வியாழன், 24 மார்ச், 2022

இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்



 

அவரே நடித்து பாடியது "வா ராஜா வா" என்ற படத்தில் பாடியது.

அருமையான வரிகள். கேட்டு பாருங்கள்

இன்று இசையோடு நீங்கள் என்று நிகழ்ச்சி மதுரை ரெயின்போ  பண்பலையில்  கேட்டேன். சினேகிதி நேயர் விருப்பத்தில்.  ஒரு அம்மா இன்று சீர்காழி கோவிந்த ராஜன் அவர்களின் நினைவு நாள் என்றார்கள்.  அதனால்  இந்த பாடலை கேட்டார்கள். எனக்கு பிடித்து இருந்தது, அதனால் இந்த பகிர்வு.

//இசையால் அவனை இரங்க வைப்பது மனிதன் குணமாகும்
இசையால்  மயங்கி இரங்கி வருவது இறைவன் மனமாகும்//

இந்த பாட்டில் வரும் வரி அது போல அவர்  தன் பாடல் மூலம் இறைவனை இரங்கி வர வைத்தவர் தான்.

நெல்லை அருள் மணி அவர்கள் பாடலை இயற்றி இருக்கிறார். இசை குன்னக்குடி வைத்தியநாதன்  அவர்கள்.


சீர்காழி அவர்களின்  இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல். உங்களுக்கும் பிடிக்கும் .

படிக்காதமேதையில் வரும் இந்த பாரதியார் பாடல் கேட்கும் போது எல்லாம் கண்ணில் நீர் வந்து விடும் . ரங்காராவ் நடிப்பு, சிவாஜியின் நடிப்பு மற்றும்  இவரின் பாடல் மனதை  உருக்கும்.
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுக்கு நினைவு தின வணக்கங்கள்.

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு 

இந்த பாடலும் பிடித்த பாடல்.



டி.எம். எஸ் அவர்களுக்கு இன்று பிறந்த நாளாம்.

சீர்காழி கோவிந்த ராஜன் அவர்களும், டி.எம். எஸ் அவர்களும் சேர்ந்து பாடிய பாடல். அவர்களே நடித்து இருக்கிறார்கள். இருவரும் எவ்வளவு நல்ல நல்ல பாடல்களை  பாடி இருக்கிறார்கள். இவர்கள் பாடிய முருகன் பாடல்கள்  மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் பாடிய பாடல்கள் எல்லோர் இல்லங்களிலும் ஒலித்து கொண்டுதான் இருக்கிறது இன்றும்.
இருவருக்கும் வணக்கங்கள். 


இந்த பாடல்தான் டி.எம். எஸ் அவர்களுக்கு பிடித்த பாடல் என்று டி.எம்.எஸ் அவர்களின் மகன் சொன்னார் ஒரு நேர்காணல்  நிகழ்ச்சியில். ஒரே டேக்கில் பாடினராம்.


இந்த பாடல் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு முதன் முதலில் டி.எம். எஸ்  பாடியது (மலைகள்ளன் படத்தில்) என்று டி.எம்.எஸ் அவர்கள் மகன்  சொன்னர்.
"அதோ அந்த பறவை போல" பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும், பேரனும் நான் பாடுவதை கேட்டு பாடுவான்.

டி.எம்.எஸ் அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துகள்.

இருவரும் அவர்கள் பாடி பாடல்களில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் என்றும்.

இவர்கள் பாடிய  பாடல்களில் எனக்கு பிடித்த  நிறைய பாடல்கள் இருக்கிறது, இவர்கள் இருவர் பாடிய பாடல்களை    கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

உங்களுக்கு இவர்கள் இருவர் பாடியதில் என்ன பாடல்கள் பிடிக்கும் என்று சொல்லுங்கள்.



மீண்டும் இருவருக்கும் வணக்கம் சொல்லி கொள்கிறேன்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.
----------------------------------------------------------------------------------------------------

26 கருத்துகள்:

  1. அருமையான பதிவு. எல்லாப் பாடல்களுமே அடிக்கடி கேட்டு ரசித்த பதிவு. எங்கிருந்தோ வந்தான் பாடலை மறுபடி மறுபடி கேட்டேன். மற்றவையும் பிடித்தவை என்றாலும் இந்தப் பாடல் மட்டும் தனித்துவம் பெற்றது. பகிர்வுக்கு மிக்க நன்றி. முகநூலில் சீர்காழிக்கும்/டிஎமெஸ்ஸுக்கும் பிறந்தநாள் எனப் பதிவுகளில் சொல்லி இருந்தனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      எங்க்கிருந்தோ வந்தான் பாடலை நிறைய தடவை கேட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல். நீங்கள் சொல்வது போஅல் தனித்துவம் பெற்ற பாடல்தான்.
      சீர்காழி கோவிந்த ராஜன் அவர்களுக்கு ஜனவரி 19 அன்று தான் பிறந்த தினம், மார்ச் 24 ம் தேதி இறந்த தினம் என்று சொல்கிறது கூகுள்.

      மோகன் ஜி கூட இன்று டி.எம். எஸ் பிறந்த தின பதிவு போட்டு இருக்கிறார்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. அனைத்து பாடல்களையும் கேட்டேன். நான் விரும்பி கேட்கும் பாடல்கள்.

    இருவரும் இறந்தும் வாழ்கின்றனர் மக்கள் மனதில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      அனைத்து பாடல்களியயும் கேட்டது மகிழ்ச்சி.
      ஆமாம், நீங்கள் சொல்வது போல இருவரும் இறந்தும் வாழ்கின்றனர் மக்கள் மனதில்.
      இன்றும் பழைய இவர்கள் பாடலை விரும்பி கேடபது மகிழ்ச்சி அளிக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. சிறப்பான பாடல்கள்... சில பாடல்களை கேட்கும் போது என்னையும் அறியாமல் அழுகை பீறிட்டு வரும்... அவ்வகையில் ரங்காராவ் பாடலை கேட்டவுடன், மற்றொரு பாடல் மனதில் வந்து பாரமூட்டியது...

    முத்து முத்தாக... சொத்துக்கு சொத்தாக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது போல சில பாடல்கள் நம் மனதை உருக்கி அழுகை பீறிட்டு வரும் தான்.
      கண்ட்சாலா அவர்கள் பாடிய முத்துக்கு முத்தாக பாடல் ரங்கராவ் நடிப்பில் மிக அருமையாக இருக்கும்.
      எனக்கும் பிடித்த பாடல்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. சீர்காழி அவர்களின் தமிழும் குரலும் என்றும்
    மறக்க முடியாது.
    அவரின் அபிராமி அந்தாதி இன்னும் என்னிடம்.
    அபிராமி அன்னையே நேரில் வந்துவிடுவாள்.

    அவரின் மாட்டுக்கார வேலா எனக்கு மிகவும் பிடித்தது. எங்கிருந்தோ வந்தான் கேட்டாலே
    அழுது விடுவேன்.
    படிக்காத மேதை ரங்காராவின் நடிப்பு உச்சகட்டம்.
    எங்கிர்ந்தாலும் நன்றாக இருப்பார்.
    நன்றி அன்பின் கோமதி மா.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      அபிராமி அந்தாதி என்னிடமும் இருக்கிறது அக்கா.
      தேவன் கோயில் மணியோசை என்ற பாடல் எனக்கு பிடிக்கும் நான் பாடுவதை கேட்டு பேரனும் பாடுவான், என் மகனும் பாடுவான் அவனுக்கும் பிடித்த பாடல்.

      மாட்டுக்கார வேலா என்ற பாடலும் மிக் அருமையான பாடல்தான். நிறைய இருக்கிறது அவர் பாடல்கள் , சமரசம் உலவும் இடமே நம் வாழ்வில் சமரசம் உலவும் இடமே! பிடித்த பாடல். காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாரு இல்லை பிடிக்கும்.

      படிக்காத மேதையில் அவரின் நடிப்பு மிக அருமையாக இருக்கும்.

      அவருக்கு நகைச்சுவையும் வரும் சர்வர் சுந்தரத்தில் ""'நான் எடுப்பது தமிழ் படம் தமிழ் பேசும்மா" மனோரமாவிடம் சொல்லும் போது சிரிப்பாக இருக்கும்.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அக்கா.

      நீக்கு
    2. ஆமாம் கோமதிமா,
      வாழையடி வாழை படத்திலும், சர்வர் சுந்தரம் படத்திலும்
      அவர் காட்சிகளை விரும்பிப் பார்ப்பேன்.
      சீர்காழியின் பாடல்கள் அப்படியே உணர்ச்சியுடன் மசில் பதியும். மதுரை அரசாளும் மீனாட்சி
      பாடல் வந்த காலத்தில் சின்ன மகன் பிறந்திருந்தான்.
      நல்ல நினைவுகளோடு வரும் இந்தப் பாடல்கள்.
      நன்றி மா.

      நீக்கு
    3. ஆமாம் அக்கா, வாழையடி வாழையிலும் அவர் நகைச்சுவை வசத்தில் மிளிர்வார்.

      அரசாளும் மீனாட்சி பாடல் இனிமை.
      திருமலை தென்குமரி தொலைக்காட்சியில் போடு போது எல்லாம் பார்த்துவிடுவேன்.
      மீண்டும் வந்து சொன்னதற்கு நன்றி அக்கா.

      நீக்கு
  5. டி எம் எஸ் சும் சீர்காழியும் பாடிய திருச்செந்தூரில்
    கடலோரத்தில் எங்கள் குடும்பத்துக்கே
    பிடித்த பாடல்.
    திரு சௌந்திர ராஜனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பாடகர்களுக்குப் பாட்டுகளாலயே வாழ்த்துகள் சொன்ன விதம்
    அருமை.
    டி எம் எஸ்ஸுக்கு அமைந்த பாடல்கள்
    அனைத்துமே இனிமை. அவர் பாடுவதை வைத்தே
    யாருக்காகப் பாடுகிறார் என்று சொல்லி விட முடியும்.
    அதிசய மனிதர்கள் . இவர்கள் காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறோம்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ////டி எம் எஸ் சும் சீர்காழியும் பாடிய திருச்செந்தூரில்
      கடலோரத்தில் எங்கள் குடும்பத்துக்கே
      பிடித்த பாடல்.//

      அருமையான் பாடல் கந்த சஷ்டி சமயம் வானொலி, தொலைக்காட்சி எல்லாம் அந்த பாடலை போட்டு விடுவார்கள்.

      //திரு சௌந்திர ராஜனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.

      பாடகர்களுக்குப் பாட்டுகளாலயே வாழ்த்துகள் சொன்ன விதம்
      அருமை.//

      நன்றி அக்கா.

      எல்லா நடிகர்களுக்கும் பாடி இருக்கிறார். அவர்கள் அதனால் புகழ் பெற்றார்கள்.

      //அதிசய மனிதர்கள் . இவர்கள் காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறோம்.//

      ஆமாம் அக்கா அவர்கள் காலத்தில் நாமும் வாழ்ந்து இருக்கிறோம் என்பதே மகிழ்ச்சியான விஷ்யம் தான் அவர்கள் பாடல்களை பொருட்காட்சிகளில் நேரில் கேட்டு இருக்கிறேன் சிறு வயதில்.

      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.



      நீக்கு
  6. எனக்கும் இருவரும் இனைந்து பாடிய தெய்வம் படப்பாடல், ராமு படப்பாடல் நினைவுக்கு வந்தது.  அவர்கள் எல்லாம் கடவுள் அனுப்பி வைத்த கொடைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      அகத்தியர் படத்தில் போட்டி பாடல் நினைவுக்கு வரவில்லையா?
      அதில் அகத்தியாராக நடித்த சீர்காழி ஜெயித்து விடுவார், இராவணன் தோற்று விடுவார் . போட்டி பொறாமை எல்லாம் இல்லாமல் பாடிய பாடல்கள். காலத்தால் அழியாதை நீங்கள் சொன்னது போல இறைவன் அனுப்பிய அருட் கொடைகள் தான் இருவரும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. அனைத்துப் பாடல்களும் பிடிக்கும், பிடித்தது.

    பிடிக்காத்து, அவர்களின் பாடல்களில் எனக்குப் பிடித்தது எவை என்று தேடுவது. இருந்தாலும் சின்னஞ்சிறு பெண்போலே, நினைத்த போது நீ வர வேண்டும், உள்ளம் உருகுதய்யா.... என்று பெரிய லிஸ்ட் உண்டு. கர்ணன் படப் பாடல்களைப் பிடிக்காதவரை இனித்தான் கண்டுபிடிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      அனைத்து பாடல்களும் உங்களுக்கு பிடித்தது என்று அறியும் போது மகிழ்ச்சி.
      சின்ன்ஞ்சிறு பெண்போலே , நினைத்த போது நீ வர வேண்டும், உள்ளம் உருகுதய்யா எல்லாம் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். திருவெண்காடு துர்க்கை அம்மனை அலங்காரம் செய்தபின் பார்த்தால் சின்ன்ஞ்சிறு பெண் போல சித்தாடை உடுத்தி இருப்பது போலவே இருப்பார் இடை சிக் என்று இருக்கும்.
      இருவர் பிடித்த பாடல் பெரிய லிஸ்ட் இருக்கும் தான்.

      கர்ணன் படப் பாடல்களை எல்லோருக்கும் பிடிக்கும் தான் நீங்கள் சொன்னது பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி நெல்லை.

      நீக்கு
  8. கோமதிக்கா ஹையோ முத்தான பாடல்கள் அனைத்தும். முதல் பாடல் செமையான பாடல்.

    சில கேட்கும் போது மனம் பாரமாக ஆகிவிடும். எனவே தற்போது கூடியவரை வருத்தமான பாடல்கள் இசை கேட்பதில்லை கோமதிக்கா. அது மனதை எங்கேயோ கொண்டு செல்கிறது. எனவே பக்திப் பாடல்கள் அலல்து ஜாலியான திரைப்பாடல்கள்தான்...

    இறைவன் படைத்த உலகை மனிதன் ஆள்கின்றான்//

    நிஜமாகவே மனிதன் ஆண்டு நாசமாக்கிக் கொண்டிருக்கிறான். இறைவன் எதற்கடா படைத்தோம் என்று தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார் இந்த மனிதனை என்ன செய்யலாம் என்று!!! அதனால்தான் இயற்கை தன் சித்துவிளையாட்டைக் காட்டி வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      முதல் பாடல் கேட்டு வெகு காலம் ஆச்சு.
      அந்த பெண் விரும்பி கேட்டதால் நானும் கேட்டதால்தான் இந்த பகிர்வே!

      எங்கே நிம்மதி பாட்டு மிகவும் கஷ்டபட்டு பாடியது அப்பா என்றும் அவருக்கு பிடித்த பாடல் என்றும் அவர் மகன் சொன்னார். அதனால் டி.எம். எஸ் அவர்களுக்கு என்று அந்த பாடல் பகிர்வு.


      இயற்கையும் இறைவனும் ஒன்றே! எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எப்போது எது செய்ய வேண்டுமோ அது நடத்துகிறார்.

      உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    நலமா? எப்படி இருக்கிறீர்கள்? பதிவு அருமையாக உள்ளது. தொடர்ந்து வந்த தங்களின் பதிவுகளுக்கு உடனுக்குடன் வர இயலவில்லை.வருந்துகிறேன். ஆனாலும், நடுவில் இப்படி வருகிறேன்.

    அனைத்துப் பாடல்களையும் கேட்டேன். சிறந்த பாடல்களை பதிவு செய்துள்ளீர்கள். எஸ். வி ரங்காராவின் நடிப்பும், திரைப்பட பாடல்களும் எனக்கும் பிடித்தமானது. டி.எம்.எஸ், மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இருவரின் திரை இசை பாடல்களும், தனிப்பட்ட பக்தி பாடல்களும் என்றுமே மறக்க முடியாதது. இன்று, நீங்கள், சகோதரி வல்லிசிம்ஹன், மற்றும் எ.பியிலும் ஒரே மாதிரி மறக்கவியலாத இவ்விரு பாடகர்களின் சாதனைகளைப் பற்றி எழுதியிருப்பதை படிக்க மனதுக்கு நிறைவாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      நலமாக இருக்கிறேன். இப்போது கால்வலி தேவலை.
      முடிந்த போது வாங்க, மகன் இருக்கும் வரை அவருடன் பேசி கொண்டு இருங்கள்.
      அனைத்தௌ பாடலகளியயும் கேட்டது மகிழ்ச்சி.

      //எஸ். வி ரங்காராவின் நடிப்பும், திரைப்பட பாடல்களும் எனக்கும் பிடித்தமானது.//

      அவரின் குணசித்திர நடிப்பு மிக அருமையாக இருக்கும்.
      டி.எம்.எஸ், மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இருவரும் பாடிய பாடல்களை மறக்க முடியாது. காலத்தை வென்றவர்கள் என்றும் வாழ்பவர்கள்.
      எல்லோருக்கும் எண்ணம் ஒன்று போல தோன்ற காரணம் அவர் நினைவுகளை போற்றுவதால்.

      அவர்கள் பாடல்களை தினம் கேட்டுக் கொண்டே இருப்போம் வானொலி மற்றும் டேப் ரிக்காட்டில் இப்போதும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம் யூடியூப்பில்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. ஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுக்கும் ஸ்ரீ சௌந்தர ராஜன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வணக்கங்கள்..

    இசையால் தமிழால் நம்மை மகிழ்வித்த அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்


      //இசையால் தமிழால் நம்மை மகிழ்வித்த அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்....

      ஆமாம். அவர்களுக்கு நன்றிகள் பல.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  11. இரண்டு பேரின் குரலிலும் எத்தனை எத்தனை முத்தான பாடல்கள் கேட்டு ரசித்து இருக்கிறோம். இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள். கிடைத்திருக்கும் பாடல்கள் அனைத்துமே அருமை. ஒவ்வொன்றாக மீண்டும் ஒரு முறை கேட்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      ஆமாம், இரண்டு பேரும் பாடியது முத்தான பாடல்கள்தான்.

      மீண்டும், மீண்டும் கேட்டு மகிழ்வோம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. இனிய பாடல்கள் பல தந்த இருவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      ஆமாம், இனிய பாடல்கள் பல தந்த இருவ்வருக்கும் வாழ்த்துகள் சொல்லி கொண்டே இருக்கலாம். உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு