வெள்ளி, 3 செப்டம்பர், 2021

Casa Grande Ruins (காசா கிராண்டே)13 ஆம் நூற்றாண்டின்  முற்பகுதியில் கிலா பள்ளத்தாக்கில் விவசாயம் செய்த ஹோஹோகாம்  காலத்தின் பண்டைய    கால மக்களால் கட்டப்பட்ட பெரிய கட்டிடம்.  இந்த கட்டிடம்  சோனாரன்  பாலைவன மக்கள் விவசாய செய்யும் மக்கள் கூடும் பெரிய வீடாக இருந்து இருக்கிறது.

மிக பெரிய கட்டிட அமைப்பு கொண்ட பெரிய வீட்டை குறிக்கும் ஸ்பானிஷ் மொழி  காசா கிராண்டே .


1450 ம் ஆண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சோனாரன் பாலைவன மக்கள் நீர்பாசன வசதியுடன் விவசாயம் செய்தனர் என்றும், வர்த்தக தொடர்புகளை வைத்து இருந்தார்கள் என்று கண்டு பிடித்து சொல்லி இருக்கிறார்கள்.
 
இந்த கட்டிடம்  ஆகஸ்ட் 3, 1918 ம் ஆண்டு ஜனாதிபதி உட்ரோ வில்சன் அவர்களால் தேசிய நினைவு சின்னமாக பாதுகாக்கப் படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க பகுதியாக தேசிய பூங்கா  நிர்வாகிக்க ஆரம்பித்த காலம் அக்டோபர் 15, 1966 .

இந்த புகழ் பெற்ற இடத்திற்கு  ஆகஸ்ட்  27 ம் தேதி மகன்  அழைத்து போனான்.  அந்த இடத்தில் எடுத்த படங்கள் இந்த பதிவில்.

காற்று மழையில் கட்டிடம் மேலும்  கரைந்து போகாமல் இருக்க இப்போது  கொட்டகை போட்டு பாதுகாக்கப்படுகிறது.


விவாசயம் செய்யும் மக்கள் கூட்டமாக வாழ்ந்து இருக்கிறார்கள்
பண்ட மாற்று முறையில் வியாபாரம் செய்து இருக்கிறார்கள்

                                       மகனும், பேரனும். பண்டைய கால  மக்கள் வாழ்ந்த  வீட்டில் இப்போது  புறாக்கள் வாழ்கிறது. இறைவன் அவைகளுக்கு பெரிய வீட்டைக் கொடுத்து இருக்கிறார்.

                       உள்ளே மேல் தளம் செல்ல மரப் படிகள்.

மக்கள் உள்ளே போய் நம் ஊர் போல சுவற்றில் தங்கள் பேர்களை கிறுக்கி வைத்து இருக்கிறார்கள். 1870  என்று  வருஷம் போட்டு இருப்பது தெரிகிறதா? 

//19 ஆம் நூற்றாண்டின் வழிப்போக்கர்களின் கிராஃபிட்டி அதன் சுவர்களில் கீறப்பட்டது; இது இப்போது சட்டவிரோதமானது என்றாலும். காசா கிராண்டே இப்போது ஒரு தனித்துவமான நவீன கூரை மூடி 1932 இல் கட்டப்பட்டது.//

இப்படி  மொழி பெயர்த்து தருகிறது கூகுள்.

இப்போது உள்ளே போக கூடாது என்று பலகை வைத்து இருக்கிறார்கள்.  

வெள்ளிக்கிழமை போனதால் நாங்கள் நால்வர் மட்டுமே இருந்தோம்.

மீயூசியம் இருக்கிறது இங்கு.  இப்போது கொரோனா காலத்தால்  மூடி இருக்கிறது.

இங்கே அமர்ந்து கொண்டு பெரிய வீட்டைப்பார்த்து ரசிக்கலாம்.இங்கு உள்ள நினைவு பரிசுப் பொருட்கள் வாங்கும் கடையில் பேரன் கவினுக்கு பிடித்த  பரிசுப் பொருள் மருமகள் வாங்கி கொடுத்தாள். ஊரிலிருந்து வந்தவுடன் செய்து விட்டான்.

மேலும் சுற்றிப்பார்க்க விரும்பினால்  இந்த சிறிய  காணொளியில்  பார்க்கலாம்.வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.
-----------------------------------------------------------------------------------------------------

32 கருத்துகள்:

 1. அன்பின் கோமதிமா,
  வாழ்க வளமுடன்.
  காசா க்ரண்டே நல்ல அனுபவம். அரிசோனா பகுதியிலும் தென் டகோடா
  பகுதியிலும் இன்னும் சில இடங்கள் செவ்விந்தியர்கள்
  வாழ்ந்த இடங்கள்
  நிறைய இருக்கின்றன.
  இந்த இடத்தில் அந்தக் கட்டிடத்தைப்
  பாதுகாத்து இருப்பது மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

   //அரிசோனா பகுதியிலும் தென் டகோடா
   பகுதியிலும் இன்னும் சில இடங்கள் செவ்விந்தியர்கள்
   வாழ்ந்த இடங்கள்
   நிறைய இருக்கின்றன.//
   ஆமாம் அக்கா, போன முறை (2017) ஸாருடன் வந்த போது பார்த்தோம். அதுவும் இன்னும் பகிரவில்லை. ஒரு நாள் போடுகிறேன்.
   நிறைய இடங்கள் மகன் அழைத்து சென்றது இன்னும் பதியவில்லை.
   பாதுகாத்து வைத்து இருப்பதற்கு பாராட்ட வேண்டும். நம் நாட்டில் இப்படி பாதுகாக்க வேண்டிய கலை பொக்கிஷங்கள் நிறைய இருக்கிறது. அதை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது.

   நீக்கு
 2. மருமகள் வாங்கிக்கொடுத்த லெகோ
  நல்ல பரிசு. உடனே கவின் கட்டி விட்டானே.

  மகனும் ,பேரனும், மருமகளும்
  பார்க்க அருமை.
  காணொளி மிகச் சிறப்பாக இருக்கிறது.
  விவரமாகச் சொல்கிறார்கள்.
  நீங்கள் கொடுத்திருக்கும் படங்களும்,
  அதில் சொல்லப் பட்டிருக்கும் விவரங்களும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவனுக்கு பிடித்த பரிசு . அதுதான் உடனே கட்டி விட்டான்.

   //மகனும் ,பேரனும், மருமகளும்
   பார்க்க அருமை.//
   நன்றி அக்கா.
   //நீங்கள் கொடுத்திருக்கும் படங்களும்,
   அதில் சொல்லப் பட்டிருக்கும் விவரங்களும் நன்றாக இருக்கிறது//
   ஆமாம், அக்கா அதுதான் அதை தேர்வு செய்தேன். நிறைய இருக்கிரது காணொளிகள்.   நீக்கு
 3. 1870 ஆம் வருடமே அங்கு கிறுக்கிப் பதிவு
  செய்திருக்கிறார்களே. ஆகையால் இந்தப்
  பழக்கம் அப்போதிலிருந்தே இருக்கிறது:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அக்கா, மக்கள் மனநிலை அன்றும் அப்படித்தான் இருந்து இருக்கிறது.

   உள்ளே போய் மேலே எல்லாம் எழுதி வைத்து இருக்கிறார்கள். அதுதான் இப்போது உள்ளே அனுமதி இல்லை.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

   நீக்கு
 4. அமெரிக்க ஜனாதிபதிகள் சரித்திரத்தைப் பாதுகாக்க
  நல்ல உதவிகள் செய்திருக்கிறார்கள்.
  மௌண்ட் ரஷ்மோர் குன்றுகளில் பதிக்கப் பட்டிருக்கும்
  முகங்களுக்கு கூலிட்ஜ் மக்களிடம்
  அனுமதி வாங்கி உதவி செய்தார்,. இங்கே வுட்ரோ வில்சன் அதே போல்
  இங்கே கட்டிடப் பாதுகாப்புக்கு
  உதவி செய்திருக்கிறார்.
  பழமையைப் பாதுகாக்கும் போதுதான்
  நாளைய சரித்திரமும் உறுதி பெறுகிறது.
  நல்லதொரு இடத்துக்கு அழைத்துச் சென்று

  நேராக அனுபவிக்க வைத்திருக்கிறீர்கள்.
  நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அக்கா, ஜனாதிபதிகள் சரித்திரத்தை பாதுகாக்க உதவி செய்து இருக்கிறார்கள்.
   குன்றுகளில் எழுத்துக்கள் பதிக்கபட்டு இருப்பதை எடுத்தேன் மறந்து விட்டேன். அதையும் போட வேண்டும்.

   //பழமையைப் பாதுகாக்கும் போதுதான்
   நாளைய சரித்திரமும் உறுதி பெறுகிறது.//
   ஆமாம் அக்கா.

   நீங்கள் பார்த்து ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி நன்றி.   நீக்கு
 5. இன்று வெங்கட் தளத்திலும் உங்கள் தளத்திலும் கண்ணுக்கு விருந்து. காணற்கரிய இடங்கள். என்ன சுவாரஸ்யமான இடங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   உங்களுக்கு இந்த இடம் பிடித்து இருக்கா? மகிழ்ச்சி.

   //என்ன சுவாரஸ்யமான இடங்கள்...//

   நிறைய இருக்கிறது அவர்கள் வாழ்ந்த இடங்கள், வாழ்க்கை முறை பற்றி எல்லாம் படிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கிறது.

   நீக்கு
 6. அந்தக் கட்டிடத்தைப் பாதுகாக்க அந்தக் கொட்டகை போடுமா என்று கேட்காத தோன்றுகிறது. அங்கேயும் உங்களுக்கு படமெடுக்க உங்கள் அபிமான பறவை மாட்டி விட்டது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அந்தக் கட்டிடத்தைப் பாதுகாக்க அந்தக் கொட்டகை போடுமா என்று கேட்காத தோன்றுகிறது//

   முன்பு உள்ள பழைய படங்களை பார்க்கும் போது இது போதும் என தெரிகிறது.

   //அங்கேயும் உங்களுக்கு படமெடுக்க உங்கள் அபிமான பறவை மாட்டி விட்டது!//

   ஆமாம், அவைகள்தான் எல்லா இடத்திலும் இருக்கிறது. கட்டிட பொந்தில் உள்ளேயும் இருக்கிறது.

   நீக்கு
 7. சுவர்களில் கிறுக்கும் வழக்கம் நம்மிடம் மட்டும் இல்லை என்பது ஒரு ஆறுதல்!!! எவ்வளவு முன்னாலேயே கீறி இருக்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிறுக்கும் வழக்கம் 19ம் நூற்றாண்டிலேயே இருந்து இருக்கிறது என்பது வியப்பு எனக்கு. உங்களுக்கு ஆறுதலா!

   நீக்கு
 8. மண்ணில் தெரியும் அந்த துளை மனிதனுக்கா இல்லை ஏதாவது விலங்குக்கா? நால்வர் மட்டுமே இருந்து பார்த்ததில் ஒரு த்ரில்லும், சிறிது தனிமை பயமும் இருந்திருக்கும்! காணொளியும் கண்டு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ழை நீர் நிற்காமல் இருக்க வீடுகளில் மற்றும் வீட்டை சுற்றி விவசாயம் செய்து இருக்கிறார்கள் அதற்கு நீற் போக்குவரத்துக்கு செய்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
   காணொளியில் அந்த கட்டிடத்தை சுற்றி விவசாயம் நடைபெறும் காட்சி இருக்குமே!
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 9. பழமையை அப்படியே போற்றுகிறார்கள்
  காத்தும் வருகிறர்கள்
  மனம் மகிழ்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

   //பழமையை அப்படியே போற்றுகிறார்கள்
   காத்தும் வருகிறர்கள்
   மனம் மகிழ்கிறது//

   ஆமாம், பழமையை போற்றி பாதுகாக்கிறார்கள்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

   பொக்கிசமான இடம் தான் அதுதான் போற்றி பாதுகாக்கிறார்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. சிறப்பான தகவல்கள் கோமதிம்மா. படங்கள் அனைத்தும் அழகு. காணொளி பார்க்க முடியவில்லை.

  காசா க்ராண்டே என்ற பெயரில் இப்போது இந்தியாவின் சில நகரங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி விற்கிறார்கள்! தமிழகத்திலும் கோவை, சென்னை போன்ற இடங்களில் இருக்கிறது.

  சுவரில் கிறுக்கும் மக்கள் - அட அங்கேயும் இப்படியானவர்கள் இருந்திருக்கிறார்களே! :)

  ஸ்வாரஸ்யமான தகவல்கள் மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

   சிறப்பான தகவல்கள் கோமதிம்மா.
   நன்றி.

   படங்கள் அனைத்தும் அழகு. காணொளி பார்க்க முடியவில்லை.

   மீண்டும் சுட்டி கொடுத்து இருக்கிறேன். இப்போது உங்களுக்கு பார்க்க முடியும்.

   //காசா க்ராண்டே என்ற பெயரில் இப்போது இந்தியாவின் சில நகரங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி விற்கிறார்கள்! தமிழகத்திலும் கோவை, சென்னை போன்ற இடங்களில் இருக்கிறது.//

   நீங்கள் சொல்வது சரிதான் வெங்கட்,

   பலர் சேர்ந்து வாழும் குடியிருப்புதான் . பழங்க்குடியினர் வாழ்ந்த வீடு.அந்த காலத்திலேயே அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து இருக்கிறார்கள். இன்னெரு இடம் போய் இருந்தோம் அதில் நன்றாக தெரியும் மலை மேல் அடுக்கு மாடி குடியிருப்பு.

   அந்த படத்தை அடுத்த ஒரு பதிவில் போடுகிறேன்.

   ஆமாம், சில மக்கள் மனநிலை ஒன்று போல்தான் இருக்கிறது .

   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 12. தங்கள் பதிவின் மூலமாக புதிய செய்திகளைத் தெரிந்து கொண்டேன்...

  வாழ்க வையகம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

   வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

   நீக்கு
 13. நூறு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய மன்னர்கள் எழுப்பிய கலைச் செல்வங்களை நாம் காத்துக் கொள்ள தவறி விட்டோம்...

  தஞ்சை மாநகரின் ஜல சூத்திரம் முற்றாக அழிந்து விட்டது.. தஞ்சை - பாபநாசத்தின் பிரம்மாண்டமான நெற்களஞ்சியங்களின் இன்றைய நிலை சொல்லும் தரமன்று.. உள்ளே சென்று பார்க்க அனுமதியில்லை..

  எத்தனையோ ஏரிகளின் கழுங்கு, மதகு ஆகிய நீர் ஒழுங்குகள் போன்றவை போய்ச் சேர்ந்த இடங்கள் தெரியவில்லை..

  தினமலரில் எழுதுகின்றார்கள் - முப்பது ஆண்டு பழைமையான கட்டிடம் - என்று..

  இனிமேல் -
  சிலமணி நேர பழமை வாய்ந்த!.. - என்று எழுதக் கூடிய காலமும் வரலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நூறு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய மன்னர்கள் எழுப்பிய கலைச் செல்வங்களை நாம் காத்துக் கொள்ள தவறி விட்டோம்...//

   ஆமாம், பாதுகாக்கபட வேண்டிய கலை பொக்கிசங்கள் நிறைய இருக்கிறது. அதை எல்லாம் நினைத்தால் பெருமூச்சு வருகிறது.

   காலத்தால் அழிக்க முடியாதவை மட்டும் எஞ்சி நிற்கிறது.
   மாயவரத்திலிருந்து கும்பகோணம் போகும் போதெல்லாம் இந்த பாபநாச கோவிலை தாண்டும் போது பெரிய நெற்களஞ்சியத்தை பற்றி பேசி கொண்டு போவோம். போய் பார்த்து இருக்கிறோம். உள்ளே போக அனுமதி இல்லை, ஆனால் இணையத்தில் ஒரு முறை பார்த்து இருக்கிறேன். முன்பு அந்த அளவு வளம் இருந்தது நெல் சேமிக்க. இப்போது அப்படி இல்லையே!

   //எத்தனையோ ஏரிகளின் கழுங்கு, மதகு ஆகிய நீர் ஒழுங்குகள் போன்றவை போய்ச் சேர்ந்த இடங்கள் தெரியவில்லை..//

   ஏரிகளே காணவில்லை அப்புறம் கழுங்கு, மதகு ஆகிய நீர் ஒழுங்குகள் எப்படி இருக்கும்.

   மனித வாழ்க்கையே இப்போது கேள்வி குறியாக இருக்கிறது.

   சில மணி நேர பழமை வாய்ந்த என்று நீங்கள் சொல்வது போல் வந்தாலும் வியப்பு இல்லை.   நீக்கு
 14. சென்ற ஆண்டு கொஞ்சம் அதிகமாகப் பெய்ததால் சிதம்பரம் திருக்கோயிலுக்குள் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கி விட்டது.. காரணம் ஜலதாரைகள் அழிந்தும் அடைபட்டும் கிடந்தன..

  மதுரைக் கோயிலைச் சுற்றிலும் இப்படி ஆனதுண்டு..

  தஞ்சை கரந்தையில் வடவாற்றில் இருந்து ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயில் குளத்துக்குத் பூமிக்குக் கீழாக தண்ணீர் வரும் வழியை எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆண்டில் தனியொரு அமைப்பினர் கண்டுபிடித்து சீரமைத்து இப்போது கோயில் குளத்தில் நீர் நிறைத்திருக்கின்றார்கள்..

  பழைமையைத் தொலைக்கின்ற சமூகத்தில் நாம் தான் முதலிடத்தில் என்று நினைக்கின்றேன்...

  வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சென்ற ஆண்டு கொஞ்சம் அதிகமாகப் பெய்ததால் சிதம்பரம் திருக்கோயிலுக்குள் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கி விட்டது.. காரணம் ஜலதாரைகள் அழிந்தும் அடைபட்டும் கிடந்தன..//

   ஆண்டு தோறும் அடை மழை பெய்யும் காலங்களில் எல்லாம் சிதம்பரம் கோயிலில் தண்ணீர் தேங்கி இருக்கும். மதுரை ஊர் முழுவதும் சொல்லவே வேண்டாம் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நின்று மக்களுக்கு போக்குவரத்து இடையூராக இருக்கும்.

   //தனியொரு அமைப்பினர் கண்டுபிடித்து சீரமைத்து இப்போது கோயில் குளத்தில் நீர் நிறைத்திருக்கின்றார்கள்..//

   அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

   பழைமையை தொலைக்காமல் பேணி பாதுகாக்கும் நிலை வர வாழ்த்துவோம்.

   வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 15. பேணி பாதுகாத்து வைத்திருப்பது சிறப்பு. நல்ல தகவல்கள் படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   ஆமாம், பேணி பாதுகாத்து வருகிறார்கள்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 16. அழகிய படங்களும், விளக்கங்களும் அருமை காணொளியும் கண்டேன்.
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   கனமான போஸ்ட் போட்டு விட்டு அப்புறம் உங்களை எந்த வலைத்தளத்திலும் காணவில்லை !
   என்ன காரணம் என்று தெரியாமல் இருந்தது. இப்போது நீங்கள் வந்து விட்டது ஆறுதல்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு