வியாழன், 9 டிசம்பர், 2021

கிறிஸ்மஸ் வரும் பின்னே ! ஓளித்திருவிழா வரும் முன்னே!


புத்தகம் விற்கும் கடைக்கு பக்கம்  மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம்.

கிறிஸ்மஸ் வருமுன் கடைகள், வீடுகளில் விளக்கு அலங்காரங்கள் ஆரம்பித்து விட்டது. அக்டோபர் முதல் வாரத்திலிருந்தே கடைகளில் கிறிஸ்மஸ் விற்பனைகள் (பரிசு பொருட்கள் விற்பனை) அமோகமாக நடக்குமாம். நன்றி சொல்லும் நாளிலும் நிறைய விற்பனையாகும் இந்த மாதிரி பொருட்கள். ஏசு பிறப்பு  குடில்  அமைப்புகள் வித விதமாக  இருக்கும். வீடுகளில் மிக அழகாய் ஏசு பிறப்பு குடில் அமைக்கப்படும். மகன் வீடிலும் ஏசுபிறப்பு குடில் அமைப்பான்.
 
டிசம்பர் முதல் வாரத்திலிருந்து இந்த ஊரில் ஒளித்திருவிழா ஆரம்பித்து விட்டது. ஜனவரி புத்தாண்டு வரை இந்த ஒளித் திருவிழா நடைபெறும்.
  அலங்கார விளக்குகளை பார்க்க  சில இடங்களுக்கு


மகள் அழைத்து போனாள். நான் பார்த்த காட்சிகள் இந்த பதிவில்.



புத்தகம் வாங்கும் கடைக்கு அழைத்து போனாள். அந்த கடைக்கு பக்கத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த கிறிஸ்மஸ் மரம்
மேலே உள்ள  மூன்று படங்கள் புத்தககடை பக்கம் எடுத்தவை

இந்த வளாகத்தில் எடுத்த சில படங்கள் கீழே

தேவாலயம்

இலைகளை உதிர்த்த மரம் விளக்குகளால்  அழகானது


விளக்குகம்பம்  வெளிச்சம்  நிலா வெளிச்சம் போல காட்சி அளிக்கிறது 

Conyers எனும் இடத்தில்  உள்ள பழைய காலத்து ரயில் நிற்கும் இடத்தில் விளக்கு அலங்காரம்
ரயிலை பகலில் எடுத்த படம் இன்னொரு பதிவாக போட வேண்டும்


Conyers  கடை வீதி

விடுமுறை நாள் என்பதால் கடைகள் இல்லை







காரில் வரும் போது எடுத்த படம்

மகள் வீட்டுக்கு அருகில் ஒரு வீட்டில் வைத்து இருந்ததை காரில் வரும் போது எடுத்த படம்.
ஒரு கடை வாசலில் வைத்து இருந்தார்கள்



வீட்டு வாசலில் அலங்காரமாக வைக்க விற்கப்படும் பொருட்கள்
இரவு

பகல்

மகள் வீட்டில்
 
இங்கு எல்லோர் வீடுகளிலும் கிறிஸ்மஸ் அலங்காரம் செய்வார்கள்  மகனும் வைப்பான், அங்கு போனபின் மகன் வீட்டு கிறிஸ்மஸ் அலங்காரம் படம் போடுகிறேன்.

மகள் வீட்டில்

மகள் வீட்டு பால்கனி
வெளிபக்கம் இருந்து இரவு எடுத்தேன் மகள் வீடு.

காமிராவில் எடுக்கவில்லை எல்லாபடங்களும் அலைபேசியில் தான்.

கிறிஸ்மஸ் என்றால் கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமலா? அவர் பின்னால் வருவார். எல்லோருக்கும் பரிசு பொருட்கள் எடுத்து வருகிறார். குளிர் வேறு அதனால் கொஞ்சம் மெதுவாக வருவார். கிறிஸ்மஸ்  வரும் முன் வந்து விடுவார்.
குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------

37 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    கிறிஸ்துமஸ் ஒளித்திருவிழாவின் பதிவு அருமையாக உள்ளது.

    வழக்கம் போல் படங்களை மிக அழகாக எடுத்துள்ளீர்கள். முதல் படம் கிறிஸ்துமஸ் மரம் இருபக்கமும் தோரணங்களைப் போல கலர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிக அழகாக உள்ளது.

    அந்த வளாகத்தில் எடுக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரமும் அழகாக உள்ளது. இலையுதிர்த்த மரங்கள் ஒரு மயில் தன் தோகையை அலங்கரித்த மாதிரி காட்சி தருகிறது. அதன் கீழுள்ள மரம் வெண்சாமரம் மாதிரி உள்ளது. அந்த மரத்தின் அலங்கார படங்கள் இரண்டும் அற்புதமாக இருக்கிறது.

    மக்களின் சந்தடியற்ற கடைவீதி கூட, அலங்கார விளக்குகள் துணையாக இருப்பதே எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என சந்தோஷமாக இருட்டுடன் மெளனமாக பேசியவாறு இருப்பதாக தோன்றுகிறது.

    காரில் வரும் போது எடுத்தப்படங்களும், அருகிலுள்ள வீடுகளின் கிறிஸ்துமஸ் மர அலங்காரங்களும், தங்கள் மகள் வீட்டின் ஒளி அலங்காரங்களும் அழகாக உள்ளது. இருள் சூழ்ந்த பொழுது படங்கள் எடுத்துள்ளதால், அலைபேசியில் எடுத்த படங்களே அவ்வளவு அழகாக இருக்கிறது.

    மேலும் கிறிஸ்துமஸ் தாத்தா வந்ததும் தங்கள் பதிவிலும் அவசியம் வருவார் என நினைக்கிறேன்.அனைவருக்கும் வரப்போகும் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள். அழகான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //கிறிஸ்துமஸ் ஒளித்திருவிழாவின் பதிவு அருமையாக உள்ளது.
      வழக்கம் போல் படங்களை மிக அழகாக எடுத்துள்ளீர்கள்.//

      நன்றி.

      //அந்த வளாகத்தில் எடுக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரமும் அழகாக உள்ளது. இலையுதிர்த்த மரங்கள் ஒரு மயில் தன் தோகையை அலங்கரித்த மாதிரி காட்சி தருகிறது. அதன் கீழுள்ள மரம் வெண்சாமரம் மாதிரி உள்ளது. அந்த மரத்தின் அலங்கார படங்கள் இரண்டும் அற்புதமாக இருக்கிறது.//

      படங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து மிக அழகான அருமையாக கருத்து பகிர்வு.

      உங்கள் வாழ்த்துக்களுக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி .

      நீக்கு
  2. கோமதிக்கா மாலை வணக்கம்.

    படங்கள் அட்டகாசம். இரவுப் படங்கள் விளக்கு அலங்காரங்கள் செம.

    இரவுப் படங்கள் மிக துல்லியமாக வந்திருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //படங்கள் அட்டகாசம். இரவுப் படங்கள் விளக்கு அலங்காரங்கள் செம.

      இரவுப் படங்கள் மிக துல்லியமாக வந்திருக்கின்றன./

      நன்றி கீதா.

      நீக்கு
  3. தேவாலயம் படம் செம அழகு...அதே போன்று கீழே ராக்டேல் கவுன்டி அதன் முகப்பும் பக்கவாட்டு படங்கள் செம..ரொம்ப க்ளியர் அண்ட் மனதைக் கவர்கிறது.

    காரிலிருந்து எடுத்தவையும் ஷேக் ஆகாமல் அழகா வந்திருக்கு கோமதிக்கா.

    மகள் வீட்டு அலங்காரங்களும் நன்றாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை எல்லாம் ரசித்து பார்த்து காருத்து சொன்னதற்கு நன்றி கீதா
      படங்கள் உங்கள் மனதை கவர்ந்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.
      மகள் வீட்டு அலங்காரங்களை பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  4. அங்கு கிறிஸ்துமஸ் அவர்களுக்கு மிகப் பெரிய திருவிழா. விடுமுறைதான் பெரும்பாலும். எல்லோரும் அப்படி மகிழ்வாகக் கொண்டாடுவார்கள். அலங்காரங்களும் சரி, விழாவையும் ரொம்ப அனுபவித்துக் கொண்டாடுவார்கள். பொதுவாகவே மக்கள் ஒவ்வொன்றையும் ரசித்துச் செய்வதைப் பார்த்திருக்கிறேன். உங்கள் படங்களிலும் அவர்களின் ரசனையும், உங்கள் ரசனையும் எப்போதும் போல் வெளிப்படுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். விழாக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். மகிழவாய் இருக்கிறார்கள். கஷ்டபடுபவர்களுக்கு இந்த மாதம் தொடங்கி ஜனவரி வரை எல்லோருக்கும் உணவு வழங்குகிறார்கள். பரிசு பொருட்கள் கொடுக்கிறார்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள்.

      உங்கள் ரசனையான கருத்தும் அருமை கீதா.

      நீக்கு
  5. இரவு பகல் கிறிஸ்துமஸ் மரம் அலங்காரப் படங்கள் இரண்டுமே செம க்யூட்.

    கடை வாசலில் வைத்திருந்த அலங்காரம், மான்கள் எல்லாமே ஒளிர்கின்றன.

    மிக அழகாக எடுத்திருக்கீங்க கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரவு , பகல் எடுத்த கிறிஸ்துமஸ் மரம் பிடித்து இருக்கா? மகிழ்ச்சி.
      கடவாசலில் எடுத்த படங்களில் மான்கள் எனக்கு பிடித்து இருந்தது.
      நிறைய வீடுகளில் வாசலில் வைத்து இருக்கிறார்கள்.

      நீக்கு
  6. அனைத்துப் படங்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்து ரசித்தேன்.

    பனி பொழிவினால் சாலைகள் ஈரமாக இருக்கிறதோ? அல்லது விளக்கு வெளிச்சத்தில்?

    அங்கும் சாலைகளில் ரிப்பேர் வொர்க் நம்மூர் போன்று ஒட்டுத் தையல் போடுவது போல் போட்டு நிரப்பிச் சரிசெய்திருப்பது தெரிகிறது. அல்லது ரோடு கீரல் விழுகிறதோ? முதல் தடவையாகப் பார்க்கிறேன் இப்படி. விடுமுறை நாள் அதனால் கடைகள் இல்லை என்று இருக்கும் மேல் கீழ் படங்களில் தெரிவதை வைத்துச் சொல்கிறேன், அக்கா. பொதுவாக இப்படி இல்லாமல் ரிப்பேர் செய்தாலும் கூட எல்லாமே சமமாக ரிப்பேர் செய்ததே தெரியாத மாதிரி தற்காலிக நிரப்பல் இல்லாமல் முழுமையாக இருக்கும்.

    என் கேமராவில் நைட் ஷாட் சரியாக வருவதில்லை. மிகவும் சாதாரண கேமராதான் இருந்தாலும் கூகுள் செய்து இவ்வகை மாடலில் எப்படி எடுக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டிருக்கிறேன்.

    எல்லாப் படங்களும் மிக மிக ரசித்தேன் கோமதிக்கா.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்துப் படங்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்து ரசித்தேன்./

      ரசித்து பார்த்தற்கு நன்றி.



      //பனி பொழிவினால் சாலைகள் ஈரமாக இருக்கிறதோ? அல்லது விளக்கு வெளிச்சத்தில்?//

      பனி பொழிவு இல்லை, அன்று நல்ல மழை. நாங்கள் போய் பார்த்த போது சாரல் மழை போல் பெய்து கொண்டு இருந்தது.

      பழைய காலத்து இடம் அது. தார் ரோடு தான். முன்பு இந்த இடத்தை ஒரு பதிவு போட்டு இருந்தேன் இலையுதிர் கால விழாவிற்கு. கடைகள் எல்லாம் போட்டு இருந்தார்கள் திருவிழா கடை போல.

      காமிராவில் எடுக்கவில்லை, எல்லாம் அலை பேசியில் எடுத்த படம். நான் ஆட்டோ மோடிலில் வைத்து தான் எடுக்கிறேன், இரவு பகல் என்று கூட மாற்றுவது இல்லை.

      ஏதோ எனக்கு தெரிந்தது போல் எடுக்கிறேன். கற்று கொள்ளவில்லை. உங்கள் கற்றுக் கொள்ளும் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்.

      அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  7. நம்மூரிலும் கிறிஸ்துமஸ் நெருங்கும்போது ஒளி அலங்காரங்கள் செய்வார்கள் எனினும் இவ்வளவு, விஸ்தாரமாக, பெரிதாக, வரிசையாக எல்லா இடங்களிலும் பார்க்க முடியாது.  அங்கு நாடளவில் கொண்டாட்டங்கள் தொடங்கி விடுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      நம்மூரில் அந்த காலத்தில் ஸ்டார் தான் வித விதமாக முன்பு. இப்போது அங்க்கும் விளக்கு அலங்காரம் வந்து விட்டது. என் அண்ணன் சிறு வயதில் மூங்கில் வாங்கி வந்து சீவி அழகான ஸ்டார் செய்வார்கள், ஜனவரி 1ம் தேதி வீட்டு வாசலில் மாட்டுவார்கள் தை பொங்கல் வரை இருக்கும் எங்கள் வீட்டில் .

      இங்கு அவர்கள் பெரிய பண்டிகை கிறிஸ்துமஸ், மற்றும் புதுவருடம். அதனால் விஸ்தாரமாக செய்கிறார்கள். வீட்டுக்கு வீடு கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடவும் வருவார்கள்.

      நீக்கு
  8. எப்போதும் போல கூம்பாய் கும்பாச்சியாய் இருக்கும் வழக்கமான மர  வகைகளைவிட வித்தியாசமான கற்பனையில் இருக்கும் சில கவர்கின்றன.  ஒன்றையே பார்த்து அலுத்து விடும் கண்களுக்கு மாறுதல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2017ல் போய் இருந்த போது மிருககாட்சி சாலையில் இந்த ஓளித்திருவிழா போய் பார்த்து வந்த பதிவு போட்டு இருந்தேன் ஸ்ரீராம். மிகவும் வித்தியாசமான முறையில் அலங்காரங்கள் செய்து இருந்தார்கள். இங்கும் அப்படி இருக்கிறது. மகள் அழைத்து போகிறேன் என்றாள் நான் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.

      மாறுதலாக இருப்பதால் பார்க்க ஆர்வம் ஏற்படும் எனபது உண்மைதான்.

      நீக்கு
  9. நம் ஊரில் சில இடங்களில் இப்படி இருக்கலாம்.  ஆனால் நான் பெரும்பாலும் பார்ப்பது வீட்டுக்கு வீடு ஒரு ஸ்டார் போல இருக்கும், தொங்கவிடப்பட்டிருக்கும் அலங்காரம்தான்!

    பதிலளிநீக்கு
  10. காரில் வரும்போது எடுக்கப்பட்டிருக்கும் படங்கள் மிக அழகாய் இருக்கின்றன.  வீடுகள் வண்ணமயமாய் ஜொலிக்கின்றன.  நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும் காட்சி பார்க்க ரம்மியமாய் தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரில் வரும் போது இரண்டு பக்கமும் வீடுகளில் மிக அலங்காரமாக வைத்து இருந்தார்கள் என் பக்கம் உள்ள ஜன்னல் வழியாக முடிந்தவைகளை எடுத்தேன்.
      நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. கிறிஸ்துமஸ் ஊர்வலங்கள் உண்டு ஞாயிறு அன்று நடந்ததாம் மதியம் . அதற்கு போக முடியவில்லை, வித விதமாக அலங்கரிந்து கொண்டு வருவார்கள்.
      நீங்கள் சொல்வது போல வீடுகள் வண்ணமயமாய் ஜொலிக்கும் போது பார்க்க ரம்மியமாய் இருக்கிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. படங்கள் எல்லாமே ஒளி மயமாக மிக ரம்மியமாக இருக்கின்றன. நேர்த்தியாகவும் எடுத்திருக்கிறீர்கள். மேலை நாடுகளில் கிறிஸ்துமஸ் என்பது நம் நாட்டின் தீபாவளி, ஓணம் போன்று விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.

    சில ஆங்கிலப் படங்களில் இப்படியான காட்சிகள் பார்த்திருக்கிறேன். நீங்கள் எடுத்திருப்பதும் அப்படி மிகவும் தெளிவாக நன்றாக இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //படங்கள் எல்லாமே ஒளி மயமாக மிக ரம்மியமாக இருக்கின்றன. நேர்த்தியாகவும் எடுத்திருக்கிறீர்கள்//

      நன்றி .


      //மேலை நாடுகளில் கிறிஸ்துமஸ் என்பது நம் நாட்டின் தீபாவளி, ஓணம் போன்று விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.//

      ஆமாம். உற்சாகமான பண்டிகைதான். ஏசுவின் வரவு மகிழ்ச்சியை தருகிறது அனைவருக்கும்.

      நானும் ஆங்கில படங்களை பார்த்து இருக்கிறேன். அக்கம் பக்கத்தில் கிறிஸ்துவ நண்பர்கள் வீடுகளில் குடில் அமைத்து. மரம் வைத்து விளக்கு அலங்காரம் செய்து இருப்பதையும் பார்த்து இருக்கிறேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி .


      நீக்கு
  12. அலங்கார விளக்குகள் மிகவும் அழகாக இருக்கிறது சகோ.

    படங்கள் எல்லாமே சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //அலங்கார விளக்குகள் மிகவும் அழகாக இருக்கிறது சகோ.

      படங்கள் எல்லாமே சிறப்பு//

      படங்களை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  13. கொண்டாட்டம் எப்படி என்று படங்கள் அழகாக சொல்கின்றன... அருமை.,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //கொண்டாட்டம் எப்படி என்று படங்கள் அழகாக சொல்கின்றன... அருமை//


      நான் பார்த்த காட்சிகள் எல்லாம். ஊர் முழுவதும் மிக அழகான விளக்கு அலங்காரங்கள் இருக்கிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. நாம் வருடம் முழுவதும் செலவழித்துக் கொண்டாடும் பண்டிகைகளுக்கான கொண்டாட்டங்கள் அவர்களுக்கு ஒரே பண்டிகை கிறிஸ்துமஸில் வந்து விடுமோ என நினைக்கும் அளவுக்குக் கொண்டாட்டங்கள் இருக்கும். எங்கும் ஒளிமயம் தான்.கூடுதலாக ஹூஸ்டனில் தீபாவளிக்கே ஆரம்பிக்கும் வண்ண விளக்கு அலங்காரங்கள் அப்படியே புத்தாண்டு வரை நீடிக்கும். அந்தக் கும்மிருட்டில் விளக்குகளின் ஒளி அலங்காரங்கள் பார்க்கவே அழகு தான். இரவு/பகல் வித்தியாசமான ஒளி அலங்காரமும் நன்றாக உள்ளது. உங்கள் மகளும் அழகாய் அலங்கரித்திருக்கிறார். கிறிஸ்துமஸ் தாத்தாவின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அங்கே கிறிஸ்துமஸ் சம்பந்தப்பட்ட பல படங்களும் ஒரு சில மால்களில் காட்டுவார்கள். எல்லாமே நன்றாக இருக்கும். கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் படம் எடுத்துக்கொள்ளப் போட்டி போடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வனகம் கோதா சாமசிவம் வாழ்க வளமுடன்
      துர்கா குட்டி வந்து விட்டார் உங்களுக்கு கிறிஸ்துமஸ் விடுமுரையில் , பாட்டி தாத்தாவிற்கு மகிழ்ச்சியான தருணங்கள் இனி.
      நேற்று மகன் வீட்டுக்கு வந்தேன். இன்றுதான் தான் பின்னூட்டம் பார்த்தேன்.

      //ஒரே பண்டிகை கிறிஸ்துமஸில் வந்து விடுமோ என நினைக்கும் அளவுக்குக் கொண்டாட்டங்கள் இருக்கும். எங்கும் ஒளிமயம் தான்.கூடுதலாக ஹூஸ்டனில் தீபாவளிக்கே ஆரம்பிக்கும் வண்ண விளக்கு அலங்காரங்கள் அப்படியே புத்தாண்டு வரை நீடிக்கும்.//

      ஆமாம், இங்கும் அது போல சில இடங்களில் முன்பே விளக்கு அலங்காரம் இருக்கிறது.

      //கிறிஸ்துமஸ் தாத்தாவின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அங்கே கிறிஸ்துமஸ் சம்பந்தப்பட்ட பல படங்களும் ஒரு சில மால்களில் காட்டுவார்கள்.//

      எதிர்ப்பார்ப்புக்கு நன்றி.
      இங்கும் அப்படித்தான் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் படங்கள் எடுப்பார்கள் , நாங்களும் எடுத்து இருக்கிறோம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.




      நீக்கு
  15. படங்கள் எல்லாமே மிகவும் துல்லியமாகவும், தெளிவாகவும், அழகாகவும் இருக்கின்றன. கடைவீதி கவர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன் வாழ்க வளமுடன்

      படங்களை எல்லாம் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  16. விழாவிற்கான ஆயத்தங்கள் அழகு..
    விளக்கு அலங்காரங்கள் மனதைக் கவர்கின்றன..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      ஊருக்கு வந்து விட்டீர்கள் . மகிழ்ச்சியாக குடும்பத்தினர்களுடன் நேரங்கள் போகும்.

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  17. கிறிஸ்மஸ் அலங்காரங்கப் படங்கள் நன்று.

    உங்கள் மகள் வீட்டு அலங்காரம் அழகு. இங்கும் மகள் வீட்டில் வைத்துள்ளாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் மகள் வீட்டிலும் அலங்காரங்கல் வைத்து இருப்பது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. பதில்கள்
    1. வணக்கம் சதீஸ் முத்து கோபால் , வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. கிறிஸ்துமஸ் ஒளித்திருவிழாவின் காட்சிகள் அனைத்தும் மனதை கவர்கின்றன மா ...அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு