ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

அந்தி வானம்!


ஆவணி மாதம்  ஞாயிறு சிறப்பு. அதனால்  சூரியன்   படங்கள், செய்திகள்    இடம்பெறுகிறது.இதற்கு முன்பு போட்ட பதிவுகள் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

  இந்த பதிவில் மாலைச்சூரியன். 

மாலைச் சூரியன் மறையும் காட்சியைப்பார்க்க போய் இருந்தோம்.  மகன் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது இந்த இடம்.  அங்கு  எடுத்த சூரியன் படங்கள் பகிர்வாய் இந்த பதிவில். 

                           கள்ளிச்செடியும் சூரியனும்


சூரிய உதயம், அஸ்தமனம் இரண்டும் ஒவ்வொரு  நாளும்  நேரங்கள் மாறுபடுவதால், மகன் மறையும் நேரத்தைப்பார்த்து அழைத்து சென்றான்.  நல்ல இடமாக பார்த்து காரை நிறுத்தி விட்டு பார்ப்பதற்குள் மறைய ஆரம்பித்து விட்டது. முதல் படம் காரில் வரும் போது எடுத்த படம்.


                மிக வேகமாக கீழே இறங்க ஆரம்பித்து விட்டது.
அங்கு இருக்கும் கள்ளிச்செடிகளின் நடுவே பார்க்க அழகாய் இருந்தது.


 ஒரே படம் போல் இருக்கும் ஆனால்,  சிவப்பு வண்ணம் மாறுபடும்.

மறைந்து விட்டது, வித விதமான கள்ளிச்செடி நடுவில்
அடிவானமும் அங்கு இருக்கும் மலைகளும்
 ஜூம் செய்த போது மலை வெள்ளையாக தெரிகிறது
திரும்புபோது வழியில் பார்த்த கள்ளிச்செடிகள்


மரங்கள் தலை அசைத்து விடை கொடுப்பது போல் இருக்கிறது.

பாரதி தாசன் அவர்கள் மாலை நேரம் வானத்தைப் பார்த்து மகிழ்ந்து பாடிய பாடல்,  பொன் ததும்பும் அந்திவானம்  என்று பாடிய பாடல்.
 

குன்றின் மீது நின்று கண்டேன்.
கோலம்! என்ன கோலமே!
பொன் ததும்பும் அந்திவானம்
- பாரதி தாசன்

ஞாயிறு வணக்கம்

காதல் கொண்டனை போலும் மண் மீதே,
கண்பிறழ் வின்றி நோக்குகின்றாயே!
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள் இதில் ஐயமொன்றில்லை;
சோதி கண்டு முகத்தில் இஅவட்கே
தோன்றுகின்ற புதுநகை யென்னே!
ஆதித் தாய்தந்தை நீவீர் உமக்கே
ஆயிரந் தரம் அஞ்சலி செய்வேன்.
- பாரதியார்


காலை சூரிய உதயமும், அந்திவானத்தில் மறையும் சூரியனும் அழகு.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------

42 கருத்துகள்:

 1. படங்கள் எல்லாம் மிக அழகு.  கள்ளிச் செடிகளுக்குப் பின்னால் சிவந்த சூரியன் அழகு.  உதிக்கும் சூரியனா, அஸ்தமன சூரியனா என்று சொல்லாவிட்டால் தெரியாது!  அப்படி இருக்கும்!  

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. //படங்கள் எல்லாம் மிக அழகு. கள்ளிச் செடிகளுக்குப் பின்னால் சிவந்த சூரியன் அழகு. //

   நன்றி.

   உதிக்கும் சூரியனா, அஸ்தமன சூரியனா என்று சொல்லாவிட்டால் தெரியாது! அப்படி இருக்கும்! //

   ஆமாம்.

   முழு நிலா போலவே சூரியன் இருக்கும் சில நேரங்களில். சிவப்பு சூரியன், நிலா மஞ்சள். அதுதான் வித்தியாசம்.

   நீக்கு
 2. பேஸ்புக்கில் செவ்வானமே பொன்மேகமே என்று சொல்லி இருந்தேன்...  இங்கு 'அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும்.'.   என்று பாடத் தோன்றுகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பேஸ்புக்கில் செவ்வானமே பொன்மேகமே என்று சொல்லி இருந்தேன்.//

   அந்த காட்சிக்கு இந்த பாடல் பொருத்தம். அந்த படங்களை இன்னொரு சமயம் இங்கு பகிர வேண்டும்.

   // இங்கு 'அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும்.'. என்று பாடத் தோன்றுகிறது!//

   இந்த பாட்டு எனக்கும் நினைவுக்கு வந்தது.

   நீக்கு
 3. அதிகாலை அழகைப் பாடி இருக்கும் பாரதிதாசன், அந்தி நேரச்  சூரியனையும் பாடி இருப்பது சிறப்பு.  பாரதியார் பாடலும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாரதியாரும் அந்தி சூரியனை பாடி இருக்கிறார். அது முன்பு வேறு பதிவில் போட்டு விட்டேன்.


   //அதிகாலை அழகைப் பாடி இருக்கும் பாரதிதாசன், அந்தி நேரச் சூரியனையும் பாடி இருப்பது சிறப்பு. //

   ஆமாம் கவிஞர்கள் நிலவையும், கதிரவனையும் பாடாமல் இருப்பார்களா?

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 4. அந்தி வரும் நேரம் பாடலும் நினைவுக்கு வருகிறது.
  வாழ்க வளமுடன் கோமதிமா.

  கதிரவனைப் பாடும் பாரதி தாசனும், பாரதியாரும்
  சொல்லும் தமிழ் மிக அழகாகக் கண்ணில் விரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   எம்.எல் வசந்தகுமாரி பாடல் நினைவுக்கு வராமல் இருக்குமா?
   பாரதியும், பாரதிதாசனும் பாடும் பாடல்களை ரசித்து கேட்கும் உங்கள் கண்ணில் விரியாமல் இருக்குமா?   நீக்கு
 5. மலை வாயில் விழும் சூரியனும்,
  கள்ளிச்செடியின் பின் கதிர்விரியும் காட்சியும்
  அழகு.
  இங்கே கடற்கரையோரம் பார்த்துக் கொண்டு
  இருக்கும்போதே ஒரு வினாடியில்
  தண்ணீரில் மூழ்கும். அதற்குப்பின்
  வரும் ஆரஞ்சும் நீலமும் கலக்கும்
  சிறப்பு சொல்லி முடியாது.

  பதிலளிநீக்கு
 6. நீங்களும் அதே அழகை வரிசையாகக் க்ளிக் கி இருக்கிறீர்கள்!!!
  இயற்கையின் இத்தனை வண்ணங்கள் எத்தனை
  சிறப்பு!!!
  நடுவே சிறு மேகங்களும், பாலைவனத்தின்
  நீடுயர்ந்த கள்ளி மரங்களும் கூட மிக அழகு.
  மிக நன்றி கோமதி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அக்கா, இயற்கையின் அற்புதங்களை நம் காமிராவில் அடக்க முடியுமா? முடிந்தவரை(எனக்கு தெரிந்தவரை) எடுத்து இருக்கிறேன்.
   மேகமும் கள்ளிகளும் மேலும் அழகு சேர்க்கும்.
   ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி அக்கா.

   நீக்கு
 7. அருமையான சூரியக் கோலங்கள். விதம் விதமான அழகில் கண்களுக்கு நிறைவான காட்சிகள். நன்றாகப் படம் பிடித்துள்ளீர்கள். அந்தி மாலைச் சூரியன் ஓர் அழகெனில் காலைச்சூரியன் இன்னொரு அழகு. ஆனாலும் அந்திச் சிவப்பைக் காலையில் காண முடிவதில்லை. விரைவில் வெள்ளையாகிடுமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

   அருமையான சூரியக் கோலங்கள். விதம் விதமான அழகில் கண்களுக்கு நிறைவான காட்சிகள். நன்றாகப் படம் பிடித்துள்ளீர்கள்

   நன்றி.

   //அந்தி மாலைச் சூரியன் ஓர் அழகெனில் காலைச்சூரியன் இன்னொரு அழகு. ஆனாலும் அந்திச் சிவப்பைக் காலையில் காண முடிவதில்லை. விரைவில் வெள்ளையாகிடுமே!//

   ஆமாம். மாலை செவ்வானம் நன்றாக இருக்கும், சூரியனும் அதிக சிவப்பாக இருக்கும்.
   காலை வரும் போது செவ்வானம் அப்புறம் மஞ்சள், வெள்ளை என்று மாறும்.


   சூரிய கோலங்களை ரசித்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரி

  ஞாயிறு பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போன்ற அழகு. நல்ல தெளிவாக சூரியனின் மறையும் காட்சிகளை படமாக்கி தந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் சகோதரி.

  ஆமாம். நாம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கையிலேயே அந்திச்சூரியன் அடி வானத்தை வேகமாக கடந்து விடுவார். தன் அன்றைய தின கடமையை செவ்வனே நிறைவேற்றிய பூரிப்பு போலும்..!

  கள்ளி மரங்களும், செக்கச் சிவந்த, சற்று மஞ்சளும் கலந்த கதிரவனின் படங்கள் அத்தனைப் படங்களும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் உள்ளது விடுபட்டு போன மற்ற ஞாயிறு பதிவுகளையும் விரைவில் படிக்கிறேன்.

  அன்புடன் என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தமைக்கும், எ. பிக்கு கணேச சதுர்த்தியன்று நான் வந்த போது வாழ்த்துகள் கூறி என்னை வரவேற்ற உங்கள் அன்பிற்கும் என் மனங்கனிந்த நன்றிகள். அன்று முழுவதும் கொஞ்ச வேலைகளினால் அன்று அங்கு வந்து நன்றி தெரிவிக்க இயலவில்லை. பகிர்வுக்கு நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   //படங்கள் அனைத்தும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போன்ற அழகு. நல்ல தெளிவாக சூரியனின் மறையும் காட்சிகளை படமாக்கி தந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் சகோதரி.//

   பாராட்டுக்களுக்கு நன்றி.

   //தன் அன்றைய தின கடமையை செவ்வனே நிறைவேற்றிய பூரிப்பு போலும்..!//

   இருக்கும் இருக்கும் உண்மை.

   //விடுபட்டு போன மற்ற ஞாயிறு பதிவுகளையும் விரைவில் படிக்கிறேன்.//


   நல்ல ஓயுவு எடுங்கள்.
   மெதுவாக படிக்கலாம்.

   உடல் நலபெற்று வந்தது மகிழ்ச்சி.
   உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். உங்களின் கவனிப்பு குழந்தைகள், பேத்தி, பேரன்களுக்கு முக்கிய தேவை. நீங்கள் உடல் நலிவுர்ற போது எல்லோரும் கஷ்டபட்டு இருப்பார்கள்.

   உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 9. அற்புதமான காட்சிகள்! மிக அருமையான படங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   உங்களை நினைத்து கொண்டேன். ராமலக்ஷ்மி எடுத்து இருந்தால் அட்டகாசமாக இருக்கும் என்று.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபால்ன்,

   வாழ்க வளமுடன்

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. கோமதிக்கா அட்டகாசமான படங்கள்! உங்கள் திறமையும் தான்!

  என்ன அழகு வானம். சூரியன் அழகு!...கள்ளிச் செடிகளின் பின்னே சூரியன் வெகு அழகு.

  சூரியன் சொல்கிறான்

  அடிக் கள்ளி! நீ கள்ளியேதான்!
  கோமதி படமெடுக்க வருகிறார் என்று
  பொசுக்கென்று
  பூமியின் மறுபக்கம் சென்றிட
  ஓடினேன் வேகமாய்
  கோமதி வந்துவிட
  உன் பின்னால் மறைந்தாலும்
  காட்டிக் கொடுத்துவிட்டாயே கள்ளி!
  பூமியிடம் சொல்லி வைக்க வேண்டும்
  நான் வரும் நேரம் போகும் நேரத்தை
  ரகசியமாய் வைத்திரு என்று!
  பின்னே? என் அழகுக்குத்
  திருஷ்டி வந்துவிடாதோ!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

   கோமதிக்கா அட்டகாசமான படங்கள்! உங்கள் திறமையும் தான்!//

   தங்கையின் அட்டகாசமான கருத்தால் மகிழ்ந்தேன்.

   உங்கள் கவிதை நடை கருத்தும் புலவர்களுக்கே உரிய " உயர்வு நவிற்சி அணி"

   மிகவும் உயர்த்தி சொல்லி மகிழ்ச்சி ஏற்படுத்தி விட்டீர்கள்.


   நீக்கு
 12. கள்ளி நீ கள்ளியேதான்!
  சூரியனை உன் பின்
  ஒளிய வைத்து
  அழகான ஒப்பனையில் நீ!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! கவிதை கவிதை!
   கள்ளிக்கு வெட்கம் வந்து விட்டது உங்கள்
   புகழ்ச்சியில்.

   நீக்கு
  2. ஓகோ... இந்தக் கவிதைதான் அங்கு எபியில் பேச்ப்பட்டதோ!..

   அருமை.. அருமை!..

   நீக்கு
  3. வலைத்தளத்திலா? வாட்ஸ் அப் குழுவிலா?

   நீக்கு
 13. கோமதிக்கா நீங்கள் ஜூம் செய்து எடுத்த படத்திலும் அந்த மலை வெள்ளையாகத் தெரிந்தாலும் அதுவும் அழகாகத்தான் இருக்கிறது ரொம்பவே!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 14. செவ்வானம் வெட்கம் கொண்டது
  யாராலே
  சங்கீதம் மூங்கிலில் வந்தது
  யாராலே
  சுற்றும் பூமியில் இன்பம்
  கொட்டிக் கிடக்கிறது
  நம்மை அழைக்கிறது

  என்று ஒரு சினிமாப் பாடல். ஸ்ரீனிவாஸ் குரலில்...

  பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் பாடலும் நினைவுக்கு வந்தது...

  ஜூம் படமும், கடைசிப் படமும் வரைந்த ஓவியம் போன்று அத்தனை அழகு!

  அக்கா இரு படமும் ஒரே போன்று இல்லை. வானத்தின் நிறத்தில் வித்தியாசம் நன்றாகவே தெரிகிறது! அதுவும் அழகுதானே!

  அத்தனையும் ரசித்தேன் கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா, நீங்கள் பகிர்ந்த பாடல்கள் அருமை.
   பூமியில் இயற்கை அன்னை அள்ளி வழங்கியது நிறைய.
   இன்பம் கொட்டி கிடப்பதும் உண்மை.

   படங்களை ரசித்து கருத்துக்களை ரசனையுடன் அள்ளி வழங்கி மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த கீதாவுக்கு நன்றிகள் பல.

   நீக்கு
 15. சூரிய மறைவும் செவ்வானமும் படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி மாதேவி.

   நீக்கு
 16. மிகவும் அழகான காட்சிகள் சகோ.
  இது பொறுமையும், ரசனையும் உள்ளவர்களுக்கே பொருந்தும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 17. கள்ளிச் செடிகளுக்குப் பின் சூரியன் - படங்களும் காட்சிகளும் வெகு அழகு.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 18. வெகு அழகான படங்கள். விரைவாக மறையும் சூரியனோடு போட்டி போட்டுக் கொண்டு நீங்களும் விரைவாக எடுத்துள்ளீர்கள். பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

   நீக்கு
 19. // காலை சூரிய உதயமும், அந்திவானத்தில் மறையும் சூரியனும் அழகு..//

  உண்மை தான்.. ஆனாலும்,

  சூரியன் மறைவதைப் பார்க்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ. வாழ்க வளமுடன்


   //சூரியன் மறைவதைப் பார்க்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்..//

   சிவப்பு வண்ணமாக இருக்கும் சூரியனை வெகு நேரம் பார்க்க கூடாது , பார்த்தால் தலைவலிக்கும் என்று சொல்வார்கள் கேட்டு இருக்கிறேன்.
   வேறு காரணம் இருக்கா? தெரிந்தால் சொல்லுங்கள்.

   நீக்கு
 20. வழக்கம் போல அழகான படங்கள்..

  மகாகவியின் பாடல் வரிகளும்
  புரட்சிக் கவிஞர் பாடல் வரிகளுமாக

  சிறப்பான பதிவு..

  வளமுடன் வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களை ,கவிதையை ரசித்து
   கருத்து சொன்னதற்கு நன்றி.
   வாழ்க வளமுடன்.

   நீக்கு
 21. அந்தி வானம் பல வித கோலங்களில் அத்தனை அழகாக இருக்கிறது. புகைப்படங்கள் அனைத்தும் மிக அழகு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
   உங்கள் வரவுக்கும்,கருத்துக்கும் நன்றி.

   நீக்கு