சூரியன் வரும் முன் வானம்.
அதிகாலையில் சூரிய உதயம் பார்த்து வணங்கிய பின் நான் எடுத்த புகைப்படங்களை ஆவணி மாதம் சிறப்பு பதிவாக இங்கு பகிர்ந்து வருகிறேன்.
வருகிறார், வருகிறார், வந்து கொண்டு இருக்கிறார்
மலை மேல் வந்து விட்டார்
இன்னும் இன்னும் மேல் எழும்பி வருகிறார்
எல்லோருக்கும் வளத்தை கொடுக்க வந்து விட்டார்.
ஒரு குழந்தை பாடல் கேட்டுப்பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்.
சின்ன வயதுக் குழந்தைகளே!
சீக்கிரம் காலையில் எழுந்திருங்கள்!
சீக்கிரம் காலையில் எழுந்திருங்கள்!
அன்னை தந்தை இருவருக்கும்
அன்பாய் வணக்கம் செலுத்துங்கள்!
பல்லைத் துலக்கி முகங்கழுவி
பரமனை மனதில் நினையுங்கள்!
எல்லை இல்லா ஆனந்தம்
எழுந்திடும் உங்கள் இளம்நெஞ்சில்.
அன்பாய் வணக்கம் செலுத்துங்கள்!
பல்லைத் துலக்கி முகங்கழுவி
பரமனை மனதில் நினையுங்கள்!
எல்லை இல்லா ஆனந்தம்
எழுந்திடும் உங்கள் இளம்நெஞ்சில்.
உங்கள் ஆசான் போதித்த
பள்ளிக்கூடப் பாடத்தைப்
படிக்கவேண்டும் இருதடவை.
வீட்டுக்கணக்கைப் போட்டுப்பின்
விடைகள் சரியா எனப்பாரீர்!
நாட்டுக்குழைத்த நல்லோரின்
நினைவை என்றும் மறவோமே!
அம்மா கொடுக்கும் ஆகாரம்,
அளவாய் உண்ணவேண்டும் அதை.
சும்மா அதிகம் சாப்பிட்டால்
சுகத்தைக் கெடுக்கும் அறிந்திடுவோம்.
நேரம் தள்ளிப்போகாமல்
நினைவாய்ப் பள்ளிக்கூடம் போய்
ஆரம்பிக்கும் முன்னாலே
அமர்ந்திட வேண்டும் இடத்தினிலே.
அளவாய் உண்ணவேண்டும் அதை.
சும்மா அதிகம் சாப்பிட்டால்
சுகத்தைக் கெடுக்கும் அறிந்திடுவோம்.
நேரம் தள்ளிப்போகாமல்
நினைவாய்ப் பள்ளிக்கூடம் போய்
ஆரம்பிக்கும் முன்னாலே
அமர்ந்திட வேண்டும் இடத்தினிலே.
ஊக்கத்தோடு படித்தோர்கள்
உயர்ந்தோர் ஆனார் பலர் அந்த
நோக்கத்தொடு கல்வி தனை
நன்றாய்க் கற்றுத்தேர்ந்திடுவோம்!
தினமும் மாலை வேளையிலே
திறமையாகப் பலர்கூடி
மனமுன் உடலும் நலமடைய
மகிழ்ச்சியோடு ஆடிடுவோம்.
உயர்ந்தோர் ஆனார் பலர் அந்த
நோக்கத்தொடு கல்வி தனை
நன்றாய்க் கற்றுத்தேர்ந்திடுவோம்!
தினமும் மாலை வேளையிலே
திறமையாகப் பலர்கூடி
மனமுன் உடலும் நலமடைய
மகிழ்ச்சியோடு ஆடிடுவோம்.
அந்தி வேளை மேற்குப்புறம்
ஆகாயத்தைப் பார்த்திடுவோம்!
விந்தையாக மேகங்கள்
விதவிதமாகத் தோன்றிடுமே!
இரவு வேளை வானத்தில்
எங்கும் நட்சத்திர மயமே
பரவி மினுக்கு மினுக்கென்று
பார்க்க அழகாய்க் காட்சிதரும்.
ஆகாயத்தைப் பார்த்திடுவோம்!
விந்தையாக மேகங்கள்
விதவிதமாகத் தோன்றிடுமே!
இரவு வேளை வானத்தில்
எங்கும் நட்சத்திர மயமே
பரவி மினுக்கு மினுக்கென்று
பார்க்க அழகாய்க் காட்சிதரும்.
நிலவு இருக்கும் இரவுகளை
நினைக்க நினைக்க ஆனந்தம்!
உலவி மேகம் சில நாளில்
உள்ளக் கருத்தை விளைவிக்கும்!
அம்மா அப்பா வளர்க்கின்றார்!
ஆசான் படிப்பைத்தருகின்றார்!
சும்மா வானம் பூமி இவை
சுகத்தைத் தருகிறது எல்லோர்க்கும்.
நினைக்க நினைக்க ஆனந்தம்!
உலவி மேகம் சில நாளில்
உள்ளக் கருத்தை விளைவிக்கும்!
அம்மா அப்பா வளர்க்கின்றார்!
ஆசான் படிப்பைத்தருகின்றார்!
சும்மா வானம் பூமி இவை
சுகத்தைத் தருகிறது எல்லோர்க்கும்.
இறைநிலை என்ற பேராற்றல்
எங்கும் உள்ளது நீக்கமற.
மறைவாய் நின்று அது ஆற்றும்
மாபெரும் செயலை நினைத்திடுவோம்!
உணவை உண்போம் நாள்தோறும்
உடலாய் அதனை மாற்றுவதார்?
கணமும் நம்மைப் பிரியாமல்
கருத்தாய் இருந்து ஊக்குவதார்?
எங்கும் உள்ளது நீக்கமற.
மறைவாய் நின்று அது ஆற்றும்
மாபெரும் செயலை நினைத்திடுவோம்!
உணவை உண்போம் நாள்தோறும்
உடலாய் அதனை மாற்றுவதார்?
கணமும் நம்மைப் பிரியாமல்
கருத்தாய் இருந்து ஊக்குவதார்?
உலகம், நிலவு, சூரியன்கள்,
உயிர்கள் அனைத்தும் படைத்தவர் யார்?
பலவும் ஒழுங்காய் முறை பிறழாப்
பாங்கில் இயக்கி வருவது யார்?
அவரே தெய்வம்! பேராற்றல்!
அறிவைக்கொண்டே வணங்கிடுவோம்!
எவரும் அவரின் அருளாலே
இன்பம் பெற்று வாழ்கின்றார்.
உயிர்கள் அனைத்தும் படைத்தவர் யார்?
பலவும் ஒழுங்காய் முறை பிறழாப்
பாங்கில் இயக்கி வருவது யார்?
அவரே தெய்வம்! பேராற்றல்!
அறிவைக்கொண்டே வணங்கிடுவோம்!
எவரும் அவரின் அருளாலே
இன்பம் பெற்று வாழ்கின்றார்.
- வேதாத்திரி மகரிஷி
உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அதிகாலை எழுவதால் நிறைய நன்மைகள் இருக்கிறது. உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், மன அமைதி, ஆனந்தம் கிடைக்கும்.
சில நேரம் காலை 3 மணிக்கு விழிப்பு வரும் . அப்போது சிறிது நேரம் கழித்து எழுந்து கொள்வோம் தூங்கலாம் என்று தூங்குவோம். இப்படி இடையில் எழுந்து மீண்டும் தூங்கினால் சில நேரம் அதிகபடியாக தூங்கி விடுவோம். அப்புறம் பதட்டம், அவசரம் என்று காலை பொழுது பரபரப்பாக கழியும். அதனால் கோபம் , வருத்தம் வரும். எனக்கு அப்படித்தான் சிறிது நேரம் கழித்து எழுந்து விட்டால் ஏதோ தப்பு செய்து விட்ட குற்ற உணர்ச்சி வந்து விடும். தொட்டில் பழக்கம் என்பது போல் அம்மா காலையில் எழுப்பி விட்டது. இன்றும் தொடர்கிறது.
பொதுவாக என்னைப்போல் 4.30 எழுந்து கொள்பவர்கள் இருப்பீர்கள்.
அதிகாலையில் எழுந்து விட்டால் நமக்கு அன்றைய பொழுது நிறைய நேரம் இருப்பது போல தெரியும். செய்யும் வேலைகளையும் நிதானமாய் பதட்டம் இல்லாமல் நன்றாக செய்வோம்.
விழிப்பு 3 மணிக்கு வந்து விட்டால் மீண்டும் தூங்காமல். உலகநன்மைக்கு, குடும்ப நன்மைக்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாம் என்கிறார்கள். 3லிருந்து 5 மணி வரை பிரம்ம முகூர்த்த நேரம். அப்போது இறையாற்றலிடம் வேண்டிக் கொண்டால் நடக்கும் என்கிறார்கள் . அமைதியான வேலையில் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு வலு அதிகம், ஆழ்மன சக்திகள் கேட்பதை பிரபஞ்ச சக்தி நிறைவேற்றும் என்கிறார்கள். ஞானிகள்.
அதிகாலையில் ஒரு நிமிடம் மனதார இந்த கொரோனா அழிந்து மக்கள் எல்லோரும் நலமாக இருக்க பிரார்த்தனை செய்து கொள்வோம். வையகத்தை வாழ்த்துவோம்.
எங்கும் உள்ள இறைநிலை என்ற பேராற்றல் அனைவரையும் காக்கட்டும்.!
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------
அழகிய படங்கள். 'அதிகாலைத்துயிலெழு' என்று பாடத்தில் படித்தோம். இந்தக் கால குழந்தைகள் பாடத்தில் அதை நீக்கி விட்டார்கள் போல!! யாரும் சீக்கிரம் எழுவதே இல்லை!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//'அதிகாலைத்துயிலெழு' என்று பாடத்தில் படித்தோம்.//
ஆமாம்.
அதிகாலை எழுந்து அதுவும் குளிரில் பள்ளி செல்வார்கள் என் மகளின் குழந்தைகள் டெல்லியில்.
தமிழ் நாட்டில் பள்ளிசெல்லும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது போக்குவரத்து காரணங்களில். அப்போது பெற்றோர்கள் குழந்தைகளை எழுப்பி பள்ளி செல்ல தயார்படுத்த போராடியது எல்லாம் செய்திகளாக வாசித்து இருக்கிறோம். இப்போது வீட்டில் இருந்து படிப்பதால் சீக்கிரம் எழுந்து கொள்வது இல்லை போலும்.
மகரிஷி பாடல் அருமை. எனக்கும் இரவில் மூன்று நான்கு முறை விழிப்பு வரும். நேரம் தப்பி எழுந்தாள் அன்று எதையோ இழந்து விட்டது போல தோன்றும். காலி நேரத்தின் துல்லியன்களை அனுபவிக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
பதிலளிநீக்குமகரிஷி பாடல் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
நீக்குஇரவு நேரம் இடையில் விழித்துக் கொள்ளாமல் தூங்குவது எல்லாம் வரம்.
நானும் இடை இடையே விழித்து கொள்வேன். சில நேரம் உடனே தூக்கம் வரும், சில நேரம் தூக்கம் வரவே வராது.
முன்பு அதிகாலை பொழுதை ரசிக்க நேரமே இருக்காது. வீட்டு கடமைகளில் போகிற போக்கில் ரசிக்கத்தான் நேரம் இருக்கும். கிடைக்கும் போது ரசித்துக் கொள்ள வேண்டும்.
காலை இளம் கதிர் வரும் முன்னே கூட இருக்கும் காலை இன்னும் அற்புதமானது. அதிலும் ப்ரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் நேரம் உன்னதமானது.
பதிலளிநீக்குகாலை இளம் கதிர் வரும் முன்னே உள்ள காலை பொழுது மிக அருமையானதுதான்.
நீக்குஅப்போது பறவைகளின் ஒலி கேடபது இன்னும் மகிழ்ச்சி தரும் பொழுது.
சூரியன் உதிக்கும் முன் உள்ள அதிகாலை பொழுது (ப்ரம்ம முகூர்த்த நேரம்) உண்னதமானது, கடவுள், மற்றும் சித்தர்கள் வான் மண்டலத்தில் இருப்பார்கள் அப்போது நம்மை வாழ்த்துவார்கள் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
அப்போது நல்லதாக நினைத்தால் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வாதம் செய்வார்கள் என்று சொல்வார்கள். நல்லதயே நினைப்போம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
படங்கள் மிகவும் அழகு
பதிலளிநீக்குஅதிகாலை எழுதலின் பலன்களை சொன்னது சிறப்பு.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
அருமையான பாடல்... அழகிய காட்சிகள்...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
மிக இரம்மியமான காட்சிகள். நேரில் பார்க்கையில் மனதுக்கும் இதம்.
பதிலளிநீக்குஅதிகாலையில் எழுவதால் ஏற்படும் நன்மைகளை அருமையாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். உண்மை. வழக்கப்படுத்திக் கொண்டால் சிறப்புதான்.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குகாலையில் கதிரவனைப்பார்ப்பது மனது இதமாக இருக்கிறது.
அதிகாலை எழுவதை வழக்கப்படுத்தி கொண்டால் சிறப்புதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
பதிவில் கவிதையைப் படிக்க ஆரம்பிக்கும் போதே மகரிஷி அவர்களது கை வண்ணமாக இருக்கும் என்று நினைத்தேன்...
பதிலளிநீக்குபெரியோர்களது வாக்கிற்கு இணை ஏது!..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குபெரியோர்களைன் வாக்கிற்கு இணை அவர்களே தான்.
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
ஆவணி முழுதும் சிறப்பான சூர்ய நமஸ்காரம் - தங்களது பதிவுகளினால் ஆயிற்று..
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி..
பதிவுகளை தொடர்ந்து பார்த்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி, நன்றி.
நீக்குவைகறைத் துயில் எழு.. - என்று ஔவையார் ஒற்றை வரியில் சொன்னதும் இதைத் தானே...
பதிலளிநீக்குஇன்றைய பிள்ளைகளுக்கு வைகறை என்ன்னும் வார்த்தை தெரிந்திருக்குமா ..என்பது சந்தேகம் தான்...
வைகறைத் துயில் எழு பாடத்தில் படித்து இருப்பார்கள் குழந்தைகள். இன்றைய பாடத்திட்டத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை.
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
சூரிய காட்சிகள் மனதை நிறைக்கின்றன. பகிர்வும் நிறைவு.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கும்னதை நிறைத்தது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அருமையான ரசனையான படங்கள். நாங்களும் காலை நாலரைக்குள் எழுந்திருக்கும் வழக்கத்தில் தான் இருந்தோம். எல்லோரும் சொல்லிச் சொல்லி/சண்டை போட்டு இப்போக் கொஞ்சம் ஐந்து/ஐந்தரைனு எழுந்திருக்கிறோம். ஆனால் இரவில் நாலைந்து முறை விழிப்பு வரும். சில நாட்களில் இரவு ஒரு மணி வரை தூக்கம் கொஞ்சம் கூட வராது. அம்மாதிரி நாட்களில் விடியலில் கண் அசந்துடும். :)
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குமுன்பு காலை சீக்கீரம் எழுந்தால் தானே வேலைகளை செய்ய வசதியாக இருக்கும்.
என்னையும் அவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன செய்வீர்கள் என்று கேட்பார்கள்?
நானும் இரவில் இரண்டு மூன்று முறை விழிப்பு வந்து தான் தூங்குவேன்.
உங்களுக்கு உடம்பு வேறு சரியில்லை ஓய்வு எடுங்கள்.
எனக்கும் கை, கால்வலி அதிகல் இரண்டு நாட்களாக. மகள் வீட்டுக்கு வந்து இருக்கிறேன். இன்று.
வேதாத்திரி மஹரிஷியின் பாடலா இது? அருமை! குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். தமிழ்நாட்டில் முடியாத ஒரு விஷயம். இங்கே தான் கடவுள் வாழ்த்தே இல்லையே! நீதி போதனைகள்னா என்னனு கேட்கும் குழந்தைகள்! தானாக வீடுகளில் அப்பா/அம்மா, தாத்தா/பாட்டிகள் மூலம் தெரிந்து கொண்டால் உண்டு.
பதிலளிநீக்குகுழந்தைகளுக்கு என்று எழுதிய பாடல்தான். இதை உறவினர் , நண்பர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இந்த பாப்பா பாடலை வாங்கி கொடுத்து இருக்கிறேன்.
நீக்குதாத்தா , பாட்டி மூலம் தெரிந்து கொள்வது நல்லதுதான்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
இங்கே விடிகாலையில் ஒற்றைக்குயில் தான் கூவி எழுப்பும். "குயில் கூவித் துயிலெழுப்ப!" பாடல் நினைவில் வரும். சில நாட்கள் பக்ஷிகள் பேராரவாரம் இடும். சில நாட்கள் அமைதி கோலோச்சும்.
பதிலளிநீக்குநல்ல பாடல் நினைவுக்கு வந்து இருக்கிறது.உங்க்ள் ஊரில் குயில் கூவித் துயிலெழுப்புவது போல மதுரையில் இரண்டு மூன்று குயில்கள் பாடும். சில நேரம் காட்டு கத்தலாக கத்தி எழுப்பி விடும். காலை நேரம் பக்ஷிகள் ஒலி மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும். மகள் காலையில் பறவைகள் வருகை உண்டு என்றாள். நாளை காலை பார்க்க வேண்டும்.
நீக்குசில நாட்கள் அமைதி கோலோச்சும் என்றால் பறவைகள் வராதோ!
ங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
விழிப்பு 3 மணிக்கு வந்து விட்டால் மீண்டும் தூங்காமல். உலகநன்மைக்கு, குடும்ப நன்மைக்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாம் என்கிறார்கள். 3லிருந்து 5 மணி வரை பிரம்ம முகூர்த்த நேரம். அப்போது இறையாற்றலிடம் வேண்டிக் கொண்டால் நடக்கும் என்கிறார்கள் . அமைதியான வேலையில் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு வலு அதிகம், ஆழ்மன சக்திகள் கேட்பதை பிரபஞ்ச சக்தி நிறைவேற்றும் என்கிறார்கள். ஞானிகள்.////////////////////////////////////////////////////////////////////////////// கதிரவன் படங்கள் அற்புதம்.
பதிலளிநீக்குசூரிய உதயங்களை என் ஜன்னல் வழியே
பார்ப்பதே என் வேலை. மழை நாட்களில் அது முடியாது.
பின் மாலை எனப்படும் பிரம்ம முஹூர்த்தம்
பல அதிசயங்களைச் சாதிக்கும் வல்லமை
படைத்தது.
அப்போது செய்யும் பிரார்த்தனைகள்
கட்டாயம் நிறைவேறும்.
அருமையான வேதாத்ரி மஹரிஷி பாடல்
உற்சாகம் கொடுக்கிறது.
வழிகாட்டும் குருவுக்கு நமஸ்காரங்கள்.
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குஆசிரியர் தினத்தில் என் குருவின் பதிவாக பாடல் இடபெற்றது மகிழ்ச்சி அக்கா. தற்செயலாக நடந்த ஒன்று.
வழிகாட்டும் குருவிற்கு நன்றி, வணக்கங்கள்.
பதிவு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
ஜன்னல் வழியே சூரிய உதயம் பார்பது மகிழ்ச்சிதான் அக்கா.
இன்று விமானநிலையத்தில் எனக்கு சூரியன் தரிசனம் தந்தார்.
எனக்கு நேரே கண்ணாடி ஜன்னல் வழியாக வந்தார்.
வேண்டிக் கொண்டேன்.
உங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி.
மிக அழகிய சூரிய உதயம்... நான் சூரிய அஸ்தமனம் எடுத்து வைத்திருக்கிறேன்ன்:))
பதிலளிநீக்குவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
நீக்கு//மிக அழகிய சூரிய உதயம்//
நன்றி.
//நான் சூரிய அஸ்தமனம் எடுத்து வைத்திருக்கிறேன்ன்:)//
நானும் எடுத்து வைத்து இருக்கிறேன்.
//எனக்கு அப்படித்தான் சிறிது நேரம் கழித்து எழுந்து விட்டால் ஏதோ தப்பு செய்து விட்ட குற்ற உணர்ச்சி வந்து விடும். தொட்டில் பழக்கம் என்பது போல் அம்மா காலையில் எழுப்பி விட்டது. இன்றும் தொடர்கிறது.///
பதிலளிநீக்குஇதேதான் கோமதி அக்கா, இதேதான் எனக்கும்.. நான் 4.30 எல்லாம் இல்லை, விடுமுறை நாட்களில், 8 மணிக்கு மேல் நித்திரையாகி முழிச்சால்ல்.. பதட்டமாக இருக்கும்... இங்கு எல்லோரும் 11 மணிவரை நித்திரை கொள்ளுவினம்... அதனால எழும்பி என்ன பண்ணுவது எனவும் இருக்கும்.. நான் எழும்பி சத்தம் போட்டால், அது ஏனையோருக்கு டிஸ்ரேப் எல்லோ..
உங்களுக்கு அம்மா, எனக்கு அப்பா பழக்கிய பழக்கம்:))
விடுமுறை நாள் என்றாலும் அம்மா எழுந்து குளித்து சாப்பிட்டு அப்புறம் ஓய்வு எடுக்க வேண்டும் என்பார்கள்.
நீக்கு//இங்கு எல்லோரும் 11 மணிவரை நித்திரை கொள்ளுவினம்... அதனால எழும்பி என்ன பண்ணுவது எனவும் இருக்கும்.. நான் எழும்பி சத்தம் போட்டால், அது ஏனையோருக்கு டிஸ்ரேப் எல்லோ..//
அதுவும் சரிதான்.
அம்மா பழக்கினாலும் அப்பாவும் அதிகாலை கண்விழித்து விடுவார்கள்.
என் கணவரும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து விடுவார்கள்.
வேலை இருந்தால் சீக்கீரம் எழுந்து விட வேண்டியதுதான். இல்லையென்றால் ஓய்வு எடுக்க வேண்டியதுதான்.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
பொதுவாக என்னைப்போல் 4.30 எழுந்து கொள்பவர்கள் இருப்பீர்கள். //
பதிலளிநீக்குஆமாம் கோமதிக்கா. நான் அதிகாலை எழுந்திருப்பவள். சிறு வயது முதலே. ஆமால் தாமதமாகி விட்டால் ஏதோ டல்லாகிவிடும்.
சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுவேன்.
இன்று காலை 3 மணிக்கே முழிப்பு. உடன் இறைவனை நினைத்து ப்ரேயர் செய்யத் தொடங்கிவிட்டேன். ஆமாம் பிரம்ம முகூர்த்தம் நல்லது அப்போது செய்யப்படும் ப்ரேயர் வலுவானது என்று சொல்றாங்க.
அதிகாலை எழுந்தால் மனம் மகிழ்ச்சி என்பதும் கூட நம் மனதில் தான் இருக்கிறது என்பது என் சமீபத்திய அனுபவம் கோமதிக்கா. எல்லாத்துக்கும் நம் மனம் தானே காரணம்! அதுதான் சண்டித்தனம் செய்கிறது!!!!!
வேதாத்ரி மகரிஷியின் பாடல் வெகு அருமை. ரசித்து வாசித்தேன் கோமதிக்கா.
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு21ம் வருடம் போட்ட பின்னூட்ட்த்திற்கு 24 ல் பதில் கொடுக்கிறேன்.
//ஆமாம் கோமதிக்கா. நான் அதிகாலை எழுந்திருப்பவள். சிறு வயது முதலே. ஆமால் தாமதமாகி விட்டால் ஏதோ டல்லாகிவிடும்.//
தாமதமாக எழுந்த நாள் எல்லாம் பதட்டம் தான் கடமைகளை சரிவர செய்ய இயலாது.
என்னிடம் "இப்போது உங்களுக்கு என்ன வேலை காலையில் நிம்மதியாக தூங்க வேண்டியது தானே!" என்று சிலர் கேட்பார்கள்.
//இன்று காலை 3 மணிக்கே முழிப்பு. உடன் இறைவனை நினைத்து ப்ரேயர் செய்யத் தொடங்கிவிட்டேன். ஆமாம் பிரம்ம முகூர்த்தம் நல்லது அப்போது செய்யப்படும் ப்ரேயர் வலுவானது என்று சொல்றாங்க.//
ஆமாம். காலை பிரார்த்தனை நல்லது.
//அதிகாலை எழுந்தால் மனம் மகிழ்ச்சி என்பதும் கூட நம் மனதில் தான் இருக்கிறது என்பது என் சமீபத்திய அனுபவம் கோமதிக்கா. எல்லாத்துக்கும் நம் மனம் தானே காரணம்! அதுதான் சண்டித்தனம் செய்கிறது!!!!!//
மனம் தெம்பாக இருந்தால் அது செய்யும் வேலைகள் பல.
சோம்பிய மனத்தால் காரியங்கள் ஆற்ற முடியாது என்பது உண்மை.
எல்லா வற்றுக்கும் மனம் தான் காரணம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
மிக்க நன்றி கோமதிக்கா. தாமதமாகக் கொடுத்தாலும் பிரச்சனை இல்லை. தினமுமே காலை 3.30க்கு எழுந்துவிடுகிறேன் ஒரு சில நாட்கள் மட்டுமே 5 மணி. அல்லது 5.30க்கு அது பிரயாணம் செய்து விட்டு இரவு தூங்க 11, 12 ஆகிவிட்டால் மட்டும். இல்லைனா 4 க்க்குள்ள் எழுந்து உடற்பயிற்சி தியானம் என்று போகும்.
நீக்குகீதா
அன்பு கீதா, மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
நீக்குகாலை சீக்கிரம் எழுந்தால் தான் நாம் நினைத்தவைகளை செய்ய முடியும். தவிர்க்க முடியாத காரணங்களால் எழுந்து கொள்ள நேரம் ஆனால் பரவாயில்லை.