புதன், 31 மார்ச், 2021

மதி ஒளி



நிலவை அதுவும் பெளர்ணமி நிலவை  எல்லோருக்கும் பிடிக்கும் தானே! அதுதான் நான்  எடுத்த படங்களின்   பகிர்வு.
சந்திரனிலிருந்து  கிடைக்கபெறும் ஒளியின் பெயரே நிலா 

நிலவைப் பற்றி ஏதாவது எழுதலாம் என்று  கூகுளில் தேடிய போது அருமையான கட்டுரை தினமணியில்    கிடைத்தது.  "நிலாவே வா" வராது !   என்ற தன் கட்டுரையை படித்தால் நிலாவே வா என்று அழைக்க மாட்டார்கள் என்கிறார்.  (மதியின் ஒளி தான் நிலா  என்றால் அதன் ஒளி வீட்டுக்குள் வர அழைக்கலாம் என்று நான் சொல்கிறேன்.)

சூரியனிலிருந்து வரும் ஒளி வெயில் என்றும், சந்திரனிலிருந்து வரும் ஒளிக்கு நிலா என்றும் பெயரிட்டு அழைக்கிறோம் என்று திரு.  முனைவர் சண்முகநாதன் அவர்கள் நிறைய  இலக்கிய சான்றுகளுடன்   அழகாய் சொல்லி இருக்கிறார் படித்து பாருங்களேன்.

தினமணியில்  கட்டுரையை படிக்க கொஞ்சம் கஷ்டமாய் இருக்கிறது விளம்பரங்கள் வந்து தொந்திரவு செய்கிறது. நகல் எடுத்து ஒட்ட முடியாது. அதனால் சிறப்பான செய்திகளை அறிந்து கொள்ள அங்கு போய் படிக்கலாம்.
ஏற்கனவே படித்தவர்கள் இருப்பீர்கள். உங்களுக்கு தெரிந்து இருக்கலாம்.
படங்களுக்கு கீழே அங்கு படித்தவைகளை பகிர்ந்து இருக்கிறேன்.

"சூரியனிலிருந்து  வருவதை பகலொளி என்றும் சந்திரனிலிருந்து வரும் ஒளியை நிலவொளி என்றும்  சிலப்பதிகாரத்தில்  கூறப்படுகிறது என்கிறார்

திருவள்ளுவரும் குறட்பாவில் திங்கள் , மதி என்று சொற்களையே சந்திரனைக் குறிப்பதற்கு பயன் படுத்தியுள்ளார் "நிலா" என்ற சொல்லை பயன்படுத்தவில்லை.

புற நானூற்றில் பாரி மகளிர் "அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில்"
என்று  சொல்கிறார்கள். அன்று தோன்றிய (இதற்கு முன் தோன்றிய) சந்திரனின் வெண்மையான ஒளியில் (நிலவில்) எம் தந்தையும் இருந்தார் என்று கூருவதாக வருகிறது.

சிலப்பதிகாரம்(உ.வே.சா. பதிப்பு) 13 ஆவது காதையில் 27 ஆவது வரிக்கு எழுதபட்ட உரையில் " நிலாவைச் சொரிந்த அளவிலே"  என்று காணப்படுகிறது . ஒளியை சிந்திய அளவில் என்பது மிகத் தெளிவாகப் புலனாகிறது.


ஐம்பெருங்காப்பியங்களிலும் சங்க இலக்கியங்களிலும் சந்திரனிலிருந்து கிடைக்கப் பெறும் ஒளியே "நிலா" என்று அழைக்கப்பட்டதே தவிர நாம் நினைப்பது  போல வானில் வட்ட வடிவமாகத் தெரிவது நிலா என்று அழைக்கப்படவில்லை என்று சொல்கிறார்.



மலைகளுக்கு மேலே ஒரு அழகு

                                       மரங்களுக்கு இடையில் நிலவு ஒரு அழகு





இரவு ஒளிரும் வெண்ணிலா முற்றத்தில் ஒளி தரும் எத்தனைகதைகள் முற்றத்தில் அமர்ந்து பேசி இருப்பார்கள் முன்பு 




கூகுள் நன்றி 

சந்திரனிலிருந்து(மதியிலிருந்து) கிடைக்கப்பெறும்  நிலவின் பயனைத் துய்க்கும் முற்றம் மற்றும் முன்றில் ஆகியன""நிலா முற்றம்" மற்றும் "நிலா முன்றில்" என்றே இலக்கியங்களில் பேசப்படுகிறது.

சந்திரன் ஒளியை உண்டு வாழும்  சாதகப்பறவை  ஆனேனே- நானே பாடல் வரி எனக்கு நினைவுக்கு வந்தது.

வாழ்க வளமுடன்.

43 கருத்துகள்:

  1. தலைப்பைப் பார்த்ததும் மதியொளி ஷண்முகம் என்ற பெயர் நினைவுக்கு வருகிறது.  தினமணி கட்டுரையாளர் அவர் அல்ல என்று நினைக்கிறேன்.  தினமணி கட்டுரையும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //தினமணி கட்டுரையும் சுவாரஸ்யம்.//
      அதுதான் பகிர்ந்து கொண்டேன்.

      தினமணி கட்டுரையாளர் திரு. முனைவர் சண்முகநாதன் அவர்கள் முதலில் குறிப்பிட்டு இருக்கிறேன் ஸ்ரீராம், அவர் கட்டுரைசுட்டியும் கொடுத்து இருக்கிறேன் படித்து பார்க்க வேண்டும் என்றால் படிக்கலாம்.

      நீக்கு
  2. அம்மாடி..    முதல் மூன்று நான்கு படங்கள் மிக அருமை.  நிலவை...  இல்லை இல்லை மதியை அழகழகாக படம் பிடித்துத் தள்ளி விட்டீர்கள்.  சந்திரனை நிலா என்றே அழைத்துப் பழகி விட்டோம்...   கவிஞர்களும் நிலவை வைத்து ஏகப்பட்ட பாடல்கள் புனைந்து விட்டார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அம்மாடி.. முதல் மூன்று நான்கு படங்கள் மிக அருமை//

      நன்றி. இரண்டு பெளர்ணமிகளில் எடுத்த படம் ஸ்ரீராம். முகநூலில் பகிர்ந்து இருந்தேன்.
      நாம் நிலாஎன்றே அழைத்து பழகி விட்டோம் என்பது உண்மை. முன்பு நிலா படங்கள் போட்டு நிலவு பாடல்களை கேட்டு இருந்தேன் . அப்போது நீங்கள் திண்டுக்கல் தனபாலன், அப்பாதுரை அவர்கள் எல்லாம் நிறைய பாடல்கள் சொன்னீர்கள். அந்த பதிவை தேடிபடிக்கும் ஆவல் வந்து விட்டது பார்க்க வேண்டும்.

      நீக்கு
  3. தனியாக, மலைகளுக்கு நடுவே, மரங்களுக்கு இடையில் என்று நிலா மிக அழகு.  எனக்கு நிலா என்று சொல்வதே சௌகர்யமாக இருக்கிறது!  முற்றத்து நிலா அந்தக் கால வீடு ஸ்பெஷல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு மலர்களுக்கு இடையில், தென்னைமரங்களுக்கு இடையில் தெரியும் நிலாவை படம் எடுப்பது பிடிக்கும் முற்றத்திலிருந்து நிலவைப்பார்ப்பது அழகாய் இருக்கும்.
      அந்தக்கால வீடு எல்லோருக்கும் பிடிக்கும், நினைவுகளை தரும் என்றுதான் தேடி எடுத்து போட்டேன்.

      நீக்கு
  4. சந்திரனைக் காணாமல் பாடல் சுவாரஸ்யம்.  சந்திரன் என்றும் நிலா என்றும் எத்தனை எத்தனை பாடல்கள் இருக்கின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பாடலில் சந்திர ஒளியை உண்டு வாழும் என்ற வரிக்காக பகிர்ந்து கொண்டேன்.
      பாடல் எனக்கும் பிடிக்கும். நிலவு பாடல்கள், கவிதைகள் நிறைய இருக்கிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. படங்கள் அனைத்தும் நன்று.
    நிலவைக் குறித்த விடயங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      முன்பு போட்ட இரண்டு பதிவுகளில் உங்கள் கருத்துரை இல்லையே!
      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  6. முகநூலிலும் உங்கள் பகிர்வைப் பார்த்தேன். ரசித்தேன். இங்கேயும் விரிவான விளக்கங்களோடு படிக்கக் கிடைத்தது. நிலவொளியை நாம் நிலா என்றே அழைத்துப் பழகிவிட்டோம். தினமணிக் கட்டுரையைப் பின்னர் படிக்கிறேன். தெளிவான விளக்கங்களுடன் கூடிய அழகிய படங்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      முகநூலில் ரசித்தமைக்கு நன்றி.
      நிலவொளியை நாம் நிலா என்றே அழைத்து பழகி விட்டோம் என்பது உண்மைதான்.
      படித்தேன் பிடித்து இருந்தது உங்களுக்கும் பிடிக்கும் என்று பகிர்ந்தேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

      நீக்கு
  8. அன்பு கோ மதி மா,
    வாழ்க வளமுடன்.
    எனக்கு மதி என்றதும் மதி அரசு தான் நினைவுக்கு வந்தார்.
    அத்தனை நிலாப்படங்களும் அழகு.

    சந்திரனின் ஒளிதான் எல்லாவற்றிலும் தெரிகிறது.
    அருமை.
    எனக்கும் தென்னங்கீற்றூ நடுவில் சந்திரனைப் படம் பிடிக்க
    மிக மிக ஆசை.
    இன்று காலை கூட, மேகங்களுக்குள் மறைந்து வந்த
    திங்களின் ஒளிக்கிரணங்கள் கண்ணை கூசும் ஒளியுடன் இருந்தன.
    வெண்ணிலாவும் வாளும் போலே, வீரனும் கூர்வாளும் போலே''
    பாடலும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      நீங்களும் பெளர்ணமி நிலவை ஆசையுடன் படம் எடுப்பவர் அல்லவா!
      மதி, மதி அரசு நினைவுக்கு வந்தது மகிழ்ச்சி.

      //எனக்கும் தென்னங்கீற்றூ நடுவில் சந்திரனைப் படம் பிடிக்க
      மிக மிக ஆசை.//
      மாயவரத்தில் எடுத்த படங்கள் அப்படி இருக்கிறது. பாரதி அகவிதைகளுடன் முன்பு பதிவு போட்டு இருக்கிறேன்.

      //மேகங்களுக்குள் மறைந்து வந்த
      திங்களின் ஒளிக்கிரணங்கள் கண்ணை கூசும் ஒளியுடன் இருந்தன.//

      அழகாய் இருக்குமே!
      விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவையும் காணொளி, படம் எடுத்து இருக்கிறேன்.

      //வெண்ணிலாவும் வாளும் போலே, வீரனும் கூர்வாளும் போலே''
      பாடலும் பிடிக்கும்.//
      பாரதிதாசன் கவிதை நன்றாக இருக்கும்.
      கண்ணும் ஒளியும் போல வரிகள் இதிலும் வரும் பாடல் வரிகள் அருமையாக இருக்குமே!

      உங்கள் கருத்துக்கும், பாடல் பகிர்வுக்கும் நன்றி அக்கா.
      நீங்கள் என்னை "பதிவு போட்டு நாள் ஆகி விட்டதே போடுங்கள் "என்று சொன்னதால் போட்டு விட்டேன் அக்கா .


      நீக்கு
  9. நிலா முற்றம், குலமகள் ராதை படப் பாடல்,
    தினமணிக் கட்டுரை எல்லாமே அருமை. மிக மிக நன்றி கோமதி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடலை, கட்டுரையை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. நிலாவின் அழகான படங்களை ரசித்தேன். மலைகளின் இடையே நிலவு அமர்ந்திருக்கும் படமும் மரங்களுக்கிடையே அது தவழ்ந்து செல்லும் படமும் மிக அழகாக இருக்கின்றன. நிலா முற்றம் இருக்கும் அந்த மாதிரி வீடுகள் இப்போது இப்படித்தான் படங்களில் காண முடியும். நானும் அங்கு அமர்ந்திருந்து நிலாவை ரசிப்பதாக கற்பனை செய்து பார்த்தேன்.

    தாங்கள் எடுத்த படங்களும், அருமையான சந்திரனை பற்றிய கட்டுரையுமாக பதிவு நன்றாக உள்ளது. கட்டுரையை படித்துப் பார்க்கிறேன்.

    நாங்கள் திருமங்கலத்தில் வசித்த போது, என் மகனின் நெருங்கிய கல்லூரி தோழர் ஒருவர்.. அவர் பெயர் மதிஎழில். என்னவொரு அழகானப் பெயராக அவர் பெற்றோர் வைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன். மதி என்றாலே எழில்தானே என்று எனக்குத் தோன்றும். உங்கள் பதிவை பார்க்கையில் அவர் நினைவு வருகிறது. நாங்களும் அவரை மதி என்றே அழைப்போம்.

    சந்திரன் என்பதை விட நிலா என்பதுதான் நமக்கு பேச்சு வழக்கில் செளகரியமாக உள்ளது. நீங்கள் சொல்வது போல் நிலவை குறித்த பாடல்கள்தான் எத்தனை... கவிஞர்களுக்கு பெரும்பாலும் துணையாக நிற்பது இந்த நிலவுதான் இல்லையா? அருமையான கட்டுரை, அழகான படங்கள். பதிவை ரசித்தேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

    //நிலாவின் அழகான படங்களை ரசித்தேன்.//
    நன்றி.

    //நிலா முற்றம் இருக்கும் அந்த மாதிரி வீடுகள் இப்போது இப்படித்தான் படங்களில் காண முடியும்.//

    மாயவரத்தில் நிறைய வீடு இருக்கிறது இப்படி இன்னும். காரைக்குடி, தேவகோட்டை, போன்ற ஊர்களில், திருநெல்வேலியில் எல்லாம் இன்னும் இந்த வீடுகள் இருக்கிறது. இலங்கையில் பழமையான இந்த மாதிரி வீடுகளில் வசிக்கும் தமிழர்கள் காணொளி பார்த்தேன். நீங்கள் சொல்வது போல் இப்போது இந்த மாதிரி ஓட்டு வீடுகளை இடித்து அடுக்கு மாடி வீடுகள் அமைத்து வருகிறார்கள் என்பதும் உண்மை. பராமரிக்க முடியாத காரணத்தால்.

    திருமணம் ஆனதும் முதன் முதலில் இப்படி திறந்தவெளி முற்றம் உள்ள ஓட்டு வீட்டுக்குதான் குடித்தனம் நடத்த அழைத்து சென்றார்கள் என் கணவர். (ஊர் திருவெண்காடு) பெரிய வீடு. இரண்டை திண்ணை இருக்கும் பெரிய தாழ்வாரம் இருக்கும். நிறைய பேர் இருக்க வேண்டிய வீடு. 15 நாள்தான் இருந்தேன் பயமாக இருந்தது அந்த வீட்டில் இருக்க அப்புறம் மாடி வீட்டுக்கு குடிபுகுந்தோம்.


    மகனின் நண்பர் மதிஎழில் நினைவுக்கு வந்தது மகிழ்ச்சி

    //சந்திரன் என்பதை விட நிலா என்பதுதான் நமக்கு பேச்சு வழக்கில் செளகரியமாக உள்ளது. நீங்கள் சொல்வது போல் நிலவை குறித்த பாடல்கள்தான் எத்தனை... கவிஞர்களுக்கு பெரும்பாலும் துணையாக நிற்பது இந்த நிலவுதான் இல்லையா?//

    ஆமாம் நிலாதான் நமக்கு பழக்கம், பழக்கம் தான் வழக்கமாக இருக்கும்.
    கவிஞர்களுக்கு மகிழ்ச்சி, சோகம் எல்லாவற்றுக்கும் நிலவு வேண்டும்.
    உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.


    பதிலளிநீக்கு
  12. வெண்மதியின் படங்கள் அழகு. கடல், சூரியன், நிலா போன்றவை பார்க்கப் பார்க்க அலுக்காதவை. நிலா குறித்த பாடல்கள் தான் எத்தனை எத்தனை. படங்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கின்றன. பாராட்டுகள் கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //நிலா குறித்த பாடல்கள் தான் எத்தனை எத்தனை//
      ஆமாம் வெங்கட், அத்தனை பாடல்களும் நன்றாக இருக்கும்.
      //வெண்மதியின் படங்கள் அழகு.//
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

      நீக்கு
  13. அழகாக படம் எடுத்துள்ளீர்கள் அம்மா...

    நிலாவைப் பற்றிய பாடல் தொகுப்பு உள்ளது... எப்போது கேட்டாலும் இனிமையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      நிலாவைப் பற்றிய பாடல் தொகுப்பு நீங்கள் வைத்து இருப்பீர்கள் என்று தெரியும்.
      எப்போது கேட்டாலும் இனிமைதான்.

      //அழகாக படம் எடுத்துள்ளீர்கள் அம்மா...//
      நன்றி தனபாலன். கருத்து பகிர்வுக்கும் நன்றி.

      நீக்கு
  14. படங்கள் மிக அழகு. அதிலும் மரங்களுக்கிடையேயான படம் மிக நல்லா இருந்தது

    //சந்திரனிலிருந்து கிடைக்கபெறும் ஒளியின் பெயரே நிலா// - இப்போதான் இதனைக் கேள்விப்படறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //படங்கள் மிக அழகு. அதிலும் மரங்களுக்கிடையேயான படம் மிக நல்லா இருந்தது//

      நன்றி நெல்லைத் தமிழன்.

      //சந்திரனிலிருந்து கிடைக்கபெறும் ஒளியின் பெயரே நிலா// - இப்போதான் இதனைக் கேள்விப்படறேன்//

      நானும் இப்போதுதான் கேள்வி படுகிறேன். அதுதான் இந்த பகிர்வு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. ஆஆஆஆஆஆஅ கோமதி அக்கா, இம்முறை முழுநிலவைப் பார்த்தீங்களோ.. நானும் பார்த்தேனே:). எங்கட றூம் இல் கட்டில் தலை மாட்டுக்கு, ஜன்னலூடாக நிலவு முழு வட்டமாக நேரே தெரியும், ஆனா நாங்கள் எப்பவும் கேர்டினை மூடி விடுவதால, அவரைக் காணும் சந்தர்ப்பத்தை நழுவ விட்டிருந்தோம். இப்போ கண்டு பிடிச்சு, கோவிட்டாலதான்:))... நிலவுக் காலத்தில் நான் கேர்ட்டினை திறந்து வச்சிடுவேன், அப்போ கொஞ்ச நேரம் தான் ஜன்னலூடாக அழகாக எட்டி அதிராவைப் பார்த்துக் கொண்டு கடந்து போய் விடுகிறார் அம்புலி மாமா, ஆனா அந்தக் கொஞ்ச நேரம் எனினும், அப்படி அறையில இருந்தே சந்திரனைப் பார்ப்பது மிக்க மிக்க ஹப்பியாக இருக்கிறது.

