ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

முயலும் , சூரியகாந்திப் பூக்களும்
அரிசோனா  ஊருக்கு ஏற்ற வண்ணத்தில் இருக்கும் முயல்.முயல் தோட்டத்தில் ஒரு செடியை வைக்க விட மாட்டேன் என்கிறது. தோட்டத்து கதவு இடைவெளிவழியாக  உள்ளே வந்து விடுகிறது. மகன் வீட்டுக்கு முன்புறம் குடியிருப்பு வளாகத்தினர் வைத்து இருக்கும் செடியின் துளிர் இலைகளை சுவைத்து தின்னும் முயல்    காணொளி. (மிக சின்னதுதான்.)


முயல் வந்து இடை இடையே செடியின் இளம் துளிர் இலைகளை தின்றது போக பிழைத்து எழுந்த சூரிய காந்தி செடியில் மலர்ந்து இருக்கும்  சூரிய காந்தி மலர்கள். இந்த செடி வாங்கி இரண்டு , மூன்று மாதம் இருக்கும்.

மகன் நியூஜெர்சியில் இருந்த போது  எடுத்த முயல் படம். (2013)

2017ல் அரிசோனா வந்து இருந்த போது  "துள்ளித்திரிந்த முயலொன்று 
"  என்று  முயல் பதிவு  ஒன்று போட்டேன். படிக்காதவர்கள் படிக்கலாம்.

இந்த பதிவுக்கு   தேவகோட்டை ஜி கொடுத்த பின்னூட்டமும் அதற்கு ஜீவி சார் கொடுத்த பதிலும் வேண்டுகோளும் இருக்கும். அதற்கு தேவகோட்டை ஜி கொடுத்து இருக்கும் பதிலை படித்துப்பாருங்கள். தேவகோட்டை ஜியின் பெயர் காரணம் இருக்கும்.

நான் எடுக்கும் படங்களை  சேமிப்பாய்  முடிந்த போது  பதிவில் போட்டு விட எண்ணம். இறையருள் நடத்தி வைக்க வேண்டும்.

      வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

--------------------------------------------------------------------------------------------------

30 கருத்துகள்:

 1. வண்ண முயல்!  புகைபபடங்கள் அருமை.  காணொளியில் வாய் மட்டும் அசைய, மற்றபடி ப்ரீஸ் ஆகி எப்படி சாப்பிடுகிறது!  இலையை முழுதாக வாயில் வாங்கி நுணுக்கமாகக் கடித்து உண்டுவிடும் போல!  அருகில் யாரோ இருக்கிறார்கள் என்று உணர்ந்த உடனேயே ஓடிவிடுகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

   //காணொளியில் வாய் மட்டும் அசைய, மற்றபடி ப்ரீஸ் ஆகி எப்படி சாப்பிடுகிறது! //

   ஆமாம், சாப்பிடும் அழகே அழகு.

   //அருகில் யாரோ இருக்கிறார்கள் என்று உணர்ந்த உடனேயே ஓடிவிடுகிறது!//
   என்னைப் பார்த்துக் கொண்டே தான் சாப்பிட்டது. என்னிடம் கொஞ்சம் அசைவு தெரிந்தவுடன் ஓட்டம் எடுத்து விட்டது.
   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 2. அன்பின் கோமதிமா,
  வாழ்க வளமுடன்.
  முயல் வீடியோ சூப்பர்.
  இங்கும் பெரிசு சின்னது இரண்டும் வரும். அணிலும் இரண்டு வகை.
  எல்லாம் சாப்பிட்டது போக மீதிதான் நம் பார்வைக்கு:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

   //முயல் வீடியோ சூப்பர்.//
   நன்றி அக்கா.
   இங்கு இந்த வகை முயல் மட்டுமே பார்த்தேன்.

   இந்த முயல்கள் சாப்பிட்டது போக மீதிதான் நம் பார்வைக்கு என்பது உண்மை.

   நீக்கு
 3. சூரிய காந்தி மலர்கள் மிக அழகு. மலர்ந்ததும் ,மலர இருப்பதும்
  கண்ணுக்கு மிக இதம். எத்தனை வண்ணம் அம்மா!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூரிய காந்தி பூ இதை விட பெரிதாக பூக்கும் ரகமும் இருக்கிறது. இது சின்னதாகத்தான் பூக்கிறது.

   பெரிய் சூரிய காந்தி செடிகளை வேறு ஊருக்கு போன போது எடுத்தேன், அதன் இலைகளும் மிக பெரிது.
   பூக்களின் வண்ணம் கண்ணுக்கு இதம்தான்.

   நீக்கு
 4. உங்களின் பழைய பதிவைப் போய்ப் பார்க்கிறேன்.
  சுவாரஸ்யமாக இருக்கும்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழைய பின்னூட்டத்தில் சுவாரஸ்யம் இருக்கிறது அக்கா.

   நீக்கு
 5. தாவரத்தின் உணவை திங்க முயலும் முயலின் காணொளி கண்டேன்.

  பூக்களின் படங்கள் அழகு.

  பழைய 2018 பதிவுக்கு சென்றேன் ஹா... ஹா... பழைய விடயம்.

  இதன் மேலே 2017 என்று போட்டு இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //தாவரத்தின் உணவை திங்க முயலும் முயலின் காணொளி கண்டேன்.//
   நல்ல வார்த்தை சேர்ப்பு அருமை.(திங்க முயலும் முயல்)

   //பழைய 2018 பதிவுக்கு சென்றேன் ஹா... ஹா... பழைய விடயம்.//
   2017ல் இங்கு வந்தோம், நான் 2018ல் இந்தியா வந்த பின் தான் பதிவு செய்தேன்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   ஆமாம், முயல் உண்ணும் அழகே தனிதான்.
   நான் என் தோழிகள் வீட்டில் குட்டி வெள்ளை முயல்கள் வளர்ப்பார்கள் அவர்கள் வீட்டில் அதற்கு புல், காய்கறிகள் கொடுப்பார்கள் அது சாப்பிடும் அழகைப் பார்த்து இருக்கிறேன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 7. முயல் சாப்பிடும் அழகே அழகு...... நாங்க, பஹ்ரைன்ல, முயல்களை அடைத்து வைத்திருக்கும் பார்க்குக்குச் செல்லும்போது கேரட்டைக் கட் பண்ணி எடுத்துச் செல்லுவோம்.

  இருந்தாலும் நம் செடிகளைக் கடித்துத் தின்னும்போது நமக்குக் கொஞ்சம் கடுப்பாகத்தான் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
   காணொளி பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   //பஹ்ரைன்ல, முயல்களை அடைத்து வைத்திருக்கும் பார்க்குக்குச் செல்லும்போது கேரட்டைக் கட் பண்ணி எடுத்துச் செல்லுவோம்//

   நல்ல செயல். நாம் எவ்வளவு கொடுத்தாலும் அது விரும்பி சாப்பிடும்.

   இந்த பாலைவன நாட்டில் இளம் துளிர்தான் உணவு இதுக்கு. இப்படி கதவு சரியில்லா வீட்டுத்தோட்ட உணவுகள் சில நேரம் கிடைக்கிறது. அவைகள் பசிக்கு அவை சாப்பிடுகிறது. ஒவ்வொரு உயிரினங்களுக்கும் உணவு தினம் நம்மால் கொடுக்க முடியாது. இப்படி சாப்பிட்டு கொள்ளட்ட்டும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி .

   நீக்கு
 8. அழகிய முயல். அவைகளுக்கான உணவுக்காக வருகின்றன என்றாலும் பூக்கள் சேதமாவது நமக்கு வருத்தம். காணொளி அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   அவைகளுக்கு உணவுக்காகத்தான் வருகிறது. என்ன செய்வது ! துளிர் இலைகள் தீர்ந்து விட்டால் வீட்டு தோட்டத்திற்கு வருகிறது.
   காணொளி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.

   நீக்கு
 9. படங்களும் காணொளியும் நன்று. தகவல்களும் ரசித்தேன் மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 10. முயல் இலைகள் கடித்து உண்பது அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   நலமா? வெகு நாட்களாய் காணவில்லையே!
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. வேலைகள் அதிகம் இருப்பதில் வர முடியவில்லை . முடிந்தபோது வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாதேவி என் கேள்விக்கு வந்து பதில் தந்தது மகிழ்ச்சி. நீங்கள் பதிவு எழுத வேண்டும் என்பது ஆசை. எவ்வளவு அழகாய் சமையல் குறிப்புகள், பதிவுகள் படங்கள் போடூவீர்கள் சின்னதாக போட ஆரம்பித்து விடுங்கள்.அப்புறம் நேரம் கிடைத்து விடும்.

   உங்கள் மறு வரவுக்கு நன்றி.

   நீக்கு
  2. முடிந்த போது வாருங்கள் மாதேவி நன்றி.

   நீக்கு
 12. வணக்கம் சகோதரி

  முயல் அழகாக உள்ளது. காணொளியும் கண்டேன். எவ்வளவு அவசரமாக தன் உணவை சாப்பிடுகிறது. நம் ஊரைப் போல வெள்ளையாகவும் இல்லை..கொஞ்சம் ஒல்லியாக நீளவாக்கில் உள்ளது. நம்மூரில் அதன் பூசினால் போன்ற குண்டு உருவமே ஒரு தனி அழகு. இறைவன் படைப்பில் எத்தனையோ அதிசயங்கள்..

  சூரிய காந்தி பூக்கள் அழகாக உள்ளன. முயல் வந்தால் பூவையும் சாப்பிட்டு விடுமோ? நீங்கள் செடிகளை வீட்டினுள்ளே எடுத்து வைக்க முடியாதா? பழைய பதிவையும் படித்து கருத்திட்டு விட்டேன். இரண்டுமே நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   அவசரமாக தான் உணவை சாப்பிடுகிறது.
   பயம் தான் காரணம். நாம் ஒன்றும் செய்ய மாட்டோம் இருந்தாலும் அது பயப்படுகிறது.
   நம் ஊரில் வெள்ளை முயல், கண்கள் சிவப்பு நிறம் உள்ளது எனக்கு பிடிக்கும்.

   //இறைவன் படைப்பில் எத்தனையோ அதிசயங்கள்.//
   ஆமாம், ஊருக்கு ஏற்றார் போல படைத்து இருக்கிறார்.

   கண்ணாடி வீடு வாங்கி வைக்கலாம். வீட்டுக்குள் வைக்க முடியாது.

   பழைய பதிவையும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
   படங்கள், காணொளிப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 13. இந்த முயல்கள் ஹூஸ்டனிலும் நிறைய. பெண் வீட்டில் அவங்க வளர்க்கும் நாய் தோட்டத்துக்குப் போனாலே முயலைப் பிடிக்கப் பாய்ந்து விடும். பயமாக இருக்கும். அவங்க பார்த்துப்பாங்க என்றாலும் கவலை வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   மகள் ஊரில் நிறைய முயல்கள் உண்டு என்று அறிந்தேன்.
   அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றாலும் நமக்கு கவலையாகத்தான் இருக்கும்.

   நீக்கு
 14. பையர் வீட்டில் அழகாய்த் தோட்டத்துச் செடிகளைத் தோண்டிக் குழி பறித்துக் குட்டிகளைப் போட்டுவிட்டுப் போய்விடும். அவை தூங்கும் அழகே அழகு! பையர் ஒரு தரம் படம் எடுத்து அனுப்பி இருந்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! அருமை. நீங்கள் சொல்வதை கேட்கும் போதே அப்படி மனகண்ணில் பார்க்கிறேன். இங்கு நேற்று இரண்டு குட்டி முயல்கள் பார்த்தேன், காமிரா எடுத்து வருவதற்குள் ஓடி விட்டது.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
   பழைய பதிவுகளை படித்து கருத்து சொல்வது மகிழ்ச்சி தருகிறது. உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். விரைவில் பூரண உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.

   நீக்கு