வியாழன், 9 செப்டம்பர், 2021

பறவைகள் பலவிதம்



மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டுக்கு  வந்து இருக்கிறேன்.  ஞாயிறு வந்தேன் . மகள் வீட்டில்   இருக்கும் மரங்களில்  புல்வெளிகளில் வந்து அமர்ந்த பறவைகள் படம் இந்த பதிவில்.


வீட்டைச்சுற்றி  பெரிய பெரிய மரங்கள், புல்வெளி என்று இருக்கிறது. பறவைகள் வித விதமாக வருகிறது. ஆனால் அவற்றை படம் எடுப்பதுதான் கஷ்டம் எல்லாபறவைகளும்  மரத்தில் மறைந்து கொள்கிறது. புல்வெளி, மற்றும் மரத்தின் கிளையில் அமரும் போதுதான் எடுக்க முடிகிறது. 

 சிவப்பு Cardinal  பறவை  என்று நினைக்கிறேன். இதில் ஆண்,  பெண்  வேறு பாடு இருக்கிறது.

இந்த சிவப்பு பறவை மரத்தில் இருந்த வண்ணத்து பூச்சியாக மாற வேண்டிய இளம் புழுவை  பிடித்து இருக்கிறது, தன் காலை உணவுக்கு.

சிட்டுக்குருவிகள்

வந்த இரண்டு நாளாக பறவைகளை படம் எடுக்க முயன்றேன். நிற்காமல் ஓடி கொண்டு இருந்தது, இன்று கொஞ்சம் பழகி விட்டது. குருவியின் கீச் கீச் ஒலி மனதுக்கு இதம்.
தூரத்திலிருந்து ஒரு பார்வை

அப்புறம் உணவு தேடல்






இதற்கு தலைமுடி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது

இதுவும் குருவிதான், மொட்டைத் தலை, குட்டி வாய்(அலகு)
சின்னதாக இருக்கிறது

இந்த பறவை பெரிய குருவி போல் இருக்கிறது

இதன் சத்தம் வேறு மாதிரி இருக்கிறது

பறவைகளுக்கு இது போன்ற ஊஞ்சலாடும்  மரக்கிளைகள் பிடித்தமானது


வீட்டுக்கு எதிர்புறம் உள்ள மின்சார கம்பியில்  அமர்ந்து இருந்தது சிவப்புக் கலர் புறா.  (சரியாக வரவில்லை, அடுத்த முறை பார்த்தால் சரியாக எடுத்து போடுகிறேன்)

சிவப்புக் கலர் குருவி அலகு நீட்டமாக இருக்கிறது. இதுவும் அவ்வளவு தெளிவு இல்லை. அவசரம் பறந்து விட போகிறதோ! என்று வேகமாய் எடுத்தேன்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
---------------------------------------------------------------------------------------------

32 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வணகம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
      வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

      நீக்கு
  2. சிவப்புப் பறவை மிக அழகு.

    பறவைகளைப் பார்ப்பதும் மகிழ்ச்சி. சிட்டுக்குருவிக் கூட்டம்... அவற்றின் சத்தம் காதில் ஒலிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      சிவப்பு பறவை நிறைய வருகிறது. அவற்றை படம் பிடிப்பதுதான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. பறவைகளைப் பார்ப்பது மகிழ்ச்சி தருகிறது எனக்கு. சிட்டுக்குருவிக்கூட்டம் சத்தம் காதில் ஒலிக்கிறதா?
      மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. அன்பு கோமதிமா,
    இங்கும் கிளிகள் ,குருவிகள்,புறாக்கள், மைனாக்கள்,
    ஊஞ்சல் பறவை என்று வித விதமாக வருகின்றன.
    கதவைத் திறந்தால் ஓடி விடுகின்றன:)

    அணில்களுக்கு மட்டும் பயமே கிடையாது!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      //இங்கும் கிளிகள் ,குருவிகள்,புறாக்கள், மைனாக்கள்,
      ஊஞ்சல் பறவை என்று வித விதமாக வருகின்றன.
      கதவைத் திறந்தால் ஓடி விடுகின்றன:)//

      ஆஹா! ரசிக்கலாம்.
      அணில்கள் பெரிதா? சின்னதா?

      நீக்கு
  4. இனிய மாலை வணக்கம்மா. வாழ்க வளமுடன்
    அன்பு கோமதி.

    முத்தான பதிவு. இங்கே வீடுகள் வேறு மாதிரி இருக்கின்றனவே.
    அழகான புல்வெளி.

    குருவிகளும் சிவப்புப் புறாவும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் , வாழ்க வளமுடன் அக்கா
      ஆமாம், இங்கு வீடுகள் வேறு மாதிரி இருக்கிறது, மாடி இல்லை. ஊட்டியில் வீடு இருப்பது போல் இருக்கிறது. ஒவ்வொரு வீடுகள் உயரத்தில் சில் வீடுகள் கீழே இருக்கிறது. ஏற்றம் இறக்கமாக வீடுகள் இருக்கிறது. பச்சை புல்வெளி எங்கும் அதை பராமரிக்க வேண்டும். அதிகம் வளர்ந்து இருந்தது. புல்வெட்டுபவர் வந்து அளவாய் மிஷின் வைத்து வெட்டிச்சென்றார்.

      நீக்கு
  5. :குருவியின் கீச் கீச் ஒலி மனதுக்கு இதம்." உண்மைதான். சின்ன உடம்பில் மகிழ்ச்சி
    சத்தம் இந்தக் குருவிகளின் குரல். காலையில் முதலில் காதில் விழுவது பறவைகளின் குரல் தான்.
    நீங்கள் எடுத்திருக்கும் அத்தனை படங்களும் , அதுவும்
    அலகில் புழுவுடன் படம் மிக மிக அற்புதம் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா, சின்ன உடம்பில் மற்றவர்களை மகிழ்விக்கும் குரல்.
      பறவைகளின் ஒலி காலையில் கேட்பது மகிழ்ச்சியான பொழுதுதான்.
      எத்தனை கவலைகள் இருந்தாலும் அது இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா.

      நீக்கு
  6. பறவைகள் படங்கள் அழகு.  வீடும் அழகு.  மகன் வீட்டைவிட்டு இங்கு பறவைகள் சற்று அதிகமாக கண்ணில் படுகின்றனவோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      மகன் ஊரிலும் வித விதமான பறவைகள் வந்தன.
      இங்கும் இருக்கிறது. இங்கு வேறு மாதிரி இருக்கிறது.

      இன்று ஒரு புதிய பறவை பார்த்தேன் உயர்ந்த பைன் மரத்தில் தலை கீழாக கொத்திக் கொண்டு இருந்தது மரத்தின் கிளையில்.

      நீக்கு
  7. புழுவை வாயில் வைத்திருக்கும் பறவையின் அலகே ஏதோ வளைத்து அப்படிதான் இருக்கும் என்பது போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் படத்தில் வாயில் ஒன்று இல்லாமல் இருக்கிறது பாருங்கள் அதில் குட்டி அலகு.
      புழு வைத்து இருக்கும் படம் அதன் அலகு போல தெரிகிறதா!

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. பறவைகளையும் இயற்கையும் ரசித்துக் கொண்டிருப்பது நல்ல விஷயம். பொழுது போக்க இது நல்லதொரு உத்தி. படங்கள் எடுத்து, பகிர்ந்து கொண்டிருப்பதற்கு நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      பறவைகளை, இயற்கையை ரசிப்பது பிடிக்கும் எனக்கு. இப்போது மன ஆறுதல் , பொழுது போக்கும் விஷயமாகவும் போய் விட்டது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. மனதுக்கு இதமான காட்சிகள் அழகிய சிவப்பு பறவை.
    வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      மனதுக்கு இதம் தருகிறது இந்த பறவைகள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. என்னுடைய வலைப்பூ: https://ivansatheesh.blogspot.com/2021/06/blog-post.html

    பறவைகள் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சதீஸ் முத்து கோபால், வாழ்க வளமுடன்
      உங்கள் தளம் அருமை.
      உங்கள் வரவுக்கும், தகவல் பகிர்வுக்கும் நன்றி.

      நீக்கு
  11. பறவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் அழகு! கோமதிக்கா...

    சிவப்புப் பறவை செம க்யூட்.

    உங்கள் மகளின் வீடும் அதன் சுற்றுப் புறமும் மனதைக் கொள்ளை கொள்கிறது. ரம்மியம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது. நலமா?

      பறவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்தான் கீதா.

      ஊரே பசுமை போர்வை போர்த்துக் கொண்டு ரம்யமாக காட்சி அளிக்கிறது கீதா.
      மரங்கள், புல்வெளிகள் தான் எங்கும் . மலர்கள் குறைவு. வந்த இரண்டு நாளில். பார்த்தவரை. காட்டுப்பூக்கள் பார்த்தேன்.

      நீக்கு
  12. ஆமாம் கோமதிக்கா பறவைகளைப் படம் பிடிப்பது சிரமம் தான். டக்கென்று பறந்துவிடும்.

    நானும் பறவைகள் படம் எடுத்து வைத்திருக்கிறேன் ஆனால் பதிவில் போடவே இல்லை. போட வேண்டும் என்று நினைத்து போடாமல்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எடுத்த பறவைகளை பதிவு போடுங்கள்.

      முடிந்த வரை பறவைகளை எடுக்கிறேன்.

      நீக்கு
  13. போட்டோக்கள் அழகு. எந்த ஊர்? இங்கு பேரன் பேத்திகள் யாரும் இல்லையா? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சார், வாழ்க வளமுடன்

      ஊர் அட்லாண்டா. பேரன் பேத்திகள் இருக்கிறார்கள், பெரியவர்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. ராணுவக்குடியிருப்பு வீடுகளைப் போல் உள்ளன இந்த வீடுகள் எல்லாம். நாங்க ராஜஸ்தான், குஜராத்தில் இருந்தவற்றை நினைவூட்டுகிறது. ஆனால் புல்வெளி இத்தனை அழகாய் இருக்காது. அங்கேயும் தோட்டக்காரர் (மாலி) வந்து பராமரித்தாலும் கொஞ்சம் சுமார் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //ராணுவக்குடியிருப்பு வீடுகளைப் போல் உள்ளன இந்த வீடுகள் எல்லாம். நாங்க ராஜஸ்தான், குஜராத்தில் இருந்தவற்றை நினைவூட்டுகிறது. //

      ஓ! நல்லது.

      இங்கு புல்வெளிதான் அழகு. இந்த ஊரில் கட்டாயம் பராமரிக்க வேண்டும்.



      நீக்கு
  15. சிவப்புப் பறவையின் பெயர் தெரியலையா? சின்னச் சிட்டுக்குருவி ஒரு வேளை தேன்சிட்டின் ஒரு ரகமோ? அது கத்துவதும் கணீர் என்று இருக்கும். சிட்டுக்குருவிகளைப் பார்த்தே பல காலங்கள் ஆகிவிட்டன. சிவப்புப் புறாவையும் தான். இங்கே வீட்டிற்குள் விதம் விதமாகக் குளவிகள் பறக்கும். கொஞ்சம் கவலை/பயமாக இருக்கும். வாசலில் தாழ்ப்பாள் அருகே கூடு கட்டுகிறது. பூட்டும்போதும் திறக்கும்போதும் கவனமாக இருக்க வேண்டி இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவப்பு பற்வையின் பேர் தெரியவில்லை, சிவப்பு காரிடினால் பறவை என்று நினைக்கிறேன். தேன் சிட்டு இங்கு இருக்கிறது மிகவும் குட்டியாக இருக்கும் அது இறகை அடித்து பறந்து கொண்டே இருக்கும், அதை வீடியோதான் எடுக்கலாம்.

      //சிவப்புப் புறாவையும் தான். இங்கே வீட்டிற்குள் விதம் விதமாகக் குளவிகள் பறக்கும்.//

      சிவப்பு புறா அங்கு உண்டா! குளவிகள் மதுரையிலும் நிறைய வரும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  16. சிட்டுக்குருவி பார்த்தாலே உற்சாகம் தான்... படங்கள் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      நமக்கு உற்சாகம் தரும் பறவைதான் சிட்டுக்குருவி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு