கும்பகோணம் ராயர் ஓட்டலில் வரவேற்பு அறையில் மாட்டி இருந்த படம்.
மாமனார் அவர்கள் சிவராத்திரிக்கு வீட்டில் நாலு கால பூஜை செய்வார்கள்.
என் கணவரின் தம்பி வீட்டில் செய்த மகா சிவராத்திரி பூஜை (2003)
என் கணவர் ஒரு கால பூஜை வீட்டில் செய்வார்கள். அடுத்த கால பூஜைக்கு கோவில் போவோம்.
அரிசோனாவில் Thorpe park flagstaff என்ற பார்க்கிற்குமகன் சனிக்கிழமை போய் இருந்தான் குடும்பத்துடன். அங்கு பனி பெய்து இருப்பதை பார்க்க போய் இருந்தார்கள். அங்கு பனி லிங்கம் செய்தார்கள். பார்க் பேரை அவன் செய்த லிங்கத்திற்கு கொடுத்து இருக்கிறான்.
பேரன் தொன்மாமிருகம் செய்து இருந்தான்(Dinosaur)
மகன் முன்பு நியூஜெர்சியில் இருக்கும் போது செய்த பனி லிங்கம். அந்த படத்தை இந்த முறை சிவராத்திரி வாழ்த்துக்கு பயன் படுத்தி இருக்கிறான்.
அரிசோனா மகாகணபதி ஆலயத்தில் உள்ள சிவன். மகன் அனுப்பியது.
என் கணவரின் அண்ணா வீட்டில் செய்த நாலு கால சிவபூஜை படங்கள். வில்வம், பூக்கள் அர்ச்சனை.
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே பாடல்
இன்று தியாகராஜ பாகவதர் அவர்களின் பிறந்த நாள்.
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
இன்று சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு சிவபெருமான் எல்லா நலங்களையும், வளங்களையும் தரட்டும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------
சிறப்பான படங்கள்! மகன் செய்த பனி லிங்கம் மிக அழகு!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
மிக சிறப்பான பதிவு. பனி லிங்கம் அருமை! ராமர் ஹோட்டல் நந்தி முன் நானும் படையெடுத்துச் கொண்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்கு//மிக சிறப்பான பதிவு. பனி லிங்கம் அருமை!//
நன்றி.
நீங்களும் ராயர் ஹோட்டலில் நந்தி முன் படம் எடுத்து இருக்கிறிர்களா, நல்லது. நிறைய படங்கள் எடுத்தேன். தறி மிஷின் எல்லாம் வைத்து இருந்தார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கும்பகோணம் ராயர் ஓட்டல் என்கிற பெயர் ஈர்க்கிறது! படம் அருமை. சிவராத்திரியை ஏகப்பட்ட சிவன் படங்கள், செய்திகளோடு கொண்டாடி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குசாரின் புத்தக வெளியூடு விழாவுக்கு கும்பகோணம் போன போது ராயர் ஓட்டலில் தான் தங்கினோம்.
பழைய நினைவுகளை அசை போட்டேன்.
மாமனார், தொடர்ந்து சார் செய்த பூஜைகள் விவரங்கள், படங்கள் சிறப்பு. தொடர்ந்து உங்கள் மகனும் பனிலிங்கம் போன்றவற்றைச் செய்து கொண்டாடுவதும் மிகச் சிறப்பு. கலைநயம் மிக்க படைப்பு.
பதிலளிநீக்குஎங்கள் குடும்ப வாட்ஸ் அப் குழுவில் சாரின் தம்பி பகிர்ந்து கொண்டார்கள் மாமாவின் சிவபூஜை படங்களை. முன்பு மாமாவை பற்றி எழுதும் போது மாமா சிறு வயதில் சிவபூஜை செய்யும் படம் போட்டு இருப்பேன்.
நீக்குசாரின் ஒரு அண்ணா மாமா போல தினம் சிவபூஜை செய்வார்கள்.
சிவன் ராத்திரியில் நாலுகால பூஜை செய்வார்கள்.
மகனின் பனிலிங்கத்தை பாராட்டியதற்கு நன்றி.
நிச்சயம் நீங்கள் நேற்றிரவு கண்விழித்திருந்திருப்பீர்கள். நானெல்லாம் வைகுண்ட ஏகாதசியோ, சிவராத்திரியோ.. கண்விழித்ததே இல்லை. சற்று வெட்கமாகவும் இருக்கிறது!
பதிலளிநீக்குநிச்சயம் நீங்கள் நேற்றிரவு கண்விழித்திருந்திருப்பீர்கள்.//
நீக்குஇல்லை ஸ்ரீராம். மயிலாப்பூர் கபாலீஸ்வ்ரர் கோயில் நேரடி ஒலிபரப்பு பார்த்தேன் தூக்கம் வரும் வரை. ஓரு மணிக்கு தூங்கி மீண்டும் நாலு மணிக்கு எழுந்து மீண்டும் பார்த்தேன்.
சிறு வயதில் கண்விழித்து இருக்கிறேன் வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரிக்கு தம்பி தங்கைகள் எல்லாம் கொஞ்சம் பஜனை, கொஞ்சம் விளையாட்டு என்று. கோவிலில் சொற்பொழிவுகள் கேட்டு கொண்டு இருந்து இருக்கிறேன்.
இப்போதும் தங்கை அழைத்தாள் கோயிலில் இரவு முழுவதும், தேவாரம், திருவாசகம், திருமந்திரம் படிக்க போவதாய் அழைத்தாள். என்னால் நீண்ட நேரம் அமர்ந்து இருக்க முடியாது என்று போகவில்லை. வீட்டில் முடிந்தவரை வணங்கி அப்பம், சுண்டல் செய்து இறைவனை வேண்டி கொண்டேன்.
ஓ... எம் கே டியின் பிறந்த நாளா? எத்தனை நல்ல பாடல்களைத் தந்து சென்றிருக்கிறார் அவர்..
பதிலளிநீக்குஆமாம், நேற்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நேரடி நிகழ்ச்சியில் சிவானந்த விஜயலட்சுமியின் பேத்தியும், இன்னும் இருவரும் எம்.கே.டியின் இந்த பாடலை பாடினார்கள். உடனே அது மனதில் ஓடி கொண்டே இருந்தது அப்போது அவர் பாடலை கேட்க போன போது அவர் பிறந்த நாள் என்று தெரிந்தது.
நீக்குமிக நல்ல பாடல்களை பாடி இருக்கிறார். "மனமே ஈசன் நாமத்தை வாழ்த்துவாய்" என்ற பாடலும் பிடிக்கும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
அருமையானப் பனி லிங்கப்படங்கள். அதிலும் நியூஜெர்சியில் செய்தது மிகவும் அழகாக இருக்கிறது. நாகாபரணத்தின் அழகு மனதைக் கவர்கிறது. உங்கள் மாமனார்/கணவர் ஆகியோர் செய்த சிவபூஜையின் படங்களும் சிறப்பு. சிவானந்த விஜயலக்ஷ்மியின் பேத்தி இப்போது பாட வந்துவிட்டாரா? என்ன பெயர்? எம்கேடியின் இந்தப் பாடலை அம்மா பாடுவார். உருக்கமாக இருக்கும். சிவராத்திரி கால பூஜை எல்லாம் மதுரையோடு போய்விட்டது.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குநியூஜெர்சியில் அதிகமான பனி அதுவும் வீட்டின் பின் பக்கம் அதனால் பெரிதாக செய்தான்.அரிசோனாவில் பார்க்கில் செய்தான். எந்த வித உபகரணமும் இல்லாமல் கைகளால் அள்ளி போட்டு செய்து இருக்கிறான். சிவன் ராத்திரி சமயம் என்பதால் சிவலிங்கம். பனிபுயல் சமயம் பிள்ளியார் செய்தான் முன்பு.
சுசித்ரா பாலசுப்பிரமணியன் சிவானந்த விஜயலட்சுமியின் பேத்தி. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள். திருப்புகழ் பாடுவார் அவ்ருடன் இன்னும் மூன்று பேர் சேர்ந்து பாடுவார்கள். திறமைகள் அதிகம் அவருக்கு. சினிமாபாடல் எந்த , கர்நாடக இசை மெட்டில் வந்து இருக்கிறது என்று ஒரு நிகழச்சி வழங்க்கினார். மார்கழி உத்சவம் என்ற ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடி இருக்கிறார்.
நம் பானுமதி கூட தன் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.
எம்,கேடியின் பாடல்களை என் அப்பா பாடுவார். உங்கள் அம்மா உருக்கமாக பாடுவது இப்போது கேட்க முடிந்தால் நன்றாக இருக்கும்.
சிவராத்திரி கால பூஜைகள் சிறு வயதில் எனக்கும் அதிகம்.
உடல்நிலை காரணமாக நேற்று முழுப்பட்டினி. இன்று கொஞ்சம் பரவாயில்லை. என்றாலும் இரவு கண் விழித்தெல்லாம் வழிபாடுகளைப் பார்க்கவில்லை. உட்கார முடியாது. :( படங்கள், வீடியோக்கள் வந்து கொண்டிருக்கின்றன.
பதிலளிநீக்குஉடல் நிலை காரணமாக விரதமா? இறைவன் உடல் நலத்தை சரி செய்வார்.
நீக்குஇரவு வெகு நேரம் கண்விழிக்கவில்லை. எனக்கு தூக்கம் இல்லாமல் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவர் கண்டிப்பாய் தூங்க வேண்டும் என்று 5 நாட்கள் தூக்க மாத்திரை கொடுத்தார் அப்போது கூட தூக்கம் வரவில்லை.
இப்போது இரவு தூக்கம் வந்தவுடன் தூங்கி விடுகிறேன், விழிப்பு வந்தவுடன் இறை நாமம் சொல்கிறேன். அப்படி இடை இடையே தான் பார்த்தேன். எனக்கும் வெகு நேரம் அமர்ந்து இருக்க முடியாது. எழுந்து நடக்க வேண்டும். நின்றும், இருந்தும், கிடந்தும் தான் இறைவனை வணங்கி கொண்டு இருக்கிறேன். பழைய மாதிரி செயல் பட முடியாது, முடிந்தவரை கடை பிடிப்போம்.
எனக்கும் படங்கள் வீடியோக்கள் வந்தது.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி. உடல நலத்தை பார்த்து கொள்ளுங்கள்.
நன்னாளில் மனதிற்கு நிறைவான பதிவு.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
அருமை
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
பதிவு சிறப்பு சகோ.
பதிலளிநீக்குஎம்.கே.டி.பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். வாழ்க வையகம்.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஎம்.கே.டி பாடல் பிடித்த பாடல் என்று கேட்டு மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
பெரியவர்களைக் கான்பதுவே ஆனந்த்ழ்ம்.. அதிலும் தங்களது மாமனார் அவர்களது சிவபூஜைக் காட்சி ...
பதிலளிநீக்குஅடடா.. அற்புதம்...
நாவுக்கரசு ஸ்வாமிகள் சொல்லியபடி வீடுகள் தோறும் ஊர்கள் தோறும் சங்கு ஒலிக்க வேண்டும்.. ஆனால்
இன்றைய சூழலில் சங்கொலியைக் கேட்டு விட்டால் நீதிமன்றத்தின் படிகளில் ஏறி விடுவர் - சிலர்...
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குசாரின் அண்ணா இன்று தான் அவர்கள் நாலுகால பூஜை செய்த படம் அனுப்பி இருந்தார்கள்.
பதிவில் சேர்க்க வேண்டும்.
//நாவுக்கரசு ஸ்வாமிகள் சொல்லியபடி வீடுகள் தோறும் ஊர்கள் தோறும் சங்கு ஒலிக்க வேண்டும்..//
நகரத்தார் வீடுகளில், வட நாட்டில் எல்லாம் நல்ல காரியங்கள் நடக்கும் போது சங்கு ஒலிக்க செய்வார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
உங்களின் மாமனார், கணவர் எல்லாரும் பூஜை செய்து வந்தது சிறப்பு அதுவும் மாமனார் நாலு கால பூஜையும் செய்தது சிறப்பு.
பதிலளிநீக்குமகனின் பனிலிங்கள் அற்புதம். வெங்கட்ஜி அவர்களின் தளத்தில் கேதார் தால் பதிவில் பனி சிகரம் மலையைப் பார்த்த போது நேரில் கைலாயம் தரிசனம் போன்று இருந்தது. அங்கு சிவன் ஏரியும் பார்த்தது மகிழ்ச்சி என்றால் உங்கள் பதிவிலும் கைலாய சிவனே பனி வடிவில் உங்கள் மகனின் கைவண்ணத்தில் லிங்கவடிவாய் வந்திருப்பதைக் கண்டு தரிசனம் பெற்றதாய் உணர்ந்தேன். நல்ல படைப்பாளி. அதுவும் நியூஜெர்சி லிங்கத்திற்கு மாலை போட்டு பூஜை என்று சிறப்பு.
நான் விரதம் இருந்து, ஒரு பூஜை வீட்டில் செய்து பின்னர் கோயிலுக்குச் செல்வது வழக்கம் அதுவேதான் இன்றும்.
பாகவதரின் பாடல் மிகவும் பிடித்த பாடல். சிறப்பான பதிவிற்கு மிக்க நன்றி.
துளசிதரன்
(அக்கா துளசி நேற்றே அனுப்பியிருந்தார். இன்றுதான் நான் இங்கு பதிகிறேன் உங்கள் பதிவை நேற்று பார்க்க விட்டுப் போனதால் - கீதா)
வணக்கம் சகோ துளசிதரன் , வாழ்க வளமுடன்
நீக்குமாம்னார் சிறு வயதிலிருந்து 103 வயது வரை சிவபூஜை செய்தார்கள். கடைசி இரண்டு வருடம் மாமா பூவை தொட்டு கொடுக்க அத்தை செய்வார்கள்.
105 வயது வரை இருந்தார்கள்.
கைலாயம் பனியால் மூடி இருக்கும். மாமனாரின் ஆசியால் அங்கும் சென்று தரிசனம் செய்து வந்தோம்.கேதார்நாத் கோயிலிலும் பனி நிறைய கொட்டி கிடந்தது பாகும் வழியை மட்டும் சுத்தம் செய்து கொண்டு இருந்தார்கள் நாங்கள் போன போது.
பனி உருகி ஓடி வரும் மலைகளை பார்த்தோம்.
மகனின் பனி லிங்கத்தை பாராட்டி கருத்து சொன்னது மகிழ்ச்சி.
//நான் விரதம் இருந்து, ஒரு பூஜை வீட்டில் செய்து பின்னர் கோயிலுக்குச் செல்வது வழக்கம் அதுவேதான் இன்றும்.//
நீங்கள் விரதம் இருந்து கோயிலுக்கு சென்று வந்தது மகிழ்ச்சி.
பாடல் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி துளசிதரன்.
கீதா , நேற்று இரவுதான் பதிவு போட்டேன்.
கோமதிக்கா நேத்து பாக்காம விட்டிருக்கேன்...பதிவு சிறப்பு. உங்கள் மாமானார் நாலு கால பூஜை வயதானபிறகும் செய்தது தெரிகிறது. அவர் செய்த நல்ல செயல்கள் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கும் அதற்கு அடுத்த தலைமுறை உங்கள் மகன் பேரன் என்று வந்திருக்கிறது இறைவனின் அருள்.
பதிலளிநீக்குமாமாவும் ஒரு கால பூஜை செய்து அதன் பின் நீங்கள் கோயில் சென்று வழிபட்டது எல்லாம் எத்தனை நல்ல விஷயங்கள். சிறப்பு
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குகீதா, நேற்று இரவுதான் பதிவு போட்டேன்.
வயதான போதும் காலை சிவ பூஜை செய்து விடுவார்கள். பூஜை அறையில் அவர்கள் நாற்காலியில் அமர்ந்து சிவ பூஜை செய்ய வசதியாக உயர மேடை அமைத்தார்கள்.
மாமா சிவபூஜை தீட்சை எடுக்கவில்லை, இருந்தாலும் காசியில் வாங்கி வந்த சிவ லிங்ககத்திற்கு அபிஷேகம் செய்து விடுவார்கள். நாலு காலத்திற்கு பிரசாதங்கள் வைத்து முதல் காலத்திலேயே வணங்கி விடுவோம்.
கோவிலில் போய் நாலு காலமும் பார்த்து இருக்கிறார்கள்.
மகன், பேரன் எல்லாம் சிறு வயதில் சிவலிங்ககத்திற்கு அபிஷேகம் செய்து விளையாடுவார்கள். இப்போது சிவன் ராத்திரி சமயம் பனி கொட்டுகிரது அப்போது அவனுக்கு சிவலிங்கம் செய்ய எண்ணம் வருகிறது.
மகன் செய்திருக்கும் பனி லிங்கம் வாவ்!! அருமையாகச் செய்திருக்கிறார். நியூஜெர்சி வீட்டில் செய்து மாலை அணிவித்து அது பிரமாதம் என்றால் அரிசோனாவில் பார்க்கில் செய்து அப்பெயர் கூட அருமை! நான் அது முதலில் பார்க்கின் பெயர் என்று நினைக்கவில்லை சிவனின் பெயரோ என்று கூட நினைத்தேன்! ரொம்ப அழகாகச் செய்திருக்கிறார். இயற்கை வடிவமாக அருமை. பேரனின் டைனோசர் அழகு நிஜமாகவே கவினுக்கும் நல்ல திறமை அப்பா தாத்தாவிடமிருந்து வந்திருக்கிறது 32 அடிக்கும் மேலே பாய்கிறார்!!(தொன்மாமிருகமா அதன் தமிழ்ப்பெயர் அட!!) ரசித்தேன் கோமதிக்கா.
பதிலளிநீக்குகருணாகரனே பாடல் ரொம்பப் பிடித்த பாடல் முன்பு அடிக்கடிப் பாடுவேன் இப்போது பாடுவதே குறைந்துவிட்டது தொண்டை ரொம்பப் படுத்துவதால் அதுவும் கொரோனா வந்து சென்ற பிறகு..
பதிவின் படங்கள் விவரணங்கள் எல்லாமே ரசித்தேன்
கீதா
மகனின் பனி லிங்கத்தை பாராட்டியதற்கு நன்றி.
நீக்குஅவனே வைத்த பேர்.
//டைனோசர் அழகு நிஜமாகவே கவினுக்கும் நல்ல திறமை அப்பா தாத்தாவிடமிருந்து வந்திருக்கிறது 32 அடிக்கும் மேலே பாய்கிறார்!!(தொன்மாமிருகமா அதன் தமிழ்ப்பெயர் அட!!) ரசித்தேன் கோமதிக்கா.//
பேரனின் டைனோசரை ரசித்தமைக்கு நன்றி. அவன் இதை படித்தால் மகிழ்வான்.
இப்போதும் குரல் நன்றாக இருக்கிறது ஒரு நாள் பாடி பதிவு போடுங்கள்.
அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.
படங்கள் அனைத்தும் சிறப்பு...
பதிலளிநீக்குகாணொளி பாடல் பரவசம்...
வண்க்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குபடங்களைரசித்து, பாடலை கேட்டு பரவசம் என்று கருத்து சொன்னதற்கு நன்றி.
அன்பின் கோமதிமா,
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
பதிவும் படங்களும் மிக மிக அருமை.
மாமனாரின் சிவபூஜை படங்கள் அத்தனையும் சிறப்பு.
எவ்வளவு பக்தி அம்மா!!! சர்வ உபகாரம் செய்து பூஜித்திருக்கிறார்.
அதைத் தங்கள் மச்சினரும் செய்வது இன்னும் மகிழ்ச்சி.
ஸாரின் படங்களும் அதற்கு ஏதுவாக
ஏற்பாடு செய்திருப்பதும் அருமை.
மனைவி ஒத்துழைத்தால் செய்ய முடியாதது என்ன இருக்கிறது!!
உங்கள் மகனும் முறை தவறாமல் பனி லிங்கம் செய்து விட்டார்,.
மீண்டும் வருகிறேன்..
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்கு//மாமனாரின் சிவபூஜை படங்கள் அத்தனையும் சிறப்பு.
எவ்வளவு பக்தி அம்மா!!! சர்வ உபகாரம் செய்து பூஜித்திருக்கிறார்.//
மாமா செய்த சிவபூஜை அருளால்தான் குடும்பம் வாழ்கிறது.
சாரின் அண்ணாவின் சிவபூஜை படம் இப்போது இணைத்து இருக்கிறேன்.
குடும்ப நலனுக்கு இப்போது மாமா போல பூஜையில் வேண்டிக் கொள்கிறார்கள் மச்சினரும்.
//ஸாரின் படங்களும் அதற்கு ஏதுவாக
ஏற்பாடு செய்திருப்பதும் அருமை.
மனைவி ஒத்துழைத்தால் செய்ய முடியாதது என்ன இருக்கிறது!!//
ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் எல்லாம் எடுத்து கொடுப்பேன்.
மகனும் சிவன் ராத்திரி சமயம் பனி பொழிவை பார்க்க போனதால் லிங்கம் செய்ய முடிந்தது.
உங்கள் கை வலியை பொறுத்துக் கொண்டு கருத்தை டைப் செய்து அனுப்பியதற்கு நன்றி அக்கா.
மகன் செய்த பனி லிங்கம் அருமை. சிவராத்திரிபற்றிய நினைவுகள் படங்கள் நன்று.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
படங்களும் தகவல்களும் சிறப்பு. குறிப்பாக பனிலிங்கம் மிக அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குஎம்.கே. டி. பாடலை கேட்டு ரசித்தேன்.
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குஎம்,கே.டியின் பாடலை கேட்டு ரசித்தமைக்கு நன்றி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.