செவ்வாய், 4 அக்டோபர், 2022

நலம் தரும் நவராத்திரி -3


மகாலெட்சுமி  அலங்காரம் 
வெள்ளிக்கிழமை மகாலெட்சுமி அலங்காரம்.

எங்கள் குடியிருப்புக்கு பக்கத்தில் இருக்கும் "அருள்மிகு பொய்சொல்லா மூர்த்தி அய்யனார்" கோவில் நவராத்திரி விழா படங்கள் தொடர் பதிவாக வருகிறது.




சொல்லரசி. திருமதி. சாவித்திரி பாலசுப்பிரமணியம் அவர்கள்

"சக்தியே யுக்தி"  என்ற தலைப்பில் தேவி மாகாத்மியத்தை சுருக்கமாக கதையாக ரசிக்கும்படி சொன்னார்.

சரணமடைந்தவர்களை காக்கும் அன்னையை வணங்கிநம் துன்பங்களை போக்கிக் கொள்வோம். 


இயற்செல்வி.ஞானசண்முகா தேவி குழுவினர் திகழ்த்துபவர் . திரு.மா. இளங்கோ சுவாமி இயலும் இசையும் , சக்தி மகிமை


பெங்களூர் ரமணி அம்மா பாட்டு முதல் பாட்டு
"பொம்ம பொம்மத தைய தையனக்கு தின்னாக்கு நக்குதின பஜன்கரே" பாட்டை சிறுவனும், பெரியவரும் நன்றாக பாடினார்கள். சிறுவன் இந்த  ஒரு பாட்டு மட்டும் பாடினான்.

ஞானசண்முகா தேவி  மடை திறந்த வெள்ளம் போல நிறைய விஷயங்களை சொன்னார். மூனீஸ்வரன் வரலாறு, ஐயப்பன் வரலாறு  மற்றும் கருப்பசாமி வரலாறு சொன்னார்.

அய்யப்பன் வழிபாடு, கருப்பசாமி எப்படி இங்கு வந்தார், ஏன் காவல் தெய்வமாக போற்றப்படுகிறார், ஒவ்வொரு ஊருக்கு ஏற்றார் போல பல பேர்களில் அழைக்கபடுவதைபற்றி சொன்னார்.  முருகனுக்கு வீரபத்திரர் துணை போல சுவாமி ஐயப்பனுக்கு துணையாக  கருப்பசாமி இருந்த கதை சொன்னார். கருப்பசாமி அனுமதி பெற்றே 18 படிகளில் ஏறுவார்கள் என்றார்.

அழகர் கோவிலில் பதினெட்டாம்படியான அழைக்கப்படும் காரணம் சொன்னார். காளி வழிபாடு பற்றி சொன்னார்.
வெக்காளி அம்மன் கதை சொன்னார்.

கதைகள் சொல்லும் போது   இடை இடையே பொருத்தமான பாடல்களை பாடினார் பெரியவர். "நம்பினார் கெடுவது இல்லை நான்குமறை தீர்ப்பு  கண்ணன் வந்தான் " பாட்டு , "தில்லை அம்பல நடராஜா" "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி" பாடல், "தாய் இல்லாமல் நான் இல்லை" பாட்டு  கடைசியில் "முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக" அண்ணன் தம்பி ஒற்றுமைக்கு.
கருப்பசாமி பாட்டு பாடினார்.

கருப்பசாமிக்கு பொய் சொன்னால் பிடிக்காது என்பதற்கு கதை, கருப்பசாமியை வழிபடுவோரை  காக்கும் காவலனாக இருப்பர் என்றும், தர்மத்திற்கு மட்டுமே துணை  வருவார் என்றும் சொன்னர்.

குறித்து கொள்ள பேப்பர் பேனா எடுத்து போக வில்லை ஞானசண்முகாதேவி சிரிக்க சிரிக்க அழகான குட்டி கதைகள் பல சொன்னார். தபேலா வாசித்தவருக்கு அரை கண் பார்வைதான் இருக்கிறதாம். அவர் திறமையை சொல்லும் போது  கண்பார்வை குறையை சொன்னார்கள். நன்றாக வாசித்தார். குழந்தைகள் எல்லாம் நன்றாக அவர் பாட்டுக்கு  வாசிக்கும் போது தாளம் போட்டு ரசித்தார்கள். 


கோவில் டிரஸ்டி அவர்கள்  பேச்சாளர்  இயற்செல்வி. .ஞானசண்முகாதேவி அவர்களுக்கு  மாலை அணிவித்து பொன்னாடை  அணிவிக்க என்னை அழைத்தார்.  வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி அணிவித்தேன், அவர் மகிழ்ந்து நன்றி சொன்னார்.
ஞாயிற்றுக்கிழமை  பேசியவர் பேராசிரியர் .திரு. ஜெ.பா.சாம் செல்வக்குமார்
உதவி பேராசிரியர் நா.ம. ச.ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, நாகமலை , மதுரை.

 "ஆழ்வார்களுள் ஆண்டாள்." என்ற தலைப்பில் பேசினார். 12 ஆழ்வார்கள் பெயர்களை சொல்லி அவர்களை பற்றிய சுருக்கமான வரலாறு சொல்லி அவர்கள்  பாடிய பிரபந்த பாடல்களை சொன்னார். பள்ளியில் மனப்பாடமாக பாடிய பாடல்கள். 


வாரணமாயிரம் என்று தொடங்கும் பாடலை திருமணம் ஆகாத பெண்கள் தினம் பாடினால்  விரைவில் திருமணம்   நடைபெறும் என்றார்.

பின்னர் ஆண்டாள்  பிறந்த, வளர்ந்த கதை சொன்னார்,  பெரியாழவார் மகளுக்கு மணம் முடிக்க வேண்டுமே என்று தவித்த தவிப்பை அழகாய் சொன்னார்.

ரங்கமன்னாரை ஆண்டாள் மணந்த கதையை அழகாய் சொல்லி நிறைவு செய்தார்.

பேச்சின் இடையே பனை ஓலை பயன்களை சொல்லும் போது 
பெரிய கார்த்திகைக்கு   பனை ஓலையில் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவது பற்றி  சொன்னார். 

ஞாயிற்றுக்கிழமை அலங்காரம் சமயபுரம் மாரியம்மன்

திங்கள் ஊஞ்சல் சேவையில் மூனீஸ்வரன்
காளி அம்மன்
மூனீஸ்வரன் குதிரை மேலே

பேராசிரியர்  .முனைவர் மு. முத்துவைரம் 
கெளரவ விரிவுரையாளர்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் , மதுரை
"சக்தி வழிபாடு" பற்றி சொன்னார். 

ஊர் பேர்கள் எல்லாம் பெரும்பாலும் மரத்தின் பெயர்களை தாங்கி வருவதாக எடுத்துக்காட்டுகளுடன் கூறினார். மதுரை மருத மரங்கள் நிறைந்த இடம் அதனால் "மருதத் துறை " மதுரையாகி விட்டது என்றும், பழைய கிராமத்து மக்கள் மருதைக்கு போகிறேன் என்று சொல்வார்கள் என்றார்.
மதுரையின் பழைய பெயர்கள் சொன்னார்.

மதுரையின் சிறப்பை அன்னையின் பல பேர்களை, மதுரையின் பல பேர்களை சொன்னார். அன்னையின் சிறப்புகளை சொல்லும் போது மூன்று வயது குழந்தையாக வந்து  கலெக்கடர் ரவுஸ் பீட்டரை  காப்பாற்றிய கதை சொன்னார்.   குமரகுருபர் வருகை பருவம் பாடும் போது சிறுமியாக வந்து  மன்னரின் முத்துமாலை கழற்றி அவருக்கு அணிவித்த கதை சொன்னார். 

 காளியை வணங்கிய ராமகிருஷ்ணர் கதை.  மற்றும் இராமன், வாலி, பரதன் , குகன் பற்றி நிறைய செய்திகள் சொன்னார். 

திங்கள் கிழமை அலங்காரம் ஸ்ரீ மஹிஷா சுரமர்த்தினி

ஆறு சமயங்களை  சொல்லி  சைவம் (பரமசிவன்) வைணவம் (விஷ்ணு)  .  கெளமாரம் (சுப்பிரமணியன், முருகன்) காணபத்தியம் (விநாயகர்) ,  செளரம் (சூரியன்) சாக்தம் (சக்தி, துர்க்கை) சாக்தம் எங்கிற சக்தி வழிபாட்டை பற்றி பேசினார்.

காஞ்சி காமாட்சி, மாங்காடு காமாட்சி, மதுரை மீனாட்சி, மாசாணி அம்மன், பச்சை அம்மன், மயிலை கற்பகாம்பாள்,புகழ்பெற்ற சக்தி கோவில்களை எல்லாம் சொன்னார்.  சக்தி வழி பாடு எப்போது இருந்து ஆரம்பித்தது என்று சொன்னார்,  சக்தி  வழிபாட்டில்  காளியை வழிபடுவது நன்மை பல தரும் என்றார்.

 காளியை வணங்கினால்  கிடைக்கும் நன்மைகளை சொன்னார். நவராத்திரி காலம் முழுவதும் காளியின் சிறப்பை சொல்லி வழிபட்டால் அனைத்து துன்பங்களும், பயங்களும் விலகும்.  பெண் தெய்வ வழிபாடுகளை பற்றி விரிவாக பேசினார். சிவகாசி அருகில் அண்ணன் , தங்கை காய்ச்சலில் இறைவனடி சேர்ந்து இப்போது வணங்கபடும் தெய்வமாக இருப்பதை பற்றி சொன்னார். காய்ச்சல் வந்தால் அவர்களை வேண்டிக் கொள்வர்களாம். கேரளாவில் கண்ணகிக்கு கோவில் அமைத்து வழிபடுவதை சொன்னார்.
நிறைய சிறப்பான தகவல்கள் சொன்னார் என் நினைவுக்கு வந்ததை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.



இந்த காணொளியில் சிருங்கேரி சாரதா கோவில் காட்டுகிறார்கள் நன்றாக இருக்கிறது. கோவிலை தரிசனம் செய்து கொண்டே பாட்டை கேட்கலாம்.


சின்ன வயதில் அம்மா சொல்லி கொடுத்த பாடல் சரஸ்வதி பாடல்  அன்னவாகன தேவி பாடல்.  கடைசி வரி மட்டும் மாறி இருக்கிறது. மெய்யாய் விளங்கும் தேவி நாவில் அருள வேண்டும் என்ற வரி மட்டும்   சரஸ்வதி என்று முடிகிறது.
அனைவருக்கும்  சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.


வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------

26 கருத்துகள்:

  1. விரிவான தகவல்கள் சிறப்பு.
    படங்கள் அருமை பெங்களூர் ரமணி அம்மாள் பாடல் தனிச்சிறப்பு தான்.

    காணொளி பாடல் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      //விரிவான தகவல்கள் சிறப்பு.//
      நன்றி.

      //படங்கள் அருமை பெங்களூர் ரமணி அம்மாள் பாடல் தனிச்சிறப்பு தான்.//

      ஆமாம். நன்றாக பாடினார்கள்.
      காணொளி கேட்டு கருத்து சொன்னது மகிழ்ச்சி.




      நீக்கு
  2. நவராத்திரி நாட்கள் சுவையாகக் கழிந்திருக்கின் ன்றன.  உங்களை மகிழ்வித்தவரை மரியாதை செய்ய உங்களையே அழைத்ததும் சிறப்பு.  பயனுள்ள முயற்சிகள் செய்த கோவில் நிர்வாகத்துக்கு பாராட்டுகள்.  இத்தனை விஷயங்கள் தெரிந்து சொற்பொழிவாற்றும் கல்லூரி விரிவுரையாளர்களும் பாராட்ட வேண்டும்.  காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      நவராத்திரி நாட்கள் சுவையாக கழிந்தன.
      இரண்டு நாள் நிகழ்ச்சிகள் இருக்கிறது. ஆனால் நான் தான் கலந்து கொள்ள முடியாது போல! தம்பி பேத்தியை விஜயதசமி அன்று படிக்க வைக்க போகிறார்கள் அதற்கு வர சொல்லி இருக்கிறான்.
      இன்று ஊரிலிருந்து வந்த தங்கை மகள் பேரன்கள் வருகிறேன் என்றார்கள் இன்றைய நிகழ்விலும் கலந்து கொள்ள முடியாது.
      இன்று இன்னிசை கச்சேரி.

      //பயனுள்ள முயற்சிகள் செய்த கோவில் நிர்வாகத்துக்கு பாராட்டுகள். இத்தனை விஷயங்கள் தெரிந்து சொற்பொழிவாற்றும் கல்லூரி விரிவுரையாளர்களும் பாராட்ட வேண்டும். காணொளி அருமை.//

      பாராட்டி மகிழ்வோம்.
      காணொளி பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  3. பல அரிய தகவல்கள் கொண்ட நிகழ்வு... சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      நிகழ்வுகளை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. நிறைவான பதிவு..

    இப்படியான விரிவுரை நிகழ்ச்சிகள் இளம் வயதினருக்குப் புத்துணர்வினை ஊட்டுவன..

    விரிவுரை நிகழ்த்திய விற்பன்னர்கள் மரியாதைக்குரியவர்கள்..

    அனைத்தையும் படங்களுடன் தொகுத்து வழங்கியமை சிறப்பு..

    மகிழ்ச்சி.. நன்றி..
    ஓம் சக்தி ஓம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      நிறைவான பதிவு.//

      நன்றி.

      //விரிவுரை நிகழ்த்திய விற்பன்னர்கள் மரியாதைக்குரியவர்கள்..//

      ஆமாம்.

      அனைத்தையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      ஓம் சக்தி ஓம்!

      நீக்கு
  6. பொய் சொல்லாமை என்பது மிகப்பெரிய விரதம்..

    வள்ளுவமும் தேவாரத் திருமுறைகளும் அபிராமி அந்தாதியும் இதையே வலியுறுத்துகின்றன..

    பொய் சொல்லா மெய்யர் என ஐயப்பன் இருக்கையில் கருப்பசாமி ஐயா மட்டும் பொய்யை எப்படி ஏற்றுக் கொள்வார்!..

    இதைத்தான் எளிமையாகச் சொல்லி வைத்தார்கள் - பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது - என்று..

    இன்றைக்கு பொய் தான் மூலதனம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பொய் சொல்லாமை என்பது மிகப்பெரிய விரதம்..

      வள்ளுவமும் தேவாரத் திருமுறைகளும் அபிராமி அந்தாதியும் இதையே வலியுறுத்துகின்றன..//

      ஆமாம்.

      //இதைத்தான் எளிமையாகச் சொல்லி வைத்தார்கள் - பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது - என்று//

      ஆமாம். உண்மைதான்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.


      நீக்கு
  7. படங்கள் எப்போதும்போல் மிக அழகு.

    என்ன நடந்தது என்பதை நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பதிவை மிகவும் ரசித்துப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      வீட்டில் உறவுகள் வருகை. இப்போது தான் வரமுடிந்தது.
      படங்களை பதிவை ரசித்து பார்த்து, படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் அருமையாக எடுத்துள்ளீர்கள். அம்மன் அலங்காரத்துடன் கூடிய படங்களை கண்டு மனமாற தரிசித்து பிரார்த்தனைகள் செய்து கொண்டேன்.

    தங்களுக்கு இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். உண்மையைச் சொன்னால் பதிவை மேலோட்டமாக படித்தேன். மன்னிக்கவும். இன்னமும் உள்வாங்கி நிதானமாக நன்றாகப் படித்து விட்டு பிறகு கண்டிப்பாக வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கம்லா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் அருமையாக எடுத்துள்ளீர்கள். //

      நன்றி.

      அம்மன் அலங்காரத்துடன் கூடிய படங்களை கண்டு மனமாற தரிசித்து பிரார்த்தனைகள் செய்து கொண்டேன்.//

      நல்லது.

      //தங்களுக்கு இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். //

      நன்றி.

      உண்மையைச் சொன்னால் பதிவை மேலோட்டமாக படித்தேன். மன்னிக்கவும். இன்னமும் உள்வாங்கி நிதானமாக நன்றாகப் படித்து விட்டு பிறகு கண்டிப்பாக வருகிறேன்.//

      நிதானமாக வாங்க . எப்போது வேண்டுமென்றாலும் படிக்கலாம் பதிவை.
      இன்று வேலைகள் அதைகம் இருக்குமே!
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  9. வணக்கம் சகோ !

    அனைவருக்கும் இனிய
    இனிய நவராத்திரி /ஆயுதபூஜை நல்வாழ்த்துகள்!
    படங்கள் அருமை
    நாமளும் நம்ம கணனிக்கும் கைப்பேசிக்கும் ஆயுத பூஜையைப் போட்டிட வேண்டியதுதான் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ சீராளன், வாழ்க வளமுடன்
      வாழ்த்துக்களுக்கு நன்றி.
      //நாமளும் நம்ம கணனிக்கும் கைப்பேசிக்கும் ஆயுத பூஜையைப் போட்டிட வேண்டியதுதான் !//

      ஆமாம், இப்போது அதிலேயே தானே ஆபீஸ் வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். பிள்ளைகள் பாடம் படிக்கிறார்கள்.
      எங்களை போன்றவர்கள் உறவுகளை, நட்புகளை மற்றும் பொழுதுகளை கழிக்கிறோம். நாங்களும் கும்பிட வேண்டும் கணிணி, கைபேசியை.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  10. விஜயதசமி வாழ்த்துக்கள் கோமதி அக்கா. நாங்களும் நேற்று வீட்டுப் பூஜை முடிச்சிட்டோம், இன்று கேதார கெளரி விரதாரம்பம்.

    படங்கள் வழமைபோல அழகு, டெய்லி நவராத்திரி விழா நன்கு நடந்திருக்குதுபோலும். பனை ஓலையில் வைத்து கொழுக்கட்டை சாப்பிடுவது இப்போதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      விஜயதசமி வாழ்த்துகளுக்கு நன்றி.
      உங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துகள்.
      கேதார கெளரி விரதம் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
      தினம் நவராத்திரி விழா சிறப்பாக நடந்தது.
      இன்று காலை அன்னை சாரதாவை வணங்கி வந்து விட்டேன். மாலை தம்பி வீட்டில் ஒரு விழா அதனால் அதில் கலந்து கொள்வதால் இன்று பட்டிமன்ற நிகழ்ச்சியை கேட்க முடியாது இன்று நிறைவு பெறுகிறது விழா.

      அன்னை இத்தனை நாள் அவளை தரிசிக்க கொடுத்தற்கு நன்றி சொல்ல வேண்டும்.
      பனை ஓலை கொழுக்கட்டை மாயவரத்தில் பக்கத்து வீட்டில் செய்தார்கள் சாப்பிட்டு இருக்கிறேன். அவர்கள் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள். ப்னை ஓலை வாசத்தோடு இருக்கும். பனை ஓலையில் மாவை வைத்து கட்டி வேக வைப்பார்கள்.
      அப்புறம் பனை ஓலையை அவிழ்த்து கொழுக்கட்டையை சாப்பிடுவார்கள்.

      உங்கள் வரவு மகிழ்ச்சியை தருகிறது , பதிவுகள் போடுங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. விஜயதசமிக்கான பதிவு சூப்பர் கோமதிக்கா

    நவராத்திரி விழா தினமும் சிறப்பாக நடந்தது என்பதோடு நீங்க அதை படம் எடுத்து தொகுத்து இங்கு பதிவாக எங்களுக்குத் தந்திருப்பது அதைவிடச் சிறப்பு கோமதிக்கா

    அம்மன் அலங்காரம் செமையா இருக்கு. ஒவ்வொரு கலைஞரும் என்ன சொன்னார்கள் என்ற விவரங்கள் எல்லாம் அழகா கொடுத்திருக்கீங்க அக்கா.

    எனக்குத்தான் நேரம் ரொம்ப டைட்டாகப் போகிறது....பதிவை வாசித்தாலும், விவரமாகப் பதில் சொல்ல இயலவில்லை..

    நவராத்திரிக்கும் இப்படியான நிகழ்வுகள் நடப்பது அதுவும் சிறிய கோயில்களில் கூட என்பது சிறப்பான விஷயம்
    படங்கள் எல்லாமே அழகாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      நவராத்திரி விழா தினமும் சிறப்பாக நடந்தது இறை அருளால் சரஸ்வதி பூஜை வரை கலந்து கொண்டேன். விஜயதசமிக்கு போக முடியவில்லை . வேறு கோவில்களுக்கு போய் வந்தேன்.

      //அம்மன் அலங்காரம் செமையா இருக்கு. ஒவ்வொரு கலைஞரும் என்ன சொன்னார்கள் என்ற விவரங்கள் எல்லாம் அழகா கொடுத்திருக்கீங்க அக்கா.//

      நன்றி.

      //எனக்குத்தான் நேரம் ரொம்ப டைட்டாகப் போகிறது....பதிவை வாசித்தாலும், விவரமாகப் பதில் சொல்ல இயலவில்லை..//

      வீடு மாற்றும் வேலை, மற்றும் கணினி வேலைகளுடன் பதிவை படித்து கருத்து சொல்வது மகிழ்ச்சி தருகிறது.

      //நவராத்திரிக்கும் இப்படியான நிகழ்வுகள் நடப்பது அதுவும் சிறிய கோயில்களில் கூட என்பது சிறப்பான விஷயம்//

      இப்போது எல்லா சிறிய பெரிய கோவில்களில் விழாக்கள் சிறப்பாக நடக்கிறது. மக்களும் கோவிலுக்கு நிறைய செய்கிறார்கள்.
      பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.


      நீக்கு
  12. அம்மன்அலங்காரங்கள் மனதைக்கவர்கின்றன. விழாக்கள் சிறப்பாக நடப்பது மகிழ்ச்சி. தொடர் சொற்பொழிவுகள் நடாத்தப்படுவதும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      விழாக்கள் சிறப்பாக நடப்பது மகிழ்ச்சிதான். விழாகாலங்களில் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடவும், விழாக்களை கண்டு, சொற்பொழிவுகளை கேட்டு மனம் ஆறுதல் அடைந்தது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. அம்மனுக்கு அலங்காரங்கள் சிரத்தையுடன் செய்துள்ளார்கள். மற்றும் படங்களும் தகவல்களும் அருமை. பேராசிரியர்கள் ஆற்றிய உரையின் சுருக்கமான பகிர்வும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      ஆமாம், சிரத்தையுடன் செய்து இருந்தார்கள்.
      பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு