மாலை நேரம் மழை மேகத்தால் வானம் இருண்டு இருந்த நேரம் மகன் வீட்டு தோட்டத்து சுவர் மீதும், மதிலை தாண்டி நிற்கும் மரத்தின் மீதும் இருந்த போது எடுத்த படங்கள் ஒரே நாளில் எடுத்த படங்கள்.
நான்கு பறவைகள் வந்து இருந்தது
தலையை தூக்கி கம்பீரமாக
ஆண் பறவை தவிட்டு நிறமும் ஒளிரும் கறுப்பு நிறமாக இருக்கும். பெண் பறவை சாம்பல் கலந்த தவிட்டு நிறமாக இருக்கும். பூச்சிகள், உலர்நிலத்தாவரப் பூக்களின் மகரந்தத்தை உண்ணும். மரப் பொந்திலும் , காய்ந்த புற்களிலும் கூடுகளை கட்டுமாம். இந்த பறவை சத்தம் கொடுக்கும் போது இதன் வாலானது மேலும் கீழும் ஏறி இறங்குகிறது. நடக்கும் போது கழுத்தை உயர்த்தி கம்பீரமாக நடக்கிறது.
இந்த ஊரில் உள்ள கருஞ்சிட்டுக்கள் இது.
முத்துச்சரம் வலைத்தளத்தில் நம் ராமலக்ஷ்மி அங்குள்ள கருஞ்சிட்டுக்கள் ஆண், பெண் படங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த பறவையை பற்றிய நிறைய விவரங்கள் சொல்லி இருக்கிறார்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
--------------------------------------------------------------------------------------------------------------------------
சிட்டுக்கள் படம் அழகு. நிறைய பறவைகள் வரும்படி செடி கொடிலாம் இருக்கா?
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//நிறைய பறவைகள் வரும்படி செடி கொடிலாம் இருக்கா?//
ஆமாம், செடி, கொடிகள் வீட்டில் இருக்கிறது. மதிலுக்கு அந்த பக்கம் மரங்கள் இருக்கிறது. மகன் வீட்டு மதிலை ஒட்டிய இரண்டு மரத்தில் ஒன்று துளிர்க்க ஆரம்பித்து விட்டது அதில் சிட்டுக்குருவிகள் தினம் அமர்ந்து கொள்ளும் .
நீங்கள் உடனே வந்து கருத்துக்கு சொல்லி விட்டீர்கள்.
நன்றி.
கருஞ்சிட்டுக்கள் அழகா இருக்காங்க .விதவிதமா கோணத்தில் போஸ் கொடுக்கிறாங்க .இங்கே பிளாக் பேர்ட்ஸ் இருக்கு அவை மைனா குயில் கலந்த கருப்பு நிறம் க்ரூப்பா வருவாங்க .இறைவன் படைப்பில் இயற்கையும் பறவைகளும் அழகு . ரசியுங்கள் அக்கா .
பதிலளிநீக்குவணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
நீக்குஆமாம் ஏஞ்சல், வித விதமாக போஸ் கொடுத்தார்கள். ஒரு 10 நிமிடம் வீட்டை சுற்றி சுற்றி பறந்தன. கூட்டமாய் தான் வருவார்களாம்.
//இறைவன் படைப்பில் இயற்கையும் பறவைகளும் அழகு . ரசியுங்கள் அக்கா .//
ஆமாம் ஏஞ்சல் , இயற்கையும், பறவைகளும் தான் என் மனதுக்கு அமைதியை மகிழ்ச்சியை தருகிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.
படங்கள் அழகு. தெளிவாக இருக்கின்றன. பார்த்துக் கொண்டே வரும்போதே முத்துச்சரம் தளத்தில் இவைகள் பற்றி இருந்தனவோ என்று நினைத்தேன். நீங்களே சொல்லி விட்டீர்கள்! புற்களில் கூடு கட்டுமா? எனில் யார் காலிலாவது மிதி படாதோ?
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குராமலக்ஷ்மி போட்டு இருந்த கருஞ்சிட்டு போலவும் வருமாம் நல்ல கருப்பாய் பள பளவென்று. வன பகுதியில் காய்ந்த புற்களில் கட்டுமாம் கூடு அங்கு யார் போக போகிறார்கள். ராமலக்ஷ்மி பதிவில் இந்த பறவைகளுக்கு எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் தந்திரமும் தெரிகிறதே!
என்ன பார்வை இது என்று தலைப்புள்ள படத்தில் ஆந்தை போல இருக்கிறது!!!! தூரப்பார்வை இருப்பவர்கள் போல கண்களை வைத்துக் கொண்டு பார்க்கிறது!
பதிலளிநீக்குபடம் எடுக்க கொஞ்சம் அருகில் போனேன் அப்போது அந்த முறை முறைத்தது.
நீக்குஆந்தை வல்லூரு பார்வை.கழுத்தை சுருக்கிப் பார்க்கும் போது அதன் கழுத்து ஆந்தையின் கழுத்து போல் இருக்கிறது, கண்ணும் அப்போது ஆந்தை போல இருக்கிறது.
படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.
கருஞ்சிட்டுகளின் படங்கள் அழகாக இருக்கின்றன. பாராட்டுகள்.
பதிலளிநீக்குபறவைகள் மூலம் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும்... தொடரட்டும் பறவை கவனிப்பும், படங்களும்.
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குபறவைகள் மூலம் நிறைய கற்று கொள்ளலாம் தான்.
உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.
படங்கள் அழகு...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
நல்ல தெளிவான படங்கள். இந்த வகையில் சாம்பல் நிறத்துப் பறவைகள் இங்கே இருக்கின்றனவோ? தெரியலை. தலையை உயர்த்தி அழகாய்ப் போஸ் கொடுத்து இருக்கிறது. நீங்கள் படம் எடுக்கும்வரை காத்திருந்து போஸ் கொடுத்தாற்போல் இருக்கு! அரிசோனாவில் தோட்டங்களும் போடுவதாக என் நண்பர் அரிசோனன் சொல்லுவார். முருங்கைக்காயும், எலுமிச்சையும் அபரிமிதமாய்க் காய்க்கும் என்பார்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குமகன் வீட்டிலும் எலுமிச்சை, முருங்கை, மாதுளம், சாத்துக்குடி,நார்த்தை, அரளிகள் எல்லாம் உண்டு. காய்கறி செடிகள்தான் போட முடியவில்லை முயல் நாசம் செய்து விடுகிறது. அது வரமுடியாதபடி ஏதாவது செய்து விட்டு போட வேண்டும்.
சில நேரம் வந்தால் உடனே பறந்து விடும் இந்த பறவை. அன்று என்னவோ அங்கும் இங்கும் பறந்தும் அமர்ந்தும் இருந்தது அதனால் எடுக்க முடிந்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஆவ்வ்வ் கோமதி அக்காவுக்கு மட்டும் எவ்ளோ அழகாகப் போஸ்ட் கொடுக்கின்றன இவை எல்லாம், எனக்கு படமெடுக்க முந்தி ஓடி விடுகின்றன கர்:)) டெய்சி இருப்பதாலொ தெரியேல்லை.
பதிலளிநீக்குசிட்டுக்களை விட அழகில கொஞ்சம் குறைவு ஆனா உருவத்தில கொஞ்சம் பெரிசாக இருக்கிறார்கள்.
அங்கெல்லாம் மதில்கள் கல்லால கட்டியிருக்கினமோ கோமதி அக்கா, இங்கு மதில் எல்லாம் கட்டுவதில்லை, சீமந்துத் தூண்கள் போட்டுப் பலகை வேலிதான் எங்குமே.. இப்போ பலகை போன்ற பிளாஸ்ரிக் வருகிறது, அதை அப்படியே நிலத்தில் வைத்துக் கிளிப் போடுவது போல போட்டு விட்டால், காலம் காலமாக நின்றுபிடிக்கும்.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
நீக்குஇன்னொரு பறவையும் நேற்று எடுத்தேன் அது இன்னொரு போஸ்டில்.
டெய்சிக்கு பயப்பட்டு ஓடி விடிகிறதா! இருக்கும்.
சிட்டுக்குருவி போல் அழகில்லைதான். உருவத்திலும் பெரிதுதான்.
மதில்கள் கல்லில் கட்டி இருக்கிறார்கள்.
//சீமந்துத் தூண்கள் போட்டுப் பலகை வேலிதான் எங்குமே.. இப்போ பலகை போன்ற பிளாஸ்ரிக் வருகிறது, அதை அப்படியே நிலத்தில் வைத்துக் கிளிப் போடுவது போல போட்டு விட்டால், காலம் காலமாக நின்றுபிடிக்கும்.//
பார்த்து இருக்கிறேன், என் மாமா பெண், என் தங்கை பெண் அங்கு இருக்கிறாள் அவர்கள் அனுப்பும் படத்தில் அப்புறம் நீங்கள் போட்ட விவசாயபதிவில் பார்த்து இருக்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி அதிரா.
எத்தனை விதமான கோணங்களில் படமெடுக்க உங்களுக்கு நேரம் கொடுத்தது மனது லயித்து படம் எடுத்துள்ளீர்கள் நன்றாக இருக்கிறது அன்புடன்
பதிலளிநீக்குவணக்கம் காமாட்சி அம்மா, வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் சொல்வது போல் என்னை படமெடுக்க அனுமதித்து இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
அன்பு கோமதிமா,
பதிலளிநீக்குபறவைப் படங்கள் அலாதி அழகுடன் இருக்கின்றன.
மனதை லேசாக்குவதற்கு இயற்கையும் பறவைகளும்
நல்ல உதவி செய்யும்.
இங்கே வசந்தம் ஆரம்பித்து விட்டதற்குப் பறவைகளின் ஒலிகளே
சாட்சி.
அதுவும் பக்கத்து வீட்டுப் புதரில்
கூடுகட்டியிருக்கும் சிவப்பு கார்டினல் அத்தனை அழகு.!!!!!
இத்தனை நாட்கள் அங்கேயேவா இருந்தன.?
எனக்குத் தீராத யோசனை.:)
உங்கள் குருவிகளை நீங்கள் படம் எடுக்க அவை உங்களை ஆராய்கின்றன
போலும்.
எத்தனை உணர்ச்சி அதன் பார்வையில்.
முறைப்பதைப் போல இருக்கிறது.
அருமையான படங்கள்.
மிகச் சுத்தமாக வந்திருக்கின்றன.
இவைகளைக் கண்டு கிடைக்கும் அமைதியை வாங்கிக் கொள்ள
வேண்டியதுதான்.
இயற்கை வாழ இறைவன் துணை.
மிக மிக நன்றி அன்பு கோமதி.
வாழ்க வளமுடன்.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்கு//மனதை லேசாக்குவதற்கு இயற்கையும் பறவைகளும்
நல்ல உதவி செய்யும்.//
ஆமாம் அக்கா.
//இங்கே வசந்தம் ஆரம்பித்து விட்டதற்குப் பறவைகளின் ஒலிகளே
சாட்சி.//
ஆமாம், எங்கும் பறவைகளின் ஒலி மனதை மகிழ்ச்சி படுத்துகிறது.
இவள் என்ன செய்கிறாள் நம்மை என்று பார்த்தது போலும்!
//இவைகளைக் கண்டு கிடைக்கும் அமைதியை வாங்கிக் கொள்ள
வேண்டியதுதான்.
இயற்கை வாழ இறைவன் துணை.//
பாரதியார் பாடல் நினைவுக்கு வருகிறது எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா இறைவா என்று இயற்கையை ரசித்தால் மன அமைதி ஏற்படுவது உண்மைதான்.
நீங்கள் சொல்வது போல இயற்கை வளத்தை இறைவன் தான் இப்போது காக்க வேண்டும்.
28ம் தேதி உலகத்தினர் அனைவரையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்ய அழைக்கிறார்கள் எங்கள் மன்றத்தில்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அக்கா.
படங்கள் அழகு
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. கருஞ்சிட்டுக்கள் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. எல்லாப் படங்களையும் அதன் அருகில் சென்று அது பறந்து விடாது இருக்கும் போது அழகாக பொறுமையுடன் எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். அனைத்தும் என்னவொரு அழகாக இருக்கின்றன.
"என்னப் பார்வை உந்தன் பார்வை" படம் நன்றாக விழி திறந்து முறைக்கிறதே... ஆந்தையின் கண்கள் போலவே உள்ளது. அதைப்பற்றிய எல்லா தகவல்களையும் மிக சுவைபட தந்துள்ளீர்கள். இயற்கையை படைத்த இறைவன் இந்தப்பறவைகளையும் இப்படி அழகாக படைத்திருப்பதும் நாம் கண்டு ரசிக்கத்தானே..! பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன். வாழ்க வளமுடன்
நீக்குஇந்த பற்வைகள் நமக்கு பொறுமையை கற்றுக் கொடுப்பது உண்மை.
ஜூம் செய்து எடுக்க போகும் போது பறந்துவிடும்.நான் எடுக்க போகும் போது வேறு இடத்தில் அமர்ந்து என்னை பார்க்கும்.
//என்னப் பார்வை உந்தன் பார்வை" படம் நன்றாக விழி திறந்து முறைக்கிறதே... ஆந்தையின் கண்கள் போலவே உள்ளது//
ஆமாம் , அப்படித்தான் தோற்றம் தருகிறது.
//இயற்கையை படைத்த இறைவன் இந்தப்பறவைகளையும் இப்படி அழகாக படைத்திருப்பதும் நாம் கண்டு ரசிக்கத்தானே..!//
ஆமாம் கமலா, ரசித்து கவலைகளை மறக்க மனதுக்கு புத்துணர்ச்சி கொடுத்துக் கொள்ள உதவுகிறது.
உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.
அருமை. மிக அருகில் போய் எடுத்திருக்கிறீர்கள். பாருங்கள், பெண் கருஞ்சிட்டுப் பறவைகள் அதிகமாய் அலட்டிக் கொள்வதில்லை:). அங்குள்ள பறவைகள் அளவில் சற்று பெரிதாகத் தெரிகிறது. எனது பதிவையும் குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குதோட்டத்து வாசலிலிருந்து ஜூம் செய்து எடுத்தேன். மிக அருகில் போக முடியாது போய் விடும். சில பறவைகள் கதவை திறக்கும் சத்தம் கேட்டாலே சிட்டாக பறந்து விடும். இவைகள் அலட்டிக் கொள்ளாமல் நின்றது நல்லதுதான் படங்கள் எடுக்க முடிந்ததே!
நீங்கள் போட்ட கருஞ்சிட்டுகளை விட இது கொஞ்சம் பெரிதுதான்.
நீங்கள் அழகாய் எடுத்து இருக்கிறீர்கள் எல்லோரும் பார்த்து இருப்பார்கள் இருந்தாலும் நீங்களும் கருஞ்சிட்டை போட்டதை சொல்லவேண்டும் இல்லையா?
உங்கள் கருத்துக்கு நன்றி.
கருஞ்சிட்டுகளின் அழகான படங்களுடன் இனிய பதிவு...
பதிலளிநீக்குவாழ்க வையகம்...
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
படங்களை எடுத்த விதம் பேரழகு. பறவைகள் இன்றி மனிதஇனம் வாழமுடியாது இது மனிதர்களுக்கு புரிவதில்லை.
பதிலளிநீக்குவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//படங்களை எடுத்த விதம் பேரழகு//
நன்றி.
//பறவைகள் இன்றி மனிதஇனம் வாழமுடியாது//
நீங்கள் சொல்வது சரிதான் ஜி.
உங்கள் கருத்துக்கு நன்றி.