வெள்ளி, 30 செப்டம்பர், 2022

நலம் தரும் நவராத்திரி -2

அருள்மிகு ஸ்ரீ பொய்சொல்லா மூர்த்தி அய்யனார்  கோவிலில் 

நவராத்திரி விழா சிறப்பாக நடந்து வருகிறது. மதுரையில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வீட்டுக்கு அருகில் இருக்கும் இந்த கோவிலுக்கு மட்டுமே என்னால் போய் வர முடிகிறது.

கொலு வைத்து ஸ்ரீ பேச்சியம்மனுக்கு தினம் வித விதமாக அலங்காரம் செய்வது  அருமையாக இருக்கிறது.

முதல் நாள் ராஜ ராஜேஸ்வரி. அலங்காரமும் அன்று நடந்த சொற்பொழிவு  "நலம் தரும் சக்தி"  பற்றி இதற்கு முந்திய பதிவில் சொல்லி இருந்தேன்.


இந்த பதிவில் இரண்டாம் நாள் ஸ்ரீ கருமாரி அம்மன் அலங்காரம். பேராசிரியை முனைவர் இரா. அனிதா (நா.ம.ச.ச.வெள்ளைச்சாமி நாடார் )கல்லூரி "ஆலவாய் அண்ணலும் அங்கையற்கண்ணியும் " என்ற தலைப்பில்  பேசினார். அன்று அவர் பேச்சு நிறைவு செய்யும் சமயம்தான் போய் இருந்தேன். அன்னையை தொழுது நலங்களை, வளங்களை பெறலாம் என்றார்.

மூன்றாம் நாள் ஸ்ரீ மீனாட்சி அம்மன் அலங்காரம். திருமதி மாலா ராஜா  @ எஸ், மீனாக்ஷி அவர் மகள் திருமதி அர்ச்சனா ஷியாம், அவரின் ஆறு வயது மகள் செல்வி. லாஸ்யா ஷியாமின் நடன நிகழ்ச்சி. தாய், மகள், பேத்தி மூவரும் அருமையாக ஆடினார்கள். பேரனை அன்று தான் ஆட வைத்தார்கள் . முதல்  பாட்டு கணபதி பாட்டு.  கணபதி போல தூக்கி வந்து  கணபதி வழிபாடு செய்து ஆடினார்கள்.

திருமதி அர்ச்சனா 16 வருடங்களுக்கு முன் இந்த கோவிலில் தான் அரங்கேற்றம் செய்தராம். திருமணம் முடிந்து இப்போது வேறு ஊரில் இருக்கிறார். விடுமுறைக்கு வந்த போது கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டதால் அம்மா, மகன், மகளுடன் ஆட மகிழ்ச்சியாக ஒத்துக் கொண்டு  வந்து ஆடினேன். என்றார். (ஆட்டம் நிறைவு பெற்றதும் சொன்னார்.)


பாடல் ஒலி பரப்புவதில் மைக் செட் கொஞ்சம் இடையூறு செய்தது, அப்போது அந்த பெண் பதட்டபடாமல் போடுங்கள் அண்ணே! நான் எவ்வளவு நேரம் ஆனாலும் ஆடி விட்டுதான் போவேன், கோவிலுக்கு வந்து இருக்கும் அன்பர்களும் பார்த்து விட்டுதான் போவார்கள். என்று சொன்னார், அந்த இடையூறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். 

மகா கணபதி மனசாஸ்மராமி பாடலுக்கு நடனம்

 சிறுவனின் பெயர்  நிகழ்ச்சி நிரலில் இல்லை. திடீர் என்று ஆட வைத்து இருக்கிறார்கள். குழந்தை பெயர்  மாய கண்ணன் அழகாய் இரண்டு  பாட்டு பாடினான், குழந்தை மழலை குரலில் பாட்டை கேட்கும் போது ஆனந்தமாக இருந்தது தாயும் பாட்டியும் மகிழ்ந்து கேட்டது மேலும் மகிழ்ச்சியை தந்தது.

ஆண்டாள்  பாடல்

ஒரு பாட்டு நடனம் மட்டும் கேட்டு விட்டு போகலாம் என்று நினைத்தேன்.  அதனால் கடைசியில் நின்று கொண்டு பார்த்தேன், எப்போது வேண்டுமென்றாலும் வீட்டுக்கு போகலாம் போல் நின்றேன், அவர்கள் போகவிடவில்லை அவர்கள் ஆடிய ஆட்டம் கட்டிப்போட்டு விட்டது.  ஒரு மணிநேரம் எந்த கவலையும் இல்லாமல் பார்த்து ரசித்தேன் கால் வலி தெரியவில்லை.                             

சிவ பூஜை, சிவ சம்போசிவ சம்போ ஸ்வயம்போ கங்காதர சங்கர கருணாகர பாடல்அயிகிரி நந்தினி பாடல்


நிறைவு பாடல் பாரதியாரின் சின்னம் சிறு கிளியே  மிகவும் அருமையாக ஆடினார். கொஞ்சம் பதிவு செய்தேன். வலையேற மறுத்து விட்டது.

நான்காம் நாள் ஸ்ரீ அன்னபூரணி அலங்காரம். பேராசிரியை முனைவர் பா ரேவதி அவர்கள் (நா.ம.ச.ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி) "சுந்தரரின் பக்தி சிறப்புகள்" பற்றி பேசினார். சுருக்கமாக தெளிவாக பேசினார்.இந்த பாடல் நான்  பள்ளியில் படிக்கும் போது இந்த பாட்டுக்கு தோழிகளுடன்(சிறு வயதில்) அம்மவின் பட்டு புடவையை கட்டிக் கொண்டு  கோலாட்டம்    ஆடினேன். அது வேறு ராகத்தில் இருக்கும் எங்கள் பாட்டு டீச்சர் சொல்லி கொடுத்தது.

தேடி கொண்டு இருந்தேன்,  இப்போது கிடைத்தது. கேட்டு இருப்பீர்கள், மதுரையில் மீனாட்சி அம்மனின் விழாக்கள் அடங்கிய பாட்டு .

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

---------------------------------------------------------------------------------------------------

23 கருத்துகள்:

 1. சிறப்பான படங்களுடன் சொற்பொழிவு தகவல்கள் சிறப்பு.

  காணொளி பாடல் கேட்டேன் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //சிறப்பான படங்களுடன் சொற்பொழிவு தகவல்கள் சிறப்பு.

   காணொளி பாடல் கேட்டேன் மகிழ்ச்சி.//

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. நிகழ்ச்சி சிறப்பாக இருந்ததால் நீங்களும் நின்று ரசித்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. அனைத்துப் படங்களும் அருமை. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   ஆமாம், சிறப்பாக இருந்தது ராமலக்ஷ்மி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 3. இந்த மாதிரி நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தும் கோவில் நிர்வாகத்தைப் .பாராட்ட வேண்டும்.  இந்த வயதிலும் சிறப்பாக ஆடி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.  பேஸ்புக்கில் சிறு பகுதி வெளியிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   நீங்கள் சொல்வது போல கோவில் நிர்வாகத்தை பாராட்ட வேண்டும் தான்.
   தாய் இந்த வயதிலும் சிறப்பாக ஆடினார்கள். நடன வகுப்புகள் எடுக்கிறார்கள் தாயும் மகளும்.

   பேஸ்புக்கில் சிறிய காணொளி போட்டு இருக்கிறேன்.
   இங்கு வர மாட்டேன் என்று சொல்லி விட்டது.
   உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   நிகழவுகளை ரசித்து கருத்து சொனதற்கு நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   நிகழ்வை பகிர்வை ரசித்தி கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 6. நமது கலை கலாசாரங்கள் வளர்வதற்கு கோயில்களே வாழ்விடங்கள்..

  இதனால் தான் இன்றைக்கு இதெல்லாம் மதத்துடன் சமபந்தமானவை .. மதத்தில் இருக்காதே மனிதத்தில் இரு.. .- என்கின்றார்கள் சில மடையர்கள்..

  சைவ வைணவங்களில் மனிதம் தான்!..

  சிறப்பான நிகழ்வுகள்.. சிறப்பான பதிவு..

  இப்போதைய மன நிலையில் இவற்றையெல்லாம் அருகிருந்து பார்க்க இயலவில்லையே.. என்று இருக்கின்றது..

  ஓம் சக்தி ஓம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
   கோவில்களில் நல்ல நிகழ்ச்சிகள் எப்போதும் நடக்கும் அதை கேட்டே வளர்ந்தவர்கள் . இந்த கோவில் பக்கத்தில் இருக்கும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.

   பத்து நாளும் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கிறது இறைவன் அருளால் பார்க்க முடிய வேண்டும். நேற்று வயதான அம்மா பேசினார்கள் "சக்தியே யுக்தி" என்று தேவி மாகாத்திமியச் சுருக்கத்தை கதையாக் சொன்னார்கள்.

   //இப்போதைய மன நிலையில் இவற்றையெல்லாம் அருகிருந்து பார்க்க இயலவில்லையே.. என்று இருக்கின்றது..//
   தஞ்சையில் எல்லா கோவில்களிலும் நடக்கும் அல்லவா?
   கலந்து கொள்ள முடியவில்லையே என்று இருக்கா? முடிந்தவரை போய் வாருங்கள் இறைவன் சக்தி தருவார்.
   ஓம் சக்தி ஓம்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. வீட்டில் கொலு வைத்து இருந்தால் கோவிலில் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாது. உடனே அம்மன் அலங்காரம் பார்த்து விட்டு திரும்பி விடுவோம். இப்போது வீட்டில் கொலு வைக்கவில்லை.
   அதனால் கோவிலில் பூஜை பார்க்க முடிகிறது, மற்றும் பேச்சுக்களை கேட்க முடிகிறது.

   நீக்கு
 7. நல்ல நிகழ்வைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். பதிவைப் படித்ததும் மனதில் மகிழ்ச்சி. நம் கலாச்சாரம் பாரம்பர்யம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறதே என்று.

  வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி - மதுரை தானே? நான் படித்தபோதெல்லாம் பெண் பேராசியர்கள் இல்லை. (பெண்களுமே படித்த மாதிரி நினைவு இல்லை. ஆண்கள் கல்லூரியாத்தான் இருந்தது)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன். வாழ்க வளமுடன்

   ஆமாம், குழந்தைகள் ஆர்வமாக கேட்கிறார்கள் பார்க்கிறார்கள்.
   அவர்களுக்கு மனதில் இவை எல்லாம் பதியும்.

   //நம் கலாச்சாரம் பாரம்பர்யம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறதே என்று.//
   இந்த குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் தங்கள் குழந்தைகளிடம் சொல்வார்கள், எங்கள் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடக்கும் தினம் நல்ல நல்ல சொற்பொழிவுகள் என்று. கற்பனை செய்து பார்க்கும் போதே ஆனந்தமாக இருக்கிறது தான்.

   வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மதுரை தான். முதலில் ஆண்களுக்கு மட்டும் இருந்து இருக்கிறது, அப்புறம் 1986 ல் இருபாலரும் படிக்கும் கல்லூரி ஆகி இருக்கிறது. பேச வந்தவர் தமிழ்துறை தலைவருக்கு நன்றி சொல்லி ஆரம்பித்தார்கள்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 8. வர்ணனையும் படங்களும் சேர்ந்து கட்டுரை நன்றாக உள்ளது. கோயில் நிர்வாகம் ஒரு பெடஸ்டல் fan ஆவது வைத்து  இருக்கலாம். ஆடியவர்கள் வியர்வையில் குளித்து விட்டனர். 
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜெயக்குமார், சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

   //வர்ணனையும் படங்களும் சேர்ந்து கட்டுரை நன்றாக உள்ளது. //

   நன்றி.

   //கோயில் நிர்வாகம் ஒரு பெடஸ்டல் fan ஆவது வைத்து இருக்கலாம். ஆடியவர்கள் வியர்வையில் குளித்து விட்டனர். //

   கோவிலில் அவ்வளவு வசதி இல்லை . ஆடியவர்கள் அப்படி எல்லாம் வசதி கேட்கவில்லை போலும். தரை கூட மேடு பள்ளம் தான் ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் நன்றாக ஆடினார்கள்.
   அதை பாராட்டி வாழ்த்த வேண்டும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.   நீக்கு
 9. வணக்கம் சகோதரி

  பதிவு அருமையாக உள்ளது.
  அம்மனின் ஒவ்வொரு நாளைய அலங்காரங்களும் நன்றாக உள்ளது. ஒவ்வொரு நாளும் இப்படி அலங்காரமும், பக்தியுடன் சொற்பொழிவு செய்பவர்களுமாக, அங்கு நவராத்திரி விழா நல்லபடிபடியாக நடந்து கொண்டிருப்பது அறிந்து மகிழ்ச்சி. அந்தக் கோவிலின் நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள். தாங்களும் அதை ஆர்வத்துடன் தொகுத்து தருவதால் இதையெல்லாம் நாங்களும் கண் குளிர மனம் மகிழ பார்க்க முடிகிறது. அதற்கு உங்களுக்கும் மிக்க நன்றி.

  அம்மா, மகள், பேத்தி, பேரன் என அனைவரும் பரதக்கலையில் தேர்ச்சி பெற்று ஆடுவது மிகவும் கண் கொள்ள காட்சியாக உள்ளது. அந்த கலைக் குடும்பத்திற்கு பாராட்டுக்கள்.

  தாங்களும் தங்களது கால்வலியை பொருட்படுத்தாமல் முழுவதுமாக நின்று பார்த்ததினால்தான் எங்களுக்கு இந்த மாதிரியான கலை நிகழ்ச்சிகளை காண தர முடிந்தது. அதற்கு மனம் மகிழ்ந்தாலும், தங்கள் கால்வலியை நினைத்து கவலையாக உள்ளது. இப்போது கால்வலி கொஞ்சம் குறைந்துள்ளதா? ஓரிரு நாட்கள் நன்றாக ஓய்வெடுங்கள்.

  தாங்கள் பள்ளிப் பருவத்தில் கலை நிகழ்ச்சிகளில் பாட்டுப்பாடி கோலாட்டம் ஆடியதற்கு வாழ்த்துக்கள். அந்தப்பாடல் கேள்விப்பட்ட மாதிரிதான் உள்ளது. காணொலி பிறகு கேட்டு ரசிக்கிறேன்.

  நான் நேற்று வலைத்தளம் வர இயலவில்லை. அதனால் இன்று தாமதமாக வருகிறேன்.பதிவு அருமையாக உள்ளது. படித்ததும் மனதிற்கு மகிழ்வாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   //ஒவ்வொரு நாளும் இப்படி அலங்காரமும், பக்தியுடன் சொற்பொழிவு செய்பவர்களுமாக, அங்கு நவராத்திரி விழா நல்லபடிபடியாக நடந்து கொண்டிருப்பது அறிந்து மகிழ்ச்சி. அந்தக் கோவிலின் நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள். //

   உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
   கலைக்குடும்பத்தை பாராட்டியதற்கு நன்றி.

   கால்வலி இருக்கிறது, அதற்கு மருந்து தடவி கொண்டு வெந்நீர் ஒத்தடம் செய்து கொண்டு இருக்கிறேன்.
   நவராத்திரி முடிந்தால் கோவிலுக்கு எப்போதாவது தான் போவோம்.
   முன்பு தினம் கோவிலுக்கு போவேன். இப்போது சில முக்கிய தினங்களுக்கு தான் கோவில் போகிறேன்.

   பள்ளிக்கு கல்வித்துறை அதிகாரி வரும் போது கலை நிகழ்ச்சி கொடுப்போம், ஒவ்வொரு ஆண்டும் அப்படி ஒருவருடம் இந்த பாடல்.
   என் தோழிக்கும் அம்மா புடவை கொடுத்தார்கள்., என் அக்காவுக்கு என்று திருமணத்திற்கு பட்டு புடவை வாங்கி வைத்து இருந்த புது வைரஊசி புடவை, எனக்கு அம்மாவின்
   வைர ஊசி புடவை கட்டி கொண்டு ஆடினோம். இந்த பாடல் வரிகள் கிடைத்தால் போடுகிறேன், நன்றாக இருக்கும். மதுரை மீனாட்சிக்கு ஒவ்வொரு மாதமும் நடக்கும் திருவிழா பேர்கள் பாட்டில் வரும்.
   நீங்கள் கேட்டு இருப்பீர்கள்.
   வேலை ஏதாவது இருக்கும் அதுதான் வரவில்லை என்று நினைத்தேன்.

   உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 10. பாத்தீங்களா கோமதிக்கா மகிழ்ச்சியோடு உங்களை மறந்து ஆட்டத்தை ரசித்திருக்கீங்க அதான் இப்படி கால் வலி கூடத் தெரியவில்லை!! மனம் தான் காரணம் இல்லையா?!!

  அம்மா மகள் பேத்தி என்று கலக்கல் போங்க. அம்மாவும் ஆடியிருப்பது ஆஹா போட வைத்தது. சிலர் தான் தாங்கள் கற்ற நடனத்தைத் தொடர்ந்து வருகிறார்கள். நானும் இப்படி ஆடுவது பாடுவது எல்லாம் நின்று கேட்கப் பிரியப்படுவேன் ஆனால் என்னோடு இருப்பதற்கு ரசிப்பதற்கு யாரும் கிடையாது பொறுமை கிடையாது நானும் இருக்க முடியாது.

  இந்த பாடல் நான் பள்ளியில் படிக்கும் போது இந்த பாட்டுக்கு தோழிகளுடன்(சிறு வயதில்) அம்மவின் பட்டு புடவையை கட்டிக் கொண்டு கோலாட்டம் ஆடினேன். அது வேறு ராகத்தில் இருக்கும் எங்கள் பாட்டு டீச்சர் சொல்லி கொடுத்தது.//

  சூப்பர் கோமதிக்கா....

  நானும் பள்ளி கல்லூரியில் நிறைய பங்கெடுத்திருக்கிறேன்....என் ஆர்வங்கள் எல்லாம் மண்ணோடு போய் இப்போது எதுவும் செய்யாமல் ஏதோ ஓடுகிறது ஓடினால் போதும் என்ற நிலை...பல சமயங்களில் மனம் மிகவும் டல்லாகிவிடுகிறது. பல சமயங்களில் என் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள முடியாமல் இப்படி வாழ்க்கை போய்விட்டதே என்று தோன்றும்...

  பதிவை ரசித்தேன் குறிப்பாக அம்மா பெண் பற்றி எழுதியிருக்கும் பகுதியை

  பாட்டைக் கேட்டேன் இப்போதுதான் கேட்கிறேன் கோமதிக்கா. நன்றாகப் பாடியிருக்கிறார்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
   //பாத்தீங்களா கோமதிக்கா மகிழ்ச்சியோடு உங்களை மறந்து ஆட்டத்தை ரசித்திருக்கீங்க அதான் இப்படி கால் வலி கூடத் தெரியவில்லை!! மனம் தான் காரணம் இல்லையா?!!//

   மனமும் ஒரு காரணம் தான் கீதா.

   //நானும் இப்படி ஆடுவது பாடுவது எல்லாம் நின்று கேட்கப் பிரியப்படுவேன் ஆனால் என்னோடு இருப்பதற்கு ரசிப்பதற்கு யாரும் கிடையாது பொறுமை கிடையாது நானும் இருக்க முடியாது.//

   நானும் மாமா இருக்கும் போது அவர்களுக்கு சாப்பாடு செய்ய வேண்டும் அதனால் நேரத்திற்கு வீட்டுக்கு வர வேண்டும், அப்புறம் மற்றவர்கள் கூட இருந்தால் அவர்கள் விருப்பமும் இருந்தால்தான் நின்று கேட்க , பார்க்க முடியும்.
   இப்போது நான் தனியள் என் மனது இருக்க சொன்னால் இருக்கிறேன், வர சொன்னால் வருகிறேன். சித்தம் போக்கு சிவன் போக்கு என்று இருக்கிறது மனது.


   //நானும் பள்ளி கல்லூரியில் நிறைய பங்கெடுத்திருக்கிறேன்....என் ஆர்வங்கள் எல்லாம் மண்ணோடு போய் இப்போது எதுவும் செய்யாமல் ஏதோ ஓடுகிறது ஓடினால் போதும் என்ற நிலை...பல சமயங்களில் மனம் மிகவும் டல்லாகிவிடுகிறது. பல சமயங்களில் என் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள முடியாமல் இப்படி வாழ்க்கை போய்விட்டதே என்று தோன்றும்...//

   பள்ளி பருவத்தில் டீச்சர் அழைத்து விடுவார்கள் எல்லா விழாக்களுக்கும் .

   நீங்களும் பள்ளி கல்லூரியில் நிறைய பங்கு பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
   இப்போதும் நீங்கள் எவ்வள்வோ செய்து கொண்டுதானே இருக்கிறீர்கள் கீதா.

   மனதை தைரியமாக வைத்து கொள்ளுங்கள். நிறைய சாதிக்க முடியும் உங்களால்.

   பதிவை ரசித்து படித்து, பாடலை கேட்டு விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.   நீக்கு
 11. நடனம் படங்கள் அழகாக இருக்கிறது குடும்பமே ஆடியது சிறப்பு நிகழ்ச்சியும் கட்டிப் போட்டது என கூ றியுள்ளீர்கள். தொடர்சொற்பொழிவு நிகழ்த்தும் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   நீங்கள் சொல்வது போல குடும்பமே ஆடியது மகிழ்ச்சிதான் அவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு