செவ்வாய், 7 ஜூன், 2022

கோடை விடுமுறைமீசைக்காரர்

கோடை விடுமுறை முடிந்து குழந்தைகளுக்கு பள்ளி ஆரம்பிக்க போகிறது.  இப்போது கோடைக்கால விடுமுறையில் தங்கை வீட்டுக்கு வந்த அவள் பேரக்குழந்தைகள் நாம் சிறுவயதில்  ஆசைபட்டு சுவைத்த ஜவ் மிட்டாய் , தேன் மிட்டாய், கமர்கட் .  வித விதமான ஐஸ்கள் எல்லாம் வாங்கி மகிழ்ந்தார்கள். நான் தங்கைவீட்டுக்கு போன போது  பேரக்குழந்தைகள் ஜவ் மிட்டாய் வாங்கியதை சொன்னார்கள், போட்டோ எடுத்தீர்களா? என்று கேட்டவுடன்  எனக்கு பிடிக்குமே என்று என் தங்கை மகள் இந்த படங்களை அனுப்பி வைத்தாள்.ஆண் பிள்ளைகள் மீசை  வைத்து கொள்வதும், வாட்ச் கட்டிக் கொள்ள ஆசைபடுவார்கள்.


பெண் குழந்தைகள் வளையல், கழுத்தில் நெக்லெஸ் போட்டு கொள்வார்கள். தங்கை பேத்தி ரயில் கட்டி கொண்டாள் கையில்

பட உதவி- கூகுள்


பட உதவி - கூகுள்

சிறு வயதில் இவையெல்லாம் சுவைத்த நினைவுகள் வந்து விட்டது. இப்போது கமர்கட் தங்கைவீட்டில் கொடுத்தாள் , சாப்பிட முடியவில்லை. ஆரஞ்சு மிட்டாய் நாக்கை புண்ணாக்கி விடுகிறது. தேன் மிட்டாய் சாப்பிடலாம். குழந்தைகளுடன் நானும் சுவைத்து மகிழ்ந்தேன். தங்கை வீட்டுக்கு போன போது.

குழந்தைகளுக்கு அப்பா, அம்மாவை விட  தாத்தா பாட்டி  எதை கேட்டாலும் வாங்கி தருவார்கள் என்ற எண்ணம். அது போல தாத்தா  வாங்கி கொடுத்து கொண்டே இருந்தார்கள். அங்கே இங்கே என்று அழைத்து சென்றார்கள். கொஞ்ச நேரத்திற்கு ஒரு தரம் தாத்தா, பாட்டியிடம் ஏதாவது கேட்டுக் கொண்டே இருந்தார்கள்  மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்த விடுமுறைக்கு பேரன் பேத்திகள் வரும் வரை மகிழ்வான நினைவுகள் அவர்களுக்கு இருக்கும்.

தாத்தா வீட்டுக்கு போக என் குழந்தைகளும் எப்போது விடுமுறை வரும் என்று காத்து இருப்பார்கள். இருபக்க உறவுகள் வீடுகளுக்கும் போய் வந்த காலங்கள் வசந்த காலங்கள். நினைவுகள் இனிமையானவை.
தாத்தாவீட்டில் குழந்தைகள் தாயம் விளையாடி மகிழ்ந்தார்கள். 

தங்கை வீட்டுக்கு பக்கம் வெள்ளாடு கொண்டு வந்து பால் கறந்து விற்கிறார்கள் என்றாள், நான் பார்த்ததே இல்லை என்றேன். மறு நாள் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வாங்கியதை வீடியோ  எடுத்து அனுப்பினாள். 
காந்தி தாத்தா ஆட்டுப்பால்  குடித்து ஆரோக்கியமாக நடந்தார் என்பார்கள். அது போல தாய்பாலுக்கு இணையாக ஆட்டுப்பாலில் சக்திகள் இருக்காம். நோய் தடுப்பு சக்தி  இருக்கிறது என்று ஆட்டுப்பால் குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாம்.  நிறைய மருத்துவ பயன்கள் உள்ளதாம். 


தாத்தா , பாட்டிக்கு வீட்டுக்கு   வந்த குழந்தைகளுக்கு நல்ல அனுபவங்கள் கிடைத்து இருக்கிறது.
தங்கை  வீட்டு பக்கம் வெயிலுக்கு  மண்ஜாடியில்  தண்ணீர் வைத்து இருந்தார்கள், அவ் வழியில் நடந்து செல்பவர்கள்  தாகத்தை போக்க.  


பேரன் கவின் 
தன் பாட்டி, அம்மாவுடன்

பேரனுக்கும் இப்போது விடுமுறை , சுற்றுலா சென்று வந்தான், அந்தக்கால மன்னர்கள்  தங்கும் கூடாரம் போல சகல வசதிகளும் உள்ள கூடாரத்தில் ஒரு நாள் தங்கி பக்கத்தில் உள்ள இடங்களை சுற்றிப்பார்த்து வந்து இருக்கிறான், தன் பாட்டி அப்பா, அம்மாவுடன். சிறிய ரயில் பயணமும் செய்து வந்து இருக்கிறான். இளமை பருவம் கோடை விடுமுறையை எதிர்பார்த்து இருந்த காலங்கள், உறவினர் வீடுகள், தாத்தா, பாட்டி வீடு போய் வந்த இனிமையான நினைவுகள் எல்லோருக்கும் வந்து  இருக்கும்.

ஸ்ரீராமுக்கு நினைவுக்கு வந்த பாடல் பகிர்வு.


இன்று மகனுக்கு திருமண நாள்  வாழ்த்துங்கள் நட்புகளே!

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

------------------------------------------------------------------------------------------------

34 கருத்துகள்:

 1. அழகான படங்கள் பழைய நினைவுகளை மீட்டி விட்டது.

  காணொளி கண்டேன்.

  தங்களது மகனுக்கும், மருமகளுக்கும் இனிய திருமண நன்நாள் வாழ்த்துகள்.

  பெயரனுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   பழைய நினைவுகள் வந்தது மகிழ்ச்சி.

   //தங்களது மகனுக்கும், மருமகளுக்கும் இனிய திருமண நன்நாள் வாழ்த்துகள்.

   பெயரனுக்கும் வாழ்த்துகள்.//

   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

   நீக்கு
 2. தங்கள் மகனுக்கும் மருமகளுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள். எல்லா வளத்துடனும் நலத்துடனும் பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

   மகன் , மருமகளுக்கு வாழ்த்துகள் சொன்னதற்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

   நீக்கு
 3. கோடை விடுமுறை சுற்றல் என்பது தனி மகிழ்ச்சி தரும் சுற்றுலா. உறவுகளும் மேம்படும். சந்தோஷமும் பொங்கும். நான் ஜவ்வு மிட்டாய் பக்கம் சென்றதில்லை. கமர்கட் சிறுவயது ஓரிருமுறையே சாப்பிட்டிருப்பேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், கோடைவிடுமுறை சுற்றல் எப்போது என்று காத்து இருந்த காலங்கள் உண்டு, தாத்தா வீடு, அத்தை, சித்தப்பா, பெரியப்பா என்று போன காலங்கள் நினைவுக்கு வருகிறது. உறவுகள் மேம்பாட்டுக்கும் உதவும்.
   வித விதமான மிட்டாய்கள் சிறு வயதில் (பள்ளி பருவத்தில்) சாப்பிட்டு இருக்கிறேன்.

   நீக்கு
 4. பேரன்கள் பேத்திகள் வருவது தாத்தா பாட்டிகளுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கும் செயல். எனக்கு வருஷம் பதினாறு படம் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், தாத்தா ,பாட்டிகளுக்கு பேரன் பேத்திகளின் வருகை கோடை காலம்கூட வசந்த காலமாக இருக்கும் .
   வருஷம் பதினாறு படத்தில் பழமுதிர் சோலை எனக்காகத்தான் பாட்டா? தாத்தா வீட்டில் மகிழ்ந்து இருக்கும் பாடல் இல்லையா!
   கோடைக்கால காற்றே பாட்டு நினைவுக்கு வந்தது. அது பள்ளி சுற்றுலா .(பன்னீர்புஷ்பங்கள்)

   நீக்கு
 5. ஆட்டுப்பால் செம கசப்பாக இருக்கும் என்று படித்திருக்கிறேன். அதை எப்படி குழந்தைகள் குடிப்பர்? காய்ச்சிதான் குடிக்கவேண்டும் இல்லையா? வீள்ளாட்டின் சபதம் என்கிற பாடல் அந்தக் காணொளியைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது! சமர்த்தாக பால் கறக்க ஒத்துழைத்து ஓரமாக இருக்கும் செடிகளை மேகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆட்டுப்பால் செம கசப்பாக இருக்கும் என்று படித்திருக்கிறேன். அதை எப்படி குழந்தைகள் குடிப்பர்? காய்ச்சிதான் குடிக்கவேண்டும் இல்லையா?//
   தெரியவில்லை கேட்டுப்பார்க்க வேண்டும் அடுத்த முறை தங்கை வீட்டுக்கு போகும் போது.

   கே.ஆர் விஜயா நடித்த படப்பாடல் இல்லையா? அந்த படம் பார்த்த நினைவும் வெள்ளாட்டின் சபதம் பாடலும் நினைவுக்கு வருது.

   ஆமாம், சமர்த்தா பால் கறக்க ஒத்துழைக்கிறது. முன்பு இப்படி மாடை கூட்டி வந்து வீடுகளில் பால் கறந்து கொடுக்கும் காட்சிகள் படத்தில் பார்த்து இருக்கிறேன்.

   உங்கள் கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. ஆட்டுப் பால் காச்சித்தான் குடிக்க வேண்டும். கெட்டியாக சிறிது மணத்துடன் இருக்கும்.சத்து நிறைந்தது.

   நீக்கு
  3. நன்றி மாதேவி , ஸ்ரீராம் கேள்விக்கு விடை நீங்கள் சொன்னதற்கு.

   நீக்கு
 6. தம்பதிகளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்...

  சிறு வயது மிட்டாய் நினைவுகள் ஞாபகம் வந்தது அம்மா... அருமை...

  ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியன்று தாயம் தான் முக்கிய விளையாட்டு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   சிறு வயது மிட்டாய் நினைவுகள் வந்தது அருமை.
   ஆமாம், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியன்று தாயம் முக்கிய விளையாட்டு.
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 7. தங்கள் மகனுக்கும் மருமகளுக்கும் இனிய திருமண வாழ்த்துகள். என்றும் நலம் பெற்று வாழட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
   உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 8. சவ்வு மிட்டாய் சிறு வயதில், மற்றவர்கள் வாங்குவதைப் பார்த்துக்கொண்டிருந்த காலத்தை எனக்கு நினைவுபடுத்தியது. ஆனால் இப்போது, கையில் ஒட்டி அதைச் சாப்பிடுவதா என்று எண்ணம் வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் , நீங்கள் சொல்வது சரிதான் சிறு வயதில் அதெல்லாம் தெரியாது .பெரியவர்கள் ஆனவுடன் சுத்தம், சுகாதாரம் என்று மனது நினைக்கும்.

   இருந்தாலும் சிறு குழந்தைகளுக்கு இந்த ஜவ்மிட்டாய் மாமா தரும் ஆனந்தம் சொல்லி முடியாதுதான்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 9. உங்கள் மகனுக்கும் மருமகளுக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துகள் .

  தாகத்துக்கு மண் ஜாடியில் தண்ணீர் வைத்திருப்பது சூப்பர்.

  தங்கை பேரக்குழந்தைகள், கவின் படங்கள் அருமை விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் குழந்தைகள். .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   மகன், மருமகளுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி
   தாகத்திற்கு மண் ஜாடியில் தண்ணீர் வைத்து இருப்பது உங்களுக்கும் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

   விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடும் குழந்தைகளை கண்டால் நமக்கு மகிழ்ச்சி இல்லையா மாதேவி!
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி மாதேவி.

   நீக்கு
 10. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. முதலில் தங்கள் மகன் மருமகளுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகளை கூறி விடுங்கள். பேரன் கவினுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

  உங்கள் தங்கை பேரன் படம் நன்றாக உள்ளது. இப்போது இரண்டு வருடங்களாக குழந்தைகளுக்கு விடுமுறைதானே... என்னதான் ஆன்லைன் கிளாஸ்கள் இருந்தாலும், துள்ளித்திரியும் பருவத்தில் பள்ளிச் சென்று பயில்வது போல் வருமா? இந்த தடவை அனைத்து பள்ளிகளும் ஆண்டவன் அருளால் திறந்துள்ளது. எங்கள் வீட்டிலும் குழந்தைகள் பள்ளி சென்று வருகிறார்கள். என் மகள் வயிற்று பேத்திக்கு இன்றுதான் பள்ளி திறந்தார்கள். அதனால் எனக்கும் காலையிலிருந்தே வேலைகள் சரியாக இருந்தது.

  மிட்டாய் படங்கள் அருமை. இப்போது நமக்கு சிறுவயதில் நாம் சாப்பிட்ட ஆர்வம் இல்லை. ஆனால் அந்த நினைவுகளும். அதன் சுவைகளும் இன்றும் நினைவோடு உள்ளது. அந்த காலத்தில் நாம் வெய்யிலில் அலையாமல் வீட்டோடு இப்படி தாயக்கட்டம் பல்லாங்குழி என விளையாடி மகிழ்வோம். அவ்விதமே விடுமுறையை மகிழ்வோடு கொண்டாடி களித்த தங்கள் பேரக்குழந்தைகளுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் கம்லா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

  //பதிவு அருமை. முதலில் தங்கள் மகன் மருமகளுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகளை கூறி விடுங்கள். பேரன் கவினுக்கும் இனிய வாழ்த்துக்கள்//

  நன்றி நன்றி.

  ஆமாம், துள்ளி திரியும் பருவத்தில் பள்ளி சென்று வருவது ஆனந்தம்.
  இப்போது பள்ளிகள் திறந்து இருப்பது மகிழ்ச்சி. பள்ளி திறந்து விட்டால், பெற்றோர்கள், தாத்தா, பாட்டிக்கு வேலை அதிகமாகிவிடும்.

  //மிட்டாய் படங்கள் அருமை. இப்போது நமக்கு சிறுவயதில் நாம் சாப்பிட்ட ஆர்வம் இல்லை. ஆனால் அந்த நினைவுகளும். அதன் சுவைகளும் இன்றும் நினைவோடு உள்ளது. //

  ஆமாம், பழைய மாதிரி சாப்பிட முடியாது . நினைவு தரும் சுகம் தனிதான்.

  //அந்த காலத்தில் நாம் வெய்யிலில் அலையாமல் வீட்டோடு இப்படி தாயக்கட்டம் பல்லாங்குழி என விளையாடி மகிழ்வோம். அவ்விதமே விடுமுறையை மகிழ்வோடு கொண்டாடி களித்த தங்கள் பேரக்குழந்தைகளுக்கு வாழ்த்துகள். //

  ஆமாம் . எப்போதும் தங்கை வீட்டுக்கு விடுமுறைக்கு பேரகுழந்தைகள் வந்தால் தாயம் விளையாடுவார்கள்.

  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.  பதிலளிநீக்கு
 12. மகனுக்கும் மருமகளுக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்... என்றும் நலமோடும் மகிழ்வோடும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  மருமகளின் பெற்றோர் போயிருக்கிறார்கள் போலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
   மகனுக்கும், மருமகளுக்கும் திருமணநாள் வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.
   மருமகளின் அம்மா அங்கு இருக்கிறார்கள்.

   நீக்கு
 13. ஜவ்வு மிட்டாயில் இப்படி எல்லாம் செய்து விளையாடுவார்களோ, எனக்குத் தெரியாது, தென்னோலையில் மணிக்கூடு செய்து கட்டியிருக்கிறேன்:).

  கமர்கட் என எல்லோரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன் ஆனால் இதுவரை பார்த்ததில்லை, அல்லது வேறு பெயரில் உலா வரலாம் நம் நாட்டில்.. பெயர் இப்படி நம் நாட்டில் இருக்கவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜவ்வு மிட்டாய் கொண்டு வருபவர் ஒரு தடியில் சுற்றி கொண்டு வருவார், அதன் மேல் பொம்மை ஒன்று தாளம் தட்டிக் கொண்டு வரும் ஜிங்க் ஜிங்க் எம்று அந்த சத்தம் கேட்டவுடன் நாங்கள் எல்லாம் ஓடுவோம். மிக அழகான மாலை, வாட்ச், பறவை , ரயில் எல்லாம் செய்து தருவார். அதை வாங்கி கொஞ்ச நேரம் அழகு பார்த்து விட்டு சாப்பிட்டு விடுவோம்.

   மிட்டாய் கலர் , நீலம் , மஞ்சள் கலரில் இருக்கும். இப்போது லைட் கலரில் இருக்கிறது.
   தேங்காய் வெல்லம் போட்டு முறுகலாக இருக்கும் கமர்கட் . குழந்தைகள் "கான கடி கடித்து கொடுக்கும் கமர்கட்"என்ற பேயர் உள்ள பாட்டு இருக்கே! துணியில் சுற்றி கடித்து கொடுப்பார்கள். எச்சில் படாமல் என்று சொல்லிக் கொள்ளும் குழந்தைகள்.,எங்கள் பள்ளி பருவத்தில் அப்படி. இப்போது எல்லாம் அப்படி இல்லை ஆளுக்கு ஒரு பாக்கெட் வாங்கி கொடுத்து விடுகிறார்கள்.
   சுத்தம், சுகாதாரம் என்று இப்போது குழந்தைகள் வளர்க்கபடுகிறார்கள் இல்லையா!

   நீக்கு
 14. தாத்தா பாட்டி வீட்டுக்குப் போவதென்பது மறக்க முடியாத ஒரு ninaivuthaan, paathiyila tamil font aith thookkiddaar google uncle, ini restart pannoonum, pinpu varen mikuthikku Gomathy acca.

  பதிலளிநீக்கு
 15. தாத்தா பாட்டி வீட்டுக்கு போவது மறக்க முடியாத நினைவுதான்.

  வாங்க மெதுவாக . இன்னும் கதைக்கலாம். கோழி முட்டை மிட்டாய் சாப்பிட்டு இருப்பீர்கள், தேன் மிட்டாய், ஆரஞ்சுவில்லை மிட்டாய் சாப்பிட்டு இருப்பீர்கள். குச்சி ஐஸ், ஜவ்வரிசி ஐஸ் மற்றும் பென்சில் மிட்டாய் கலர் கலராக சாப்பிட்டு இருப்பீர்கள் தானே!
  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. நெஞ்சை அழுத்துகின்றன நினைவுகள்.. திரும்பிச் செல்ல இயலாத வழியில் வெகு தூரத்தைக் கடந்து விட்டோம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
   வலது கைவலி இப்போது எப்படி இருக்கிறது?

   //நெஞ்சை அழுத்துகின்றன நினைவுகள்.. திரும்பிச் செல்ல இயலாத வழியில் வெகு தூரத்தைக் கடந்து விட்டோம்..//

   ஆமாம், நினைவுகள் நெஞ்சில். மீண்டும் குழந்தையாக முடியாது.
   நினைவுகள் மட்டுமே!
   உட

   நீக்கு
 17. மணநாள் காணும் தம்பதியர்க்கு அன்பின் இனிய நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 18. நினைவுகளை மலரச் செய்யும் அருமையான பதிவு.

  பேரன் சுற்றுலா சென்று விடுமுறையை இனிதாகக் கழித்ததில் மகிழ்ச்சி அடைந்திருப்பான்.

  மகனுக்கும் மருமகளுக்கும் (தாமதமான) இனிய மணநாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும் , வாழ்த்துக்களுக்கு நன்றி.

   நீக்கு