Wednesday, July 5, 2017

திருநீலகண்டேசுவரர் திருக்கோவில் - குன்றத்தூர்

குன்றத்தூர் கோவில் -  நிறைவுப் பகுதி.

பழைய பதிவுகள் படிக்க வேண்டும் என்றால் படிக்கலாம்.

மதுரையிலிருந்து  சிவகங்கை செல்லும் சாலையில் 25  கி.மீ தூரத்தில் இருக்கிறது.

அஸ்தகிரீசுவரர்  கோவிலிருந்து   1. கி.மீ தூரத்தில் இருக்கிறது திருநீலகண்டேசுவரர் கோவில்.  மலைப்பாதையில் ஏறிப் போனால் சிறிது தூரத்தில் கொஞ்சம் படிகள் சிமெண்டில் கட்டி இருக்கிறார்கள்.

முந்தின பதிவில் சொன்ன வக்கீல்கள் அவர்கள் குடும்பத்தினர்களுடன் அங்கு இருந்தார்கள்.
"நீங்கள் யார் சொல்லி வந்தீர்கள்?" என்று எங்களிடம் கேட்டார்கள். "யார் சொல்லியும் வரவில்லை, கணினியில் பார்த்துப் பார்க்க வந்தோம் " என்றவுடன் இந்த மாதிரி இடங்களுக்குத் தனியாகவா என்று ஆச்சரியப் பட்டார்கள்.  அங்கு இருக்கும் அமைதிக்கு ஆள் அரவம் இல்லாமல் இருப்பதற்கு, அவர்களைப்போல் போல் கூட்டமாய் வந்தால் தான் நன்றாக இருக்கும், பாதுகாப்பும் கூட.
பெரிய பாறையை கிரானைட்டுக்காக வெட்டி எடுத்து  விட்டதால் இரு பக்கமும் அகழியும் நடுவில் வழித்தடமும் போல் இருக்கிறது.


வழித்தடத்தைக் கடந்து வந்தால் பாறைகளுக்கு நடுவில் அழகான தாமரைக் குளம்.

தாமரைகள் மலர்ந்து மகிழ்ச்சியாக  வரவேற்றது
மழைத் தண்ணீர் சிறிய ஆறு போல்
மலை வெட்டப்படுவது தடை செய்யபட்டதால்  மலைகளுக்கு நடுவில் ஆறு வளைந்து சென்றது போல் காட்சி அளிக்கிறது இதிலும் தண்ணீர் இருந்து இருந்தால் பார்க்க மிகவும் அழகாய் இருக்கும்.

இது அழகாய் இருக்கிறது தானே?

தாமரைக் குளத்தைத் தாண்டிப் போனால் கொஞ்சம் சிமெண்ட் படி இருக்கிறது
 கோவிலுக்கு போகும் பாதையின்  இரு மருங்கிலும் எலுமிச்சம்புற்கள் வளர்ந்து இருக்கிறது.
கல்லாலான  தொட்டி - பக்கவாட்டில் சிறிய ஓட்டை வேறு இருக்கிறது 
பெரிய பாறையை ஒட்டி கட்டுமானம் பாதியில் நிற்கிறது.
என்ன துவாரம் என்று தெரியவில்லை ஏதாவது சிலை வைக்க ஏற்பாடு ஆகி இருக்குமோ தெரியவில்லை
கோவில் வெளி வாசல் இரு புறமும் திண்ணை கட்டி இருக்கிறார்கள்.
இவர்கள் தான் புதிதாக கட்ட உதவியவர்கள் 

வலஞ்சுழி விநாயகர் - கைவிரல்கள் எல்லாம் அழகாய்த் தெரிகிறது 
முருகர்
திருநீலகண்டேசுவரர்

துவாரபாலகர் வித்தியசமாய் இருக்கிறார், காலில் வெட்டுப்பட்டு இருக்கிறது,   
வித்தியாசமான துவார பாலகர்
நந்தியும் வேறுபாடாய்த் தெரிகிறார்

                                                            காமாட்சி அம்மன்


வேப்பமரத்தின் அடியில் நாகங்கள் மஞ்சள்  பூசி, பொட்டு வைத்து இருக்கிறது . கிராமத்து மக்கள் வருவார்கள் என்று தெரிகிறது.
சப்த கன்னிகள்

காலை உணவு கையில் கொண்டு வந்து இருந்தார்கள்,பொங்கல், வடை, கேசரி, இட்லி  கொண்டு வந்து இருந்தார்கள். எங்களைச்  சாப்பிடச் சொன்னார்கள். நாங்கள் ஞாயிறு காலையில் எப்போதும் விரதம் -.சாப்பிடுவது இல்லை, மிகவும் அன்புடன்  கேட்டுக் கொண்டதால்   மதியம் சாப்பிடுகிறோம் என்று  வாங்கிக் கொண்டோம் .

 சாப்பிட்டு முடித்தவுடன் வந்த இடத்தின் வரலாற்றைப் பற்றிப் பேசுவார்களாம்,  அடுத்துப் போவதைப் பற்றியும் பேசுவார்களாம். இருக்க ச்சொன்னார்கள் ஆனால் வீட்டுக்கு விருந்தினர் வருவதாய் போன் வந்ததால் அவர்களிடம் விடைபெற்று வந்தோம்.  அவர்கள் மெயில் முகவரி, எல்லாம் கொடுத்தார்கள். வீடு மாற்றத்தில் எங்கோ   தொலைந்து விட்டது.

அவர்களிடம் விடை பெற்று அமைதியான  அழகான மூன்று கோவில்கள் தரிசனம்   செய்து வந்தோம்.

தொடர் பயணத்தில் தொடர்ந்து வந்த அனைவருக்கும் நன்றி.

                                                            வாழ்க வளமுடன்

41 comments:

ராஜி said...

படங்கள் அருமை. தாமரைக்குளம் கண்ணை பறிக்குது

KILLERGEE Devakottai said...

புகைப்படங்களை காணும் பொழுது பேருந்தில் செல்லும் பொழுது பார்த்தது போன்ற நினைவு ஒருமுறை சென்று வரவேண்டும்
த.ம.1

கோமதி அரசு said...

வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
இன்று உங்கள் வாழைப்பூ புட்டு வீட்டில் உங்களை நினைத்துக் கொண்டேன்
முதலில் வந்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டை ஜி வாழ்க வளமுடன்.
சென்று வாருங்கள் அமைதியான அழகான இடம்.
உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...


அருமையான அசத்தலான புனிதப்பயணங்களை துணிச்சலுடன் மேற்கொண்டுள்ளீர்கள். படங்களும் செய்திகளும் வழக்கம்போல அருமையோ அருமை.

கோயிலின் இருபுறமும் கட்டியுள்ள திண்ணைகளில் போய் பேசாமல் அமர்ந்துவிடணும் போல ஆசையாக உள்ளது.

பகிர்வுக்கு நன்றிகள்.

கோமதி அரசு said...

வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

ஆலமரக் காற்றும், அமைதியான இடமும் அங்கே இருந்துவிட ஆசையாகதான் இருக்கும்.
உங்கள் உற்சாகமான பின்னூட்டத்திற்கு நன்றி.

G.M Balasubramaniam said...

இம்மாதிரி இடங்களைப் பார்க்கும் போது நாம் சென்று வந்த இடங்கள் மிகக் குறைவு என்று தெரிகிறது வாழ்த்துகள்

கோமதி அரசு said...

வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது சரிதான். நாம் பார்க்காத இடங்கள் நிறைய இருக்கிறது.
ஞாயிறு காலை ஒரு கோவிலுக்கு போனோம் , நினைத்த கோவில் ஒன்று ஆனால் அவர் அழைத்த கோவில் வேறு அது அடுத்த பதிவில்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான இடம்... அருமையான பயணம்...

துரை செல்வராஜூ said...

புதிய இடங்களுக்கெல்லாம் எங்களை அழைத்துச் செல்கின்றீர்கள்..

எல்லா நலன்களும் உண்டாகட்டும்.. வாழ்க நலம்!..

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் அருமை. நந்தி மிகவும் வித்தியாசமாக உள்ளது. தனிமையான இடத்தில் அமைந்த கோவில்.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
தனிமையான இடம் தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

படங்கள் அந்த இடத்தின் அழகைச் சொல்கின்றன. தாமரைக்குளம் அழகு. இடம் தனிமையாக இருக்கிறது. பாறை உருகி அந்தக் கட்டிடத்தின் மேலே வழிந்து ஊற்றி இருப்பது போல இருக்கிறது!

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

//பாறை உருகி அந்தக் கட்டிடத்தின் மேலே வழிந்து ஊற்றி இருப்பது போல இருக்கிறது!//


நல்ல கற்பனை! நான் மீண்டும் பார்த்தேன் நீங்கள் சொல்வது போல்தான் இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.

அப்பாவி தங்கமணி said...

Both post and pictures very nice. Curious to visit

Anuradha Premkumar said...

அருமையான இடமும், அழகான படங்களும்...

கோமதி அரசு said...

வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

காமாட்சி said...

ஒவ்வொன்றும் வெகு அழகு. தாமரைக்குளம் அழகு. அன்புடன்

ஜீவி said...

நிறைவுப் பகுதியும் நிறைவாக இருக்கிறது. மிக்க நன்றி.

இரு விழிகளின் காட்ராக்ட் அறுவை சிகிச்சை, புது வீடு மாற்றல் அது தொடர்பான சொந்தப் பணிகள் என்று வலைப்பக்கமே வருகை தர முடியாமல் இருந்தது.

இனித் தொடர்ந்து வாசித்து வருவேன். தங்கள் நல்ம் சிறக்க ஆசிகள்.

கோமதி அரசு said...

வணக்கம் அப்பாவி தங்கமணி, வாழ்க வளமுடன்.
அமைதியான ஆர வாரம் இல்லாத இடம் பார்க்கலாம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.

கோமதி அரசு said...

வணக்கம் சார், வாழ்க வளமுடன்.
ஊருக்கு போய் விட்டீர்கள் போல அதுதான் உங்களிடமிருந்து பதிவு இல்லை என்று நினைத்தேன்.
உங்களுக்கு காட்ராக்ட் அறுவை சிகிச்சை ஆகி இருப்பது உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.
நீங்களும் வீடு மாறி விட்டீர்களா?
நானும் வீடு மாறி உள்ளேன்.
உங்கள் கருத்துக்கும், ஆசிகளுக்கும் நன்றி சார்.
உங்கள் ஆசி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள்... தகவல்களும் சிறப்பு.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் மிக அழகு. தகவல்களும். இது வரை அறியாத ஓர் இடம். இப்படிப் பல கோயில்கள் ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத இடத்தில் இருக்கின்றன...கிராமங்கள் அருகில் என்று...நீங்கள் தேடிக் கண்டுப்பிடித்துச் சென்றுள்ளீர்களே!! பாராட்டுகள் சகோதரி/கோமதிக்கா...

துளசி, கீதா

கோமதி அரசு said...

வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
அழகான அமைதியான இடத்தை தேடி சமணர்கள்
தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மற்ற இரு பகுதிகளையும் போலவே இப்பகுதியும் அழகான படங்களுடன், அருமையான செய்திகளுடன் இருந்தது. இக்கோயில்களைப் பார்க்கும் ஆவல் மிகுந்துவிட்டது. நன்றி.

Ramani S said...

படங்களுடன் பகிர்ந்த விதம்
முழுமையாக இரசிக்க முடிந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்...

அப்பாதுரை said...

அருமையான படங்கள்.

எத்தனை ஆயிரம் கோவில்கள் திறந்தாலும் கண்கள் என்னவோ மூடியே இருக்கின்றன. :-)

கோமதி அரசு said...

வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி.

Vimalan Perali said...

அருமையானதொரு விவரிப்பு/
படங்கங்களே பாதி எழுத்தை
பதிவு செய்து விட்டுச்சென்றவையாக.
வாழ்த்துக்கள் மேடம்/

கோமதி அரசு said...

வணக்கம் விமலன் நலமா? வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

Bagawanjee KA said...

#இவர்கள் தான் புதிதாக கட்ட உதவியவர்கள் #
என் தூரத்து உறவினர்கள் செய்திருக்கும் நல்ல காரியத்தை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன் !அவர்களும் இதைப் பற்றி சொல்லிக் கொண்டதில்லை , நீங்கள் செய்துள்ள இந்த 'நல்ல காரியத்தை' அவர்களிடம் தெரிவித்து ,என் வாழ்த்தைத் தெரிவித்து விடுகிறேன் :)

கோமதி அரசு said...

வணக்கம் பகவான் ஜி, வாழ்க வளமுடன். கோவில் திருப்பணி செய்தவர்கள் தங்கள் உறவினர்களா? மகிழ்ச்சி.

Geetha Sambasivam said...

முந்தைய பகுதிகளைப் படிச்சுட்டு வரேன்.

கோமதி அரசு said...

வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
வாங்க , வாங்க பொறுமையாக படித்து விட்டு.

மாதேவி said...

அழகிய இடம்.

கோமதி அரசு said...

வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
கருத்துக்கு நன்றி.