மீசைக்காரர்
கோடை விடுமுறை முடிந்து குழந்தைகளுக்கு பள்ளி ஆரம்பிக்க போகிறது. இப்போது கோடைக்கால விடுமுறையில் தங்கை வீட்டுக்கு வந்த அவள் பேரக்குழந்தைகள் நாம் சிறுவயதில் ஆசைபட்டு சுவைத்த ஜவ் மிட்டாய் , தேன் மிட்டாய், கமர்கட் . வித விதமான ஐஸ்கள் எல்லாம் வாங்கி மகிழ்ந்தார்கள். நான் தங்கைவீட்டுக்கு போன போது பேரக்குழந்தைகள் ஜவ் மிட்டாய் வாங்கியதை சொன்னார்கள், போட்டோ எடுத்தீர்களா? என்று கேட்டவுடன் எனக்கு பிடிக்குமே என்று என் தங்கை மகள் இந்த படங்களை அனுப்பி வைத்தாள்.
