ஞாயிறு, 20 மார்ச், 2022

மேகமலை பகுதி -3


மேகமலையும்  ஏரியும்

மேகமலை தொடர் பதிவு.
தங்கி இருந்த இடத்தில் தோட்டத்தில் உள்ள   மலர்களும், நடைபாதையில் பார்த்த மலர்களும்
தங்கி இருந்த இடத்தில் இருந்த பூந்தோட்டம்


ஊமத்தம் பூ போல


செடி இல்லை மரத்தில் பூத்து இருக்கும் பூ
அடுக்கு இல்லா செண்டு பூ

இட்லி பூ போல சின்னது

ரோஜா 
இலைகள் போல பூ இதழ்கள்


பறங்கிப் பூ போல

கனகாம்பரம் போல பூ
காட்டுச்  செடியிலும் அழகான பூ
காலை பனிதுளி இலையில், பூவில்

பென்சிலை சீவிய துகள்களில் பூ மாதிரி வருமே அது போன்ற தோற்றம் தரும்  பூ

மலரில் பனித்துளி


வெள்ளை சிவந்தி


நடந்து போகும் போது பாதையில் கண்ட பூ


கண்டங் கத்திரிக்காய் , காய் பழம் இரண்டும் இருக்கு. கீழ் கிளையில் காய் இருக்கிறது. கத்திரிப்பூ  கலரில் ஒளிந்து இருக்கிறது பூ.  பூக்கள் என்று போட்டு விட்டு காய் , பழம் என்று சொல்கிறாள் என்று நினைக்ககூடாது பாருங்க. பழம் அழகாய் இருந்தது படம்  எடுத்து விட்டேன் .

மேகமலை காட்சிகள்  இன்னும் வரும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்
------------------------------------------------------------------------------------------------------

21 கருத்துகள்:

 1. பூக்களின் படங்கள் யாவும் அழகு. எத்தனை வகையான மலர்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

   //பூக்களின் படங்கள் யாவும் அழகு. எத்தனை வகையான மலர்கள்..//

   நன்றி ஸ்ரீராம்.
   ஆமாம், அத்தனை வகை மலர்கள்!

   போகும் பாதையில் தரையில் பார்த்த சின்ன சின்ன மலர்களும் அழகாய் இருந்தது.
   மலர்கள் நிறைய வகை இருக்கிறது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

   நீக்கு
 2. மிகச் சமீபத்தில் கே ஜி ஜவர்லாலும் மேகமலை சென்றிருக்கிறார் என்பது அவர் பேஸ்புக் பதிவில் பார்த்தேன்.  உங்கள் நினைவு வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ அப்படியா! அவரும் உங்கள் மாமாவா?
   மேகமலை என்ற பேர் பார்த்ததும் என் நினைவு வந்து விட்டதா?
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. பூக்கள் படங்கள் அழகாக உள்ளன. படங்களை கொஞ்சம் சைஸ் (pixel) குறைத்து போட்டிருக்கலாம்.


  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம், ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
   படங்களை சைஸ் குறைத்து போட்டால் மேலும் மலரின் அழகு தெரியுமா செய்துவிடுகிறேன் சார்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. ஜெகே அண்ணா கோமதிக்கா படங்கள் பிக்சல் சரியாகத்தான் இருக்கிறது. 640 - 480 சரிதான்...

   நான் இதைவிடக் கொஞ்சம் கூடுதல் பிக்சலில் 900 x 675 போடுகிறேன். முன்பு 640 x 480 போடுவதுண்டு இப்போது 900....

   கீதா

   நீக்கு
 4. படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக தெளிவாக இருக்கிறது சகோ.

  பூக்களின் படங்களை காண்பது மனதுக்கு இதமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   //படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக தெளிவாக இருக்கிறது சகோ.//

   நன்றி.

   ஆமாம், பூக்களை பார்க்கும் போது மனதுக்கு இதம் கிடைப்பது உண்மை.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 5. கோமதிக்கா படங்கள் எல்லாம் மிக மிக அழகு. பூக்களும் மலையும் எல்லாமே அழகு. பனி மேகம் மூடிய மலைகள் வாவ்...

  காட்டுப் பூக்கள் கூட மிக அழகாகத்தான் இருக்கும்

  கனகாம்பரம் போல உள்ளது அழகான கலர் பொக்கே போல...சூப்பர்...

  படங்கள் தெளிவாக அழகாக இருக்கின்றன மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன

  ரசித்துப் பார்த்தேன் அக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
   மேகமும் மூடிய மலைகள் பார்க்க அழகு தான் கீதா.
   பூக்கள் படங்களை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

   கனகாம்பரம் போல உள்ள பூ தங்ககும் இடத்தில் வாசலி இரண்டு பக்கமும் நம்மை வரவேற்க மலர் செண்டை கையில் வைத்து கொண்டு இருப்பது போல நிற்கிறது.
   உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

   நீக்கு
 6. பூக்களின் படங்கள் அனைத்தும் அருமை. ஏரி அமைதியாகக் காட்சி அளிக்கிறது, சுற்றுவட்டாரமே நிசப்தமாக இருக்கும் போல. கண்டங்கத்திரிக்காய்க் கூட்டு, பொரிச்ச குழம்புனு நிறையச் சாப்பிட்டிருக்கேன். முன்னெல்லாம் மதுரைச் சந்தையிலேயே வந்து கொண்டிருந்தது. இப்போவும் கிடைக்குதானு தெரியலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   சுற்றுவட்டாரமே நிசப்தமாக த்தான் இருந்தது. நாங்கள் 10 போர் மட்டும் தான்.
   பறவைகளின் ஒலி மட்டுமே கேட்கும். அதனால் ஆலயத்திலிருந்து பாட்டு துல்லியமாக கேட்டது. சினிபாட்டு கேட்டுக் கொண்டு வேலை பார்க்க செய்து இருக்கும் ஏற்பாடு அருமை. மலை முழுவதும் அந்த சினிமா பாட்டல் ஒளிப்பதை கேட்க ஆனந்தமாக இருந்தது.

   கண்டங்கத்திரி செடியை நிறைய இடங்களில் பார்த்து இருக்கிறேன் சாப்பிட்டது இல்லை. மருத்துவ பயன்கள் அதிகம் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.

   மதுரைசந்தை போனது இல்லை.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 7. பூக்கள் அத்தனையும் கண்ணுக்கு நிறைவாய் அப்படி ஒரு அழகு! அதுவும் பரங்கிப்பூ போலவும் கனகாம்பரம் பூ போலவும் இருப்பவை மிக அழகு! இத்தனை வித்தியாசமான பூக்களை நான் இதுவரை ஒரு சேர கண்டதில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
   ஆமாம், நீங்கள் சொல்வது போல பூக்கள் எல்லாம் கண்ணுக்கு நிறைவாக இருந்தது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகுதான்.

   பரங்கிப்பூவை பக்கத்தில் போய் எடுக்க முடியவில்லை, தூரத்திலிருந்து எடுத்தேன்.நான் மேட்டில் அது பள்ளத்தில் இருந்தது.
   ஆமாம், நிறை வித்தியாசமான பூக்கள்தான் அங்கு இருந்தது.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. மேகமலை படங்கள் அனைத்தும் வெகு அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 9. அழகழகான பூக்களுடன் பதிவு அருமை..

  மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம்!.. என்று அந்த காலத்தில் துணிப் பைகளில் அச்சிடப்பட்டிருக்கும்..

  பல்வகைப் பூக்களின் அருகில் வாழ்ந்தவர்கள் நாம்...

  நலமே வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்


   //மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம்!.. என்று அந்த காலத்தில் துணிப் பைகளில் அச்சிடப்பட்டிருக்கும்..//

   ஆமாம்,மலர்ந்த முகமே அழகு அதை பார்த்து கொண்டு இருந்தால் வாழ்வில் கிடைக்கும் இன்பம்தான்.


   குழந்தைகள் சிரிப்பை மலரை போல சிரிப்பு என்போம்.

   இல்லத்தில் பல்வகை பூக்கள் மனைவி, கணவன், தாத்தா, பாட்டி என்று பல்வகைப் பூக்களுடன் வாழ்த்தவர்கள் என்று சொல்ல வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
   அருமையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 10. வண்ணவண்ணபூக்கள் மயக்குகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு