வியாழன், 15 டிசம்பர், 2016

மார்கழி நினைவுகள்

நாளை  மார்கழி , மனம் குளிர் மார்கழி.
மனமும், உடலும் குளிரும் ,  மார்கழி என்றாலே.
அதிகாலை  இறைவழிபாடு  கோவில்களில் .
வீடுகளில் பூஜைகள் சிறப்பாக நடைபெறும். 
மார்கழி மாதம் முழுவதும் இறைவன் நினைவாக இருப்பதே இந்த மாதத்தின் தனிச்சிறப்பு.



 மார்கழியின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
நான் மார்கழி மாதம் எழுதிய பதிவுகளை  மீண்டும் படித்துப்பார்த்தேன். எவ்வளவு பேர் அந்த பதிவுகளைப் படித்து இருக்கிறார்கள் என்று  பார்த்தேன்.  படித்தவர்கள் எண்ணிக்கையைப் பார்க்கும் போது மனதுக்கு சந்தோஷமாய் இருந்தது. 

பாவை நோன்பு   படித்தவர்கள் எண்ணிக்கை 515

//தமிழ் மொழியில் பாவைப் பிரபந்தங்கள் ஐந்துள்ளன. அவை :-
1. மணிவாசகர் அருளிய திருவெம்பாவை,
2. ஆண்டாள் அருளிய திருப்பாவை.
3.சமணமுனிவர் அருளிய பாவை
4.தத்துவராய சுவாமிகள் அருளிய பாவை இரண்டு.

சமண முனிவர் அருளிய பாவை முழுநூல் கிடைக்கவில்லை. அதில் உள்ள பாட்டொன்று யாப்பருங்கல விருத்தி உரையில் இருக்கிறது. அந்தப்பாடல்:-

“கோழியுங் கூவின குக்கி லழைத்தன
தாழியுணீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வைத் தறிவனடி யேத்திக்
கூழை நனைக் குடைந்து குளிர்புனல்
ஊழியுண் மன்னுவோ மென்றேலோ ரெம்பாவாய்”//

மார்கழிக் கோலங்கள் படித்தவர்கள் எண்ணிக்கை 16846

//எல்லா நாளும் கோலம் போடுவோம். ஆனால் மார்கழி என்றால் தனிச் சிறப்பு. .


தஞ்சாவூர் தலையாட்டி   பொம்மைக்  கோலம்
நான் வரைந்த கண்ணன் கோலம்

கண்ணபிரான், ’மாதங்களில் நான் மார்கழி’ என்று அந்த மாதத்தின் சிறப்பைச் சொல்லி விட்டார். தேவர்களுக்கு இந்த மாதம் அதிகாலை நேரம்.
இறைவனைத் தொழுவதற்காகச் சிறந்த மாதமாக இதைக் கூறுகிறார்கள்.

வாழ்நாளை வீணாக்காமல் எங்கும் நீக்கமற நிறைந்த இறைவனை வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனிமேல் வருவதும் நெருப்பில் இட்ட தூசு போல அழிந்து விடும், ஆகையால் அவன் புகழை எப்போதும் பேசுவோம் என்கிறாள் ஆண்டாள், திருப்பாவையில்.


Image result for மாணிக்கவாசகர்Image result for ஆண்டாள்
நன்றி - கூகுள்

மாணிக்க வாசகர் திருவெம்பாவையில் முதல் எட்டுப் பாடலில் எட்டு வகை சக்திகள் தோழியாக இருந்து பராசக்தியை வணங்குவதைக் கூறுகிறார். உலகச் செயல்களைத் தொடங்குவதற்குப் பராசக்தி உள்ளிட்ட ஒன்பது சக்திகள் உறக்கம் நீங்கி நீராடிப் புகழ்பாடிய நிலையை மனதில் எண்ணி மகளிரும் வைகறையில் எழுந்து நீராடிப் பாடிய காட்சியைத் திருவெம்பாவையில் கூறுகிறார்.//


மாணிக்கவாசகர்  தன்னை நாயகியாகவும், இறைவனை நாயகராகவும் பாடி இருக்கிறார்.

பழைய கோலங்கள் படித்தவர்கள் எண்ணிக்கை 6031

//மார்கழி மாதம் வந்து விட்டால் கறுப்புப் பெட்டி திறக்கப்படும். அது என்ன கறுப்பு பெட்டி?   அதற்குள் என்ன இருக்கிறது?  என்று நினைக்கிறீர்களா? அந்தக் கறுப்பு சூட்கேஸ் நிறைய என் கோல  சேகரிப்புகள் இடம் பெற்று இருக்கிறது.

பொக்கிஷத்தைப்  பாதுகாப்பதுபோல் பெட்டியில் பாதுகாத்து வருகிறேன், நான் சின்ன வயதில்  கோலங்கள் போட்ட நோட்டுகளை.  தொட்டாலே கிழிவது போல் உள்ளது.   வார, மாத இதழ்களில் . வந்த கோலங்கள், தினமலர் பேப்பரில் வந்த கோலங்கள்  சேகரித்து வைத்து இருக்கிறேன்.

என் கோலநோட்டில் அம்மா வரைந்த சில கோலங்கள், என் மாமியார் வரைந்து தந்த சில கோலங்கள், என் கணவர் வரைந்த கோலங்கள்  என்று இருக்கிறது.  இப்போது  இணையத்தில் கோலங்களைப் பார்த்து,  பிடித்த கோலத்தைப் போடுகிறேன்.//

மார்கழி மாத நிகழ்வுகள்  படித்தவர்கள்  922
மார்கழி என்றால் இசைப்பிரியர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும்.  இசையால் பாடகர்கள் வேள்வி செய்வார்கள். மனித வாழ்வில் இசை நிறைய அற்புதங்களைச் செய்கிறது.

இசை, வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் மனிதனின் உடலில் , மனதில் காணும் வலிகளை நீக்குவதற்கும், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் அளிப்பதற்கும் உதவியாக இருக்கும்.

மார்கழி சிறப்புகள்  படித்தவர்கள் எண்ணிக்கை 1061

//மார்கழி வந்து விட்டது. திருப்பாவையும், திருவெம்பாவையும் பாடி இறைவனை பூமாலையுடன், பாமாலையும் சேர்த்து சாற்றி வேண்டினால் வாழ்வில் எல்லா நலங்களும் பெறலாம். மனங்குளிர் மார்கழி என்று சொல்வது போல் உடம்பும் மனமும் குளிரக் குளிர,குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பார்கள். குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர் போய் விடும் ஆனால் வெந்நீரில் குளித்தால் குளிர் தெரியும். என் அம்மா குளிர்ந்த நீரில்தான் குளிப்பார்கள். எங்களுக்கு எல்லாம் வெந்நீர் போட்டுக் கொடுப்பார்கள். குளித்து, கோலம் போட்டு, காலை கோவிலுக்குப் போய் இறைவனைக் கும்பிட்டு அங்கு தரும் வெண்பொங்கல் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டு அப்பாவுக்குக் கொஞ்சம் எடுத்து வருவேன்.அடியார்கள் பஜனை பாடிக்கொண்டு தெருவில் வருவார்கள். வீடுகள் தோறும் விளக்கேற்றி அவர்களை வரவேற்பார்கள். பாடத் தெரியாதவர்களையும் பாட வைக்கும் பஜனைப் பாடல்.இப்படி இளமைக் கால மார்கழி மாதம் அருமையானது. இப்போதும் காலையில் அருகில் இருக்கும் கோவிலுக்குப் போகிறேன். அம்மாவுடன் சிறு வயதில் போன மாதிரி இல்லை. //



மார்கழி மாதம் பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு எண்ணெய் எடுத்துப் போய் விளக்கு போட்டு விட்டு  வந்து பாட்டு கேட்பது வழக்கம். எத்தனை பாடல்கள் சேகரிப்பு! இப்போது தொலைக்காட்சியில் எல்லாப் பாடல்களும் கேட்பதால் கேசட்டுகள் டப்பாவில் அடைபட்டு இருக்கிறது. பிள்ளையார் சதுர்த்தி அன்று பிள்ளையார் பாடல்கள் போட்டுக் கேட்டேன்.


                            எனது கேசட் கையேடு (பாட்டு விவரங்கள்)

மார்கழி வந்து விட்டால்  முன்பு வானொலியில்  திருப்பாவை, திருவெம்பாவைப்பாடல்கள், பாடல்களுக்கு விளக்கவுரைகள் கேட்பேன், அலைவரிசையை மாற்றி மாற்றி திருச்சி, சென்னை,  என்று கேட்பேன், பின் பண்பலையில் காரைக்கால் வானொலியில் கேட்பேன். 
திருப்பாவை, திருவெம்பாவை கேஸட் பாடல்களை டேப்ரிக்காடரில் ஒலிக்கவிட்டு விட்டு வேலைகளைப் பார்ப்பேன்.  இப்போதும் காலை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.

மார்கழிக்குப் புதுப் பதிவு ஒன்றும் எழுதவில்லை  பழைய பதிவுகளைப் படிக்க லிங்க் கொடுத்து இருக்கிறேன்.

மார்கழிப் பதிவுகளைப் படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

                                                            வாழ்க வளமுடன்.
*********************************************************************************

27 கருத்துகள்:

  1. //தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக் கோலம்//

    தாங்கள் சொன்னபிறகுதான் மீண்டும் உற்று நோக்கி மகிழ்ந்து போனேன். :)

    மிகவும் அழகான நான்கு தலையாட்டி பொம்மைகள் அல்லவா உள்ளன. சூப்பர் !

    மார்கழி மாதம் பற்றிய பதிவும் தகவல்களும் மனதைக் குளிர்விக்கின்றன. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. மார்கழி மாதத்தின் சிறப்பைப் போலவே
    தங்கள் பதிவும் மனதுக்கு அத்தனை
    குளிர்ச்சியைத் தந்தது
    மிகவும் இரசித்து எழுதி இருந்ததால்
    இரசித்தும் படிக்க முடிந்தது
    நீளம் ஒரு பொருட்டாய் இல்லை
    மனம் குளிர்வித்த பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. மார்கழிமாதநினைவுகள் அருமை.

    பதிலளிநீக்கு
  4. பதிவுகளை நினைவுகூர்ந்து பகிர்ந்துகொண்டது மகிழ்வினைத் தருகிறது. தங்களின் ரசனை பதிவை மேம்படுத்தியுள்ளது. தங்களின் எழுத்துப்பணி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    தலையாட்டி பொம்மை கோலத்தை ரசித்தமைக்கு நன்றி.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  6. மார்கழியோடையே திருப்பாவையும் திருவெம்பாவையும் வந்தாச்சு!..

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
    ரசித்து படித்தமைக்கு நன்றி.
    நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
    பதிவுகள் ஒன்றும் எழுதவில்லையா?

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் முனைவர் . ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வ்ளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    மார்கழி என்றாலே திருப்பாவை, திருவெம்பாவைதானே!
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அழகான கோலங்கள். முந்தைய பகிர்வுகளின் தொகுப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  13. மார்கழியைப் போலவே மார்கழிப் பதிவுகளும் அழகுதான்..

    சிலுசிலு எனும் இளங்காலைப் பொழுதில் மனம் இறை நினைப்பில் ஆழ்ந்திருப்பதே சுகம்!..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. இன்றைக்குப் பொதிகையில் பாரதியார் நினைவு நாளாகக் கொண்டாடினார்கள் நேரலையில் தியாகையர் பஞ்ச ரத்ன கிருதி போல் பாரதியின் ஐந்து பாடல்கள் இசைக்கலைஞர்களாலும் குழந்தைகளாலும் பாடப்பட்டது. என்னதான் மார்கழி மாதம் புனிதமாகக் கருதப்பட்டாலும் வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் செய்வதில்லையே

    பதிலளிநீக்கு
  18. மார்கழி என்றால் நினைவுக்கு வருவது குளிர்! அப்புறம் பொங்கல்! அப்புறம் கோலங்கள். அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் வாழ்க வளமுடன்.
    மார்கழி மாதம் இறைவனுக்கு என்று மட்டும் வைத்து இருக்கிறார்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  20. அழகழகான கோலங்கள்.....

    மார்கழியின் நினைவுகள் எனக்குள்ளும்.....

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    இங்கு குளிரும் இல்லை, கோவிலில் வெண்பொங்கல் கிடைக்கவில்லை, சர்க்கரை பொங்கல் தான் கிடைக்கிறது. கோலம் முன்பு போட்டதை நினைத்துக் கொள்ள வேண்டும். பெரிய வாசல் இல்லை. பழைய காலங்களை அசைபோட வேண்டியதுதான்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன் .
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. எல்லாமும் அருமை. மதுரையில் வெண்பொங்கல் கிடக்கலைனு எழுதி இருப்பதைப் பார்த்ததும் பழைய நினைவுகள் வந்தன. முன்னெல்லாம் வடக்கு மாசி வீதிக் கிருஷ்ணன் கோயிலில் மார்கழி மாதங்களில் காலை கோஷ்டிக்குப் போனால் ஒவ்வொரு நாளும் சுடச் சுடக் கிடைக்கும் பிரசாதங்கள். வாயில் போட்டாலே கரையும் வெண் பொங்கல், மணமான தயிர்சாதம் என்று ஒவ்வொன்றாக நினைவில் வருகிறது.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    வெண்பொங்கல் கிடைக்கவில்லை என்று இங்கு எழுதியவுடன் இன்று சுடச் சுட வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் கிடைத்து விட்டது.
    உங்கள் மலரும் நினைவுகள் பகிர்வும் அருமை.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. மார்கழி என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது என் கிராமத்தில் என் சிறுவ்யது நினைவுகள்தான். எங்கள் ஊர் கோயிலில் நானும் என் பாட்டியும் தினமுமே காலை 4.30 மணிக்குச் சென்று கொடிமரத்தின் கீழும், வாசலிலும் பெருக்கிக் கழுவி கோலம் இடுவதுண்டு. கல்யாணம் ஆகி வரும்வரை இது நிகழ்ந்தது, பாட்டி இறந்த பிறகு கூட...

    எனவே மார்கழிக் கோலங்கள், வீதியில் பஜனை, தினமும் பிரசாதமாகப் பொங்கல் என்று பல....நினைவுகளை மீட்டெடுட்தது...மிக்க நன்றி கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு