//அன்னையின் அருளே வா வா வா
அன்னையின் அருளே வா வா வா
ஆடிப் பெருக்கே வா வா வா//
- கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதிய பாடல். ஆடிப்பெருக்கு என்றால் நினைவுக்கு வரும் பாடல்.
ஆடி முளைக்கொட்டுத் திருவிழா
மீனாட்சி அன்னை பச்சை பட்டுப் புடவைக் கட்டி, கிளி வாகனத்தில் வருகிறார்.
அன்னையின் அருளால் மழை பொழிய வேண்டும்.
மதுரையில் மக்கள் தண்ணீருக்கு கஷ்டப்படுவதைப் பார்த்தால் கஷ்டமாய் இருக்கிறது. இரண்டு நாட்களாய் நல்ல மழை இங்கு. ஆடி என்றால் அடைமழை பொழியும் என்பார்கள், "ஆடி பட்டம் தேடி விதை" என்று சொன்னது போல் ஆடி மாதம் விதை விதைத்து எங்கும் பசுமையாக
நாடு செழித்தால் நல்லது.
எங்கள் பழைய வீட்டில் பழுது பார்க்கும் வேலை நடக்குது. அதற்கு
லாரி தண்ணீர் வாங்கிதான் வேலைபார்க்கிறோம்.
கார்ப்பரேஷன் தண்ணீர்- நினைத்தால் வருகிறது.
மகன் வீட்டில் இருக்கிறோம். இப்போது தண்ணீர் கஷ்டம் இல்லை . எல்லோரும் தண்ணீரை சிக்கனமாய் உபயோகப்படுத்த சொல்லி அறிக்கை அனுப்புகிறார்கள். இன்னும் போக போக மழை இல்லை என்றால் கஷ்டம் தானே!
மயிலாடுதுறையில் இருக்கும் போது ஆடிப் பெருக்குசமயத்தில் காவேரிக்கரையில் பூஜை செய்வோம், அதுபோல் மதுரை வைகைக் கரையில் பூஜைகள் உண்டா தெரியவில்லை.
ஒரு முறை மயிலாடுதுறையில் காவேரிக் கரையில் தண்ணீர் இல்லாமல் படித்துறையின் படி மேலேயே கொண்டு போன காதோலை,கருவளையல் , காப்பரிசி பழங்களை வைத்து வணங்கினேன். ஆற்று மண் எடுத்து பிள்ளையார் பிடித்து வணங்குவார்கள் . இன்று .
வீட்டிலே சின்ன பித்தளைக்குடத்தில் தண்ணீர் பிடித்து வைத்து காவேரியை நினைத்து வணங்கி கொண்டேன். என் பழைய பதிவுகளை படித்துப் பார்த்தேன். நீங்களும் படித்துப் பார்க்கலாம்.
இன்று தினமலரில் வந்த ஆடிப்பெருக்கு விழா செய்தி :-
*// நன்மை அனைத்தும் பெருகும் இந்த நல்ல நாளில் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும். நாட்டில் மழை வளம் பெருகும்.
* 'பெருக்கு' என்பதற்கு 'சுத்தம் செய்தல்' என்றும் பொருள் உண்டு. ஆடிப் பெருக்கில் வெள்ளம் ஓடும் போது ஆற்றிலுள்ள அசுத்தங்கள் அடித்துச் செல்லப்பட்டு தூய்மை உண்டாகும். அது போல, மனதிலுள்ள தீய எண்ணத்தை பக்தி என்னும் வெள்ளம் பாய்ச்சி அகற்ற வேண்டும் என்பதை இந்த நாள் உணர்த்துகிறது.
* 'பெருக்கு' என்பதற்கு 'சுத்தம் செய்தல்' என்றும் பொருள் உண்டு. ஆடிப் பெருக்கில் வெள்ளம் ஓடும் போது ஆற்றிலுள்ள அசுத்தங்கள் அடித்துச் செல்லப்பட்டு தூய்மை உண்டாகும். அது போல, மனதிலுள்ள தீய எண்ணத்தை பக்தி என்னும் வெள்ளம் பாய்ச்சி அகற்ற வேண்டும் என்பதை இந்த நாள் உணர்த்துகிறது.
தங்க நகை வாங்க ஏற்ற நாள் இன்று. வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வாங்கலாம். செய்யும் நற்செயலால் புண்ணியம் பெருகுவது போல இன்று செய்யும் சேமிப்பு பலமடங்காக பெருகும். தொழில் தொடங்கினால் லாபம் பெருகும்.
* திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு பகுதிகளில் மக்கள் ஆற்றில் புனித நீராடுவர். ரங்கநாதர், விநாயகர், அகத்தியர் ஆகியோருடன் சம்பந்தம் கொண்ட புனித காவிரியில் நீராடினால் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் உண்டாகும். மாங்கல்ய பலம் பெறவும், விளைச்சல் பெருகவும் காவிரித்தாயை வழிபடுவர்.
* இன்று லட்சுமி தாயாருக்கு பால், தேன், தானியம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பூஜை செய்தால் மனம் குளிர்ந்து அருள்வாள். பாலை குழந்தைகளுக்கும், தேனை பெண்களுக்கும், தானியத்தை பறவைகளுக்கும், பொங்கலை ஏழைகளுக்கும் தானம் அளிக்க வேண்டும். மாலையில் விளக்கேற்றும் முன், வாசலில் கோலமிட வேண்டும். இதனால் வீட்டில் லட்சுமி நித்ய வாசம் செய்வாள்.//
* திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு பகுதிகளில் மக்கள் ஆற்றில் புனித நீராடுவர். ரங்கநாதர், விநாயகர், அகத்தியர் ஆகியோருடன் சம்பந்தம் கொண்ட புனித காவிரியில் நீராடினால் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் உண்டாகும். மாங்கல்ய பலம் பெறவும், விளைச்சல் பெருகவும் காவிரித்தாயை வழிபடுவர்.
* இன்று லட்சுமி தாயாருக்கு பால், தேன், தானியம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பூஜை செய்தால் மனம் குளிர்ந்து அருள்வாள். பாலை குழந்தைகளுக்கும், தேனை பெண்களுக்கும், தானியத்தை பறவைகளுக்கும், பொங்கலை ஏழைகளுக்கும் தானம் அளிக்க வேண்டும். மாலையில் விளக்கேற்றும் முன், வாசலில் கோலமிட வேண்டும். இதனால் வீட்டில் லட்சுமி நித்ய வாசம் செய்வாள்.//
. - நன்றி தினமலருக்கு.
இன்றைய காலண்டரில் தேதி கிழிக்கும் போது படித்த செய்தி, ஆடி பதினெட்டாம் பெருக்குவிழா, புதுவருடக்காலண்டர்கள் பூஜையுடன் தொடக்கம் என்று.
நம்பிக்கைகள் வாழ்க!
மயிலாடுதுறை காவேரி , வீட்டுக் குப்பைகள் கிடக்கிறது.
வீரநாராயண ஏரி
வீரநாராயணப்பெருமாள் கோயில்,வேதபுஷ்கரணி, காவேரி நதி (2014)
காவேரிப் படித்துறை (மயிலாடுதுறை) இரண்டு வருடங்களும் முன் தண்ணீர் இல்லை. இப்போது இருக்கா என்று தெரியவில்லை. ஆற்றை சுத்தம் செய்து காவேரிவரக் காத்து இருக்கிறார்கள்.
கிணற்றிலும் நீர் இல்லை
ஏற்றம் மாடல் பழமையை நினைவு படுத்த அமைத்து உள்ளார்கள். கும்பகோணம் பக்கம் உள்ள ஒரு விடுதியில்.
புதுக்கோட்டை பக்கம் உள்ள ஒரு கிராமத்தில் மழவராயன்பட்டியை சேர்ந்த கருப்பன் என்ற கருப்பையா அவர்கள் (வயது 90) .
30 ஆண்டுகளாக ஏற்றத்தின் உதவியுடன் கிணற்றுப் பாசனம் செய்த விவசாயி .இப்போது வறட்சியால் ஏற்றம் முடங்கி கிடப்பதாய் வருத்தப்பட்டதை பத்திரிக்கையில் படித்தேன்.
.
சிறுவர்கள் சப்பரம் செய்து இழுத்து செல்வார்கள் ஆடிப் பெருக்கு விழாவில்.
மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், மீண்டும் அந்த மகிழ்ச்சி வர வேண்டும்.
நீர் நிலைகள் நிரம்பி வழிய வேண்டும்.
ஆற்றிற்கு சிறு தேர் உருட்டிச் செல்லும் சிறுவன்
நீரின் பெருமையை, மதிப்பை மனதால் உணர்ந்து அதைப் போற்றி வணங்குவோம்.
ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
”மாரி மழை பொழிய வேண்டும்,மக்கள் சுற்றம் வாழ வேண்டும்
காடு கரை நிறைய வேண்டும்,மக்கள் கஷ்டம் தீர வேண்டும்.”
ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய
மாரி அளவாய்ப் பொழிய வாழ்த்துவோம்.
வாழ்க வளமுடன்.
படங்களுடன் மழையைக்குறித்து விளக்கிய விதம் அருமை.
பதிலளிநீக்குவீரநாராயண ஏரி எவ்வளவு அழகு.
த.ம.பிறகு.
என்ன எல்லோரும் சொல்லி வச்ச மாதிரி கண்ணீர் வரவைக்கும் காவிரி படங்களைப் பகிர்கிறீர்கள்? அதுவும் குப்பை கூளங்களோடு மயிலாடுதுறை காவிரி 'நதி வரும் பாதையைப் பார்க்கும்போது வருத்தமா இருக்கு.
பதிலளிநீக்குவீர'நாராயணன் ஏரியைப் பார்க்கும்போதுதான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு.
த.ம.
வீரநாராயண ஏரின்னவுடன் 'பொன்னியின் செல்வன்' ஞாபகம் வந்து விட்டது!!
பதிலளிநீக்குஆடி 18க்கு நீர் இல்லாத ஆறுகள் வருத்தமாய்த் தான் இருக்கிறது!
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவீரநாராயண ஏரி ஆடிப்பெருக்கு விழா பதிவை படித்துப் பாருங்க்கள் வீரநாரயண ஏரியில் அலை அடிக்கும் காணொளி பார்க்கலாம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபழைய பதிவு வீரநாரயண ஏரியில் ஆடிப்பெருக்கு விழா படித்துப் பாருங்கள், ஏரியின் அழகை இன்னும் பார்க்கலாம், மேலும் சந்தோஷபடலாம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவீரநாராயண ஏரி ஆடிப்பெருக்கு விழாவில் பொன்னியின் செல்வன் கதையில் வரும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம் வரும் படித்துப் பாருங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கேரளத்துப் பக்கம் தமிழ்நாடளவு தண்ணீர்ப்பிரச்சனை இல்லை. இருந்தாலும் இங்கும் தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என்று சொல்லி வரத் தொடங்கிவிட்டார்கள். இங்கு ஆடிப்பெருக்கு என்பதெல்லாம் கிடையாதே..தமிழ்நாட்டில் இருந்தவரை நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் கொண்டாடுவதைப் பார்த்திருக்கிறேன். நல்ல படங்கள் பதிவு! சகோ..
பதிலளிநீக்குகீதா: கோமதிக்கா தண்ணீரே இல்லை. மெட்ரோ வாட்டர் புக் செய்து 8 நாட்கள் ஆகியும் வராமல் கடந்த மூன்று நாட்களாகத் தண்ணீர் இல்லாமல் சரியாகக் குளிக்கவும் முடியாமல், இன்று இதோ ப்ரைவேட் லாரிக்குச் சொல்லித் தண்ணீர் வந்து இப்போதுதான் குளியல்!!
அக்கா பொன்னியின் செல்வன் நினைவுக்கு வருகிறது அந்த ஆடிப்பெருக்கு விழா.... தண்ணீர் இருக்கும் படங்கள் நன்றாக இருக்கு. இல்லாதவை மனதை வேதனை கொள்ளச் செய்கிறது. மழை வர வேண்டும் என்று பிரார்த்திப்போம்....
இனிய நாட்கள் இனி வருமா...?
பதிலளிநீக்குகாவிரித் தாயும் இப்படி கை விரித்து விட்டது வருத்தம் அளிக்கிறது ,எல்லாம் அரசியல் வியாதிகள் படுத்தும் பாடு :)
பதிலளிநீக்குதண்ணீர் இல்லாத காவிரியில் ஆடிப்பெருக்கு. கூடவே உங்கள் பழைய பதிவுகளும், பறவைகளுடன் நீர் நிறைந்த அந்த வீராணம் ஏரி படங்களும் நினைவில் வந்தன.
பதிலளிநீக்குவணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஎல்லா இடங்களிலும் தண்ணீர் சிக்கனம் மிகவும் அவசியம் தான்.
நீங்கள் இருக்கும் ஏரியாவில் தண்ணீர் இல்லையா கீதா?
கேட்கவே கஷ்டமாய் இருக்கிறது.
வீரநாராயண ஏரி ஆடிப்பெருக்கு விழாவில் பொன்னியின் செல்வன் கதையில் வரும் ஆடிப்பெருக்கு விழா பற்றி போட்டு இருக்கிறேன்.
பொன்னியின் செல்வன் கதை ஆடிபெருக்கு விழாவில் ஆரம்பிக்கும் முதல் அத்தியாயம், மணியம் அவர்கள் விழா படத்தை மிக அழகாய் வரைந்து இருப்பார்.
நான் பகிர்ந்த படம் ஓவியர் வேதாவின் கைவண்ணத்தில் வீரநாராயண ஏரிக்கு ஆடிக்குப் படைக்க வரும் பெண்கள் , ஆண்கள், சிறுவர்கள்
பூஜை சாமான்களை மூடி எடுத்து வரும் பெண்கள், சிறுதேர் உருட்டி வரும் சிறுவர்கள், பறவைகள் பறந்து வரும் அழகு எல்லாம் இருக்கும் பார்த்து ரசிக்கலாம்.
மழைக்கு பிரார்த்திப்போம் கூட்டு பிரார்த்தனை பலிக்கும்.
உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.
நீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் ஏரி.... வருத்தம் மட்டுமே மிச்சம்.
பதிலளிநீக்குகுப்பைகள் கிடைக்கும் காவிரியைப் பார்க்க மனம் வலிக்கிறது. என் சிறு வயதில் திருவையாறு போகும்போது பார்த்த கரைபுரண்டு ஓடிய காவிரி இன்னமும் மனக்கண்ணில்.
பதிலளிநீக்குவீரநாராயண ஏரி படம் போட்டிருக்கிறீர்கள். வந்தியத்தேவனைக் கண்கள் தேடுகின்றன! என் இளவயது தஞ்சையில் கழிந்தன. ஆடிப்பெருக்கை சோழவள நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் கொண்டாடினார்களா, தெரியவில்லை.
தம 6ம் வாக்கு.
த.ம.7
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன். வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇனிய நாட்கள் இனி வருமா என்று தெரியவில்லை, வரவேண்டும் என்று எல்லோரும் பிரார்த்திப்போம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் பகவான் ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகாவிரித்தாயும், அரசியல் வாதிகளும் மக்கள் பொறுமையை சோதித்துப் பார்க்கிறார்கள் போலும்!.
நன்றி உங்கள் கருத்துக்கு.
வணக்கம் சகோ தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபழைய பதிவுகளை நினைவு வைத்து இருப்பது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமுன்பு நானும் கரைபுரண்டு ஓடிய காவிரியைப் பார்த்து இருக்கிறேன்.
இப்போது எங்கும், குப்பையும், கழிவு நீரும் கலந்து ஆற்றில் கிடப்பதைப்பார்த்தால் வருத்தம் தான் மிச்சம்.
பழைய பதிவில் வந்தியதேவன் போட்டு விட்டதால் இதில் போடவில்லை லிங்க் கொடுத்து இருக்கிறேன் பார்க்கலாம் வந்திய தேவன் ஆடிபெருக்கை ரசிக்கும் காட்சியை.
பூங்க்குழலியை சொல்லி இருப்பேன்.
சோழ நாட்டில் மட்டும் இல்லை எல்லோரும் கொண்டாடி இருக்கிறார்கள் சோழ நாட்டில் வளமை அதிகம் மகிழ்ச்சி அதிகம்.
இன்று செய்தியில் பல ஊர்களில் ஆடிபெருக்கு விழா கொண்டாடியதை காட்டினார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் தேவகோட்டை ஜி வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குதமிழ்மண வாக்கிற்கு நன்றி.
சுத்தமாக தண்ணீர் இல்லை. மணலிலும் குப்பையிலும் நடந்ததாகக் கேள்விப்படுகிறேன்.
பதிலளிநீக்குமூத்த உறவினர் எல்லாம் காவிரி சுழித்தோடிய காலங்களைப் பற்றிப் பேசி ஆடிப் பெருக்கினை கொண்டாடுவதாக் கேள்விப்பட்டேன்.
>>> மாரி மழை பொழிய வேண்டும்.. மக்கள் சுற்றம் வாழ வேண்டும்
பதிலளிநீக்குகாடு கரை நிறைய வேண்டும்.. மக்கள் கஷ்டம் தீர வேண்டும்.. <<<
எல்லாருடைய வேண்டுதல்களையும் கேட்டு இரக்கம் காட்ட மாட்டாளா - இயற்கை அன்னை!..
காவிரியும் அதன் கிளை நதிகளும் முற்றாக வறண்டு கிடக்கின்றன...
அதன் படங்களை வெளியிட மனமில்லை..
வானம் நிச்சயம் கண் திறக்கும்.. காவிரியும் பெருகி வருவாள்..
வாழ்க நலம்!..
வணக்கம் துரை செல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//எல்லாருடைய வேண்டுதல்களையும் கேட்டு இரக்கம் காட்ட மாட்டாளா - இயற்கை அன்னை!..//
கண்டிப்பாய் இரக்கம் காட்டுவாள் அன்னை.
கொஞ்சம் மக்களுக்கு உணர்த்த காலம் தாழ்த்துகிறாள்.
//வானம் நிச்சயம் கண் திறக்கும்.. காவிரியும் பெருகி வருவாள்..//
காவிரி பெருகி வருவதாய் இப்போதே நினைக்க ஆரம்பித்து விட்டேன்.
கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
நம் ஆறுகள் முன்போல கரை புரண்டோடும் நாள் விரைவில் வரும் என நம்புவோம். தங்கள் பதிவினைப் பார்த்ததும் பள்ளிக்காலத்தில் காவிரியாற்றங்கரைக்கு சப்பரம் ஓட்டிக்கொண்ட நாள்கள் நினைவிற்கு வந்தன.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஎன்வலை கண்டு கருத்துரைத்தீர் !நன்றி தங்கள் பதிவும் படங்களும அருமை!
வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//நம் ஆறுகள் முன்போல கரை புரண்டோடும் நாள் விரைவில் வரும் என நம்புவோம்//
கண்டிப்பாய் நம்புவோம்.
சிறு வயதில் சப்பரம் செய்து ஆற்றுக்கு ஓட்டி சென்ற நினைவுகள் வந்ததா? மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் , புலவர் இராமாநுசம் ஐயா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
நாளாவட்டத்தில் ஆடிப்பெருக்கும் விசேஷ வழிபாடுகளும் கற்பனைக் கதைகளாக மாறலாம் ஆற்றில் நீர் இருந்தால்தானே ஆடிப்பெருக்கு
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகற்பனை கதையாய் மாற வேண்டாம் சார், மீண்டும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாய் நடைபெற வேண்டும்.
ஆற்றில் நீர் வர வாழ்த்துவோம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
தங்களுக்கும் ஆடிப் பெருக்கு வாழ்த்துகள். படங்களும் பகிர்வும் அருமை. வீரநாராயண ஏரியின் எழில் கவருகிறது. பெங்களூரில் நிலத்தடி நீர் இல்லாமல் பெரும்பாலான குடியிருப்புகள் டேங்கர் லாரியை நம்பியே உள்ளன. ஆடிப் பெருக்கு வேண்டுதல்கள் பலிக்கட்டுமாக.
பதிலளிநீக்குஇங்கே தினம் தினம் மாலையில் மழை வரும்போல் கருத்து இருண்டு கொண்டு பின்னர் வெளிச்சம் வந்து விடுகிறது. :( பொதுவாக நாங்க ஶ்ரீரங்கம் வந்த இந்த ஐந்து வருடங்களில் மழையை அதிகம் பார்க்கவில்லை. என்றாலும் 2012-13 ஆம் வருடங்களில் காவிரியில் வெள்ளம் வந்து 2013 ஆம் வருடம் ஐந்தடுக்குப் பாதுகாப்புப் போட்டுக் கிட்டே நெருங்க விடவில்லை. அதுக்கப்புறம் காவிரியில் நீரே இல்லை. ஆங்காங்கே மேடும், பள்ளமுமாகத் தூர்ந்து போய்க் கிடக்கிறது! திட்டுத் திட்டாகக் காட்சி அளிக்கிறது. கும்பகோணம் காவிரியும் சாக்கடை தான்! :(
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபெங்களூரிலும் தண்ணீர் கஷ்டம் டேங்கர் லாரி என்றால் என்ன செய்வது.
வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிாி~ என்ற நிலை மாறி விட்டது, என்ன செய்வது?
மீண்டும் பழைய நிலை வர அருவாள் காவிரி அன்னை.
தங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் இங்கும் நல்ல மழை மேகம் கூடி வந்து ஏமாற்றி செல்கிறது.
இங்கு இப்போது வந்து இருக்கும் கலெக்டர் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தருகிறார்.
இனி மதுரையில் தண்ணீர் கஷ்டம் இல்லை என்பது போல் செய்யலாம் என்கிறார்.
அவர் திட்டம் பலிக்க வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அம்மன் படங்கள் பார்த்து பரவசமாகி அப்படியே வந்தால், காவிரித்தாயின் நிலைகண்டு கஷ்டமாக இருந்தது. என்ன செய்யலாம். அன்புடன்
பதிலளிநீக்குநீர்நிலைகள் நிரம்பட்டும். காவேரிதாயை வணங்குவோம்
பதிலளிநீக்குவணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅம்மன் படங்களை பார்த்தீர்களா? மகிழ்ச்சி.
காவிரித்தாயின் நிலை மாறும் மீண்டும் வருவாள் பெருக்கெடுத்து.
வேண்டுவோம் அவளிடமே!
அன்பான கருத்துக்கு நன்றி.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்..
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் நீர்நிலைகள் நிரம்பட்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.