வெள்ளி, 18 மார்ச், 2022

குலதெய்வ வழிபாடு
குலதெய்வ கோயிலின் அழகிய தோற்றம் 

பங்குனி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம். பல விழாக்கள் நடைபெறும் கோயில்களில். குறிப்பாக குலதெய்வ வழிபாடு சிறப்பு. எங்கள் குலதெய்வம் கோவில் இப்போது கும்பாபிஷேகம் நடந்து புது பொலிவுடன்  இருக்கிறது.
எங்கள் குலதெய்வம் மடவார்விளாகம் என்ற ஊரில் இருக்கிறது.

உற்சவர்


5. தேதி மண்டலாபிஷேகம் பூர்த்தியாகி விட்டது. என் கணவரின் தம்பி கோவில் நிர்வாகம் அனுப்பும் வாட்ஸ் அப் படங்களை எங்கள் குடும்ப குழுவிற்கு அனுப்புவார்கள். அதைப்பார்த்து தரிசனம் செய்து கொள்வோம். அவர்களும் மண்டலாபிஷேக பூர்த்தி அன்று குடும்பத்துடன் சென்று வந்தார்கள். எங்கள் குலதெய்வ படங்கள் இங்கு இடம் பெறுகிறது.
பேச்சி அம்மன், பிரம்மராக்ஷக்ஷி அம்மன்
ஸ்ரீ கொம்ப மாடசாமிபுதிதாக வாங்கிய சூலாயுத விளக்கு தீபம்


இன்றைய அலங்காரம்
எங்கள் அப்பா வீட்டு குலதெய்வம் ,மருதகுளத்தில் இருக்கிறது, சிதம்பர சாஸ்தா சுவாமியின் பேர்.

என் அண்ணன் மகன் இன்று குலதெய்வத்தை தரிசனம் செய்து வந்தான். சாஸ்தா படம் எனக்கு அனுப்பினான்.  நான் தரிசனம் செய்து கொண்டேன். பழைய இந்த பதிவுகளில் ஊரின் அழகை பார்க்கலாம்.

அனைவருக்கும் குலதெய்வம் அருள் கிடைக்கவேண்டும்  .
குலதெய்வம் குடும்பத்தை வாழ வைக்க வேண்டும்.
சனிக்கிழமையும், திங்கள்கிழமையும் குலதெய்வம் வழி பாடு செய்ய சிறப்பு என்பார்கள். 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
----------------------------------------------------------------------------------------------------

26 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரி

  நலமாக உள்ளீர்களா? பதிவும் படங்களும் மிக நன்றாக உள்ளது. பங்குனி உத்திரத்தன்று நல்ல தரிசனம் கண்டு கொண்டேன். தர்ம சாஸ்தா அனைவரையும் நலமுடன் காக்க வேண்டுமாய் உங்கள் வீட்டு குலதெய்வத்தை நானும் மனமாற வணங்கி கொண்டேன். எங்கள் அம்மா வீட்டு குலதெய்வமும் சாஸ்தாதான். (திருநெல்வேலி அருகில் மாயமான் குறிச்சி என்ற ஊரில் உள்ளது.) திருநெல்வேலி செல்லும் போது அவர்களுடன் நாங்களும் அடிக்கடிச் சென்றுள்ளோம்.

  தாங்கள் வியாழனன்று எ.பியில் என் வரவு கண்டு சந்தோஷமடைந்து கருத்துரை வழங்கியிப்பதை கண்டேன். உண்மையிலேயே உங்களின் அன்பு மனதுக்கு மிக்க மகிழ்வாக இருந்தது. உங்கள் அனைவரின் அன்பிற்கும் என் மனம் எப்போதும் மகிழ்வான நன்றிகளை சொல்லிக் கொண்டிருக்கும். உங்களின் பழைய பதிவுகளை நிறைய தவற விட்டிருந்தாலும், என் மகன் அவன் இருப்பிடம் திரும்பி செல்லும் வரை வேலைகள் அதிகம் இருப்பதால் இப்படி நடுநடுவில் அனைவரின் பதிவுகளுக்கும் வருகிறேன். அனைவரும் நலமாக இருக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   நலமாக இருக்கிறேன், எனக்கும் கொஞ்சம் உடல் நலக்குறைவு இருந்தது மருத்துவரிடம் போய் மருந்து எடுத்து கொண்டு இருக்கிறேன். நலமாகி வருகிறது.
   உங்கள் உடல் நலம் பூரண நலம் பெற வாழ்த்துகள்.
   மகன் இருக்கும் வரை அவர்களுடன் மகிழ்ந்து இருங்கள். அப்புறம் நம் வலைத்தளம் வரலாம்.

   திருங்நெல்வேலியில் மாயமான் குறிச்சியா ? ஆழவார் குறிச்சி பக்கம் எங்கள் சாஸ்தா கோயில்.

   உங்கள் கருத்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி.

   நீக்கு
 2. இன்று மாலை வீட்டுக்கு
  அருகிலுள்ள ஸ்ரீ சிறை காத்த ஐயனார் கோயில் சென்று தரிசனம் செய்து விட்டு வந்து எனது தளத்தைத் திறந்தால் உங்களுடைய தகவல்..
  மகிழ்ச்சி.. நன்றி..
  மிக அருமையான தரிசனம்.. கண் குளிரக் கண்டேன்.. மனம் அடங்கியதாக சில நிமிடங்கள் ஒன்றும் புரிய வில்லை.. என் மனைவியிடமும் இதனைக் காட்டினேன்..

  எங்கள் கோயிலிலும் இப்படித் தான் .. பிரம்ம சக்தி தனி சந்நிதி.. ஐயனார் சற்று விலகி தனிக் கோயில்.. ஸ்ரீ மாடஸ்வாமியும் பேச்சியம்மனும் இசக்கியம்மனோடு விளங்குவார்கள்.. முன்னோடியார் பரிவாரங்களுடன்...

  அழகான படங்களை அனுப்பி வைத்த சின்ன ஐயா அவர்களுக்கு நன்றி..
  ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யங்களைத் தந்து அனைவரையும் ஐயன் ஸ்ரீ களக்கோடி தர்மசாஸ்தா காத்து அருள்வாராக...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துறை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
   ஸ்ரீ சிறை காத்த ஐயனார் தரிசனம் செய்து வந்தீர்களா? மகிழ்ச்சி.

   //மிக அருமையான தரிசனம்.. கண் குளிரக் கண்டேன்.. மனம் அடங்கியதாக சில நிமிடங்கள் ஒன்றும் புரிய வில்லை.. என் மனைவியிடமும் இதனைக் காட்டினேன்..//


   உங்களின் இறை நம்பிக்கை ஆனந்தம் அளிக்கிறது. உங்கள் துணைவியும் படங்களை பார்த்தது மகிழ்ச்சி.   சப்தகன்னியர்கள், வீரபத்திர சாமி, பலவேசகாரர் எல்லாம் உண்டு பழைய பதிவில் போட்டு இருக்கிறேன் அவர்கள் படங்களை.

   நம் ஊர் பக்கம் மாடஸ்வாமியும், பேச்சியம்மனும், இசக்கி அம்மனும் நிறைய கோயில்களில் இருப்பார்கள்.

   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. அன்பின் கோமதி,
  என்றும் வாழ்க வளமுடன்.
  குலதெய்வம் கோயில் படங்கள் மிக அருமை. சிறப்பான அலங்காரங்கங்களுடன் அழகாக இருக்கிறது. பாட்டி தாத்தா திருநெல்வேலி பேச்சி அம்மன், இசக்கி அம்மன் பற்றி சொல்லி கேள்வி. திருமணமான பிறகு சென்னை தெய்வங்களே எங்களுக்கு வழிகாட்டி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

   குலதெய்வம் கோயில் படங்கள் மிக அருமை. சிறப்பான அலங்காரங்கங்களுடன் அழகாக இருக்கிறது. பாட்டி தாத்தா திருநெல்வேலி பேச்சி அம்மன், இசக்கி அம்மன் பற்றி சொல்லி கேள்வி. திருமணமான பிறகு சென்னை தெய்வங்களே எங்களுக்கு வழிகாட்டி.//

   இருக்கும் இடத்தில் தெய்வங்களை வணங்கினாலோ போதும் வழிகாட்டியாக வந்து கொண்டு இருப்பார்கள். குலதெய்வம் என்று ஒவ்வொருவரும் கொண்டாடும் தெய்வத்தை வணங்கினால் கூடுதல் பலம். போகமுடியவில்லை என்றாலும் நினைத்து கொண்டு வணங்கினால் போதும்.

   மாயவரத்தில் இருக்கும் ஐயனாரை வழிபடுவோம் எங்கள் குலதெய்வம் கோவில் போலவே இருக்கும். அவர்கள் அங்கிருந்து ஐயனாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியை நேரடியாக பார்க்க அனுப்பி வைத்தார்கள். கண்டு களித்தேன்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 4. அடுத்தாற்போல இட்ட பின்னூட்டத்தைக் காணோமே.
  பரவாயில்லை.
  படங்கள் அத்தனையும் ஒளி வீசுகின்றன.
  இவ்வளவு காவல் தெய்வங்களும் குல தெய்வங்களும் இருப்பதாலேயே
  நாம் காப்பாற்றப் படுகிறோம்.

  வண்ண அலங்காரங்களும், கும்பாபிஷேகப்
  படங்களும் கண் முன் தெய்வங்கள்
  உலவுவதைப் போல உணர்கிறேன்.

  திருமங்கலத்தில் எங்கள் வீட்டுக்குப் பின்னால்
  ஐயனார் கோவில் உடுக்கை சத்தமும்,
  இன்னமும் கூட நினைவில் இருக்கிறது.
  நன்றி மா. வாழ வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்கா வேறு பின்னூட்டங்கள் வரவில்லையே!
   ஊரின் எல்லையில் உள்ள தெய்வங்கள் காவல் தெய்வங்களாக நமக்கு வழி காட்டும் என்பார்கள். குலதெய்வங்கள் நம்பிக்கை, அச்சமின்மை, நல்லவழியில் வாழ வழி காட்டும் என்பார்கள்.

   கோவிலில் இருந்தே படங்கள் எடுத்து அனுப்புகிறார்கள்.
   //இவ்வளவு காவல் தெய்வங்களும் குல தெய்வங்களும் இருப்பதாலேயே
   நாம் காப்பாற்றப் படுகிறோம்.//

   உண்மைதான் அக்கா.   திருமங்கல நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அக்கா.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

   நீக்கு
 5. குலதெய்வம் கோவிலுக்கு நாங்களும் சென்ற வருடம் அண்ணன் மகன் திருமணம் முடிந்த உடனேயே சென்றிருக்கவேண்டும்.  இந்த வருடம் செல்லவேண்டும்.  தள்ளிக்கொண்டே போகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   சாரின் தம்பி மகனுக்கு கல்யாணம் செய்தவுடன் போக நினைத்து போகமுடியாமல் இந்த மாதம் தான் போனார்கள்.
   அவர் அழைப்பார் அப்போது போய் வாருங்கள்.

   நீக்கு
 6. உங்கள் குலதெய்வம் கோவில் அழகாக இருக்கிறது.  பெரிதாகவும் இருக்கிறது.  படங்கள் அருமை.  எங்கள் கோவில் இப்போதுதான் சில வருடங்களாக ஒரு ஷேப்பை பெற்றுக்கொண்டிருக்கிறது.  மடவார்விளாகம் எங்கிருக்கிறது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் கோயில் ஏரிகரையோரம், வயல்கள் சூழ அழகாய் இருக்கும்.
   மனதுக்கு நிறைவும் , மகிழ்ச்சியும் கிடைக்கும் அடிக்கடி கிடைக்காது.

   அம்பாசமுத்திரம் பக்கம் முன்பு இரண்டு மூன்று பதிவுகளில் எங்கு இருக்கிறது என்று எழுதி இருக்கிறேன். இந்த பதிவில் கோயில் விழா பத்திரிக்கையில் மிக விரிவாக இடத்தை குறிப்பிட்டு இருக்கிறார்கள் படித்து கொள்வார்கள் என்று தனியாக எழுத வில்லை.
   பாப்பான் குளம் கிராமம். ஆலங்ககுளம் வட்டம், தென்காசி மாவட்டத்தில் மடவார்விளாகம் இருக்கிறது.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 7. மூன்று பின்னூட்டங்கள் இட்டேன். இரண்டு இங்கே இருக்கு... இன்னொன்று எங்கே?!
  முன்னர் ஒரு பதிவிலும் இதே மாதிரி ஆனது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் இரண்டுதான் வந்தது . இன்னொன்று இப்போது நீங்கள் கேட்பதுதான்.

   முன்னர் பதிவிலும் சொன்னீர்கள் வேறு எதில் தேடுவது?

   தெரிந்தால் சொல்லுங்கள்.

   நீக்கு
 8. கோமதிக்கா குலதெய்வப் படங்கள் எலலம் நன்றாக இருக்கின்றன.

  குட்டி அம்மன் இருவரும் அழகு! எல்லா அலங்காரமும் செமையா இருக்கு.

  அந்த யானையும் அழகாக இருக்கிறது.

  முதல் படம் ஊரின் குளம் படம் செம.

  ஊரின் அழகைப் பார்க்க அந்த இரு சுட்டிகளும் போய் பார்க்கிறேன் கோமதிக்கா

  உங்களுக்கும் இரு குடும்ப குலதெய்வ தரிசனமும் கிடைத்தது மகிழ்வான விஷயம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

   //ஊரின் அழகைப் பார்க்க அந்த இரு சுட்டிகளும் போய் பார்க்கிறேன் கோமதிக்கா//

   மகிழ்ச்சி.

   //உங்களுக்கும் இரு குடும்ப குலதெய்வ தரிசனமும் கிடைத்தது மகிழ்வான விஷயம்.//

   ஆமாம், இருந்த இடத்தில் இருந்தே குலதெய்வங்களை தரிசனம் செய்து விட்டேன்.

   இறைவனுக்கு நன்றி. அனுப்பி வைத்த சொந்தங்களுக்கு நன்றி.
   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
   ஏரிக்கரையோரம் என்று குலதெய்வம் ஏரியை பற்றி எழுதி இருக்கிறேன் முன்பு.
   ஏரிகரையோரமாக நடந்து போக வேண்டும் கோவிலுக்கு.


   நீக்கு
 9. இரு சுட்டிகளும் பார்த்தேன் கோமதிக்கா...முதல் சுட்டி பார்த்ததும் நினைவு வந்துவிட்டது அதுவும் அந்த ஏரி, மரத்தின் அடியில் மக்கள் பொங்கல் வைக்க? அது பார்த்திருக்கிறேன்

  மற்றொரு சுட்டி 2012 ல் பேரன் குட்டிப் பையனாக இருந்த போது கோயிலைச் சுற்றி விளையாடிய படம், இலைகளைத் தள்ளி விளையாடியது, ஆடுமேய்ப்பவர் பார்த்து மகிழ்ந்தது, மாமாவுடன் நீங்களும் அழகான படம்.

  பேரன் உங்கள் ஜாடை அதிகம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரு சுட்டிகளையும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
   பேரனுடன் அப்போ போனது தான் அப்புறம் குடும்பத்தோடு போகவில்லை/இந்த முறை போக நினைத்து போகவில்லை.வரும் நாட்கள் கொஞ்சம், முடிக்கவேண்டிய வேலைகள் அதிகம் இருந்தது மகனுக்கு. அடுத்த முறை வரும் போது குலதெய்வம் கூப்பிட வேண்டும். அவ்ர் அருளால்தான் அவரை வணங்க போக முடியும்.

   பேரன் என் ஜாடை இருப்பதாய் எல்லோரும் சொல்வார்கள். மகன் ஜாடைதான். அவனும் என் ஜாடை.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 10. அருமையான அலங்காரங்களுடன் சிறப்பான வழிபாடு. படங்களும் பகிர்வும் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. படங்களும் சிறப்பு. பகிர்வும் மிக சிறப்பாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 12. உங்கள் குலதெய்வம் கோவில் பற்றிய தகவல்களும், படங்களும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 13. குலதெய்வம் அலங்காரங்கள் சிறப்பு. கண்டு வழிபட்டோம்.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு