திங்கள், 3 ஜூலை, 2017

அஸ்தகிரீசுவரர் கோயில் - குன்றத்தூர்
மலைக்குகைக்குச் செல்லும் பாதை

ஜூலை 1ம் தேதி  குன்றத்தூர் உதயகிரீசுவரர் கோயில்  பகுதியின்  தொடர் பகுதி - குன்றத்தூர் உதயகிரீசுவரர் அருகில் உள்ள சமணக் குகைக் கோயிலில் உள் இருக்கும்தெய்வங்கள்.


"சிவலிங்கத்திற்கு பூஜை செய்யுங்கள் சார்" என்று தீபத் தட்டைக் கொடுத்தார் , உள்ளே இருட்டு -தீபஓளியில் சிவன் அழகாய் தரிசனம் தந்தார் வெண்பட்டில்.


பைரவர்
பைரவருக்கும் பூஜை செய்யச்  சொன்னார் குருக்கள்
முருகன்
சித்தர்

அடுத்து அஸ்தகிரீசுவரர் கோயிலுக்கு எங்களை அழைத்துப் போனார் குருக்கள்.  கொஞ்ச தூரம் பயணிக்க வேண்டும்  குகைக் கோயிலுக்கு ப்பின்புறம் இருக்கிறது  அஸ்தகிரீசுவரர் கோயில் .  

போகும் பாதையோரம் தாமரைக்குளம்


கிராம காவல் தெய்வங்கள்
பொன் ஊர்காவலன் சுவாமி
சப்த கன்னியர்கள்அஸ்தகிரீசுவரர்
அழகிய நந்தி 
குருக்கள் எங்களுடன். காரில் வந்தார் அடுத்த கோவில் காட்ட.
அது மலைமேல் அமைந்துள்ளது, இரண்டு பக்கமும் மலைகளை வெட்டி எடுத்து விட்டதால்   கிடங்கு போல் காட்சி அளித்தது அதில் மழைத் தண்ணீர்  சின்ன ஏரி போல் காட்சி அளித்தது.  மலைக் குகை அருகில் தாமரைக்குளம் அழகாய் காட்சி அளித்தது. இவை எல்லாம் அடுத்த பதிவில்.

அங்கு  உதயகிரீசுவரர் கோவிலில் பார்த்த அன்பர்களை மீண்டும் பார்த்தோம் அவர்கள் யார் என்று அறிமுகபடுத்திக் கொண்டார்கள். மதுரையை சேர்ந்த வக்கீல்கள்.  அவர் அவர் குடும்பத்தினருடன் வந்து இருந்தார்கள்.

அவர்களும் பசுமை நடை போல் ஒரு இயக்கம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். முக்கியமான சமணகுகைகள், படுக்கைகள் உள்ள இடங்களை   ஆவணப்படுத்திக் கொண்டு இருக்கிறோம் என்றார்கள்.


வாழ்க வளமுடன்.
33 கருத்துகள்:

 1. ஐயா அவர்களின் தீப ஆராதனையில் அருமையான தரிசனம்..

  யாருக்குக் கிடைக்கும் இப்படியெல்லாம் பாக்யம்!..

  வாழ்க வளமுடன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஈசன் முன்பு ஆண்கள் சட்டை கழட்டி விட வேண்டும்.

   நீக்கு
  2. வணக்கம் வாழ்க வளமுடன்
   சட்டையை கழட்டி இருக்கலாம்,
   அங்கு பூஜை செய்பவர் சொல்லி இருந்தால் செய்து இருப்பார்கள். அவர்கள் சொல்லவில்லை
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. வணக்கம் துரை செல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
  தொல்லியல் துறையை சேர்ந்த கோவில் என்பதால் பூஜை செய்ய சொன்னார்.
  மற்ற இடங்களில் அது முடியாது.
  உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. தொல்லியல் துறையை சேர்ந்த கோவில் என்பதால் ,மற்ற கோவில்களில் உள்ள காணிக்கைத் தொல்லை கூட இல்லை போலிருக்கே :)

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் பகவான்ஜி, வாழ்க வளமுடன்.
  காணிக்கை தொல்லை கிடையாது, சில தொல்லியல் வசம் உள்ள சமணபடுக்கைகளைப் பார்க்க நுழைவு கட்டணம் உண்டு. (சித்தன்ன வாசல்)
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. சிவலிங்க தரிசனம், அதுவும் முதல் படத்தில் அருமை. சமணர் குகைக்கோவில்களையெல்லாம், சைவ சமயக் கோவில்களாக மாற்றிவிட்டார்களோ?

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.
  சமண்ர் கோவில்களை இந்து கோவில்களாக மாற்றி விட்டார்கள்.
  திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் சமண கோவில் தான்.
  சில சமணபள்ளியில் பெருமாளும் இருக்கிறார்.
  முதல் பகுதி படித்தீர்களா ?
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. புகைப்படங்கள் அனைத்தும் அருமையான தரிசனம் நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் தேவகோட்டைஜி , வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. தீப ஒளியில் சிவனார் தரிசனம் அருமை. அழகிய கோவில்.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

 11. மேலிருந்து கீழ் மூன்றாவது படத்தில் சிவலிங்க தரிஸனம் அழகோ அழகு. அதுவும் இன்று ஸோமவாரத்தில் (திங்கட்கிழமையில்) அதுவும் குறிப்பாக 3rd JULY (auspicious day for us) யான இன்று தரிஸனம் கிடைத்ததில் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தோம். :)

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் கோபாலகிருஷ்ணன் , வாழ்க வளமுடன்.
  உங்களுடைய புனிதமான நாளில் தரிசனம் செய்தீர்கள் என்று கேட்கும் போது மனது மகிழ்ச்சி அடைகிறது.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. எங்களுடைய கோயில் உலா பட்டியலில் இந்த கோயிலையும் தற்போது சேர்த்துவிட்டேன். இதுவரை நான் பார்க்கவில்லை, விரைவில் பார்ப்பேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
  உங்களுக்கு இது பிடிக்கும் .
  உங்கள் வரவுக்கும். கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வெண்பட்டுடன் சிவலிங்க தரிசனம்.. ஆஹா .அருமை...

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. சென்னையில் ஒரு குன்றத்தூர் இருப்பது தெரியும் முதலில் அதுவோ என்று நினைத்தேன் பிறகு கொடுத்த சுட்டியில் பின்னோக்கிப் போனபொது இது அதுவல்ல என்று தெரிந்துகொண்டேன் உடலில் தெம்பு இருக்கும் போதே பயணங்கள் செய்து விட வேண்டும் இல்லையென்றால் என்னைப்போல் பெருமூச்சு விட வேண்டியதுதான்

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது சரிதான் , கை கால் பலம் இருக்கும் போதே முடிந்தவரை பயணம் செய்து பார்த்து விட வேண்டும். அப்புறம் போனதை நினைத்துப்பார்த்து மகிழவேண்டியது தான்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. எங்க ஊர் பக்கம் வள்ளிமலைன்னு ஒரு கோவில் இருக்கு. அக்கோவிலை நினைவுப்ப்படுத்துது இந்த படங்கள். என்ன எங்க ஊர்க்கோவிலில் முருகன் இருக்கார். அங்க சிவன் இருக்கார். இங்க குகைசித்தர் வாழ்ந்திருக்கார்ன்னு சொல்வாங்க

  பதிலளிநீக்கு
 21. சுற்றுச் சூழலையும்
  முழுக் கோவிலையும்
  நன்றாகப் பார்த்தத் திருப்தி
  படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் ராஜி , வாழ்க வளமுடன்.
  வள்ளிமலை கேள்விபட்டு இருக்கிறேன்.
  இதற்கு முந்திய கோவிலில் குகை சித்தர் இருக்கிறார் படம் போட்டு இருக்கிறேன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. சிவனுக்கு தீப ஆராதனை, மூன்றாவது படம் மிக அருமை. அடுத்த பதிவும் பார்த்து விட்டேன். அருமையான பதிவுகள்!

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 26. அருமையான இடங்கள். இனிய தரிசனம்.

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 28. சமணப் பள்ளிகள் இங்கேயும் இருக்கு. ஆனால் பார்க்கப் போக முடியலை. நீங்கள் அநேகமாகத் தேடித் தேடிச் செல்கிறீர்கள். எல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சித் துறைக்குக் கீழ் இருப்பதால் நிம்மதியான தரிசனமும் கிடைக்கும். இந்தக் கோயிலும் ஒரு சமணப் பள்ளியாக இருந்து பின்னர் இந்துக் கோயிலாக மாறி உள்ளது போல! நல்ல தரிசனம். படங்கள் எல்லாம் அருமை!

  பதிலளிநீக்கு
 29. சப்த கன்னியர் இருப்பதால் ஆயிரம் வருஷத்துக்கு முற்பட்ட கோயிலாகத் தான் இருக்கணும்.

  பதிலளிநீக்கு
 30. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
  திருச்சி பக்கமும் பார்த்து இருக்கிறோம்.
  சமணபள்ளிகள் நிறைய இந்துக் கோவிலாக மாறி விட்டது.


  ஆயிரம் வருசத்திற்கு முற்பட்ட கோவிலாகத்தான் இருக்கும்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு