வெள்ளி, 12 மார்ச், 2021

அன்பும் , நேசமும் தரும் தாவரங்கள்.

மகன் வீட்டில் பூத்த செம்பருத்தி பூ

பூமித்தாய் நமக்காகச் செய்யும் பிரார்த்தனைகளே மலர்கள் !

//நேசிக்கிற குணம் மனித இனத்தோடு  நின்றுவிடவில்லை . மற்ற உயிரினங்களிலும் அது காணப்படவே செய்கிறது. மரங்களை , மரங்களில் பூத்த மலர்களைப் பாருங்கள். காலை சூரியனை பார்த்து சிரிக்கும் செடிகளும் கொடிகளும் மாலையில் மலை முகட்டில் சூரியன் மறைகின்றபோது மெளனமாகி விடுகின்றன.

ஒரு கணம் உட்கார்ந்து இயற்கையோடு தொடர்பு கொள்ளுங்கள். மண்ணுக்குள்ளிருந்து, மரங்களின் அடியாழவேர்களிலிருந்து, உயரத்தில் வெகுவாய் நீண்ட அவற்றின் கிளைகள் வரை மேலெழுவதாய் உணர்வீர்கள்.

தீவிர அன்பு மற்றும் பேராவல் பற்றிய வேட்கையாய், மகிழ்ச்சியையும் ஒளியையும் தருகிற ஏதோ ஒன்றின் மீதான விருப்பமாய் அது இருக்கிறது.
மறைந்துவிட்ட அந்த ஒளியை மீண்டும் பெறுவோம். என்கிற ஆவல். அப்படியொரு ஆழ்ந்த விருப்பம் இருப்பதை மரங்களின் அசைவுகளில் உணர்வீர்கள். விவரிக்க முடியாத அந்த ஒளியை, அமைதியை, அன்பைப் பெறுவதற்காக உங்களுடைய உயிரும் பிரார்த்திக்ககூடும்.//

--ஸ்ரீ அரவிந்தர் அன்னையின் மந்திர மலர்கள்


அழகிய மொட்டுக்கள்


மனம் சார்ந்த  இணைப்புக்கு  பூக்களின் நேசம் உதவும்.

செம்பரத்தை உயர்ந்த  மனதின் அன்பை வெகு அழகாய் வெளிக்காட்டுவது. அன்போடு வாழ்கவென்று  நம்மை அழைப்பது.

தெய்வத்தின் பேரருளோடு ஒன்றிவிடுகிறவர், அதனை எங்கெங்கும்  காண்கின்றவர் எல்லையற்ற மகிழ்ச்சியோடு வாழ்வார்.



பூவின் வடிவில் செடி தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இது ஒரு வார்த்தையற்ற பிரார்த்தனை , கடவுளை நோக்கிய உற்சாகத் துடிப்பு

மனித மனதில் ஈர்ப்பை ஏற்படுத்தவே இயற்கை  பூக்களுக்கு அழகை தந்திருக்க வேண்டும்
செம்பருத்தி பூவில் பிள்ளையார் மகன் வீட்டு கொலுவில் இடம்பெறும்
மகன் வீட்டில் இருக்கும் சாத்துக்குடி மரத்தின் பூ . மொட்டு மல்லிகை மொட்டு போல் இருக்கிறது வாசமும் அது போலவே இருக்கிறது.
தேன் குடிக்க எறும்புகள்

போன முறை  சாத்துக்குடி பழங்கள் இரண்டு மூன்று இருந்தது பறிக்கலாம் என்று நினைத்து இருந்த போது மரகொத்தி தன் நீண்ட அலகால்  துளையிட்டு ஜூஸ் முழுவதும் குடித்து விட்டது.  ஒன்று மட்டும் கிடைத்தது. முன்பு சாத்துக்குடி படம் போட்ட பதிவு போட்டு இருந்தேன்.

வெள்ளை நித்திய கல்யாணி பூ.  மகன் வீட்டில்  முன்பு பல வண்ணத்தில் நித்தியகல்யாணி பூ இருந்தது,  இப்போது வெள்ளை மட்டும் இருக்கிறது.
முன்னேற்றம் என்பது மங்களகரமான விஷயம் , கல்யாணி மங்களகரமானது, களிப்பூட்டுவது.
காகிதப்பூ  இந்த கொடியில் தான் மணிப்புறா  கூடு கட்டும்

காகிதப்பூ  சுற்றுப்புறங்களின் மாசுகளிலிருந்து  குறிப்பாக காற்றில் இருந்து தங்கள் வசிப்பிடத்தை காத்துக் கொள்ள உதவுகிறது.

காகிதப்பூ பாதுகாப்பை குறிப்பது . தெய்வத்திடம் நம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ளும் போது  பாதுகாப்பு கிடைத்து விடும். தெய்வத்திடம் சரண் அடைந்தால் உணர்வு சார்ந்தபாதுகாப்பைப் பெறுவோம்.

 அரளிப் பூ (அலரி)
மெளனமும் , அமைதியும் நோய்க்கு  மருந்து.  நம்  உயிரணுக்களுக்கு நம்மால் அமைதியைக் கொண்டுவர முடிந்தால் நாம் குணம் பெறுவோம்.


இனிய நினைவுகளை தெய்வீக அழகின் பால் லயிக்கச் செய்யும் . மகிழ்ச்சியை, அமைதியை அளிக்கும். முரண்பாடுகளில் இருந்தும், சண்டைச் சசசரவுகளில் இருந்தும் காக்கும். அமைதியாக இருப்போம் மாற்றம் தன்னால் வரும்.

படங்களுக்கு கொடுத்த வார்த்தைகள் அரவிந்த அன்னையின் மந்திர மலர்களிலிருந்து எடுத்து எழுதியது.

 இனி வரும்  படங்கள்  நடைபயிற்சியின் போது பார்த்த மலர்கள்
திருநீற்றுப்பச்சை  பூ போல 

ஒவ்வொரு மலருக்கும் ஒரு நிறம் உணடு, மணம் உணடு. 
பூ எப்போதும் உற்சாகமாகவும் , மகிழ்ச்சியாகவும் இருப்பது அதன் இனிமைகள் நம்மை தொற்றிக் கொள்ளும்.

குளிர் குறைந்து வருவதால் பூக்கள் பூக்க ஆரம்பித்து இருக்கிறது. அவைகளை  நடக்கும் போது பார்த்து கொண்டு வருவது மனதுக்கு இதம் தருகிறது.

குட்டி குட்டி நட்சத்திரம் போல்

கற்களுக்கு இடையில் வளர்ந்த புல்லில் அழகிய பூ

சின்ன சூரிய காந்தி பூ போல

வித்தியாசமான மஞ்சள் மலர்

மொட்டு வெள்ளை மலர்ந்தால் சிவப்பு
கொடி போன்ற டிசம்பர் பூ
சிறு சிறு வண்டுகளும் தேனிகளும் அதிகமாய் உள்ளது இந்த  பூவில்  தூரத்திலிருந்து எடுத்தேன் அலைபேசியில்
பலவித கலரில் 

ஒரே செடியில் பலவண்ண மலர்கள்



சிவப்பு பழம்
திராட்சை கொத்து போல  தொங்கும்  கத்திரிப்பு கலர் பூ
வண்ணத்து பூச்சி போல் இதழ்கள்
அந்த செடியில் உள்ள  மொட்டு
வேப்பிலை போல்  இலை உள்ள செடியில்  அழகான மலர்கள்


எங்கள் ஊர் பக்கம் தை பொங்கலுக்கு  அடுப்பு செய்வார்கள்  "கட்டி அடுப்பு" என்று பெயர் அதில் செம்மண் பூசி சுண்ணாம்பு பட்டை போடுவார்கள்.

அது போல்  ஒரு வீட்டு வாசலில் தானிய  கட்டி பறவைகளுக்கு உணவு.

கீழே கொத்தி சாப்பிட்டு இருக்கிறது பாருங்கள் பறவைகள்
மரத்தில் தொங்க விட்டு இருப்பதும் பறவைகளுக்கு உணவு வைப்பதுதற்குதான்.  


வீட்டின் முன்பக்கம், பின்பக்கம் தோட்டத்தில் போட கற்கள் விற்பனைக்கு தங்களிடம் வாங்கச்சொல்லி  கற்களின் மாதிரிக்கு கொஞ்சம் கவரில் போட்டு அவர்கள் முகவரி, போன் நம்பருடன்  ஒவ்வொரு வீட்டின் முன்பும் போட்டு செல்கிறார்கள்.

இதை வாங்கி போட்டால் காற்றில் மண் பறக்காது என்றும்,(மணல் புயல் வந்தாலும் மண் பறக்காது) புற்கள் முளைக்காது என்றும்  சொல்கிறார்கள். மரத்தூள்களும் போடுகிறார்கள்.  பனியிலிருந்து செடி மரங்களின் வேர்களை காப்பாற்றவும் அழகுக்கும் போடுகிறார்கள்.
இந்த குடியிருப்பை பராமரிப்பவர்கள் வேறு மாதிரி கற்களை போட்டு இருக்கிறார்கள் நடை பாதையின் இரு புறமும்.

வீட்டின் முன்புறம்  போட்டும் இருக்கும் கற்கள் வேறு  வண்ணத்தில் சின்னதாக இருக்கிறது.

வானை நோக்கி வளர்கிறது மரம் . அது ஒளியின் மீது இயற்கை கொண்ட நாட்டத்தின் அழகான குறியீடு.

நாமும் இறைவனின் கருணை ஒளிக்காக  நாட்டம் கொள்வோம்.

மலர்மிசை ஏகினான் மாணடி  சேர்ந்தார் 
நிலமிசை நீடுவாழ்வார்.

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் இறைவனின் திருவடிகளை 
நினைத்து வாழ்வோம்.


                                                   வாழ்க வளமுடன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------

49 கருத்துகள்:

  1. அழகான மலர்கள் மனதுக்கு இதமான உணர்வையும், மகிழ்ச்சியையும் தரும்.

    மிகவும் ரசனையோடு படம் எடுத்து இருக்கிறீர்கள். அற்புதமான தகவல்களையும் சொன்ன விதம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      அதிகாலையில் எழுந்து விட்டீர்கள் !

      நீங்கள் சொல்வது சரிதான் அழகான மலர்கள் மனதுக்கு இதம், மகிழ்ச்சி தருகிறது.

      படங்களும், பதிவில் சொன்ன தகவல்களும் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
      நன்றி ஜி.

      நீக்கு
    2. ஜி, சிவன் ராத்திரிக்கு குலதெய்வம் கோயிலில் இருப்பீர்கள் அல்லவா?

      நீக்கு
    3. இல்லை எங்களுக்கு பங்குனி உத்திரமே முக்கியம்.

      இதற்கும் போகலாம்தான் நான் போகவில்லை...

      நீக்கு
    4. எங்களுக்கும் பங்குனி உத்திரம் தான்.
      அப்போது தான் குலதெய்வம் கும்பிட போவோம்.
      நிறைய பேர் மஹா சிவராத்திரிக்கு போகிறார்கள், அதுதான் கேட்டேன்.
      மீண்டும் வந்து பதில் சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  2. அம்மாடி எத்தனை படங்கள்...   எத்தனை வகை மலர்கள்..   எலலாமே அழகு.  அரவிந்த அன்னையின்  மலர்ப்பாதத்தில் வைக்கையில் எழுதப்பட்ட மந்திர வரிகள்...   அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      படங்கள் அதிகமாகி விட்டது. படங்களை குறைத்து போட மனம் வரவில்லை.
      ஸ்ரீ அரவிந்த அன்னையின் மந்திர மலர்கள் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

      நீக்கு
  3. மரங்கொத்திப் பறவை சாப்பிட்ட சாத்துக்குடி ஜூஸ்..   ரசனையான நிகழ்வு.  புத்திசாலிப்பறவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரங்கொத்திப் பறவை புத்திசாலி பறவைதான்.
      சிறு துளைப் போட்டு அழகாய் குடித்து விடுவது வியப்பை தருகிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. அழகான மலர்கள் - மனதுக்கு இதம் தரும் வாசங்கள்!

    அனைத்தையும் ரசித்தேன் மா.

    இயற்கை அன்னையின் கொடை அல்லவா இந்த மலர்களும் மரங்களும்! அவற்றைப் போற்றி பாதுகாப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //இயற்கை அன்னையின் கொடை அல்லவா இந்த மலர்களும் மரங்களும்! அவற்றைப் போற்றி பாதுகாப்போம்.//

      ஆமாம் வெங்கட், இயற்கை அன்னையின் கொடைதான் இந்த மலர்களும் மரங்களும்.

      பதிவில் அனைத்தும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  5. அழகழகான மலர்களுடன் பதிவு அருமை...

    மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம் - என்ற வாசகங்கள் அந்தகாலத்துத் துணிப் பைகளில் அச்சிடப் பட்டிருக்கும்...

    வாழ்க நலமெலாம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம் - என்ற வாசகங்கள் அந்தகாலத்துத் துணிப் பைகளில் அச்சிடப் பட்டிருக்கும்...//

      ஆமாம், எத்தனை கஷ்டங்கள் வந்த போதும் அதை வெளி காட்டாமல் மலர்ந்த முகத்துடன் வளைய வந்தவர்கள் கற்றுக் கொடுத்த பாடம்.

      காவடி சிந்து பாடலில் "குறுநகை ஒன்றே போதும்" என்பார் அருணாசல கவிராயர்.
      மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம் என்பது உண்மை.
      மலர்ந்த முகங்களை கண்டாலே மனதில் மகிழ்ச்சிதான்.

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. அழகிய மலர்களின் படங்கள்

    தானியக் கட்டி - இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    கற்கள் - நிச்சயம் தோட்டத்திற்குத் தேவைதான். விலை ரொம்பவும் அதிகமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      தானியக் கட்டி நானும் இங்கு வந்தபின் தான் பார்த்தேண், அறிந்தேன்.
      கற்களின் ரகத்திற்கு ஏற்றமாதிரி விலை என்றான்.
      புற்கள் சீக்கிரம் வளர்ந்து விடும் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். வெளிபக்கம் வளர்ந்து விட்டால் சுத்தம் செய்ய சொல்லி உத்தரவு வந்து விடும் அதனால் கற்கள் அவசியம் ஆகிறது.

      நீக்கு
  7. சாத்துக்குடியிலிருந்து ஜூஸ் சாப்பிட்டுவிடுகிறதா?

    எங்கள் வீட்டில் சாத்துக்குடி மரம் இருந்தது. நூற்றுக்கணக்காக காய்க்கும். ஆனால் சட் என்று பட்டுப்போய்விட்டது. அதற்கு நீர் அதிகம் தங்கினதுதான் காரணமா என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சாத்துக்குடியிலிருந்து ஜூஸ் சாப்பிட்டுவிடுகிறதா?//

      ஆமாம்.

      மகன் வீட்டில் பெரிய மரம் மாதிரி வளர்ந்து இருந்தது நிறைய காய்த்ததாம். எலுமிச்சை இருக்கிறது, முருங்கை, மாதுளை இருக்கிறது. எல்லாம் வெட்டி விட்டார்கள்.
      இப்போது மீண்டும் துளிர்க்க ஆரம்பித்து இருக்கிறது.
      அரியலூர் மாவட்டத்தில் ஒரு விவசாயி சாத்துக்குடி பயிர் செய்து இருப்பதாகவும் சாத்துக்குடிக்கு தண்ணீர் நிறைய தேவை படாது என்றும் சொன்னார்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. அன்பு கோமதி மா,
    வாழ்க வளமுடன். என் அம்மா சொன்னதால் அரவிந்த அன்னையின் புத்தகம் வாங்கினேன்.
    எத்தனை மலர்கள் எத்தனை அர்த்தங்களை அவர் சொல்லி இருக்கிறார்! படங்களின் அருமையை எண்ணி மகிழ்கிறது.
    மலர்கள் நமக்குக் காணக் கொடுக்கும் இறைவனுக்கு நன்றி. இன்று இத்தனை மலர்களையும் காணவைத்த. உங்கள் பதிவுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      என் தங்கை எங்கள் மணிவிழாவிற்கு மலர்களின் பயன்கள் புத்தகம் எல்லோருக்கும் எங்கள் சார்பாக கொடுத்தாள். அவள் அன்னையின் பக்தை.

      இந்த புத்தகத்தை வாங்கி எனக்கு பரிசளித்தாள்.
      தினம் காலை இந்த புத்தகத்தில் ஒரு பக்கம் படித்து விடுவேன்.
      அன்னை மலர்களின் ஆன்மீக மகத்துவத்தையும், மலர்களின் பயன்களை சொல்வதும் மனதுக்கு பிடித்து இருந்தது, அதனால் இந்த மலர்கள் தொகுப்பில் பகிர்ந்து விட்டேன்.

      நம்பிக்கையோடு மலர்களை தூவி வழிபட்டவர்கள் நிறைய தன் அனுபவங்களை சொல்லி இருக்கிறார்கள்.

      அழகான இயற்கையை ஆராதிக்க கண் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.



      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    அழகான பதிவு எவ்வளவு மலர்கள். ஒவ்வொரு கலரிலும், விதவிதமான மலர்களை காணும் போது மனதுக்கு மகிழ்வாக உள்ளது.

    ஸ்ரீ அரவிந்தர் அன்னையின் மந்திர மலர்கள் வாசகங்கள் நன்றாக உள்ளன. வாசிக்கும் போது மனதுக்கு அமைதி கிடைக்கிறது

    சாத்துக்குடி மலர்களை இப்போதுதான் பார்க்கிறேன். மல்லிகை மொட்டு போலவே உள்ளதே? அதன் வாசமும் அப்படியே என்றதில் வியப்பாக உள்ளது. அதனால்தான் சாத்துக்குடி பழத்தின் தோல் உரிக்கும் போது மணமாக உள்ளது போலும்... இந்த தடவை பழங்கள் பறவைகளுக்கும் போக தங்களுக்கு கிடைக்குமா?

    தாங்கள் நடைப்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட மலர்களும், மொட்டுகளும் கண்கொள்ளா காட்சி. ஒவ்வொன்றும் மிக அழகாக உள்ளது. அந்த வித்தியாசமான பச்சையும். மஞ்சளும் கலந்த கலர், சிகப்பு கலர், கத்திரிப்பூ கலர் என அனைத்தும் இறைவனின் படைப்பில் எத்தனை விந்தைகள் என எண்ண வைக்கின்றன.

    கற்களுக்கிடையில் பூக்கள் நானும் பூத்திருக்கிறேன் என எட்டிப்பார்த்து மகிழ்விக்கிறது.

    கற்கள் நடுவில் பாதைகளும் அழகாக உள்ளன.

    /வானை நோக்கி வளர்கிறது மரம் . அது ஒளியின் மீது இயற்கை கொண்ட நாட்டத்தின் அழகான குறியீடு.

    நாமும் இறைவனின் கருணை ஒளிக்காக நாட்டம் கொள்வோம்./

    உண்மையான வாசகங்கள். மிகவும் ரசித்தேன் சகோதரி.

    அழகழகான மலர்களின் படங்களுடன் பதிவு அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //அழகான பதிவு எவ்வளவு மலர்கள். ஒவ்வொரு கலரிலும், விதவிதமான மலர்களை காணும் போது மனதுக்கு மகிழ்வாக உள்ளது.//
      நான் வந்த போது எல்லாம் காய்ந்து கிடந்தது (பனியில் வாடி) இப்போது வெயில் அடிக்க ஆரம்பித்து இருப்பதால் மரங்கள், செடிகள் துளிர்த்து பூக்கள் பூக்க ஆரம்பித்து இருக்கிறது. மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது பார்க்கும் போது.

      //ஸ்ரீ அரவிந்தர் அன்னையின் மந்திர மலர்கள் வாசகங்கள் நன்றாக உள்ளன. வாசிக்கும் போது மனதுக்கு அமைதி கிடைக்கிறது//

      ஆமாம் கமலா, அதுதான் அதை இங்கு எடுத்து வந்து இருக்கிறேன், படிக்கும் போது மனது ஆறுதலும் அமைதியும் அடைகிறது.

      //சாத்துக்குடி மலர்களை இப்போதுதான் பார்க்கிறேன். மல்லிகை மொட்டு போலவே உள்ளதே?//

      ஆமாம், அதுதான் பகிர்ந்து கொண்டேன்.


      // இந்த தடவை பழங்கள் பறவைகளுக்கும் போக தங்களுக்கு கிடைக்குமா?//

      மரகொத்தி பறவைகள் நிறைய இருக்கிறது சாத்துக்குடி மரத்தின் பக்கத்தில் உள்ள மதில் சுவரில்தான் எப்போதும் அமர்ந்து இருக்கும் பார்க்கலாம் இந்த முறை எப்படி என்று.

      //இறைவனின் படைப்பில் எத்தனை விந்தைகள் என எண்ண வைக்கின்றன.//

      நாள்தோறும் வியக்க வைக்கும் . சிறு புற்களில் கூட அழகான பூக்கள் இருக்கிறது.

      //கற்களுக்கிடையில் பூக்கள் நானும் பூத்திருக்கிறேன் என எட்டிப்பார்த்து மகிழ்விக்கிறது.//

      அன்னை சொல்வது போல் பாறைகளுக்கு இடையில் இருக்கும் சிறிய புல் கூட சூரியஒளி நாடி மேல் எழும்பி வருகிறது.நாமும் இறைவனின் கருணை ஒளிக்கு நாட்டம் கொள்ள வேண்டும் என்கிறது.

      பதிவில் ஒவ்வொன்றையும் ரசித்து விரிவாக அழகாய் கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.







      நீக்கு
  10. உண்மைதான் அன்பு கோமதி மா. நம் வாழ்ககையின் வழிகாட்டிகள் என்று. எங்கள் குரு சொல்லுவார். இணையத்தில் நம் பதிவுலகத்தில் தான் எத்தனை நல்ல உள்ளங்கள். நமக்கு ஆதரவு கொடுக்கக் காத்திருக்கிறார்கள்! எல்லோருமே செம்பருத்திகளே.எல்லாருமே மலர்களே..அத்தனை செடிகளும் மரங்களும். வளரந்து நலம் பெறட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினம் தினம் யாராவது நமக்கு கற்றுக் கொடுக்கிறார்கள் அக்கா.
      நம் வழிகாட்டிகள் நிறைய இருக்கிறார்கள்.
      நல்ல குரு அமைந்து விட்டால் வாழ்க்கை எந்த கஷ்டம் வந்தாலும் தாங்கும் மனபலம் மற்றும் நல்ல வழி காட்டி அழைத்து செல்வார்.

      //நம் பதிவுலகத்தில் தான் எத்தனை நல்ல உள்ளங்கள். நமக்கு ஆதரவு கொடுக்கக் காத்திருக்கிறார்கள்! எல்லோருமே செம்பருத்திகளே.எல்லாருமே மலர்களே//

      ஆமாம் அக்கா, நீங்கள் சொல்வது சரிதான் அந்த அன்புக்கு அன்புதான் நம் கைமாறு.

      இயற்கை அனைத்தும் வளர்ந்து நலபெறட்டும் வாழ்த்துவோம்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. நித்ய கல்யாணி மலர்களின் அழகும், செம்பருத்தியின் வண்ணமும்
      சொல்லி ,முடியாது. இவ்வளவு படங்களை
      இத்தனை கச்சிதமாக எடுத்திருக்கிறீர்களே கோமதி மா.!!!!
      ஒவ்வொரு மலரும் மனதைத் திறந்து சிரிக்கும் குழந்தைகள் போலத் தெரிகிறது
      அம்மா.
      மிக மிக உயர்ந்த பதிவு!

      நீக்கு
    3. //ஒவ்வொரு மலரும் மனதைத் திறந்து சிரிக்கும் குழந்தைகள் போலத் தெரிகிறது//
      ஆமாம் அக்கா, நீங்கள் சொல்வது போல் மலர்கள் நம்மைப் பார்த்து சிரிப்பது போலத்தான் தெரிகிறது.
      அது காற்றில் ஆடும் போது நம் பேச்சுக்கு தலை அசைப்பது போல் இருக்கும்.
      நம் கவலைகளை மறக்க பறவைகள், பூக்கள் என்று ரசித்து கொண்டு இருக்கிறேன்.
      அவை காய்ந்து சருகு ஆனாலும் அந்த செடிகளுக்கு உரமாகிறது .
      அன்னை உலர்ந்த பின் உரமாக்கலாம். புதிய பூக்கள் உற்பத்திக்கு உதவும்.
      மண் நம்மிடம் எதை கொடுத்ததோ அதை திருப்பி கொடுக்க வேண்டும். இல்லையேல் மண் ஏழ்மையுற்றுவிடும் என்கிறார்.

      நம் தோட்டத்தில் செடிக்குப்பை ஒன்றும் இருக்க கூடாது என்று கூட்டி தள்ளி விடுகிறார்கள் ஒரு சிலர். இலை தளை குப்பைகள் தான் அதற்கு உரம்.
      உங்கள் கருத்துக்கும் , பாராட்டுக்கும் நன்றி அக்கா.

      நீக்கு
  11. இயற்கையின் அற்புதங்கள்... என்னே அழகு...!

    விளக்கங்கள் சிறப்பு... அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //இயற்கையின் அற்புதங்கள்... என்னே அழகு...!//

      ஆமாம், தனபாலன் இயற்கையின் அற்புதங்களை அதன் அழகை ரசித்து கொண்டே இருக்கலாம்.

      படங்களை, விளக்கங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. ஒரு கணம் உட்கார்ந்து இயற்கையோடு தொடர்பு கொள்ளுங்கள்//
    ஆமாம்க்கா நான் இயற்கையோடு மட்டுமே அதிக காண்டாக்ட்ஸ் :) மலர்களை தாவரங்களை மிக அழகா  ரசிச்சி எழுதியிருக்கீங்க .வீட்டில் பூத்த செம்பருத்தி அழகு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்

      //ஆமாம்க்கா நான் இயற்கையோடு மட்டுமே அதிக காண்டாக்ட்ஸ் ://

      அது நல்லது ஏஞ்சல், மகிழ்ச்சியை உற்சாகத்தை தருகிறது இயற்கை.
      செம்பருத்தி தினம் பூக்கும் போது எடுத்த படங்கள்.

      நீக்கு
  14. சாத்துக்குடி இங்கே கிடைப்பதேயில்லை .முன்பு ஜமைக்கான் கடைகளில் மொசாம்பி பழம்னு விற்பாங்க .ஒரு வருஷமா பிரெஷ் மார்க்கெட் போகலை .எனக்கும்  வளர்க்க ஆசை ஆனா குளிருக்கு தாங்காது .அமெரிக்காவில் நீங்கள் இருக்கும் பகுதியில் நல்ல பளீர் சுளீர்னு வெயில் அடிக்குது .மரங்கொத்தி பாவம் சாப்பிடட்டும் :) நமக்காச்சும் பணம் இருக்கு கடையில் வாங்கலாம் .எல்லா மலர்களும் அழகு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொசாம்பி பழம் பச்சையாகவே இருக்கும் இல்லையா?
      டெல்லியில் அதுதான் கிடைக்கும்.
      குளிருக்கு சாத்துக்குடி தாங்காதுதான். ஆமாம் இங்கு வெயில் நன்றாக இருக்கும் என்றான். பாலைவனம் தானே!
      மரங்கொத்தி சாப்பிடட்டும் நாம் வாங்கி கொள்ளலாம்.
      இன்னும் கொஞ்ச நாளில் வசந்தம் வருகிறது நிறைய மஞ்சள் பூக்கள், கள்ளிகள் எல்லாம் கலர் கலாராக பூக்குமாம்.
      சிறிய புல்லில் கூட துளியாக அழகான பூ இருக்கு ஏஞ்சல்.

      நீக்கு
  15. தானியக்கட்டி எவ்ளோ பெரிசு !!!! இங்கே சின்ன அளவில்தான் வாங்கி கட்டி தொங்க விடுவோம் அதையே அணிலன்  தூக்கிட்டு ஓடிடுவான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏஞ்சல், நானும் இங்கு தான் தானியகட்டி பெரிதாக பார்த்தேன்.
      கீழே சிதறமால், அவைகள் சாப்பிட முடிகிறது. தினம் நடக்கும் போது பார்ப்பேன் எவ்வளவு குறைந்து இருக்கு என்று. மகன் முன்பு இருந்த ஊரில் பற்வைகளுக்கு தானியங்கள் மூட்டையில் வாங்குவான். பறவைகளுக்கு வைக்கும் தானியங்களை காலி செய்வது அணில்தான். அங்கு பெரியதாக அணில் இருக்கும் நிமிஷமாய் காலி செய்து விடும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  16. அழகான மலர்கள். வண்ணமயமான மலர்கள். சாத்துக்குடி பூத்து மணம் வீசுவதை நாங்க அம்பத்தூரில் இருந்தப்போப் பார்த்திருக்கேன்.உணர்ந்திருக்கேன். அதே போல் பாக்குப் பூக்களும். பாளை விடத்தொடங்கியதுமே காலை வேளையில் இனிய நறுமணம் தோட்டம் முழுவதும் வியாபித்து இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //சாத்துக்குடி பூத்து மணம் வீசுவதை நாங்க அம்பத்தூரில் இருந்தப்போப் பார்த்திருக்கேன்.உணர்ந்திருக்கேன். அதே போல் பாக்குப் பூக்களும். பாளை விடத்தொடங்கியதுமே காலை வேளையில் இனிய நறுமணம் தோட்டம் முழுவதும் வியாபித்து இருக்கும்.//
      பாக்கு பூக்களின் நறுமணத்தை கர்நாடகா கோவில்களில் உணர்ந்து இருக்கிறேன். அங்கு பாக்கு பூ பாளைகளை சுவாமிக்கு சாற்றி இருப்பார்கள். கடைகளிலும் விற்பார்கள்.

      நீக்கு
  17. தானியக் கட்டியைப் பார்த்தது இல்லை. நாங்க தானியங்களை patio வில் போட்டுக் கொண்டிருந்தோம். இங்கே ஒரு பக்கம் தனியாக இடம் ஒதுக்கிப்போட்டு வருகிறோம். ஆனால் கதவைத் திறந்தால் எல்லாப் பறவைகளும் ஓடி விடும். கதவைத் திறந்து வைத்தால் அதிகம் வருவது இல்லை. ஆகவே திறக்க யோசனையா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறவைகளுக்கு தானியம் கொடுப்பது மகிழ்ச்சி.
      கதவை திறந்து வைத்தால், குரங்குகள் வேறு வந்து விடும் என்பீர்களே!



      நீக்கு
  18. மாடப்புறாக்கள் இங்கே இப்போது அதிகமாய் வருகின்றன. உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன். ஜோடிப்புறாக்களாக வந்து உட்கார்ந்திருக்கும் சிறிது நேரம். பின்னர் பறந்து விடும். நித்யகல்யாணிப் பூக்கள் மருத்துவத்திற்கு ஏற்றது. சித்த/ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்துவார்கள், நித்ய கல்யாணி என்னும் பெயரிலேயே ஒரு மாத்திரையும் கொடுப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாடப்புறாக்கள் வருவது மகிழ்ச்சி. என் நினைப்பு வந்தது மகிழ்ச்சி.
      முன்பு நீங்கள் நித்திய கல்யாணி பயன்களை சொன்னதை பகிர்ந்து இருக்கிறேன் என் வீட்டு தோட்டத்தில் பகிர்வில். முகநூலில் போட்டு இருந்த போதும் சொன்னீர்கள்.
      திருநெல்வேலி பக்கம் நித்தியகல்யாணி தோட்டம் பார்த்து இருக்கிறேன் சிறு வயதில் அப்போது அதிலிருந்து மருந்து செய்ய வளர்க்கிறார்கள் என்று சொன்னார்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  19. //பூமித்தாய் நமக்காகச் செய்யும் பிரார்த்தனைகளே மலர்கள் !//
    மிக அழகான வரி!! அழகிய மலர்களின் வாசம் போலவே உங்கள் எழுத்தும் மணம் வீசுகிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
      அழகான் வரி அரவிந்த அன்னையின் மந்திர மலர்களிலிருந்து எடுத்து எழுதியது.
      உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      நீக்கு
  20. இப்பொழுதுதான் இங்கு வந்தேன், பார்த்தேன் மகிழ்கிறேன் கோமதி அக்கா. பூக்கள், பறவைகள் எதுவுமே மனதுக்குப் புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தருபவைதானே.

    சாத்துக்குடிப்பூ, இப்போதான் பார்க்கிறேன்.

    அது பட்டிப்பூப்போல இருக்கு, ஆனா மல்லிகை என்றிட்டீங்கள், கொடியாக இருப்பதால் மல்லிகை தான்போலும்.

    காகிதப் பூக்கள் மரத்திலதானே பூறாப்பிள்ளை கூடு கட்டிக் குஞ்சு பொரிப்பா...

    அங்கு பூக்கள் வரத் தொடங்கி விட்டன. எங்களுக்கு இப்போதான் குருத்து வருகிறது.. இனித்தான் பூக்கள் வரும்.. இம்முறை கொஞ்சம் லேட்டாகிறது இங்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      //பூக்கள், பறவைகள் எதுவுமே மனதுக்குப் புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தருபவைதானே.//

      ஆமாம், அதிரா.
      உங்களுக்கு பட்டிப்பூப்போல இருக்க?
      பூவின் மொட்டும் வாசமும் மல்லிகை போல் இருக்கிறது அதிரா.

      //காகிதப் பூக்கள் மரத்திலதானே பூறாப்பிள்ளை கூடு கட்டிக் குஞ்சு பொரிப்பா..//

      ஆமாம் அதிரா, நானும் சொல்லி இருக்கிறேன், நீங்களும் நினைவில் வைத்து இருக்கிறீர்கள்.

      ஆமாம், இங்கு பூக்கள் பூக்க ஆரம்பித்து விட்டன.

      குளிர் அதிகமாய் அங்கு இருந்த காரணத்தால் பூக்க தாமதம் ஆகிறது போல!
      உங்கள் கருத்துக்கு நன்றி அதிரா.



      நீக்கு
  21. அழகிய மலர்களின் அணிவகுப்பு அருமை. அவற்றோடு தந்திருக்கும் சில தகவல்கள் முன் அறியாதவை. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      படங்களையும், கருத்துக்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  22. 'மலர்ககளே....மலர்களே ... 'வண்ணங்களே. மனதை கொள்ளை கொண்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      மலர்களே மலர்களே பாடல் பாடி விட்டீர்கள்.
      வண்ணங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு