கற்பனை உரையாடல் வெகுப்பொருத்தம்//

    இரு ஜோடிகளையும் இணைத்து அழகாய் சொல்லி விட்டீர்கள்.

    //குயிலின் படங்களும் மைனாக்களின் படமும் நன்றாக உள்ளன. மரங்கள், மற்றும் பூக்களும் அழகாக இருந்தால் பறவைகளுக்கும் பிடிக்கும் போலிருக்கிறது//

    நம்மை போலவே பறவைகளும் ரசிப்பு நிறைந்தவை. பூக்களில் வரும் பூச்சிகள், தேன் தானே சில பறவைகளுக்கு உணவு.

    //மழையை ரசித்த பாடல்கள் அருமை. சரம் சரமாய் மழை படங்கள் அழகாக உள்ளது. எனக்கும் மழையை ரசிக்க மிகவும் பிடிக்கும். இதோ..! இப்போது இரண்டு மணி நேரமாக இங்கு நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.//
    உங்களுக்கும் ம்ழையை ரசிக்க பிடிக்கும் இல்லையா? முன்பு சொல்லி இருக்கிறீர்கள். வானெலியில் மழை பெய்யும் என்றால் மக்கள் துணிந்து வத்தல் போடலாம் என்று நகைச்சுவை துணுக்கு பத்திரிக்கையில் வரும். அதுபோல மழைவரும் என்று காலண்டரில் போட்டு இருந்தது மழை வரவில்லை. இடியும், மேகமும் வந்து விட்டு போய் விட்டது.


    //தீபாவளி சமயத்தில் மழை கொஞ்சம் போர்தான் அப்போதைய சின்ன வயது பருவத்தில்.... அப்போது. வெடிகள் வெடிக்க முடியாதே என ஏக்கமாக வருத்தமாக இருக்கும். இப்போது ஒன்றும் தோன்றவில்லை. இப்போது இங்கெல்லாம் அதிக வெடிகள் வெடிக்க தடை வேறு வந்திருக்கிறதே....!//

    நீங்கள் சொல்வது உண்மை சிறு வயதில் விளையாட போக முடியாமல் மழை பெய்தாலும், வெடி வைக்க முடியாமல் போன போதும் மழை வேண்டாம் என்ற எண்ணம் வந்தது உண்மை.


    //ஐப்பசி என்றாலே அடை மழை என்பது பழமொழியாயிற்றே....
    ஆனால் நீங்கள் சொல்வது போல் வியாபாரிகளுக்கு இந்த மழை ஒரு இடைஞ்சல். காலை வியாபாரத்தில் இந்த மழை தொந்தரவு தராமல் இரவு பெய்தால் கூட சரிதான்.//


    நானும் அப்படித்தான் நினைப்பேன் ஐப்பசி அடை மழையில் பிள்ளைகள், என் கணவர் கல்லூரிக்கு போகும் போது இந்த மழை காலையில் பெய்யாமல் இரவு பெய்தால் என்ன என்று நினைத்து இருக்கிறேன்.
    வியாபரிகளுக்கும் கஷ்டம் தான்.
    உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.




    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. நிஜமும் நிழலும் படம் அட்டகாசம் கோமதிக்கா...நிழல் கூட நிஜம் என்று தோன்ற வைக்கும் அளவு இருக்கிறது.

    புல் புல் அழகு...முன்பு இருந்த வீட்டில் வந்தபோது எடுத்தேன் ஓரளவு தான் வந்திருக்கிறது...பகிர வேண்டும் என்று நினைத்தும் இன்னும் முடியலை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //நிஜமும் நிழலும் படம் அட்டகாசம் கோமதிக்கா...நிழல் கூட நிஜம் என்று தோன்ற வைக்கும் அளவு இருக்கிறது.//

      நன்றி கீதா.
      //புல் புல் அழகு...முன்பு இருந்த வீட்டில் வந்தபோது எடுத்தேன் ஓரளவு தான் வந்திருக்கிறது...பகிர வேண்டும் என்று நினைத்தும் இன்னும் முடியலை//

      முடிந்த போது போடுங்கள் கீதா.
      உங்கள் கருத்துக்கு நன்றி.




      நீக்கு
  12. கோமதிக்கா உரையாடல்களை ரசித்தேன்...

    "ஏன் இப்படி முகத்தை சுருக்கிட்டு இருக்க?"
    "நான் ஒண்ணும் முகத்தை சுருக்கிட்டு இல்லை....கீழ ஏதாச்சும் சாப்பாடு கிடைக்குதான்னு பார்க்கறேன்"
    "இருந்தா சொல்லு....நானும் வரேன் அதுவரை என் உடம்பை கொஞ்சம் பார்த்துட்டு வரேன்...ஏதோ அரிக்கறாப்ல இருக்கு..."
    "நான் வேணா கொத்திவிடவா?"
    "அதெல்லாம் ஒண்ணும் வேணாம்"
    "ஹான் இது நல்லாருக்கே அரிக்குதுன்னு இப்படி சோம்பேறியா கழுத்தை உள்ள அமுக்கி உக்காரப் பார்க்காத ஒழுங்கா நீயும் சாப்பாடு தேடு..."
    "அதெல்லாம் இருக்கட்டும்...நாம இப்படி தனியா இருந்து எம்புட்டு நாளாச்சு...உன்னை கொஞ்சவா?...இங்க ஒரு அம்மா இருப்பாங்க அவங்க ஃபோட்டோ எடுக்கறதுக்கள்ளயும்....நாம..."
    "ஹூம் உனக்கு இதே பொழப்பா போச்சு....அந்த அம்மாவையும் காணும் ...இல்லேனா சாப்பாடு வைப்பாங்க...இந்த தட்டு வேற உடைஞ்சு போச்சு அவங்க எங்க வைப்பாங்கன்னு நான் யோசிச்சிட்டிருக்கேன் இன்னிக்கு பொழப்பை பாக்காம....உனக்கு..."
    "சரி சரி மூஞ்சிய திருப்பிக்காத....நானும் தேடுறேன் ஏதாச்சும் கிடைக்குதான்னு...."

    பாவம் கோமதிக்கா அதுங்களுக்கு சாப்பாடு கிடைச்சுச்சோ இல்லையோ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதெல்லாம் இருக்கட்டும்...நாம இப்படி தனியா இருந்து எம்புட்டு நாளாச்சு...உன்னை கொஞ்சவா?...இங்க ஒரு அம்மா இருப்பாங்க அவங்க ஃபோட்டோ எடுக்கறதுக்கள்ளயும்....நாம..."//

      கீதா உங்கள் உரையாடல் நன்றாக இருக்கிறது.
      நிறைய வீடுகளில் உணவு வைக்கிராற்கள் அதற்கு கிடைத்து இருக்கும்.


      .

      நீக்கு
  13. கடைக்கோடி வீட்டில் குயில் நினைப்பு ஹாஹாஹாஹா அது சரி....மழைக்கு பஜ்ஜி கேக்கலயே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைக்கோடி வீட்டில் சாதம் வைத்ததால் அப்படி கேட்டுச்சு. பஜ்ஜி வைத்தால் மிளகாய் பஜ்ஜி கேட்டு இருக்கும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  14. மணிப்புறா/புள்ளிப்புறா....பழைய வீட்டின் அருகில் நிறைய பார்க்கலாம் ஃபோட்டோ எடுத்து வைத்திருக்கிறேன். நானும் பறவைகள் படங்கள் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. எதுவுமே தொடர்ந்து செய்ய முடியலை....

    அழகு ரொம்பத் தெளிவாக இருக்கு....புறா நான் எடுத்தவை இந்த அளவு தெளிவாக இல்லை....கொஞ்சம் தூரத்தில் இருந்தன....எடுப்பது கஷ்டமாக இருந்தது.

    ஆமாம் இரண்டு மைனா பார்த்தால் நல்லது நடக்கும்....மூன்று பார்த்தால் கடிதம் வரும்? அதற்கு மேல் பார்த்தால் கூட்டம் வரும் இப்படி நிறைய சிறிய வயது நம்பிக்கைகள் நினைவில் வருகின்றன...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மணிப்புறா/புள்ளிப்புறா....பழைய வீட்டின் அருகில் நிறைய பார்க்கலாம் ஃபோட்டோ எடுத்து வைத்திருக்கிறேன். நானும் பறவைகள் படங்கள் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. எதுவுமே தொடர்ந்து செய்ய முடியலை....//

      மெதுவா நேரம் கிடைக்கும் போது போடுங்கள். எனனை உற்சாகபடுத்திக் கொள்ள ஏதாவது செய்து கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு அலுப்பு தட்டும் நேரம் பறவைகளை கவனித்தலை தொடர்வேன். அவைகளும் எனக்கு காட்சி கொடுத்து விடுகிறார்கள்.
      மனதை அமைதி படுத்தி விடுவார்கள்.

      //ஆமாம் இரண்டு மைனா பார்த்தால் நல்லது நடக்கும்....மூன்று பார்த்தால் கடிதம் வரும்? அதற்கு மேல் பார்த்தால் கூட்டம் வரும் இப்படி நிறைய சிறிய வயது நம்பிக்கைகள் நினைவில் வருகின்றன..//

      ஆமாம், நிறைய பள்ளி பருவத்தில் தோழியருடன் பேசி களித்த நாட்கள் மைனாவை பார்க்கும் போது வரும்.

      நீக்கு
  15. புல் புல் படங்கள், மைனா புறா என்று எல்லா பறவைகளும் அழகாக இருக்கின்றன உங்கள் புகைப்படங்களில்.

    பறவைகளின் உரையாடலை யும் உங்கள் கற்பனையையும் மிகவும் ரசித்தேன், சகோதரி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //புல் புல் படங்கள், மைனா புறா என்று எல்லா பறவைகளும் அழகாக இருக்கின்றன உங்கள் புகைப்படங்களில்.//

      நன்றி.

      //பறவைகளின் உரையாடலை யும் உங்கள் கற்பனையையும் மிகவும் ரசித்தேன், சகோதரி.//

      கற்பனை உரையாடலை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  16. கோமதிக்கா மைனா ரொம்பத் தெளிவாக இருக்கு. புள்ளிச் சிலை குருவிகள் மழையில் செம...தெளிவா தெரிகின்றன

    மழை பெய்யுது மழை பெய்யுது (இந்த இரு சொற்கள் மாற்றியிருக்கிறேன்) குடை கொண்டுவா!!!

    ஆஅமாம் இம்முறை மழை அதீதமாகப் பெய்கிறது பெய்திருக்கிறது. மழையை வரவேற்கலாம் ஆனால் அதே சமயம் பயிர் எல்லாம் மூழ்கி விவசாயிகளுக்கு நஷ்டம் ....இயற்கையை விஞ்ச முடியுமா? இயற்கை தேவதை எல்லோரையும் மகிழ்வாக வைத்திருக்கட்டும்

    படங்கள் பதிவை ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோமதிக்கா மைனா ரொம்பத் தெளிவாக இருக்கு. புள்ளிச் சிலை குருவிகள் மழையில் செம...தெளிவா தெரிகின்றன//

      ஓ! சரி . நல்லது.

      //மழை பெய்யுது மழை பெய்யுது (இந்த இரு சொற்கள் மாற்றியிருக்கிறேன்) குடை கொண்டுவா!!!//

      இந்த பாடலும் நினீஅவுக்கு வந்து விட்டதா? நல்லா இருக்கிறது.


      //ஆஅமாம் இம்முறை மழை அதீதமாகப் பெய்கிறது பெய்திருக்கிறது. மழையை வரவேற்கலாம் ஆனால் அதே சமயம் பயிர் எல்லாம் மூழ்கி விவசாயிகளுக்கு நஷ்டம் ....இயற்கையை விஞ்ச முடியுமா? இயற்கை தேவதை எல்லோரையும் மகிழ்வாக வைத்திருக்கட்டும்//
      புரட்டாசி, ஜப்பசி , எல்லாம் அடை மழைதானே கார்த்திகை தீபம் பார்த்தவுடன் சிவ சிவ என்று போகும் என்பார்கள்.
      இயற்கையை என்ன செய்ய முடியும் அதற்கேற்றார் போல நாம் மாற வேண்டும்.
      படங்களை பதிவை ரசித்து நிறைய பின்னூட்டங்கள் போட்டு கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  17. புள்ளிச் சிலை குருவிகளும் தெளிவாகத் தெரிகின்றன.
    இங்கும் எங்கள் பகுதி கேரளத்திலும் கன மழை பெய்தது. இனியும் இருக்கும் என்று தெரிகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புள்ளிச்சில்லை குருவிகளை தெளிவாக தெரிவது மகிழ்ச்சி.
      கேரளத்தில் மழை பொழியும் காலமல்லவா?
      இரண்டு மாதங்கள் நல்ல மழையாக இருக்கும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சகோ.

      நீக்கு
  18. வழமைபோல பறவைச் செல்லங்கள் அழகு, சோசி சோடியாக அவை பண்ணும் சேட்டைகள்.., ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

    கலண்டரில் எப்படி மழை பெய்வதைக் குறித்திருக்கிறார்கள்.. நம்பமுடியவில்லை.. அது கஸ்டமெல்லோ.. காலநிலை மாற்றம் டக்கு டக்கென மாறுகிறதே, நேற்றுச் சொன்ன வானிலை அறிக்கைகூட இன்று சரியாக அமைவதில்லை, அப்படியிருக்க கலண்டரில் எப்படி?.. அடடா ஆச்சரியக்குறி!!!![ஸ்ரீராம் மன்னிக்கவும்:))]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      //வழமைபோல பறவைச் செல்லங்கள் அழகு, சோசி சோடியாக அவை பண்ணும் சேட்டைகள்.., ரசித்துக் கொண்டே இருக்கலாம்.//

      ஆமாம், ரசித்து கொண்டே இருக்கலாம்.


      //கலண்டரில் எப்படி மழை பெய்வதைக் குறித்திருக்கிறார்கள்.. நம்பமுடியவில்லை.. அது கஸ்டமெல்லோ.. காலநிலை மாற்றம் டக்கு டக்கென மாறுகிறதே, நேற்றுச் சொன்ன வானிலை அறிக்கைகூட இன்று சரியாக அமைவதில்லை, அப்படியிருக்க கலண்டரில் எப்படி?//

      காலண்டரில் போட்டு இருக்கிற மாதிரி மழை பெய்யவில்லை அதிரா.
      ஆமாம், கால நிலை மாறி கொண்டே இருக்கிறது.
      இன்று மழை பெய்தால் நல்லது, இன்று மழை பெய்யும் என்பது எல்லாம் நடப்பது இல்லை. இயற்கை சொல்வது மட்டுமே நடக்கிறது. அதற்கு தெரிகிறது எப்போது பெய்ய வேண்டும், எப்போது கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று. இயற்கையை வெல்ல முடியாது மனிதன். இயற்கையை அந்தளவு கெடுத்து விட்டோம்.
      இயற்கையை போற்றினால் அது மகிழ்ந்து நல்லது செய்யும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி அதிரா.

      நீக்கு
    2. இன்று மழை கொட்டுகிறது அதிரா (ஆறுமணி முதல்) இடியுடன் நல்ல பலத்த மழை. நேற்று இல்லை. இன்று கொட்டி கொண்டு இருக்கிறது.

      நீக்கு
  19. பறவைகளைக் கவனிப்பதில் நேரம் போவதே தெரியாது. படங்களும் அதற்கான வாசகங்களும் அருமை. மழையில் நனைந்தபடி பறவைகள் அமர்ந்திருப்பதை நானும் பலமுறைகள் பார்த்திருக்கிறேன்.

    ஜூம் செய்து எடுத்த படங்களில் குருவிகள் நன்றாகவேத் தெரிகின்றன. இளஞ்சிவப்பு மலர்களைக் கொண்ட மரத்தின் படங்கள் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  20. பொறுமையாக காமெராவுக்கு போஸ் கொடுக்கும் பறவைகள். நீங்களும் பொறுமையுடன் எடுத்தது. படங்கள் ஜோர். ஆனால் அந்த கம்பிகள் தான் குறுக்கிடுகின்றன. வேறு கோணம் கிடைக்கவில்லை. முதல் படம் நிழலும் நிஜமும் நீங்கள் சொல்லாவிட்டால் கண்டுபிடிப்பது கஷ்டம். படம் நன்று. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன், வாழ்க வளமுடன்
      //பொறுமையாக காமெராவுக்கு போஸ் கொடுக்கும் பறவைகள்//
      அவைகளுக்கு தெரியாமல் எடுத்த படம் நான் வெகு தூரத்தில் இருக்கிறேன். பக்கவாட்டில் இருக்கிறேன். நேரே பார்க்க மாதிரி இல்லை அதனால் அவை பார்க்கவில்லை.

      நீங்களும் பொறுமையுடன் எடுத்தது. படங்கள் ஜோர். ஆனால் அந்த கம்பிகள் தான் குறுக்கிடுகின்றன. வேறு கோணம் கிடைக்கவில்லை.//

      கம்பியில்தானே அமர்ந்து இருக்கிறது கம்பி இல்லாமல் எடுக்க முடியாது என்ன செய்வது!

      முதல் படம் நிழலும் நிஜமும் நீங்கள் சொல்லாவிட்டால் கண்டுபிடிப்பது கஷ்டம். படம் நன்று. //

      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  21. //தீபாவளி சமயம் தெருவோர வியாபாரிகளுக்கு பெரிய மழை வியாபாரத்தை பாதிக்கும் .அதனால் சாரல் மழை பெய்தால் போதும். //

    தெருவோர வணிகர்களை நினைத்து என் மனமும் வருந்தும்.. ஆனாலும் என்ன செய்வது?..

    முன் தினம் மதியத்தில் இருந்து கடும் மழை இங்கே.. மாலை ஐந்து மணியிலிருந்து விடியற்காலை ஆறு மணி வரைக்கும் வீட்டில் மின்சாரம் இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //தெருவோர வணிகர்களை நினைத்து என் மனமும் வருந்தும்.. ஆனாலும் என்ன செய்வது?..//

      ஆமாம், வருத்தமாகத்தான் இருக்கும். நேற்று வெள்ளிக்கிழமை வாரம் ஒரு நாள் கிராம மக்கள் அவர்கள் தோட்டத்தில் விளைந்த காய்களை கொண்டு வந்து விற்பார்கள். முந்தின நாள் முதல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. தீபாவளி நேரம் வரும் விருந்தினருக்கு நல்ல காய்கள் வாங்கி சமைக்க எண்ணியவர்களுக்கும் வாங்க போக முடியவில்லை. விற்பவர்களுக்கும் வியாபாரம் நஷ்டம் ஆகி இருக்கும்.


      இங்கும் மின்சாரம் போய் போய் வந்தது. ஜெனரேட்டரில் வீடுகளுக்கு மின்சாரம் கொடுத்து விடுகிறார்கள்.

      நீக்கு
  22. பறவைகளைப் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சி.. நாங்கள் குடியிருக்கும் மாடியிலும் பறவைகள் கூடிக் கும்மாளம் அடிக்கின்றன..

    உள்ளிருந்து ரசித்துக் கொள்ள வேண்டிய து தான்.. ஆள் தலையைக் கண்டால் போதும்.. மின்னலென ஓடி விடுகின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறவைகள் மகிழ்ச்சியை தருவது உண்மை.
      ஆள் தலையை கண்டால் பறந்து விடும் தான். எதிர் பக்கம் இருந்து அவைகளுக்கு தெரியாமல் எடுக்கிறேன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  23. பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு