ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

கீழச் சூரிய மூலை அருள்மிகு சூரிய கோடீஸ்வரர் ஆலயம்



 பொங்கல் திருநாள் அன்று (15/01/2015) நாங்கள் கீழச்சூரிய மூலை என்ற

 ஊரில் உள்ள அருள்மிகு சூரிய கோடீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று
 இருந்தோம்.,இக் கோயில் கும்பகோணத்தில் இருந்து 
15.கி.மீ தொலைவில் உள்ளது. சூரியனார் கோவிலுக்கு அருகே
 கஞ்சனூர், திருலோகி கிராமங்களை அடுத்து இவ்வூர் அமைந்துள்ளது.

கீழச்சூரிய மூலை என்றகிராமத்தில் அருள்மிகு பவளக்கொடி அம்பிகை
சமேத ஸ்ரீ சூரிய கோடீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.





 தன் வாழ்நாளெல்லாம் தமிழுக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவரும் , ஓலைச்சுவடிகளிலிருந்து சங்க நூல்களையும் , காப்பியங்களையும் நூலாக அச்சிலேற்றி தமிழ் உலகுக்குத் தந்தவருமாகிய, தமிழ்த் தாத்தா 
டாக்டர் .உ.வே. சாமிநாதய்யர் பிறந்த ஊர் ,கீழச் சூரிய மூலையாகும். 
கோவிலில்  அவரின் ஓவியம் வரைந்து வைத்து இருக்கிறார்கள். 
அவர் வீடு இருந்த தெருவே இப்போது இல்லையாம்.

கீழச்சூரிய மூலைகோவிலின் சிறப்பு :--

கருவறையில் ஈச்வர லிங்கத்திற்கு மேல் ஓராயிரத்திற்கு மேலான “ஏகமுக”
ருத்திராட்சத்தினால் ஆன பந்தல் உள்ளது.
                அருள்மிகு  சூரிய கோடீஸ்வரர்                    
அருள்மிகு பவளக்கொடி அம்பிகை 
ஸ்வாமிக்கு நேரே  மண்டபத்தில் நந்தி இருக்கிறார்.

அதிகாலை காலைச் சூரியன்

மாலைச்சூரியன்
இரண்டு படங்களும் இப்போது மகன் வீட்டில் எடுத்த படங்கள்

இங்குள்ள மூலவரை , காலை முதல் மாலைவரை சூரிய 
பகவான் தன் பொன்கதிர்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். 
அதற்கேற்ப சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை  மூலவரின் நிழல் 
சுவரில் தெரியுமாம். குருக்கள் கண்ணாடி வைத்து
 சூரிய ஒளியைக் காட்டினார். 


பிரதோஷ காலத்தில் சூரியன் இறைவனைத் தரிசிக்க அருள்புரிந்த
 ஸ்ரீ காலபைரவர்  மிகவும் விஷேசமானவர்.  இவர் சொர்ணபைரவர் என்று அழைக்கப்படுகிறார்.இந்த பைரவருக்கு  தீபாராதனை காட்டும்
 போது அவரது கண்டத்தில் சிறிதாக  பவளமணி அளவில் சிவப்பு ஒளி வெளிப்படுகிறது. அது தீபாராதனையின் போது மெல்ல 
அசைவது போல் இருக்கும். இதைக் குருக்கள்  விவரித்து 
தீபாராதனை செய்து காட்டினார்.

இந்த பைரவரின் கண்டப்பகுதி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
 நிறம் மாறுவதும், பின் பழைய நிலையை அடைவதும்
 இததலத்தின் சிறப்பு. இத் தலத்தின் பைரவரை தரிசனம்
 செய்தால் பக்தர்களின் கண்டம் நீங்குமாம்.

பைரவரின் கழுத்தில் தெரியும் பவளமணியின் ஏழு ஒளிக் 
கிரணங்களின் மூலம் அனைத்து கோடி சூரிய , சந்திர மூர்த்திகளின் ஒளிக் கிரணங்களால் ஏற்படும் தோஷங்களையும் , பிணிகளையும்
 நிவர்த்தி செய்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாம்.

தெற்கு கோஷ்டத்தில் ஆனந்த தட்சிணாமூர்த்தி புன்னைகைத்த
 நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு மேலே உள்ள சர்ப்பத்தின்
 ஒரு தலையில் ஆஞ்சநேயரின் முகம் தெரிகிறது.
இங்கு உள்ள துர்க்கைக்கு ஒரு பாதத்தில் மட்டும் மெட்டி உள்ளது. 
தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களை அம்மன் வலது காலை 
முன் வைத்து எழுந்து வரவேற்கிறாளாம்.

கோயிலைச்சுற்றி வந்தபின் தான் குருக்கள் சொன்னார் துர்க்கையின் சிறப்பை .முன்பே சொல்லி இருந்தால் கால் விரலை குளோசப்பில் எடுத்து இருக்கலாம்.
வெளிப்பிரகாரத்தில் பிள்ளையார், வள்ளி தெய்வானையுடன் முருகன், 







சுந்தர மஹாலக்ஷ்மி
சண்டேஸ்வரரின் கால் பகுதியில் சூரியஒளி

நவக்கிரகங்கள் தங்கள் வாகனத்துடன் இருக்கிறார்கள்








மேலும்  கோவிலின் சிறப்புகள்   ;-

ஸ்ரீ யாக்ஞவல்கியருடைய வேதமந்திர சக்திகளெல்லாம்
 ஸ்ரீ சூர்ய கோடீஸ்வரருடைய திருவடிகளிலே ஓர் அற்புத 
விருட்சமாய் மலர்ந்த


இலுப்பை  மரம்தான் இக்கோவிலின் தலவிருட்சமாகும்.

சூரிய தோஷம் , மனசஞ்சலம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்குமாம்.

பார்வைக்குறைகள், பலவிதமான கண் நோய் உடையவர்கள் பிரதோஷவழிபாட்டையும், ஞாயிற்றுக்கிழமை காலை 6-7 
சூரிய ஹோரை நேரத்தில் பூஜையையும் செய்தால் கண் 
 நோய்களிலிருந்து தீர்வு பெறலாம் என்றும், அன்னதானம் செய்தால் நம் முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும் அதனால் ஏற்பட்ட
 தோஷங்களும் விலகும் என்றும் குருக்கள் கூறினார்.

சுக்கிராச்சாரியார் தான் இழந்த கண்பார்வையை திரும்பவும் பெற, 
ஆதித்யஹ்ருதய  மந்திர ஹோம பூஜைகளைச் செய்த ஸ்தலம் இது.

ஸ்ரீராமர் தசரதருக்கு  ஈமக்கடன்களை ஆற்ற இயலாமற் போனதால் அதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க 108 புனித விருட்சங்களின்  கீழ் ஸ்ரீராமர் தர்ப்பணம்
 செய்தார். அப்படி இலும்பை மரத்துக்கு கீழ் செய்த தலம்
 கீழச்சூரிய மூலையாகும்.

 இத்தலத்தில் பித்ரு தர்ப்பணம் செய்வதால் பித்ரு சாப நிவர்த்தி கிடைக்கும்.
இக்கோவிலில் ஆதித்ய ஹ்ருதய மந்திரங்களை ஓதி வழிபட்டால் சாந்தமும், மனநிம்மதியும் கிடைக்கும்  என்று தலவரலாறு கூறுகிறது என்று சொன்னார்
 குருக்கள்.

கும்பகோனத்திலிருந்து  திருலோகி செல்லும் டவுன் பஸ் 38ல்  கோவிலுக்கு
 செல்லலாம். ஆடுதுறை, திருப்பனந்தாளிலிருந்து ஆட்டோ, கார் வசதிகள்
 உண்டு. அம்பிகா சர்க்கரை ஆலையிலிருந்து 2கி.மீ வடக்கே உள்ளது.

ஆவணி மாதம்  ஞாயிறு வந்தவுடன் மாயவரத்தில் இருக்கும் போது 
கணவருடன் இந்த கோயில் போனது நினைவு வந்து விட்டது.

                           வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

                                      =================================

32 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள்.  முன்பு இந்தத் தகவல்கள் படித்திருக்கிறேனா என்று நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //சுவாரஸ்யமான தகவல்கள். முன்பு இந்தத் தகவல்கள் படித்திருக்கிறேனா என்று நினைவில்லை.//

      அதனால்தான் இந்த பதிவு.

      //சுவாரஸ்யமான தகவல்கள். முன்பு இந்தத் தகவல்கள் படித்திருக்கிறேனா என்று நினைவில்லை./

      இந்த கருத்து முன்பு போட்டது ஸ்ரீராம்.

      இந்த பதிவில் இரண்டு சூரியன் படங்கள் புதிது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. அன்பின் வணக்கம் ..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //இறையருள் சூழ்க எங்கெங்கும்...//
      நல்லது .
      வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

      நீக்கு
  3. படங்கள், விளக்கங்கள், தலத்தின் தகவல்கள் என அனைத்தும் அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. படங்களும், தகவல்களும் நன்று.

    //அவர் வீடு இருந்த தெருவே இப்போது இல்லையாம்//
    மிகவும் வருத்தமான விசயம், தமிழுக்காக உழைத்த அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை இவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      அவரின் தாயார் பிறந்த வீடுதானே என்று கவனிக்காமல் விட்டு விட்டார்கள் போலும்.

      அவர் தாத்தாவீடு அது. அவர் பிறந்த வீடு என்பதால் அதை கொஞ்சம் கவனித்து இருக்கலாம்.

      //படங்களும், தகவல்களும் நன்று.//


      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  5. மிகவும் அபூர்வமான கோவிலாக இருக்கிறதே? இன்னும் சிறப்பாக பராமரிக்கப் படலாமோ? தகவல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //மிகவும் அபூர்வமான கோவிலாக இருக்கிறதே?//

      ஆமாம்.

      //இன்னும் சிறப்பாக பராமரிக்கப் படலாமோ? தகவல்களுக்கு நன்றி.//

      முதலில் இதை விட மோசமாக இருந்து இருக்கிறது. இப்போது பரவாயில்லை என்று குருக்கள் சொன்னார். உள்ளூர் மக்கள் அந்த கோவிலுக்கு வந்தால்தான் பராமரிப்பு நன்றாக இருக்கும்.

      கோவில் மூர்த்திக்கும் விளம்பரம் வேண்டி இருக்கிறது.




      நீக்கு
  6. அருள்மிகு சூரிய கோடீஸ்வரர் ஆலயம் மிக அருமையான தரிசனம் மா ..

    தட்சிணாமூர்த்தி புன்னைகைத்த
    நிலையில் காட்சி தருகிறார் ....ஆமாம் படத்தில் கூட தெளிவாக தெரிகிறது ...

    துர்க்கைக்கு ஒரு பாதத்தில் மட்டும் மெட்டி உள்ளது.தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களை அம்மன் வலது காலை
    முன் வைத்து எழுந்து வரவேற்கிறாளாம்....ஆஹா மிக சிறப்பு


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்

      //தட்சிணாமூர்த்தி புன்னைகைத்த
      நிலையில் காட்சி தருகிறார் ....ஆமாம் படத்தில் கூட தெளிவாக தெரிகிறது ...//

      படத்தை ஆழ்ந்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      வெளியே வந்த பின் சொன்னார் குருக்கள், அவருக்கு இன்னொரு கோயிலுக்கு பூஜை செய்ய போக வேண்டிய அவசரம் வேறு. மீண்டும் போய் கால மெட்டியை படம் எடுக்க முடியவில்லை.
      இனி போகிறவர்கள் பார்ப்பார்கள் என்று பதிவில் சேர்த்தேன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.



      நீக்கு
  7. முதல் முறையாக இந்த ஊரைப் பற்றியும் இந்தத் தகவல்களையும் கேள்விப் படுகிறேன். இது தமிழ்த்தாத்தாவின் அம்மாவின் பிறந்த ஊரா? அதனால் கவனம் கொடுக்கலையோ? என்றாலும் முற்றிலும் புதிய தகவல்களை அளித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      நீங்கள் ம்ன்னர் படித்து இரண்டு கருத்துரையும் கொடுத்து இருக்கிறீர்கள்.

      //geethasmbsvm618 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 8:19
      உ.வே.சா. ஊர் இதுவா? கும்பகோணத்துக்காரர் ஆன என் கணவருக்கே இப்போ நான் சொல்லித் தான் இந்தக் கோயில் தெரிந்தது. முடிந்தால் போகணும். அருமையான தகவல்கள். படங்கள் எல்லாம் பிரமாதம். //

      முகநூலில் பார்த்துட்டு ஓடி வந்தேன். :)//

      முகநூலில் பார்த்து ஓடி வந்தேன் என்று சொன்னீர்கள்.

      நீக்கு
  8. கோயில் பற்றியும் கோயிலில் குடிகொண்டிருக்கும் கடவுளர் பற்றியும் அளித்த விரிவான தகவல்களுக்கும் நன்றி. நான் முன்னர் இந்தப் பதிவைப் பார்த்தது இல்லை. சொர்ண ஆகர்ஷண பைரவர் பற்றிய தகவல்களும் துர்கையின் கால் மெட்டி பற்றிய செய்தியும் கேள்விப் படாத ஒன்று. நீங்கள் செல்லும் கோயில்கள் எல்லாமே அரிய/புதிய/தெரியாத பல புதிய செய்திகளோடு இருப்பதும் சிறப்பு. உங்களால் பல புதிய விஷயங்கள் தெரிய வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நீங்கள் செல்லும் கோயில்கள் எல்லாமே அரிய/புதிய/தெரியாத பல புதிய செய்திகளோடு இருப்பதும் சிறப்பு. உங்களால் பல புதிய விஷயங்கள் தெரிய வருகிறது.//

      என் கணவர் அவர்களும் புதிதாக அந்த கோவிலைப்பற்றி தெரிந்து கொண்ட போது அழைத்து சென்றது. அங்கு போன பின் தான் குருக்கள் தினம் அவருக்கு முடிந்த போது வந்து இந்த கோவிலுக்கு பூஜை செய்து விட்டு போவது தெரிந்தது. போன் நம்பர் கொடுத்தார் போன் செய்து விட்டு வர சொன்னார்.

      நிறைய சிறப்புகள் இருக்கிறது அந்த ஊர் மக்கள் பக்கத்து ஊர்களுக்கு போய் வருகிறார்கள் . பல வருடங்கள் ஆகி விட்டது நாங்கள் போய். இப்போது ஒரு வேளை நன்றாக கோயில் நடக்கலாம். இறைவன் சித்தம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
      உடல் நிலை இப்போது தேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மறுபடியும் நீங்கள் பதிவுகளை போட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

      நீக்கு
  9. அற்புத சூரிய ஒளியுடன் ஞாயிறு காலை
    சூரிய கோடீஸ்வரரைத் தரிசிக்க முடிந்ததுதான்
    விசேஷம்.

    எங்கள் குருவும் சூரியனை வழிபடுவதால் துன்பம் போகும் என்று
    ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை
    விளக்கி சொல்லிக் கொடுத்தார்.
    எந்த ஒரு சஞ்சலமும்
    இந்த மந்திரத்தை ஒன்பது தடவை
    சொன்னால் விலகும் என்று சொல்லி எங்களைப்
    படிக்க வைத்தார். அவருக்கும், கதிரவனுக்கும் நன்றி.
    அன்பு கோமதிமா,
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்

      //அற்புத சூரிய ஒளியுடன் ஞாயிறு காலை
      சூரிய கோடீஸ்வரரைத் தரிசிக்க முடிந்ததுதான்
      விசேஷம்.//
      அதனால்தான் ஞாயிறு அன்று பதிவு போட்டேன் அக்கா.

      எங்கள் குருவும் சூரியனை வழிபடுவதால் துன்பம் போகும் என்று
      ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை
      விளக்கி சொல்லிக் கொடுத்தார்.
      எந்த ஒரு சஞ்சலமும்
      இந்த மந்திரத்தை ஒன்பது தடவை
      சொன்னால் விலகும் என்று சொல்லி எங்களைப்
      படிக்க வைத்தார்.//

      ஆமாம் , அப்படித்தான் சொல்வார்கள். அம்மா சூரிய வழி பாடு செய்யாமல் சாப்பிட மாட்டார்கள். ஞாயிறு விரதம் இருக்க வைத்தது அம்மா தான்.
      கதிரவன் இல்லையென்றால் உலகம் இல்லை, தினம் அவருக்கு நன்றி சொல்லுதல் வேண்டும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.






      நீக்கு
  10. பைரவ மூர்த்தி, தக்ஷிணா மூர்த்தி, துர்க்கை அம்மன்
    என்று எல்லா விசேஷங்களும்
    நிறைந்த கோயில். ஒவ்வொரு சன்னிதியும் அழகாகப் படம் எடுத்திருக்கிறீர்கள்.
    நல்லதொரு ஆவணப் பதிவு..
    மாமியாருக்குக் கண் பாதிப்பு ஏற்பட்ட போது சூரிய பகவானை நினைத்து வழிபடச் சொன்னார்கள்.

    கண்ணில் தெரியும் தெய்வம் சூரியன்.
    என்றும் நம்மைக் காக்க வேண்டும்.
    மிக மிக நன்றி மா கோமதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருக்கள் படம் எடுக்க அனுமதி கொடுத்தார். எங்களுக்கு அந்த வருடம் பொங்கல் பண்டிகை இல்லை, அதனால் கோவிலுக்கு போவோம் சூரியனைப்பற்றி அறிந்து கொண்டு அழைத்து போன என் கணவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

      //மாமியாருக்குக் கண் பாதிப்பு ஏற்பட்ட போது சூரிய பகவானை நினைத்து வழிபடச் சொன்னார்கள்.//


      கண் நோய்களுக்கு சூரியனை வழி பட சொல்வார்கள். எல்லா நோய்களும் குணமாக சூரியனை வழி பட சொல்வார்கள்.

      //கண்ணில் தெரியும் தெய்வம் சூரியன்.
      என்றும் நம்மைக் காக்க வேண்டும்.//
      ஆமாம், அக்கா நைவரையும் காக்க வேண்டும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  11. கோயிலில் தமிழ்த் தாத்தாவின் ஓவியம்
    சிறப்பு
    அவர் வாழ்ந்த தெருவே இல்லை என்பது வேதனை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

      //கோயிலில் தமிழ்த் தாத்தாவின் ஓவியம்
      சிறப்பு//

      ஆமாம் , அப்படி வரைந்து வைத்தவரை பாராட்ட வேண்டும்.

      //அவர் வாழ்ந்த தெருவே இல்லை என்பது வேதனை//

      இப்போது கால மாற்றத்தால் நிறைய தெருக்கள் இல்லாமல் போய் விட்டது.
      அவர் வாழ்ந்த தெரி இல்லை என்பது வருத்தம் தான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. சிறப்பான கோவிலாக இருக்கிறது. படங்களும் தகவல்களும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. 20 ஆண்டுகளுக்கு முன்பு சக்தி விகடனில் இந்தத் தலத்தைப் பற்றி எழுதியிருந்தார்கள்.

    ஆலஞ்செடிகள் - கோயில் மண்டபங்களையும் விமானங்களையும் பிளந்திருந்த படங்கள் மனதை ரணமாக்கின.

    இன்னும் அங்கே செல்வதற்கான வாய்ப்பு அமைய வில்லை...

    இன்று தங்களது பதிவின் மூலமாக தரிசனம் செய்து கொண்டேன்...

    வாழ்க வளமுடன்.. வாழ்க வையகம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //20 ஆண்டுகளுக்கு முன்பு சக்தி விகடனில் இந்தத் தலத்தைப் பற்றி எழுதியிருந்தார்கள்.//

      ஓ ! அப்படியா ?

      நாங்கள் போன போது கோயில் நன்றாக இருந்தது மோசமில்லை.

      ஆனால் மக்கள் தான் வரவில்லை. இப்போது எப்படி இருக்கிறதோ தெரியவில்லை, நிறைய சிறப்புகள் அடங்கிய கோயில் .

      //இன்னும் அங்கே செல்வதற்கான வாய்ப்பு அமைய வில்லை...//

      அடுத்த முறை ஊருக்கு வரும் போது பாய் வாருங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.





      நீக்கு
  14. // நாங்கள் போன போது கோயில் நன்றாக இருந்தது மோசமில்லை..//

    திருக்கோயில் புனருத்தாரணம் செய்யப் பட்டிருக்கிறது...

    கும்பகோணத்தில் இருந்து சூரிய மூலைக்கு நகரப் பேருந்துகள் இயங்குகின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திருக்கோயில் புனருத்தாரணம் செய்யப் பட்டிருக்கிறது...//

      புனருத்தாரணம் செய்யப்பட்டு அம்மா ஆட்சியில்ரூ 25,000 வைப்பு நிதி அளித்து ஒரு கால பூஜை நடந்து இருக்கிறது.

      //கும்பகோணத்தில் இருந்து சூரிய மூலைக்கு நகரப் பேருந்துகள் இயங்குகின்றன..//
      நல்லது.
      உங்கள் மறு வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.


      நீக்கு
  15. தகவல்கள் சிறப்பு. தமிழகத்தின் கோவில்கள் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என எண்ணம் உண்டு - பார்க்கலாம் எப்போது வாய்ப்பு கிடைக்கிறதென!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //தமிழகத்தின் கோவில்கள் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என எண்ணம் உண்டு - பார்க்கலாம் எப்போது வாய்ப்பு கிடைக்கிறதென!//
      உங்கள் நீண்ட நாள் எண்ணம் ஒரு நாள் கைகூடும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. படங்களும் அருமை. விரிவான தகவல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு