மாடசாமி
சப்தகன்னியர்
ஐயனார் விமானம் ஒவ்வொரு பக்கமும்
புதிதாக கொட்டகை போட்டு இருக்கிறார்கள். இன்னும் வேலைகள் நடக்கிறது.
குலதெய்வ கோயில் மரங்களுக்கு இடையில் தூரத்தில் தெரியும் போதே நமக்கு மனதில் உற்சாகம் வந்துவிடும்.
குலதெய்வ வழிபாட்டுக்கு இயற்கையும் ஒத்துழைத்தது. கோயிலை விட்டு வந்தபின்தான் மழை பெய்தது. மழை பெய்து இருந்தால் பொங்கல் வைத்து இருக்க முடியாது.பொங்கல் வைத்து உள்ளே எடுத்து வைத்தபின் கொஞ்சம் தூறல் போட்டது. மதுரையிலிருந்து இன்னொரு குடும்பம் நனைந்து வந்தார்கள். அதிகமழை பெய்தால் ஆற்றில் தண்ணீர் வரத்தும் அதிகமாகி விடும் அங்கிருந்து வருவதும் கடினம். சாஸ்தா நல்லபடியாக காத்தார்.
//பணிக்கோடி இரைக்கோடி பரிதவிக்கும் இவ்வுலகில்
துணைதேடி ஓடிவந்தோம் ஸ்வாமியே...
உனைத்தேடி உனைத்தேடி இவ்வுயிரும் தவிக்கையிலே
எனைத்தேடி எழுந்துவந்த ஸ்வாமியே!..
களக்கோடி நாயகனே.. கவலையெல்லாம் தீர்ப்பவனே..
புகழ்க்கோடி பேர் சொல்லிப் போற்றினேன்...
வளங்கோடி தந்தருளி நலங்கோடி காத்தருள
பூக்கோடி தூவி தீபம் ஏற்றினேன்!...
நீரோடி நிலம் செழிக்க காற்றோடி கதிர் கொழிக்க
நாகோடி தமிழ் உரைக்க வேணுமே...
உனைத்தேடி வருவோர்க்கு தருங்கோடி நலமெல்லாம்
ஊர்கோடி கண்டு உணர வேணுமே..
வரங்கோடி தந்தருளும் வடிவுடையாள் திருமகனே
களக்கோடி கண்மணியே சரணமே!...
மனைதேடி வருபவனே.. மனந்தேடி அமர்பவனே..
களக்கோடி காவலனே சரணமே...//
பாடல் - துரைசெல்வராஜூ அவர்கள்.
பாடலை எழுதி அனுப்பினார்கள் .
2019 ம் ஆண்டு குலதெய்வமே உன்னை கொண்டாடினேன் என்ற இந்த பதிவுக்கு சகோ அனுப்பிய பாடல். இன்னொரு பாதி அடுத்த பதிவில் அனுப்பினார்கள். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் இந்த முதல் பாதி மட்டுமே போதும் என்று சொல்லி விட்டார்கள், படித்து வருகிறார்கள்.
எங்கள் குலதெய்வ கோயில் வயல்கள், ஏரி என்று இரண்டுக்கும் நடுவில் அழகாய் அமைந்து இருக்கும். நாங்கள் போன போது ஒரு பக்கம் உழுது கொண்டு இருந்தார்கள் ஒரு பக்கம் நாற்று நட்டுக் கொண்டு இருந்தார்கள். ஏரியில் அல்லி மலர்கள் அழகாய் இருந்தது. கொக்கும், முக்குளிப்பானும் வயல்வெளியில், ஏரியில் இருந்தது. அடுத்த பதிவில் வயலும், ஏரியும் இடம்பெறும்.
27. 01. 2023 தை 13. தேதி வெள்ளிக்கிழமை காலை09.30 மணிக்கு மேல் 10.15 மணிக்கு வருஷாபிஷேகம் விழா நடைபெறபோகிறது.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
========================================================
என்னையும் ஏற்றுக் கொண்ட களக்கோடியானை என்னவென்று சொல்லுவேன்!..
பதிலளிநீக்குஉனைத்தேடி உனைத்தேடி இவ்வுயிரும் தவிக்கையிலே
எனைத்தேடி எழுந்துவந்த ஸ்வாமியே!..
இவ்வரிகளை மீண்டும் படிக்கும் போது அழுகை வந்து விட்டது..
களக்கோடி நாயகனே சரனம் சரணம்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//உனைத்தேடி உனைத்தேடி இவ்வுயிரும் தவிக்கையிலே
எனைத்தேடி எழுந்துவந்த ஸ்வாமியே!..//
உங்களை தேடி வந்து உங்கள் உடல்பிணி போக்குவார்.உங்களுக்காக அவரிடம் வேண்டிக் கொண்டேன்.
சாரின் அண்ணா உங்கள் பாட்டை வாங்கி போய் இருக்கிறார்கள்.
நன்றாக இருப்பதாக சொன்னார்கள்.
//இவ்வரிகளை மீண்டும் படிக்கும் போது அழுகை வந்து விட்டது..
களக்கோடி நாயகனே சரனம் சரணம்..//
மனம் கரைந்து கண்ணீர் மல்க துதித்தால் அவர் கண்டிப்பாய் அருள்வார்.
களக்கோடியானைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழ வேண்டும் போல் இருக்கின்றது..
பதிலளிநீக்கு//களக்கோடியானைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழ வேண்டும் போல் இருக்கின்றது..//
பதிலளிநீக்குஉள்ளத்தில் அவரை கட்டி வைத்து இருக்கிறீர்கள்.
உங்கள் மனம் கனிந்த கருத்துக்களுக்கு நன்றி.
ஆறு மிக அழகு. படங்கள் எப்போதும்போல சிறப்பாக வந்துள்ளன.
பதிலளிநீக்குஐயனார் முன்பு யானை சிலை இருக்குமா? எனக்கு இது புதிய செய்தி
வணகம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//ஆறு மிக அழகு. படங்கள் எப்போதும்போல சிறப்பாக வந்துள்ளன.//
நன்றி.
//ஐயனார் முன்பு யானை சிலை இருக்குமா? எனக்கு இது புதிய செய்தி//
ஐயனார் ஒரு கையில் யானையை அடக்கும் அங்குசத்துடன் தான் அமர்ந்து இருப்பார். சில கோயில்களில் யானையும் குதிரையும் இருக்கும். எங்கள் கோயிலில் யானை மட்டும்தான்.
என் பழைய பதிவுகளில் பார்த்து இருப்பீர்கள். யானைக்கு அபிசேகம் செய்வது போல படம் இருக்கும். யானை கனவில் வந்தால் குலதெய்வம் வழிபாடு செய்யவேண்டும் என்று மாமியார் சொல்வதை நிறைய பதிவில் சொல்லி இருப்பேன். திருப்பட்டூர் ஞானசாஸ்தா கோயிலில் யானைதான் இருக்கும் ஐயனார் முன்பு. அவர் யானை மீது ஏறி விரைவாக வந்து காப்பார் என்று சொல்வார்கள்.
துரை செல்வராஜு சாரின் பாடல் நல்லா இருந்தது. அது உள்ளத்திலிருந்து எழுந்த குமுறல் போல எனக்குத் தோன்றியது.
பதிலளிநீக்குஉனைத்தேடி உனைத்தேடி இவ்வுயிரும் தவிக்கையிலே
எனைத்தேடி எழுந்துவந்த ஸ்வாமியே!..
அவர் தேடி வந்து நிச்சயம் துரை செல்வராஜின் குறைகளைப் போக்குவார்
//துரை செல்வராஜு சாரின் பாடல் நல்லா இருந்தது. அது உள்ளத்திலிருந்து எழுந்த குமுறல் போல எனக்குத் தோன்றியது.//
நீக்குஆமாம், நெல்லைத்தமிழன், அவருக்கும் குலதெய்வம் ஐயனார்தான்.
உள்ளம் உருகும் பக்தர் குறைகளை போக்குவார், வரும் கஷ்டங்களை கடக்க மனம் பலம் தருவார்.
//அவர் தேடி வந்து நிச்சயம் துரை செல்வராஜின் குறைகளைப் போக்குவார்//
ஆமாம் , நிச்சயம் காப்பார்.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி..
பூர்ணகலா, புஷ்கலா சமேத களக்கோடி சாஸ்தாவின் தரிசனம் மிக அருமை மா ...
பதிலளிநீக்குஎங்களின் மேலூர் ஐய்யனார் , எடச்சத்துர் ஐய்யனார், ஊராலியப்பனும் இவ்வாறே இருப்பார்கள் ...
அடுத்த வாரம் செல்லும் தரிசனத்திற்காக காத்திருக்கும் பொழுது இவ் அய்யனாரின் தரிசனம்
வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
நீக்கு//பூர்ணகலா, புஷ்கலா சமேத களக்கோடி சாஸ்தாவின் தரிசனம் மிக அருமை மா ...//
நன்றி அனு.
//எங்களின் மேலூர் ஐய்யனார் , எடச்சத்துர் ஐய்யனார், ஊராலியப்பனும் இவ்வாறே இருப்பார்கள் ...//
காட்டுக்குள் இருக்கும் உங்கள் ஐயனார் பதிவு படித்து இருக்கிறேன்.
பொங்கல் சமயம் போவீர்களா?
எங்கள் பக்கம் பங்குனி உத்திரம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
அவர் காலடியில் அடைக்கலக்குருவி கூடு கட்டி இருக்கிறது//
பதிலளிநீக்குஅடைக்கலக் குருவி அடைக்கலம் தேடி கூடு கட்டியிருக்கிறது!!! அடைக்கலமாய் அகோரவீரபத்திரர்!!!
கோபுரம் படங்கள் அழகாக இருக்கின்றன. குருக்கள் எடுத்துக் கொடுத்த இறவன் இறைவியர் படமும்,
முன்பும் குடும்பக் கோயில் படங்கள் போட்டிருக்கீங்களோ கோமதிக்கா....அந்த மரம் சுற்றி திண்ணை உள்ள வேறு ஒரு படம் பார்த்த நினைவு வருது
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//அடைக்கலக் குருவி அடைக்கலம் தேடி கூடு கட்டியிருக்கிறது!!! அடைக்கலமாய் அகோரவீரபத்திரர்!!!//
ஆமாம்.
//கோபுரம் படங்கள் அழகாக இருக்கின்றன. குருக்கள் எடுத்துக் கொடுத்த இறவன் இறைவியர் படமும்,//
குருக்களுக்கும், மகனுக்கும் நன்றி.
//முன்பும் குடும்பக் கோயில் படங்கள் போட்டிருக்கீங்களோ கோமதிக்கா....அந்த மரம் சுற்றி திண்ணை உள்ள வேறு ஒரு படம் பார்த்த நினைவு வருது//
குலதெய்வம் கோயிலுக்கு போய் வந்தபின் பதிவுகள் போட்டு இருக்கிறேன்.
இந்த மரத்தை சுற்றி மேடை இருக்காது. மரத்துக்கு முன் ஏதோ ராஜ கோபுரம் வர போகிறதோ என்னமோ தெரியவில்லை ஏதோ இரண்டு பக்கமும் திண்ணை போல இருக்கிறது. அது வந்தால் எங்கள் கோயில் அழகே போய் விடும், மரமும் வெட்டபடலாம். நினைத்தாலே கஷ்டமாய் இருக்கிறது. அந்த மரமும், ஏரியும் தான் தூரத்திலிருந்து பார்க்கும் போதே குலதெய்வம் கோயிலை நெருங்கி விட்டோம் என்ற மகிழ்ச்சியை, நிறைவை கொடுக்கும் .
இறையருளால் அந்த மரம் அங்கேயே இருக்க வேண்டும்.
இப்படி முன்பும் பொங்கல் வைத்த படமும் பார்த்த நினைவு ...அப்போதும் பதிவு போட்டிருந்தீங்க இல்லையா அக்கா? இது சும்மா என் நினைவுத்திறனை தட்டிக் கொட்டிப் பார்த்துக்கொள்ளத்தான் கோமதிக்கா....நினைவு நல்லாருக்கான்னு செக்கிங்க்!!!! ஹாஹாஹாஹா கருத்து போட்டுட்டு, "களக்கோடியாரே அக்கா ஆமாம் போட்டிருக்கிறேன் என்று சொல்ல வேண்டுமேன்னு வேண்டுதலும்!!! வைத்தேன்..ஹிஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
//இப்படி முன்பும் பொங்கல் வைத்த படமும் பார்த்த நினைவு ...அப்போதும் பதிவு போட்டிருந்தீங்க இல்லையா அக்கா?//
நீக்குநான் கொடுத்து இருக்கும் சுட்டியில் பார்த்தால் தெரியும், வேறு ஒரு குடும்பம் பொங்கல் வைப்பதை போட்டு இருப்பேன்.
நாங்கள் வைக்கமுடியாமல் போன கதையும் சொல்லி இருப்பேன்.பொங்க்ல் பட்ம் பாத்த நினைவு இருக்கு உங்களுக்கு.
களக்கோடியார் உங்கள் வேண்டுதலை செவி சாய்த்து விட்டார்.
ஐயனார் விமானமும் செம அழகு....
பதிலளிநீக்குபோகும் வழியில் ஆறு தண்ணீருடன் இருப்பது அதுவும் அதைக் கடந்து செல்ல வேண்டும் என்பது ஆஹா...
கீதா
ஐயனார் விமானமும் செம அழகு...//
நீக்குமுன்பை விட இப்போது அழகுதான்.
//போகும் வழியில் ஆறு தண்ணீருடன் இருப்பது அதுவும் அதைக் கடந்து செல்ல வேண்டும் என்பது ஆஹா...//
இரண்டு முறை இந்த அனுபவம் கிடைத்து இருக்கிறது. சின்ன கார்கள் போகாது. கார்களை நிறுத்தி விட்டு நடந்து போவோம்.(ஆற்றை கடந்து போவோம்)
பொங்கல் வைக்கவும் கோயில் சென்று தரிசனம் செய்யவும் இயற்கை துணைபுரிந்தது மகிழ்ச்சியான விஷயம் கோமதிக்கா...
பதிலளிநீக்குகீதா
//பொங்கல் வைக்கவும் கோயில் சென்று தரிசனம் செய்யவும் இயற்கை துணைபுரிந்தது மகிழ்ச்சியான விஷயம் கோமதிக்கா...//
நீக்குஆமாம் , நல்ல மழை நாங்கள் வரும் வழியெல்லாம். பொங்கல் வைக்கும் வரை இயற்கை கை கொடுத்து காப்பாற்றியது இறையருள்தான்.
துரை அண்ணாவின் பாடல் அருமை !!
பதிலளிநீக்குகீதா
துரை அண்ணாவின் பாடல் அருமை !!//
நீக்குஆமாம், அவர் கவிதை, கதை எல்லாமே நன்றாக இருக்கும்.
படங்கள் அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா
பதிலளிநீக்குகுறிப்பாக ஆறு கோபுரம் எல்லாம்
கீதா
//படங்கள் அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா
நீக்குகுறிப்பாக ஆறு கோபுரம் எல்லாம்//
அனைத்தையும் ரசித்து பல கருத்துகள் கொடுத்து உற்சாகப்படுத்துவதற்கு நன்றி நன்றி கீதா.
படங்கள் அருமை...
பதிலளிநீக்குஇயற்கை சிறப்பு...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அருமை...
இயற்கை சிறப்பு...//
உங்கள் கருத்துக்கு நன்றி.
சாஸ்தாவை வணங்கி கொண்டேன். எங்கள் குலதெய்வமும் அவரே. கோவில் ஆற்றங்கரை ஒட்டி கோவில் என்பது அழகு. துரை செல்வராஜூ அண்ணா எழுதித்தந்த பாடல் சிறப்பு. அதை விடாமல் பாடி துதித்து வரும் செய்தி அறிந்து மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குஅவரும் சந்தோஷப்படுவார்.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//சாஸ்தாவை வணங்கி கொண்டேன். எங்கள் குலதெய்வமும் அவரே.//
ஆமாம் , நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.
//கோவில் ஆற்றங்கரை ஒட்டி கோவில் என்பது அழகு. //
எப்போதும் அந்த ஆற்றில் நீர் இருக்காது காட்டாறு என்பார்களே தீடீர் நீர் வரத்து இருக்கும்.
ஏரிக்கரையோரம்தான் கோயில். ஏரிக்கரையை நங்கு உயர்த்தி இருப்பார்கள்.
//துரை செல்வராஜூ அண்ணா எழுதித்தந்த பாடல் சிறப்பு. அதை விடாமல் பாடி துதித்து வரும் செய்தி அறிந்து மகிழ்ந்தேன்.//
சாருக்கு அங்கு கல்வெட்டில் இந்த பாடலை பதிய வைக்க வேண்டும் என்று ஆசை இருந்தது அனைவரும் பாடும் படி செய்யலாம் என்று.
சாரின் அண்ணா அடுத்த முறை போகும் போது எல்லோருக்கும் படி எடுத்து கொடுத்து விடலாம் என்றார்கள்.
//அவரும் சந்தோஷப்படுவார். //
சாஸ்தா அவர் கவிதையை கேட்டு இருக்கிறார் அவர் கொடுத்து இருக்கிறார் அது மகிழ்ச்சிதானே அவருக்கு, நமக்கும் மகிழ்ச்சி.
நாங்கள் முன்பு பாடுவது நான்கு வரி பாடல்.
உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.
எனது பாமாலையை இங்கே நினைவு கூர்ந்த அனைவருக்கும் நன்றி.. நன்றி..
பதிலளிநீக்குஅடைக்கலான் குருவிக்கும் தெரிந்து இருக்கின்றது - யாரிடம் அடைக்கலம் புக வேண்டும் என்று!..
பதிலளிநீக்குஅதையும் உற்று நோக்கி படமெடுத்துப் பதிவு செய்த
விதம் நன்று..
நன்று..
//அடைக்கலான் குருவிக்கும் தெரிந்து இருக்கின்றது - யாரிடம் அடைக்கலம் புக வேண்டும் என்று!..//
நீக்குஆமாம், சரண்ம் என தாள் பணிந்தாரை கை விட மாட்டான் இல்லையா
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.!
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. தங்கள் குலதெய்வம் களக்கோடி சாஸ்தா கோவில் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. இறைவனை மனதாற வணங்கி கொண்டேன். கோவில் கருவறை விமானம் படங்களை தரிசித்து கொண்டேன். ஓடும் ஆறு, மரங்கள் என இயற்கையுடன் ஒன்றி கோவில் அமைந்திருப்பது காண கண்கொள்ளா காட்சியாக உள்ளது. நீங்கள் குடும்பத்துடன் சென்று பொங்கல் வைத்து வழிபட்டது கண்டு மகிழ்வடைந்தேன்.
நீங்கள் செல்லும் இடத்தில் ஒரு பறவை தங்களுக்காக இறைவனிடம் அடைக்கலமாகி தங்களுக்கு நற்செய்தி சொல்கிறது. ஏனென்றால் தாங்கள் பறவைகளின் நேசர் அல்லவா..? எங்கு சென்றாலும் பறவைகளிடம் அன்பு பாராட்டும் தங்களை மனதாற வாழ்த்துகிறேன். வணங்குகிறேன். 🙏.
எங்கள் குலதெய்வம் இருக்கும் வல்லநாடு தம்பிராட்டி அம்மன் கோவிலில் அங்கிருக்கும் குருக்கள் அபிஷேகம் அலங்காரம் பிரசாதமென எல்லாவற்றுக்கும் தயார் செய்து வைத்து விடுவார். நாங்கள் சென்றவுடன் தேவையான பணம் தந்து விட்டு , அபிஷேகம் அலங்காரம் முடிந்தவுடன் கொண்டு செல்லும் புடவை ரவிக்கையை அம்மனுக்கு சாற்றி வழிபட்டு வருவோம்.
களக்கோடி சாஸ்தாவின் மேல் சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் இயற்றிய பாமாலையை நீங்கள் ஏற்கனவே உங்கள் பதிவில் வெளியிட்டிருந்தீர்கள். படித்த நினைவு உள்ளது. பக்தியுடன் அவர் இயற்றிய பாமாலை நன்றாக உள்ளது. இப்போதும் படித்து பரவசமடைந்தேன். கடவுள் இந்தப்பிறவியில் அவருக்கு அளித்த பரிசு அவர் தங்கு தடையில்லாமல் இறைவன் மேல் இயற்றும் அவரின் பாமாலைகள். எனவே இறைவன் அவர் இப்போது அடைந்துள்ள உடல் வேதனைகளை நிச்சயம் போக்கி குணப்படுத்தி விடுவார். உங்கள் பக்திப் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குகொஞ்ச நேரத்திற்கு முன் இந்தப்பதிவுக்கு நான் ஒரு கருத்தை பதிவு செய்திருந்தேன். வந்ததா எனத் தெரியவில்லை. நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வந்து விட்டது கமலா படித்து கொண்டு இருக்கிறேன்.
நீக்குவணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. தங்கள் குலதெய்வம் களக்கோடி சாஸ்தா கோவில் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. இறைவனை மனதாற வணங்கி கொண்டேன்//
நன்றி .
//ஓடும் ஆறு, மரங்கள் என இயற்கையுடன் ஒன்றி கோவில் அமைந்திருப்பது காண கண்கொள்ளா காட்சியாக உள்ளது. நீங்கள் குடும்பத்துடன் சென்று பொங்கல் வைத்து வழிபட்டது கண்டு மகிழ்வடைந்தேன்...
குலதெய்வ கோயில் அமைந்து இருக்கும் இடமெல்லாம் இப்படித்தான் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இருக்கும். பழமையை சிதைக்காமல் அப்படியே புதுபித்து வைத்தால் நன்றாக இருக்கும்.
மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்களுக்கு பழைய கோயில் பிடித்து இருந்தது. இப்போது நிறைய மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள். இன்னும் மாற்றங்கள் வரும் போல.
குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்தினர் சேர்ந்து போனால்தான் நன்றாக இருக்கும். கணவரின் தம்பி மகனுக்கு திருமணம் முடிந்தவுடன் அனைவரும் போய் பொங்கல் வைக்க வேண்டும் என்று நினைத்தோம், அது இப்போது தான் கைகூடியது. நல்லபடியாக பொங்கல் வைத்து வந்தோம்.
//நீங்கள் செல்லும் இடத்தில் ஒரு பறவை தங்களுக்காக இறைவனிடம் அடைக்கலமாகி தங்களுக்கு நற்செய்தி சொல்கிறது. ஏனென்றால் தாங்கள் பறவைகளின் நேசர் அல்லவா..? எங்கு சென்றாலும் பறவைகளிடம் அன்பு பாராட்டும் தங்களை மனதாற வாழ்த்துகிறேன். வணங்குகிறேன். 🙏.//
உங்கள் அருமையான கருத்துக்கும் மனதாற வாழ்த்தியதற்கும் நன்றி. குருவியை பார்க்க முடியவில்லை , குருவியை படம் எடுத்து இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்து இருக்கும்.
//எங்கள் குலதெய்வம் இருக்கும் வல்லநாடு தம்பிராட்டி அம்மன் கோவிலில் அங்கிருக்கும் குருக்கள் அபிஷேகம் அலங்காரம் பிரசாதமென எல்லாவற்றுக்கும் தயார் செய்து வைத்து விடுவார். நாங்கள் சென்றவுடன் தேவையான பணம் தந்து விட்டு , அபிஷேகம் அலங்காரம் முடிந்தவுடன் கொண்டு செல்லும் புடவை ரவிக்கையை அம்மனுக்கு சாற்றி வழிபட்டு வருவோம்.//
ஓ !அருமை.
எங்கள் குருக்களும் அடுத்ததடவை வரும் போது அபிஷேக அலங்கார சாமான்கள், சாமிக்கு வைக்க வேண்டிய பொங்கல் பிரசாதம் எல்லாம் செய்து வைத்து விடுகிறேன். நீங்கள் தூக்கி வந்து கஷ்டபட வேண்டாம் என்று சொன்னார்.
வஸ்திரம் மட்டும் கொண்டு வாருங்கள் என்கிறார். உள்ளே அம்மன் ஒன்று என் கணவரின் தாத்தா வைத்தது, அந்த அம்மனுக்கு பருப்பு பாயாசம் செய்ய வேண்டும், வெளியில் வெண்பொங்கல் வைக்க வேண்டும், சர்க்கரை பொங்கல் அவர் ஐயனாருக்கு வைப்பார். மற்ற எல்லா தெய்வங்களுக்கும் பழம் வெற்றிலைபாக்கு தேங்காய் உடைத்து பிரசாதங்களை வைத்து வழிபட நேரம் ஆகும். அதனால் நீங்கள் வருவதற்குள் இதெல்லாம் செய்து வைக்கிறேன் என்கிறார்.
//களக்கோடி சாஸ்தாவின் மேல் சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் இயற்றிய பாமாலையை நீங்கள் ஏற்கனவே உங்கள் பதிவில் வெளியிட்டிருந்தீர்கள். படித்த நினைவு உள்ளது.//
ஆமாம்.
//பக்தியுடன் அவர் இயற்றிய பாமாலை நன்றாக உள்ளது. இப்போதும் படித்து பரவசமடைந்தேன். கடவுள் இந்தப்பிறவியில் அவருக்கு அளித்த பரிசு//
ஆமாம் , எல்லோருக்கும் இறைவன் மேல் பாமாலை பாட வரம் கிடைக்காது.
//அவர் தங்கு தடையில்லாமல் இறைவன் மேல் இயற்றும் அவரின் பாமாலைகள். எனவே இறைவன் அவர் இப்போது அடைந்துள்ள உடல் வேதனைகளை நிச்சயம் போக்கி குணப்படுத்தி விடுவார்.//
கண்டிப்பாய் விரைவில் நலமடைவார். மேலும் பல பாமலைகள் இயற்றுவார்.
உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.
உங்கள் குலதெய்வம் கோவில் வயல்,ஏரி, என இயற்கை வளங்கள் கொழிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. வணங்கினோம்.படங்களும் சிறப்பு.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//உங்கள் குலதெய்வம் கோவில் வயல்,ஏரி, என இயற்கை வளங்கள் கொழிக்கும் இடத்தில் அமைந்துள்ளது.///
ஆமாம், மாதேவி. ஒவ்வொரு முறை போய் வரும் போது ஒவ்வொரு அழகு கோலங்கள் காட்டும் ஊர்.
உங்கள் கருத்துக்கு நன்றி.