வியாழன், 30 செப்டம்பர், 2021

ஒலிம்பிக் பூங்கா


ஒலிம்பிக் பூங்கா

 ஜார்சியாவில்  அட்லாண்டா   நகரத்தில்  உள்ளது இந்த பூங்கா.
 1896 ஆம் ஆண்டில்  ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடங்கப் பெற்றது.  அதன் நினைவாக 1996  XXVI  ஒலிம்பியாட்  நூற்றாண்டு கால நினைவாக கட்டப்பட்டது.

ஒலிம்பிக்கில் 197 நாடுகளிலிருந்து 10,320 விளையாட்டு வீரர்கள் போட்டியில்  கலந்து கொண்டார்களாம்.

கொரொனா அச்சத்தால் 2020 ல்   இந்த பூங்கா மூடப்பட்டு இருந்தது, இப்போது மீண்டும் மக்கள் பார்வைக்கு திறந்து விட்டு இருக்கிறார்கள்.


இந்த ஊரின் அழகையும் , இந்த பூங்காவின் அழகையும்  பார்க்க  அழைத்துப்  போய் காட்டினாள் மகள்.

அங்குப் பார்த்த காட்சிகள் பகிர்வாய் இந்த பதிவில் இடம் பெறுகிறது.



நூற்றாண்டு விழா  நினைவாக 
1998ல்   15 மில்லியன் அமெரிக்க டாலர்  மதிப்பில்  கட்டி முடிக்கப்பட்டது.

இரவு நேரத்தில் எடுத்த படம். மகள் முன்பு போன போது எடுத்த படம்.  நகர அழகை   பார்க்க ஸ்கை வியூ Ferris Wheel in Atlanta 






தண்ணீர் ஊற்றுக்கள் 
தண்ணீர் கோடு போல விழுவது பார்க்க அழகு







பின் பக்கம்

முன்பக்கம் 
ஆடையில் உள்ள மடிப்புகள் , கால் தூக்கி இருப்பது எல்லாம்    மிக அழகாய் இரும்பிலேயே வடி த்து இருக்கிறார்கள்.
 படியில் விரித்து இருக்கும் கம்பளம் மடிந்து  இருப்பது போன்ற அமைப்பும் இரும்பில் செய்திருப்பது அழகு

குழந்தைகள் மகிழ்ச்சியாக ஓடி விளையாடும் காட்சி அழகு.

தரையில் பதிக்கப்பட்ட கற்களில் பெயர்கள் பொறிக்கப்பட்டு இருக்கிறது.
பூங்கா கட்ட உதவியர்கள் தரையில் பதிக்க கற்கள் வாங்கி கொடுத்து இருக்கிறார்கள், அவர்கள் பெயர்கள் கற்களில் இருக்கிறது.

ஒரு பெண்  நிறைய கட்டைகள் கொண்டு வந்து  நிற்க வைத்தார் , எதற்கு என்றுப் பார்த்தேன்.
கிட்டி புல் போன்ற கம்பை வைத்து, நிற்க வைத்த கட்டைகள் மேல் குறிப் பார்த்து  அடித்தார்.  உடனே வேடிக்கைப் பார்க்க குழந்தைகள் நிறைய வந்து விட்டார்கள். அதிலும் ஒரு சிறுவன் அந்த குச்சியை வாங்கி கொண்டு அவனே போட்டு விளையாடினான். பின் பக்கம் போட்டு. 

ஒரு நிமிடம் கூட வராது இந்த காணொளி,  சிறிய  காணொளிதான் பார்க்கலாம்.

  காவலர்கள் வண்டியில் பூங்கா முழுவது   சுற்றி  கவனித்துக் கொண்டு வருகிறார்கள்.
மரத்தைச் சுற்றி இப்படி போக்கஸ் விளக்கு வைத்து இருக்கிறார்கள், மழைத்தண்ணீர் இறங்க வசதியாக வலைதடுப்பு உள்ளது.

இங்கு அலங்கார நீர் ஊற்றுக்கள் , விளக்குகள் என்று மிக அழகாய் காட்சி அளிக்குமாம். 

மகள் போன போது எடுத்த படம்.

இப்படி வட்டமாக உயர்ந்தும், தாழ்ந்தும் நீறூற்று அழகாய் இருக்குமாம். குழந்தைகள் வளையத்திற்குள் போய் விளையாடுவார்களாம். கொரோனா காலம் என்பதால் அது இப்போது இல்லை .

கார் நிறுத்தும் இடத்தில் தெரிந்த கட்டிடத்தில்  எழுதி இருந்த வாசகம்

இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டத்தின்  நினைவு நாளை குறித்து  வாசகம் எழுதப்பட்டு இருக்கிறது.


                                                       பூங்கா முழுவதும் பசுமை.


விளையாட்டு வீரர்கள் - கல் விசிறி போன்ற தோற்றம்

இரவு வண்ண விளக்கில் அழகாய் காட்சி அளிக்குமாம் 

ஒலிம்பிக் விளக்கை கைகளில் ஏந்தி இருக்கிறார்.

புற்கள் அழகாய் நடபட்டு இருக்கிறது
தூரத்திலிருந்து பார்க்கும் போது ரோஜா மலர்கள் என்று மயங்க வைத்தது
பக்கத்தில் போன பின் தான் அது  ரோஜா இல்லை என்று தெரிந்தது.



மரத்திலிருந்து விழும் காய்களை கொறிக்கிறது அணில்


பூங்காவை சுற்றிப்பார்த்து விட்டு வெளியே வந்தால் இது போன்ற எலக்டரிக் ஸ்கூட்டரில் வலம் வரும் அன்பர்களைப்பார்த்தேன்.

வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று மகள் சொன்னாள். எல்லா இடங்களிலும்  வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

டிராம் வண்டியை தொடரும் ஸ்கூட்டர் பெண்

மார்டின் லூதர் கிங் அவர்கள் சொன்னதை சுவரில் சித்திரமாக வரைந்து வைத்து இருக்கிறார்கள்.( கார் நிறுத்தி வைக்கும் பகுதிக்கு எதிர் சுவர்)

உங்களால்  பறக்க முடியவில்லை என்றால் ஓடுங்கள்,  ஓடமுடியவில்லை எனில்  நடந்து செல்லுங்கள்,   இல்லையேல்  தவழ்ந்தாவது  செல்லுங்கள், எதை செய்தாவது முன்னேறி செல்லுங்கள். 

நன்றாக சொல்லி இருக்கிறார்.




வாழ்க வையகம் !  வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------------------------

37 கருத்துகள்:

  1. நேரடியாக பார்ப்பது போன்று அருமையான படங்கள்...விளக்கங்கள்.பகிர்தமைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  2. படங்கள் அழகு
    தெளிவு
    பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. அருமை... அழகான பூங்கா... அதை படங்கள் மேலும் மெருகூட்டுகின்றன...

    பதிலளிநீக்கு
  4. மார்ட்டின் லூதர்கிங்கின் வாசகம் அருமை.  ஊக்கப்படுத்தும் வாசகம்.  இடங்கள் விஸ்தாரமாய், நல்லபடி பராமரிக்கப்பட்டு சுத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //மார்ட்டின் லூதர்கிங்கின் வாசகம் அருமை. ஊக்கப்படுத்தும் வாசகம்.//

      ஆமாம்.


      //இடங்கள் விஸ்தாரமாய், நல்லபடி பராமரிக்கப்பட்டு சுத்தமாக இருக்கிறது.//

      சுத்தப்படுத்த வண்டிகளில் பூங்கா முழுவதும் சுற்றி வருகிறார்கள். மரத்திலிருந்து இலை விழுந்து கொண்டே இருக்கிறது, சுத்தம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.


      நீக்கு
  5. அணில் கூட சிலையோ என்று எண்ண  வைத்தது.  மடிந்த கம்பளம், தூக்கிய கால் என்று தத்ரூபமாக சிலை வடிக்கிறார்களே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அணில் கூட சிலையோ என்று எண்ண வைத்தது.//

      ஆஹா ! நன்றி.

      //மடிந்த கம்பளம், தூக்கிய கால் என்று தத்ரூபமாக சிலை வடிக்கிறார்களே..//

      ஆமாம், நன்றாக இருந்தது அதனால் தான் அந்த படங்களை பகிர்ந்து கொண்டேன். அவர் கையில் இருக்கும் தொப்பியும் ஒரு இடத்தில் அமுங்கி தத்ரூபமாக இருக்கும்.

      நீக்கு
  6. இவ்வளவு சுத்தமாக நம்மூரில் வைத்திருக்க பொதுமக்களே ஒத்துழைக்க மாட்டார்கள்.  என்ன பிரம்மாண்டம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இவ்வளவு சுத்தமாக நம்மூரில் வைத்திருக்க பொதுமக்களே ஒத்துழைக்க மாட்டார்கள். என்ன பிரம்மாண்டம்...///

      சுத்தமாக வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  7. எல்லாப் படங்களும் அழகு.  ரசிக்க வைத்தன.  இரட்டை கோபுரம் தகர்க்கபப்ட்ட நாளை அவர்கள் அவ்வளவு நினைவில் வைத்திருக்கிறார்கள். நாம் எவ்வளவு நினைவில் வைக்கவேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாப் படங்களும் அழகு. ரசிக்க வைத்தன.//

      நன்றி.

      //இரட்டை கோபுரம் தகர்க்கபப்ட்ட நாளை அவர்கள் அவ்வளவு நினைவில் வைத்திருக்கிறார்கள். நாம் எவ்வளவு நினைவில் வைக்கவேண்டும்...//

      ஆமாம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. படங்கள் அத்தனையும் மிக அழகாக இருக்கின்றன. ஒவ்வொன்றும் போட்டி போடுகின்றன. அங்குள்ள இடங்களும் எத்தனை அழகாகச் சுத்தமாக இருக்கின்றன.

    விவரங்களும் படங்களும் அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழக வளமுடன்

      நீங்கள் சொல்வது சரிதான். பராமரிக்க படாத விழாக்காலங்களில் மட்டும் அலங்கரிக்கப்படும் பூங்காக்களும் இருக்கிறது. இந்த பூங்கா நகரத்தின் மையத்தில் இருக்கிறது. நிறைய பார்வையாளர்களை கொண்டு இருக்கிறது. கவனிக்க நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். (சுத்தம் செய்ய) பச்சைபுல்வெளியை அழகாய் வைத்து இருக்கிறார்கள் ஊர் முழுவதும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. கோமதிக்கா படங்கள் அத்தனையும் மிக மிக அழகாக இருக்கின்றன.

    படியில் விரித்து இருக்கும் கம்பளம் மடிந்து இருப்பது போன்ற அமைப்பும் இரும்பில் செய்திருப்பது அழகு//

    நம்பவே முடியவில்லை அக்கா.

    அதே போன்று படி ஏறுபவரின் உடை பேன்ட் சுருக்கம் மடிப்பு எல்லாம் தத்ரூபமாக அத்தனை நேர்த்தியாக இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //அதே போன்று படி ஏறுபவரின் உடை பேன்ட் சுருக்கம் மடிப்பு எல்லாம் தத்ரூபமாக அத்தனை நேர்த்தியாக இருக்கிறது//

      ஆமாம், கீதா. நன்றாக சிலை வடிப்பவர் கவனத்தில் கொண்டு செய்து இருக்கிறார்.



      நீக்கு
  10. குழந்தைகள் விண்ளையாடுவதும் குட்டிப்பாப்பா குச்சியைப் பின்பக்கம் போடும் காணொளி எல்லாமே அழகு...

    பாருங்க பூங்காவைக் காவலர்கள் சுற்றி வருகிறார்கள். இங்கும் இது போன்று செய்யலாம்.

    நீரூற்று - உங்கள் மகள் எடுத்திருக்கும் படம் வளையம் உள்ளே சென்று விளையாடுவது ஆஹா போட வைக்கிறது...கொரோனா போய் அவர்கள் விளையாட வேண்டும்.

    கட்டிடத்தில் - நெவர் ஃபர்கெட்!! இரட்டைக் கோபுரம் தகர்ந்த நாளை நினைவு நாளைக் குறித்து...அவர்கள் எதையும் மறப்பதில்லை!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி பிடித்து இருக்கா? மகிழ்ச்சி.

      //நீரூற்று - உங்கள் மகள் எடுத்திருக்கும் படம் வளையம் உள்ளே சென்று விளையாடுவது ஆஹா போட வைக்கிறது...கொரோனா போய் அவர்கள் விளையாட வேண்டும்.//

      மகன் ஊரிலும் இது போன்ற நீர் விளையாட்டு உண்டு முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.

      அங்கு இப்போது விளையாட ஆரம்பித்து விட்டார்கள். இங்கு இன்னும் பயம் இருக்கிறது.

      முன்பு ஒரு கலவரம் நடந்தது நினைவு இருக்கலாம் இனபோராட்டமாக நடந்தது, அதனால் காவலர்கள் தினம் வலம் வருகிறார்கள்.

      இனி இப்படி நடக்காமல் இருக்க வேண்டும்.

      நீக்கு
  11. விளையாட்டு வீரர்கள் விசிறி போன்ற அமைப்பு...ஒலிம்பிக் வளையம் நட்சத்திரம் தூண் புற்களைக் கூட அழகாக நட்டு வைத்திருப்பது, மலர்கள், கொறிக்கும் அணில் எல்லாமே அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகிர்ந்த படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
      போகும் இடங்களில் எல்லாம் அணிலை பார்க்கிறேன். அவை சில நேரம் காமிரவில் சிக்கும், சிலநேரம் தவும் படம் கிடைக்கும்.

      நீக்கு
  12. ஆமாம் அக்கா அங்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இப்படி அதில் எல்லோரும் வளைய வருவார்கள்.

    என்ன செய்தாலும் முன்னெறிக் கொண்டே இருங்கள்!!! நல்ல வாசகம்!!!

    அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆமாம் அக்கா அங்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இப்படி அதில் எல்லோரும் வளைய வருவார்கள்.//

      காரை மனிகணக்கில் நிறௌத்த வாடகை கொடுக்க வேண்டும் அதற்கு தனி மனிதராக சுற்றிப்பார்க்க இந்த வண்டிகள் வசதி.

      //என்ன செய்தாலும் முன்னெறிக் கொண்டே இருங்கள்!!! நல்ல வாசகம்!!!//

      முன்னேற வேண்டும் தானே! முடங்கி விடாமல் இருக்க முயற்சி தேவை.
      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. ஒலிம்பிக் பூங்காவின் படங்கள் ஒவ்வொன்றையும் நல்ல தெளிவுடன் எடுத்துள்ளீர்கள். எல்லாவற்றையும் பெரிதாக்கி ரசித்துப் பார்த்தேன். பூங்காவை சுத்தமாக பராமரித்து வருகிறார்கள். நம்மூரில் ஒரு மழை பெய்தால் சில பூங்காக்கள் மழை நீர் வற்றுவதற்குள் உள்ளே செல்ல இயலாது. உடனடியாக அங்கு மழை நீர் வடிவதற்கு கூட ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள்.

    அது சிலை மாதிரியே தெரியவில்லை. மடிந்த கால்களுடன் ஆடைகளும், சற்று மடிந்த கம்பளமுமாக இரும்பிலேயே செய்திருக்கும் விதம் அழகாக உள்ளது. அவர் கையில் வைத்திருக்கும் தொப்பியும், சற்று விரலினால் அழுந்தியது போன்ற தோற்றத்துடன் காணப்படுவது அழகு.

    பூங்காவின் பசுமையும். குழந்தைகள் விளையாடுமிடமும் அழகாக உள்ளது. தரையில் உதவியாளர்களின் பெயர்களை பொரித்து வைத்திருப்பதும் அழகு.

    அணில் அழகாய் நிதானமாக காய்களை கொரிக்கிறது. ரோஜா மலர்களைப்போல தோற்றமளிக்கும் மலர்கள் நல்ல கலராக உள்ளது.

    இந்த மாதிரி வாடகை ஸ்கூட்டர்கள் வெளி நாடுகளில் பயணிக்க இனிது. அங்குள்ள டிராபிக் வசதிகள் அந்த மாதிரியான பயணம் இனிதாக்க உதவும். மார்டின் லூதர் கிங் சொன்ன வாசம் நன்றாக உள்ளது. பொறுமையாக எடுத்த படங்களை பகிர்ந்து, அங்குள்ள ஒவ்வொரு பயன்பாட்டையும் விபரமாக விவரித்து நீங்கள் எங்களையும் ஒலிம்பிக் பூங்காவை சுற்றிப்பார்க்க செய்து விட்டீர்கள்.உங்களுடன் சுற்றிப்பார்த்த திருப்தியான உணர்வு எனக்குள்ளும் எழுந்தது. பாராட்டுக்கள் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமையாக உள்ளது. ஒலிம்பிக் பூங்காவின் படங்கள் ஒவ்வொன்றையும் நல்ல தெளிவுடன் எடுத்துள்ளீர்கள். எல்லாவற்றையும் பெரிதாக்கி ரசித்துப் பார்த்தேன்.//

      நன்றி.

      //மழை நீர் வற்றுவதற்குள் உள்ளே செல்ல இயலாது. உடனடியாக அங்கு மழை நீர் வடிவதற்கு கூட ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள்.//

      ஆமாம், மழை நீர் பூமிக்கும் போகும், தேங்கியும் நிற்காது.
      சிலையை நன்கு ரசித்து கருத்து சொன்னது அருமை.


      //பூங்காவின் பசுமையும். குழந்தைகள் விளையாடுமிடமும் அழகாக உள்ளது. தரையில் உதவியாளர்களின் பெயர்களை பொரித்து வைத்திருப்பதும் அழகு.//

      நம் ஊரில் மதுராவில் பல வருடங்களுக்கு முன் பார்த்தேன் இந்த மாதிரி நம் பெயரில் சலவை கல் பதிப்பார்கள் பணம் கொடுத்தால். அது போல பூங்காவில் மரங்கள்வைக்கிறார்கள், அமர கல் ஆசனங்கள் வைக்கிறார்கள், நடைபாதையில் கல் புதைக்கிறார்கள். நம் ஊரில் புண்ணியம் தேடி செய்வது போல அங்கும் செய்கிறார்கள். தங்கள் முன்னோர்கள் நினைவாக செய்கிறார்கள்.

      மார்டின் லூதர்கிங் வாசகம் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

      உங்கள் பாராட்டுக்களுக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி.









      நீக்கு
  14. அன்பின் கோமதி மா
    வாழ்க வளமுடன்.
    அற்புதமான படங்கள்.

    எத்தனை கலை வடிவங்கள்!! அதற்கான முயற்சியில்
    பிரமாத வெற்றி கண்டிருக்கிறார்கள்.
    ஒவ்வொரு சிலையும், சிவப்புக் கம்பள மடிப்பு
    செதுக்கி இருப்பதும் விவரிக்க முடியாத
    அருமை.

    ஒலிம்பிக் நடந்ததும் நினைவில் இருக்கிறது.
    முழுக்க முழுக்க தொலைக் காட்சி முன் உட்கார்ந்து
    கண்டு களித்ததும் நினைவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      //அற்புதமான படங்கள்.//

      நன்றி அக்கா

      //எத்தனை கலை வடிவங்கள்!! அதற்கான முயற்சியில்
      பிரமாத வெற்றி கண்டிருக்கிறார்கள்.
      ஒவ்வொரு சிலையும், சிவப்புக் கம்பள மடிப்பு
      செதுக்கி இருப்பதும் விவரிக்க முடியாத
      அருமை.//

      ஆமாம் அக்கா , நன்றாக செய்து இருக்கிறார்கள்.

      //ஒலிம்பிக் நடந்ததும் நினைவில் இருக்கிறது.
      முழுக்க முழுக்க தொலைக் காட்சி முன் உட்கார்ந்து
      கண்டு களித்ததும் நினைவில்.//

      கண்டு களித்த நினைவுகள் வந்து விட்டதா?
      மகிழ்ச்சி.

      நீக்கு
  15. மரங்களும் பசுமையான புல்வெளியும், நீரூற்றுகளும் தெவிட்டாத
    இன்பம். அனேகமாக இது போலப்
    பூங்காக்கள்
    எல்லா ஊரிலும் இருந்தாலும் ஒலிம்பிக்
    நினைவுப் பூங்கா என்பதால் இந்த ஊருக்குத் தனிச் சிறப்பு.!!

    கோடுகளாக விழும் நீரூற்றுகளும்,
    மழை நீர் வடிகாலோடு இருக்கும் மரங்களும்

    நல்ல திட்ட அமைப்பைச் சொல்கின்றன.

    பூங்காவில் ஒரு படத்தில் தம்பதிகளில்
    அந்தப் பெண்மணி கன்னத்தில்
    கைவைத்துக் கணவர் சொல்வதைக் கேட்பது போல எனக்குத் தோன்றியது:)

    குழந்தைகள் விளையாடும் படமும் சின்னக் காணொளியும்
    அருமை.
    கிட்டிப்புள் நல்ல ஐடியா. அதுவும் அந்தக் குழந்தை நாம் திரும்பி நின்று சில்லுக்கட்டியை எறிவோமே....அது போலச் செய்வது
    சிரிப்பு வந்தது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மரங்களும் பசுமையான புல்வெளியும், நீரூற்றுகளும் தெவிட்டாத
      இன்பம். அனேகமாக இது போலப்
      பூங்காக்கள்
      எல்லா ஊரிலும் இருந்தாலும் ஒலிம்பிக்
      நினைவுப் பூங்கா என்பதால் இந்த ஊருக்குத் தனிச் சிறப்பு.!!//

      ஆமாம். இங்கு ஒவ்வொரு பூங்காவும் ஒன்றை நினைவு கொள்ள அமைத்து இருக்கிறார்கள்.

      வீட்டுக்கு அருகில் ஒரு பார்க் போனோம், யுத்தம் எப்போது எல்லாம் நிகழ்ந்தது என்பதை சொல்லும் பூங்கா.

      //பூங்காவில் ஒரு படத்தில் தம்பதிகளில்
      அந்தப் பெண்மணி கன்னத்தில்
      கைவைத்துக் கணவர் சொல்வதைக் கேட்பது போல எனக்குத் தோன்றியது:)//

      நல்ல கவனிப்பு!

      //குழந்தைகள் விளையாடும் படமும் சின்னக் காணொளியும்
      அருமை.//

      தூரத்திலிருந்து எடுத்தேன்.
      அந்த குழந்தை நீங்கள் சொல்வது போல் பாண்டி விளையாட்டில் பின் பக்கம் போடுவது போல் போடுகிறாந்தான். குழந்தைகள் விளையாடுவதை பார்த்தால் கவலையை மறந்து சிரிக்கலாம்.

      நிறைய காட்சிகள் எடுத்தேன், தலை முடியை ஒருவர் வெகு அழகாய் பின்னி இருந்தார் அதை எடுத்தேன். ஒருவர் பெரிய நாயை கொண்டு வந்து இருந்தார் அதை எடுத்தேன். படங்கள் அதிகமாகி விட்டதால் போட வில்லை. மரங்கள் ஒவ்வொன்றும் அழகாய் இருந்தது. அந்த ஊரின் பெரிய கட்டிடங்களை எடுத்தேன்.







      நீக்கு
  16. பூங்காவைச் சுற்றி வரும் காவலர்கள் தேவைதான்.
    கவனமாக இருக்க வேண்டியது நம் பொறுப்பு. விபத்துகள்
    இல்லாமல் கடவுள் தான் காக்க வேண்டும்.

    அணில் படம் அழகோ அழகு.
    பார்த்துப் பார்த்துப் படங்கள் எடுத்திருக்கிறீர்கள்.
    அதுவும் மார்டின் லூதர் கிங் வாசகமும், 9/11
    வாசகமும் மிக அருமை.


    Keep on Moving....Forward.
    எல்லா இனத்துக்கும் தேவையான அரிய வாசகம்.
    அதுவும் அந்த இனத்திற்கு நடந்த

    வருத்தங்களைக் கடக்க வைக்கும் ஊக்கம் அவருக்கு இருந்திருக்கிறது.
    மிக நன்றி கோமதிமா. அருமையான சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பூங்காவைச் சுற்றி வரும் காவலர்கள் தேவைதான்.
      கவனமாக இருக்க வேண்டியது நம் பொறுப்பு. விபத்துகள்
      இல்லாமல் கடவுள் தான் காக்க வேண்டும்.//

      கடவுள் காப்பார்.

      //அணில் படம் அழகோ அழகு.
      பார்த்துப் பார்த்துப் படங்கள் எடுத்திருக்கிறீர்கள்.//

      நன்றி.


      //வருத்தங்களைக் கடக்க வைக்கும் ஊக்கம் அவருக்கு இருந்திருக்கிறது.//

      ஆமாம் . எல்லோருக்கும் பொருந்தும் வாசகம்தான்.

      பதிவை ரசித்து படித்து படங்களை ரசித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அக்கா.




      நீக்கு
  17. அருமையான புகைபடங்கள். நேரில் பார்பது போன்ற உணர்வு. ஆடையில் உள்ள மடிப்புகள் இரும்பிலா? தத்ரூபம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. // உங்களால் பறக்க முடியவில்லை என்றால் ஓடுங்கள்.ஓடமுடியவில்லை எனில் நடந்துசெல்லுங்கள், இல்லையேல் தவழ்ந்தாவது செல்லுங்கள், எதை செய்தாவது முன்னேறி செல்லுங்கள்.. //


    மார்ட்டின் லூதர் கிங் அவர்களது அறிவுரையுடன் இன்றைய பதிவு சிறப்பு..

    வாழ்க வளமுடன்..
    வாழ்க வையகம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //மார்ட்டின் லூதர் கிங் அவர்களது அறிவுரையுடன் இன்றைய பதிவு சிறப்பு..//

      மனம் தளர்ந்து இருக்கும் போது உற்சாகம் கொடுக்கும் வாக்கியம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.
      வாழ்க வையகம்.

      நீக்கு
  19. நன்றாக பராமரிக்கிறார்கள்.படங்களும் வாசகங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு