ஞாயிறு, 6 மார்ச், 2022

மேகமலை


மேக மலையில் தங்கி இருந்த இடம்

மகள் குடும்பத்துடன் தேனீ மாவட்டத்தில் உள்ள மேகமலை தேயிலை தோட்டத்தை பார்க்க போய் இருந்தோம். (பிப்ரவரி 12ம் தேதி போய் வந்தோம்.) அங்கு பார்த்த இயற்கை காட்சிகளும் பறவைகளின் ஒலியும்,  கேட்ட பாடல்களும் இந்த பதிவில் இடம்பெறுகிறது. சின்னமனூர் ஊரிலிருந்து மலைப்பாதை வழியாக மேகமலைக்கு போகலாம்.அழகான
தனியார் தேயிலை தோட்டம் இருக்கிறது.


காலை நேரம் தங்கி இருந்த இடத்திலிருந்து ஏரியின் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம்.  ஏரியின் அழகை பார்த்து கொண்டு இருந்த போது  ஏரிக்கு அக்கரையில் உள்ள தேவாலயத்திலிருந்து அருமையான பாடல்கள் கேட்டது.

பாடலும்  பறவைகளின் ஒலியும் காலை நேரத்தை ரம்மியம் ஆக்கியது.

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்,  பாட்டில் வருவது போல ஆலயத்திலிருந்து பாடலும், அருள் மொழி கூறும் பறவைகளின் ஒலியும் கேட்டேன். நீங்களும் கேட்டு பாருங்கள்.

விசில் செய்யும் பறவை ஒலியை காணொளி செய்தேன் அது அடுத்த பதிவில்.


நான் எடுத்த சிறிய காணொளிதான்அந்த பாடல் பிடித்து இருந்தது எனக்கு .அதனால் அந்த பாடலை தேடி போட்டு இருக்கிறேன், நீங்களும் கேட்டு பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

அதிகாலை நேரம் மேகமலையில் தேவாலயத்திலிருந்து ஒலிக்கும் ஜிக்கியின் பாடலும் பறவைகளின்
இன்னிசையும். சிறிய காணொளி தான் பாருங்கள்.

இந்த பாடலையும் தேடினேன் கிடைக்கவில்லை இந்த பாடல் முன்பு வானொலியில் கேட்டு இருப்பீர்கள்.


இயற்கை அழகு கொட்டி கிடக்கும் ஊர் மேகமலை.
கொடைக்கானலில் "பில்லர்ராக்"என்று அழைக்கப்படும் இடத்தில் மேகம் வந்து மலையை மறைத்து விளையாடும் அது போல இங்கு ஒரு நொடி வெண்மேகம் வந்து அந்த இடத்தை மறைத்து விடுகிறது சட்டென்று அடுத்த  நொடிகளில் மீண்டும் காட்சி அளிக்கிறது .வெண்மேகம் பறந்து போவது பார்க்க அழகு. வெண்மேகம் பறந்து செல்லும் காட்சி, ஒரு பறவையின் ஒலியும் இருக்கிறது.மலைச் சரிவில் தேயிலை தோட்டத்தைப் பார்பது அழகு.

அங்கு பார்த்த பறவைகள், பூக்கள், ஏரியின் அழகு எல்லாம் தொடர்ந்து வரும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

40 கருத்துகள்:

 1. படங்களும், காணொளிக்கு பொருத்தமான பாடல்களும் அருமை.

  ரம்மியமான காட்சிகள் மிகவும் அழகாக இருக்கிறது மன அமைதி இவ்விடங்களில் கிடைக்கும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //ரம்மியமான காட்சிகள் மிகவும் அழகாக இருக்கிறது மன அமைதி இவ்விடங்களில் கிடைக்கும்..//

   ஆமாம், மன அமைதி கிட்டியது. கவலையை மறக்க வைக்கிறது. இயற்கை வழிபாடு செய்ய ஏற்ற இடம்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.   நீக்கு
 2. பச்சைப் பட்டு விரித்தாற்போல
  பசுமையை வாரியிறைக்கும் படங்கள்..அருமை..

  இயற்கையின் அழகு அனைத்தும் சிகரத்தில்..

  இப்போதெல்லாம் பிற பாடல்களில் மனம் செலுத்துவதில்லை..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

   //பச்சைப் பட்டு விரித்தாற்போல
   பசுமையை வாரியிறைக்கும் படங்கள்..அருமை.//

   நன்றி.   இயற்கையின் அழகு அனைத்தும் சிகரத்தில்..//

   சிகரத்திலிருந்து கீழே பார்க்கும் போது இயற்கை மிக அழகாய் இருந்தது.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 3. மிக அழகிய இடம் என்று தெரிகிறது.  இதுபோன்ற இடங்களும் தமிழ்நாட்டில் உள்ளதா என்று எண்ணவைக்கும் காட்சிகள்.  தேனீ இதுபோன்ற இடங்களுக்கு பெயர்போனது என்பதால்தான் பாரதிராஜா அங்கு சென்று படப்பிடிப்பை நடத்தினார் போலும்.  அவர் ஊராச்சே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   நாங்கள் சிறு வயதில் 1971ல் ஒரு வருடம் தேணியில் இருந்தோம்.(அப்பா அங்கு வேலை பார்த்தார்கள்) வீட்டுக்கு வரும் உறவினர்களுடன் கொடைக்கானல் சென்று இருக்கிறோம். ஆனால் இந்த மேகமலை கேள்வி பட்டது இல்லை. என் அண்ணன் மகன் தான் இந்த இடத்தை சொன்னான்.

   பாரதி ராஜா வெள்ளை உடையுடன் கதாநாயகியை இந்த மாதிரி இடங்களில் மெதுவாக ஓட வைப்பார்.வெண்மேகம் பறக்கும் மலைகளை பசுமையை அழகாய் காட்டுவார்.

   நீக்கு
 4. பாடல்கள் நான் கேட்டதில்லை. காணொளிகளும் கேட்டேன் / பார்த்தேன். மலைக்காட்சிகள் வெகு அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடல்கள் கேட்டு, காணொளிகள் பார்த்தது மகிழ்ச்சி. அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி .

   நீக்கு
 5. அருமையான இயற்கைக் காட்சிகள். சின்னமனூரில் நிறைய இருந்திருக்கேன். சித்தப்பா அங்கே பேருந்து நிலையம் அருகே மருத்துவமனை நடத்திக் கொண்டிருந்தார். இப்போவும் அந்த ஊர் மக்கள் "பிச்சுமணி டாக்டர்" எனில் பழமையானவர்களால் மறக்க இயலாது. ஆனால் அங்கே இருந்திருந்தபோதெல்லாம் எங்கேயும் போனதில்லை. :( சுருளி போக முடிவெடுத்துப் போக முடியாமல்போய்விட்டது. அதே போல் இந்த எஸ்டேட்டுக்கும் போனதில்லை. ஆனால் அப்போவே சிறப்பாகச் சொல்லுவார்கள். அந்த மேற்குத்தொடர்ச்சி மலைப் பிராந்தியமே மிக அழகு கொஞ்சும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   சின்னமனூரில் இருந்து இருக்கிறீர்களா ! சித்தப்பா அவர்களை பற்றி பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. சுருளி ஒரு முறை போய் இருக்கிறோம், தேக்கடி பள்ளியில் அழைத்து சென்றார்கள், பிள்ளைகளை அழைத்து ஒரு முறை சார் அழைத்து சென்று இருக்கிறார்கள்.
   தேயிலை தோட்டம் அந்த காலத்தில் இன்னும் மிக சிறப்பாக இருந்ததாம்.

   நீங்கள் சொன்னது போல மேற்கு தொடர்ச்சி மலைப் பிராந்தியமே அழகுதான்.

   நீக்கு
 6. படங்கள் எல்லாமுமே மிகச் சிறப்பாக எடுத்திருக்கிறீர்கள். முகநூலிலும் பார்த்த நினைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முகநூலில் காணொளிகள் போட்டு இருந்தேன், பறவைகள் போட்டு இருந்தேன்.
   பதிவுகள் தாமதமாகிறது.

   நேற்று தம்பி, தங்கை வீட்டுக்கு போய் விட்டதால் தாமதமாக பதில்.

   //படங்கள் எல்லாமுமே மிகச் சிறப்பாக எடுத்திருக்கிறீர்கள்//

   நன்றி.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 7. தொழில் முறை புகைப்படம் எடுப்பவர்கள் தோற்று விடுவார்கள். புகைப்படங்கள் அவ்வளவு அழகாக இருக்கின்றன.
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
   புகைப்படம் எடுப்பவர்கள் இன்னும் அழகாய் எடுப்பார்கள், எனக்கு தெரிந்தவரை எடுத்து இருக்கிறேன். படங்களை ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கும்
   உங்கள் பாராட்டுக்கும் நன்றி.

   நீக்கு
 8. இயற்கை அழகை ரசித்தேன்... கூடவே காணொளிகளும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   இயற்கை அழகை ரசித்து காணொளிகளையும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 9. அற்புத காட்சிகள் ...
  பார்க்கவே பரவசம் தரும் இடம் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனுபிரேம், வாழ்க் வளமுடன்
   ஆமாம், இயற்கை எழில் கொஞ்ச்ம் இடம் தான்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 10. கோமதிக்கா ஒரே ஒரு முறை மேகமலை போயிருக்கிறேன் ரொம்ப முன்பு. அழகான இடம். அப்போது கேமரா எதுவும் கிடையாது!!!

  உங்கள் படங்கள் செம. நல்ல அழகான லைட்டிங்க் படங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றன. ரொம்ப ரசித்தேன். சின்னமனூர் வழியாகப் போகும் போதே வழிஎல்லாம் அத்தனை அழகாக இருக்கும்.

  அது போல தேனி யில் சுருளி அருவி அப்புறம் தேக்கடி அடிவாரம் வழியாக முன்னார் போனோம். அது மிக மிக அருமையான பயணம் அப்போது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க வளமுடன் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
   நீங்கள் மேகமலை போய் இருக்கிறீர்களா? மகிழ்ச்சி. அழகிய இடம்.
   இப்போது போக்குவரத்து நன்றாக இருக்கிறது. முதல் நாள் மாலை மேகமூட்டமும், மழையிம் இருந்தது. குற்றால சாரல் மழை போல அதில் நனைத்து கொண்டே அழகை ரசித்தோம்.அடுத்த நாள் காலைதான் மலை மேல் போனோம்.

   //நல்ல அழகான லைட்டிங்க் படங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றன. ரொம்ப

   ரசித்தேன்.//

   ஆமாம், நல்ல அழகான காட்சிகள் கொண்டை ஊசிகளில் பயணிக்கும் போது மிக அழகான காட்சிகள் கிடைத்தது.


   //அது போல தேனி யில் சுருளி அருவி அப்புறம் தேக்கடி அடிவாரம் வழியாக முன்னார் போனோம். அது மிக மிக அருமையான பயணம் அப்போது.//

   ஆமாம், நாங்களும் போய் இருக்கிறோம். கொடைகானல் அடிவாரம் தேனீயில் இருந்த போது மலை அழகை ரசித்து கொண்டே இருப்போம்.

   சின்னமனூர் வழியாகப் போகும் போதே வழிஎல்லாம் அத்தனை அழகாக இருக்கும்.


   நீக்கு
 11. பறவைகளின் குரல் கேட்டு ரசித்தேன். அதில் முதலில் வரும் குரல் டுருக் டுருக் நு உருண்டு வருதே அது மரங்கொத்தியின் சத்தம் போல் இருக்கிறது. இங்கும் ஏரிக்கரையில் கேட்கும். தினமும் நடைப்பயிற்சி செய்யும் போது. நானும் எடுத்தேன் பதிவு செய்தேன்...ஆனால் பறவையின் சத்தத்தை விட அங்கு நடை பயின்றவர்கள் சத்தமாகப் பேசிக் கொண்டே போனது பதிந்து இருந்ததால் அழித்துவிட்டேன்.

  அதன் பின் வரும் சத்தம் ராபின் பறவையின் சத்தம் போல் இருக்கிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மரங்கொத்தி பறவை, மணிப்புறா, கறுப்பு குருவி காகம் இவைதான் பார்க்க முடிந்தது, மற்ற பறவைகள் சத்தம் மட்டும் தான்.


   விசில் செய்த காணொளி இன்னும் போடவில்லை அது ராபின் பறவையாக இருக்கலாம்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

   நீக்கு
 12. மேகம் பறந்து செல்லும் வீடியோ ஹையோ ரசித்தேன் கோமதிக்கா. எனக்கு மலையும் மலை வாழ் பிரதேசம் ரொம்பப் பிடிக்கும். காட்சிகளை மிகவும் ரசித்தேன் கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா , உங்களுக்கு தான் மலையேற்றகுழுவில் நிறைய மலைகள் ஏறிவந்த அனுபவம் இருக்கே!

   உங்களுக்கு இந்த இடம் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
   கருத்துக்களுக்கு நன்றி கீதா.

   நீக்கு
 13. படங்களும் காணொளிகளும் அருமை. ரசித்துக் கேட்டேன் பார்த்தேன்.

  தேனியில் ராசிங்கபுரத்தில்தானே பிறந்து வளர்ந்தேன். அங்கு இருந்த போது இவ்வழியாகச் சென்றதுண்டு. சின்னமனூர் எல்லாம் மிகவும் பரிச்சயமான இடங்கள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துளசிதரன் , வாழ்க வளமுடன்

   //தேனியில் ராசிங்கபுரத்தில்தானே பிறந்து வளர்ந்தேன். //


   ஓ! அப்படியா

   பதவி உயர்வில் அப்பாவுக்கு தேனீயில் வேலை ஒரு வருடம் இருந்தோம்.

   அருமையான ஊர் தேனீ சந்தை புகழ்பெற்றது.

   உங்கள் கருத்துக்கு நன்றி.


   அங்கு இருந்த போது இவ்வழியாகச் சென்றதுண்டு. சின்னமனூர் எல்லாம் மிகவும் பரிச்சயமான இடங்கள்.

   நீக்கு
 14. இயற்கை எழில் கொஞ்சுகிறது. காரிருள் வேளையில் பாடல் அருமை. படங்களும் காணொளிகளும் நன்று. குறிப்பாக மேகங்கள் நகரும் காட்சி அற்புதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   உங்கள் காமிராவுக்கு நல்ல வேலை இருக்கிறது அங்கு போனால் .
   நீங்கள் அவசியம் போய் வாங்க. நிறைய படங்கள் எடுங்கள்.

   படங்களையும், காணொளிகளையும் ரசித்துப்பார்த்து பாடலை கேட்டு கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 15. இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள்..... பார்க்கப் பார்க்க, பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது. பாடல்களை கேட்டுக் கொண்டு இருக்கிறேன்......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
   ஆமாம், இயற்கை எழில் கொஞ்சும் இடம் தான்.

   படங்களை ரசித்து பாடல்களை கேட்டு கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 16. ரொம்பவும் அழகான படங்கள்! எனக்கும் போய் பார்க்கலாம் என்று தோன்றி விட்டது. அப்படி அழகாக இருக்கிறது பச்சைப்பசேலென்ற தேயிலைத்தோட்டங்களும் மலைகளும் !
  தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

   //ரொம்பவும் அழகான படங்கள்! எனக்கும் போய் பார்க்கலாம் என்று தோன்றி விட்டது. அப்படி அழகாக இருக்கிறது//

   ஆமாம், அழகான இடம். ஊருக்கு வரும் போது பாருங்கள்.

   நான் வந்து மூன்று மாதம் ஆகிறது.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 17. அன்பின் கோமதி மா.
  வாழ்க வளமுடன்.

  எத்தனை அழகான இடம். மேக மலை. நான் கேள்விப்பட்டது இல்லை.
  மலைகள் தான் எத்தனை பசுமையோடு
  அழகாக இருக்கின்றன.
  மதுரையைச் சுற்றி இத்தனை அழகான ரிஸர்ட்டுகள் இருப்பதே
  நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது.

  மனதுக்கும் கண்ணுக்கும் ஓய்வு கிடைப்பது அரிது. அழைத்துச் சென்ற உங்கள்
  மகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   நானும் கேள்வி பட்டது இல்லை. முன்பு ஆங்கிலேயர் வசம், அப்புறம் தனியார் வசம்.
   மலைகள், ஏரி என்று ஊர் அழகாய் காட்சி அளிக்கிறது.

   //மதுரையைச் சுற்றி இத்தனை அழகான ரிஸர்ட்டுகள் இருப்பதே
   நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது.//

   நாம்பார்த்த இடத்தையே பார்ப்போம். நாம் பார்ப்போம், அப்புறம் வீட்டுக்கு உறவு வந்தால் அழைத்து போவோம்.

   இப்போது உள்ளவர்கள் புதிது புதிதாக இடங்களை பார்க்க வசதியாக கூகுளில் வசதி இருக்கிறது. அதை பார்த்து அவர்கள் புக் செய்கிறார்கள்.
   மனதுக்கும் கண்ணுக்கும் சிறந்த இடம். அழைத்து போன மகளுக்கு நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன்   நீக்கு
 18. காணொளிகள் மிக மிக இனிமை அம்மா.
  ட்ரூவ் பறவை மலைப்பதிகளில்,
  முக்கியமாக ஏற்காட்டில் கேட்டிருக்கிறேன்.
  இந்த இயற்கையை அழிக்காமல்
  போற்றீப் பாதுகாப்பவர்களுக்கு நன்றி.

  ஆறும், தேயிலைத் தோட்டங்களும் இனிமை.

  அழகாகப் படம் எடுத்திருக்கிறீர்கள். நானே அங்கே போய் வந்த
  சந்தோஷம் கிடைக்கிறது மா.

  அருமையான பதிவு. நம் நாட்டை நினைத்து மகிழ்வாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளிகள் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
   ட்ரூவ் பறவையின் சத்தம் மலைபகுதியில் கேட்கும் போது நன்றாக இருக்கிறது.
   இயற்கையை போற்றி பாதுகாப்பவர்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

   உங்களுக்கு இந்த பதிவு பிடித்து இருப்பது மகிழ்ச்சி அக்கா.
   நம் நாட்டில் அருமையான இடங்கள் இருக்கிறது பார்த்து மகிழ.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 19. திரும்பும் இடம் எல்லாம் பசுமை அழகிய ஏரி தேயிலை மலைகள் என அழகு கொட்டிக்கிடக்கிறது மனதும் நிறைந்து இருக்கும் .

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
  ஆமாம், மாதேவி திரும்பும் இடமெல்லாம் அழகுதான்.
  மனதை நிறைக்கும் இயற்கை அழகு கொட்டி கிடக்கிற இடம் தான்.

  உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு
 21. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு