கள்ளி செடி பூக்கும் முன். புறா அமர்ந்து இருக்கிறது
மகன் வீட்டுக்கு அருகில் இரண்டு கள்ளிச்செடிகள் இருக்கிறது, முன் வாசல் பக்கத்திலிருந்தும், மாடிபால்கனியிலிருந்தும், அப்புறம் தோட்டத்திலிருந்தும் பார்க்கலாம்.
மொட்டில் அமர்ந்து இருக்கும் மரங்கொத்திப் பறவை
எல்லா பறவைகளுக்கும் பிடித்த ஆகாரம் இந்த கள்ளிப்பழம். அதிலும் மணிப்புறாவும், மாடப்புறாக்களும் மரங்கொத்தியும் தான் அதிகம் உண்ணுகிறது. பலவித மருத்துவக் குணம் உடையது இந்த கள்ளிப்பழம்.
ஒரு பறவை நேற்று அமர்ந்து சத்தம் கொடுத்து போனது. சிறிய காணொளிதான் பாருங்கள்.
மலையேற்றம் செய்ய போன இடத்தில் மகன் எடுத்த படங்கள்
மகனின் அலைபேசியில் எடுத்தது இந்த மூன்று படங்கள்
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்
----------------------------------------------------------------------------------------------
அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்...
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குஇதுபோன்ற நிகழ்வினை படமெடுக்க பொறுமை, நிதானம், அனைத்திற்கும் மேலாக ரசனை வேண்டும். அனைத்தும் உங்களிடம் உள்ளதை நாங்கள் அறிவோம். மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
நீக்குபறவைகளை எடுக்க பொறுமை வேண்டும் தான் . நாம் ஜூம் செய்யும் போது சில நேரம் பறந்து விடும், நாம் நினைத்த மாதிரி சில நேரம் எடுக்க முடியாது. காத்து இருக்க வேண்டும் பறவையும் ஆடாமல் அசையாமல் நமக்கு போஸ் கொடுக்க வேண்டும்.
//அனைத்தும் உங்களிடம் உள்ளதை நாங்கள் அறிவோம். மகிழ்ச்சி.//
உங்கள் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி.
படங்கள் அனைத்தும் அருமை கடைசியில் உள்ள படம் மிகவும் அழகு
பதிலளிநீக்குவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குபடங்களின் சேமிப்பாக இந்த பதிவு.
கடைசி படம் மகன் காலையில் எடுத்தது. நல்ல வெயில் வானம் அழகு இல்லையா!
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. படங்கள் ஒவ்வொன்றும் அழகாக இருக்கிறது. ஒவ்வொரு பறவையாக ஒவ்வொரு கால கட்டத்திலும் வந்து அமர்ந்ததை நிதானமாக ரசித்து படமெடுத்து எங்களுக்கும் பகிர்ந்திருக்கிறீர்கள். உங்கள் பொறுமைக்கும் அழகிய ரசனைக்கும் பாராட்டுக்கள். அதை எங்களுக்கும் காணத்தந்தமைக்கு நன்றிகள.
பூவிலுள்ள மகரந்தம் பறப்பதை இரு நிலைகளிலும் அழகாக படமெடுத்திருக்கிறீர்கள். அந்த படங்கள் மிக அழகாக இருக்கின்றன. கள்ளி மரம் உறுதியாக நெடியதாக இருந்தாலும், அதன் பூவின் மென்மை அனைத்துப் பூக்களை போலத்தான் இருக்கும் போலும்...! எல்லா படங்களையும் ஒவ்வொன்றாக பெரிதாக்கி ரசித்துப் பார்த்தேன்.
கள்ளிப்பறவையும் அழகாக உள்ளது. காக்கை மாதிரி, கருமையும், சாம்பல் கலரும் சேர்ந்த கலராக நன்றாக உள்ளது. இந்த மாதிரி புது பறவைகளையும், உயரமான கள்ளிச்செடிகளின் தன்மைகளை பற்றியும் தங்கள் பதிவு மூலந்தான் அறிய முடிகிறது.
பதிவுக்கு தலைப்பு பொருத்தமாக உள்ளது. பழைய படமொன்றில் நடிகை பானுமதி பாடும் பாடல் நினைவுக்கு வந்தது.
தங்கள் மகன் எடுத்த கள்ளிச்செடி படங்களும் அழகாக உள்ளது. கடைசி படம் நீல வானத்தில் மேகங்கள் கோலமிடும் அழகோடு சேர்ந்து மிகவும் அற்புதமாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழக வளமுடன்
நீக்கு//பதிவு அருமையாக உள்ளது. படங்கள் ஒவ்வொன்றும் அழகாக இருக்கிறது. ஒவ்வொரு பறவையாக ஒவ்வொரு கால கட்டத்திலும் வந்து அமர்ந்ததை நிதானமாக ரசித்து படமெடுத்து எங்களுக்கும் பகிர்ந்திருக்கிறீர்கள்.//
ஆமாம், ஒவ்வொரு காலகட்டத்திலும் எடுத்த படம் தான் முன்பே இதை சேமித்து வைத்தமையால் போட முடிகிறது. சில படங்கள் பாஸ்போர்டில் இருக்கிறது. அது ரிப்பேர் செய்து வந்த பின் தான் மற்றவைகளை பகிர முடியும்.
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
பூ மென்மையானதுதான் உடனே காய்ந்து விடும்.
//எல்லா படங்களையும் ஒவ்வொன்றாக பெரிதாக்கி ரசித்துப் பார்த்தேன்.//
மகிழ்ச்சி.
//கள்ளிப்பறவையும் அழகாக உள்ளது. காக்கை மாதிரி, கருமையும், சாம்பல் கலரும் சேர்ந்த கலராக நன்றாக உள்ளது.//
தோட்டத்திற்கு தினம் வரும் அதன் படங்கள் நிறைய இருக்கிறது. நம்மிடம் பயமில்லாமல் நடமாடும். ஒரு இடத்தில் நிறகாது நடந்து கொண்டும், பறந்து கொண்டும் இருக்கும்.
//உயரமான கள்ளிச்செடிகளின் தன்மைகளை பற்றியும் தங்கள் பதிவு மூலந்தான் அறிய முடிகிறது.//
இந்த ஊரில் அதுதானே நிறைய இருக்கிறது. அழகாய் வித விதமாய் பார்க்கலாம்.
//கடைசி படம் நீல வானத்தில் மேகங்கள் கோலமிடும் அழகோடு சேர்ந்து மிகவும் அற்புதமாக இருக்கிறது. //
மகன் எடுத்த படங்களையும் பார்த்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
//பதிவுக்கு தலைப்பு பொருத்தமாக உள்ளது. பழைய படமொன்றில் நடிகை பானுமதி பாடும் பாடல் நினைவுக்கு வந்தது.//
நீக்குஅந்த பாட்டை மறக்க முடியுமா மிக அருமையாக பாடி இருப்பார், நடித்து இருப்பார் பானுமதி. அவருக்கு தேசீய விருதை வாங்கி தந்த படம் அன்னை!
அழகான படங்கள்... காணொளி அருமை...
பதிலளிநீக்குஅழகிய வானத்துடன் கடைசி படம் மிகவும் அழகு...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை, காணொளியை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
படங்கள் அனைத்துமே அழகு. காணொளியும் கண்டு ரசித்தேன் மா.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை, காணொளியை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
கள்ளிச் செடி, பூ, காய், பழங்கள் மிக அழகு.
பதிலளிநீக்குபடங்களைப் பார்த்தால், பாலைவனத்தின் நடுவே உள்ள வீடு போலத் தெரிகிறது.
தலைப்பை மிகவும் ரசித்தேன்
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குநேற்று நடைபயிற்சியின் போது மகன் வீடு இந்த கோணத்தில் நன்றாக இருப்பதாக தோன்றியது எடுத்தேன். கள்ளிச்செடிக்கு பக்கத்தில் பாதை போகும், ஆனால் இந்த கோணத்தில் தார் பாதை தெரியவில்லை. அதுதான் நீங்கள் சொல்வது போல் பாலைவனத்திற்கு நடுவே உள்ள வீடு போல் காட்சி அளிக்கிறது.
தலைப்பு உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் அருமையாக வந்திருக்கின்றன. கள்ளிசெடியை (மரம்?) போகஸ் செய்தால் பறவையைக் காணோம்,பறவையை போகஸ் செய்தால் செடியின் (மரத்தின்) முழு அளவு காணோம். எப்படியோ நீங்கள் புகைப்பட நிபுணர் ஆகி விட்டீர்கள்.
பதிலளிநீக்குJayakumar
வணக்கம் ஜெயக்குமார் சார், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அருமையாக வந்திருக்கின்றன.
எப்படியோ நீங்கள் புகைப்பட நிபுணர் ஆகி விட்டீர்கள்.//
ஆஹா! நன்றி.
இன்னும் நன்றாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது , முயற்சி செய்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் அனைத்தும் மிக நுணுக்கமாக ரசனையுடன் எடுக்கப்பட்டிருக்கின்றன. மகரந்தம் பறப்பதைக் கூடக் கவனித்து எடுத்திருப்பது பாராட்டுக்கு உரியது. மிக அழகான படங்கள். காட்சிகள். இயற்கையோடு இயைந்து நாமும் மனதைச் செலுத்தினால் எத்தனை நிம்மதியும், ஆனந்தமுமாக இருக்கும். கள்ளிப்பழங்களை இப்போது தான் பார்க்கிறேன். இத்தனை உயரக் கள்ளிச் செடியும் பார்த்தது இல்லை. மகன் எடுத்த படங்களுக்குக் கேட்கவே வேண்டாம். அனைத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அனைத்தும் மிக நுணுக்கமாக ரசனையுடன் எடுக்கப்பட்டிருக்கின்றன.//
நன்றி.
//மகரந்தம் பறப்பதைக் கூடக் கவனித்து எடுத்திருப்பது பாராட்டுக்கு உரியது. மிக அழகான படங்கள். காட்சிகள்//
படங்களை தோட்டத்தின் மதிலை தாண்டி பார்வை செலுத்தி எடுத்தவை . ஜூம் செய்து எடுத்துப்பார்த்தால் மகரந்தம் பறப்பது தெரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
//இயற்கையோடு இயைந்து நாமும் மனதைச் செலுத்தினால் எத்தனை நிம்மதியும், ஆனந்தமுமாக இருக்கும்//
எனக்கு நிம்மதி மகிழ்ச்சியும் கிடைப்பது உண்மை. இதற்கு உற்சாகம் தரும் நம் நட்புக்கள், மகன், மகள் எல்லோருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன். இறைவனுக்கும் நன்றி இயற்கையை இவ்வளவு அழகாய் படைத்து இருப்பதற்கு. எனக்கு தெரிந்த அளவில் படம் எடுக்கிறேன்.
//கள்ளிப்பழங்களை இப்போது தான் பார்க்கிறேன். இத்தனை உயரக் கள்ளிச் செடியும் பார்த்தது இல்லை.//
முன்பு இதைவிட உயர கள்ளிச்செடி போட்டு இருக்கிறேன் இது கொஞ்சம் சின்னது வான் முட்டும் உயரம் என்பது போல் இருக்கும் உயர உயரமாக வித விதமாக.
மகன் எடுத்த படங்களையும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
அந்தப் புறாவின் காலில் முள் குத்தாதோ என்று ஒரு நிமிடம் கவலையாகிறது! மரங்கொத்தியாவது பரவாயில்லை.. மொட்டின்மேல் அமர்ந்திருக்கிறது... மகரந்தம் பறப்பது துல்லியமாக படம் பிடித்திருக்கிறீர்கள். கள்ளிச்செடியை மட்டமாக நினைப்போம். ஆனால் படங்களில் அழகாக வந்திருக்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஅந்தப் புறாவின் காலில் முள் குத்தாதோ என்று ஒரு நிமிடம் கவலையாகிறது! மரங்கொத்தியாவது பரவாயில்லை.. மொட்டின்மேல் அமர்ந்திருக்கிறது..//
எல்லா பறவைகளும் கள்ளிச்செடியின் மேல் அமர்ந்த படங்கள் போட்டு இருக்கிறேன். அவைகளுக்கு குத்தாது போலும். தினம் வந்து அமர்ந்து வேடிக்கைப் பார்க்கிறதே!
//மகரந்தம் பறப்பது துல்லியமாக படம் பிடித்திருக்கிறீர்கள்.//
ஜூம் செய்து பார்க்கும் போதுதான் மகரந்தம் பறப்பது தெரிகிறது.
//கள்ளிச்செடியை மட்டமாக நினைப்போம். ஆனால் படங்களில் அழகாக வந்திருக்கிறது.//
இறைவன் படைப்பில் எதும் மட்டம் இல்லை என்பதை உணர்த்தும் கள்ளிச்செடி. அதன் பயன்பாடுகள், பறவைகளின் இருப்பிடமாக அமைந்து இருப்பதை பார்க்கும் போது இறைவன் படைப்பில் எதுவும் பயன் அற்றது என்று ஒன்றும் இல்லை என்று தெரிகிறது.
இங்கு காற்று, புயல் சமயத்தில் மரத்தில் கூடு கட்டிய பறவை கூடுகளிலிருந்து முடை கீழே விழுந்து உடைந்து போகிறது. இந்த கள்ளிச்செடியில் முட்டையிட்டது பத்திரமாக இருக்கிறது. அதனால் இந்த ஊருக்கு ஏற்றபடி இறைவன் கள்ளிச்செடிகளை அதிகம் அமைத்து இருக்கிறான் என்று நினைக்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
நேரில் பார்க்கும் உணர்வு
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
பறவைகளை ஈர்க்கும் கள்ளிச்செடியால் கண்களுக்கு விருந்து. மகரந்தம் பறப்பது அருமை. ரசித்து எடுத்துள்ளீர்கள். மொபைலில் எடுத்த படங்களில் வானின் வண்ணம் கூடுதல் சிறப்பு.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//பறவைகளை ஈர்க்கும் கள்ளிச்செடியால் கண்களுக்கு விருந்து//
ஆமாம், நீங்கள் இன்னும் அழகாய் எடுப்பீர்கள். தினம் கள்ளிச்செடியில் பறவைகள் அமர்ந்து இருப்பதைப் பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் எனக்கு.
//மொபைலில் எடுத்த படங்களில் வானின் வண்ணம் கூடுதல் சிறப்பு.//
காலை நேரம் மலை அருகில் வானம், வெண்மேகம் எல்லாம் பார்க்க அழகாய் இருக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கள்ளியின் பூவும் அழகாகத்தான் இருக்கிறது. கள்ளிப்பழம் உண்டு என்பதும், அது மருத்துவ குணங்கள் கொண்டது என்பதும் இப்போதுதான் தெரிந்து கொண்டேன். நல்ல பதிவு.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
அழகான படங்களும் காணொளியும் மனதை கொள்ளை கொள்கின்றன..
பதிலளிநீக்குபடங்களை, காணொளியை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
நீக்குநமது கலாச்சாரத்தில் திருகு கள்ளி, கற்றாழை, சப்பாத்திக் கள்ளி இவைகளை எல்லாம் ஆகாதவை என்று ஒதுக்கி வைத்திருக்கின்றோம்...
பதிலளிநீக்குஎதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பது காரணம்..
சோற்றுக் கற்றாழையை மேல் நாட்டினர் கொண்டாடியதால் நாமும் விழித்துக் கொண்டோம்..
இனிமேல் - கற்றாழைக் கஞ்சி, கற்றாழைக் கடப்பா, கற்றாழைக் களி என்றெல்லாம் வரவிருக்கின்றன...
இன்னும் இந்த கள்ளிக்கு மட்டும் ஒரு மாற்று கண்டோம் இல்லை...
முன்பெல்லாம் தோட்டங்கள், பண்ணை வீடுகளுக்கு வேலிக் காலாக இருந்த கள்ளி வகையறாக்கள் இப்போது ஒழிந்து போய் விட்டன...
ஆனால் மேலை நாடுகளில் இவை கொண்டாட்ப்படுகின்றன... வீடுகளிலும் அரங்குகளிலும் அலங்காரத் தாவரங்களாக இவை விளங்குகின்றன...
நம்மூர்களிலும் இந்தக் கலாச்சாரம் விரீவில் வந்து விடும்..
இப்போதைக்கு நாம் கள்ளியைத் தேடுவது எதற்கு என்றால் புது வீட்டின் முன்பாகத் தொங்க விடுவதற்காகத் தான்...
//நமது கலாச்சாரத்தில் திருகு கள்ளி, கற்றாழை, சப்பாத்திக் கள்ளி இவைகளை எல்லாம் ஆகாதவை என்று ஒதுக்கி வைத்திருக்கின்றோம்...//
நீக்குஆமாம்.
வீட்டில் வளர்க்க கூடாது என்பார்கள்.
//எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பது காரணம்..//
ஆமாம், அப்படி சொல்லித்தான் வளர்க்க விட மாட்டார்கள்.
//சோற்றுக் கற்றாழையை மேல் நாட்டினர் கொண்டாடியதால் நாமும் விழித்துக் கொண்டோம்..//
ஆமாம்.
//இனிமேல் - கற்றாழைக் கஞ்சி, கற்றாழைக் கடப்பா, கற்றாழைக் களி என்றெல்லாம் வரவிருக்கின்றன...//
காற்றாழை நாரில் புடவை செய்கிறார்கள் நம் நாட்டில்.
//முன்பெல்லாம் தோட்டங்கள், பண்ணை வீடுகளுக்கு வேலிக் காலாக இருந்த கள்ளி வகையறாக்கள் இப்போது ஒழிந்து போய் விட்டன...//
கிராமங்களில் சில இடங்களில் பார்த்து இருக்கிறேன்.
//ஆனால் மேலை நாடுகளில் இவை கொண்டாட்ப்படுகின்றன... வீடுகளிலும் அரங்குகளிலும் அலங்காரத் தாவரங்களாக இவை விளங்குகின்றன...//
அலங்கார குட்டி குட்டி கள்ளிகள் வீடுகளை , விடிதிகளை அலங்கரிக்க பயன்படுத்துகிறார்கள் விலை அதிகமாக இருக்கிறது.
//இப்போதைக்கு நாம் கள்ளியைத் தேடுவது எதற்கு என்றால் புது வீட்டின் முன்பாகத் தொங்க விடுவதற்காகத் தான்...//
பொங்கல் அப்போது வெள்ளை அடித்த வீட்டில் வாசலில் கரும்புள்ளி, வெள்ளைப்புள்ளி குத்தி தொங்க விடுவார்கள் அதற்கு தெரிவில் விற்பார்கள்.
அள்ளிக் கொள் வண்ண குறுமுகிழவாயினும்
பதிலளிநீக்குகள்ளி மேற் கை நீட்டார்...
எனும் பாடல் தான் நினைவுக்கு வருகின்றது..
ஆனால் அவைகளும் பறவைகளின் பசியைத் தீர்க்கின்றன...
இறைவனின் அற்புதங்களில் இவைகளும் ஒன்று..
நல்ல பாடல் பகிர்வு. கள்ளி மேல் லேசாக கை பட்டால் முள் குத்திய இடம் வெகு நேரம் வலிக்கும்.
நீக்குபறவை, வண்டு, தேனீ இஅவற்றுக்கு உணவு, வசிக்கும் இடம் தருகிறது.
நீங்கள் சொல்வது போல் இறைவனின் அற்புதங்களில் ஒன்றுதான்.
தண்ணீர் இல்லாமல் வாழும் தாவரம். இடத்திற்கு ஏற்ப அமைத்து இருக்கிறார்.
சிறு வயதில் பசங்களோடு கூடி சப்பாத்திப் பழங்களைப் பறித்துத் தின்றது உண்டு..
பதிலளிநீக்குஅதன் சுவையே தனி...
சப்பாத்தி கள்ளிகளும் பல நிறங்களில் இங்கு இருக்கிறது. அதன் பழத்தில் ஜாம், மிட்டாய், வாசனை திரவியம், மருந்துக்கள் என்று நிறைய தயார் செய்கிறார்கள்.
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி நன்றி.
// காற்றாழை நாரில் புடவை செய்கிறார்கள் நம் நாட்டில்... //
பதிலளிநீக்குஉண்மை தான்... ஆனாலும் அது நார்க் கற்றாழை..உல்ர்ந்த தன்மை உடையது..
நான் சொல்லியிருப்பது சோற்றுக் கற்றாழை.. இதனுள் ஈரப் பதத்துடன் குழைவாக இருக்கும்... மருத்துவ குணம் உடையது..
தங்களுக்குத் தெரியாததா!?...
மகிழ்ச்சி.. நன்றி..
கற்றாழை தான் , கையால் உள் பகுதியை எடுத்து விட்டு மகளிர் குழு பெண்கள் செய்வதை தொலைக்காட்சியில் பார்த்தேன்.
நீக்குசோற்று கற்றாழை எங்கள் வீட்டு தொட்டியில் வைத்து இருக்கிறேன். கையில் அடிக்கடி சமைக்கும் போது சுட்டுக் கொள்வேன் அதற்கு அதன் சோற்று பகுதியை எடுத்து வைப்பேன் சரியாகி விடும். எங்கள் வீட்டுக்கு இளநீர் கொடுப்பவர் அவர் வீட்டு மாட்டுக்கு கொடுக்க என்னிடம் கற்றாழையை வாங்கி போவார். பக்கத்து வீட்டு பெண் சாப்பிட என்னிடம் வாங்கி போவார்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
பதிலளிநீக்குஅனைத்துப் படங்களும் மிக அருமை அன்பின் கோமதிமா.
ரசித்து ரசித்து எடுத்திருக்கிறீர்கள்.
கள்ளி மிக அழகான தாவரம். சென்னையில் நம் வீட்டிலும்
அழகாக வளர்ந்திருக்கிறது.
வித விதமாகப் பூக்கும். வண்ணங்களும் அழகு.
அதுவும் மகன் எடுத்திருக்கும் படத்தில் ஒரு கள்ளிப்பூ வாய் திறந்த பறவை
போலக் காட்சி தருகிறது.
மகரந்தம் பறக்கும் காட்சி உலகத்தரம் வாய்ந்த
படம்.
காமிரா நிபுணர் ஆகி இருக்கிறீர்கள். இயல்பாக
இருக்கும் திறமைகள் வெளிப்படும் நேரம்.
என்றும் வளமுடன் இருங்கள் அம்மா,.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்கு//அனைத்துப் படங்களும் மிக அருமை அன்பின் கோமதிமா.
ரசித்து ரசித்து எடுத்திருக்கிறீர்கள்.//
பிடித்த விஷயத்தை இப்போது வேறு சிந்தனை செய்யாமல் இருக்க பயன்படுத்திக் கொள்கிறேன்.
//கள்ளி மிக அழகான தாவரம். சென்னையில் நம் வீட்டிலும்
அழகாக வளர்ந்திருக்கிறது.//
செடி, கொடிகள் தாவரங்கள் மேல் அன்பு செலுத்தும் சார் அழகிய கள்ளியை வைக்காமல் இருப்பார்களா தோட்டத்தில்!
//அதுவும் மகன் எடுத்திருக்கும் படத்தில் ஒரு கள்ளிப்பூ வாய் திறந்த பறவை
போலக் காட்சி தருகிறது.//
அக்கா, நானும் இதைதான் மகன் காட்டிஉஅ போது சொன்னேன், ஒத்த கருத்துக்கள் நம் இருவருக்கும் நிறைய விஷயங்களில்.
//மகரந்தம் பறக்கும் காட்சி உலகத்தரம் வாய்ந்த
படம்.//
அன்பான கருத்து உலகத்தரம் அதிகம் தான் எனக்கு.
//காமிரா நிபுணர் ஆகி இருக்கிறீர்கள். இயல்பாக
இருக்கும் திறமைகள் வெளிப்படும் நேரம்.//
குடும்பமும், நட்பும் தரும் உற்சாகத்தால் எடுத்து கொண்டு இருக்கிறேன் காமிரா நுடபம் கற்றுக் கொள்ளவில்லை.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.
கள்ளிச்செடியும் பறவையும் அடுக்கடுக்காக எடுத்தபடங்களும் நன்று. மகனின் படங்கள் சிறப்பு.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
மிக அழகான காட்சிகள் மா ..
பதிலளிநீக்குஅதிலும் பூவிலுள்ள மகரந்தம் பறப்பதை போன்ற படம் மிக அழகு ..