    ஏதோ எம்மைப் பார்க்க அவர் நம் வீட்டுக்கு விசிட் பண்ணுவதைப்போல ஒரு ஆனந்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      //ஆஆஆஆஆஆஅ கோமதி அக்கா, இம்முறை முழுநிலவைப் பார்த்தீங்களோ.. நானும் பார்த்தேனே:)//

      எப்போதும் முமுநிலாவைப் பார்க்க பிடிக்கும் எனக்கு அதனால் எப்போதும் பார்ப்ப்பேன் காமிராவில் படம் எடுக்க ஆரம்பித்தவுடன் இருந்து அதை படம் பிடிக்கவும் ஆரம்பித்து விட்டேன்.

      //எங்கட றூம் இல் கட்டில் தலை மாட்டுக்கு, ஜன்னலூடாக நிலவு முழு வட்டமாக நேரே தெரியும்,//

      மாயவரத்தில் படுக்கை அறை ஜன்னல் வழியாக மிக அழகாய் தென்னைமரங்களுக்கு இடையே காட்சி அளிக்கும் பார்க்கவே மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

      //நிலவுக் காலத்தில் நான் கேர்ட்டினை திறந்து வச்சிடுவேன், அப்போ கொஞ்ச நேரம் தான் ஜன்னலூடாக அழகாக எட்டி அதிராவைப் பார்த்துக் கொண்டு கடந்து போய் விடுகிறார் அம்புலி மாமா//

      ஆஹா! அந்த நேரம் மிக இனிமையான தருணம் தான். மகிழ்ச்சி ஒளியை பரப்பி போகிறார் அம்புலி மாமா.

      நீக்கு
  16. படங்கள் மிக அழகாக எடுத்திருக்கிறீங்கள். நிலவும் முற்றமும் ஊரோடு போய் விட்டது.. இங்கு முற்றம், கார்டின் இருந்தாலும் யாரும் நிலவுக்காக மினக்கெடுவதில்லை.

    அழகிய பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு காலத்தில் முற்றத்தில் அமர்ந்து நிலவை பார்ப்பது ஆனந்தம். சித்திராபெளர்ணமி காலங்களில் எல்லோரும் முற்றத்தி அமர்ந்து பெளர்ணமி நிலாவை வணங்கி பின் அமர்ந்து அன்று சமைத்த சிறப்பு உணவுகளை அனைவரும் கூடி மகிழ்ந்து உண்ட காலம் அருமையானது.

      இப்போது அடுக்கு மாடி வீடுகளில் தேடவேண்டும் நிலாவை. மதுரை வீட்டில்அதி காலை நிலவைப் பார்க்கலாம். நான் பெளர்ணமி பூஜைக்கு அய்யனார் கோவில் போகும் போது முழுநிலவை படம் எடுத்து வருவேன்.

      பாடலை கேட்டீர்களா மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. குண்டு வட்ட நிலா குளுகுளு நிலவொளி !! படங்க நீங்கள் எடுத்தவை அனைத்தும் அழகோ அழகு .அந்த காலத்து நாடு முற்றம் அமைக்கப்பட்ட வீடுகள் அழகு .இப்போ அப்படி இருக்கான்னு தெரிலா எங்கள் சென்னை வீட்டில்பின் முற்றமுண்டு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்

      //குண்டு வட்ட நிலா குளுகுளு நிலவொளி !! படங்க நீங்கள் எடுத்தவை அனைத்தும் அழகோ அழகு .//

      நன்றி ஏஞ்சல்.

      //அந்த காலத்து நாடு முற்றம் அமைக்கப்பட்ட வீடுகள் அழகு .இப்போ அப்படி இருக்கான்னு தெரிலா எங்கள் சென்னை வீட்டில்பின் முற்றமுண்டு .//

      இப்பவும் இருக்கிரது ஏஞ்சல். புதுயகத்திலோ புதிய தலைமுறை தொலைகாட்சியில் வீடுகளை காட்டி வாருகிறார்கள் தனி வீடாக கட்டுபவர்கள் இப்போது மீண்டும் முற்றம் வைத்து கட்டுவதை காட்டுகிறார்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.



      நீக்கு
  18. தினமணியில் சுட்டிக் காட்டப்பட்ட கட்டுரையையும் படித்தேன்... ஆனாலும் மக்களுக்கு நிலாவின் மீது தான் விருப்பம்..

    நிலவைக் கொண்டு எழுதப்பட்ட திரைப் பாடல்கள் ஏராளம்.. ஏராளம்...

    நிலவைப் போல் குளிச்சியான படங்கள் அருமை..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //கட்டுரையையும் படித்தேன்... ஆனாலும் மக்களுக்கு நிலாவின் மீது தான் விருப்பம்..//

      ஆமாம் , நினைவு தெரிந்த நாள் முதல் நிலா என்றே அழைத்து விட்டோம். நிலவை காட்டி பால் சோறு ஊட்டி சொல்லி கொடுத்தது அல்லவா!

      //நிலவைக் கொண்டு எழுதப்பட்ட திரைப் பாடல்கள் ஏராளம்.. ஏராளம்//
      ஆமாம் , அந்த திரைப்பாடல்கள் கொடுத்த மகிழ்ச்சிகளும் ஏராளம் தான்.

      //நிலவைப் போல் குளிச்சியான படங்கள் அருமை..

      நலம் வாழ்க...//
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.
      வேலை நேரம் மாறிய போதும் படித்து கருத்து சொல்வது மகிழ்ச்சி.

      நீக்கு
  19. தினமணியில் தாங்கள் சுட்டிக் காட்டியிருந்த கட்டுரையை இரண்டு முறை வாசித்தேன்..

    என் அறிவுக்குத் தெரிந்தது சொல்லப்பட வில்லையே.. என்று...

    திருநாவுக்கரசர் ஸ்வாமிகள் தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் திருப்பதிகம் பாடும் போது ( நான்காம் திருமுறை .. திருப்பதிக எண் 22) நடராசப் பெருமானை -
    இளநிலா எறிக்கும் சென்னி உடையவன் என்று போற்றுகின்றார்..

    இன்னும் அந்தத் திருப்பதிகம் முழுதும்

    தனி நிலா எறிக்கும் சென்னி
    பனி நிலா எறிக்கும் சென்னி
    ஒளி நிலா எறிக்கும் சென்னி
    முகிழ் நிலா எறிக்கும் சென்னி
    மணி நிலா எறிக்கும் சென்னி
    விரி நிலா எறிக்கும் சென்னி

    என்ற சொற்றொடர்கள் பயின்று வருகின்றன..

    இவையெல்லாம்
    சந்திரனைக் குறிக்கின்றனவா..
    சந்திர ஒளியைக் குறிக்கின்றனவா!..

    எல்லாம் அப்பர் ஸ்வாமிகளே அறிவார்...

    எனக்கு அத் திருப்பதிகத்தின் பாடல் ஒன்று மனனம்... அதைக் கொண்டு அந்த வரிகளைக் கண்டெடுத்து தந்திருக்கின்றேன்..

    ஓம் நம சிவாய..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருத்தனாய்ப் பால னாகி
      விரிநிலா வெறிக்குஞ் சென்னி

      நிருத்தனார் நிருத்தஞ் செய்ய
      நீண்டபுன் சடைக டாழக்

      கருத்தனார் தில்லை தன்னுட்
      கருதுசிற் றம்ப லத்தே

      அருத்தமா மேனி தன்னோ
      டனலெரி யாடு மாறே.

      9
      9. பொ-ரை: ஆண்டில் மூத்தவராகவும், மிக இளையராகவும் காட்சி வழங்குபவராய், பிறை விரிந்த ஒளியைப் பரப்பும் சென்னியராய்க் கூத்து நிகழ்த்துபவராய், நீண்ட சிவந்த சடைகள் தொங்கக் கூத்தாடுதலால் அடியவர் உள்ளத்தில் என்றும் தங்கியிருப்பவராய், தில்லையம்பதியிலே சிறப்பாகக் கருதப்படுகின்ற சிற்றம்பலத்திலே பார்வதிபாகமான திருமேனியோடு ஒளிவீசும் ஞானத் தீயிடைச் சிவபெருமான் கூத்தாடும் காட்சியைக் காணலாம்.

      நீங்கள் சொன்ன பாடல் எனக்கு மனப்பாடம் ஆகவில்லை. எனக்கு தெரிந்த பாடலில்

      விரிநிலா வெறிக்குஞ் சென்னி என்ற பாடல் வரிக்கு உரையில் பிறைவிரித்த ஒளியை பரப்பும்சென்னியராகக் கூத்து நிகழ்த்துபவராய் என்று அர்த்தம் சொல்லபடுகிறது. பிறை விரித்த ஓளி என்பது நிலாவை (ஒளியை) குறிக்கிறது. என்று தெரிகிறது.

      சந்திர ஒளியை குறிப்பதாகதான் தெரிகிறது.
      மீண்டும் பார்க்கிறேன்.
      நன்றி உங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு.

      நீக்கு
    2. நீங்கள் கொடுத்த பாடலுக்கு அடுத்த பாடல்தான் இது.

      நீக்கு
    3. செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும்

      சென்னிச்

      நஞ்சடை கண்டனாரைக் காணலா நறவ நாறு

      மஞ்சடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே

      துஞ்சடை இருள் கிழியத் துளங்கு எரி ஆடுமாறே


      முற்றம் போன்று பரந்த செஞ்சடையினை தனது ஒளியால், சிவபிரான் தலையில் அணிந்துள்ள சந்திரன் அழகு செய்கின்றது; மேகங்கள் தவழ்ந்து செல்லும் அளவுக்கு வளர்ந்த சோலைகள் கொண்ட தில்லைத் சிற்றம்பலத்தில், நஞ்சினை உண்டதால் கறுத்துக் காணப்படும் கழுத்தினை உடைய சிவபிரான், தனது கையில் ஏந்தியுள்ள தீப்பிழம்பு, உலகத்தவரின் அறியாமையை அழிக்குமாறு, ஊழித்தீயின் நடுவே நின்று நடனம் ஆடுகின்றார்.




      செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும்

      முற்றம் போன்று பரந்த செஞ்சடையினை தனது ஒளியால்
      நிலாவிற்கு ஒளி என்ற அர்த்தம் தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
      அப்பர் பாடிய தேவார பாடல்தான்.

      நீக்கு
    4. இனிய திருப்பாடல்கள்...

      அப்பர் பெருமானது திருப்பாடலுக்கு ஆன்றோர்களது விளக்கம் அது... ஆனால்
      ஸ்வாமிகள் எந்த அர்த்தத்தில் பாடினார் என்பது நமக்குத் தெரியாதே!..

      நீக்கு
    5. தங்களது அன்பினுக்கு நன்றி...

      நீக்கு
    6. மீண்டும் வந்து கருத்து தந்தற்கு நன்றி. தேவார பாடல்களை பாடி மகிழ்ந்தேன்
      நன்றி.

      நீக்கு
  20. முகநூலில் ஒரு படத்தை மட்டும் பார்த்தேன். இங்கே அழகான நிலவின் பல பரிமாணங்கள். தினமணி கட்டுரை இனிமேல் தான் படிக்க வேண்டும். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு