வியாழன், 4 மார்ச், 2021

பறவைகள்

வாழ்க வையகம் !  வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

மகன் வீட்டுக்கு வரும் பறவைகளை பார்ப்பது  மனதுக்கு மகிழ்ச்சி தரும். அந்த பறவைகளை  அவைகளுக்கு தெரியாமல் எடுக்க வேண்டும். கதவை சத்தம் இல்லாமல் திறக்க வேண்டும்.   சிறிதளவு சத்தம் கேட்டாலும் அத்தனையும் பறந்து விடும். இந்த பதிவில் பறவைகளை பார்க்கலாம்.

மணிப்புறா

மதில் மேல் உட்கார்ந்து வேடிக்கைப் பார்ப்பது பிடித்த விஷயம் பறவைகளுக்கு
வெயிலில் குளிர் காய்கிறது

உடம்பை சிலிர்த்துக் கொண்டு தலையை உடலுக்குள் புதைத்துக் கொண்டு ஒரு பார்வை. சில நேரம் அப்படியே கண்மூடி தூங்கும்.

வேறு இடத்தில் அமர்வோம்
கொஞ்ச நேரம்   இந்த இடத்தில் இருப்போம்

தினம் தினம் புறாக்கள் கூட்டமாய் வரும் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று தள்ளி விட்டு   சாப்பிடும்
சிட்டுக்குருவி கிட்ட வா
 எட்ட ஓடிப் போகாதே !

அழ. வள்ளியப்பா அவர்கள் குழந்தைகளுக்கு பாடிய குருவி பாட்டில்  உள்ள வரியை சொல்கிறதோ  புறா?

குருவி இப்படி பேசுகிறதோ? "புறா அண்ணே! நீங்கள் சாப்பிடும் போது சிதறும் பருக்கையை கொத்தி தின்கிறேன், அதையும் தட்டி பறிக்க வருகிறீர்களே நியாயமா?"   என்று குருவி கேட்கிறதோ.

ஒரத்தில் உள்ளதை எடுத்துக் கொள்வோம் 

Quail  பறவை கூட்டமாகதான் உணவு எடுக்க வரும் தெருவில் ஒன்றுக்கு பின்னாடி ஒன்றாக நடந்து போவது பார்க்க அழகாய் இருக்கும், அதன் தலை பகுதியில் உள்ள சிறு இறகு கொண்டை ஆடுவது அழகு.
வழி விடு  குருவி
விரைவாய் போகனும்
போங்க போங்க
எல்லா பறவைக்கும் இந்த மதில் பிடித்த இடம்

எலுமிச்சை மரத்தில் கொஞ்ச நேரம் உட்காரும்

இந்த காய்ந்த மரத்தில் கொஞ்ச நேரம்  உட்காரும் குருவிகள்

உடம்பை சிலிர்த்து கொண்டால் குண்டு குருவியாக மாறி விடும். தூங்கும் போது இப்படித்தான் உடம்பை வைத்துக் கொள்ளும். மாலை நேரம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு ஒரு முறை  போய் இருந்தோம், அங்கு உள்ள எல்லா மரத்திலும் சிறு சிறு பஞ்சு பொதி போல் இருந்தது , உற்றுப்பார்த்தால் குருவிகள். 

 தினம் இந்த பறவைகளைப் பார்க்கும் போது மதுரை வீட்டுக்கு வரும் பறவைகள் நினைவுக்கு வந்து விடும். இந்த அம்மாவை பார்க்க தினம் தேடிவருமோ அவை என்ற நினைப்பு வரும். 

அங்கு வெயில் வந்து இருக்கும் எல்லோர் வீடுகளிலும் உணவும் தண்ணீரும் வைத்து இருப்பார்கள்.


                                                              வாழ்க வளமுடன்
------------------------------------------------------------------------------------------------------------

41 கருத்துகள்:

  1. அன்பு தங்கச்சி கோமதி,
    வாழ்க வளமுடன்.

    இந்தப் புறா ஒன்றே போதும்.
    கழுத்தை ஆட்டி அது பார்க்கும் பார்வை நம்மிடம்
    பேசும்.
    குருவிகளை விரட்ட இங்கே அணில் வரும்.
    இதோ வசந்த காலம் வருகிறது. தானியங்களைக் கூண்டில் நிரப்ப
    வேண்டியதுதான்.

    புறாக்கள் காக்கை போன்று இல்லையோ.?
    சண்டை போடுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா , வாழ்க வளமுடன்
      புறாக்கள் கழுத்தை வளைத்துப் பார்ப்பதே அழகுதான்.
      புறாக்கள் சண்டையிட்டுக் கொள்ளும் அக்கா. சுற்றி சுற்றி தேர்ந்த வில்லன் போல் எல்லோரையும் விரட்டும். மதுரையில் புறாக்கள்கள் தான் முதலில் உணவு எடுக்க வரும் அது கொத்தி சிதறி சாப்பிட்டு போனபின் தான் மற்றவை சாப்பிட முடியும்.

      மணிம்புறா சண்டையிடாது . மாடப்புறாதான் விரட்டுகிறது அதன் இனத்தையே!

      பல தானியங்கள் சேர்த்த மலை போல் கட்டியாக விற்கிறார்கள். அது சிதறாது கொத்தி சாப்பிட வசதியாக இருக்கிறது.

      நீக்கு
  2. அவை போடும் ட்ரூவ் ட்ரூவ் சத்தம் மிகப் பிடிக்கும்.
    குருவிகளின் லாவகம் சொல்லி முடியாது.
    எல்லாப் பறவைகளுக்கும் நீங்கள் கொடுத்திருக்கும்

    கற்பனை வாக்கியங்கள் மிக அழகு. அருமை.
    எல்லா நினைவுகளும் மதுரையைப் பார்த்து ஓடுகின்றதா:(


    உங்கள் அண்டை வீட்டார் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்
    அம்மா.
    மிக மிக அருமையான படங்களுக்கு
    நன்றி.
    பறவைகளுக்கே வேலி மிகப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருவிகள் சத்தம், மணிப்புறாவின் Quail பறவையின் சத்தம், மரங்கொத்தி பறவையின் சத்தம் எல்லாம் காலையில் கேட்கலாம், அப்புறம் மாலையில் கேட்கலாம். மதியம் எங்கு இருக்குமோ தெரியவில்லை.

      இன்று மண் புயல் போல் இருக்கிறது காற்று வேகமாய் அடிக்கிறது மண் பறக்கிறது.
      பறவைகள் எங்கு எப்படி இருக்கின்றனவோ ! மரத்தில் உள்ள முட்டைகள், குஞ்சுகள் பத்திரமாக இருக்க வேண்டும் இறைவா ! என்று மனம் வேண்டுகிறது.

      மதுரைக்கு வீட்டுக்கு வரும் பறவைகளின் நினைவும் வரும் தினம்.
      மதுரையில் நிறைய வீடுகளில் உணவு வைக்கிறார்கள் எங்கள் வளாகத்தில் பார்த்துக் கொள்வார்கள் ,.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  3. அழகு அழகு கொள்ளை அழகுக்கா .சிட்டுக்குருவி எல்லாருடனும் அனுசரிச்சு போகுது அந்த குண்டு பஞ்சுப்பொதி குருவி செம கியூட் .quails எங்க வீட்டுக்கு வர்ரதில்ல ஆனால்  இந்த மணிப்புறாக்கள் 5 ஜோடி எங்க தோட்டத்துக்கு தவறாம வராங்க அழகா வட்டமிட்டு வேலி மேல் அமர்வதே தனி அழகு .எல்லாவற்றையும் தூர இருந்து ரசிப்பதுடன் சரி . கழுத்தில் வெள்ளை பட்டை உள்ள வுட் பிஜன்சும் மற்றும் ஸ்போர்ட்ஸ் புறாக்கள் மூன்றும் வராங்க . அத்துடன் எக்கச்சக்கமா ராபின் பறவைகளும் பிலாக்  பேர்ட்ஸ் ,டிட்ஸ் சிட்டுக்குருவிகள்  வந்து சாப்பிட்டு போவாங்க .கூடவே அணிலாரும் வருவார் :)உங்க ஊரில் நிச்சயம் அந்த பறவைகளுக்கு நேராநேரத்துக்கு உணவு கிடைக்கும்கா .அன்புள்ளங்கள் நிறைய உண்டு .நன்மை என்பது ஒரு செயின் ரியாக்சன் நீங்க அந்த பறவைகளுக்கு  செய்த நன்மை யாரவது தொடருவாங்க ஊரில் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
      சிட்டுக்குருவி எல்லோருடனும் அனுசரித்து போகிறது.
      குண்டு பஞ்சுப்பொதி குருவி பிடித்து இருக்கா? அந்த சமயம் அதன் வால் குட்டி ஆகிவிடும் பார்க்க வியப்பாய் இருக்கும்.

      இங்கு இந்த மணிப்புறாக்கள் முட்டையிட பழைய கூட்டில் அமர்ந்து பார்க்கிறது. சரியில்லை என்றால் மேலும் குச்சி வைக்கும் போல! இரண்டு நாளாக வந்து பார்க்கிறது. இன்று அடிக்கும் காற்று மிகவும் வருத்தம் தருகிறது. கள்ளி ஆடாமல் இருப்பதால்தான் அதில் கூடு வைக்கிறது போல சில பறவைகள். அணில் வருகிறது முயல் வருகிறது.

      //எக்கச்சக்கமா ராபின் பறவைகளும் பிலாக் பேர்ட்ஸ் ,டிட்ஸ் சிட்டுக்குருவிகள் வந்து சாப்பிட்டு போவாங்க //

      நியூஜெர்சியில் நிறைய வரும் மகன் வீட்டுக்கு.

      பெரிய குருவி போல ஒரு குருவி இருக்கிறது. மூக்கு நீண்ட ஒரு பறவை இருக்கு அவை அதிக நேரம் நிற்பது இல்லை உடனே பறந்துது விடும்.

      //உங்க ஊரில் நிச்சயம் அந்த பறவைகளுக்கு நேராநேரத்துக்கு உணவு கிடைக்கும்கா .அன்புள்ளங்கள் நிறைய உண்டு .நன்மை என்பது ஒரு செயின் ரியாக்சன் நீங்க அந்த பறவைகளுக்கு செய்த நன்மை யாரவது தொடருவாங்க ஊரில் .//

      அதில் சந்தேகமே இல்லை ஏஞ்சல் எல்லோரும் உணவும், தண்ணீரும் வைப்பார்கள்.
      என்னை தேடுமா என்ற நினைப்பு. எனக்கு அதன் நினைவுகள் வருகிறது அல்லாவா!

      உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.


      நீக்கு
  4. பறவைகள் அழகு.  பஞ்சுப்பொதி போல உடம்பை மாற்றிக்கொள்வதும் அழகு.  கையில் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும் போல ஆசை வரும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //பஞ்சுப்பொதி போல உடம்பை மாற்றிக்கொள்வதும் அழகு. கையில் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும் போல ஆசை வரும்!//

      ஆமாம் ஸ்ரீராம் .

      நீக்கு
  5. உங்களைத்தேடி அங்கேயே வந்துவிட்டன போலும் பறவைகள்.  இங்கே பழைய வீட்டில் வந்து பார்த்து ஏமாந்து தேடி...   கிளம்பி அங்கே வந்து விட்டனவோ என்னவோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இங்கே பழைய வீட்டில் வந்து பார்த்து ஏமாந்து தேடி... கிளம்பி அங்கே வந்து விட்டனவோ என்னவோ!//

      அப்படி நடந்தால் நல்லாதான் இருக்கும் .


      பறவைகள் பார்ப்பது எனக்கு பிடித்த செயல்.
      அதற்கு கடவுள் அருள்புரிந்து இருக்கிறார் என்று நினைத்துக் கொள்வேன்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.


      நீக்கு
  6. குருவி மற்றும் பறவைகள் படங்கள் மிக அழகு. அவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாலே மனதிற்கு மகிழ்ச்சிதான்.

    படங்களை ரசித்தேன். அங்கு உணவிடுவது அனுமதிக்கப்படுதா? இதைத்தான் உணவாகப் போடவேண்டும் எனச் சட்டம் உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      பறவைகளுக்கு நாளும் உணவு தேடுவது , குஞ்சுகளுக்கு உணவு கொண்டு கொடுக்க வேண்டும், போகும் வழியில் இடையூறு எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும். எவ்வளவோ அவைகள் வாழ்க்கையிலும் இருக்கிறது.

      ஆனாலும் அவை நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

      //அங்கு உணவிடுவது அனுமதிக்கப்படுதா? இதைத்தான் உணவாகப் போடவேண்டும் எனச் சட்டம் உண்டா?//
      தெரியவில்லை மகனிடம் கேட்டு சொல்கிறேன்.
      ஜெர்மனியில் தடை என்று பிரியசகி சொன்னார்.

      பறவை உணவு கடைகளில் விற்கிறார்கள் . சில இடங்களில் காகங்களுக்கு உணவு கொடுக்க வேண்டாம் என்று போட்டு இருந்தார்கள்.
      எங்கள் மகன் இருக்கும் பகுதியில் காகம் இல்லை.
      தண்ணீர் கொடுக்க சொல்கிறார்கள் பொதுவாக . உணவு தேடும் பழக்கம் போய் மனிதனை சார்ந்து வாழ ஆரம்பித்து விடும் என்றும் சிலர் சொல்வார்கள்.
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
    2. நம் வீட்டில் சமைத்த உணவுகளை கொடுக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள் என்று மகன் சொன்னான்.

      நீக்கு
  7. பறவைகளின் படங்கள் அனைத்தும் அழகு. படங்களோடு நீங்கள் சொல்லிச் சென்ற விஷயங்களும் நன்று. எனது பால்கனியிலிருந்து பறவைகளை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருப்பது எனக்கும் வழக்கமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      பால்கனியிலிருந்து பறவைகளை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியான பொழுது போக்குதான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்


      ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. மிக அழகன் காட்சிகள் மா ...

    முதல் படத்தில் புறா வின் கண்கள் ..பளிச்

    கடைசி படம் ...வாவ் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      பறவைகளை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அனு.

      நீக்கு
  10. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

      கருத்து சொன்னதற்கு நன்றி சகோ.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    அழகான பறவை படங்கள். ஒவ்வொன்றையும் நீங்கள் அழகாக படம் எடுத்திருக்கிறீர்கள். அனைத்து வகை புறாக்களும் ஒன்று சேர்ந்து அங்கு வருகின்றனவே..! நாடு விட்டு வந்திருக்கும் உங்களை காணத்தானோ?

    கொண்டையுள்ள அந்த பறவை மிக அழகாக உள்ளது.மதில் மேல் அமர்ந்த ஒவ்வொரு பறவையும் என்ன பேசியிருக்கும் என்பதாய் அமைந்த தங்கள் கற்பனை உரையாடல் நன்றாக உள்ளது. உண்மையிலேயே அவைகள் உங்கள் சொல்படி அப்படித்தான் பேசியிருக்குமென்று நானும் கற்பனை செய்ததில், படங்கள் அனைத்தும் காட்சிகளாக என் மனதில் விரிகின்றன.

    பறவைகளை பார்த்துக் கொண்டிருந்தால் நன்றாக பொழுது போகும். இங்கு கழுகுகள் நிறைய சுற்றிக் கொண்டேயுள்ளன. அதனால் காக்கைகளை அதிகம் காணவில்லை. வீட்டைச்சுற்றி புறாக்களும் நிறைய உள்ளன. அது சுதந்திரமாக வாழ்ந்த இடத்தில்தான், அதன் வாசஸ்தலமாகிய மரங்களை அப்புறப்படுத்தி இந்த அப்பார்ட்மெண்ட்கள் பல கட்டி, நாம் வந்து வாழுகிறோமோ என எனக்குத் தோன்றும். அதன் ஒவ்வொரு பார்வையிலும் அந்த பொருள் இருப்பதாக எனக்குப்படும்.

    அனைத்துப் படங்களையும் ரசித்தேன். ஏன் வீட்டில் சமைத்த உணவுகளை அங்குள்ள பறவைகளுக்கு போட தடை? அரசாங்கமே அப்படி உத்தரவிட்டுள்ளதா? இந்தச் செய்தி புதுமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      இந்த வகை புறாக்கள் தான் அதிகம். மணிப்புறா கொஞ்சம்தான்.

      //நாடு விட்டு வந்திருக்கும் உங்களை காணத்தானோ?//
      மகிழ்ச்சி.

      நான் சொன்னதை காட்சிகளாக கண்டு ரசித்து கருத்து சொன்னது அருமை கமலா.

      //அதன் வாசஸ்தலமாகிய மரங்களை அப்புறப்படுத்தி இந்த அப்பார்ட்மெண்ட்கள் பல கட்டி, நாம் வந்து வாழுகிறோமோ என எனக்குத் தோன்றும். அதன் ஒவ்வொரு பார்வையிலும் அந்த பொருள் இருப்பதாக எனக்குப்படும்.//

      மனிதன் தேவைகள் அதிகமாகிறது. பறவைகளுக்கு தேவையான கூடு அமைக்க மரங்கள் குறைந்து வருகிறது.


      //வீட்டில் சமைத்த உணவுகளை அங்குள்ள பறவைகளுக்கு போட தடை? அரசாங்கமே அப்படி உத்தரவிட்டுள்ளதா? இந்தச் செய்தி புதுமையாக உள்ளது.//

      ஆமாம், அதன் உணவு தேடும் வழக்கத்தை, உணவு பழக்க வழக்கத்தை நாம் மாற்றுவது தவறு என்று சொல்கிறார்கள். நம்மை நம்பி வாழ ஆரம்பித்து விடும்.

      மகிழ்ச்சி தரும் விஷயம் பின்னாளில் தொந்திரவாய் மாறும் என்கிறார்கள் . பறவை ஆராய்ச்சியாளர்கள்.

      படங்களை , செய்திகளை ரசித்து விரிவாக பின்னூட்டம் தந்த கமலாவிற்கு நன்றி.




      நீக்கு
  12. ஆஹா புறாப்பிள்ளைகள் அழகாகப் போஸ் குடுக்கினம், கொண்டை வைத்த குருவிகள் அழகு.. ஆனா குருவி எனச் சொல்ல முடியாதோ.. பெரிசாக இருக்கிறார்கள். அத்தனையும் அழகிய படங்கள்.

    எங்கட கார்டினுக்கு ஒரு ஜோடிப் புறாக்கள்தான் எப்பவும் வருவார்கள், அவை புறா எனச் சொல்வதைவிட, கோழி எனச் சொன்னால் பொருந்தும், அவ்ளோ குண்டுகள். படமெடுப்பதாயின் ஜன்னலாலதான் எடுக்கலாம், வெளியே தலை தெரிஞ்சால் பறந்திடுவினம்.. இல்லை எனில் டெய்சிப்பிள்ளை கலைச்சுப் போடுவா கர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      கொண்டை வைத்த பறவையின் பெயர் Quail, குருவி இல்லை.

      தெரியாமல்தான் எடுக்க வேண்டும் பறவைகளை இல்லையென்றால் ஓடி விடும்.
      டெய்சிப்பிள்ளை விளையாடுவாள்தான் தானே! ஓடி துரத்தி.

      உங்கள் கருத்துக்கு நன்றி அதிரா.



      நீக்கு
  13. அழகான உறவுகள்
    அன்பான பறவைகள்..
    உற்சாகச் சிறகுகள்
    உயிர் கூட்டும் நினைவுகள்..

    அனைத்துயிரும் இன்புற்று வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      அருமையான கவிதை.
      அனைத்துயிரும் இன்புற்று வாழவேண்டும் . அருமையான வாழ்த்து.
      நன்றி நன்றி.

      அம்மா எப்படி இருக்கிறார்கள்? நலமடைந்து வருவார்கள் என்று நினைக்கிறேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. இதய அழுத்தத்துக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்ட மாத்திரைகளின் பின் விளைவுகளால் மிகுந்த பாதிப்பு சிறுநீரகப் பையில் ஏற்பட்டது... அதிலிருந்து மீட்கப்பட்ட நிலையில் சர்க்கரையின் அளவு குறைந்ததால் மீண்டும் உடல் நலன் பாதிக்கப்பட்டது.. தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு - தற்போது வீட்டுக்குத் திரும்பி இருக்கின்றார்கள்..

      தங்களது அன்பினுக்கு நன்றி...

      நீக்கு
    3. மருந்துகளின் பக்கவிளைவை தடுக்க முடியவில்லை.

      வீட்டுக்கு வந்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.
      விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
      உங்களுக்கு அம்மா மருத்துவமனையிலிருந்து வந்து விட்டது ஆறுதல் தரும்.
      உடன் பதில் அளித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  14. புறாக்கள் மட்டுமில்லை, மைனாக்களும் ஒன்றோடொன்று சண்டை போடும். அதுங்க சண்டையைப் பார்த்தால் ஒண்ணுக்கொண்ணு கத்திச் சண்டை போடுவது நன்றாகப் புரியும். புறாக்களை அதிகம் வீடுகளில் விடாதீங்க என்று பலரும் சொல்கின்றனர். மாடப்புறாக்கள் தான் அதிகம் சத்தமும் போடுகின்றன. சிட்டுக்குருவிகள் அங்கே நிறைய இருக்கின்றன. இங்கே அரிதாகப் பழைய வீடுகள் இருக்கும் பக்கங்களிலே மட்டும் பார்க்க முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      ஆமாம், மைனாக்கள் சண்டையிட்டு கத்தி கூச்சலிடும்.

      புறாக்களை வீட்டுக்குள் வரவிடாமல் எல்லா இடங்களிலும் பால்கனியை மூடி வைத்து இருக்கிறார்கள். இருந்தாலும் அவை நம்மை சார்ந்து வாழ்கிறது.

      மாடப்புறாவின் சத்தம் மெல்லியதாகதான் இருக்கிறது.

      சிட்டுக்குருவிகள் சில இடங்களில் மட்டும் தான் இருக்கிறது .

      நீக்கு
  15. நல்ல நேரம் செலவு செய்து படங்களை அழகாய் எடுத்திருக்கிறீர்கள். எங்க மருமகள்/மகள் ஆகியோரும் பறவைகளுக்கு உணவு அளிக்கக் கூடாது என்றே சொல்வார்கள். மகள் வளர்க்கும் செல்லம் ஷேனுக்குக் கூட அதற்கெனத் தனியாக விற்கும் உணவு தான். வீட்டில் இருந்து ஒரு சின்ன பிஸ்கட் கூடப் போட மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினம் தினம் பார்க்கும் போது எடுத்த படங்கள். ஒரே நாளில் எடுத்த படங்கள் இல்லை.

      //மருமகள்/மகள் ஆகியோரும் பறவைகளுக்கு உணவு அளிக்கக் கூடாது என்றே சொல்வார்கள்.//
      ஓ சரி.

      //மகள் வளர்க்கும் செல்லம் ஷேனுக்குக் கூட அதற்கெனத் தனியாக விற்கும் உணவு
      தான்//

      சரிதான். விதிமுறைகளை கடைபிடிப்பது நல்லதுதான்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
      உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கிறதா?

      நீக்கு
    2. அது கீசாக்கா, அடுத்தவர்களின் அல்லது நம் வீட்டு வளர்ப்புப் பிராணிகளுக்குத்தான் இப்படி உணவு போடக்கூடாது, அதற்கான உணவையே கொடுக்க வேண்டும் இல்லை எனில் அவர்களுக்கு நோய் வரலாம், இப்போ எங்கட டெய்சிப்பிள்ளைக்கும் அப்படியேதான், வீட்டுச் சாப்பாடு எதுவும் அவ குடுத்தாலும் தொட மாட்டா.

      ஆனா இப்படிப் பொதுப் பறவைகளுக்கு என்ன உணவும் கொடுக்கலாம், இங்கெல்லாம், சமைத்த உணவுகள் நான் வைப்பேன் பறவைகளுக்கு, அதுபோல பொது இடங்களில் இருக்கும் பறவைகளுக்கும் மக்கள் பிரெட், ரைஸ் கொடுப்பார்கள்.

      நீக்கு
    3. அதிரா, மகன் வீட்டிலும் எல்லாஉணவும் வைக்கிறோம். விரும்பி சாப்பிடுகிறது பறவைகள்.

      நீக்கு
  16. அருமையான படங்கள். பொறுமையாகப் படமாக்கியிருக்கிறீர்கள். ‘வழி விடு குருவி’ படத்தில் குருவியின் போஸ் ரசிக்க வைத்தது :).

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

    படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  18. மிக அழகான படங்கள். சிட்டுக் குருவியை பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது. பறவைகளை பார்க்கும் பொழுதெல்லாம் உங்கள் நினைவுதான் வரும். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      பறவைகளை பார்க்கும் பொழுதெல்லாம் என் நினைவு வருகிறதா? மகிழ்ச்சி.

      பேத்தியை பார்த்து விட்டு வந்து விட்டீர்களா?
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. படங்களும் வாசகங்களும் நன்று. இனிய பொழுதுகள்.
    இங்கு நெல்லுக்குருவிகள் வீட்டினுள்ளேயே வந்து உணவு கேட்கின்றன :)

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
    இனிய பொழுதுகள்தான் மாதேவி.
    இங்கு நெல்லுக்குருவி முன்பு வீட்டுக்குள் பறந்து திரிந்த காலங்கள் மகிழ்ச்சியான காலங்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு