தீபமங்கள ஜோதி நமோ நம!
இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்
உறவினர் , நட்புகள் வந்தால் (வீட்டு முறைப்படி) சாப்பாடு கொண்டு வந்து தரும் இடத்தில் பலகாரங்கள் பாதுஷா , மிச்சர் ஆர்டர் செய்து வாங்கி கொண்டேன்.
இவர்களிடம் ரிப்பன் பக்கோடா, மனோகரம், மனவோலம் என்று சொல்லப்படுகிற இனிப்பு வாங்கி முன்பே தங்கை, அண்ணிக்கு கொடுத்து விட்டேன், அப்புறம் மற்றவர்களுக்கு தேன்குழல், அதிரசம் வாங்கி கொடுத்து விட்டேன், வீட்டில் செய்வதால் நாம் செய்தது போலவே இருக்கும்.
எல்லோர் வீடுகளிலும் குலோப்ஜாமுன் செய்வார்கள், அதனால் ரசகுல்லா கொடுக்கலாம் என்று வாங்கினேன். இனிப்பும் குறைவாக இருக்கும்.
இந்த வருட தீபாவளிக்கு மகன் , தங்கை மகன், அக்கா மகன் , எல்லோரும் புடவை எடுத்து கொடுத்தர்கள். பல காரங்கள் தம்பி தங்கைகள் கொண்டு வந்து முன்பே கொடுத்து விட்டு அவர்கள் வீட்டுக்கு அழைத்து போனார்கள்.
நானும் வழக்கம் போல பின்னர் வருகிறேன் என்று சொல்லி விட்டேன்.
குடியிருப்பு வளாக நட்புகள் வேறு பலகாரம் கொடுத்து விட்டார்கள் சனிக்கிழமையே! நானும் அவர்களுக்கு வைத்து கொடுத்து விட்டேன்.
அரவிந்த் செட்டி நாட்டு பலகாரம்
ஸ்ரீ பத்மாவதி கேட்டரிங்கில் வாங்கியதை கீழ்வீட்டு மாமி கொடுத்து போனார்கள்
வீட்டில் பெரிய தூக்குகள், பிரிட்டாடினியாபிஸ்கட் டின்னில் பலகாரங்கள் செய்து வைப்போம்.
பலசரக்கு கடையில் பிஸ்கட் டின் புதுசாக வேண்டும் என்று சொல்லி வைப்போம் அவர் நினைவாக எடுத்து வைத்து கொடுப்பார், அதில் அடைத்து வைக்கும் குறுக்கு, தேன்குழல், தட்டைஎல்லாம் நல்ல மொறு மொறு என்றும் இருக்கும்.
வீட்டில் நிறைய செய்து அக்கம் பக்கம் விநியோகம் செய்த காலங்கள் போய் இப்படி வாங்கி கொடுக்கும் காலம் ஆகிவிட்டது. செய்து வைத்தால் சாப்பிட ஆட்கள் இல்லை, செய்யவும் உடலில் பலம் இல்லை .
"அப்பா ஏன் இப்படி நிறைய செய்கிறாய் உடலை வருத்தி கொள்ளாதே "என்றால் அம்மா சொல்வார்கள் "பார்த்தால் நிறைய இருப்பது போல இருக்கும் பகிர்ந்தால் கொஞ்சமாகி விடும் என்பார்கள்.
இப்போது வீடு வீடாய் கொண்டு கொடுக்கவும் ஆள் இல்லை. வீட்டுக்கு கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு கொடுக்க வேண்டுமே ! அதுதான் வாங்கி வைத்து கொள்ள வேண்டி உள்ளது.
இது எல்லாம் என் சொந்தங்கள் கொடுத்தவை
இப்படி டிரேயில் வைத்து வீடுவீடாய் அம்மா கொடுத்தை எடுத்து கொண்டு அக்கம் பக்கம், உறவுகளுக்கு கொடுத்த நினைவுகள் வருகிறதா? தீபாவளி விடியற்காலையில் செய்யும் பஜ்ஜி , வடை, சுசியமும் இருக்கும் முன்பு இப்போது அது கிடையாது முதல் நாளே கொடுத்து விடுவதால்.
தீபாவளிக்கு வரும் பத்திரிக்கைகளில் பண்டிகை ஸ்பெஷ்ல் மலர்களில் தீபாவளி பட்சணங்கள் 108 அப்படி இப்படி என்று களை கட்டும்.
அது போல இபோது யூடியூப் காணொளிகள் களை கட்டுகிறது.
இனிப்பு, நெய் நிறைய சேர்த்து கொள்ள மாட்டேன் என்பவர்கள் நெய்யில்லாமல், இனிப்பு குறைவாக போட்டு மைசூர்பாக்எளிதாக செய்யும் பட்சணங்கள் என்று மக்களை கவர்ந்து இழுக்கிறார்கள் அழகிய படங்களுடன்
.https://www.youtube.com/shorts/8ywyWw8Wb1Q
https://www.youtube.com/watch?v=k2RG0ukfGTY
இந்த வருடம் வந்த புது பாடல் கேட்டுப்பாருங்கள்.
இந்த பாடலில் எண்ணெய் தேய்த்து குளித்து , தீபங்களை ஏற்றி வைத்து புத்தாடை அணிந்து பலகாரம் உண்டு, வெடி வெடிப்பதில் நம் கெத்தை காட்டுவோம் என்று மகிழ்வாய் பாடுகிறார் தேவகோட்டை அபிராமி.
தீபாவளி என்றால் வெடி இல்லாமல் இருக்குமா? இப்போது உள்ள இளவயது குழந்தைகள் வெடி வைப்பதில் கெத்து காட்டுவார்கள் என்று இவர் சொல்கிறார். முன்பு வெடிகள் வாங்கி தந்து அதில் பாதியை கார்த்திகைக்கு வைத்து கொள்ளுங்கள் என்று சொல்லும் பெற்றோர் . இப்போது குழந்தைகள் ஆசைபட்டால் வேண்டும் அளவு உங்கள் ஆசைக்கு வெடித்து கொள்ளுங்கள் கார்த்திகைக்கு பின்னர் வாங்கி கொள்ளலாம் என்று சொல்லும் பெற்றோர்.
வானத்தில் வெடிக்கும் வாணங்கள், பூசட்டி, மத்தப்பு ஓளியில் தீபாவளி வாழ்த்துடன் பாட்டு நிறைவாகி விட்டது கண்டு மகிழுங்கள்.
வெடிப்பவர்கள் பாதுகாப்பாய் வெடித்து மகிழுங்கள்
இப்போது நாள் தோறும் தீபாவளி கொண்டாலாம் நினைத்த போது பலகாரங்கள், நினைத்த போது துணிமணிகள் என்று ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி கொண்டு இருக்கும் காலத்தில் இருக்கிறோம்.
தீபாவளிக்கு முன்பு இருந்தே பழைய நினைப்புகளை அசைபோட ஆரம்பித்து விட்டேன். தீபாவளி கொண்டாடிய காலங்கள் மனத்திரையில் வந்து போகிறது.
அப்பா , அம்மா, சகோதர சகோதரிகளுடன் கொண்டாடியது, அப்புறம் புகுந்தவீட்டினர்,கணவர், குழந்தைகளுடன் கொண்டாடியது, பின்னர் மகன், மகளுடன் கொண்டாடியது என்று நினைவுகள் வந்து போகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுகளை நமக்கு தந்து செல்கிறது.
மடிகணினியின் கீபோர்ட் வேலை செய்யவில்லை, மகன் தந்த ஆலோசனைபடி ஒயர்லெஸ் கீபோர்டு வைத்து இப்போது அடித்து கொண்டு இருக்கிறேன்.
பக்கத்து வீட்டு ராதா அவர் நடத்தும் கம்ப்யூட்டர் கம்பெனியிலிருந்து மடிகணினியை சரிப்பார்க்க ஆள் அனுப்பினார், அவரும் பார்த்து விட்டு கீபோர்டு தான் கெட்டுப்போய் இருக்கிறது என்றார்.
அவரும் மகன் சொன்ன ஆலோசனைபடி இது தான் இப்போது நல்லது இப்படியே இருக்கட்டும் தீபாவளிக்கு அப்புறம் மடிகணினியின் கீபோர்டை சரி செய்யலாம் என்றார்.
எது எப்படியோ இறை அருளால் எனக்கு பதிவு போட முடிகிறது , உங்கள் எல்லோருக்கும் வாழ்த்து சொல்ல முடிகிறது அது போதும். மகன், ராதா இறைவன் எல்லோருக்கும் நன்றிகள்.
அனைவருக்கும் மீண்டும் இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். எல்லோரும் உற்றம், சுற்றத்தோடு மகிழ்வாய் கொண்டாடுங்கள்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்
-----------------------------------------------------------------------------------------------------
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குநல் வாழ்த்துகளுக்கு நன்றி
ரசகுல்லாவில் இனிப்பு கம்மியாக இருக்கும் என்றா சொல்கிறீர்கள்? அதிகம் அழுத்தப்பட்டிருக்கும் என்று எனக்குத்தோன்றும்!
பதிலளிநீக்குஆமாம், ரசகுல்லாவில் இனிப்பு கம்மியாக தான் இருக்கும். மற்ற இனிப்பு பலகாரங்களின் இனிப்பை விட அது குறைவுதான். அந்த ஜீராவை தவிர்த்து ரசகுல்லாவை மட்டும் சாப்பிடுங்க நீங்க.
நீக்குஅடேங்கப்பா... நவராத்திரி கொலு போல ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஸ்வீட் காரம் பாக்ஸ் வந்திருக்கிறதே... பதில் மரியாதை செய்ய நாமும் நிறைய வாங்கி வைக்க வேண்டும் போலிருக்கே.. இங்கே அந்த பழக்கமெல்லாம் இல்லை.
பதிலளிநீக்குஎங்க..நெல்லை வீட்டுப் பக்கம் எட்டிப் பார்த்திடப் போகிறாரோ என்ற முன்னெச்சரிக்கையா?
நீக்கு//அடேங்கப்பா... நவராத்திரி கொலு போல ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஸ்வீட் காரம் பாக்ஸ் வந்திருக்கிறதே... பதில் மரியாதை செய்ய நாமும் நிறைய வாங்கி வைக்க வேண்டும் போலிருக்கே.. இங்கே அந்த பழக்கமெல்லாம் இல்லை.//
நீக்குமுதல் படம் நான் வாங்கியது, இரண்டு வீட்டிலிருந்து கடை பலகாரம், தட்டில் உள்ளது சொந்தங்கள் கொடுத்தது வீட்டில் செய்தது.
நீங்கள் சொல்வது சரிதான் பதில் மாரியாதை செய்ய வாங்கி வைத்து கொடுத்தேன், அவர்கள் அதை எதிர்பார்ப்பது இல்லை, இருந்தாலும் நாம் செய்தால் தான் நமக்கு திருபதி இல்லையா!
வெடிய வெடிச்சு பாரு..
பதிலளிநீக்குதீபாவளி ஜோரு
எண்ணெய் தேய்ச்சு குளிச்சு - நீ
ஜாலியா கொண்டாடு..
பாட்டு ரொம்ப ரசனை. கேட்கும்போதே ஆட வைக்கிறது. அவரும் ஆடிக்கொண்டே பாடுகிறார். என்ன ஒரு உற்சாகம்... அருமை. நல்ல எடிட்டிங்.. ரிதமிக்காக வரும் தாளம்... கணவரே இசை அமைத்திருப்பாரோ..
//பாட்டு ரொம்ப ரசனை. கேட்கும்போதே ஆட வைக்கிறது. அவரும் ஆடிக்கொண்டே பாடுகிறார். என்ன ஒரு உற்சாகம்... அருமை. நல்ல எடிட்டிங்.. ரிதமிக்காக வரும் தாளம்... கணவரே இசை அமைத்திருப்பாரோ.. //
நீக்குபாட்டு பிடித்து இருக்கா மகிழ்ச்சி. அபிராமி நிறைய ஆல்பம் செய்து இருக்கிறார் இன்னும் திருமணம் ஆகவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கரில் பக்தி ஸ்பெஷல் நிகழச்சியில் மிக நன்றாக பாடினார்.
ஆமாம் இப்;போது நாளெல்லாம் தீபாவளி.. நினைத்த நேரத்தில் பலகாரம், புதுத்துணி... தீபாவளியின் சில எதிர்பார்ப்பு உற்சாகங்கள் இதிலேயே வடிந்து விடுகின்றன.
பதிலளிநீக்கு//ஆமாம் இப்;போது நாளெல்லாம் தீபாவளி.. நினைத்த நேரத்தில் பலகாரம், புதுத்துணி... தீபாவளியின் சில எதிர்பார்ப்பு உற்சாகங்கள் இதிலேயே வடிந்து விடுகின்றன.//
நீக்குஅக்கம் பக்கத்தில் துணிமணிகளை காட்டி, நாம் செய்த பலகாரம் கொடுத்து எப்படி செய்தீர்கள் நன்றாக இருக்கிறது என்று அவர்கள் சொல்வதில் மகிழ முடிவது இல்லை இப்போது. நீங்கள் சொல்வது போல நாள்தோறும் தீபாவளிதான்.
மடிக்கணினியில் தட்டச்சு செய்வது எனக்கு அலர்ஜி! அதில் இருக்கும் கீபோர்ட் நன்றாய் இருந்தாலுமே நான் ஒரு எக்ஸ்டர்னல் கீ போர்ட் வைத்துதான் அடிப்பேன்!
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
//மடிக்கணினியில் தட்டச்சு செய்வது எனக்கு அலர்ஜி! அதில் இருக்கும் கீபோர்ட் நன்றாய் இருந்தாலுமே நான் ஒரு எக்ஸ்டர்னல் கீ போர்ட் வைத்துதான் அடிப்பேன்! //
நீக்குநீங்கள் சொல்வது போல எளிதாகதான் இருக்கிறது.
//உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.///
உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
தீபாவளிநல்வாழ்த்துகள் கோமதி அரசு மேடம். அன்புக்குரிய கவினுக்கும் வாழ்த்தைச் சொல்லிவிடுங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//தீபாவளிநல்வாழ்த்துகள் கோமதி அரசு மேடம். அன்புக்குரிய கவினுக்கும் வாழ்த்தைச் சொல்லிவிடுங்கள்.//
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி, உங்கள் வாழ்த்தை கவினிடம் சொல்லி விடுகிறேன்.
பதிவில் என் கண்ணையும் கருத்தையும் கவரும் பட்சணப் படங்கள். பதிவு மிக நன்று.
பதிலளிநீக்குஇருந்தாலும் ஒரு சோக இழையை பதிவு உருவாக்குகிறது. கடைகளில் வாங்கி, விருந்தினர்களுக்குக் கொடுக்கும் வழக்கமே பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே ஏற்பட்டிருக்கவேண்டும்.
மனைவியிடம் சொன்னேன், எதுவும் பண்ண வேண்டாம், கடைல ஆர்டர் பண்ணுகிறேன் என்று.
//பதிவில் என் கண்ணையும் கருத்தையும் கவரும் பட்சணப் படங்கள். பதிவு மிக நன்று.//
நீக்குஉங்களுக்காக தான் பல்கார விலை பட்டியலை பகிர்ந்தேன்.
//இருந்தாலும் ஒரு சோக இழையை பதிவு உருவாக்குகிறது. கடைகளில் வாங்கி, விருந்தினர்களுக்குக் கொடுக்கும் வழக்கமே பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே ஏற்பட்டிருக்கவேண்டும்.//
ஆமாம் , 10 ஆண்டுகளுக்குள் தான் இருக்கும் என்று நானும் நினைக்கிறேன்.
//மனைவியிடம் சொன்னேன், எதுவும் பண்ண வேண்டாம், கடைல ஆர்டர் பண்ணுகிறேன் என்று.//
பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு பிடித்தது என்று செய்ய மனம் வரும். எல்லாம் வெளியூரில் , வெளி நாட்டில் என்று இருக்கும் போது வேண்டாம் என்று மனம் வந்து சொல்லிவிடும் என்று நினைக்கிறேன்.
எப்போதுமே குழந்தைகள் இருந்தால், அதைப் பண்ணு, இது வேணும் என்று சொல்வார்கள். மனைவிக்கு கஷ்டமாக இருந்தாலும் மன மகிழ்ச்சி இருக்கும். இப்போது இவற்றில், அதிலும் மனைவியைப் பண்ணச் சொல்லிச் சாப்பிடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. அவள் செய்யும் முறுக்கு எனக்கு ரொம்பவே பிடிக்கும். திரும்ப கஷ்டப்படுவாளே என்று சொல்லவில்லை.
நீக்குதிருச்சியிலிருந்து இரு வாரங்கள் முன்பு தட்டை, அதிரசம் பொரிவிளங்காய் உருண்டை, மனோகர உருண்டை, கைமுறுக்கு போன்றவைகள் மொத்தம் இரண்டு கிலோவிற்று (1200 ரூ) ஆர்டர் செய்து உடனே வந்துவிட்டது. சாந்தி விலாஸில் ஆர்டர் செய்து அனுப்ப டிடிடிசி கொரியர் கம்பெனி மூலமாகார்டர் செய்ததில் 1500 ரூ பணம் போய்விட்டது.
பதிலளிநீக்கு//திருச்சியிலிருந்து இரு வாரங்கள் முன்பு தட்டை, அதிரசம் பொரிவிளங்காய் உருண்டை, மனோகர உருண்டை, கைமுறுக்கு போன்றவைகள் மொத்தம் இரண்டு கிலோவிற்று (1200 ரூ) ஆர்டர் செய்து உடனே வந்துவிட்டது.//
நீக்குநன்றாக இருந்ததா?
//சாந்தி விலாஸில் ஆர்டர் செய்து அனுப்ப டிடிடிசி கொரியர் கம்பெனி மூலமாகார்டர் செய்ததில் 1500 ரூ பணம் போய்விட்டது.//
ஏன் அப்படி அதிக பணம் போய் விட்டது?
அவர்கள் பார்த்து விட்டு மீதி தொகையை திருப்பி அனுப்பவில்லையா?
உடல் நலம் சரியில்லாதபோதும் வந்து பதிவை படித்து கருத்துக்கள் கொடுத்தமைக்கு நன்றி.
அந்த கொரியர் காரன், வேலையை விட்டுவிட்டான் போலிருக்கிறது. அனுப்பின மொத்தப் பணத்தையும் அவன் அமுக்கிவிட்டான். அடுத்த வாரம் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறான். எனக்கு நம்பிக்கை இல்லை.
நீக்குபாதுஷா படமும் எல்லா மிக்சர் பாக்கெட்டுகளின் படங்களும் ஆசையைத் தூண்டுகின்றன.
பதிலளிநீக்கு//பாதுஷா படமும் எல்லா மிக்சர் பாக்கெட்டுகளின் படங்களும் ஆசையைத் தூண்டுகின்றன.//
நீக்குருசியும் நன்றாக இருந்தது நெல்லை.
எனக்கு நெல்லை சாந்திவிலாஸ் மிக்சர் மாத்திரமே ரொம்பப் பிடிக்கும். முன்பெல்லாம் கடலை எண்ணெயில் பொரித்தார்கள். தற்போது விலை கட்டுப்படியாகவில்லை போலிருக்கிறது. மற்ற ரிஃபைண்ட் ஆயிலில் பொரிக்கும் மிக்சருக்கு அந்த ருசி வருவதில்லை. சாந்திவிலாஸ் மிக்சரில், சிறிய அளவில் மைதா பிஸ்கெட்டும் போடுவார்கள். அது மாத்திரம் தனியாகக் கிடைக்குமா என்றும் கேட்டிருக்கிறேன்.
நீக்கு//சாந்திவிலாஸ் மிக்சரில், சிறிய அளவில் மைதா பிஸ்கெட்டும் போடுவார்கள். அது மாத்திரம் தனியாகக் கிடைக்குமா என்றும் கேட்டிருக்கிறேன்.//
நீக்குஆச்சி பிஸ்கட் என்று தான் என் மகன் சொல்வான், என் மாமியார் நன்கு செய்வார்கள். அவர்கள் மைசூர்பா, பாதம் பர்பி , பாசிபருப்பு (நெய் உருண்டை)உருண்டை , தட்டை, கைமுறுக்கு என்று நன்றாக செய்தாலும் என் மகனுக்கு ஆச்சி பிஸ்கட் மிகவும் பிடிக்கும் தனியாக கிடைக்கிறது. அமெரிக்காவில் கூட இங்கு இருந்து வாங்கி விற்கிறார்கள். மகனிடம் கேட்கிறேன் எங்கிருந்து வருகிறது என்று
பேரனுக்கு பிடிக்கும்.
நான் செய்தாலும் அதற்கு பேர் ஆச்சி பிஸ்கட் தான்.
அரிசோனாவில் என் மருமகளுனின் தோழி எனக்கும் பிடித்த நட்பு அவர்கள் இந்த ஆண்டு முதலில் செய்த தீபாவளி பலகாரம் இந்த ஆச்சி பிஸ்கட் தான். அப்போது என் நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.
எனக்கு தினம் அவர்கள் செய்யும் பலகாரங்களை படம் எடுத்து அனுப்புவார்கள்.
அடையார் ஆனந்த பவனில் கிடைக்கும்.
தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றிய பதிவு படங்களுடன் நன்று.
பதிலளிநீக்குநாங்கள் இருவர் மட்டுமே. வயதும் கூடிவிட்டதால் ஆர்வம் குறைந்து விட்டது. மேலும் கேரளத்தில் தீபாவளி பெரிய கொண்டாட்டம் இல்லை. ஓணம் மட்டும் தான். ஓமப்பொடி, முறுக்கு, மைசூர பாக், பீட்ரூட் ஹல்வா மனைவி செய்தார்கள். அக்கம் பக்கத்தில் கொடுக்க. அக்கம் பக்கத்தவரிடம் இருந்து ஒன்றும் வராது, எல்லோரும் மலையாளிகள்.
வாழ்த்துக்கள்.
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்கு//தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றிய பதிவு படங்களுடன் நன்று.//
நன்றி.
//நாங்கள் இருவர் மட்டுமே. வயதும் கூடிவிட்டதால் ஆர்வம் குறைந்து விட்டது.//
நீங்கள் சொல்வது உண்மை
சிறு வயது உற்சாகம் வயது ஆனதும் இல்லைதான்.
//மேலும் கேரளத்தில் தீபாவளி பெரிய கொண்டாட்டம் இல்லை. ஓணம் மட்டும் தான். ஓமப்பொடி, முறுக்கு, மைசூர பாக், பீட்ரூட் ஹல்வா மனைவி செய்தார்கள். அக்கம் பக்கத்தில் கொடுக்க. அக்கம் பக்கத்தவரிடம் இருந்து ஒன்றும் வராது, எல்லோரும் மலையாளிகள்.
வாழ்த்துக்கள்.//
அக்கம் பக்கம் கொடுக்க இத்தனை பலகாரங்கள் செய்து இருப்பதை படித்து மகிழ்ச்சி.
அவர்கள் பண்டிகைக்கு கொடுப்பார்கள் இல்லையா?
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
நீக்குமலையாளிகளுக்கு பலகாரங்கள் செய்யும் வழக்கம் இல்லை. அவர்களுடைய முக்கிய பண்டிகைகள் ஓணம், விஷு, நவராத்திரி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி. பண்டிகை நாட்களில் கோயிலுக்கு போவதும் சத்ய எனும் விருந்து
சாப்பிடுவதும் தான் முக்கியம். வீட்டில் சாமிக்கு படையல் என்பது கிடையாது.
Jayakumar
சத்ய எனும் விருந்துக்கு கூப்பிடுவார்களா?
நீக்குஅடைபிரதமன், அப்பம் எல்லாம் நன்றாக செய்வார்கள் .
எப்படியோ நீங்கள் கொடுக்கும் பலகாரங்களை மறுக்காமல் வாங்கி கொள்கிறார்களே அது போதும். மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
எனக்கு டப்பாக்களில் அடைக்கப்பட்டுவரும் ரசகுல்லா ஜாமூன் பிடிப்பதில்லை.
பதிலளிநீக்குபதிவின் முதலில் போட்டுள்ள கோலம் கண்ணைக் கவர்கிறது
//எனக்கு டப்பாக்களில் அடைக்கப்பட்டுவரும் ரசகுல்லா ஜாமூன் பிடிப்பதில்லை.//
நீக்குஓ அப்படியா? என் ஓர்படி கல்கத்தாவில் இருந்த போது அங்கு ரசகுல்லாதான் ஸ்பெஷல் அதை கற்றுக் கொண்டு நன்றாக செய்வார்கள். எங்களுக்கு பிடிக்கும்.
//பதிவின் முதலில் போட்டுள்ள கோலம் கண்ணைக் கவர்கிறது//
அது கூகுளில் தேடி போட்டேன் பட உதவி கூகுள் என்று போட மறந்து விட்டேன்.
இப்போது கோலம் சின்ன சின்னதாக போடுகிறேன். சில அச்சு கோலம் போடுகிறேன்.
இந்த கோலம் எப்படி போடுவது என்று வீடியோ போட்டு இருந்தார்கள் அதில் கோலத்தை போட்டோவாக எடுத்தேன். வளையல்களை வைத்து இந்த கோலம் போட்டார்கள். ஆந்திரா சகோதரி போட்டு காட்டினார்.
நீக்குபண்டிகை கோலங்கள் என்று இன்ஸடாவில் போட்டு காட்டினார்.
நாம் கஷ்டப்பட்டு பண்ணி, அதைப் பிறருக்கு பகிர்வதில், அவங்க வீட்டுல செய்ததை சிறிது வாங்கிக்கொள்வதில் இருக்கும் மன மகிழ்வு, கடைல வாங்கி விநியோகம் செய்வதில் இருக்குமா? ரொம்ப ஃபார்மாலிட்டி மாதிரி ஆகிவிடாது?
பதிலளிநீக்குஇருந்தாலும் காலத்துக்கு ஏற்றபடி இப்படித்தான் செய்யவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.
இனிப்பு காரம் படங்கள், விலைப்பட்டியலுடனும், தொடர்பு கொள்ள நம்பர்களுடனும் வெளியிட்டதில் எனக்கு மகிழ்ச்சி
//நாம் கஷ்டப்பட்டு பண்ணி, அதைப் பிறருக்கு பகிர்வதில், அவங்க வீட்டுல செய்ததை சிறிது வாங்கிக்கொள்வதில் இருக்கும் மன மகிழ்வு, கடைல வாங்கி விநியோகம் செய்வதில் இருக்குமா?//
நீக்குஇருக்காதுதான். ஆனாலும் இதுவும் மகிழ்ச்சியாக எடுத்து கொள்ள வேண்டிய காலம் ஆகி விட்டது. கடை பலகாரம் நன்றாக இருந்தால் எங்கு வாங்கினீர்கள்? என்று கேட்கிறோம் தானே!
//ரொம்ப ஃபார்மாலிட்டி மாதிரி ஆகிவிடாது?//
அப்படித்தான் ஆகி விட்டது. பண்டம் ஈகை பண்டிகை என்பதை காலம் காலமாக பின் பற்ற பழக்க வழக்கங்களை விட முடியவில்லையே!
//இருந்தாலும் காலத்துக்கு ஏற்றபடி இப்படித்தான் செய்யவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.//
ஆமாம், காலத்துக்கு ஏற்றபடி இப்படித்தான் செய்ய முடியும் உங்கள் நினைப்பு சரியே.
//இனிப்பு காரம் படங்கள், விலைப்பட்டியலுடனும், தொடர்பு கொள்ள நம்பர்களுடனும் வெளியிட்டதில் எனக்கு மகிழ்ச்சி//
ஸ்ரீ பத்மாவதி கேட்டரிங் கல்யாணமண்டபத்தில் ஸ்டால் போட்டார்களாம் , அங்கு போய் எல்லோருக்கும் கொடுக்க மொத்தமாக வாங்கி வந்தாக சொன்னார்கள் கீழ் வீட்டில் உள்ளவர்கள்.
மீன்டும் வந்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.
கோமதிக்கா தீபாவளி நல் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குமுதல் படம் அப்படியே கவர்கிறது. சூப்பர்!
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குகோமதிக்கா தீபாவளி நல் வாழ்த்துகள்!
முதல் படம் அப்படியே கவர்கிறது. சூப்பர்!//
ஆமாம், அது என்னை கவர்ந்து விட்டது அதனால்தான் பகிர்ந்தேன்.
மணம்வோலம் - மணம்வோலம் பொட்டுக்கடலை மாவு அரிசி மாவில் தேங்குழல் போலப் பிழிந்து வெல்லப்பாகில் போட்டு எடுப்பது இல்லைஅயக்கா?
பதிலளிநீக்குமனோகரம் திருனெல்வேலி பக்கங்களில் கடலை மாவு அரிசி மாவில் செய்வது வெல்லப்பாகில் போட்டு எடுப்பது. என் மாமியார் வீட்டில் அர்சி மாவு உளுந்துமாவு தேங்குழலை வெல்லப்பாகில் போட்டு எடுப்பாங்க அது
கீதா
//மணம்வோலம் - மணம்வோலம் பொட்டுக்கடலை மாவு அரிசி மாவில் தேங்குழல் போலப் பிழிந்து வெல்லப்பாகில் போட்டு எடுப்பது இல்லைஅயக்கா?//
நீக்குதேன்குழல் செய்து அதை வெல்லபாகில் போட்டு உருட்டாமல் உதிரியாக கொடுத்தார்.
//மனோகரம் திருனெல்வேலி பக்கங்களில் கடலை மாவு அரிசி மாவில் செய்வது வெல்லப்பாகில் போட்டு எடுப்பது. என் மாமியார் வீட்டில் அர்சி மாவு உளுந்துமாவு தேங்குழலை வெல்லப்பாகில் போட்டு எடுப்பாங்க அது//
இரண்டு முறையிலும் செய்வார்கள். உங்கள் மாமியார் வீட்டில் செய்வது போலதான் இவர் செய்து தந்தார்.
வீட்டில் செய்வதால் நாம் செய்தது போலவே இருக்கும்.//
பதிலளிநீக்குபரவாயில்லையே நல்லா செய்யறாங்க இல்லையா.
தம்பி தங்கைகள் இப்படி அன்புடன் வருவது எல்லாமே மனதிற்குத் தெம்பும் மகிழ்ச்சியும் தரும் ஒன்று. மன நலத்திற்கும் நல்லது அக்கா. உறவுகள் விடாமல் இருப்பதும்.
கீதா
/பரவாயில்லையே நல்லா செய்யறாங்க இல்லையா.//
நீக்குஆமாம், வீட்டில் செய்வது போலவெ இருப்பதால் தான் வாங்க முடிகிறது.
//தம்பி தங்கைகள் இப்படி அன்புடன் வருவது எல்லாமே மனதிற்குத் தெம்பும் மகிழ்ச்சியும் தரும் ஒன்று. மன நலத்திற்கும் நல்லது அக்கா. உறவுகள் விடாமல் இருப்பதும்.//
அவர்கள் இருக்கும் தெம்பில் தான் நான் இருக்கிறேன்.
தம்பி பெங்களுர் வந்து இருக்கிறான் மகள் வீட்டுக்கு.
நீ ஒன்றும் செய்ய வேண்டாம் வா என்கிறார்கள் அனைவர் வீட்டுக்கும் என்னால் போக முடியாது அதனால் இன்னொரு நாள் வருவதாக சொல்லி விட்டேன்.
உறவுகள் தான் பலம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா
இப்படி எக்சேஞ்ச் ஆகும் சுவீட், காரம் எல்லாம் பல வீடுகளிலும் நிறைய சேர்ந்துவிடும் இல்லையாக்கா? குழந்தைகள் இருந்தால் செலவாகிவிடும். இல்லைனா எல்லாரும் மத்தவங்களுக்குக் கொடுத்துவிடுவாங்க இல்லையா? தந்தவங்க வீட்டுக்கே போய்விடாமல் வேறு கவனமாக இருக்கணும் இல்லையாக்கா.
பதிலளிநீக்குஇங்கும் மாடி வீட்டில் இருந்து தீபாவளிக்கான ஸ்வீட் பாக்ஸ் வந்தது. இப்ப அதை இங்கு குப்பை எடுக்க வருபவர்களுக்குக் கொடுக்க முடியாது ஏன்னா அவங்களும் குப்பை போட வருவாங்களே. ந
வேறு ஏழைக் குழந்தைகள் பார்க்க வேண்டும். கோவில் பக்கம் போனால் இருப்பாங்க,. நாங்களும் ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம்னு இருக்கோம். அக்குழந்தைகளுக்கு.
கீதா
//இப்படி எக்சேஞ்ச் ஆகும் சுவீட், காரம் எல்லாம் பல வீடுகளிலும் நிறைய சேர்ந்துவிடும் இல்லையாக்கா? குழந்தைகள் இருந்தால் செலவாகிவிடும். இல்லைனா எல்லாரும் மத்தவங்களுக்குக் கொடுத்துவிடுவாங்க இல்லையா? தந்தவங்க வீட்டுக்கே போய்விடாமல் வேறு கவனமாக இருக்கணும் இல்லையாக்கா.//
நீக்குநம் வீட்டுக்கு வரும் உறவுகளுக்கு கொடுக்க வேண்டியதுதான்.
நம் வீட்டில் வாங்கியதை மட்டும் தான் அக்கம் பக்கத்தில் கொடுக்க வேண்டும். உறவுகள் வீடுகளுக்கு போகும் போது மற்றவர்கள் கொடுத்தவற்றை கொடுத்து பகிர்ந்து உண்ண வேண்டியதுதான்.
//வேறு ஏழைக் குழந்தைகள் பார்க்க வேண்டும். கோவில் பக்கம் போனால் இருப்பாங்க,. நாங்களும் ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம்னு இருக்கோம். அக்குழந்தைகளுக்கு.//
ஆமாம், அவர்களுக்கு கொடுக்கலாம்.
ஆமாம் ஊரில் இருந்தப்ப தூக்கு தூக்கு பெரிய தூக்குகளில் செய்து வைப்பதுண்டு. அல்வா கண்டிப்பாகச் செய்யப்படும். மிக்சர். தவிர தேங்குழல் பாதுஷா ஜாமூன் என்று . கண்டிப்பாக ஒக்கோரை உண்டு.
பதிலளிநீக்குவிநியோகத்திற்கு பாதுஷா மற்றும் மிக்சர். அப்புறம் ஒக்கோரையும்.
எங்கள் வீட்டிலும் டின்னிலும் சேர்த்து வைப்பதுண்டு.
கீதா
//ஆமாம் ஊரில் இருந்தப்ப தூக்கு தூக்கு பெரிய தூக்குகளில் செய்து வைப்பதுண்டு. அல்வா கண்டிப்பாகச் செய்யப்படும். மிக்சர். தவிர தேங்குழல் பாதுஷா ஜாமூன் என்று . கண்டிப்பாக ஒக்கோரை உண்டு.//
நீக்குஉக்காரை எல்லோரும் செய்வதால் நான் செய்ய மாட்டேன், எங்கள் வீட்டில் என் கணவருக்கு பிடிக்காது அதனால் செய்வதே இல்லை.
என் மாமியார் செய்ய மாட்டார்கள் திருநெல்வேலியில் எல்லோர் வீடுகளிலும் செய்வார்கள்.
//விநியோகத்திற்கு பாதுஷா மற்றும் மிக்சர். அப்புறம் ஒக்கோரையும்.
எங்கள் வீட்டிலும் டின்னிலும் சேர்த்து வைப்பதுண்டு.//
ஆமாம் , அது எல்லாம் ஒரு காலம்.
ரவாலாடு விட்டுப் போச்சு அதுவும் கண்டிப்பாகச் செய்வாங்க. ஊரில் பல வீடுகளில் பொட்டுக்கடலை லாடு செய்வாங்க அது எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அது வந்ததும் போட்டி போடுவோம். திருட்டுத்தனமாகச் சாப்பிட முடியாத லாடு அது. வாயெல்லாம் பொடி தெரிந்துவிடும். ரொம்ப நைசாக இருப்பதால்.
பதிலளிநீக்குரவையை வறுத்து சர்க்கரையுடன் சேர்த்து மெஷினில் பொடித்து வைத்துவிடுவாங்க. ஏலமும் கலந்து. அப்புறம் தீர்ந்தால் உடனே பிடித்து விநியோகத்துக்கு.
கீதா
//ரவாலாடு விட்டுப் போச்சு அதுவும் கண்டிப்பாகச் செய்வாங்க. ஊரில் பல வீடுகளில் பொட்டுக்கடலை லாடு செய்வாங்க அது எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அது வந்ததும் போட்டி போடுவோம். திருட்டுத்தனமாகச் சாப்பிட முடியாத லாடு அது. வாயெல்லாம் பொடி தெரிந்துவிடும். ரொம்ப நைசாக இருப்பதால்.
நீக்குரவையை வறுத்து சர்க்கரையுடன் சேர்த்து மெஷினில் பொடித்து வைத்துவிடுவாங்க. ஏலமும் கலந்து. அப்புறம் தீர்ந்தால் உடனே பிடித்து விநியோகத்துக்கு.//
உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
ப்படி டிரேயில் வைத்து வீடுவீடாய் அம்மா கொடுத்தை எடுத்து கொண்டு அக்கம் பக்கம், உறவுகளுக்கு கொடுத்த நினைவுகள் வருகிறதா? //
பதிலளிநீக்குஆமாம். நினைவுகள். நாங்க குட்டீஸ்தான் போவோம்.
ஆமாம் இப்பவும் இதழ்களில் இணைப்புகள் தீபாவளி பலகாரங்கள் வருகின்றன என்றே தோன்றுகிறது முன்பு உண்டு.
யுட்யூபில் கேட்கவே வேண்டாம் ஒருத்தர் போட்டால் உடனே எல்லாரும் போட்டுடுவாங்க போல.
கீதா
நீக்கு//ஆமாம். நினைவுகள். நாங்க குட்டீஸ்தான் போவோம்.
ஆமாம் இப்பவும் இதழ்களில் இணைப்புகள் தீபாவளி பலகாரங்கள் வருகின்றன என்றே தோன்றுகிறது முன்பு உண்டு.
யுட்யூபில் கேட்கவே வேண்டாம் ஒருத்தர் போட்டால் உடனே எல்லாரும் போட்டுடுவாங்க போல.//
இப்போதும் தீபாவளி மலர்கள் வரும் நாம் வாங்குவது இல்லை.
நல்லதுதானே எல்லோரும் கடையில் வாங்காமல் இப்படி செய்யவும் செய்கிறார்கள் என்று தெரிகிறது. அதைப்பார்த்து நாலு பெர் செய்வார்கள் தானே.
தீபாவளிப் பாடல் போல எல்லாம் போடுறாங்களா பசங்க. அட! ஆனால் இளைஞர்கள் நல்ல திறமைப் படைத்தவங்களா இருக்காங்க. இப்ப அதுக்கு ஏற்றாற்போல பல மீடியாக்கள் இருக்கின்றன வெளிப்படுத்தவும். நல்லாருக்குக்கா.
பதிலளிநீக்குநம் வீட்டில் வெடி வெடிக்கு பழக்கம் போய் பல பல வருங்கள் ஆகிவிட்டன,.
அக்கா ஸ்ரீராமும் வயர்லெஸ் கீ போர்ட் வைத்திருக்கிறார்.
வய்ர்லெஸ் கீபோர்ட் சூப்பர் அக்கா. எஞ்சாய்!!!!
தீபாவளி வாழ்த்துகள் அக்கா உங்க சுற்றங்கள் எல்லாருக்கும் உங்களுக்கும். உங்கள் செல்லப் பேரன்கள் பேத்திக்கும் ..
கீதா
//தீபாவளிப் பாடல் போல எல்லாம் போடுறாங்களா பசங்க. அட! ஆனால் இளைஞர்கள் நல்ல திறமைப் படைத்தவங்களா இருக்காங்க. இப்ப அதுக்கு ஏற்றாற்போல பல மீடியாக்கள் இருக்கின்றன வெளிப்படுத்தவும். நல்லாருக்குக்கா.//
நீக்குஇவர் கிராமிய பாடல்கள் நன்றாக பாடுகிறார்.
//நம் வீட்டில் வெடி வெடிக்கு பழக்கம் போய் பல பல வருங்கள் ஆகிவிட்டன,.//
ஒ சரி
//அக்கா ஸ்ரீராமும் வயர்லெஸ் கீ போர்ட் வைத்திருக்கிறார்.//
சொன்னார் பின்னூட்டத்தில்
//வய்ர்லெஸ் கீபோர்ட் சூப்பர் அக்கா. எஞ்சாய்!!!!//
வீட்டில் இருந்த பழைய கீ போர்ட் தான்.
//தீபாவளி வாழ்த்துகள் அக்கா உங்க சுற்றங்கள் எல்லாருக்கும் உங்களுக்கும். உங்கள் செல்லப் பேரன்கள் பேத்திக்கும் ..//
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. பேரன்கள் பேத்தியிடம் சொல்கிறேன்.
பாடல் பாடிய அபிராமியும் நல்ல துள்ளலுடன் பாடியிருக்கிறார் நமக்கும் பாடி ஆட வேண்டும் போன்று இருக்கு. இசையும் அருமை. எடிட்டிங்க் எல்லாமே சூப்பர். இளைய தலைமுறை நல்ல திறமையுடன் இருக்காங்க!!! பாட்டு நல்லாருக்கு தாளம் போட்டு ஆடும் வகையில்
பதிலளிநீக்குகீதா
//பாடல் பாடிய அபிராமியும் நல்ல துள்ளலுடன் பாடியிருக்கிறார் நமக்கும் பாடி ஆட வேண்டும் போன்று இருக்கு. இசையும் அருமை. எடிட்டிங்க் எல்லாமே சூப்பர். இளைய தலைமுறை நல்ல திறமையுடன் இருக்காங்க!!! பாட்டு நல்லாருக்கு தாளம் போட்டு ஆடும் வகையில்//
நீக்குபாடல் பிடித்து இருக்கா மகிழ்ச்சி.
அனைத்தையும் ரசித்து பின்னூட்டங்களை அள்ளி வழங்கி விட்டீர்கள் கீதா நன்றி நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும், நம் வலையுலக நட்புறவுகள் அனைவருக்கும் என் அன்பான தீபாவளி நல்வாழ்த்துகள். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும், நம் வலையுலக நட்புறவுகள் அனைவருக்கும் என் அன்பான தீபாவளி நல்வாழ்த்துகள். நன்றி சகோதரி.//
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குகொஞ்சம் ஓய்வு நேரத்தில் அழகான பதிவை படித்து கருத்துரை தருகிறேன். மீண்டும் கண்டிப்பாக வருகிறேன் சகோதரி. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//கொஞ்சம் ஓய்வு நேரத்தில் அழகான பதிவை படித்து கருத்துரை தருகிறேன். மீண்டும் கண்டிப்பாக வருகிறேன் சகோதரி. நன்றி.//
நீக்குகாலை வேலையால் நானும் இவ்வளவு நேரம் ஓய்வு எடுத்தேன், கால்களில் வலி . நீங்கள் நன்கு ஓய்வு எடுங்கள் மெதுவாக படிக்கலாம் பதிவை.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.