வெள்ளி, 19 மார்ச், 2021

வாழ்வை இணைக்கும் பாலம்

 நலம் ,நலம் அறிய ஆவல்


வியாழன், 28 ஜனவரி, 2010

நான் இங்கு சுகமே நீஅங்கு சுகமா?

இந்த பழைய பதிவை மீள் பதிவாக போட காரணம் வல்லி அக்கா எழுதிய நினைவுகள்  பதிவு அதில் நம் நட்புகள் கொடுத்த பின்னூட்டங்கள் கடிதங்கள் வந்த காலத்தை விரும்புவது தெரிந்தது அதனால் இந்த பதிவு ஒரு மீள் பதிவு.


கெளரி கல்யாணம் படத்தில் தபால்காரர்பாடும் பாடல் 1966ல் வெளி வந்த படம்.




இந்த பாடலை கேட்டு கொண்டு பதிவை படிக்கலாம். காட்சியும் நன்றாக இருக்கிறது கோவில்கள் வருகிறது , மாங்காடு கோவில் மாதிரி இருக்கிறது, அப்புறம் இன்னொரு கோவிலும் கோவில்  திருக்குளமும் இடம்பெறுகிறது.

https://www.youtube.com/watch?v=K1Eb_Sb-cHI  பாடல் லிங்க்

கீழே பதிவு :-

கடிதத்தை,’மடல்,திருமுகம்,முடங்கல்,ஓலை’என்றெல்லாம் அக்காலத்தில் குறிப்பிட்டார்கள் . இலை என்ற பத்திரத்திலும்,பனைஓலையிலும் கடிதங்கள் வரைவார்கள்.

ந.மு வேங்கடசாமி நாட்டார் முடங்கல் பற்றி எழுதியது: // பல்லாயிர ஆண்டுகளாகப் பனுவல்களும்,ஆவணங்களும்,பிறவும்,இந்நாட்டிலே பனையோலையிற்
றீட்டப் பெற்றுவந்தன. ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்குச் செய்தி தெரிவிக்க வேண்டின் அதனைப் பனையோலையில் எழுதிச் சுருள் செய்து, காப்பிட்டு ஏவலாளர் முதலாயினார் கைகொடுத்துச் செல்லவிடுவது வழக்கம். அதனை ஓலையென்றும்,முடங்கலென்றும் கூறுவர். ஓலையில் எழுதப்படுதலின் ஓலையென்பது பெயராயிற்று;இலை என்னும் பொருளுடைய பத்திரத்தில் வரையப்படுதலின் பத்திரமென்பது பெயராயினாற்போல,பிற்காலத்தே ஓலையென்பது மங்கலமல்லாத செய்தி வரைந்ததாகப் பொருள் படுவதாயிற்று. செய்தி வரைந்த ஓலையை வளைத்துச் சுருள் செய்தலின்,அது முடங்கல் எனவும் பெயர் பெறும். முடங்கல்-வளைதல். முடங்கல் வரைதலைப்பற்றிய வேறு சில செய்திகளும் பின் காட்டுவனவற்றால் அறியலாகும்.

சிலப்பதிகாரம்,புறஞ்சேரியிறுத்த காதையில்,மாதவி தீட்டிய முடங்கலொன்றைக் கோவலன் பெற்ற வரலாறு காணப்படுகிறது. மாதவி திருமுகமெழுதக் கொண்ட கருவிகள் :சண்பகம் மாதவி,பச்சிலை,பித்திகை,மல்லிகை,செங்கழுநீர் என்பவற்றால் நெருக்கத தொடுதத மாலையின் இடையே கட்டிய, முதிர்ந்த தாழம்பூவின வெள்ளியதோடும் ,அதற்கு அயலதாகிய
பித்திகையின் முகையும்,செம்பஞ்சிக் குழம்பும் ஆகும்.பித்திகை அரும்பை எழுது கோலாகக் கொண்டு ,செம்பஞ்சிக் குழம்பிலே தோய்த்துத் தாழையின் வெண்டோட்டில் எழுதினளென்க.//


சைவசமயத்தில் சிவபெருமான் பாணபத்திரரின் வறுமை தீர்க்க சேர அரசனுக்குக் கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது.அப்பாடல் சைவத்திருமுறைகளில் காணப்படுகிறது. சுவாமி சிவானந்தா எழுதிய கடிதங்கள் தத்துவங்களை விளக்குகின்றன.  அக்கடிதங்களின் தொகுப்பு,epistles of sivananda என்ற தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது.

சிறந்த கருத்துக்களைக்கூற டாக்டர் மு.வ. அவர்கள் கடிதவடிவத்தை எடுத்துக் கொண்டு தம்பிக்கு, தங்கைக்கு என்று புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

நேரு,காந்தி போன்ற தலைவர்களின் கடிதங்கள் இலக்கியமாகவும்,வரலாறாகவும் அமைந்தன என்பார்கள்.மெக்காலே எழுதிய கடிதங்கள் ஆங்கில இலக்கியமாகக் கருதப்படுகின்றன.

சிலப்பதிகார காலத்திலிருந்து கொஞ்சகால முன்பு வரை கடிதம் எழுதும் பழக்கம் நன்றாக இருந்து வந்தது.தொலைபேசி வந்தபிறகு கொஞ்சம் குறைந்தது.கைபேசி வந்தபின் மிக,மிக குறைந்து விட்டது.

அன்புள்ள என்று ஆரம்பித்து ,பேரோ அல்லது கண்ணே மணியே என்றோ ஏதோ எழுதி, இங்கு நாங்கள் எல்லோரும் நலம் அங்கு எல்லோரும் நலமா?நலம் நலம் அறிய ஆவல் என்று அந்த காலத்தில் கடிதம் இப்படித்தான் நலம் விசாரித்து எழுதிக் கொள்வார்கள். இங்கு மழை பெய்கிறது,அங்கு மழை உண்டா? மாடு கண்ணு போட்டுதா,வெள்ளாமை எப்படி இருக்கு? என்று ஊர் நடப்பு,நாட்டு நடப்பு எல்லாம் கேட்டுக் கொள்வார்கள்.
பழைய கடிதத்தை எடுத்துப்பார்த்தால் அந்த அந்த காலக்கட்டங்களின் நிலை புரியும்.
ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டாலும் நலமா என்றும் செளக்கியமா என்றும் நல்லா இருக்கிறீர்களா? என்றும் கேட்டுக் கொள்வார்கள். விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றதில் நாம் இழந்தவை ஏராளம்,அதில் கடிதப்போக்குவரத்தும் ஒன்று. திருவள்ளுவர்:

//அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லைபொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.//

என்று சொன்னார் ,ஆனால் இப்போதைய குறள்:

’செல் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை
மடிக்கணிணி இல்லாருக்கு எவ்வுலகும் இல்லை.” என்றாகிவிட்டது
யாருக்கும் கடிதம் எழுதவோ ,அதை ஆசை ஆசையாய் படிக்கவோ நேரம் இல்லை.
போகிற போக்கில் செல்லில் பேசிக்கொள்வதுதான்! வண்டி ஓட்டிக் கொண்டு ,அப்படிப் பேசுவதால் நடக்கும் விபரீதங்கள் எத்தனை எத்தனை?

வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்களை இழந்தோம்.


திருமணம் ஆன பின் அப்பா அம்மாவிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தால் குதுகலம்.
அம்மா சமையல் குறிப்பு,கோலம், பூஜை முறைகள் எல்லாம் எழுதி அனுப்புவார்கள்.
குழந்தைப் பேறுக்கு அம்மாவின் வீட்டுக்குப்போன போது, கணவர் என் நலம்,குழந்தை நலம்கேட்டு எழுதும் போது பெருமிதமான குதுகலம்.
குழந்தை வளர்ப்பு எல்லாம் அக்கா அம்மாவிடம் கடிதத்தில்கேட்டுத் தான் .

அண்ணன் அக்கா எல்லாம் கடிதம் எழுதும் போது
புதிதாக என்ன சினிமா பார்த்தாய்? புதிதாக என்ன கோவில் போனாய் என்று கேட்பார்கள்.

தங்கை ,தம்பி அம்மாவிடம் பள்ளி டூர் போக சிபாரிசு செய்யச் சொல்லி எழுதுவார்கள்.
தோழிகள் எப்போது இனி சந்தித்து கொள்வது எப்போது என்றெல்லாம் கேட்டு எழுதுவார்கள்.எனது மாமனார் வாராவாரம் கடிதம் எழுதுவார்கள்.அவர்கள் எங்களை ஒவ்வொரு பண்டிகைக்கும் வந்து சேருங்கள் என்று எழுதுவார்கள். வாராவாரம் கடிதம் எழுதவில்லையென்றால் உன்னிடமிருந்து கடிதம் இல்லையே அம்மா கவலைப்படுகிறாள்என்று என் கணவருக்குக் கடிதம் வரும்.

என் அப்பாவிடமிருந்தும் நாலுநாளைக்கு ஒருதடவை கடிதம் எழுது என்று கடிதம் வரும்.சின்மையானந்த்ர் நடத்திய தொடர் சொற்பொழிவு விபரம் எல்லாம் அதில் இருக்கும்.

என் மகள் திருமணமாகி இரண்டு கடிதங்கள் எழுதியிருப்பாள்,அப்புறம் எல்லாம் போன் தான்.மகன் வேலைக்குப் போன புதிதில் ஒரு கடிதம் எழுதினான் அப்புறம் போன்.இப்போது இண்டர் நெட் சாட் தான்.

மின்னஞ்சலில் கடிதங்களை எழுதித் தாள்களை மிச்சப்படுத்தி மரங்களைப் பாதுகாத்து மழைவளம் பெறுவோம் என்பது இப்போதைய சுலோகம் .

கடிதம் எழுதச் சோம்பல் படும் நமக்கு இது ஒரு நல்ல கருத்தாகவே படுகிறது.

எப்படி இருந்தாலும் ஏதாவதொரு வடிவில் கடிதங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்
இல்லையா?

அம்மா என்றால் அன்பு  பதிவில் எழுதியது. 

(செவ்வாய், 6 மே, 2014)


//முன்பு நாலு நாளுக்கு ஒருமுறை நாலுவரி  கடிதம் எழுது என்று கேட்டார்கள் பெற்றோர்கள்.  -அப்புறம் தொலைபேசி வந்தபின் - அடிக்கடி போன் செய் என்றார்கள்.  இன்னும் தகவல் நுட்பம் வளர்ந்தபின் இணையத்தில்  இன்று என்ன சாப்பிட்டாய்?என்று நேரில் பார்த்துக் கொண்டே பேசும் வளர்ச்சி பெற்றபின் எதிர்பார்ப்புகள் அதிகம் ஆகிவிட்டது.

இப்போது அடிக்கடி ஸ்கைப்பில் வா உங்களைப் பார்க்க வேண்டும்  என்று தூரத்தில் இருக்கும் பிள்ளைகளிடம் பெற்றோர் கேட்கும் காலம் ஆகிவிட்டது.//


முதியோர் நாள்  

(ஞாயிறு, 1 அக்டோபர், 2017) 


//எனக்கு வயதாகும் போதுதான் என் பெற்றோர்களின் தவிப்பும் ஏக்கமும் புரிகிறது.அம்மா,
’நாலு நாளுக்கு ஒரு முறை கடிதம் எழுது’ என்பார்கள்.(தொலைபேசி,அலைபேசி எல்லாம் வரும் முன்)பிறகு போன் வந்தபின் அவர்களுக்கு வயதாகி காது கொஞ்சம் கேட்காமல்  போனபோது போனில் அவர்கள் பேசுவார்கள்,என் நலம் விசாரித்து.’ மற்றதை உன் தம்பியிடம் சொல் நான் கேட்டுக் கொள்கிறேன்’ என்பார்கள். கம்யூட்டர் அப்போது இல்லை இருந்திருந்தால் எங்களைப் பார்த்து மகிழ்ந்து இருப்பார்கள்.அம்மாவுக்குத் தனியாகக் கடிதம் எழுதியிருக்கலாம் என்றும் தம்பியிடம் போனிலும் அம்மாவிடம் கடிதத்திலும் உரையாடி இருக்கலாம் என்றும் இப்போது நினைக்கிறேன். விஜய் டீ.வீயில்’ காப்பி வித் அனுவில்’ நிகழ்ச்சி முடிவில் ’யாரிடம் மன்னிப்புக் கேட்க நினைக்கிறீர்கள்?’என்பார்கள். நான் என் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க நினைக்கிறேன்-கடிதம் எழுதாமல் இருந்ததற்கு.’யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்றால்-என் மாமியாருக்கு.முதுமையை அழகாய் ரசித்து வாழ்வதற்குக் கற்றுக் கொடுத்ததற்கு. //

2011 ல் போட்ட பதிவு என்று நினைக்கிறேன் இதை மீள் பதிவாக போட்டேன் 2017 ல்.


                    வாழ்க வையகம் ! வாழ்க வையகம் !     வாழ்க வளமுடன் !
--------------------------------------------------------------------------------------------------------------------------                                  

52 கருத்துகள்:

  1. ஆஆஆஆஆஆஆஆ மீதாம் இம்முறையும் 1ஸ்ட்டூஊஊஊஊ:).. கோமதி அக்கா நலம்தானே.. நலமோடு இருக்க வேண்டுகிறேன்... கொஞ்சத்தால வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      //ஆஆஆஆஆஆஆஆ மீதாம் இம்முறையும் 1ஸ்ட்டூஊஊஊஊ:).//

      ஆமாம் , நீங்கள் தான்.

      நலம் தான் அதிரா, உங்கள் வாழ்த்துக்கு.

      நீக்கு
  2. அருமையாகச் சொல்லியிருக்கிறீங்கள் கோமதி அக்கா கடிதம் பற்றி. பாடல் முன்பு கேட்டதாக நினைவில்லை. இது கெளரி கல்யாணம், பின்னர் டைரி கல்யாணம் என்றொரு படம் வந்திருக்கிறது அது பார்த்தேன் விசு அவர்கள் நடிச்சது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய எழுதலாம் கடிதம் பற்றி . பதிவு நீண்டு விடும். பாடல் வானெலியில் அதிகம் ஒலிக்கும் பாடல். இந்த படம் நன்றாக இருக்கும் அதிரா பாருங்கள்.
      https://www.youtube.com/watch?v=NWhLIvFtuNY படத்தின் சுட்டி.

      விசு படமும் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  3. கடிதம் எழுதுவது ஒரு சந்தோசம் ஆனா அதைவிட நமக்குக் கடிதம் வந்து அதைப் பிரிச்சுப் படிச்சுப் பார்ப்பது அலாதி சந்தோசம்.

    நானும் நிறையக் கடிதம் எழுதியிருக்கிறேன்... மாமா, சித்தியாட்கள், சித்தப்பா, மாமி குடும்பம் மச்சாள் ஆட்கள்[இதெல்லாம் சின்ன வயதில்] அம்மம்ம்மா அம்மப்பா இப்படி ஆனா அப்பா அம்மாவுக்கு எழுதவில்லை, ஏனெனில் எப்பவும் கூடவே இருந்தேன் திருமணத்தின் பின்பும்.. அப்போதெல்லாம் ஃபோன் வ்சதியும் வந்துவிட்டது..

    அக்கா அண்ணனுக்கும் எழுதியிருக்கிறேன் ஏனெனில் நம் நாட்டுப்பிரச்சனையால், ஃபோன் தடை இருந்தது..

    பின்பு ஈ மெயில் அனுப்பியிருக்கிறேன், இப்போது எந்த மெயிலும் இல்லை... நேரே ஃபோன் தானே... கடிதம் எழுதும் காலமும் ஒரு அழகிய நிலாக் காலங்கள்தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கடிதம் எழுதுவது ஒரு சந்தோசம் ஆனா அதைவிட நமக்குக் கடிதம் வந்து அதைப் பிரிச்சுப் படிச்சுப் பார்ப்பது அலாதி சந்தோசம்.//

      கடிதம் எழுதுவது, அதை பிரித்து படிப்பதும் மிக ஆனந்தம் தான்.

      //நானும் நிறையக் கடிதம் எழுதியிருக்கிறேன்... மாமா, சித்தியாட்கள், சித்தப்பா, மாமி குடும்பம் மச்சாள் ஆட்கள்[இதெல்லாம் சின்ன வயதில்] அம்மம்ம்மா அம்மப்பா//

      நிறைய கடிதங்கள் அது தந்த மகிழ்ச்சிகள் எல்லாம் இப்போது நினைவில் வருகிறது அல்லவா அதிரா?

      //அக்கா அண்ணனுக்கும் எழுதியிருக்கிறேன் ஏனெனில் நம் நாட்டுப்பிரச்சனையால், ஃபோன் தடை இருந்தது..//
      அதனால் மீண்டும் கடிதம் தொடர்பு இருந்து இருக்கிறது நல்லது.

      //பின்பு ஈ மெயில் அனுப்பியிருக்கிறேன், இப்போது எந்த மெயிலும் இல்லை... நேரே ஃபோன் தானே... கடிதம் எழுதும் காலமும் ஒரு அழகிய நிலாக் காலங்கள்தான்..//

      இப்போதும் சிலருக்கு அன்பாய் மெயில் அனுப்பிவிடுவீர்கள்தானே!
      கடிதம் எழுதிய காலம் அழகிய நிலாக் காலம் தான்.

      குழந்தைகளை அழைத்து கொண்டு ஊரில் விடுமுறைக்கு போய் இருந்த போது மாமா மட்டும் ஊருக்கு போய் விட்டார்கள் குழந்தைக்கு அம்மன் போட்டு விட்டது. கடிதம் எழுத கூடாது என்று சொல்லி விட்டார்கள். அப்போது திருவெண்காட்டில் இருந்தோம்.

      வீட்டில் தொலைபேசியும் கிடையாது என்னிடமிருந்து கடிதம் இல்லையென்றால் வருத்தபடுவார்கள் என்று கல்லூரி தொலைபேசிக்கு போன் செய்து விவரம் சொன்னார்கள் என் அண்ணன்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.


      நீக்கு
  4. மிகவும் பொருத்தமான பாட்டு ஒன்று போட்டிருக்கிறீர்கள்.  ஹிந்தியில் கூட ஏதோ ஒரு படத்தில் ராஜேஷ் கன்னா தபால்காரராக ஒரு பாட்டு பாடிக்கொண்டே சைக்கிளில் வருவார் என்று நினைவு  (ராஹியா டாக்கு லாயா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      2010 ல் இந்த பதிவு போட்ட போது நான் இந்த பாட்டு பகிரவில்லை. இப்போது இணைத்து இருக்கிறேன்.

      வீடியோ பகிர்வு, படங்கள் எல்லாம் நிறைய பகிர்ந்தது இல்லை. நான் எல்லாம் கற்றுக் கொண்ட பின் தான் நிறைய படங்கள் பகிர ஆரம்பித்தேன்.
      ராஜேஷ் கன்னா பாட்டு கேட்ட (பார்த்த) நினைவு இல்லை.

      நீக்கு
  5. சுத்தமான இலக்கியக் குறிப்புகளுடன் பதிவிட்டிருக்கிறீர்கள்.  சிலப்பதிகாரம் ஓலை, முடங்கல் என்று சுவையான குறிப்புகள்.  கதித்தங்கள் எழுதிய காலங்கள் இனிமையானவை.  அதை இந்தத்தலைமுறை அறியவே அறியாது என்பதால் அவர்களுக்குப் புரியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது எல்லாம் புத்தகங்கள் நிறைய படிப்பேன் அதை வைத்து என் பதிவுக்கு பொருத்தமாய் இருந்தால் இணைத்துக் கொள்வேன். சாரிடம் இந்த மாதிரி போஸ்ட் போட போகிறேன் அதற்கு பொருத்தமாக எழுத புத்தகம் இருந்தால் கொடுங்கள் என்றேன் அப்போது
      பிரபலங்கள் எழுதிய கடிதங்கள் பற்றிய புத்தகம் கொடுத்தார்கள் அதிலிருந்து ந.மு வேங்கடசாமி நாட்டார் முடங்கல் பற்றி எழுதிய குறிப்பை பார்த்து எழுதியது.

      கடிதங்கள் எழுதிய காலங்கள் இனிமையானவைதான்.


      // அதை இந்தத்தலைமுறை அறியவே அறியாது என்பதால் அவர்களுக்குப் புரியாது!//

      அவர்கள் உலகம் வேறு ஸ்ரீராம். நம்மிடம் உங்களுக்கு புரியாது என்பார்கள். இப்போது அவர்கள் விரல்கள் எவ்வளவு வேகமாய் செய்திகளை அனுப்புகிறது!


      நீக்கு
  6. யாரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்கள், யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்...     நெகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அம்மாவிற்கு கடிதம் எழுத சோம்பல் பட்டது மனதை வருத்தி கொண்டே இருக்கிறது.
      என் அத்தை முதுமையை ரசித்து வாழ்ந்தார்கள் அவர்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.
      மாமாவை பிரிந்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்த காலத்திலும் அவர்கள் வாழ்ந்த முறை எனக்கு இப்போது பாடம்.


      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. பிரபலங்கள் எழுதிய கடித விபரங்கள் அருமை. இது வரை அறியாத ஒன்று. பல புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். நானும் தபால்காரர் கொண்டு வரப்போகும் கடிதம் எனில் தவித்துக்கொண்டு காத்திருப்பேன். அப்பா, அம்மா தனித்தனியாக எழுதுவார்கள். அண்ணா என்னோடவே இருந்ததால் கடிதம் வராது. தம்பி எப்போதேனும் எழுதுவான் கல்லூரி முகவரியில் இருந்து. மாமனார், மாமியாரிடமிருந்தும் கடிதம் வரும். திருமணம் ஆன நாத்தனார்கள் எழுதுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      நானும் தபால்காரர் கொண்டு வரப்போகும் கடிதம் எனில் தவித்துக்கொண்டு காத்திருப்பேன். அப்பா, அம்மா தனித்தனியாக எழுதுவார்கள்.//

      அம்மாவும், அப்பாவும் தனி தனியாகத்தான் எழுதுவார்கள். அத்தை எழுத மாட்டார்கள்.
      ஒரு முறை என் அக்காவிற்கு கடிதம் எழுதினார்கள் உன் அப்பாவிடம் உன் கொழுந்தனுக்கு கோமுவை கேள் என்று. என் அக்கா மூத்த மருமகள் நான் நாலாவது மருமகள். ஓர்படிகள் கடிதம் எழுதுவார்கள்.



      நீக்கு
  8. பிரசவங்களுக்குப் பிறந்த வீடு வந்தப்போ கணவரின் கடிதத்தை எதிர்பார்த்து வாசலிலேயே உட்கார்ந்திருப்பேன். முதல் டெலிவரி பத்து/பத்தரைக்கு வரும். அதில் கடிதம் இல்லை எனில் சாப்பிடக் கூடத் தோன்றாது. பின்னர் அடுத்த டெலிவரியில் கடிதம் வந்தால் ஏதோ சாக்லேட் சாப்பிடும் குழந்தை போலக் குதூகலம். அந்த சந்தோஷம் எல்லாம் இப்போது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லி அக்காபதிவில் உங்கள் கணவர் எழுதும் கடிதங்களைப் படித்து அதற்கு பதில் எழுதி விட்டு அதன் பின் சாப்பிட உட்காருவதை படித்தேன்.
      அம்மாவின் கவலை அம்மாவிற்கு "சாப்பிட்டு விட்டு நிதானமாக எழுத கூடாதா" என்றதையும் படித்தேன் .

      //கடிதம் வந்தால் ஏதோ சாக்லேட் சாப்பிடும் குழந்தை போலக் குதூகலம். அந்த சந்தோஷம் எல்லாம் இப்போது இல்லை.//

      உண்மைதான். பிரசத்திற்கு சென்ற போது கவிதைகள் கடிதமாக வரும்.
      ஆனால் சுருக்கமாய் தான் இருக்கும். அதுவே பெரிய ஆனந்தம் தான் படிக்க.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  9. மன்னிப்புக் கேட்பதும், நன்றி சொல்ல நினைப்பதும் மிக அருமை. நினைவுகள் அருமை. அதைப் போற்றிப் பாதுகாப்பதும் இப்படிப் பதிந்து வைப்பதும் நம் குழந்தைகளுக்கு ஓர் அரிய பொக்கிஷம். நானும் எங்க குழந்தைகள் ஆரம்பத்தில் எழுதிய கடிதங்களை எல்லாம் சேர்த்து வைத்திருக்கேன். அவங்க என் பிறந்த நாள், கல்யாண நாள் ஆகியவற்றிற்கு அனுப்பிய வாழ்த்து அட்டைகள் கூட இன்னமும் என் சேமிப்பில் உள்ளன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னிடமும் மகன் , மகள், அம்மா, அப்பா உடன்பிறப்புகள் எழுதிய கடிதம் இருக்கிறது. பேரன் எழுதிய கடிதமும் இருக்கிறது.

      //அவங்க என் பிறந்த நாள், கல்யாண நாள் ஆகியவற்றிற்கு அனுப்பிய வாழ்த்து அட்டைகள் கூட இன்னமும் என் சேமிப்பில் உள்ளன//

      அவைகள் நமக்கு ஊக்கமருந்து இல்லையா! பத்திரபடுத்தி வைத்து இருப்பது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. ஆம் விஞ்ஞான வளர்ச்சியில் பலவற்றை இழந்தது உண்மைதான்.

    குறளை மாற்றி எழுதியது ரசிக்க வைத்தது.

    அடுத்தடுத்த மாற்றங்களையும் எதிர்கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்


      //அடுத்தடுத்த மாற்றங்களையும் எதிர்கொள்ள வேண்டும்//

      ஆமாம், மாற்றங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது, எதிர் கொள்ள பழகி கொள்ள வேண்டி இருக்கிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. குறளை மாற்றி எழுதியது ரசிக்க வைத்தது.//
      நன்றி.
      நான் எழுதிய போது செல்லும், மடிகணினியும் இல்லையென்றால் எல்லோரும் என்ன உங்களிடம் இல்லையா என்று கேட்ட காலம்.

      அதுவும் குழந்தைகள் கூட உங்க செல்லை கொடுங்க என்று வாங்கி விட்டு இதில் விளையாட்டு இல்லையா? டச் ஸ்கிரீன் இல்லையா என்று கேட்டு கையில் கொடுத்து விடுவார்கள். இப்போதும் வருடா வருடம் வரும் புது மாடல் குழந்தைகளுக்கு தான் தெரிகிறது. நமக்கு அவ்வளவாக தெரியவில்லை.

      நீக்கு
  11. அருமை அம்மா... குறிப்புகளும் அதன் விளக்கங்களும் அருமை...

    பாடலையும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      பாடலை ரசித்தும் பதிவுக்கு உங்கள் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. கடிதங்கள் குறித்த நினைவுகள் நன்று. தில்லி வந்த புதிதில் நிறைய கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் நின்றுவிட்டது. இப்போதெல்லாம் கடிதம் எழுதுதே இல்லை. என் அப்பா கடிதம் எழுதித் தள்ளுவார்! போஸ்ட் கார்ட், இன்லேண்ட் லெட்டர் என மொத்தமாக வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு உறவினர்கள், நண்பர்கள் என அவர் எழுதிய கடிதங்கள் எத்தனை எத்தனை என்பதே தெரியாது! எண்ணிலடங்கா கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தவர் இப்போது கடிதங்கள் எழுதுவதே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //தில்லி வந்த புதிதில் நிறைய கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் நின்றுவிட்டது.//

      ஆமாம் , அப்புறம் தொலைபேசியில், அலைபேசியில் கணினியில் என்று காலம் மாறி விட்டது அல்லவா?

      //போஸ்ட் கார்ட், இன்லேண்ட் லெட்டர் என மொத்தமாக வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு உறவினர்கள், நண்பர்கள்//

      எங்கள் வீட்டிலும் உங்கள் அப்பா போல மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்ட காலங்கள் உண்டு.

      இப்போது அப்பா கடிதம் எழுதவில்லை என்றால் எல்லோரிடமும் கைபேசியில் பேசி கொண்டு இருப்பார்கள் இல்லையா?

      காலம் மாறும் போது நாமும் மாறவேண்டி இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.


      நீக்கு
  13. வணக்கம் சகோதரி

    தங்களது பதிவு அருமை. ஆஹா... என்ன ஒற்றுமை நமக்குள்..? ஆச்சரியமாக உள்ளது. அதுவும் ஒரே நாளில். இது ஒரு தெய்வ சங்கல்பந்தான்.. நானும், வல்லி சகோதரியின் நினைவு பதிவில் ஆழ்ந்து என்னுடைய அந்தக்கால நினைவுகளை பதிவாக்கியுள்ளேன். நீங்களும் அது போலவே அழகாக நினைவு பதிவுகள் போட்டுள்ளீர்கள். பதிவு மிகவும் நன்றாக உள்ளது.

    தங்கள் பதிவில் எடுத்து தந்த முதல் வரியிலேயே ஒரு திரைப்படபாடல் உண்டு. கெளரி கல்யாணம் படப் பாடலும் அடிக்கடி கேட்டுள்ளேன். "ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது" என்று அந்த பாடல் வந்த புதிதில் இதை பாடாத நாளில்லை. அதில் அனைவரின் நடிப்புமே நன்றாக இருக்கும். படமும் பார்த்துள்ளேன். அப்போதெல்லாம் விடுமுறை நாட்களில் பொழுது போவதற்கு இந்த மாதிரி ரேடியோ படப் பாடல்களை கேட்பதுதானே வழக்கம்.

    பழங்கால கடிதம் குறித்த சொற்களை மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள். சிலப்பதிகாரத்தில் வரும் விஷயங்களை தெரிந்து கொண்டேன்.

    சிவபெருமானே கடிதம் எழுதியதாக செய்தி படித்தவுடன் ஆனந்தமாக உள்ளது. இறைவனே நம் அனைவருக்கும் முன்னோடியாக இருந்து செயலாற்றியிருக்கிறார். இன்னும் தாங்கள் கொடுத்த செய்திகளும் சுவையானது. இப்போதைய காலத்திய வள்ளுவர் பாணி குறளும் உண்மைதான்.

    இந்த விஞ்ஞான மாற்றங்களும் இப்போதுள்ள காலத்திற்கு இனிதானதுதான். இல்லையென்றால் இந்த மாதிரி வலை தொடர்புகள் மூலம் நம் போன்ற சகோதர சகோதரிகளின் உறவுகள் தொடர்ந்திருக்குமா? எனினும் பழங்கால நினைவுகள் மனதில் மறக்காமல் இருக்க அதன் சுவையையும் நாம் இவ்வாறு அடிக்கடி நினைத்துப் பார்க்கிறோம்.

    தங்களின் பழைய பதிவுகளையும் சென்று படித்து வந்தேன். மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள். நானும் என அம்மாவிடம் அவர்கள் விருப்பபடி வாரம் ஒரு முறை கடிதங்கள் எழுதாததற்காக இப்போதும் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டேதான் உள்ளேன்.

    ஏதோ இந்த மாதிரியான சம்பவங்களையும், நினைவுகளையும், படித்து, கேட்டு, நாமும் பதிவாகவும் எழுதி அனைவரிடமும் பகிரும் போதும் மனதிற்கு ஒரு அற்ப சந்தோஷத்தையும், நிம்மதியையும் தருகிறது. இந்த உறவுகள் வாழ்வில் இனி தொடர்ந்து வர வேண்டுமென இறைவனை மனது பிரார்த்தித்துக் கொள்கிறது. தாங்களும் என தளம் வந்து பகிர்ந்ததை படித்து நல்ல முறையில் விரிவான கருத்துக்கள் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள பதிவிலும் சிறப்பானதொரு பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //ஆஹா... என்ன ஒற்றுமை நமக்குள்..? ஆச்சரியமாக உள்ளது. அதுவும் ஒரே நாளில். இது ஒரு தெய்வ சங்கல்பந்தான்.//

      ஆமாம் கமலா.

      //நானும், வல்லி சகோதரியின் நினைவு பதிவில் ஆழ்ந்து என்னுடைய அந்தக்கால நினைவுகளை பதிவாக்கியுள்ளேன். //

      ஆமாம் கமலா, நாம் எல்லாம் ஒரே குடும்பமாக போய் விட்டோம் நினைவுகளும் ஒரே மாதிரி இருப்பதில் வியப்பு இல்லை என்றே நினைக்கிறேன்.

      //தங்கள் பதிவில் எடுத்து தந்த முதல் வரியிலேயே ஒரு திரைப்படபாடல் உண்டு. கெளரி கல்யாணம் படப் பாடலும் அடிக்கடி கேட்டுள்ளேன். "ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது" என்று அந்த பாடல் வந்த புதிதில் இதை பாடாத //

      நாளில்லை.//

      ஆமாம் ,நலம் நலமறிய ஆவல் பாடல் வந்து இருக்கே!
      அப்போது வானொலிதான் ஒரே பொழுது போக்கு அது வீட்டில் ஒலித்து கொண்டே இருக்கும்.
      பாடல்களை நாமும் சேர்ந்து பாடிய காலங்கள் உண்டு.

      //இந்த விஞ்ஞான மாற்றங்களும் இப்போதுள்ள காலத்திற்கு இனிதானதுதான். இல்லையென்றால் இந்த மாதிரி வலை தொடர்புகள் மூலம் நம் போன்ற சகோதர சகோதரிகளின் உறவுகள் தொடர்ந்திருக்குமா? எனினும் பழங்கால நினைவுகள் மனதில் மறக்காமல் இருக்க அதன் சுவையையும் நாம் இவ்வாறு அடிக்கடி நினைத்துப் பார்க்கிறோம்.//

      நீங்கள் சொன்னது போல் காலத்திற்கு ஏற்ற விஞ்ஞான மாற்றங்களும் நமக்கு நன்மை அளிக்கிறது தான். நம் நட்புக்கு பாலம் அமைத்து உள்ள்தே!
      பழங்கால நினைவுகளும் அது தந்த சுவைகளும் நினைத்துப் பார்க்க இனிமைதான்.
      அதுதான் பழைய நினைவுகளுக்கு அடிக்கடி போய் விடுகிறோம்.

      பழைய பதிவுகளை படித்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டது அருமை.

      //இந்த உறவுகள் வாழ்வில் இனி தொடர்ந்து வர வேண்டுமென இறைவனை மனது பிரார்த்தித்துக் கொள்கிறது.//

      பிரார்த்திக் கொள்கிறேன் நானும்.
      விரிவான கருத்து படித்து மனம் நெகிழ்ந்து விட்டது,நன்றி நன்றி கமலா.

      நீக்கு
  14. அழகான பதிவு கடிதங்களைப் பற்றி...
    வாழ்க வையகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெலவராஜூ, வாழ்க வளமுடன்
      கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  15. கடல் தாண்டிச் சென்றாலும்
    கண் தாண்டிச் செல்லாத
    காதலைச் சொன்னது மடல்..

    ஊர் கடந்து சென்றாலும்
    உளம் கடந்து செல்லாத
    உயிர்தனைக் காத்தது மடல்..

    மடல் கண்டு மனம் கொண்டு
    மணம் கண்ட மங்கலம் அன்று..
    எழுத்துக்குள் எழுத்தாகி
    எழு பிறப்பும் தானாகி
    இன்பங்கள் துய்த்ததுவும் அன்று...

    வியர்வைத் துளிகளால்
    நனைந்திட்ட கடிதமும்
    அயர்வைத் தீர்த்தது அன்று..

    மஞ்சள் மணத்துடன்
    மங்கலப் பெருக்குடன்
    முகத்தினில் பதிந்திட்ட
    மடல்களின் கதைகளும் உண்டு..

    தங்கைக்குச் சேலை
    தந்தன மடல்கள்..
    தம்பிக்கு சைக்கிளாய்ச்
    சென்றன மடல்கள்..

    கோடாலித் தைலம்
    மடலில் கேட்டவர் அப்பா..
    பெரியவள் மகளுக்கு ஜிமிக்கி
    அனுப்பிடச் சொன்னவள் அம்மா..

    குண்டு குண்டாய் எழுத்துக்கள்
    குத்தூசி நுனிகளாய் மடல்கள்..
    நுணுக்கி நுணுக்கிப்
    பொதியப்பட்ட புழக்கடைப்
    பூதங்களாயும் மடல்கள்..

    தங்கச்சிப் பாப்பா
    கேட்கிறான் உங்கள் மகன்..
    என்றொரு கடிதம்..
    ஒரே ஒரு கடிதம்!...

    ஓரமாய் நின்றிருந்து
    எழுத்துக்களை வாசித்த
    பரமனுக்கும் வியர்த்தது
    விடையோடு மறைந்தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்து சொந்தங்களின் எதிர்பார்ப்பை அழகாய் சொன்னது கடிதம் அன்பான கடிதம்,பாசமான கடிதம், காதலை சொன்ன கடிதம்,

      //ஊர் கடந்து சென்றாலும்
      உளம் கடந்து செல்லாத
      உயிர்தனைக் காத்தது மடல்..//

      உண்மை உண்மை.

      உங்கள் கவிதை மனதுக்கு இதம்.
      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

      நீக்கு
    2. உங்களை போல தூரதேசத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ள மாற்றம் வரபிரசாதம் . குடும்பத்தினரை பார்க்க முடிகிறது நேரே.
      முன்பு கடிதம் ஒரு இதம். இப்போது காணொளி வழியாக பார்த்து உரையாடுவது நிறைவு இல்லையா மனதுக்கு?
      இருந்தாலும் அன்பை தாங்கி வந்த மடலை மறக்க முடியாது.

      நீக்கு
  16. இப்படியான பதிவுகளைத் தருவதற்கு உங்களால் தான் ஆகும்...

    வாழ்க வையகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி
      வாழ்க வையகம் அன்புக்கு நன்றி.

      நீக்கு
  17. கடிதம் எழுதுவது ஒரு சுகம்தான் .நிறுத்தி நிதானமா மனதில் இருப்பவற்றை எழுதி பிடிக்கலைன்னா கிழிச்சிட்டு வேறே எழுதி போஸ்ட் பண்ணுவோம் .உணர்வுகளை பொறுமையாக கொண்டு சென்றன கடிதங்கள் ஆனால் பிறகு  ஈமெயில் உடனே தட்டி உடனே அனுப்பப்பட்டு அதுவும் ஓகே ஆனா எழுதும் முறையே மறந்து போச்சுன்னா அது போன் வரவால்தான் :) குரல் கேட்பது சுகமே ஆனால் எழுத்துக்களை வசைக்கும்போது அதுவும் தனி சுகமா யிருந்தது .எங்கப்பா அனுப்பின பார்சல் கவரைக்கூட பத்திரமா வைச்சிருக்கேன் நினைவுக்கு ..மாற்றம் ஒன்றே மாறாதது இதுவும் கடக்கும் போனுக்கு பதில் இப்ப வேறொன்னு வந்திருக்குன்னு வல்லிம்மா போஸ்டில் பார்த்தோம் நாமெல்லாம் அந்த மாதிரி பேசும் னால தொலைவிலில்லை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
      கடிதம் எழுதுவது சுகம் தான்.
      //உணர்வுகளை பொறுமையாக கொண்டு சென்றன கடிதங்கள்//

      ஆமாம் , உணர்வுகளை பொறுமையாக கொண்டு சென்றது உண்மை. நாம் கையால் எழுதிய கடிதங்களை வாசிக்கும் போது தனி சுகம் தான்.மாற்றங்கள் வந்து கொண்டுதான் இருக்கும், நாமும் பழகி கொண்டேதான் இருப்போம்.
      வல்லி அக்கா சொன்னது போல் வரட்டும் அதுவும் நல்லாதான் இருக்கும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  18. அன்பின் கோமதி வாழ்க நலம்.
    மிக அருமையான சிறப்பான
    அஞ்சல் பதிவு.
    ஜெய்சங்கர் பாடல் நன்றாக நினைவில் இருக்கிறது.
    நல்ல பாடல்.மனதை அறிய தபால்
    எத்தனை உதவி இருக்கிறது!!!!

    அஞ்சல் என்பதற்குத்தான் எத்தனை
    மறு பெயர்கள். மடல் எழுதப்படும் விதம்
    அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
    கோவலனுக்கு மாதவி எழுதிய மடலைக்
    கவுந்தி அடிகள் கொண்டு வந்து தருவார்
    இல்லையா.

    அதைப் பற்றி யூடியூபில் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்

      //நல்ல பாடல்.மனதை அறிய தபால்
      எத்தனை உதவி இருக்கிறது!!!!//

      ஆமாம் அக்கா.

      //கோவலனுக்கு மாதவி எழுதிய மடலைக்
      கவுந்தி அடிகள் கொண்டு வந்து தருவார்
      இல்லையா.//

      இரண்டு முறை மடல் கொடுத்து விடுவாள் மாதவி ஒரு முறை வசந்தமாலை , இன்னொரு முறை கவுசிகன் கொண்டு வந்து கொடுப்பார். இது எனக்கு 11 வது படிக்கும் போது பாடம். கவுசிகன் மாதவி கொடியிடம் மாதவி கோவலனை பிரிந்து வாடும் துன்பத்தை சொல்வான் .அதை கோவலன் கேட்டு யார் என்று விசாரித்து மாதவி அனுப்பிய மடலை பெருவான்.
      கவுந்தியடிகள், கண்ணகி யுடன் வரும் போது இது நடக்கும் அக்கா.

      நீக்கு
  19. என் பதிவையும் அழகாகச் சொல்லி விட்டீர்கள்.
    மிக மிக நன்றி,
    சிவபெருமானே மடல் எழுதி இருப்பது மிக
    ஆச்சரியமும் மகிழ்ச்சியும்.
    ருக்மிணி கண்ணனுக்கு எழுதிய கடிதம் திருமணத்தில்
    பூர்த்தியானது .
    ''ஆருயிரே மன்னவரே'' பாடலும் நினைவுக்கு வருகிறது.

    புதுக் குறளும், அன்பு துரை செல்வராஜு கவிதையும்

    மிக இனிமை.
    சார், உங்களுக்காகப் புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தது
    இன்னும் சிறப்பு.
    நீங்கள் சொல்வது போல அம்மா,அப்பா இருவரிடமும்
    இன்னும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.
    அவர்கள் நம்மைத் தவறாகவே எடுத்துக் கொள்ள
    மாட்டார்கள்.
    தன்னெஞ்சே தன்னைச் சுடும் நினைவுகள் இவை.
    என்ன செய்யலாம்:(

    உடல் நலம் குன்றாமல் சிறந்து இருக்க இறைவனை வேண்டியபடி
    உங்கள் அன்பு அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவு தான் என் பழைய பதிவுகளை படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது.
      நம் மனங்கள் ஒன்று பட்டு இருப்பதையும் சொல்லியது.

      //ருக்மிணி கண்ணனுக்கு எழுதிய கடிதம் திருமணத்தில்
      பூர்த்தியானது .//

      ஆமாம்.

      //ஆருயிரே மன்னவரே'' பாடலும் நினைவுக்கு வருகிறது.//
      நன்றாக இருக்கும் இந்த பாடலும்.
      ஓ கடிதம் பாடல்கள் நிறைய இருக்கிறது.

      சகோ துரைசெல்வராஜூ அவர்கள் கவிதை வழக்கம் போல் அருமை. நினைத்தால் கவிதைகள் படைக்கும் திறமை அவருக்கு இறைவன் கொடுத்த வரம்.

      சாரிடம் நிறைய கற்றுக் கொண்டு இருக்கலாம் நான் காலங்களை தவறவிட்டு விட்டேன். அவர்கள் எப்போதும் கல்லூரி நினைப்பில் இருப்பார்கள் சிறு வயதில் . ஓய்வு பெற்றபின்னும் கல்லூரியில் வேலை எப்போதும் ஏதாவது எழுதி கொண்டு படித்துக் கொண்டு இருப்பார்கள். பேசுவது குறைச்சல்.நான் கேட்டால் விஷய பகிர்வு இருக்கும்.

      அப்பாவும், அம்மாவும் தவறாக நினைக்க மாட்டார்கள்தான். ஆனால் நமக்கு தான் மனகஷ்டம்.
      அப்பா இருக்கும் போது நான் பள்ளி படிப்பு, வீட்டு வேலைகள் என்று பிஸியாக இருந்தேன் , அப்புறம் அம்மாவுக்கு கடிதம் எழுத முடியாமல் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு என்று கடிதம் எழுதுவதை குறைத்துக் கொண்டேன். அப்புறம் தொலைபேசி வந்தவுடன் கடிதம் எழுதுவது விட்டே போய் விட்டது.

      //உடல் நலம் குன்றாமல் சிறந்து இருக்க இறைவனை வேண்டியபடி
      உங்கள் அன்பு அக்கா.//

      உங்கள் விரிவான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.
      இன்று தடுப்பூசி போட்டு கொண்டு விட்டேன். இரவு உடம்பு வலித்தால் மாத்திரை போட சொல்லி இருக்கிறார்கள்.







      நீக்கு
  20. கடிதம் எழுதிய காலம் பொற்காலம்! சிறுவயதில் என் பாட்டி அம்மாவுக்கு கடிதம் எழுவார். கீழே சிறிய பகுதி ஒதுக்கி குழந்தைகளுக்காக என்று, எங்களிடமும் கடிதம் வாயிலாக உரையாடுவார். பரிட்சை சமயங்களில் நன்றாக சாப்பிடவேண்டும். நன்கு படியுங்கள். வெய்யிலில் அலைய வேண்டாம் என்று அன்புக் கட்டளை இடுவார். அம்மா, அப்பா சொல் கேட்டு நல்ல பிள்ளைகளாய் இருக்க வேண்டும் எனவும் எழுதியிருப்பார். என் அம்மா, அதை எங்களையே எழுத்து கூட்டிபி படிக்க சொல்வார். கடிதம் வந்தாலே நான் தான் இன்று கடிதம் படிப்பேன் என்று எங்களுக்குள் செல்ல சண்டையும் வரும். வழியில், போஸ்ட்மேனைக் கண்டால், கடிதம் ஏதும் வந்திருக்கிறதா என கேட்டு வாங்கி வருவோம்! எல்லாம் இப்பொழுது நினைத்தால் இனிமையாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வானம்பாடி, வாழ்க வளமுடன்

      //கடிதம் எழுதிய காலம் பொற்காலம்!//
      ஆமாம் அது பொற்காலம் தான், நினைவுகள் தரும் இனிமை.

      //சிறுவயதில் என் பாட்டி அம்மாவுக்கு கடிதம் எழுவார். கீழே சிறிய பகுதி ஒதுக்கி குழந்தைகளுக்காக என்று, எங்களிடமும் கடிதம் வாயிலாக உரையாடுவார்.//

      அது எவ்வளவு மகிழ்ச்சி ! பாட்டி சொல்லிய அறிவுரைகள் அன்பு கட்டளைகள் மனது மகிழ்ச்சி அளிக்கிறது. மனகண்ணில் விரிகிறது காட்சியாக கடிதம் படிக்க சகோதர சகோதரிகள் போட்டி போட்ட காலமும்.
      நினைத்தாலே இனிமை தரும் காலம்.

      உங்கள் இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.
      உங்கள் வரவுக்கும் நன்றி.

      நீக்கு
  21. தேனாய் இனித்த பதிவு. முடங்கல் என்ற ஒரு வார்த்தை தான்! பழைய பதிவு தான் என்றாலும் இவ்வளவு அழகாக நினைவு கொண்டு எழுத யார் இருக்கிறார்கள் என்ற நினைப்பு தான் கூடியது!

    தடுப்பூசி போட்டுக் கொண்டால் வேண்டுகிற நேரத்து வேண்டிய அளவு ஓய்வு எடுத்துக் கொண்டால் மருந்து நலமாக வேலை செய்கிறது என்பது என் அனுபவத்தில் அறிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
      உங்களை "முடங்கல்" கூட்டி வந்து விட்டதே!

      தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு உங்கள் குறிப்பை நினைவு கொள்கிறேன்.
      ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்.
      உங்கள் கருத்துக்கும் அன்பான வேண்டுகோளுக்கும் நன்றி.
      நீங்கள் போட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  22. கடிதங்களின் காலம் ஒரு பொற்காலம். நினைவுகளை மீட்டெடுக்கச் செய்கிறது பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      கடிதங்கள் காலம் பொற்காலம் தான்.

      நினைவுகள் தரும் மகிழ்ச்சி அதுதான் இந்த பகிர்வு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  23. கடிதம் வரும் என அதற்காக காத்திருபுபதிலும் சுகம் இருந்த காலம் அது.
    அழகாக பகிர்ந்துள்ளீர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி , வாழ்க வளமுடன்
      //கடிதம் வரும் என அதற்காக காத்திருபுபதிலும் சுகம் இருந்த காலம் அது.//

      நீங்கள் சொல்வது போல் சுகமான காத்திருப்புதான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  24. மிக அருமையான பதிவு. ஓலை, முடங்கல் இவற்றின் விளக்கத்திலிருந்து தற்போதைய வீடியோ சாட் வரை  விவரித்திருப்பது மிகவும் அருமை. என் மகளுக்கு தமிழில் கடிதம் எழுதலாம் என்று தோன்றும், ஆனால் அவளுக்கு தமிழ் மெதுவாகத்தான் படிக்க முடியும். ஆங்கிலத்தில் எழுதினால் மனசு விட்டு பேசுவது போல் இருக்காது எனவே வீடியோ சாட் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //ஆங்கிலத்தில் எழுதினால் மனசு விட்டு பேசுவது போல் இருக்காது எனவே வீடியோ சாட் தான்.//

      நீங்கள் சொல்வது சரிதான். இப்போது முகம் பார்த்து பேச வீடியோசாட் வசதி இருக்கே!
      பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி பானு.

      நீக்கு
  25. கடிதங்களுக்குக் காத்திருந்து, கிடைத்தவுடன் படித்து, பிறகு அதற்குப் பதிலெழுதி..... அந்த சுவாரசியங்களெல்லாம் இப்போது இல்லை.

    இதோ பாத்ரூமில் இருக்கிறேன், அடுத்து ஃப்ளெஷ் பண்ணணும் என்று செல்ஃபோன் வந்தபிறகு நேரடி வர்ணணையாகவும், உடனுக்குடன் பார்த்துக்கொள்வதினால், சுவாரசியம் குறைவாக இருக்கு, அதே சமயம், நெருக்கம் அதிகமாக இருக்கு. டெக்னாலஜியினால் நெருக்கம் அதிகம், ஆனால் மன ரீதியான நெருக்கம், கற்பனைகள் கனவுகள் குறைவு.


    நாளைக்கு, இணைய நண்பர்கள் யாரைச் சந்தித்தாலும், நெடுநாள் பழகியவர் போலவே பேச முடியும். ஆனால் கடித காலத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை.

    சரித்திர காலத்தில் எப்படி ராஜா, தன் ராஜ்ஜியத்தை நிர்வகித்தார் என்பதே எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். எத்தனை ஒற்றர்கள், எத்தனை நம்பிக்கைக்குரியவர்கள், எத்தனை சேவகர்கள்-கடிதப் பரிமாற்றங்களுக்குத் தேவைப்பட்டிருப்பார்கள். எத்தனைபேர் ராஜாவை ஏமாற்றியிருக்க முடியும் (இப்போன்னா, 20 வெவ்வேறு நபர்களுக்கு உடனுக்குடன் போன் போட்டு விசாரித்து, ஓரளவு எது உண்மை என்று தெரிந்துகொள்ள முடியும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //கடிதங்களுக்குக் காத்திருந்து, கிடைத்தவுடன் படித்து, பிறகு அதற்குப் பதிலெழுதி..... அந்த சுவாரசியங்களெல்லாம் இப்போது இல்லை.//

      ஆமாம் .

      //டெக்னாலஜியினால் நெருக்கம் அதிகம், ஆனால் மன ரீதியான நெருக்கம், கற்பனைகள் கனவுகள் குறைவு.//
      உண்மை.

      //நாளைக்கு, இணைய நண்பர்கள் யாரைச் சந்தித்தாலும், நெடுநாள் பழகியவர் போலவே பேச முடியும். ஆனால் கடித காலத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை.//

      உண்மைதான். நீங்கள் சொல்வது சரிதான்.

      மாற்றங்கள் தருகிறது நன்மைகளும், தீமைகளும்.
      நாம் நல்லதை எடுத்துக் கொண்டு பயன் அடைவோம்.

      குழந்தைகளை நேரில் பார்த்து பேசுவது போல் பார்ப்பதால் இப்போது பிரிவு துன்பம் குறைகிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு