திங்கள், 20 செப்டம்பர், 2021

ரூஸ்டர் காக்பர்ன் தீக்கோழிப் பண்ணை (ROOSTER GOGBURN OSTRIGN RANGH) ரூஸ்டர் காக்பர்ன் தீக்கோழிப் பண்ணை  

வாசலில் மிக அழகான கள்ளிகள் இருக்கிறது.
காக்பர்ன் தீக்கோழிப் பண்ணை  உள்ளே செல்லும் வழி.

தெற்கு அரிசோனாவில்  இருக்கிறது.   மகன் அழைத்து சென்ற இடம். மிகவும் அழகான இடம் . இது மூன்று தலைமுறையாக ஒரு குடும்பத்திற்கு சொந்தமாக இருக்கிறது. தீக்கோழிப் பண்ணை என்று பெயர் வைத்து இருந்தாலும் அங்கு வேறு விலங்கினங்களும் இருக்கிறது. 

1999ம் ஆண்டு முதல் பொது மக்கள் பார்த்து அவைகளுக்கு உணவு கொடுத்து மகிழ ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.

நைஜீரியா குள்ள ஆடுகள், ஃ பாலோ மான், பெக்கிங் வாத்துக்கள்,  போயர் ஆடுகள் மற்றும்  பறவைகள், சேவல், கோழி, கழுதை ஆகியவையும் மேலும் முயல்,  வாத்தும்  இருக்கிறது.
நம் வரவு கண்டு கழுத்தை வெளியே நீட்டி சத்தமிடும் கழுதைகள்.
 
பார்க்க கட்டணம் உண்டு. நுழைவு சீட்டு ஒன்றுக்கு ஒரு உணவு டப்பா கொடுக்கப்படுகிறது. இது தீர்ந்து போனால் மேலும் கொடுக்க ஆசைப்பட்டால் அங்கு காசு போட்டு விட்டு உணவு எடுத்துக் கொள்ள பாட்டில்களில் உணவு வைத்து இருக்கிறார்கள்.

கழுதை, மான், ஆடு, நெருப்பு கோழி ஆகியவற்றிற்கு இதுதான் உணவு. குச்சியில் தானியங்கள் ஒட்டி வைத்து இருப்பது பறவைகளுக்கு.


நம்மை பார்த்து ஓடி வருகிறது
உணவு கீழே சிதறி கிடைக்கிறதுவெயில் அதிகம் நாங்கள் இளைப்பாறுகிறோம் என்று சில மான்கள் எழுந்து வரவில்லை.


ஒரு கிண்ணத்தில் உணவை போட்டு சுற்றி விடவேண்டும்
மேலே கிண்ணம் நகர்ந்து போய் மேலே இருக்கும் பிளாஸ்டிக் பெட்டியில் விழுகிறது அங்கு இருக்கும் ஆடுகள் சாப்பிடுகிறது.

குச்சியில் ஒட்டி இருக்கும் உணவை  இந்த பறவைகளுக்கு கொடுத்தால் கொத்தி தின்கிறது.

சின்ன காணொளிதான் பார்க்கலாம். கிளிகள் அந்த குச்சியில் இருக்கும் உணவை கொத்தி சாப்பிடுவதைப்பார்க்கலாம்.

உணவு தீர்ந்ததும் அந்த குச்சியை போட குப்பைத்தொட்டி அருகில் வைத்து இருக்கிறார்கள் அதில் போட்டு விட வேண்டும். மிகவும் சுத்தமாக பாராமரிக்கப்படுகிறது.இதைப் பார்க்கத்தான் கொடுமையாக இருக்கிறது. ஒரு துவாரத்தில் இரண்டு முட்டி கொண்டு தலையை வெளியே நீட்டி உணவு கேட்கிறது.இதற்கு தானியம் அங்கு பக்கத்தில் வைத்து இருக்கிறார்கள் காசுகொடுத்து வாங்கி  கிண்ணத்தில்  போட வேண்டும்.முயல்கள்  விளையாட,  தண்ணீர் குடிக்க,தூங்க என்று வசதியாக  பெரிய இடம் இருக்கிறது .  சின்ன பறவைகளும்     அமர்ந்து இருக்கிறது.
இவற்றிற்கு உணவு  வெளியே தெரியும் அந்த கறுப்பு குழாயில் போட வேண்டும்.

வெயிலுக்கு பயந்து கூடாரத்தில் போய்  கூட்டமாய் நின்று கொண்டு இருக்கிறது. ஆட்களைப்பார்த்து விட்டால் ஓடி வருகிறது.இப்படி அவற்றை மேலே இருந்து பார்க்க வசதி செய்து கொடுத்து இருக்கிறார்கள்.வாத்துகளுக்கு வேறு உணவு கொடுக்க கூடாது . அங்கு இருப்பதை வாங்கி கொடுக்க வேண்டும். பேரன் வாங்கி போட்டான்.//நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், காய்ச்சல் அல்லது கோவிட் -19 இன் பிற அறிகுறிகள் இருந்தால், நீங்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் விருந்தினர்கள், பணியாளர்கள் மற்றும் விலங்குகளை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதில் நாங்கள் இன்னும் உறுதியாக இருக்கிறோம், ஆனால் உங்கள் உதவியுடன் மட்டுமே அதைச் செய்ய முடியும். பண்ணையில் இருக்கும்போது உட்புற பகுதிகளில் முகத்தை மறைப்பது பரிந்துரைக்கப்படுகிறது.//

இப்படி கேட்டுக் கொண்டும் முகத்தை மறைக்காமல் மீனை வேடிக்கைப்பார்க்கும் ஆட்கள் இருந்தார்கள்.உள்ளே உணவுக்கு  நெருப்பு கோழி வாயை திறந்து கொண்டு வந்தது. அது போல  வெளியே வந்த போது வான் மேகமும் நெருப்பு கோழி போல வாயை திறந்து கொண்டு காட்சி அளித்தது.  

வாழ்க வையகம்!  வாழக் வையகம் ! வாழ்க வளமுடன்.

-----------------------------------------------------------------------------------------------

40 கருத்துகள்:

 1. எல்லாப் படங்களும் சுவாரஸ்யம்.  ஆனால் அவற்றை ஒரு துளை வழியே எட்டிப் பார்க்க வைத்து உணவுக்கு அலைய விடுவது பார்க்கக் கஷ்டமாக இருக்கிறது.  நீங்கள் சொல்லி இருப்பது போல குறிப்பாக அந்த ஆடுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   சுதந்திரமாக உணவு தேடி உண்பது போய் உணவுக்கு பறக்கிறமாதிரி இருக்கிறது . புல் , மற்றும் வேறு உணவு இல்லாமல் இந்த மாதிரி ஒரே உணவை சாப்பிட்டால் போர் அடித்து விடும் அவைகளுக்கு. ஆடுகளை பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

   நீக்கு
 2. காணொளி கண்டேன்.  மேலேயிருந்து இறங்கி வரும் ஒரு கிளி ஒருமுறை மட்டும் உணவை ருசி பார்த்து விட்டு மேலே சென்று விடுகிறது!  மற்றவை போட்டி போட்டுக் கொண்டு கொத்தித் தின்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி பார்த்து விட்டது மகிழ்ச்சி.
   ஆமாம் , வருகிறவர்கள் எல்லாம் இப்படி நீட்டி கொண்டே இருந்து இருப்பார்கள், அதே உணவு தானா? என்று ருசி பார்த்து விட்டு போய் விட்டது அந்த பறவை.
   மற்றவை விரும்பி சாப்பிடுகிறது போட்டி போட்டுக் கொண்டு.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 3. கோமதிக்கா முதலில் படங்கள் அட்டகாசம் சொல்லிவிடுகிறேன்...இதோ முழுவதும் பார்த்துவிட்டு வருகிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

   //கோமதிக்கா முதலில் படங்கள் அட்டகாசம் சொல்லிவிடுகிறேன்//

   நன்றி கீதா.

   நீக்கு
 4. அடிக் கள்ளி நீ எங்கள் கோமதிக்காவை விட மாட்டாய் போல்!!!!!

  கள்ளியும் என்ன அழகாய் இருக்கிறாள்!!

  உணவு கொடுப்பதற்குக் கூட எவ்வளவு அறிவுறுத்தல்கள்!! நல்ல விஷயம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அடிக் கள்ளி நீ எங்கள் கோமதிக்காவை விட மாட்டாய் போல்!!!!!//

   எல்லா இடங்களிலும் கள்ளி இருப்பாள் அழகாய் .ஒவ்வொரு அழகாய் காட்சி அளிப்பாள்.

   பாலைவனத்தில் கள்ளி இல்லாமல் இருக்குமா?

   //உணவு கொடுப்பதற்குக் கூட எவ்வளவு அறிவுறுத்தல்கள்!! நல்ல விஷயம்...//
   வளர்ப்பவருக்குதானே தெரியும் அதற்கு எது ஒத்துக் கொள்ளும் ஒத்துகாது என்று.


   நீக்கு
  2. ஆமாம் அக்கா அங்கு சில இப்படியான இடங்களில் நாம் எல்லாம் கொடுக்க முடியாது. அங்கு விற்பதைத்தான் வாங்கி க் கொடுக்க வேண்டும். அவர்களுக்குத்தான் தெரியும். அப்புறம் நாம் கண்டதும் கொடுத்து அவை அவஸ்தைப்பட்டால் அவர்களுக்குத்தானே கஷ்டம்...மிக நல்ல விஷயம்

   கீதா

   நீக்கு
  3. நம் நாட்டில் வனவிலங்கு பூங்கா போனால் கண்டதை கொடுத்து விடுவார்கள் அங்குள்ள விலங்குகளுக்கு . கொடுக்க கூடாது என்று போட்டு இருந்தாலும்.

   நீக்கு
 5. இதைப் பார்க்கத்தான் கொடுமையாக இருக்கிறது. ஒரு துவாரத்தில் இரண்டு முட்டி கொண்டு தலையை வெளியே நீட்டி உணவு கேட்கிறது.//

  இது வரை ஓகேயாக இருந்தது..இதைப் பார்த்ததும் எனக்கு அழுகை வந்துவிட்டது. பாவம் அக்காம்...

  ஏன் இப்படிச் செய்திருக்கிறார்கள்?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்கள் அதை கொஞ்சுவது போல் போட்டோ எடுத்து கொள்ள வைத்து இருப்பார்கள் போலும்.
   உணவுக்கும் அன்புக்கும் தலையை நீட்டுகிறதோ என்னவோ! வளர்ப்பு ஆடுகளை முகத்தோடு முகம் வைத்து கொஞ்சும் குழந்தைகளை பார்த்து இருக்கிறேன். கழுத்தை தடவி கொடுப்பார்கள்.

   ஒரு துவாரத்தில் மட்டும் இரண்டு ஒன்றை ஒன்று தள்ளிக் கொண்டு (முட்டி மோதி கொண்டு)
   வெளியே தலை நீட்டியது மிகவும் பாவமாக இருந்தது. நீங்கள் அழுது விட்டீர்களா!
   மிருக காட்சி சாலையில் துன்பம்தான் படுகிறது விலங்குகள். அதன் இயல்புபடி வாழவிடாமல் அடைத்து வைத்து இருப்பதை பார்க்க நாம் போகிறோம்.

   நீக்கு
 6. இப்படி கேட்டுக் கொண்டும் முகத்தை மறைக்காமல் மீனை வேடிக்கைப்பார்க்கும் ஆட்கள் இருந்தார்கள்//

  மனிதர்கள் எல்லா இடங்களிலும் அப்படித்தான் போலும்.

  அவை எல்லாம் நம்மைப் பார்த்ததும் ஓடி வருவது மனதிற்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஒன்று உணவு கொடுப்பார்கள் என்ற ஆர்வம். மற்றொன்று அன்பு எதிர்பார்த்து. பாவம் அக்கா எல்லாமும். இயற்கையில் இருக்க வேண்டியவை இப்படி ஒரு வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் என்பது மனது வேதனையாக இருக்கிறது. மற்றொரு புறம் யோசிக்கும் போது இது பரவாயில்லையோ என்றும் தோன்றுகிறது ஏனென்றால் வெளியில் இருந்தால் நம் மக்கள் கொல்ல நேரிடுமே என்று.

  இப்படியானதைப் பார்க்கும் போது எனக்கு ஒரு ஒப்பீடு மனதில் தோன்றியதுண்டு. அதை வேறு ஒரு வடிவில் வைத்திருக்கிறேன். வழக்கம் போல் மெதுவாகத்தான் வரும்..ஹாஹ்ஹாஅ

  காணொளி பார்த்தேன் அக்கா...முதலில் ஒன்று ஓடி விடுகிறது வெள்ளை....மற்ற மூன்றும் போட்டி போட்டுக் கொத்துகின்றன! அதில் ஒரு பச்சை மற்றொரு பச்சைக்கு இடையில் ஊட்டி விடுகிறது!!!! அழகு! மிகவும் ரசித்தேன் கோமதிக்கா

  படங்கள் நீங்கள் எடுத்த விதம் அருமை கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மனிதர்கள் எல்லா இடங்களிலும் அப்படித்தான் போலும்.//
   சில மனிதர்கள் அப்படித்தான்.

   உணவு, அன்பு இரண்டையும் எதிர்பார்த்து இருக்கலாம் தான். மான் பூங்கா என்று அழைத்து போனான் அங்கு திறந்த வெளியில் இருக்கும் உணவுக்காக நம்மை சூழ்ந்து கொள்ளும். அது இன்னும் கொடுமை. ஒரு பெண் டப்பா உணவை கையால் எடுத்து கொடுத்தார். பின்னால் ஒரு மான் அவர் சட்டையை பிடித்து இழுத்து கேட்டது.
   அந்த பெண்ணியயும் , அவர் கண்வரையும் சூழ்ந்து கொண்டு விடவே இல்லை.

   //இப்படியானதைப் பார்க்கும் போது எனக்கு ஒரு ஒப்பீடு மனதில் தோன்றியதுண்டு. அதை வேறு ஒரு வடிவில் வைத்திருக்கிறேன். வழக்கம் போல் மெதுவாகத்தான் வரும்..ஹாஹ்ஹாஅ//

   எழுதுங்கள். பிற விலங்குகளிடமிருந்து தப்பித்துக் கொள்கிறது மான், முயல், கிளிகள் எல்லாம். இதில் நல்லதும் இருக்கிற்து என்பதை மறுபதற்கு இல்லை.

   காணொளியை ரசித்துப் பார்த்தற்கும் பதிவை ரசித்து படித்து கருத்துக்கள் சொன்னதற்கும் நன்றி.
   நீக்கு
 7. படங்கள் மிக அழகு. நெருப்புக்கோழி, மான், கழுதை.... எல்லாமே சுவாரசியம்.

  அதே உணவு அவைகளுக்கு போரடிக்காதா?

  புற்கள் இருப்பது போலத் தெரியவில்லையே

  முயல்களுக்கு கேரட் உண்டா?

  மொத்தத்தில் பதிவு மிகவும் கவர்ந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

   //படங்கள் மிக அழகு. நெருப்புக்கோழி, மான், கழுதை.... எல்லாமே சுவாரசியம்.//

   நன்றி.

   //அதே உணவு அவைகளுக்கு போரடிக்காதா?

   புற்கள் இருப்பது போலத் தெரியவில்லையே//

   நானும் நினைத்தேன். வேறு வகை உணவு யாரும் வராத அன்று கொடுப்பார்கள் போலும்.

   உங்களை பதிவு கவர்ந்தது அறிந்து மகிழ்ச்சி, நன்றி.   நீக்கு
 8. பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 9. அங்கே PETA இல்லையா? இப்படி கூண்டில் வைத்து வன மிருகங்களை கொடுமைப் படுத்துகிறார்கள் என்று வழக்கு போட? 

  உங்களுக்கு போட்டோ பிடிப்பது அருமையாக வருகிறது. படங்கள் அழகு. 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகர் சார், வாழ்க வளமுடன்

   அவர்கள் பெரியவர்கள், குழந்தைகளை மகிழ்ச்சிபடுத்த இந்த பண்ணையை நடுத்துவதாக போட்டு இருக்கிறது. வனவிலங்கு காட்சியகத்தில் கூண்டுக்குள் அடைத்து வைத்து நமக்கு காட்டுகிறார்கள். இவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக காட்டுகிறார்கள்.

   //உங்களுக்கு போட்டோ பிடிப்பது அருமையாக வருகிறது. படங்கள் அழகு. //

   உங்கள் பாராட்டுக்கு நன்றி.


   நீக்கு
 10. படங்களும் பகிர்வும் அருமை
  நேரில் பார்த்த உணர்வு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. உணவு கிடைக்கிறது என்றவுடன் ஓடி வருவது வருத்தமே... யாரும் வரவில்லை என்றாலும் உணவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

   //உணவு கிடைக்கிறது என்றவுடன் ஓடி வருவது வருத்தமே... யாரும் வரவில்லை என்றாலும் உணவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்...//

   யாரும் வரவில்லை என்றாலும் உணவு கொடுப்பார்கள். பார்க்க நன்றாக இருக்கிறது எல்லாம். நம்மை பார்க்கும் ஆவலுடனும் , வேறு உணவு கிடைக்குமா என்று பார்ப்பது போலவும் உள்ளது எனக்கு. நாம் கொடுக்கும் உணவு சிதறி கிடக்கிறது, அதை அவை உண்ணவில்லை.

   நீக்கு
 12. பதில்கள்
  1. வானம் காட்சி உங்களை கவர்ந்து விட்டதா?
   எனக்கு வியப்பாக இருந்தது. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 13. வணக்கம் சகோதரி

  அருமையான பதிவு. அங்கிருக்கும் தீக்கோழிப் பண்ணை படங்கள் அனைத்தும் அருமையாக எடுத்து பகிர்ந்திருக்கிறீர்கள் சகோதரி. முகப்பு படம் துவார பாலகர்கள் மாதிரி இரண்டு பெரிய கள்ளிச் செடிகளுடன் பார்க்க அழகாக உள்ளது.அருமையான படங்களுக்கு பாராட்டுக்கள்.

  அங்கு வாழும் ஒவ்வொரு உயிரினங்களுக்கும் உணவு தரும் முறை நன்றாக உள்ளது. ஆனால், இப்படி ஒவ்வொருவராக அவர்கள் வந்து இஸ்டபடி உணவுகளை தரும் போது அது அதிகப்படியாக போய் அதன் உடல்நலன்கள் பாதிக்காதோ ? ஒருவேளை நம்மைபோல் அதற்கு குறிப்பிட்ட நேரங்கள் உணவு (சாப்பிடுவது) கொடுப்பது எனக் கிடையாதோ.? ஒரே துவாரத்தில் இரண்டு ஆடுகள் முகம் நுளைப்பது என்பது வருத்தமான விஷயந்தான்.நல்லவேளை..! அந்தப் படம் (கைப்பேசியில்) எனனால் பார்க்க முடியவில்லை என்பதும் நல்ல விஷயம்தான்...

  காணொளி பார்த்தேன். கிளிகள் வந்து உணவை கொத்திக் கொத்தி சாப்பிடுவது அழகாக உள்ளது. ஆனாலும் இப்படி ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு அதற்கும் சமயங்களில் போரடிக்கும் இல்லையா?பாவந்தான்...! ஆனால் அந்த இடங்கள் நம் கண்களுக்கு விருந்தாக உள்ளது. நெருப்புக்கோழி படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. ஒவ்வொன்றும் எவ்வளவு உயரம்.? அங்கிருக்கும் தகவல்களை அனைவரும் மதித்து நடந்தால் நல்லதுதான்.

  நெருப்பு கோழிகளுக்கு இணையாக எடுத்த வான் கோழிகள் (மேகங்களின் துணையால் உருப்பெற்றவை) படமும் அருமை. தங்கள் கற்பனையை நன்றாக ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   //அருமையான பதிவு. அங்கிருக்கும் தீக்கோழிப் பண்ணை படங்கள் அனைத்தும் அருமையாக எடுத்து பகிர்ந்திருக்கிறீர்கள் சகோதரி. முகப்பு படம் துவார பாலகர்கள் மாதிரி இரண்டு பெரிய கள்ளிச் செடிகளுடன் பார்க்க அழகாக உள்ளது.அருமையான படங்களுக்கு பாராட்டுக்கள்.//

   நன்றி, நன்றி.


   //இப்படி ஒவ்வொருவராக அவர்கள் வந்து இஸ்டபடி உணவுகளை தரும் போது அது அதிகப்படியாக போய் அதன் உடல்நலன்கள் பாதிக்காதோ ?//

   நாங்கள் மூன்று குடும்பங்கள்தான் இருந்தோம், ஒரே சமயத்தில் நிறைய பேர் அனுமதி இல்லை. அதுவும் அவற்றின் பசியை இந்த உண்வு போக்காது. ஏதோ சத்து மாத்திரை போல இருக்கிறது. நிறைய உணவு சிதறி கிடக்கிறது.

   மூன்று தலைமுறையாக இவைகளை பாதுகாத்து வருகிறார்கள். மிகவும் சுத்தமாக ஒரு நாற்றமும் இல்லாமல் பெரிய இடத்தில் இருக்கிறது.

   ஆடுகள் எட்டிப்பார்பதற்கு துளைகள் உள்ளது. மற்றபடி உள்ளே அதற்கு வசதியான இடம் இருக்கிறது. ஒரே துவாரத்தில் முகத்தை வெளியே நீட்டிப்பார்ப்பது எனக்கு கஷ்டமாக இருந்தது .


   காணொளி பார்த்தது மகிழ்ச்சி.

   //ஆனாலும் இப்படி ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு அதற்கும் சமயங்களில் போரடிக்கும் இல்லையா?பாவந்தான்...! //

   ஆமாம் , நமக்கு இப்படி தான் தோன்றுகிறது.

   //நெருப்புக்கோழி படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. ஒவ்வொன்றும் எவ்வளவு உயரம்.? அங்கிருக்கும் தகவல்களை அனைவரும் மதித்து நடந்தால் நல்லதுதான்.//

   ஆமாம். நெருப்புக் கோழியின் உய்ரம் அவை ஓடுவது எல்லாம் பார்க்க வியப்பாக இருக்கும்.

   //நெருப்பு கோழிகளுக்கு இணையாக எடுத்த வான் கோழிகள் (மேகங்களின் துணையால் உருப்பெற்றவை) படமும் அருமை. தங்கள் கற்பனையை நன்றாக ரசித்தேன்//

   வான் கோழிகளை ரசித்தமைக்கு நன்றி. உங்கள் வார்த்தைகளை நான் ரசித்தேன்.

   உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.
   நீக்கு
 14. படங்களும் தகவல்களும் சுவாரஸ்யம். மான்கள் பெரும்பாலும் வெயில் நேரத்தில் கூட்டமாக அசந்து போய் அமர்ந்திருப்பதைப் பல பூங்காக்களில் கண்டிருக்கிறேன். மக்களும் பார்த்து ரசிக்கும் வகையில் இயற்கையான சூழலில் வேலிகள் வைத்துப் பராமரிக்கலாம்தான். ஆனால் ஆடுகளைக் கூண்டில் வைப்பது நீங்கள் சொல்லியிருப்பது போல நெருடலே.

  கொரானா குறித்த அக்கறையின்றி மக்களில் சிலர் அலட்சியமாக இருப்பது வருத்தத்திற்குரியது. இங்கும் பொதுவாக அப்படியான சூழலே உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

   //மான்கள் பெரும்பாலும் வெயில் நேரத்தில் கூட்டமாக அசந்து போய் அமர்ந்திருப்பதைப் பல பூங்காக்களில் கண்டிருக்கிறேன்.//

   ஆமாம். அவைகளுக்கு வெயில் கொடுமை தாங்காது.

   //மக்களும் பார்த்து ரசிக்கும் வகையில் இயற்கையான சூழலில் வேலிகள் வைத்துப் பராமரிக்கலாம்தான்.//

   அந்த மாதிரி மான் பூங்காவும் அழைத்து சென்றான் மகன்.

   //ஆனால் ஆடுகளைக் கூண்டில் வைப்பது நீங்கள் சொல்லியிருப்பது போல நெருடலே.//
   இந்த ஆடுகள் கூட கீழே இருக்கிறது. இன்னொரு ஆடுகள் மேலே மிக உயரத்தில் இருப்பது அங்கிருந்து பார்ப்பது இன்னும் கொடுமை.


   //கொரானா குறித்த அக்கறையின்றி மக்களில் சிலர் அலட்சியமாக இருப்பது வருத்தத்திற்குரியது. இங்கும் பொதுவாக அப்படியான சூழலே உள்ளது.//

   என்ன செய்வது ! கொரானாவும் உலகை விட்டு போக மாட்டேன் என்கிறது.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 15. அன்பின் கோமதி,
  வாழ்க வளமுடன்.

  படங்கள் மிக அற்புதம்.

  ஒரு இடம் தவறாமல் ஒரு மிருகம் விடாமல்
  சிறப்பாகப் படங்கள் வருகின்றன.
  அதூம் அந்தக் காணொளிக் கிளி
  அருமை.
  இந்த ஊரில் எல்லாவற்றையும் பொருள் ஈட்டும்
  வழியாகச் செய்து வைக்கிறார்கள்.

  அதுவும் அந்த வெய்யில் உலகத்தில்
  நிழலில் ஒதுங்கும் மான்கள் மிகப் பாவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

   //படங்கள் மிக அற்புதம்.//

   நன்றி அக்கா.

   //ஒரு மிருகம் விடாமல்
   சிறப்பாகப் படங்கள் வருகின்றன.
   அதூம் அந்தக் காணொளிக் கிளி
   அருமை.//

   மகன் அவன் பார்த்த காட்சிகளை நானும் பார்க்க விரும்பி அழைத்து போகிறான்.
   நான் நாம் எல்லோரும் பார்க்க பதிவு செய்கிறேன்.


   நீக்கு
 16. முகப்புப் படத்திலிருந்து அத்தனை வாசகங்களும்
  மிகவும் ரசிக்கும் படி இருக்கின்றன.

  உணவு கொடுக்கும் முறை திறம்பட செயல் படுகின்றது.
  செயற்கையாகப் பிடித்து வைத்திருப்பதால்
  அவைகளின் இயல்பான சுதந்திரம் போய்

  போட்டியிடும் மனப்பான்மை வளருமோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முகப்புப் படத்திலிருந்து அத்தனை வாசகங்களும்
   மிகவும் ரசிக்கும் படி இருக்கின்றன.//

   ஆமாம்.


   //அவைகளின் இயல்பான சுதந்திரம் போய்

   போட்டியிடும் மனப்பான்மை வளருமோ.//

   அப்படித்தான் வளர்ந்து இருக்கிறது. ஒரு கழுதைக்கு உணவு கொடுக்கும் போது மற்ற கழுதைகள் தள்ளி விட்டு கத்துகிறது.

   பறவைகள் சண்டையிடுகிறது.

   நீக்கு
 17. முகப்புப் படம் மிக அருமை. கடைசிப் படத்தில் மேகம்
  காட்டும் வடிவங்களும் உங்கள் சொற்களும்
  மிகச் சிறப்பு.
  நெருப்புக் கோழி, வாத்து, புறா,கிளிகள், சேவல்,
  மான்,ஆடு,கழுதை எல்லாமே சுகமாக இருக்கின்றன.

  நம் ஊர் மிருகக் காட்சிசாலையிலும்
  உறுமும் சிங்கம் புலி எல்லாமே
  அவைகளின் இருப்பிடத்தை விட்டு
  வேறெங்கோ வந்திருக்கும் தனிமை தெரியும்.

  இங்கே சௌகரியமாக வைத்திருக்கிறார்கள்.
  அந்த விதத்தில் மகிழ்ச்சி.
  மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நம் ஊர் மிருகக் காட்சிசாலையிலும்
   உறுமும் சிங்கம் புலி எல்லாமே
   அவைகளின் இருப்பிடத்தை விட்டு
   வேறெங்கோ வந்திருக்கும் தனிமை தெரியும்.//   மிகவும் பெரிய இடம் . கூட்டத்தோடு வாழ்வதால் தனிமை தெரியாது இவைகளுக்கு என்று நினைக்கிறேன்.


   //இங்கே சௌகரியமாக வைத்திருக்கிறார்கள்.
   அந்த விதத்தில் மகிழ்ச்சி.//
   அவர்களுக்கு பணம் சம்பாதித்து கொடுக்கிறது, அதனால் நன்றாக பார்த்து கொள்வார்கள்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 18. இப்படிப் பட்ட் இடங்களும் இருக்கின்றன..

  அழகான படங்கள்.. விரிவான செய்திகள்.. தங்களால் தெரிந்து கொண்டேன்..

  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

   //இப்படிப் பட்ட் இடங்களும் இருக்கின்றன..//

   ஆமாம்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 19. காணொளி,படங்கள் அனைத்தும் அழகு. ஆடுகள்தான் மனதுக்கு கொஞ்சம் சங்கடத்தை கொடுத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

   காணொளி ,படங்கள் அனைத்தும் அழகு//

   நன்றி மாதேவி.


   //ஆடுகள்தான் மனதுக்கு கொஞ்சம் சங்கடத்தை கொடுத்தது.//

   உண்மை. என்ன செய்வது!

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு