மாலை நேரம் இந்த பூங்காவிற்கு போனோம், நடைப்பயிற்சி செய்ய . ஊர் முழுவதும் மிக அழகிய பூங்காக்கள் இருக்கிறது.
வீட்டுக்கு அருகே இருக்கும் பூங்கா இது. (காரில் போனால் 10 நிமிடம்)
வெகு அழகான பூங்கா. இரு பக்க மரங்களும் வசந்த காலத்தில் வெள்ளைப்பூக்கள் பூத்து குலுங்குவது பார்க்க அழகாய் இருக்குமாம், இப்போது மரம் இலைகளை உதிர்த்துவிட்டு குச்சி குச்சியாக நிற்கிறது.
நடைபாதை வெகு தூரம் போகிறது. ஒரு பாதியை ஒரு நாளும், மறுபாதியை இன்னொரு நாளும் நடந்து கடக்கும் போது பார்த்த காட்சிகள் இந்த பதிவில்.
மிகவும் நன்றாக பராமரிக்கப்படுகிறது
இயற்கை அன்னை வரைந்த வண்ணக்கோலம் அழகு,
வானம் வர்ணஜாலம் செய்து அந்த இடத்தை அழகு படுத்தி இருந்தது. குழந்தைகள் குதுகலமாக விளையாடி கொண்டு இருந்தார்கள்.
நிறமாறி வரும் மரங்கள் பார்க்க அழகு
மாலை நேர மஞ்சள் வெயிலில் மரத்தில் சில பறவைகளைப் பார்த்தேன்.
மாலை நேர மஞ்சள் வெயிலில் மரத்தில் சில பறவைகளைப் பார்த்தேன்.
இந்த பறவை மணிப்புறா
இந்த பறவைக்கு கழுத்து பகுதி கருப்பாக இருக்கிறது.
இந்த பறவைக்கு கழுத்து வெள்ளையாக இருக்கிறது
இந்த பறவைக்கு கழுத்து பகுதி கருப்பாக இருக்கிறது.
இந்த பறவைக்கு கழுத்து வெள்ளையாக இருக்கிறது
கூடாரத்தில் அமர்ந்து கொள்ள நிறைய பெஞ்சுகள் போட்டு இருக்கிறது. இங்கு சில விழாக்கள் நடக்குமாம்.
டென்னிஸ் விளையாடுவார்களாம், அதற்கு தனியாக பெரிய இடம் இருக்கிறது இங்கு
அழகான வாழை
மாலை நேரம் காலையில் மலர்ந்த வெள்ளைச் செம்பருத்தி தன் இதழ்களை மூடப்போகிறது.
மரத்தின் பச்சை இலைகள் நிறம்மாறி வருகிறது, பச்சைப்புல்வெளி கண்ணுக்கு குளிர்ச்சி.
பாதையில் மழைத்தண்ணீர் தேங்காமல் இருக்க வசதியாக கால்வாய் வழியாக ஓடி ஆற்றில் கலக்க ஏற்பாடு
மாலை நேரம் பூங்காவில் பறவைகள் உற்சாக குரல் எழுப்பி மரங்களை சுற்றி வருகிறது. நாலாப்பக்கமும் இருந்து பறவைகள் பறந்து வருகிறது. அவை பறக்கும் விதம் வியப்பைத் தருகிறது. போர் வியூகம் அமைப்பது போல் இருக்கிறது.
பறக்கிறது அப்புறம் அமர்கிறது, மீண்டும் உற்சாகமாக பறக்கிறது. 30 நிமிடங்களுக்கு மேல் பார்த்துக் கொண்டு இருந்தோம். மனமே இல்லை அங்கு இருந்து கிளம்ப. இருட்ட ஆரம்பித்து விட்டது. நாங்கள் போகும் போது மணி ஏழு ,அப்போது நன்கு வெளிச்சமாக இருந்தது.
எல்லாம் ஒரே வகைப் பறவை. அவை கூட்டமாக அந்த மரங்களில் வசிக்கிறது போலும். நடைப்பயிற்சிக்குதானே என்று காமிரா எடுத்து போகவில்லை. அலைபேசியில்தான் எடுத்தேன்.
பேரனுடன் நடைப்பயிற்சிக்கு செல்லும் போது சில நேரம் காமிரா கொண்டு போக மாட்டேன். ஏதாவது பறவையைப்பார்த்தால் "காமிரா கொண்டு வந்து இருக்கலாம் கொண்டு வரவில்லையே" என்பேன். பேரன் வீட்டுக்கு வந்து மகனிடம் "காமிரா கொண்டு வரவில்லை ஆச்சி, அந்த பறவை அழகாய் இருந்தது எடுக்கமுடியவில்லை என்றார்கள்" என்று சொல்லும் போது மகன் "எங்கு வெளியில் போனாலும் போகும் போது கொண்டு போங்கள் காமிராவை" என்று சொல்வான் . இதை மகளிடம் சொல்லிக் கொண்டே இனி இந்த பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்கு வரும் போது காமிரா கொண்டு வர வேண்டும் என்றேன்.
மாலை நேரம் இந்த பூங்காவிற்கு அழைத்து சென்றதற்கு மகளுக்கு நன்றி சொன்னேன்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.
-------------------------------------------------------------------------------------------------
அருகிலேயே இவ்வளவு பெரிய நடைப்பூங்காவா? அருமையாய் இருக்கிறது பார்க்க. ஒரு நாளில் பார்க்க முடியாத அளவு பெரிதா? நடைப்பயிற்சிக்கு வசதி. மனதுக்கும் இதம்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//அருகிலேயே இவ்வளவு பெரிய நடைப்பூங்காவா? அருமையாய் இருக்கிறது பார்க்க.//
ஊர் முழுவதும் அழகான பூங்காக்கள் நிறைய இருக்கிறது.
// ஒரு நாளில் பார்க்க முடியாத அளவு பெரிதா? நடைப்பயிற்சிக்கு வசதி. மனதுக்கும் இதம்.//
தினம் நடைபாதை முழுவதும் நடந்து வருகிறார்கள். நடக்க முடிந்த தூரம் தான். நாங்கள் வானத்தை வேடிக்கைப்பார்த்து கொண்டு , பறவைகளை பார்த்துக் கொண்டு இருந்ததில் நேரம் போய்விட்டது.
நீங்கள் சொல்வது போல் மனதுக்கு இதம். மாலை 5 மணி போல போனால் மெதுவாக நடந்து வரலாம்.
வானத்தில் தெரியும் வர்ணஜாலங்கள் எப்போதுமே நம்மை ஈர்க்கும். படமெடுக்காமல் இருக்க முடியாது. அதுவும் மறைக்கும் கட்டிடங்கள் எதுவும் இல்லாமல் நீண்ட வெட்ட வெளியில் தெரியும் மாலை நேர ஆகாயம்.. ஆஹா..
பதிலளிநீக்குவானத்தில் தெரியும் வர்ணஜாலங்கள் எப்போதுமே நம்மை ஈர்க்கும். படமெடுக்காமல் இருக்க முடியாது. //
நீக்குஉண்மைதான்.
//அதுவும் மறைக்கும் கட்டிடங்கள் எதுவும் இல்லாமல் நீண்ட வெட்ட வெளியில் தெரியும் மாலை நேர ஆகாயம்.. ஆஹா..//
இயற்கை அள்ளி தரும் காட்சிகளை ரசிக்க தடை செய்யும் கட்டிடங்கள் இல்லைதான்.
குழந்தைகள் மாலை நேரம் விளையாடுவதை பார்ப்பதே ஆனந்தம்தான்.
உங்கள் அபிமான பறவைகள், 'இதோ நான் இங்கு இருக்கிறேன்' என்றனவோ?!! அடுக்கு வாழை அழகாய் இருக்கிறது. இப்படிக் கொத்தாய்ப் பார்த்ததில்லை. காய்காய்க்குமோ? இல்லை அழகுக்காகவா?
பதிலளிநீக்கு//உங்கள் அபிமான பறவைகள், 'இதோ நான் இங்கு இருக்கிறேன்' என்றனவோ?!! //
நீக்குஆமாம். எங்கு சென்றாலும் பறவைகள் தேடும் கண்கள்.
//அடுக்கு வாழை அழகாய் இருக்கிறது. இப்படிக் கொத்தாய்ப் பார்த்ததில்லை. காய்காய்க்குமோ? இல்லை அழகுக்காகவா?//
தெரியவில்லை. மீண்டும் போனால் தெரியும். பக்கத்தில் இருக்கிறது என்றாலும் அடிக்கடி போக முடியாமல் இருக்கிறது. ஊட்டி போல அடிக்கடி மழை பெய்கிறது.
குளிர் வந்து விட்டால் மாலை 7 மணிக்கு மேல் போக முடியாது. 7மணிக்கு மேல்தான் இருட்ட ஆரம்பிக்கிறது என்றாலும் தனித்து வீட்டிலிருந்து போய் பார்க்க முடியாது.
காணொளிகள் பேஸ்புக்கில் பார்த்தேனோ? பறவைகள் கூட்டமாய் பறந்து திரும்புவது அரிய காட்சி. ஆம், எங்கு சென்றாலும் கேமிராவுடன் சென்றால் நிறைய காட்சிகளை படம் பிடிக்கலாம்.
பதிலளிநீக்குகாணொளிகள் பேஸ்புக்கில் போட்டேன். மாலை நேர வானின் வர்ணஜாலங்கள் போட்டேன். பொன்மாலை பொழுது ! என்று சொன்னீர்கள்.
நீக்கு//ஆம், எங்கு சென்றாலும் கேமிராவுடன் சென்றால் நிறைய காட்சிகளை படம் பிடிக்கலாம்.//
தூரத்து காட்சிகளை பாடம் பிடிக்க காமிரா வேண்டி இருக்கிறது. ஒருநாள் போன போது தூரத்தில் இந்த பறவைகள் பறப்பதைப் பார்த்தேன். மறு நாள் அதை எடுக்க காமிரா கொண்டு சென்று இருக்கலாம் நினைவு இல்லை. இடுப்புவலிக்கு ஒட்டியானம் போல் பெல்ட் அணிந்து கொண்டுதான் நடக்கிறேன். குழந்தைகளுக்கு அம்மாவுக்கு அழகிய இடங்களை காட்ட ஆசை. நானும் பார்த்து ரசித்து முடிந்தவரை பதிவு செய்கிறேன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
பகிர்வு அருமை
பதிலளிநீக்குபடங்கள் அழகோ அழகு
வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குபகிர்வை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
அழகிய காட்சிகள்... மிகவும் ரசித்தேன்...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//அழகிய காட்சிகள்... மிகவும் ரசித்தேன்//
நன்றி.
இரு காணொளிகளும் அருமை...
பதிலளிநீக்குஇரு காணொளிகளையும் ரசித்து பார்த்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி தனபாலன்.
நீக்குஅலைபேசியில் எடுத்த படங்களே இவ்வளவு அழகாக இருக்கிறதே...
பதிலளிநீக்குவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
நீக்குபுதிய அலைபேசி மகன் வாங்கி தந்தான், அதிகபடியான ஜூம் செய்யும் வசதி இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கோமதிக்கா படங்கள் அத்தனையும் அழகு சொர்கம்! குறிப்பாக வானத்தின் வர்ண ஜாலங்கள்!
பதிலளிநீக்குவானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன் மாலை பொழுது!!
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
மாலையில் வானங்கள் கோலமிடும் (இந்த வரி மட்டும் மாற்றியுள்ளேன்)
பாடும் பறவைகள் தாளமிடும்
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்//
இப்பாடலின் இந்த வரிகள் நினைவுக்கு வந்தன அக்கா
படங்களைப் பார்த்ததும்.
வானத்தின் வர்ண் ஜாலங்கள் என்ன அழகு! கவித்துவமாக இருக்கிறது
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//கோமதிக்கா படங்கள் அத்தனையும் அழகு சொர்கம்! குறிப்பாக வானத்தின் வர்ண ஜாலங்கள்!//
நன்றி.
//இப்பாடலின் இந்த வரிகள் நினைவுக்கு வந்தன அக்கா
படங்களைப் பார்த்ததும்.//
உங்களை போன்ற இசைபிரியருக்கு பாடல்கள் நினைவுக்கு வரவில்லையென்றால்தான் ஆச்சிரியம்.
//மாலையில் வானங்கள் கோலமிடும் (இந்த வரி மட்டும் மாற்றியுள்ளேன்)//
அருமை.
//வானத்தின் வர்ண் ஜாலங்கள் என்ன அழகு! கவித்துவமாக இருக்கிறது//
கவியும்தான் வருகிறதே! உங்களுக்கு. பன்முக திறமை உள்ளவர் நீங்கள்.
பார்க் மிக மிகச் சுத்தமாக இருக்கிறது
பதிலளிநீக்குமூன்றாவதாக உள்ள பறவை நம்மூர் சிட்டுக் குருவி கொஞ்சம் உடம்பு பூசினாற்போல்!! இருக்கு!
காணொளி அருமை. இங்கும் ஏரிக்கரையில், அது போன்று நான் கிராமத்தில் இருந்தப்ப என்று இப்படிப் பறவைகள் ஒரு பேட்டர்ன் வைத்துப் பறக்கும். அவ்வப்போது பேட்டர்ன் உருவத்தை மாற்றும் அப்படியே ஏதோ இராணுவப் பயிற்சியில் வீரர்கள் ஒண்ணு போல செய்வது போல விமானப் பயிற்சியில் எல்லா விமானங்களும் ஒரே போன்று பறந்து வட்டமடுக்குமே அது போலப் பறவைகள் செய்யும். கொஞ்சம் கூடக் கலையாது.
அத்தனை ஒரு அழகான வ்யூகம் அமைத்துப் பறக்கும். இங்கும் இப்படிக் காண்பதுண்டு ஆனால் படம் எடுத்த போது என் கேமராவின் பவர் குறைவு என்பதால் பறவைகள் புள்ளிகளாகத் தெரிகின்றனவே தவிர தெளிவாக இல்லை. ஜூம் பண்ணி எடுத்தும்...
நானும் அதைப் பார்த்துக் கொண்டு இருப்பேன் அக்கா. ஒரு ஏரியிலிருந்து மற்றொரு ஏரிக்கோ அல்லது பகுதிக்கோ கொக்கு/நாரைகள் பறக்கும் போது கரெக்ட்டாக ஒற்றை எண்ணில் தான் பறக்கும் 1, 3, 5, 7 என்ற ரீதியில். அதுவும் ஒரே போன்று ஒரு வடிவத்தில்தான் பறக்கும். ஆங்கில எழுத்து வொய் போன்று யு போன்று வி போன்று, இப்படி....
ரொம்ப அழகாக இருக்கும் பார்க்கவே. அது போன்று மரத்தில் இருந்து டக்கென்று கோலாட்டம் போடுவது போல் வட்டமாக உள்ளே வெளியே என்று சரியாகக் குழு குழுவாகப் பறந்து டக்கென்று எல்லாம் ஒரே நேரத்தில் மரத்தில் அமரும். மீண்டும் எல்லாம் எழுந்து அதே போன்று பறக்கும்....அவர்களுக்குல் எப்படி அப்படி ஒரு சங்கேத மொழி என்று வியப்பாக இருக்கும். இயற்கை நமக்குக் கற்றுத் தரும் பாடம் எவ்வளவோ நாம் தான் அதை உன்னிப்பாகக் கவனித்துக் கற்க வேண்டும் ...தவற விடுகிறோம்...
அருமையான படங்கள் அக்கா நீங்களும் மிகவும் ரசித்து எழுதியிருக்கீங்க வழக்கம் போல்!
கீதா
//பார்க் மிக மிகச் சுத்தமாக இருக்கிறது//
நீக்குஆமாம்.
//எல்லா விமானங்களும் ஒரே போன்று பறந்து வட்டமடுக்குமே அது போலப் பறவைகள் செய்யும். கொஞ்சம் கூடக் கலையாது.//
இரண்டு இறக்கைகளை விமானம் இறக்கை போல சில நேரம் நேரகாக வைத்து திரும்பும் .// பறவையை கண்டான் விமானம் படைத்தான்//பாடல் நினைவுக்கு வரும்.
//மூன்றாவதாக உள்ள பறவை நம்மூர் சிட்டுக் குருவி கொஞ்சம் உடம்பு பூசினாற்போல்!! இருக்கு!//
வால்பகுதி கொஞ்சம் நீட்டம்.
//நானும் அதைப் பார்த்துக் கொண்டு இருப்பேன் அக்கா. ஒரு ஏரியிலிருந்து மற்றொரு ஏரிக்கோ அல்லது பகுதிக்கோ கொக்கு/நாரைகள் பறக்கும் போது கரெக்ட்டாக ஒற்றை எண்ணில் தான் பறக்கும் 1, 3, 5, 7 என்ற ரீதியில். அதுவும் ஒரே போன்று ஒரு வடிவத்தில்தான் பறக்கும். ஆங்கில எழுத்து வொய் போன்று யு போன்று வி போன்று, இப்படி....//
நானும் இது போல அடிக்கடி பார்த்து படம் எடுத்து வைத்து இருக்கிறேன்.
மகள் வீட்டுத்தோட்டம் வழியாக பக்கத்தில் நாறை கூட்டம் சத்தமிட்டுக் கொண்டு பறந்தது எடுக்க முடியவில்லை, கர்ணன் கவச குண்டலம் போல காமிரா கழுத்தில் தொங்கினால் எடுக்கலாம்.
//பறந்து டக்கென்று எல்லாம் ஒரே நேரத்தில் மரத்தில் அமரும். மீண்டும் எல்லாம் எழுந்து அதே போன்று பறக்கும்....அவர்களுக்குல் எப்படி அப்படி ஒரு சங்கேத மொழி என்று வியப்பாக இருக்கும்//
ஆமாம், அவைகளுக்கு சங்கேத மொழி இருக்கும்.
இயற்கை நமக்கு கற்றுத் தரும் பாடம் தினதோறும் நடக்கிறது கீதா நீங்கள் சொல்வது போல்! நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பாருங்க அங்க மழை நீர் வடிகால் அமைத்து ஆற்றிற்கு விடுறாங்க....நம்மூர் நினைவுக்கு வருகிறது. நிஜமாகவே அங்கு பல நல்ல விஷயங்கள் எப்படிப் ப்ளான் செய்து செய்யறாங்க இல்லையா?
பதிலளிநீக்குகீதா
//நிஜமாகவே அங்கு பல நல்ல விஷயங்கள் எப்படிப் ப்ளான் செய்து செய்யறாங்க இல்லையா?//
நீக்குஆமாம், நல்ல விஷயங்கள் செய்கிறார்கள். நாம் நாட்டில் முன்பு அழகாய் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இப்போது சில இடங்களில் இருக்கிறது.
பேரனுடன் நடைப்பயிற்சிக்கு செல்லும் போது சில நேரம் காமிரா கொண்டு போக மாட்டேன். ஏதாவது பறவையைப்பார்த்தால் "காமிரா கொண்டு வந்து இருக்கலாம் கொண்டு வரவில்லையே" என்பேன். பேரன் வீட்டுக்கு வந்து மகனிடம் "காமிரா கொண்டு வரவில்லை ஆச்சி, அந்த பறவை அழகாய் இருந்தது எடுக்கமுடியவில்லை என்றார்கள்" என்று சொல்லும் போது மகன் "எங்கு வெளியில் போனாலும் போகும் போது கொண்டு போங்கள் காமிராவை" என்று சொல்வான் . இதை மகளிடம் சொல்லிக் கொண்டே இனி இந்த பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்கு வரும் போது காமிரா கொண்டு வர வேண்டும் என்றேன்.//
பதிலளிநீக்குசூப்பர். மிக மிக ரசித்தேன் இந்த அன்பு உரையாடல்களை! இறைவன் எப்போதும் எல்லோரையும் இப்படியே மகிழ்வாக வைத்திருக்க வேண்டும்!
கீதா
//சூப்பர். மிக மிக ரசித்தேன் இந்த அன்பு உரையாடல்களை! இறைவன் எப்போதும் எல்லோரையும் இப்படியே மகிழ்வாக வைத்திருக்க வேண்டும்!//
நீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. வேறு என்ன வேண்டும் வயதானவர்களுக்கு அன்பு உரையாடல் போதும்.
உங்கள் அருமையான விரிவான கருத்துக்களுக்கு நன்றி, நன்றி கீதா.
இனி எங்கு போனாலும் கேமிராவை எடுத்துச் செல்லுங்கள்...எங்களுக்காகவேணும்.
பதிலளிநீக்குஅற்புதமான படங்கள்...வாழ்த்துகள்
வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்
நீக்கு//இனி எங்கு போனாலும் கேமிராவை எடுத்துச் செல்லுங்கள்...எங்களுக்காகவேணும்.
அற்புதமான படங்கள்...வாழ்த்துகள்//
அப்படியே செய்கிறேன்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. நீண்ட நடைபாதையுடன் கூடிய அந்த பூங்கா மிகவும் அழகாக உள்ளது. தினமும் நீங்கள் நடைப்பயிற்சிக்காக செல்லாவிடினும், வாரத்தில் இரண்டு தினங்கள் சனி ஞாயறு களில் குழந்தைகள் துணையுடன் சென்று வரலாம். உங்கள் இடுப்பு வலி இப்போது எப்படி உள்ளது சகோதரி.? வலியுடன் செல்லும் போது அதிக தூரம் நடக்காமல் கவனமாக நடந்து வாருங்கள்.
தாங்கள் அலைபேசியில் எடுத்த வானத்தின் வர்ணஜால படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது. வானம் காலை, மாலை நிறம் மாறும் போது நம் மனதின் அயர்வுகளை மாற்றி, நல்ல உற்சாக மனநிலையை நமக்கு தந்து விடும். எனக்கும் இந்த நிறங்கள் மாறும் போது அதன் அழகை ரசிக்க மிகவும் பிடிக்கும்.
காணொளிகள் மிக அழகாக இருக்கின்றன. எத்தனை பறவைகள் உற்சாகமாக பறந்தும், மரங்களில் அமர்ந்தும், மீண்டும் பறந்தும் அதன் வாழ்வை இனிமையாக ரசிக்கின்றன. பார்க்கவே நன்றாக உள்ளது. அதற்கும் இந்த காலை, மாலை வேளைகள் சூரியனுடன், அவன் வானத்திற்கு மனமுவந்து அன்புடன் போனஸாக தரும் வர்ண ஜாலங்களைப் பற்றி உரையாடிக்கொண்டே களித்து மகிழ பிடிக்கும் போலிருக்கிறது. படங்கள் அழகாக உள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குபதிவு அருமையாக உள்ளது.//
நன்றி.
//சனி ஞாயறு களில் குழந்தைகள் துணையுடன் சென்று வரலாம். உங்கள் இடுப்பு வலி இப்போது எப்படி உள்ளது சகோதரி.? வலியுடன் செல்லும் போது அதிக தூரம் நடக்காமல் கவனமாக நடந்து வாருங்கள்.//
ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான்.
வலி இருக்கிறது. ஒரே இடத்தில் அமர கூடாது, நடக்க வேண்டும் என்கிறார் டாக்டர்.
நின்றும், இருந்தும், கிடந்தும், இறைவனை பணிவோம் என்று பாடும் அடியார்கள் போல் நின்று, அமர்ந்து, படுத்து என்று பொழுதுகளை போக்குகிறேன்.(60 வயதுக்கு மேல் ஆச்சு)
//வானம் காலை, மாலை நிறம் மாறும் போது நம் மனதின் அயர்வுகளை மாற்றி, நல்ல உற்சாக மனநிலையை நமக்கு தந்து விடும்//
ஆமாம். மனம் சோர்வு அடையும் போதெல்லாம் வானத்தில் தோன்றும் காட்சிகள், மரங்களின் அசைவு, காற்றில் அவை அசையும் போது ஏற்படும் சத்தம், மரத்தில் அமரும் பறவைகள் என்று பார்த்து என்னை உற்சாகபடுத்தி கொள்கீறேன்.
//எனக்கும் இந்த நிறங்கள் மாறும் போது அதன் அழகை ரசிக்க மிகவும் பிடிக்கும்.//
நீங்களும் அலைபேசியில் எடுத்து வைத்து இருப்பதாக சொன்னீர்கள். அவற்றை பதிவு போடுங்கள்.
//அதற்கும் இந்த காலை, மாலை வேளைகள் சூரியனுடன், அவன் வானத்திற்கு மனமுவந்து அன்புடன் போனஸாக தரும் வர்ண ஜாலங்களைப் பற்றி உரையாடிக்கொண்டே களித்து மகிழ பிடிக்கும் போலிருக்கிறது. படங்கள் அழகாக உள்ளன. //
ஆஹா! அருமையான சொன்னீர்கள். அப்படித்தான் மகிழ்ச்சியாக இருக்கின்றன அவை.
உங்கள் அழகான கருத்துக்கு நன்றி கமலா.
மஞ்சள் வெயில் மாலையிலே
பதிலளிநீக்குவண்ணப் பூங்காவிலே!..
என்ன அருமையான பாட்டு...
பதிவும் அழகான படங்களுடன் சிறப்பு...
வாழ்க வையகம்..
வாழ்க மகிழ்வுடன்!..
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//என்ன அருமையான பாட்டு...
பதிவும் அழகான படங்களுடன் சிறப்பு...//
ஆமாம், இந்த பாட்டு நன்றாக இருக்கும்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
படங்கள் அழகாக இருக்கின்றன. உங்களுக்கு மட்டும் பறவைகள் ஆற அமர இருந்து போஸ் கொடுக்கின்றன. உங்களுக்கு பறவை மொழி தெரியுமா?
பதிலளிநீக்குநான்காவது போட்டோ பார்த்தபோது தோன்றியது
மரங்கள்
தீப்பந்தல்கள்.
வானத்தில் தீ நாக்குகள்.
ஊருக்கே வெளிச்சம்.
வணக்கம் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்குபடங்கள் அழகாக இருக்கின்றன.
நன்றி.
உங்களுக்கு மட்டும் பறவைகள் ஆற அமர இருந்து போஸ் கொடுக்கின்றன.
அவை அமர்ந்து இருக்கும் போது படம் எடுக்கிறேன், சில நேரம் நான் ஜூம் செய்து எடுக்கலாம் என்று நினைக்கும் போது ஏமாற்றி பறந்து விடும்.
சில நேரம் ஏதோ யோசனையுடன் ஏகாந்த சேவை செய்து கொண்டு இருக்கும்
அப்போது நல்ல படம் கிடைக்கும்.
உங்களுக்கு பறவை மொழி தெரியுமா?
பறவை மொழி தெரியாது என் மொழியில் பேசுவேன் அவைகளுடன் வாங்க , வந்து அமருங்கள் , என்பேன் எங்கு போனாலும் கண்கள் பற்வையை தேடும்.
நாங்காவது படம் பார்த்து தோன்றிய எண்ணம் அழகிய கவிதை போள் இருக்கிற்டஹு.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்களும் அதைப் பற்றிய குறிப்புகளும், பூங்கா பற்றிய செய்திகளும் அத்தனையும் அருமையாக இருக்கின்றது.
பதிலளிநீக்குபடங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன சகோதரி.
உங்கள் பேரனும் மகனும் அன்புட்ன உங்களுடன் உரையாடுவது மிக்க மகிழ்ச்சி. இதுதானே எல்லோரும் வேண்டுவது.
துளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்குநலமா?
//படங்களும் அதைப் பற்றிய குறிப்புகளும், பூங்கா பற்றிய செய்திகளும் அத்தனையும் அருமையாக இருக்கின்றது.//
நன்றி.
//உங்கள் பேரனும் மகனும் அன்புட்ன உங்களுடன் உரையாடுவது மிக்க மகிழ்ச்சி. இதுதானே எல்லோரும் வேண்டுவது.//
ஆமாம் எல்லோரும் வேண்டுவது அதுவே! அது கிடைத்தால் மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.
படங்களும்,பூங்காவைக் குறித்த செய்திகளும் மிக அருமை. இத்தனை அழகான பூங்கா வீட்டுக்கருகே இருப்பது நல்லதே. அடிக்கடி போகலாமே! நடைப்பயிற்சிக்கான நடைபாதையும் சுத்தமான பராமரிப்பு. இம்மாதிரிப் பூங்காக்கள் மெம்பிஸில் பார்த்திருக்கேன். போய்க் கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொண்டு (சாப்பாடு கொண்டு போயிடுவோம்) அங்கேயே இருந்து ஆர அமர உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்புவோம். அட்லான்டா போயிருந்தாலும் இரண்டே நாட்கள் தான் இருந்தோம். கோயிலுக்கு மட்டும் போனோம். அங்கே காய்கள் அருமையாய்க் கிடைத்தன.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குஏரி, பூங்கா என்று கொஞ்ச துரத்தில் பார்க்க கிடைக்கிறது. அடிக்கடி போகலாம்தான்.
தொடர்ந்து நாங்கு தினம் மழை . நேற்று நன்றாக இருந்தது மகள் வேலியிலிருந்து திரும்பி வந்த போது 7 மணி . போகலாம் பார்க் என்றாள் எனக்கு கொஞ்சம் உடம்பு வலி, சோற்வு இன்னொரு நாள் என்று சொல்லி விட்டேன்.
//இம்மாதிரிப் பூங்காக்கள் மெம்பிஸில் பார்த்திருக்கேன். போய்க் கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொண்டு (சாப்பாடு கொண்டு போயிடுவோம்) அங்கேயே இருந்து ஆர அமர உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்புவோம்.//
ஆமாம், இப்படி குடும்பத்துடன் போய் வந்தால் மனதுக்கு மகிழ்ச்சிதான்.
அட்லான்டா கோயில்கள் போக வேண்டும். காய்கள், பழங்கள் எல்லாம் நன்றாக கிடைக்கிறது.
மணிப்புறாவும், வால் நீண்ட குருவியும் உங்களுக்காகவே போஸ் கொடுத்திருக்கின்றன. விண்ணில் இம்மாதிரிப் பறக்கும் பறவைகளை இங்கேயும் மாடியில் இருந்து காவிரிக்கரையில் பார்க்கலாம். இப்படித் தான் கூட்டமாக வந்து அமரும். பின்னர் ஏதோ விட்டுட்டு வந்தாப்போல் மறுபடி கூட்டமாகப் பறந்து ஓர் வட்டமிட்டுப் பின்னர் மறுபடி உட்காரும். பார்க்கவே அழகு தான். காலை வேளையிலும் இம்மாதிரி விண்ணில் பறக்கும் பறவைக்கூட்டங்களை "வி" வடிவில் பார்க்கலாம். இயற்கை அழகை ரசிக்க ரசிக்கப் பரவசம் தான்.
பதிலளிநீக்கு//மணிப்புறாவும், வால் நீண்ட குருவியும் உங்களுக்காகவே போஸ் கொடுத்திருக்கின்றன.//
நீக்குஇப்படி அமர்ந்து இருப்பதைப் பார்ப்பதே மகிழ்ச்சி. அதுவும் காமிராவிற்குல் வந்து விட்டால் இன்னும் மகிழ்ச்சிதான்.
காலை, மாலை கூட்டமாக பறவைகள் பறந்து போவதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
உங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பறவைகள் பறப்பதை பார்க்கலாம்.
நாறைகள் வி வடிவில் போவது பார்க்க அழகுதான். நம் உற் அரச மரம், ஆலமரத்தில் மாலை நேஅர்த்தில் அடைய வரும் பல்வேறு பறவைகளின் இலியை காணொளி எடுத்து இருக்கிறேன். இவை என்ன பேசிக் கொள்ளும் தங்கள் இரை தேடிய கதையை பேசுமா?
இறையருக்லால் இன்று எந்த வல்லூறுகளிடம் சிக்காமல் வந்தேன் என்று பேசுமா? என்று நினைப்பேன்.
இப்படி ஒரே வகை பறவை கூட்டமாய் பறந்து பின் அமருவது பார்க்க அழகாய் இருந்தது.
நீங்கள் சொல்வது போல் இயற்கை அழகை ரசிக்க ரசிக்க பரவசம்தான்.
உங்கள் அழகான அருமையான கருத்துக்களுக்கு நன்றி.
அலைபேசியிலும் படங்கள் நன்றாகவே எடுத்திருக்கிறீர்கள். விரைவில் புகைப்படக் கலைஞராக ஆகி விடுவீர்கள்/விட்டீர்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு//அலைபேசியிலும் படங்கள் நன்றாகவே எடுத்திருக்கிறீர்கள். விரைவில் புகைப்படக் கலைஞராக ஆகி விடுவீர்கள்/விட்டீர்கள். வாழ்த்துகள்.//
நீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நன்றி.
அன்பின் கோமதி மா,
பதிலளிநீக்குமஞ்சள் வெய்யில் மாலையிட்ட நேரம்.
இங்கே கண்ணால் பார்த்தாலும் வண்டியை விட்டு இறங்க முடியாத குளிர்
காற்று.
ஆனால் வானத்தின் வண்ணம்
மனதை நிரப்புகிறது.
பார்த்துப் பார்த்தும் ஓயவில்லை. இயற்கை இந்த ஊரில் அதீதம்.!!
வானம் தரும் காட்சிகளும்
அருமை.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்கு//மஞ்சள் வெய்யில் மாலையிட்ட நேரம்.//
அருமை.
//இங்கே கண்ணால் பார்த்தாலும் வண்டியை விட்டு இறங்க முடியாத குளிர்
காற்று.//
ஓ! இங்கும் குளிர் ஆரம்பித்த மாதிரிதான் இருக்கிறது. பறவைகளைப்பார்க்க வெளியில் நிற்க முடியவில்லை. குளிர் காற்று முகத்தில் மோதுகிறது.
//வானத்தின் வண்ணம்
மனதை நிரப்புகிறது.
பார்த்துப் பார்த்தும் ஓயவில்லை. இயற்கை இந்த ஊரில் அதீதம்.!!
வானம் தரும் காட்சிகளும்
அருமை.//
இயற்கை ஒவ்வொரு இடத்திற்கு ஒவ்வொரு அழகை கொடுக்கிறது. பார்த்து ரசிக்க கண் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
புவி மேல்
//இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எல்லாம் இன்ப மயம்..புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எல்லாம் இன்ப மயம்..//
இன்பமயம் பாடல் நினைவுக்கு வருது.
அதே பறவைகள் Geese. வரிசையாகக் கூவி அழைத்தபடி
பதிலளிநீக்குபறக்கும் அழகு மிக அருமை.
சின்ன கீதா சொல்வது போல ஒரு தண்ணீர் நிலையிலிருந்து
அடுத்த நீர் நிலைக்குப் பறக்கும் .
அது வியூகம் அமைக்கும் அழகே தனி.
மிக உயரே பறப்பவை, குளிரைத் தவிர்க்க வேறு தேசத்துக்கே
போய்விடுமாம்.
உங்கள் படங்கள் அனைத்தும் கவிதையாக
மலர்கின்றன.
வானத்தின் நீலம் கண்கூச மகிழ்ச்சி தருகிறது. காணொளிகளும் பறவைகளும்
மிக ரசிக்க வைக்கின்றன.
நான் எடுத்த காணொளியில் சொல்லி இருப்பேன் போர் வீயூகம் அமைப்பது போல் பார்க்க அழகு என்று.
நீக்குகீதாவும் சொன்னார்கள்.
//குளிரைத் தவிர்க்க வேறு தேசத்துக்கே
போய்விடுமாம்.//
ஆமாம், குளிர் காலத்தில் வெகு தூரம் பறந்து வந்து முட்டையிட்டு குஞ்சுகளுடன் திரும்பும் .
அதற்கு மனவலிமையினால்தானே அவ்வளவு தூரம் பறந்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் பறவைகள் மார்ச் மாதம் திரும்பி போகுமாம்.
படங்களை கவிதையாக ரசிக்கும் அக்காவால் மனது மலர்ச்சியால் மகிழ்கிறது.
உங்கள் கருத்துக்கும், ரசிப்புக்கும் நன்றி அக்கா.
அழகிய பூங்கா படங்களும் காட்சிகளும் கொள்ளை அழகு. மனதை இழுக்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குபூங்கா மனதை கொள்ளை கொண்டது உண்மை.
உங்கள் கருத்துக்கு நன்றி.