வெள்ளி, 26 செப்டம்பர், 2025

கொலு பார்க்க வாங்க

அழகான கொலு 


நமக்கு கொலு பார்ப்பது பிடிக்கும் தானே   ! அதுதான் உங்களை எல்லாம் அழைத்தேன் கொலு பார்க்க .

சிறு வயதில்  பார்த்த கொலுக்கள், நம் வீடுகளில் மிகவும் மகிழ்ச்சியாக வைத்த கொலு,  கொலு நினைவுகள் எல்லாம் நவராத்திரி காலத்தில் நினைவுக்கு வரும். உங்களுக்கும் மலரும் நினைவுகள்  வந்தால் சொல்லுங்கள். 

போன ஆண்டு கொலுவுக்கு   மகன் ஊரில் இருந்தேன்  (அரிசோனா)  அப்போது  மகன்  நண்பர்கள் வீட்டுக் கொலுவுக்கு அழைத்து சென்றான் . சென்ற ஆண்டு  அதில் சிலவற்றை தான் பகிர்ந்து இருந்தேன்.  மீதியை இந்த ஆண்டுப்பார்க்கலாம்.

இந்த பதிவில் ஒரு வீட்டில் வைத்து இருந்த கண்ணன் கதைகளை சொல்லும் கொலு படங்கள் இடம் பெறுகிறது.



எங்கள் குடியிருப்பு வளாகத்தில்  நவராத்திரி விழா  இதற்கு முந்திய பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.


கண்ணன் பிறப்பு காட்சிகள் 

குழந்தை கண்ணன் ஆனந்த ஊஞ்சலில்






வானம், பச்சை வயல்,  இயற்கை காட்சி என்று பின் புறம் அழகு  . யமுனை ஆறும் கண்ணன் கதைகளும் காட்சி அமைப்பு அழகு.


கம்சனின் சிறையில் குழந்தை கண்ணன் பிறப்பு,  குழந்தை கண்ணனை கூடையில்  சுமந்து  வசுதேவர் யமுனை ஆற்றை கடந்து  செல்லும் காட்சி


காளிங்க நர்த்தனம்


பாமா, ருக்மணி   துலாபார கதை ( யாருக்கு அன்பு அதிகம் என காட்டும் கதை நாரதர்  கலகம்  அவரும் நிற்கிறார்)
காளிங்க நர்த்தனம் ஆற்றில்  இருக்கிறது



 கண்ணன் லீலை அனைத்தும் சொல்லும் காட்சி


கோவர்த்தனக் கிரி


குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்


  திருமண வீட்டுக்  காட்சி   சீர்வரிசை ,
 கோயில் வழிபாடு, அரசமரத்து பிள்ளையார் பூஜை 



கல்யாண வீட்டு விருந்தில் சாப்பிடுவதை வீடியோ எடுக்கிறார்


கண்ணன் நண்பர்களுடன் விளையாடுதல்

கடைத்தெரு

 
கிராமத்துக் காட்சிகள்

அவர்கள் வீட்டில் இருந்த அஷ்ட லட்சுமிகளும் பெருமாளும்
எல்லோருக்கும் இவர்களின் ஆசியும் வேண்டும் தானே!

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக