பி.லிட் படிக்கும் மாணவர்களுக்கு பாடமாக இருந்த புத்தகம். எல்லா கதைகளும் நன்றாக இருந்தது.
என் கணவர் இறைவனிடம் செல்லும் 10 நாட்களுக்கு முன் ஒரு நாள் "இந்த கதை தொகுப்பு படித்து இருக்கிறாயா?" என்று சிறுகதை தொகுப்பு புத்தகத்தை கொடுத்தார்கள் என்னிடம். சிறுகதைத் தொகுப்பில் உள்ள தி. ஜானகிராமன் அவர்கள் எழுதிய "வெயில் கதையை படித்துப்பார் என்றார்கள். அன்று ஏதோ வேலையில் படிக்கவில்லை, மீண்டும் மறு நாள் அந்த கதையை படித்து விட்டாயா ? என்று நினைவு படுத்தினார்கள். அப்படி என்ன கதை இரண்டு முறை கேட்டு விட்டார்களே ! என்று முதல் வேலையாக கதையை படித்து முடித்தேன்.
படித்து முடித்ததும்" எப்படி இருந்தது கதை?" என்று கேட்டார்கள், வாழ்க்கைத்துணையை பிரிந்த கணவர் மனநிலையை சொல்லும் கதை.கதை சோகம் மனைவியை பிரிந்த கணவர் நிலைமை கஷ்டம் என்றேன்.
வாழ்க்கைத்துணை பிரிந்தால் கஷ்டம் தான் என்றும், கணவரை பிரிந்த மனைவி என்றாலும், மனைவியை பிரிந்த கணவன் என்றாலும் இருவருக்கும் கஷ்டம் தான் . நினைவுகளும் வருத்தங்களும் உண்டு என்றார்கள். அடுத்த 10 நாட்களில் எனக்கு அந்த வருத்தம் வரப்போகிறது என்று எனக்கு தெரியவில்லை அன்று.
இந்த கதையில் வருவது போல பழைய நினைவுகளை மனம் தினம் அசைபோடுகிறது. இறைவன் கூப்பிடும் வரை நினைவுகளுடன் வாழ
வேண்டும். இறைவன் பொறுப்பில் விட்டுவிட்டேன் அவர் வழி நடத்தி செல்வார்.
நீ எங்கே என் நினைவுகள் அங்கே என்ற இந்த பாடல் என் கணவருக்கு பிடித்த பாடல். எனக்கும் பிடிக்கும்
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்
------------------------------------------------------------------------------------------------------------------------
அருமையான பாடலைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஅரசு சாரின் நினைவுகள் மனதை நெகிழ்த்துகிறது. கதையைப் படித்துப் பார்க்கிறேன்.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி நெல்லைத்தமிழன்.
படிக்க முடிகிறது அல்லவா?
படிக்க முடிகிறது.
நீக்குபடிக்க முடிவது அறிந்தேன்
நீக்குநன்றி.
// மனைவியை பிரிந்த கணவர் நிலைமை கஷ்டம் //
பதிலளிநீக்குஉண்மை... அந்த வாழ்விலும் மனதில் உள்ளதை வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டார்கள்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குஆமாம் தனபாலன், மனதில் உள்ளதை வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டார்கள்தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கதை மனதைத் தொட்டது. யாரை யார் பிரிந்தாலும் கடினம் தான். ஆனாலும் இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்துடன் வாழ்க்கை தொடரத்தான் வேண்டியிருக்கிறது. நமக்காகவும், நமக்காகவே இருக்கும் மற்றவர்களுக்காகவும்.
பதிலளிநீக்குபாடலும் நல்ல பாடல்.
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குகதை மனதை நெகிழவைத்தது.
//வாழ்க்கை தொடரத்தான் வேண்டியிருக்கிறது. நமக்காகவும், நமக்காகவே இருக்கும் மற்றவர்களுக்காகவும்.//
ஆமாம் வெங்கட் , நீங்கள் சொல்வது சரிதான். கடினமான இந்த வாழ்க்கை பயணத்தை கடக்க இறைவன் அருள்புரிவார் உடன் இருப்பார் என்ற நம்பிக்கையுடன் வாழ வேண்டும்.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குதங்கள் கணவர் இந்தக் கதையை படித்து விட்டாயா என தங்களை வலியுறுத்தி படிக்கச் சொன்னது மனதுக்கு கஸ்டமாகத்தான் இருக்கிறது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை... சில சம்பவங்கள் அழியாத தடமாக மனதில் பதிந்து விடுகிறது. நானும் தாங்கள் தந்த முழுக்கதையையும் பெரிதாக்கி படித்தேன். கதை முடிவில் மனது பாரமாகத்தான் இருந்தது.
கதையிலும் சரி.. நிஜ வாழ்விலும் சரி ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வது மிகவும் சிரமமான ஒன்றுதான். ஒருவர் நினைவுகளுடன் மற்றவர் தம் வாழ்வை வாழ இறைவன்தான் அவர் வாழ்நாள் முழுக்க பக்க பலமாக இருக்க வேண்டும்.
அந்த வேர்கள் தொகுப்பு புத்தகத்தில் பட்டியலிடப்பட்ட பத்து கதைகளில் நானும் சில கதைகளை படித்துள்ளதாக எனக்கு அதன் பெயர்களை பார்க்கும் போது நினைவுக்குள் வந்தது. கடவுளும் கந்தசாமிபிள்ளையும் படித்திருக்கிறேன். என்னிடமும் உள்ள ஒரு தொகுப்பில் அந்தக் கதை உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//சில சம்பவங்கள் அழியாத தடமாக மனதில் பதிந்து விடுகிறது//
உண்மை.
தொகுப்பில் உள்ள செவ்வாழை, கடவுளும் கந்தசாமிபிள்ளையும்,குளத்தம்கரை அரசமரம் எல்லாம் முன்பே நூலகத்தில் படித்து இருக்கிறேன். மற்ற கதைகளை இப்போது படித்தேன்.
இரண்டு பேரும் சில விஷயங்களை பேசிக் கொள்வோம் செய்திகளை பார்த்தும் என் அப்பாவின் நினைவுகளிலும் இருந்த போது இந்த கதையை கொடுத்து படிக்க சொன்னார்கள்.
//ஒருவர் நினைவுகளுடன் மற்றவர் தம் வாழ்வை வாழ இறைவன்தான் அவர் வாழ்நாள் முழுக்க பக்க பலமாக இருக்க வேண்டும்.//
அது தான் நான் வேண்டுவதும் கமலா.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
நீ எங்கே ..
பதிலளிநீக்குஎன் நினைவுகள் அங்கே!...
மன்னிப்பு எனும் படத்தின் பாடல் அது...
எனக்குப்ப்பிடித்த இனிய பாடல்.. ஆனாலும் நெஞ்சை அழுத்தும்..
எல்லாவற்றுக்கும் இறைவனே துணை...
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//மன்னிப்பு எனும் படத்தின் பாடல் அது..//
ஆமாம்.
இலங்கை வானொலியில் மாலை நேரம் சோகபாடல்கள் வைக்கும் போது அடிக்கடி ஒலிக்கும் பாடல். டி.எம்.எஸ் அவர்கள் குரல் மிகவும் சோகமாய் நெஞ்சை அழுத்தும் தான்.
//எல்லாவற்றுக்கும் இறைவனேதான் துணை//
ஆமாம் , இறைவனே துணை.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அன்பு கோமதிமா,
பதிலளிநீக்குஇப்போதுதான் இந்தக் கதையைப் பார்க்கிறேன். படித்தேன்.
இந்தத் தொகுப்பு என்னிடம் இல்லை.
வேறேன்னவெல்லாமோ இருக்கிறது.
அருமையான கதை நடை.
தி ஜா கதையைச் சொல்ல நம்மால் ஆகாது.
அதை சார், உங்களுக்குப் படிக்கக் கொடுத்ததுதான்
எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
இந்தக் கணவர் களுக்கு எதையும் மறைக்கும் குணம் வந்துவிட்டால்
இப்படி ஏதாவது செய்வார்கள்.
அவர் ஏன் இந்தக் கதையை உங்களிடம் படிக்கக் கொடுத்தார்
என்று தெரியவில்லை.
எல்லாமே புதிர்தான்.
மனம் விட்டு ஏதாவது பகிர்ந்து கொள்ளத் தோன்றுவதில்லை.
பூடகமாகச் சொன்னாலும் என் போன்ற மூட மதிக்குப்
புரிந்திருக்காது.
உங்கள் வருத்தங்களை எண்ணி மனம் நொந்துபோகிறது.
நீங்களே அதற்கு மருந்தையும் சொல்லி
இருக்கிறீர்கள் ,நினைவுகள்....
நமக்கு ஆதாரம் அவைகள் தான். வாழ்க நலமுடன்
அன்பு கோமதி.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்கு//இந்தத் தொகுப்பு என்னிடம் இல்லை.//
இந்த தொகுப்பு கல்லூரிக்கு பாடமாக வந்தது.
இந்த கதைகள் பத்திரிக்கைகளில் வந்த சிறந்த கதை தொகுப்பு அக்கா.
தனி தனியாக படித்து இருப்பீர்கள்.
//அதை சார், உங்களுக்குப் படிக்கக் கொடுத்ததுதான்
எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.//
அக்கா நான் சொன்னேன் உங்களிடம் அதன் காரணத்தை,நீங்கள் மறந்து இருப்பீர்கள்.
என்னிடம் கதையை கொடுத்து படிக்க சொன்னது அதை பகிர வேண்டும் என்று சொன்னேன்.
கார்த்திகை மாதம் அம்மா, அப்பா நினைவு தினங்கள் வரும். கார்த்திகை மாதம் பலரும் மாரடைப்பால் இறப்பது பற்றி எல்லாம் பேசி கொண்டு இருந்தோம்.
அதனால் இந்த கதை நினைவுக்கு வந்து எனக்கு படிக்க கொடுத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அவர்களுக்கு தெரியாது இறைவன் தன்னை அழைத்து கொள்வார் என்று எல்லாம்.
வயதாகி விட்டதால் ஒருவரை ஒருவர் மனதை திடபடுத்தி கொள்ள சொல்லி இருக்கலாம்.
//நினைவுகள்....
நமக்கு ஆதாரம்//
ஆமாம் அக்கா, நினைவுகள் தான் ஆதாரம்.
இறைவனிடம் சரணடைவதை தவிர வேறு வழி இல்லை. அவர்தான் மனபலம்,மன ஆறுதல் தருவார்.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.
//எல்லாமே புதிர்தான்.
நீக்குமனம் விட்டு ஏதாவது பகிர்ந்து கொள்ளத் தோன்றுவதில்லை.
பூடகமாகச் சொன்னாலும் என் போன்ற மூட மதிக்குப்
புரிந்திருக்காது.//
அவர்கள் ஞானி அவர்களுக்கு ஏதாவது தெரிந்து இருக்கலாம்.
நான் அஞ்ஞானி எனக்கு புரியவில்லையோ என்னவோ!
படித்தேன் அக்கா கதை .மனம் நெகிழ்ந்தது .
பதிலளிநீக்குவணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
நீக்குமனம் நெகிழ வைக்கும் கதைதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஙே!!!!!!!!!!!!!!!!!!!!! என்னோட கருத்துரை எங்கே? காக்கா கொண்டு போச்சா? இந்தக் கதை பற்றியும் உங்களைப் பற்றியும் சொல்லி இருந்த நினைவு. தொடர் கருத்துரைகள் எல்லாம் வந்திருக்கு. ஆனால் எனக்கான பதில் இல்லையேனு இங்கே வந்து பார்த்தால் கருத்துரையே வரலை.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குஇதற்கு முன்னால் போட்டீர்களா? இப்போதுதான் பார்த்து வலையேற்றினேன்.
இரண்டு கருத்துக்கள் வந்து இருக்கிறது.
//இந்தக் கதை பற்றியும் உங்களைப் பற்றியும் சொல்லி இருந்த நினைவு.//
வரவில்லையே!
நெகிழ்ச்சியான கதை. துணையைப் பிரிந்த எவருக்கும் வலி ஒரே மாதிரியானது. ஆனால் ஆண்களால் அவ்வளவு எளிதில் மீண்டு வர முடியாது.
பதிலளிநீக்குநெகிழ்ச்சியான கதைதான்.
நீக்கு//துணையைப் பிரிந்த எவருக்கும் வலி ஒரே மாதிரியானது. ஆனால் ஆண்களால் அவ்வளவு எளிதில் மீண்டு வர முடியாது.//
ஆமாம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ரோபோ இல்லாமல் கருத்துரை போயிடுச்சேனு நேத்து நினைச்சு ஶ்ரீராம் கிட்டேக் கூடச் சொல்லி இருந்தேன். எங்கேயோ போயிருக்கு அது! :(
பதிலளிநீக்குமறுபடியும் ரோபோ தொந்திரவு வந்து இருக்கா? தெரியவில்லையே!
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
மனம் தொட்ட நிகழ்வு. காலம்தான் மருந்து. நினைவுகளே ஆறுதல்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குஆமாம் ராமலக்ஷ்மி, காலம்தான் மருந்து.
நினைவுகளே ஆறுதல்
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
எனக்கு நம்பமுடியவில்லை கோமதி அக்கா, நான் அறிஞ்சிருக்கிறேன், நமக்கு மரணம் வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே, நமக்கு தெரியுமாம், அது அப்படி நேரடியாகத் தெரியாது, ஆனால் அதற்கேற்றபடி நம் செய்கைகள் நடைமுறைகள் இருக்குமாம்.
பதிலளிநீக்குபாருங்கோ மாமாவை அறியாமலேயே அவருக்கு ஒரு உள்ளுணர்வு தோன்றியிருக்குது, அதனாலதான் கதை படிக்கச் சொல்லியிருக்கிறார், நல்லவேளை நீங்களும் அவர் கேட்டபோதே படிச்சிட்டீங்கள், இல்லை எனில் எவ்வளவு கவலையாக இருக்கும் இப்போ.
சரி விடுங்கோ கோமதி அக்கா, எதுவும் நிரந்தரமில்லை, நல்லா வாழும்போது, இப்படியே இருக்கோணும் எனும் ஆசை வருது, துன்பங்கள் வரும்போது, மனிதப்பிறவியே எதுக்கு என எண்ண வைக்கிறது.. இதுவும் கடந்து பொகும்.. பழசை நினைக்காமல் இன்றைய பொழுதை எப்படி நிம்மதியாகக் கழிக்கலாம் என நினையுங்கோ..
கதை படிக்க முடிகிறது, நல்ல தெளிவாக இருக்குது.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
நீக்குஉங்களை இந்த பதிவில் காணவில்லை என்ற உடன் உங்களை சோகப்படுத்தி விட்டேன் என்று நினைத்தேன். இதற்கு பதில் தந்தால் என்னை மேலும் வருத்தப்பட வைக்கும் அதனால் வரவில்லை என்று நினைத்தேன்.
//நமக்கு மரணம் வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே, நமக்கு தெரியுமாம், அது அப்படி நேரடியாகத் தெரியாது, ஆனால் அதற்கேற்றபடி நம் செய்கைகள் நடைமுறைகள் இருக்குமாம்.//
ஆமாம் அதிரா, நினைத்து பார்த்தால் மாமா நிறைய விஷயம் பகிர்ந்து கொண்டது, அவர்கள் முடித்த வேலைகள் எல்லாம் அப்படித்தான் இருக்கிறது.
தீபாவளிக்கு இந்த முறை கொக்கு பண்டம்(சோமாசி) உருளை போண்டா கேட்டது, இந்த முறை நவராத்திரி படி அமைக்க வேண்டும் என்று தீவிரமாக இருந்தது எல்லாம் நினைத்து பார்க்க தோன்றுகிறது.
//நல்லவேளை நீங்களும் அவர் கேட்டபோதே படிச்சிட்டீங்கள், இல்லை எனில் எவ்வளவு கவலையாக இருக்கும் இப்போ.//
ஆமாம் உண்மை.
//பழசை நினைக்காமல் இன்றைய பொழுதை எப்படி நிம்மதியாகக் கழிக்கலாம் என நினையுங்கோ..//
அப்படித்தான் பொழுதுகளை கழிக்கிறேன்.
உங்கள் ஆறுதலான கருத்துக்கு நன்றி.
அடுத்த போஸ்ட் போட்டு விட்டேன் அதிரா.
வெயியைப் பற்றி வல்லிம்மா தளத்தில் நேற்றுப் பகிர்ந்தேன். இப்போது திஜா கதை. இந்தக் கதையை இப்போதுதான் படிக்கிறேன். இந்தப் பதிவு எனக்கு அப்டேட் ஆகவில்லை போல.. அருமையான பதிவு.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் டெல்லி, சென்னை வெயிலைப் பற்றி வல்லி அக்கா தளத்தில் சொன்னதை படித்தேன்.
நேர வித்தியாசம் இருப்பதால் உங்களுக்கு காட்டவில்லை போலும்.
கதை அழகு. மனதில் நின்றுவிடும் கதை அமைப்பு. ஆச்சர்யம் என்ன என்றால் பத்து நாட்களுக்கு முன்னால் அவர் இதை வற்புறுத்திப் படிக்க வைத்தது. இதெல்லாம் என்ன, தற்செயலா, விதியா, முன்னுணர்வா.. தெரிய மாட்டேன் என்கிறது. என் அம்மா அப்பா நினைவுக்கு வருகிறார்கள்.
பதிலளிநீக்குஎனக்கும் உங்கள் அம்மா, அப்பா நினைவுக்கு வந்தார்கள் இந்த கதையை படிக்கும் போது.
நீக்குஅம்மாமேல் அப்பா மிகவும் பிரியமாக இருந்தது அவர்களின் இழப்பு அவர்களுக்கு அளித்த வேதனை எல்லாம் நீங்கள் சொல்லி கேட்டு இருக்கிறேன்.
எண்ணெய் முந்தியோ திரி முந்தியோ என்பார்கள் பெரியவர்கள். வியட்நாம் வீட்டில் வரும் பாடல் நினைவுக்கு வரும், அதில் வரும் வசனமும் நினைவுக்கு வரும்.
பிரிவின் வலி இருவருக்கும் அதிகம் என்றாலும் வயதான காலத்தில் கணவனுக்கு மனைவி துணை மிகவும் அவசியம்.ஆணை குழந்தை போல் பார்த்து கொள்ளுவாள் மனைவி தாயாகும் தருணம் அது. அது போல் தான் கணவரும் தன் மனைவியை குழந்தை போல் பார்த்து கொள்ளும் காலம் இருவரும் தங்கள் துணையின் தியாகம், மற்றும் சகிப்பு தனமையை புரிந்து கொள்ளும் காலம் .
முன் உண்ர்வு போலும் உன்னை பிரிந்தால் எனக்கும் வருத்தம் உண்டு, நீ என்னை பிரிந்தால் வருத்தம் உண்டு அதை கடக்க மனபலத்தை ஏற்படுத்திக் கொள்ள படிக்க சொன்னார்களோ தெரியவில்லை.
லிஸ்ட்டில் இருக்கும் கதைகளில் இரண்டு தெரியும் என்று நினைக்கிறேன். படித்திருக்கிறேன். முதல் கதை வ வே சு அய்யர். கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் புதுமைப்பித்தன். திஜா கதையே இன்றுதான் படித்தேன்.
பதிலளிநீக்குமுதல் கதையும் சோகம் தான் காதல் மனைவியை பிரிந்த சோககதைதான்.
நீக்குஅரசமரம் சொல்வது போல் சொல்லி இருப்பார். எல்லா கதைகளும் ந்ன்றாக இருக்கும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வணக்கம் சகோ இப்பதிவு எனது டேஷ்போர்டில் வரவில்லையே...
பதிலளிநீக்குகதையை படித்த பத்தாவது தினத்தில் தங்களுக்கும் இச்சூழல் வந்து விட்டது மனதை கனக்க வைத்த விடயமே...
எனது முழுவாழ்க்கையும் இந்நிலைதான். "வெயில்" கதையை பிறகு ஜூம் செய்து படிக்கிறேன். தி.ஜா. கதையை படிப்பவர்கள் அறிவாளியாக இருத்தல் வேண்டும் என்ற சொல்வழக்கு உண்டு. பகிர்வுக்கு நன்றி
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் டேஷ்போர்டில் வரவில்லையா ஏன் என்று தெரியவில்லையே!
//எனது முழுவாழ்க்கையும் இந்நிலைதான்//
வருத்தங்களை தாங்கி கொண்டு குழந்தைகளை வளர்த்து நல்லநிலையில் வாழ வைத்து விட்டீர்கள். , சுற்றத்தை பாதுகாத்தவர் நீங்கள்.
//தி.ஜா. கதையை படிப்பவர்கள் அறிவாளியாக இருத்தல் வேண்டும் என்ற சொல்வழக்கு உண்டு//
நீங்களும் நல்ல அறிவாளிதானே!
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ஒரு இடத்தில் ஸார் ஏதோ மார்க் செய்து 11E என்று குறித்துள்ளாரே...
பதிலளிநீக்குஅது சார் கையெழுத்து போல் தெரியவில்லை. இரண்டாம் ஆண்டு முடித்த மாணவரிடமிருந்து வாங்கி இருக்கிறார்கள். அதனால் அந்த மாணவர்கூட குறித்து வைத்து இருக்கலாம்.
நீக்குமீண்டும் வந்து கேட்டதற்கு நன்றி.