மேகமலைக்கு பிப்ரவரி மாதம் 13ம் தேதி சென்று வந்தோம்.
தொடர் பதிவாக வந்து கொண்டு இருக்கிறது.
மஹாராஜா மெட்டு என்ற இடத்திற்கு போகும் பாதை இந்த இடத்திலிருந்து கம்பம் பள்ளத்தாக்கின் அழகை பார்க்கலாம்.
அவர்கள் வண்டி வெளியே போய் இருந்ததால் எங்கள் வண்டியிலேயே போனோம். எங்கள் வண்டி பெரிய வண்டி என்பதால் கொஞ்சம் கவனமாக போக வேண்டி இருந்தது. பாதை குறுகியதாக இருந்தது வேலை வேறு நடந்து கொண்டு இருந்தது.
இந்த வண்டியில் தான் நாங்கள் பயணம் செய்தோம்.
மலை மேல் இருக்கும் கடை, கடை வாசலில் பஸ் நிறுத்தம் உண்டு.
தேயிலை தோட்டத்தில் தவழ்ந்து வரும் சினிமா பாடல். மலை மேல் ஏறிய போது கீழே வைத்து இருந்த பாடல் மலை முழுவதும் கேட்டது. நான் காணொளி செய்த போது பாடல் சத்தம் கொஞ்சமாய் கேட்குது. எந்த சினிமா பாடல் என்று சொல்லுங்கள் கேட்டவர்கள்.
காப்பியும், தேயிலையும்
தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு ஞாயிறு விடுமுறை. மருந்து அடிக்கும் பணியாளர்கள் மட்டும் இருந்தார்கள் பாடலை ரசித்து கேட்டுக் கொண்டு வேலை பார்க்கிறார்கள்.
சுவையான சுக்கு காப்பியும் கிடைக்கும். மருந்து அடிப்பவர் சுக்கு காப்பி குடிக்கிறார்.
நாங்கள் மலை மேல் ஏறி போய் இயற்கை அழகை ரசித்து வந்த பின் குடித்தோம். குளிருக்கும் இதமாய் , சுவையாய் நன்றாக இருந்தது.
மலை மேல் ஏறும் போது பேரன் கை பிடித்து கவனமாக அழைத்து சென்றான். பேரன் சபரி கைபிடித்து அழைத்து செல்ல காத்து இருக்கிறான். படங்கள் எடுக்கும் போது கவனமாக என்னைப் பார்த்துக் கொண்டான்.
அடுத்த பதிவில் மலை காட்சி பார்க்கலாம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------
பசுமையான காட்சிகள் மிகவும் அழகாக தெளிவாக இருக்கிறது.
பதிலளிநீக்குகாணொளியில் பாடல் எஸ்.பி.பி - எஸ்.ஜானகி முதல் வரியை பிடிக்க இயலாமல் ஆலோசித்துக் கொண்டு இருக்கிறேன்.
நல்ல பாடல்.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு//பசுமையான காட்சிகள் மிகவும் அழகாக தெளிவாக இருக்கிறது.//
நன்றி.
பாடல் இன்னும் கொஞ்சம் பதிவு செய்து இருக்கலாம். சின்ன காணொளி என்றால்தான் பார்ப்பார்கள் என்று கட் செய்து விட்டேன்.
அடிக்கடி கேட்ட நல்ல பாடல்தான் சட்டென்று நினைவுக்கு வரவில்லை.
ஆலோசித்து கிடைத்தால் சொல்லுங்கள்
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கின்றன... அடிக்கும் வெயிலுக்கு இதமாகவும் இருக்கிறது...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குகாணொளி பார்த்து இருந்தால் என்ன பாட்டு என்று சொல்லி இருப்பீர்களே!
படங்களை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
அன்பின் கோமதி மா,
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
காணொளி மிக அருமை. படங்கள் அதைவிட அருமை.
சபரி வளர்ந்து விட்டான். நல்ல குழந்தை
நலமாக இருக்க வேண்டும்.
நீங்கள் சென்ற அந்த வண்டியில் தான்
குடும்பமாக நாங்கள் செல்வது வழக்கம். நல்ல சௌகரியமான
வண்டி,.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குகாணொளி உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
சபரிக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி அக்கா.
குடும்பமாக செல்ல இந்த வண்டி வசதிதான்.
ஜானகியின் குரல் தெரிகிறது. என்ன பாடல் என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குதனபாலனை வெகு நாட்களுக்கு அப்புறம் இங்கு
பார்க்கிறேன்.
அவருக்குத் தெரியாத பாடல்களே கிடையாது.
காட்சிகளில் மிகவும் பிடித்தது தேயிலைத் தோட்டங்களும்,
அந்தத் தொழிலாளர் குடி இருப்பும்தான்.
அன்யோன்யமாக வாழ்வார்கள் என்று நம்புகிறேன்.
அருமையான இடத்துக்குத் தான் சென்றிருக்கிறீர்கள். இது போலப்
பசுமைக் காட்சிகளும் குளிர்ந்த காற்றும் நம்மை
அமைதி நிலைக்குக் கொண்டு போகும்.
தோழி மலை நாட்டில் இருக்கிறாள்.
அவள் வீட்டுக்குப் போகும் போது
நீங்கள் சொன்னதைப் போலப் பாட்டுகள்
பள்ளத்தாக்குகளிலிருந்து மேலே மிதந்து வரும்.
பதிவுக்கு மிக நன்றி அன்பு கோமதி.
பாடலை இடையில் பதிவு செய்து இருப்பதால் பாடல் கண்டு பிடிப்பது கஷ்டம் தான்.
நீக்குதனபாலன் எங்கள் ப்ளாகிலும் வந்தாரே அக்கா.
இப்போதுதான் இந்த இடம் மக்களின் கண்ணில் பட்டு இருக்கிறது.
பசுமையும், குளிர்ச்சியும் எல்லோருக்கும் பிடிக்கும், ஊட்டி, கொடைக்கானலுக்கு இணையாக இயற்கை காட்சிகள் நிறைந்த இடம்.
நீங்கள் சொன்னது போல பள்ளத்தாக்கிலிருந்து மலை மேலே தவழ்ந்து வரும் இசை கேட்க இனிமை.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அழகான காட்சிகள். காணொளியும் கண்டேன். கேட்ட பாடல் என்றாலும் முதல் வரி நினைவுக்கு வரவில்லை.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குஅடிக்கடி கேட்ட பாடல்தான் ஆனாலும் நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது.
படங்களை, காணொளி பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
அழகிய படங்கள். இயற்கைக்கு காட்சிகள் எப்பவுமே அழகு. அதிலும் மலை சார்ந்த இடமாக இருந்தால்... தேயிலைத்தோட்டமும் பசுமையும் அழகாய் இருந்திருக்கும்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஇயற்கை காட்சிகள் எப்பவும் பார்க்க அழகுதான்.
மலை காட்சிகள் பார்த்து கொண்டே இருக்கலாம்தான்.
தேயிலை தோட்டமும் பசுமையும் அழகாய் இருந்தது.
காணொளியில் என் காதுக்கு "வெறும் காத்துதான்" சத்தம் கேட்டது! பாடல் எதுவும் காதில் விழவில்லை! நண்பர்கள் சொல்வதிலிருந்து அவர்களுக்கு கேட்டிருக்கிறது. மொபைலில் பின்னர் கேட்டுப்பார்க்க வேண்டும். பேரனின் அக்கறை பாராட்டத்தக்கது.
பதிலளிநீக்குகாணொளியில் மருந்து அடிக்கும் வெள்ளை கோடாகவும், காற்று சத்தம் அதிகமாக கேட்பது உண்மை. பாடலும் கேட்கிறது சத்தமாக வைத்து கேட்டு பாருங்கள். கூட கொஞ்ச நேரம் எடுத்து இருக்கலாம்.
நீக்குஇரண்டு பேரங்களும் வெளியே போனால் ஆச்சியை பார்த்து கொள்வது அவர்கள் பொறுப்பாய் எடுத்து கொள்வார்கள்.
உங்கள் பாராட்டுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
என் கமெண்ட்ஸ் எங்கே?
பதிலளிநீக்குஅதுதான் இது!
நீக்குமேலே இருக்கே ! உங்கள் கருத்து.
படங்கள் எல்லாம் மிக மிக அழகாக இருக்கின்றன. நேரில் பார்த்திருந்தாலும் உங்கள் படங்களின் வழி இன்னும் ரசிக்கின்றேன்.
பதிலளிநீக்குதுளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
கோமதிக்கா படங்கள் அட்டகாசம் போங்க...சூரியனார் நல்லா லைட் அடிச்சிருக்கார். கரெக்ட்டா ....அதனால் ஹெச்டி ஆர் நன்றாக இருக்கிறது. ரசித்தேன்....வேலைப் பளு கோமதிக்கா இரு ஃபைல்கள் வந்திருக்கின்றன ஆனலைனில் செய்து முடிக்க வேண்டும் அதனால் சின்ன கமென்டா போட்டுட்டு ஓடுகிறேன்...
பதிலளிநீக்குகீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குவேலைகளுக்கு நடுவே பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
வேலைகளை நன்றாக செய்து முடிப்பீர்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
உங்கள் வண்டியில் போகும் போது வளைவில் எடுத்த அந்த சாலை படம் வெகு அழகு ஆங்கிள் செம!!!
பதிலளிநீக்குரசித்தேன் கோமதிக்கா.
வாத்துகள் ஆமாம் ரொம்ப சென்சிட்டிவ் எல்லாப் பறவைகளும்தான்....தள்ளி இருந்து எடுத்தால் ஓகே ஆனால் கிட்ட கொஞ்சம் நாம் நகர்ந்தாலும் அவர்களின் தலை நம்மை நோக்கித் திரும்பும் நான் வியந்து வியந்து பார்க்கிறேன் பல பறந்துவிடும் படம் எடுக்க முடியாமல்...எப்படி அலர்ட்டாக இருக்காங்க!! அவங்க உலகம் பின்ன..பயம் இருக்காதா..
படங்களை ரசித்தேன் ஆனால் எப்பவும் போல் நிறைய நேர்ம பார்க்க முடியலை
கீதா
சாலை படத்தை ரசித்தமைக்கு நன்றி.
நீக்குபறவைகளுக்கு பாதுகாப்பு உணர்வு அதிகம் , அப்படியும் அவைகளுக்கு ஆபத்து பல ரூபங்களில் வருகிறதே!
படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
அக்கா பாட்டு கேட்கவில்லை காத்துதான் கேட்கிறது. என் காது வேறு கேட்காதே ஹியரிங்க் எய்டில் அத்தனை தெளிவாகக் கேட்காதே...காணொளியில் காட்சியை ரசித்தேன்
பதிலளிநீக்குஅழகான படங்கள்
கீதா
கீதா
பாட்டு கேட்கவில்லையா , காத்து சத்தம்தான் கேட்கிறதா? மெலிதாகத்தான் பாடல் சத்தம் கேட்கிறது.
நீக்குபடங்களை , காணொளியை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
மொபைலில் காணொளி பார்த்து பாட்டைக் கேட்டேன். கண்டுபிடித்தேன். மனோ ஜானகி பாடிய சின்ன ஜமீன் படப்பாடல்.
நீக்குhttps://youtu.be/hM9IKwSUIzE
ஸ்ரீராம், பாட்டை கேட்டு , கண்டு பிடித்து சொன்னதற்கு நன்றி.
நீக்குநீங்கள் கொடுத்த சுட்டியில் போய் கேட்டேன்.
மனோ, சித்ரா என்று போட்டுஇருக்கிறது.
ஆம். சித்ராதான். ஜானகி அல்ல.
நீக்குநன்றி
நீக்குஇயற்கையோடு இணைந்த அழகிய புகைப்படங்கள்!!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
நீக்குஇயற்கை அழகாய் இருக்கும் அந்த இடத்தை முடிந்தவரை எடுத்து இருக்கிறேன்.
படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
நானும் ' ஒரு மந்தாரப்பூ வந்தா' பாடலை கண்டு பிடித்து விட்டேன்! அப்புறம் தான் பார்த்தேன், சகோதரர் ஸ்ரீராம் ஏற்கனவே கண்டு பிடித்து எழுதியிருப்பதை!
பதிலளிநீக்குஓ! நீங்களும் இசை பிரியர் அல்லவா அதனால் கண்டு பிடித்து விட்டீர்கள்.
நீக்குபாடல் தொட்டகம் பதிவு செய்யவில்லை, இடையில் செய்து இருக்கிறேன், மெலிதாக வேறு ஒலிப்பதால் கண்டு பிடிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்து இருக்கும். காற்றின் ஒலியும் அதிகம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அருமையான காட்சிகள். மிக அழகாய்ப் படம் எடுத்திருக்கிறீர்கள். காணொளியில் கேட்கும் பாடல் என்னவென்று எனக்குப் புரியலை. அதற்கென விற்பன்னர்கள் இருக்காங்களே! :)))) அட? ஶ்ரீராம் கண்டு பிடிச்சுட்டார் போல! உங்கள் மகள் வயிற்றுப் பேரனின் படம் நன்றாக வந்திருக்கிறது. பேத்தியை பரதநாட்டிய உடையில் பார்த்திருக்கேன். கம்பம் பள்ளத்தாக்கின் படம் மிக அழகு! அதிசயம்! அற்புதம்!
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை, காணொளியை ரசித்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.
ஸ்ரீராம் , மனோ சாமிநாதன் கண்டு பிடித்து விட்டார்கள்.
பேத்தியை பார்த்து இருப்பீர்கள். பேரன் வித விதமாக போஸ் கொடுத்தான்.
கம்பம் பள்ளத்தாக்கு அழகுதான். அதியசம், அற்புதங்கள் நிறைந்தது என்று "மேகமலை ரகசியம்" என்று தொடர்கள் எல்லாம் எடுத்து இருக்கிறார்கள் போலும்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பிராந்தியத்தில் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை பயணம் செய்ய ரொம்ப ஆவல். என்ன இருந்தாலும் இந்த அழகு இமயமலைப் பிராந்தியத்துக்கு வராதுனு தோணும். அது பயங்கர அழகு எனில் இது இனிமையான அழகு.
பதிலளிநீக்குமேற்குத் தொடர்ச்சி மலைப்பிராந்தியத்தில் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை பயணம் செய்யும் ஆவல் நிறைவேறட்டும்.
நீக்குநீங்கள் சொல்வது போல இமயமலை ஒரு அழகு. அந்த காலத்தில் இமயமலை அழகை பனி படர்ந்த மலையை, நீண்ட பைன் மரங்களை, பள்ளதாக்குகளை, ஏரிகளை பார்க்க இந்தி படம் போவோம். அப்புறம் நம் தமிழ் படங்களில் வெளி நாடுகள், இமயமலையில் எல்லாம் படபிடிப்பு நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.
நம் பக்கம் இனிமையான இடம் நிறைய இருக்கிறது உண்மைதான்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
படங்களும் அதற்கான தங்கள் வர்ணனைகளும் மிக அருமை. பாடலின் ஆரம்பம் எனக்கும் பிடிபடவில்லை. ஸ்ரீராம் அக்கறையுடன் தேடித் தந்து விட்டுள்ளார். கடைசிப் படத்தில் சபரியைப் பார்த்து மகிழ்ச்சி. சபரி, மாதினி இருவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குபாடலின் ஆரம்பம் தேடி தந்து விட்டார் ஸ்ரீராம். பாடலை ரசித்து கேட்பவர்.
சபரிக்கும், மாதினிக்கும் வாழ்த்துக்களை சொல்லி விட்டேன்.
படங்களை ரசித்துசொன்ன கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
மலையும் தேயிலை கோப்பியும் அழகிய காட்சிகள். மலைநாடு என்றாலே இயற்கை கொடுத்த வரம்தான்.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், மலைநாடு என்றாலே இயற்கை கொடுத்த வரம்தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.