ரோஜா தோட்டத்து கதை
தோட்டத்து நிழலில் அமர்ந்து பேசி புகைபடங்கள் எடுக்கலாம்
அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்" என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அங்கு பார்த்தவைகளைப் பற்றி தொடர் பதிவாக பகிர்ந்து வருகிறேன்.
இந்த பதிவில் அங்கு பார்த்த மிக பழமையான ரோஜா தோட்டம் பற்றிய பகிர்வு. உலகின் மிக பெரிய ரோஜா தோட்டம். லேடி பாங்க்சியா ரோஸ் செடி 1885 ஆம ஆண்டில் ஸ்காட்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டு இந்த வீட்டின் பின் புறத்தில் நடப்பட்டது. உலகின் மிகப் பெரியதாக அளவிடப்பட்டு இருப்பது இந்த தோட்டத்தின் சிறப்பு. இந்த இடம் 8000 சதுர அடியாம். இந்த தோட்டம் "ஷேடி லேடி" என்று செல்லபெயர் பெற்று இருக்கிறது. ரோஜாத் தோட்ட மியூசியம் பார்க்க கட்டணம் உண்டு.