திங்கள், 31 ஜூலை, 2017

காட்சிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் !

ஊமத்தம்பூ- மொட்டும் மலரும்

ரேடியோ பூ என்றும் சொல்லுவோம். கிராமபோன் ஸ்பீக்கர் போல் இருப்பதால் இந்த பேர்.


வேம்பும், அரசமரமும் -நாகர்கள் மரத்தடியில் -மரத்தின் உள் பகுதியை உற்றுப் பார்த்தால் ஐந்து தலை நாகம் கண், மூக்குடன் இருப்பது போல் இருக்கிறது. தெரிகிறதா என்று பாருங்கள்.
காய்ந்த மொட்டை மரத்தைத் தழுவிப் படர்ந்து  மொட்டை மரத்திற்குப் பசுமையைக் கொடுத்து மயில்களை வரவேற்று இருக்கிறது பசுமைக் கொடி.

புல் புல் பறவை   மாடிப்படிக்கு அடியில் கேபிள் ஒயர்களை சேர்த்துக் கூடு கட்டி குஞ்சு பொரித்து, குஞ்சுக்கு உணவு அளிக்கிறது. காத்திருந்து  காத்திருந்து பதிவில்.
மாயவரம் வீடு.

 இங்கு  (மதுரையில்) கேபிள் ஒயர் உள்ள சுவற்றின் பொந்துக்குள் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி இருக்கும் படத்தைப் போட்டபோது எல்லோரும் பயந்தார்கள்.  இறைவன்  பறவைகள் கூடு கட்டும் போது   பயமில்லா வரத்தை அளித்து இருப்பார் போலும்.


கோவையில் அத்தை வீட்டில்  மொட்டைமாடியில் வேண்டாம் என்று தூக்கிப் போட்ட கட்டைக்கு அடியில் தூங்கு முஞ்சிமர இலைகள் விழுந்து கிடக்கும் குப்பையில்  குடைபிடித்து இருக்கும் காளான்கள்

நான் வித்தியாசமானவன் என்று தனித்திருக்கும் காளான்!
கற்றாழைப்பூ-
பூ மேல் நோக்கிப் பூக்காமல் கீழ் நோக்கிப் பூத்து இருக்கிறது  


கீரைக் கடைசல், வத்தக் குழம்பு  செய்த கல்சட்டி,
அரைக்கீரை, வத்தக்குழம்பை  இந்த சட்டியில் சுண்ட வைத்த சுண்டக் கறி அத்தனை ருசியாக இருக்கும். இப்போது கீழாநெல்லி முளைத்து கேட்பாரற்றுக் கிடக்கிறது மொட்டைமாடியில்.
ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டவை , இன்று மூலையில்!


  எங்கள் தோட்டத்தில் நந்தியாவட்டைச் செடியின்
 தண்டில் பச்சோந்தி .
நிறம் மாறுவதினால் இதனை அப்படித்தானே சொல்வார்கள்.


மாயவரம் வீட்டில் தொட்டிகளில்   நிறைய பூச்செடிகள் வைத்து இருந்தேன்,  அரளிச் செடி முதன்முதலில் பூத்த போது

மேய்ச்சல் நிலம் கண்ணுக்கு எட்டிய தூரம் இல்லை வெகு தூரம் போகணும் அண்ணே !  அதுதான் ஆட்டோ சவாரி!

"நம்ம ஊர் போல வருமா? "பாடலில்  இந்தக் குளியலைப் பற்றி வரி வருது சொல்லுங்களேன்

இது எதற்கு என்று தெரியும் தானே?

பழமையான கோயிலில்  கோபுரத்தில் இருந்த கதை சொல்லும் சிற்பங்கள் இந்தக் கதை தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். குழந்தை யார் என்று?  எங்கள் பிளாக் புதிர் போல இருக்கா?

                                                               வாழ்க வளமுடன்!

51 கருத்துகள்:

  1. ரேடியோ பூ மிகப்பொருத்தம்
    அனைத்து பூக்களையும்' வார்த்தைகளையும் இரசித்தேன்.
    த.ம.பிறகு

    பதிலளிநீக்கு
  2. படமும், அதுக்கேத்த வர்ணனையும் சூப்பர்.

    கோவில்ல இருக்கும் சிற்பத்துக்கு என்ன அர்த்தம்ன்னு தெரியலியே

    பதிலளிநீக்கு
  3. படங்களும் அதற்கான விளக்கங்களும் தெளிவாக, பாராட்டும்படி இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
    ராஜி புராணவரலாறு அழகாய் சொல்வீர்களே!
    நன்றாக பாருங்கள் தெரியும் கதை.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோ தமிழ் இளங்கோ , வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. படங்களும் அவற்றிற்கான கருத்துக்களும் அற்புதம். அனுபவ பூர்வமாக வெளிப்பட்டிருக்கின்றன. கருத்துக்களை படங்களோடு சேர்த்துச் சொல்லும் பொழுது அதன் மகிமையே அலாதி தான் என்பதை உணர்வதற்கு இந்தப் பதிவு ஓர் எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. பள்ளிக் கூட கரும்பலகையில் ஊமத்தம் பூவை அரைத்து பூசியது ஞாபகம் வருதே :)

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் உற்சாகம் தரும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும்
    மிக நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் பகவான்ஜி, வாழ்க வளமுடன்.
    நானும் பள்ளிக்கூடத்தில் ஊமத்தம்பூவையும், அடுப்புக் கரியும் சேர்த்து அரைத்து பூசி இருக்கிறேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. படங்களும் விளக்கங்களும் நன்றாக இருக்கின்றன.

    கல் சட்டி புதிய பாத்திரங்கள் வர பழையன மறைந்து விடுகின்றன. கற்றாழை அழகாக பூத்திருக்கிறது. இப்பூவில் சமையல் செய்வதுண்டு.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
    புதியன புகுதலும், பழையனகழிதலும் நடைமுறைதான்.
    கற்றாழை சமையல் குறிப்பு போடுங்கள் மாதேவி.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. பலமுறை வந்தும் த.ம. இணையாமல் இருக்கிறது சகோ.

    பதிலளிநீக்கு
  14. ஸ்பீக்கர் பூ என்று சொல்வோம்! வித்தியாசமான படங்கள். நாகம் தெரிகிறது. காய்ந்த மரத்தைப் பசுமையாக்கும் பூங்கொடி ​குடிகாரக் கணவனுக்கும் மதிப்பளிக்கும் கிராமத்து மனைவி மாதிரி! ரசித்தேன் அனைத்தையும். தம +1

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    என்ன செய்வது அதற்கு என்ன பிரச்சனையோ!
    தமிழ் மணத்தை இணைத்து விட்டேன். ஒரு ஓட்டு காட்டியது எனக்கு.
    ஸ்ரீராம் முதல் ஓட்டு என்கிறார். உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    ஸ்பீக்கர் பூ என்றும் ரேடியோ பூ என்றும் சொல்வார்கள்.
    காய்ந்த மரத்திற்கு சொல்லும் உதாரணம் அருமை.
    கிராமம். பட்டினம் யாராக இருந்தாலும் அன்பு காட்டி அரவணைத்தால் வாழ்க்கை பசுமைதான்.

    உங்கள் கருத்துக்கும், ஓட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. அழகான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

    த.ம. மூன்றாம் வாக்கு!

    பதிலளிநீக்கு
  18. உற்றுப் பார்த்தால் அவதார் பட நாயகி போல உருவம் தெரிகிறது. ஐந்து தலை நாகமா?

    காய வைத்திருக்கும் பொருள் - வரட்டியா? எதற்கு? விபூதி செய்யவா?

    கோவில் சிற்பக் கதை சரியான புதிர் தான். பிள்ளைக்கறியோ?

    பதிலளிநீக்கு
  19. படங்கள் சிறப்பாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  20. ஒரு ஒட்டு வித்தியாசத்துல ஜெயிச்சிருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  21. இல்லைன்னா.. விழுந்ததே ஒரு ஓடு தானா?

    பதிலளிநீக்கு
  22. கந்தன் கார்த்திகைப் பெண்கள் கதையோ?

    பதிலளிநீக்கு
  23. படங்கள் அனைத்தும் அழகு! அதற்கான உங்கள் கமென்டும் அருமை!

    கீதா: கோமதிக்கா படம் எல்லாம் சூப்பர். ஸ்பீக்கர் பூ என்போம் ஊமத்தம் பூவை. நான் எருக்கம் பூவை எடுத்துள்ளேன் அப்புறம் நீங்கள் எடுத்திருப்பது போல் மொட்டை மரம் அதில் காக்கைகள் என்று எங்கள் வீட்டருகில் இருக்கும் மரத்தினை எடுத்திருக்கிறேன். நேற்று தான் மாமியார் வீட்டில் ஒரு வித்தியாசமான காளான் ஒன்றைப் படம் எடுத்தேன். எல்லாம் அடுத்தப் படப் பகிர்வில் என்று டேஷ் போர்டில் போட்டு வைத்துள்ளேன்.

    மரத்தில் நாகம் தெரிகிறது...

    கோபுரம் மிக அழகாக இருக்கிறது..ஓல்ட் இஸ் கோல்டு தான் இல்லையா...

    நானும் பல கோயில் கோபுரங்களை எடுத்து வைத்துள்ளேன் அக்கா. எனக்குக் கோபுரங்களை எடுப்பதிலும் மிகவும் ஆர்வமுண்டு..சிறிய கோயில் என்றாலும் எடுப்பதுண்டு...குறிப்பாகச் சிற்பங்களுடன் இருக்கும் கோபுரங்கள் மனதைக் கொள்ளை கொள்ளும்...

    பச்சோந்தியும், புல் புல்லும் அழகு!! அதுவும் புல் புல் உணவு ஊட்டுவது ஆஹா!!

    பெல்பூ, அரளி அனைத்தும் அழகு!

    பதிலளிநீக்கு
  24. சொல்ல மறந்துட்டேன் கோமதிக்கா...கல் சட்டி!! இப்போதும் நான் கல்சட்டியில் தான் கீரை, கூட்டுகள் செய்வதுண்டு. இதுவரை அதைப் படம் எடுக்கலை..எடுத்துப் போடுகிறேன்...கீழானெல்லி வளர்ந்திருக்கிறதே.மாமியார் வீட்டில் அப்படி வளரும் படரும் கீரைகள் எல்லாவற்றையும் பறித்து .அதனை பிற கீரைகளுடன் சேர்த்து மாமியார் கடைவதுண்டு....

    கீதா

    பதிலளிநீக்கு
  25. அழகான படங்கள்..

    இலை, பூ, காய், கனி - எல்லாமே தங்கள் தளத்தில் பதிவாகின்றன..

    கற்றாழைப் பூவை இப்போது தான் பார்க்கின்றேன்..

    கோபுரத்தில் இருப்பது - வள்ளியம்மையின் கதை..

    நம்பிராஜன் தான் கண்டெடுத்த குழந்தையை தன் மனைவியிடம் கொடுக்கின்றான்..
    வள்ளி நாச்சியார் கையில் கவணுடன் - தினைப்புனம் காக்கின்றாள்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  26. எங்கள் பிளாக் புதிர் போல! ஹா... ஹா... முதலிலேயே கவனித்தும் கமெண்ட் போடும்போது குறிப்பிட மறந்து விட்டேன்!

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
    உங்கல் கருத்துக்கும் தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
    நானும் எருக்கம்பூவை எடுத்து உள்ளேன்.
    எண்ணங்கள் ஒத்துப் போவது மகிழ்ச்சி.
    பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் படங்களை பார்த்து மகிழலாம்.

    //கோபுரம் மிக அழகாக இருக்கிறது..ஓல்ட் இஸ் கோல்டு தான் இல்லையா...//
    ஆமாம் கீதா.

    பல பழைய கோபுரங்களில் பல கதைகள் விவரிக்கப்பட்டு இருக்கும்.
    நானும் வீட்டில் முன்பு தொட்டிகளில் முளைத்த கீரைகளை எடுத்து பலகீரை சமையல் செய்வதுண்டு.
    உங்கள் உற்சாகமான கருத்துக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
  29. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    உங்களுக்கு தெரியாமல் இருக்குமா?
    இறையருள் பதிவுகளை கொடுத்து வருபவர்.
    குழந்தை வள்ளியை கொடுப்பது நம்பிராஜன், கவணுடன் இருப்பது வள்ளிதான்.
    வைத்தீஸ்வரன் கோவில் கோபுரம். பழனி ஆண்டவர் இருக்கும் மேல் இருக்கும் கோபுரம்.
    இன்னொரு படமும் இருக்கிறது வேங்கை மரமாகி நிற்பார் முருகன், அதன் பக்கத்தில் வள்ளி இருப்பார். வள்ளியின் சகோதரர்கள் வில்லுடன் எதிரில் இருப்பார்கள்.

    உங்கள் அழகான கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைத்தீஸ்வரன் கோயிலின் கிழக்கு வாசலில் உள்ளது இந்த சந்நிதி... ஆனாலும் பராமரிப்பு குறைவு..

      தங்கள் அன்பான கருத்துரைக்கு மகிழ்ச்சி..

      நீக்கு
  30. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    //எங்கள் பிளாக் புதிர் போல! ஹா... ஹா... முதலிலேயே கவனித்தும் கமெண்ட் போடும்போது குறிப்பிட மறந்து விட்டேன்!//

    மீண்டும் வந்து கமெண்ட் அளித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. அழகான படங்கள்... அசத்தல் கருத்துக்கள்...

    மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும்,ரசிப்புக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் துரைசெல்வாராஜு சார், வாழ்க வளமுடன்.
    வைத்தீஸ்வரன் கோயில் கிழக்கு வாசலில் தான் இருக்கிறது.
    அடையாளத்திற்கு பழனி ஆண்டவரை குறிப்பிட்டேன்.
    உங்கள் தகவலுக்கும், மீள் வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    மீண்டும் மீண்டும் முயன்று கஷ்டப்பட்டு ஓட்டு அளித்தமைக்கு நன்றி நன்றி.

    பதிலளிநீக்கு
  35. படங்கள் எல்லாம் இயற்கையான, கிராம நினைவுகளையும் சிறுவயது நினைவுகளையும் வரவழைக்கின்றன. இப்போதும் 'விராட்டி' உபயோகப்படுத்துகிறார்களா? த ம +1

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.

    விராட்டி இல்லை நெல்லை தமிழன். விபூதிக்காக பசும் சாணத்தை சின்னதாய் தட்டி வைத்தீஸ்வரன் கோயிலில் காய வைத்து இருக்கிறார்கள்.
    முறைப்படி விபூதி தயாரிப்பார்கள்.

    //காராம்பசுவின் சாணத்தை நிலத்தில் விழும் முன் பிடித்து, அதன் கோமயத்தால் ஈரமாக்கி, உருண்டைகள் பிடித்து காய வைக்க வேண்டும்.
    அதை, திரிபுர ஸம்ஹார காலம் என்று வர்ணிக்கக் கூடிய கார்த்திகை மாத பெளர்ணமியும், கிருத்திகை நக்ஷத்திரமும் இணைந்த கார்த்திகை தீபத் திருநாளில், எரியூட்ட வேண்டும். (சில ஆன்மீகர்கள் அன்று ஏற்றப்படும், சொக்கப்பனையில் தான் எரிக்கப்பட வேண்டும் என்பர்)
    அது திறந்த வெளியில் தானாகவே ஆறவேண்டும். மார்கழி மாதம் முழுவதும் - பனி பொழிந்து, அந்த சாணச் சாம்பல் சற்றே நிறம் மாறிக்கொண்டிருக்கும். தை மாதம் முழுவதும் அச்சாம்பலை கிளறிக்கொண்டேயிருக்க வேண்டும். பனி பெய்ய பெய்ய சாம்பலின் கரிய நிறம் மாறி வெளிறும்.
    மாசி மாதத்தின் மஹா சிவராத்திரியின் காலை நேரத்தில் அச்சாம்பலை எடுத்து, வஸ்திரகாயம் செய்ய வேண்டும். (வஸ்திரகாயம் - ஒரு பானையின் வாயில் தூய்மையான துணியைக் கட்டி, சாம்பலை எடுத்து, துணியின் மேல் கையால் தேய்க்க தேய்க்க, மென்மையான துகள்கள் பூசிக்கொள்ளத் தகுந்த விபூதியாக பானையினுள் சேரும்).//

    படித்தது.
    உங்கள் சிறுவயது நினைவுகள் வந்தது அறிந்து மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  38. இப்போதெல்லாம் பதிவுகளில் மலர்களின் ஆதிக்கமோ வேறு பதிவுகளிலும் தான்

    பதிலளிநீக்கு
  39. நாலஞ்சு கமென்ட் எழுதினேனே.. என்னங்க்க இது..

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    மலர்களுக்கு காலம் போலும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  41. ஊமத்தம்பூவெல்லாம் பார்த்து எத்தனை நாளாகிறது. எடுக்கிறபடி ஃபோட்டோ எடுத்தால் அரளி மொட்டும், காளானும்கூட ப்ரமாதமாகத்தான் இருக்கிறது.

    கல்சட்டியின் கதை கேட்பாருண்டோ, இந்தப் படாடோப உலகில்?

    பதிலளிநீக்கு
  42. வணக்கம் ஏகாந்தன், வாழ்க வளமுடன்.

    //கல்சட்டியின் கதை கேட்பாருண்டோ, இந்தப் படாடோப உலகில்?//

    ஆமாம் . நவீன உலகில் இவை பயன்பாடு குறைவுதான்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  43. அழகிய படங்களின் தொகுப்பு....ஆஹா ..சிறப்பு..

    பதிலளிநீக்கு
  44. எத்தனை படங்கள். அதில் காணக்கிடைக்காத பொருட்கள். ஊமத்தம்பூ நாங்களும் கோன் பூ.(ஸ்பீக்கரை கோன் என சொல்வோம்) என்போம்.இப்பூவை பார்த்து நாளாச்சு.
    கல்சட்டி அம்மா உபயோகித்தது. பிரச்சனியின்போது எல்லாமே போயிற்று. நிறைய பாட்டி காலத்து பாத்திரங்களை வைத்திருந்தா.
    அழகான படங்களின் தொகுப்பு அக்கா.அருமை.

    பதிலளிநீக்கு
  45. வணக்கம் பிரியசகி , வாழ்க வளமுடன்.
    கோன் பூ ! இதுவும் நல்லா இருக்கு.
    முன்பு உள்ள வாழ்க்கை முறையே வேறு.
    பழைய பாத்திரங்கள் பரணில் ஏறி விட்டது.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மகிழ்ச்சி அம்மு.
    தொடர்ந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  46. கல்சட்டி நான் இன்னமும் பயன்படுத்துகிறேன். இன்று கூடக் கீரை அதில் தான் சமைத்தேன். கோபுரத்துச் சிற்பங்கள் கதையை யாரும் சொல்லலை, நாம் தான் சொல்லப் போறோம்னு நினைச்சால் துரை.செல்வராஜ் முந்திக் கொண்டு விட்டார். அருமையான படப்பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  47. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    நீங்கள் கல்சட்டி பயன்படுத்து முன்பே சொல்லி இருக்கிறீர்கள்.
    கோபுரம்சொல்லும் கதை உங்களுக்கு தெரியாமல் இருக்குமா?
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு