சனி, 24 டிசம்பர், 2022

மலர் கோலங்கள்

மலர் கோலங்கள். 2021 ம் வருடம்  மே மாதம் மகன்  வீட்டு  தோட்டத்தில் அரளி செடிகளில்    அரளி பூக்கள் கொஞ்சம் பூத்து இருந்தன . இருக்கும் மலர்களை  வைத்து  மலர் கோலம் போட்டேன், கிண்ணத்தில் மலர் அலங்காரம் செய்தேன். அவைகளின்  தொகுப்பு இங்கே.









பூக்கள் குறைந்த போது இலைகளை வைத்து  கோலம்













 மலர் கிண்ண அலங்காரம்

22ம் தேதி மகன் ஊருக்கு (அரிசோனா)வந்து இருக்கிறேன். 

குளிர் காலம் என்பதால்  அரளி பூக்கள் இல்லை. செம்பருத்தியும், தங்கபுஷ்பமும்  மட்டும்  பூத்து இருக்கிறது.


இனி பதிவுகள் தொடரும். 

 இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!


பேரன் செய்த கிறிஸ்துமஸ் அலங்காரம்


24 நாட்களுக்கு சின்ன  பரிசுகள் இருக்கிறது. 

கிறிஸ்துமஸ் தாத்தா அளித்த பரிசு 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.

-------------------------------------------------------------------------------------------------

28 கருத்துகள்:

  1. அழகிய வடிவங்களுக்கு மலர்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.


    எனவே, அரிஸோனாவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் சிறப்பாக போய்க்கொண்டிருக்கின்றன என்று தெரிகிறது!  பேரன் உயரமாகத்தெரிகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //அழகிய வடிவங்களுக்கு மலர்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.//

      நன்றி.

      //அரிஸோனாவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் சிறப்பாக போய்க்கொண்டிருக்கின்றன என்று தெரிகிறது! பேரன் உயரமாகத்தெரிகிறார்.//

      ஆமாம், பேரன் வளர்ந்து விட்டான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.




      நீக்கு
  2. வணக்கம் சகோதரி

    நலமா.. ? பதிவு நன்றாக உள்ளது. கோயமுத்தூர் சென்ற தங்களை காணவில்லையே என நினைத்த போது, தாங்கள் மகன் ஊருக்கு சென்றிருப்பதாக எ. பியில் படித்தேன். மகன் குடும்பத்துடன் பொழுதை மகிழ்வாக கழிக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    மலர் அலங்கார பதிவு நன்றாக உள்ளது. ஒவ்வொரு மலர்கோல அலங்கார வேலைப் பாட்டையும் பொறுமையாக அழகாக செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். பேரன் செய்த கிறிஸ்துமஸ் அலங்காரமும் அருமையாக உள்ளது. பேரனுக்கும் வாழ்த்துகள். தங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    பதிவுலகத்திற்கு வந்தவுடன் என்னை மறக்காமல் என் பதிவுக்கு வநந்திருப்பதற்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      //நலமா.. ? பதிவு நன்றாக உள்ளது.//
      நலமாக இருக்கிறேன்.

      //கோயமுத்தூர் சென்ற தங்களை காணவில்லையே என நினைத்த போது, தாங்கள் மகன் ஊருக்கு சென்றிருப்பதாக எ. பியில் படித்தேன்.//

      கோவை போய்வந்தபின் இன்னும் சில ஊர்கள் சென்று வந்து பின் மகன் ஊருக்கு வந்தேன். அதனால் தான் வலை பக்கம் வரமுடியவில்லை.

      //மகன் குடும்பத்துடன் பொழுதை மகிழ்வாக கழிக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

      நன்றி.
      அனைத்தையும் ரசித்து பார்த்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      முடிந்தவரை பழைய பதிவுகளை படித்து வருகிறேன்.


      நீக்கு
  3. மிக அழகாக இருக்கின்றன. மிகவும் ரசித்தேன்.

    அரசு சாருக்குக் குறையாத திறமைசாலி நீங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      ரசித்து பார்த்து அழகாய் இருப்பதாக சொன்னதற்கு நன்றி.

      //அரசு சாருக்குக் குறையாத திறமைசாலி நீங்கள்//

      சார் நிறைகுடம்.

      நீக்கு
  4. பூக்கள் தொகுப்பும் அழகு. பேரனும் மிளிர்கிறார். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூக்கள் தொகுப்பை போன மார்கழியில் போட நினைத்து முடியாமல் இந்த மார்கழியில் போட்டு விட்டேன்.

      உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. அழகாக இருக்கிறது சகோ தரையில் கார்பெட் விரித்தது போலிருக்கிறது.

    பெயரின் கவினோடு மகிழ்ச்சியாக பொழுதைக் கழியுங்கள்.

    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //அழகாக இருக்கிறது சகோ தரையில் கார்பெட் விரித்தது போலிருக்கிறது.//

      நன்றி.

      //பெயரின் கவினோடு மகிழ்ச்சியாக பொழுதைக் கழியுங்கள்.

      வாழ்க நலம்//

      பேரனுக்கு இப்போது விடுமுறை , மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.


      நீக்கு
  6. கவின் வளர்ந்திருக்கின்றார்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. இந்த மாதிரி அழகான பதிவைக் கண்டு மகிழ்ச்சி..

    மலர்கள் எல்லாமும் அழகு தான்..

    மகிழ்ச்சி.. நன்றி..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், மலர்கள் எல்லாம் அழகுதான். மலர்கள் நம்மை மகிழ்விக்க வந்தவைகள்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. பேரன் உங்கள் கணவரைப் போல நல்ல உயரமாக வளர்ந்துட்டான். முகம் மட்டும் உங்கள் ஜாடையில். கிறிஸ்துமஸ் அலங்காரம் நன்றாக உள்ளது. பூக்களால் ஆன கோலங்களும் முன்னர் பார்த்திருக்கேனோ எனத் தோன்றுகிறது. பையர், மருமகள், பேரனோடு இனிமையாகப் பொழுது கழிய வாழ்த்துகள். இங்கேயும் இன்னிக்குக் குஞ்சுலு சென்னை மடிப்பாக்கம் தாத்தா வீட்டில் இருந்து இங்கே ஸ்ரீரங்கம் வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //பேரன் உங்கள் கணவரைப் போல நல்ல உயரமாக வளர்ந்துட்டான். முகம் மட்டும் உங்கள் ஜாடையில்.//

      அவன் அப்பா, அம்மா நல்ல உயரம் அது போல இருக்கிறான்.

      //கிறிஸ்துமஸ் அலங்காரம் நன்றாக உள்ளது.//

      பேரனும் மருமகளும் சேர்ந்து செய்து இருக்கிறார்கள். மகன் மதுரைக்கு வந்து விட்டதால் அவர்கள் இருவரும் செய்த அலங்காரம்.
      //பூக்களால் ஆன கோலங்களும் முன்னர் பார்த்திருக்கேனோ எனத் தோன்றுகிறது. //
      முகநூலில் அன்று அன்று போட்டு கொண்டு இருந்தேன் , உங்களுக்கு நல்ல நினைவாற்றல்.

      //பையர், மருமகள், பேரனோடு இனிமையாகப் பொழுது கழிய வாழ்த்துகள். //
      நன்றி. அவனுக்கு இரண்டு பாட்டியும் இருக்கிறோம் இப்போது. மருமகளின் அம்மாவும் இங்கு இருக்கிறார்கள்.

      பேத்தி துர்கா வந்து இருப்பது மகிழ்ச்சி. உடல் உடல் துன்பம் பறந்து விடும். மகிழ்ச்சியாக இருங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.








      நீக்கு
  9. கோமதிக்கா அட்டகாசம் பிரமாதம் போங்க!!!! என்ன அழகான டிசைன்!! பூக்களில். கிண்ணத்து அலங்காரம் உட்பட....செம...ரொம்ப ரொம்ப ரசித்துப் பார்த்த்தேன் கோமதிக்கா...

    என் இளைய நினைவுகள் வருகின்றன. இப்படித்தான் கையில் கிடைக்கும் பூக்கள் இலைகள் கொண்டு டிசைன் செய்வேன்...அதுவும் மார்கழி மாதம் பவளமல்லி கொண்டும்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா அட்டகாசம் பிரமாதம் போங்க!!!! என்ன அழகான டிசைன்!! பூக்களில். கிண்ணத்து அலங்காரம் உட்பட....செம...ரொம்ப ரொம்ப ரசித்துப் பார்த்த்தேன் கோமதிக்கா...//

      நன்றி கீதா.

      //என் இளைய நினைவுகள் வருகின்றன. இப்படித்தான் கையில் கிடைக்கும் பூக்கள் இலைகள் கொண்டு டிசைன் செய்வேன்...அதுவும் மார்கழி மாதம் பவளமல்லி கொண்டும்....//

      இப்போதும் மலர்கள் கிடைக்கும் போது செய்யுங்கள் கீதா.
      இப்போது நேரம் கிடைப்பது தான் உங்களுக்கு கடினம் இல்லையா?

      நீக்கு
  10. பவள மல்லி கொண்டு நெக்லஸ், கை வளையல், தோடு என்று செட் செய்து டிசைன் தரையில் போட்டு, பவள நகை செட் என்று பெயரும் சூட்டி அது ஒரு காலம்.

    அது போல செம்பருத்தி, அரளி, மல்லி என்று தேர் வடிவம், எல்லாம் செய்த நினைவுகள்...

    கீதா

    பதிலளிநீக்கு
  11. //பவள மல்லி கொண்டு நெக்லஸ், கை வளையல், தோடு என்று செட் செய்து டிசைன் தரையில் போட்டு, பவள நகை செட் என்று பெயரும் சூட்டி அது ஒரு காலம்.//
    பவளமல்லியில் டிசைன் செய்வது மிக அழகாய் இருக்கும்.
    என் அத்தை அனைத்து பூவையும் ஒவ்வொரு சாமிக்கும் கோர்த்து மாலை ஆக்கி விடுவார்கள்.

    //அது போல செம்பருத்தி, அரளி, மல்லி என்று தேர் வடிவம், எல்லாம் செய்த நினைவுகள்...//

    உங்கள் நினைவுகளை என் பதிவு மீட்டியது இனிமை.
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  12. அழகான மலர் கோலங்கள் மா ...

    தங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்
      தங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி அனு.

      நீக்கு
  13. எப்படி இருக்கிறீர்கள் கோமதி?
    மகனுடனும் மருமகளுடனும் பேரனும் மனம் நிம்மதியாக, மகிழ்வாக பொழுதுகள் கழிய என் வாழ்த்துக்கள்!
    அரளிப்பூக்களின் கோலத்தொகுப்பு மிகவும் அழகு!
    ஆனால் அரளிப்பூ வித்தியாசமாக இருக்கிறதே! மலர்ந்த பூக்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன். இது போல பார்த்ததில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன் , வாழ்க வளமுடன்
      //மகனுடனும் மருமகளுடனும் பேரனும் மனம் நிம்மதியாக, மகிழ்வாக பொழுதுகள் கழிய என் வாழ்த்துக்கள்!//

      நன்றி மனோ.

      //அரளிப்பூக்களின் கோலத்தொகுப்பு மிகவும் அழகு!
      ஆனால் அரளிப்பூ வித்தியாசமாக இருக்கிறதே! //

      வெள்ளை அரளி இரண்டு வகை இருக்கு மகன் வீட்டில் ஒன்று பெரிதாக மலரும், இன்னொரு வெள்ளை மலரவே மலராது மொட்டுடாய் சிறிதாக இருக்கும்.
      நிறைய பூக்கும். அதி பறித்து சாய் கோயிலுக்கு கொண்டு போய் புதன் கிழமை தோறும் கொண்டு கொடுப்பார்கள் அர்ச்சனைக்கு.
      வியாழன் கூட்டமாக இருக்கும் என்று புதன் போவார்கள்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.


      நீக்கு
  14. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  15. உங்கள் பேரனின் கிறிஸ்துமஸ் அலங்காரம் நன்று இங்கும் பேரன் வைத்துள்ளான்.
    மலர் கோலங்கள் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் பேரனும் கிறிஸ்துமஸ் மரம் வைத்து இருப்பது மகிழ்ச்சி.
      கிறிஸ்துமஸ் அனைவராலும் கொண்டாடபடும் விழாவாக இருக்கிறது.
      மலர் கோலங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு