செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

கண்ணன் வருகின்ற நேரம்.



கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களும் சில நினைவுகள் பகிர்வும்.




மேலே உள்ளவை பழைய படங்கள்.
ஜன்னல் வழியாக வந்த சூரியன் (மகன் வீடு)

     அதிகாலையில் கண்ணனை  சூரியன் வழி பாடு செய்கிறார்


காவடி சிந்து ராகத்தில் "கண்ணன் வரும் நேரம்" பாடல் . எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்கும் கேட்டுப்பாருங்கள் 

கொலுவில் இடம் பெற கொலு பெட்டியிலிருந்து வெளியே வந்த எங்கள் வீட்டுக் கண்ணன் ( மதுரை வீடு)


2019 ம் ஆண்டு கும்ப கோணத்தில் உள்ள  "ஸ்ரீ அமிர்தவல்லி சமேத ஸ்ரீ அபிமுகேஸ்வர பெருமான்" கோயிலில் என் கணவர் எழுதிய "திருக்குடந்தை மங்கள நாயகி பிள்ளைத் தமிழ் " புத்தக வெளியீடு நடந்தது.

 வெளியீடுக்கு கும்பகோணம் போய் இருந்தபோது  ஓட்டலில் தங்கி இருந்தோம், அன்று கிருஷ்ண ஜெயந்தி, வசந்த் தொலைக்காட்சியில் கிருஷ்ணபக்தி என்ற பழைய படம்,  பொதிகை தொலைக்காட்சியில்   கிருஷ்ணலீலா தரங்கிணி என்ற நிகழ்ச்சி, மற்றும் "சாந்த ஜக்கு பாய்"  என்ற  பழைய படம் பார்த்தோம். அப்போது எடுத்த படங்கள்.  பதிவு செய்ய எடுத்து வைத்து இருந்து பதிவு செய்யவில்லை. அவை இப்போது இந்த பதிவில் இடம் பெறுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி நினைவுகளில் இந்த நினைவுகளும் என்றும் இடம் பெறும் மனதில்.







போலியான பக்தராக வந்து உண்மையான பக்தராக மாறும் பி.யூ சின்னப்பா 

உண்மை பக்தர்களுக்கு இறைவன் அடிமை என்று சொல்லும் படம் நன்றாக இருந்தது

கிருஷ்ணர்மேலும் குருவின் மேலும்  பக்தி கொண்ட பெண்ணாக டி.ஆர் ராஜகுமாரி.




பழைய படம்.  பாகவதபுராணத்தில் இந்த சாந்த சக்குபாய் பற்றி படித்து இருக்கிறேன். அதனால் விரும்பி பார்த்தேன். 

 தெய்வ அருளால் பிறந்த குழந்தை சாந்த சக்குபாய். பாண்டு ரங்கன் மேல் அதிக பற்றுக் கொண்டவர். அந்தக்காலத்தில் மாமியார் மருமகளை  கொடுமை படுத்தும்  கதை. இறைவன் பக்தைக்கு பதிலாக  கஷ்டங்களை அனுபவித்த கதை.

அன்புக்கு  கட்டுப்படும் அருளாளன் அல்லவா? சாந்த ஜக்குபாய்க்கு பதிலாக அவர் கட்டுப்பட்டு, அவள் செய்யும் வேலைகளை எல்லாம் செய்வார். பிறகு  காட்சி கொடுத்து ஆட்கொண்ட கதை.


முன்பு வாட்ஸ் அப்பில் வந்த படம் 

கண்ணன் வருகிறார் காரிகை வரையும் ஓவியத்தில்.

மருமகள் வரைந்த கண்ணாடி ஓவியம்

அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.



வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------

27 கருத்துகள்:

  1. அன்பு கோமதிமா,
    மிக அருமையான கண்ணன் பதிவு.
    இதில் சாரும் இருப்பதே சிறப்பு.
    இங்கு பூஜை நடக்கும் நேரம்.
    மீண்டும் காலையில் பார்க்கிறேன்.
    கண்ணன் நம்மைக் காப்பான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      //மிக அருமையான கண்ணன் பதிவு.
      இதில் சாரும் இருப்பதே சிறப்பு.//

      நன்றி அக்கா


      //இங்கு பூஜை நடக்கும் நேரம்.
      மீண்டும் காலையில் பார்க்கிறேன்.
      கண்ணன் நம்மைக் காப்பான்.//

      நல்லது அக்கா.
      மெதுவாக வாங்க கண்ணன் வரவு நல் வரவாகட்டும்.

      கண்ணன் அனைவரையும் காக்கட்டும்.


      நீக்கு
  2. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.  சுவாரஸ்யமான நினைவுகள்.  அழகான கண்ணன் படங்கள்.  கண்ணன் வரும் நேரம் பாடல் எனக்கும் பிடிக்கும்.  அந்தக் காணொளியில் எவ்வளவு நேர்த்தியாக, எவ்வளவு திறமையாக, எளிதாக வரைகிறார்?  அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      மிக எளிதாக வரைகிறார், எத்தனை திறமை வியக்க வைத்தார்.

      நினைவுகளை, படங்களை, காணொளியை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      வாழ்த்துக்களுக்கு நன்றி.
      எங்களுக்கு பண்டிகை இல்லை. உங்களுக்கு எல்லாம் வாழ்த்து சொல்லவே இந்த பதிவு.

      நீக்கு
  4. கண்ணனின் அழகிய காட்சிகள்... மனதிற்கு மிக நிறைவு மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்

      அதுதானே பாரதி பாடினார் நந்தலாலாவை அனைத்திலும் கண்டு மனநிறைவு பெற்றார்.
      உங்கள் கருத்துக்கு நன்றி அனு.

      நீக்கு
  5. கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகள். எல்லாப் படங்களும் அருமை. உங்கள் கணவருடன் சென்றபோது நடந்த நிகழ்வுகளின் பகிர்வும் அருமை. சாந்த சக்குபாய் படம் நானும் பல்லாண்டுகள் முன்னர் பார்த்திருக்கேன். கண்ணன் வரும் நேரம் பாடல் அருமை. பெண்மணி மிக அருமையாக வரைகிறார். கண்ணன் கொடுத்த வரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகள். எல்லாப் படங்களும் அருமை. உங்கள் கணவருடன் சென்றபோது நடந்த நிகழ்வுகளின் பகிர்வும் அருமை//

      நன்றி.

      கண்ணன் பாடல்கள் கிருஷ்ணஜெயந்தி அன்று கேட்போம். மதுராவில் வாங்கி வந்த கேஸட்டில் போட்டு கேட்போம், டிரான்சிஸ்டரில் சென்னை, இலங்கை, திருச்சி என்று மாற்றி மாற்றி பாடல்கள் கேட்போம்.. நினைவுகள் நிறைய இருக்கிறது.

      இப்போது கொஞ்ச நாட்களாக இவர் பாடும் பாடல்கள் நிறைய கேட்கிறேன். கிருஷ்ணர் கதையை அழகாய் பாடுகிறார்.

      வரையும் ஓவியம் மிகவும் பிடித்ததால் அதை டெலிட் செய்யாமல் பத்திரப்படுத்தி வைத்து இருந்தேன். அவருக்கு கண்ணன் கொடுத்த வரம் தான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  6. அழகான படங்கள். காணொளிகளும் கண்டு ரசித்தேன் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      படங்கள், காணொளிகள் கண்டு கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  7. தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்..
    தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
    கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்..
    கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்..
    தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்..
    தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்..

    கவியரசரின் வைர வரிகளுக்கேற்ப -

    தேடி நிற்கும் கண்களுக்குள் கண்ணன் வந்து நிற்பான்...

    வழக்கம் போல அழகான படங்களுடன் இனிய பதிவு..

    ஐயா அவர்களைப் பதிவில் கண்டதும் ஒரு கணம் மனம் மருகி நின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
      கவியரசரின் வை வரி பகிர்வுக்கு நன்றி.

      ஆமாம், தேடி நிற்கும் கண்களுக்குள் கண்ணன் நிற்பான் தான்.

      //ஐயா அவர்களைப் பதிவில் கண்டதும் ஒரு கணம் மனம் மருகி நின்றது..//

      ஆமாம், மனம் மருகிதான் போகிறது. பழைய படங்களை மகன் மீட்டு கொடுத்தது மகிழ்ச்சி அதனால் அவற்றை பகிர்வதில் மனதுக்கு ஆறுதல்.

      நீக்கு
  8. கண்ணன் வருகின்ற நேரம்.. - ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் அவர்களது பாடலை - சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத் பாடியிருக்கின்றார்... YouTube ல் கேட்கக் கிடைக்கின்றது..

    அவ்வப்போது கேட்பேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், சிவஸ்ரீ ஸ்கந்தபராத் நன்றாக பாடுகிறார். ஊத்துகாடு வெங்க்ட சுப்பையர் எழுதிய இந்த பாடலை நிறைய பெர் பாடி கேட்டு இருக்கிறேன். இருந்தாலும் இவர் பாடியது இன்னும் மகிழ்ச்சி.

      நீங்களும் கேட்டு இருப்பது மகிழ்ச்சி.


      நீக்கு
  9. சித்திரத்தில் ஸ்ரீ க்ருஷ்ணன்..
    மிகவும் நேர்த்தி. அருமையான காணொளி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியும் பார்த்து ரசித்தமைக்கு நன்றி.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. கோமதி அக்கா.. எப்படி இருக்கிறீங்கள் நலம்தானே? ஊருக்குத் திரும்பி விட்டதுபோல இருக்குது போஸ்ட் பார்க்க.

    கிருஸ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்..!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      நான் நலம், நீங்கள் நலமா?
      பள்ளி திறந்தவுடன் அதிக வேலை பளுவா?
      உங்களை பார்க்கவே முடியவில்லை.
      முடிந்த போது வலைப்பக்கம் எட்டி பாருங்கள்.
      பண்டிகை கிடையாது என்பதால் இரண்டு மலர் போட்டு வணங்கினேன்.

      நீக்கு
  11. கண்ணன் வரும் நேரம்.. பாடலும் அழகு..பாடுபவரும் அழகு.. முழுவதும் கேட்டு ரசித்தேன்...

    மருமகளின் கை வண்ணம் அழகு. கண்ணன் படங்கள் அனைத்தும் அழகு.

    நீண்ட நாளின் பின்பு மாமாவையும் பார்த்தேன்.. நினைவுகள் என்றும் அழியாதவைதானே.. நலமோடும் மகிழ்வோடும் இருங்கோ கோமதி அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கண்ணன் வரும் நேரம்.. பாடலும் அழகு..பாடுபவரும் அழகு.. முழுவதும் கேட்டு ரசித்தேன்...//

      ஆமாம், அவர் பாடலும், மலர்ந்த முகமும் அழகு.

      //மருமகளின் கை வண்ணம் அழகு. கண்ணன் படங்கள் அனைத்தும் அழகு.//
      தவழும் கண்ணன், வெண்ணை குடத்தை கையில் வைத்துக் கொண்டு இருக்கும் படம், யசோதை கையில் வைத்து இருக்கும் படம் எல்லாம் மருமகள் கை வண்ணம் தான்.
      //நீண்ட நாளின் பின்பு மாமாவையும் பார்த்தேன்.. நினைவுகள் என்றும் அழியாதவைதானே.//

      ஆமாம், நினைவு இருக்கும் வரை நினைவுகள் அழியாதுதான்.

      //நலமோடும் மகிழ்வோடும் இருங்கோ கோமதி அக்கா.//
      இருக்கிறேன் அதிரா. நீங்களும் அடிக்கடி வாங்க இன்னும் மகிழ்வாய் இருப்பேன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.








      நீக்கு
  12. சாந்த சக்கு பாய் படம் நினைவில் இருக்கு.
    பெண் வரையும் படமும் பின்னால் ஒலிக்கும் கானமும் மயக்குகின்றன.

    கண்ணன் தரிசனம் சிறப்பாக அமைகிறது.
    சார் இருந்தால் இன்னோரு கண்ணன் படம் வரைந்திருப்பார்.

    இனிமேல் கவின் வரைவான் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      கண்ணன் பிறப்பு விழா சிறப்பாக தங்கள் வீட்டில் நடந்து இருக்கும் .
      வாழ்த்துக்கள்.

      YouTube ல் சாந்த சக்கு பாய், கிருஷ்ண பக்தி படங்கள் தெளிவாக இருக்கிறது அக்கா.
      சாரிடம் கேட்டு இருந்தால் எல்லா பதிவுகளுக்கும் படம் வரைந்து தந்து இருப்பார்கள்தான். நான் அவர்கள் எழுத்துக்கு தொந்திரவு செய்ய வேண்டாம் என்று கேட்பது இல்லை, இப்போது நினைக்கிறேன். கேட்டு இருக்கலாம் என்று.

      பேரன் வரைகிறான் , வரைந்து தருவான் அவனை கேட்டாலும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  13. அழகிய படங்களும்.நிகழ்வுகளும்.
    உங்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு