வெள்ளி, 10 செப்டம்பர், 2021

வாக்குண்டாம் நல்ல மன முண்டாம்


 பத்து நாட்களுக்கு முன்  பேரன் வரைந்த பிள்ளையார்.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலரான்
நோக்குண்டாம் மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு
-ஒளவையார்

பிள்ளையார் சதுர்த்தி அன்று இந்த பதிவில்  நிறைய பிள்ளையார் பார்க்கலாம் வாங்க.


 
முதல் மூன்று பிள்ளையார்கள் மதுரையில்  எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும்   அய்யனார் கோவிலில் உள்ள பிள்ளையார் மாத சதுர்த்தி அன்று செய்த அலங்காரங்களுடன்.
கடைசி படம் பழமுதிர் சோலை பிள்ளையார், முருகன் வேல்.

வந்தார் விநாயகர் தந்தார் அருளை 

இந்த பதிவில் கணவர் செய்த பிள்ளையார் இடம்பெற்றார்.



நியூஜெர்சியில்  கொண்டாடிய போது மருமகள் தொகுத்த படம்.


பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

இந்த பதிவில் மகன் செய்த பிள்ளையார் இடம் பெற்றார் 

2019 ம் வருடம் முகநூலில் இடம் பெற்ற பிள்ளையார் பதிவு 

 முதல் பிள்ளையார் மகன் செய்த பிள்ளையார். இரண்டாவதாக இருக்கும் பிள்ளையார் பேரன் செய்த பிள்ளையார். 

பேரன் செய்த பிள்ளையாரைப் பார்க்க டிக்கட் வாங்க வேண்டுமாம்.
கோவிலில் அப்படித்தானே டிக்கட் வாங்குகிறார்கள் என்கிறான்.

எனக்கு பிடித்த விநாயகர் அகவல் பாடல்

சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் சினிமாவில் சுந்தர்ராஜனுக்கு பாடிய பாடல்.
குழந்தைகள் இலக்கியம் படைத்தவர் பூவண்ணன் அவர்கள்.
கோபாலகிருஷ்ணர் என்கிற பூவண்ணன் எழுதிய "ஆலம்விழுதுகள் " என்ற கதையை படமாக எடுத்தார்கள். விகடனில் தொடர் கதையாக வந்தது , ஆலம் விழுதுகள் கதையை "நம்ம குழந்தைகள்" சினிமாவாக எடுத்தார்கள்.அதில் அப்பா சுந்தர்ராஜன் மற்றும் குழந்தைகள் பாடுவார்கள். மாஸ்டர் ஸ்ரீதர் நடித்தார். மிகவும் அருமையாக இருக்கும். படத்தை தேடுகிறேன் யூடி-யூப்பில் கிடைக்க மாட்டேன் என்கிறது.

இந்த கதைக்கு விருது வாங்கி இருக்கிறார் பூவண்ணன் அவர்கள்.. மிகவும் அருமையான படம். முதலில் கன்னடத்தில் "நம்மக்களு "என்று வந்தது. சிறந்தபடத்திற்கு வரிவிலக்கு கிடைத்தது, விருதும் கிடைத்தது.

அந்த படமும் பார்த்து இருக்கிறேன். தமிழில் கொஞ்சம் மாற்றம் செய்தார்கள்.

சிறந்த குழந்தைகள் படக்கதாசிரியர் என்று தமிழக அரசின் விருதை பெற்றார். இன்று வரை கோயில்களில், வீடுகளில், மற்றும் வானொலி, தொலைக்காட்சிப்பெட்டியில் 'விநாயகர் சதுர்த்தி' அன்று இந்த பாடல் ஒலிக்காமல் இருக்காது. எங்கள் வீட்டில் என் கணவர் கேஸட்டில் பதிவு செய்து வைத்து இருந்தார்கள். அந்த பாட்டை விநாயகர் சதுர்த்தி அன்று வைத்து விடுவார்கள்,


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் என்ற பாடலும்

ஒளவையார் படத்தில் வரும் இந்த பாடலும் இடம்பெறும் பூஜை சமயத்தில். இந்த பாடல் பதிவு செய்து முடிக்கும் சமயத்தில் என் மாமியார் அவர்கள் அவர்கள் பேரனிடம்(என் மகனிடம்) பேசும் பேச்சும் இடம்பெற்று விட்டது. ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி அன்று பாடலுடன் அத்தையின் பேச்சை கேட்பது ஒரு ஆனந்தம் .


அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

-----------------------------------------------------------------------------------------

33 கருத்துகள்:

  1. வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
    அன்பு கோமதி.
    வாழ்க வளமுடன். சீர்காழியின் குரலுடன் தான்
    பிள்ளையார் சதுர்த்தி நாள் ஆரம்பிக்கும்.
    அது மட்டும் இல்லை. எல்லாவிழாக்களிலும் வினாயகனே வினை தீர்ப்பவனே
    ஒலித்தே ஒலி பரப்பி தன் மகிழ்ச்சி அலைகளை நிரப்பும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா , வாழ்க வளமுடன்
      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      //சீர்காழியின் குரலுடன் தான்
      பிள்ளையார் சதுர்த்தி நாள் ஆரம்பிக்கும்.//
      ஆமாம்.

      //எல்லாவிழாக்களிலும் வினாயகனே வினை தீர்ப்பவனே
      ஒலித்தே ஒலி பரப்பி தன் மகிழ்ச்சி அலைகளை நிரப்பும்.///

      மாயவரத்தில் , மதுரையில் எல்லாம் மாத சதுர்த்திக்கு எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கோயிலில் இந்த பாடலை முத்லில் போட்டு விடுவார்கள். பாட்டு சத்தம் கேட்டு சதுர்த்தி அபிஷேகம் பார்க்க கூடி விடுவார்கள் கோயிலில்.




      நீக்கு
  2. உங்கள் கணவரின் கைத்திறன் அளவிட முடியாதது. அவர் முன் பிறவியில் ஒரு சிற்பியாக இருந்து கோயில் சிலைகளை வடித்திருப்பார்
    என்றே தோன்றும்.
    மகனும் பேரனும் இந்த அரிய கலையைத் தொடர்வது மிக இனிமை.

    எல்லாமே கலைப் பொக்கிஷங்கள்.
    கவின் வரைந்திருக்கும் பிள்ளையார்
    மகிழ்ச்சியாகக் காணப்படுகிறது.

    உங்கள் மகள் ஒரு ஆவணப்படம் போல்
    மாம்னாரின் கைத்திறனைப் படமாக்கியிருக்கிறார்.
    ஔவ்வையார் பாடலும் சீர்காழியின்
    பிள்ளையார் அகவல் பாடலும் என்றும் சிறப்பு.

    வினாயகரைத் துதிக்க வல்வினைகள்
    அகலும். என்றும் அவரை மறக்காமல் இருக்கலாம்.
    அற்புதமான பிள்ளையார் தரிசனத்துக்கு
    மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் கணவரின் கைத்திறன் அளவிட முடியாதது. அவர் முன் பிறவியில் ஒரு சிற்பியாக இருந்து கோயில் சிலைகளை வடித்திருப்பார்
      என்றே தோன்றும்.
      மகனும் பேரனும் இந்த அரிய கலையைத் தொடர்வது மிக இனிமை.//

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      //ஒரு ஆவணப்படம் போல்
      மாம்னாரின் கைத்திறனைப் படமாக்கியிருக்கிறார்.//

      ஆமாம்.

      //வினாயகரைத் துதிக்க வல்வினைகள்
      அகலும். என்றும் அவரை மறக்காமல் இருக்கலாம்.//

      வலிவினைகள் அகலட்டும்.
      என்றும் மறவா நிலையை அவர் அருளட்டும்.
      வணங்கி மகிழ்வோம்.


      நீக்கு
  3. குழந்தைகள் இலக்கியம் படைத்தவர் பூவண்ணன் அவர்கள்.
    கோபாலகிருஷ்ணர் என்கிற பூவண்ணன் எழுதிய "ஆலம்விழுதுகள் " என்ற கதையை படமாக எடுத்தார்கள். விகடனில் தொடர் கதையாக வந்தது """"
    இந்தப் படம் எனக்கு நினைவில் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1970ம் வருடம் வந்தது அக்கா. விகடனில் தொடர் கதையாக வந்தது. அம்மா பைண்ட் செய்து வைத்து இருந்தார்கள் இப்போது வீட்டில் இல்லை .யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை.
      மிகவும் அருமையான கதை. பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் அப்பா. அவரை புரிந்து கொள்ளாமல் முதலில் இருப்பார்கள்.அப்பா எது கேட்டாலும் வாங்கி தரமாட்டேன் என்கிறார், பள்ளிச்சுற்றுலா அனுப்ப மாட்டேன் என்கிறார் என்று ஆயிரம் மனக்குறை குழந்தைகளுக்கு. அதனால் அப்பா இந்த மாதம் சம்பள பணத்தை உங்களிடம் கொடுத்து விடுகிறேன், நீங்களே குடும்பம் வரவு செலவு கணக்கை பார்த்துக் கொள்ளுங்கள், மீதி இருந்தால் சுற்றுலா செல்லுங்கள் என்பார்.
      குழந்தைகள் மூவரும் குடும்பத்தை நடத்த படும் பாடு, எப்படி என்ன இடர் வந்தது அதை திறம்பட செய்தார்களா ? சுற்றுலா சென்றார்களா என்பதை சொல்லும் கதை. மிக அருமையாக எல்லோரும் ந்டித்து இருப்பார்கள்.

      அதன் லிங்க் கிடைத்தால் கொடுக்கலாம் என்று பார்த்தேன் , கிடைக்கவில்லை.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
    2. இந்தப்படம் ஆலம் விழுதுகள் என்றில்லாமல் வேறே பெயரில் தமிழிலும், கன்னடத்திலும் படமாக வந்தது. இரண்டும் நானும் பார்த்திருக்கேன். அருமையான படம். நன்றாக இருக்கும். இதை அடிப்படையாக வைத்து நாங்கள் கல்யாணம் ஆகிக் குடும்பம் நடத்தினப்போ என் கணவர் தன் தம்பியை வீட்டு நிர்வாகத்தில் ஈடுபடுத்தினார்.

      நீக்கு
    3. நான் மேலே பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன் பட பேர்களை.. கன்னடத்தில் நம்மக்களு, தமிழில் நம்ம மக்கள் என்று வந்தது என்று.

      //இதை அடிப்படையாக வைத்து நாங்கள் கல்யாணம் ஆகிக் குடும்பம் நடத்தினப்போ என் கணவர் தன் தம்பியை வீட்டு நிர்வாகத்தில் ஈடுபடுத்தினார்.//

      நல்லது.

      நீக்கு
  4. கோமதிக்கா விநாயகர் எல்லா நன்மைகளுக்கும் உங்கள் எல்லாருக்கும் கொடுத்தருளட்டும்.

    படங்கள் அட்டகாசம் மாமா, உங்கள் மகன், பேரன் மூவரும் செய்த பிள்ளையார் அசத்தல். என்ன திறமை!!மூவரின் கைத்திறனும் பேரன் தாத்தாவுக்கு சளைத்தவர் இல்லைன்னு சொல்றாப்ல. தாத்தா அப்பாவுக்கு நிகராக! பிள்ளையார்கள் எல்லாம் அழகான வடிவமைப்பு!

    மாமா அசாத்திய திறமை படைத்தவர். அவரது வழியில் நல்ல வழித் தோன்றல்கள். இறைவன் எல்லோரையும் மகிழ்வாக வைத்திருக்க வாழ்த்துகள் கோமதிக்கா!

    பிரார்த்தனைகள் முடித்து மீண்டும் வரேன் அக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா விநாயகர் எல்லா நன்மைகளுக்கும் உங்கள் எல்லாருக்கும் கொடுத்தருளட்டும்.//

      நன்றி கீதா.

      //தாத்தா அப்பாவுக்கு நிகராக! பிள்ளையார்கள் எல்லாம் அழகான வடிவமைப்பு!//

      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி .

      //மாமா அசாத்திய திறமை படைத்தவர். அவரது வழியில் நல்ல வழித் தோன்றல்கள். இறைவன் எல்லோரையும் மகிழ்வாக வைத்திருக்க வாழ்த்துகள் கோமதிக்கா!//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
      உங்கள் பிரார்த்தனைகளில் எங்களுக்கும் சேர்த்து வேண்டிக்கொள்ளுங்கள்.
      வாங்க வாங்க நேரம் கிடைக்கும் போது.








      நீக்கு
  5. தாத்தா, அப்பாவின் திறமை மகனுக்குள்ளும்.  ஸார் எவ்வளவு அருமையாக பிள்ளையார் வடித்திருக்கிறார்.  உங்கள் மகனும் சளைத்தவரில்லை என்பது தெரிகிறது.  ஆயினும் பிள்ளையின் பிள்ளையார் விசேஷம்.  குழந்தியோடு கேஸுகந்தையாகி விடுவாரே அவர்...   அதற்கு தட்சிணை கொடுத்துப் பார்ப்பதுதான் முறை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //ஆயினும் பிள்ளையின் பிள்ளையார் விசேஷம். குழந்தியோடு கேஸுகந்தையாகி விடுவாரே அவர்...//

      பிள்ளையார் குழந்தைகளுடம் குழந்தையாகி விடுவார் என்பது உண்மை.

      நீக்கு
    2. மன்னிச்சுக்கோங்க அக்கா.. தப்புத்தப்பா டைப் பண்ணிட்டு ஓடியிருக்கேன்...

      "குழந்தைகளோடு குழந்தையாகி விடுவாரே அவர்" என்றுதான் வரவேண்டும்!!!

      நீக்கு
    3. இதற்கு எதற்கு மன்னிப்பு !
      புரிந்து கொண்டேன், அவசரமாக டைப் செய்து இருக்கிறீர்கள் என்று.
      பிள்ளையாருக்கும் தெரியும்.

      நீக்கு
  6. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.  நம் பதிவுகளிலேயே நிறைய விநாயகரைக் கண்டு வணங்கி விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் உங்களுக்கு.

      //நம் பதிவுகளிலேயே நிறைய விநாயகரைக் கண்டு வணங்கி விடலாம்.//
      ஆமாம். விநாயகரை நிறைய பார்ப்பது இன்று சிறப்பு. வித வித அலங்காரங்கள் வாட்ஸ் அப்பில் வந்து கொண்டு இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. பதிவை ரசித்தேன்.

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

    பேரனின் படம் அழகு. பிள்ளையாரை மட்டும் நம் மனத்திற்குத் தோன்றினார்ப்போல் செய்துகொள்ளலாம், வரைந்துகொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      பதிவை ரசித்தமைக்கு நன்றி.
      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      பேரன் படத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      பிள்ளையாரை மட்டும் நம் மனத்திற்குத் தோன்றினார்ப்போல் செய்துகொள்ளலாம், வரைந்துகொள்ளலாம்.//
      உண்மை .அவர் நமக்கு மனதுக்கு நெருக்கமானவர். சிறு குழந்தை முதல் எல்லோர்யுக்கும் மிகவும் விருப்பமானவர்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்..

    ஐங்கரன் அருளால் நல்லோர் அனைவரும் நலம் பெற்று வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      வாழ்த்துக்களுக்கு நன்றி.
      ஐங்கரன் அருளால் அனைவரும் நலம்பெறட்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. பிள்ளையார் சிலைகள் அருமை சகோ இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  10. எங்கெங்கு காணினும் விநாயகர். தொகுத்த விதம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

      நீக்கு
  12. விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

    வீட்டிலுள்ள அனைவருக்குமே நல்ல கைத்திறன்.

    அருமையான தொகுப்பு மற்றும் விநாயகர் தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. பேரனின் படம், பேரன் செய்த பிள்ளையார் எல்லாமே அழகு. கட்டாயமாய்க் காசு கொடுத்துத் தான் பார்க்கணும். முகநூலிலும் பார்த்த நினைவு. உங்கள் கணவரின் கைத்திறன் உங்க பையருக்கும், பேரனுக்கும் வாய்த்திருப்பது கடவுள் கொடுத்த வரம். இருவரும் அதைத் தொடர்வதும் சந்தோஷமாகவும் நிறைவாகவும் இருக்கு. அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள். பெண், மாப்பிள்ளை, பேத்தி, பேரனோடு பொழுது மகிழ்வாகப் போகும் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேரனின் படம், பேரன் செய்த பிள்ளையார் எல்லாமே அழகு. கட்டாயமாய்க் காசு கொடுத்துத் தான் பார்க்கணும். //

      பாட்டி தாத்தாவிற்கு பாஸ் உண்டு.

      முகநூலில் போட்டு இருக்கிறேன்.

      கடவுள் அருளால் தொடர வேண்டும் .
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
      பொழுதுகள் போகிறது.மகிழ்ச்சியாக.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  14. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
    தாத்தா மகன் பேரன் என அனைவரதும் விநாயகர்கள் மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      தாத்தா, மகன், பேரன் விநாயகரைப்பார்த்து கருத்து சொன்னதற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. நன்றி.

      நீக்கு
  15. உங்கள் வீட்டினர் செய்த அனைத்து பிள்ளையார் பொம்மைகளும் அழகு. பேரன் வரைந்த விநாயகர் சிறப்பு.

    எல்லாம் வல்ல எம்பெருமான் அனைவருக்கும் நல்லதையே கொடுக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் , வெங்கட் நாகராஜ். வாழ்க வளமுடன்

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு