குருவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குருவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 மார்ச், 2021

பறவைகள்

வாழ்க வையகம் !  வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

மகன் வீட்டுக்கு வரும் பறவைகளை பார்ப்பது  மனதுக்கு மகிழ்ச்சி தரும். அந்த பறவைகளை  அவைகளுக்கு தெரியாமல் எடுக்க வேண்டும். கதவை சத்தம் இல்லாமல் திறக்க வேண்டும்.   சிறிதளவு சத்தம் கேட்டாலும் அத்தனையும் பறந்து விடும். இந்த பதிவில் பறவைகளை பார்க்கலாம்.

மணிப்புறா

செவ்வாய், 21 மார்ச், 2017

தேடி வந்த குருவி !

நாங்கள்   புதிதாக  போகப் போகிற வீட்டு பால்கனியிலிருந்து  எடுத்த காணொளி.



எங்கள் குடியிருப்பில் அடைக்கலக் குருவி கூடு.



செல் கோபுரங்களால் குறைந்து வருவதாய் சொல்லப்படும் ஊர்க் குருவி .
தன் குஞ்சுகளுக்கு உணவு அளிக்க வந்த குருவி
புதிதாக வந்து இருக்கும் என்னைப் பார்த்து பயந்து குரல் கொடுத்த குருவி. அதனுடன் இனி தினம் பேசி அதன் பயத்தை போக்க வேண்டும்.

நீ எனக்கு ஆனந்தம் தரப்போகிறாய் !  நாம் நட்பாய் இருப்போம்.



Image may contain: bird and plant

கீழ் உள்ள படங்கள்  அயல் நாட்டில் மகன் வீட்டில் எடுத்தது.

Image may contain: bird

சின்னஞ் சிறிய குருவி -அது
'ஜிவ் ' வென்று விண்ணிடை யூசலிட்டேகும்.
மகாகவி பாரதியார்.

Image may contain: bird, plant, flower, outdoor and nature

Image may contain: bird, plant and outdoor

சிட்டுக்குருவியைத் தேடி தேடி  மார்ச் 20 , 2014

பதிவுக்கு மகன் ஊருக்கு சென்ற போது எடுத்த படங்கள். அந்த பதிவை படிக்காதவர்கள் படிக்கலாம்.

இன்று உலகச் சிட்டுக்குருவிகள் தினம்.
சிட்டுக் குருவி சிட்டுக் குருவி எங்கே போனாய் ? நீ வாழ உனக்கு கூடு கட்ட வசதியாக வீடுகள் இல்லை. உன் பசியாற தன் குடும்பத்திற்கு சமைக்க வைத்து இருந்த அரிசியை இறைத்து நீ உண்பதை கண்டு களிக்க முண்டாசு கவிஞன் இல்லை.
பரசுராமர் தன் தந்தையின் கட்டளைக்கு அடி பணிந்து தன் அன்னையை கொன்றதால் அடைக்கலக்குருவி என்று அழைக்கப்படும் நீ திருவனந்தபுரத்தில் இல்லை என்று என் தாத்தா சொல்வார்கள்.
உனக்கு ஏன் அடைக்கலக் குருவி என்று பெயர் வந்தது  என்றால் நீ அடைக்கலமாய் மனிதர் வாழும் வீடுகளில் கூடு கட்டி வசிப்பதால் அந்த பெயர் உனக்கு. ஊர்க்குருவி என்ற பெயரும் உண்டு உனக்கு.


உலகச் சிட்டுக்குருவிகள் தினம்  மார்ச் 20, 2012 படிக்கவில்லையென்றால் படிக்கலாம் .

 இந்த என்  பழைய பதிவில் சிறு பகுதியை எடுத்து போட்ட முகநூல் பதிவு  மேலே உள்ளது.  .
Image may contain: 1 person

மதியம் ஒரு தோழி  அனுப்பிய புது செய்தி. தோழிக்கு நன்றி. 
இயற்கை ஆர்வலர் ஏ. சாதனா ராஜ்குமார் அவர்களுக்கு  வாழ்த்துக்கள்.
                      


இனி போகப் போகிற வீட்டில்  இறைவன் அருளால்   நலமாக  இருக்க வேண்டும் . வாழ்த்துங்கள் நட்புகளே!  

பதிவுகளை படித்து கருத்துக்கள் பதிவு செய்ய கொஞ்சநாட்கள் ஆகலாம். விரைவில் வருவேன்.
                                                       வாழ்க வளமுடன்.
                                                     ------------------------------------