தீபாவளி மலர் ஒரு பார்வை 1926 -2002 விகடன்பவழவிழா மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீபாவளி மலர் ஒரு பார்வை 1926 -2002 விகடன்பவழவிழா மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 அக்டோபர், 2022

தீபாவளி மலர்

பேரன் தயார் செய்த தீபாவளி வாழ்த்து 

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
தீபாவளி என்றால் முன்பு தீபாவளி ஆண்டு மலர் வாங்குவோம்.
எல்லா வாரப்பத்திரிக்கைகளும்  தீபாவளிக்கு சிறப்பாக இரண்டு புத்தகம் தருவார்கள். அதை தீபாவளிக்கு ஊருக்கு போகும்  ரயில் பயணத்தில் படிக்க வாங்குவோம், குமுதம், குங்குமம், மங்கையர் மலர் எல்லாம். ரயிலில் நம்மிடமிருந்து அந்த புத்தகங்களை வாங்கி படிபவர்களிடம்  நாம் இறங்கும் போது நினைவாக வாங்க வேண்டும். திருப்பி தராமலே போய் விடுவார்கள் சிலர்.