ஞாயிறு, 5 ஜூன், 2022

காலை பொழுதை மகிழ்வாக்கும் பறவைகள்


 
காலை பொழுதில் பறவைகளை பார்க்கும் போது என் மனம்  மகிழும்.  மனதை உற்சாகமாக வைத்து கொள்ள உதவும்.
கவலையாக இருந்தால் அதை போக்க உதவி செய்யும் இந்த பறவை பார்வை.   அதிகாலையிலும், மாலை சூரியன் மறையும் போதும் பறவைகளின் ஒலி அதிகமாய் கேட்கும். அதிகாலை இனிமை.  அடையும் போது(கூடு செல்லும் போது) மிகவும் கூச்சலாக இருக்கும். காலை பொழுது குயில் கூவும். சில பறவைகள் பாடும். 

எப்போதும்   பறவைகள் குறை வைக்காது மகிழ்ச்சியை தரும்.
 
இந்த இடம் புறாவிற்கு பிடித்த இடம்
நாம் பால்கனியிலிருந்து  பறவையை பார்ப்பது போல அவைகள்  கம்பியில் அமர்ந்து வேடிக்கைப்பார்க்கும்

தண்ணீரோ பூச்சியோ ஏதோ  தேடுகிறது
எல்லா பறவைகளுக்கும் இந்த மரம் பிடிக்கும். இந்த பறவை காகம் வகை சார்ந்தது தான்.  இதன் சத்தம் வித்தியசமாக இருக்கும்.



காமிராவில் எடுத்த படம்
அலைபேசியில் எடுத்த படம்

ஆண்குயில்

எதிர் பக்கம் உள்ள கோடி வீட்டில் உணவு எடுக்கும் பெண்குயில் 

புல் புல் பறவைகள்


கண்ணாடி ஜன்னலில் தன் முகம் பார்க்கும் புல் புல்
நான்  உணவு வைக்கும் டிரேயில் புல் புல்  

சிட்டுக்குருவி  (எதிர் வீடு)



ஒரு நாள் காலை மழை நாளில் ஒதுங்கி இருந்தது, எதிர் பக்கம் கோடி வீட்டில்


மழைவிட்டவுடன் போகலாம்

இன்னொரு நாள்  காலை வெயிலில்


காலை  பொழுதில் கரிக்குருவி  (எதிர் வீடு)


மழையில் நனைந்த புறா
உடலை சிலிர்த்து மழை நீரை உதறும்


ஒய்யார பார்வை

காலை பொழுதில்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்.



காலை நடைபயிற்சியை எங்கள் குடியிருப்பு வளாகத்தில் செய்து விட்டு சிறிது நேரம் குழந்தைகள் விளையாடும் இடத்தில் இருக்கும் திண்ணையில்  அமர்ந்து பறவைகளின்
 ஒலியை கேட்பேன்.  அன்று பக்கத்தில் உள்ள ஐயனார் கோவில் மணி ஓசையும் பறவைகளின் ஒலியும் கேட்டவுடன்  இந்த  பாடல் நினைவுக்கு  வந்தது.  நான் எடுத்த காணொளி சிறு காணொளிதான். அதை கேட்டு விட்டு இந்த பாடலை கேளுங்கள் .  அணிலின் கிறீச் ஒலியும் கேட்கும்


உங்களுக்கும் இந்த பறவைகள் பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்
--------------------------------------------------------------------------------------------------

38 கருத்துகள்:

  1. பறவைகள் படங்கள் நன்றாக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. பறவைகளின் படங்களும் இணைத்த காணொளிகளும் நன்று. கடைசி பாடல் இனிமையானது. கேட்டு ரசித்தேன் மா. பறவைகளைக் காண்பது மிகவும் நல்ல பொழுது போக்கு தான் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      ஆமாம், பறவைகளைக் காண்பது மிகவும் நல்ல பொழுது போக்குதான்
      .பாடலை படங்களை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  3. பறவைகள் மீதான உங்கள் அன்பும் ஆர்வமும் அனைவரும் அறிந்தது.  படங்கள் நிறைய எடுத்துக் பகிர்ந்திருக்கிறீர்கள்.  காணொளிகளும் அருமை.  ஆலயமணியின் ஓசை பாடல் சுசீலாம்மாவின் சிறந்த பாடல்களில் ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      ஆமாம், சுசீலாம்மாவின் சிறந்த பாடல்களில் ஒன்றுதான்.
      நிறைய ஆகி விட்டது படங்கள் இல்லையா?
      காணொளிகள் பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  4. என்னதான் இருந்தாலும் அலைபேசியில் எடுக்கும் படங்களை விட கேமிராவில் எடுக்கும் படங்கள் இன்னும் நன்றாகத்தான் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலைபேசியில் நன்றாக இருக்கும் பக்கத்தில் எடுத்தால் தூரம் என்றால் தெளிவு இல்லாமல் இருக்கும். நிறைய படங்கள் அலைபேசியில் எடுத்து இருக்கிறேன். தூரம் அதிகம் என்றால் காமிராதான் நன்றாக இருக்கும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. அனைத்து படங்களும் அருமை...

    காணொளிகளையும் கண்டு கேட்டு ரசித்தேன் அம்மா... மிகவும் பிடித்த பாடல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      அனைத்து படங்களை காணொளிகளை கண்டு , கேட்டு , ரசித்தமைக்கு நன்றி. பாடல் எல்லோருக்கும் பிடிக்கும் இல்லையா!

      நீக்கு
  6. பொறுமையாக படங்களை எடுத்து இருக்கிறீர்கள். அழகாக இருக்கிறது.

    காணொளிகள் கேட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்
      காணொளிகளை கேட்டு படங்களை பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  7. இங்கே வீட்டைச் சுற்றிலும் கரிக் குருவிகள்.. கைத்தொலைபேசிக்கு அகப்படுவதில்லை.. அமாவாசைக்குக் கூட காக்கைகளை வர விடாமல் அடித்து விடுகின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      ஆனைசாத்தன் இது விடியக்காலை பறவை ஏர்பூட் ஏர்பூட் என்று சொல்லும் என்பார்கள் கிராமத்தில் என்று படித்து இருக்கிறேன்.
      காலையில் ஏர்பூட்டினால் தான் நல்லது, கரிக்குருவி வரும் முன் எழுவார்கள் உழவர்கள் என்பார்கள்.
      //வால் நீண்ட கரிக்குருவி வலமிருந்து இடமானால் கால் நடையாய்ப் போனவரும் கனகதண்டி ஏறுவரே//
      என்று இரட்டை வால் குருவியை புகழ்ந்து பாடுகிறது.

      காக்கையை வரவிடாமல் தடுக்கிறதா? கரிக்குருவி பறந்து கொண்டே இருக்கும். ஆடு மேல், மாடு மேல் எல்லாம் பயணம் செய்யும் அந்த படங்களை முன்பு எடுத்து போட்டு இருக்கிறேன். ஆடு , மாடுகளுக்கு உடலில் உள்ள பூச்சிகளை தின்று அவைகளுக்கு உதவி செய்யும்.

      நீக்கு
    2. தஞ்சை வளம் பொருந்திய நாடு. சோழ நாடு சோறு உடைத்து அல்லவா! அதுதான் கரிச்சான் குருவிகள் அதிகமாக இருக்கிறது போலும்.

      நீக்கு
  8. படங்கள் அத்தனையும் அழகு.. அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை ரசித்து கருத்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  9. பறவைகள் அழகு. எங்கள் வளாகத்தில் வேறு பறவைகளையும் பார்த்திருக்கிறேன் செம்போத்து உட்பட. ஆனா பாருங்க... கட்டடம் கட்டக் கட்ட பறவைகள் குறைகிறது (செம்போத்து அபூர்வமாகத்தான் தென்படுகிறது. அனேகமாக வளாகத்தில் இல்லை). ஒரு மயில் வந்துகொண்டிருந்தது. அதை ரொம்ப மாதங்களாகக் காணோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      செம்போத்து பறவைக்கு புதர் மாதிரி இடம் இருந்தால்தான் அதற்கு நல்ல உணவு கிடைக்கும்
      அப்படி பட்ட இடங்களை அழித்து கட்டடம் கட்டுகிறோம் அப்புறம் எப்படி பறவைகள் வரும். இங்கும் மயில் வருகிறது எங்கிறார்கள் நான் இன்னும் பார்க்கவில்லை, அதன் சத்தம் கேட்டு இருக்கிறது.
      இங்கும் புதர் மாதிரி, காடு மாதிரி இருந்த இடங்கள் இப்போது இல்லை கட்டிடங்கள் வந்து கொண்டு இருக்கிறது. அதனால் பறவைகள் வரத்து குறைவாக இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பறவைகளின் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. பறவைகளின் ஒலி இனிமையானதுதான். மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.

    மழைக்கு ஒதுங்கி பிறகு போகலாம் எனப்பேசிக் கொள்ளும் புறாக்கள் படம் நன்றாக உள்ளது. நல்ல கற்பனை உங்களுக்கு. பறவைகளுடன் பழகி பழகி அவைகளின் பேச்சைக்கூட உங்களால் அனுமானிக்க முடிகிறது.

    காகம் இனத்தை சேர்ந்த அந்தப் பறவையும் அழகாக உள்ளது. ஆண்குயிலும் காகத்தைப் போல்தான் உள்ளது. மற்றும் கரிக்குருவி, சிட்டுக் குருவி படங்கள் அழகு. சிட்டுக் குருவி படம் அழகோ அழகாக உள்ளது. இவை அனைத்தும் உங்களுக்கு புகைப்படம் எடுக்க ஒத்துழைத்து உள்ளதே வியப்பாக உள்ளது.

    இங்கு புறாக்களும், கழுகும் மிக அதிகம். நானும் காலையில் வானில் வட்டமிடும் பறவைகளை ரசிப்பேன். நீங்கள் சொல்வது போல் கட்டிடங்கள் நிறைய ஆக்கிரமித்து வருவதால் பறவைகளுக்கு இருப்பிடங்கள் இல்லாமல் போகிறது. அதன் இருப்பிடங்களை நாம் ஆக்கிரமிப்பு செய்து வருகிறோம்.

    "ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்" பாலும் பழமும் படப் பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும். முன்பெல்லாம் ரேடியோவில் அடிக்கடி ஒலிக்கும் பாடல். பாடலையும், நீங்கள் பகிர்ந்த காணொளி களை மதியம் பார்த்து ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கன் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      பறவைகளின் ஒலி காலை நேரத்தை ரம்மியமாக்கும்.
      ஒவ்வொரு படங்களையும் ரசித்து உங்கள் கருத்தை பகிர்வது அருமை.
      புறாக்கள் இல்லாத இடமே இல்லை. புறாக்கள்தான் எங்கு பார்த்தாலும். கழுகும் அதிகமாக இருக்கிறதா? கருட தரிசனம் செய்யலாம் . வயதானவர்கள் வியாழ்க்கிழமை குளக்கரையில், ஏரி அருகில் காத்து கிடப்பார்கள் கருட பருந்து தரிசனம் செய்ய.

      பாடல் காணொளிகளை நேரம் இருக்கும் போது பாருங்கள்.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. கோமதி அக்கா நலம்தானே?.. பறவைகள் தொகுப்பு மிக அருமை, விட்டிடாமல் நீங்கள் நடைப்பயிற்சியைத் தொடர்ந்து செய்துவருவது மகிழ்ச்சியாக இருக்கு.. அதற்கு வாழ்த்துக்கள். நடந்தால் மனதுக்கு இதமாகவும், உற்சாகமாகவும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா , வாழ்க வளமுடன்
      உங்கள் வரவு மகிழ்ச்சியை தருகிறது.பள்ளி விடுமுறை தொடங்கி விட்டதா?
      நான் இப்போது 10 நாளாகத்தான் ஆரம்பித்து இருக்கிறேன்.
      நீங்கள் சொல்வது போல மனதுக்கு இதமாக உற்சாகமாக இருக்கிறது.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  12. இரு இடத்தில் சிறிய எழுத்துப் பிழை வந்திருக்கிறதே ஏன்??..

    பெண்குயில் வீடியோவில் சாப்பிடும் அழகை ரசித்தேன். அந்தப் பெயர் தெரியாத பறவையின் சொண்டைப்பார்த்தால் கிளி இனம்போல தெரிகிறது, ஆனால் உடம்பைப் பார்க்க செண்பகப் பறவை நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு இடம் தெரிந்தது திருத்தினேன். டீச்சருக்கு நங்கு தெரியும் சொன்னால் திருத்திக் கொள்வேன்.
      நான் செண்பக பறவை என்று தான் போட்டுக் கொண்டு இருந்தேன்.
      செம்போந்து பறவையைதான் செண்பக பறவை என்கிறார்கள்.
      செண்பகபறவையை முன்பு தனி பதிவாக போட்டு இருக்கிறேன்.

      பெண்குயில் உணவு உண்ணும் காணொளி கண்டது மகிழ்ச்சி.

      நீக்கு
    2. ///இதன் சத்தம் வித்தியசமாக இருக்கும்///

      ///
      தண்ணீரோ பூச்சியோ ஏதோ தெடுகிறது///

      எழுத்துப்பிழை இல்லை கோமதி அக்கா, ரயேட்டிலும் இப்படி எழுத வரும் மற்றும் நம் கவலையீனம்:))

      நீக்கு
    3. அதிரா வாழ்க வளமுடன்
      திருத்தி விட்டேன்.
      நன்றி.

      நீக்கு
  13. ஆண்குயிலுக்கும் பெண்குயிலுக்கும் எவ்ளோ வித்தியாசம்...முந்தியும் சொல்லியிருக்கிறீங்க நான் மறந்திட்டேன் வேறுபாட்டை:), இனி மறக்க மாட்டேன்.

    பார்க் மிக சுத்தமாக இருக்கு, பார்க்க அழகு.

    பாட்டு சூப்பர், முன்பெல்லாம் அடிக்கடி வானொலியில் ஒலிக்கும் பாட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்குயிலுக்கும் பெண்குயிலுக்கும் எவ்ளோ வித்தியாசம்...முந்தியும் சொல்லியிருக்கிறீங்க நான் மறந்திட்டேன் வேறுபாட்டை:), இனி மறக்க மாட்டேன்.//

      நல்லது. பொட்டு உடை தரித்து இருப்பாள் பெண்குயில்
      ஆண்குயில் கறுமை.
      தினம் சுத்தம் செய்வார்கள். ஆனால் குழந்தைகள் தான் விளையாட வருவது இல்லை.
      பாட்டு முன்பு அடிக்கடி வானொலியில் கேட்போம். இப்போது தொலைக்காட்சியில் பழைய பாடல் பகிர்வில் கேட்கலாம்.

      நீக்கு
    2. இனி தொடர்ந்து வாருங்கள் அதிரா. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நன்றி.

      நீக்கு
    3. வாறேன் கோமதி அக்கா தொடர்வோம்..:).

      நீக்கு
    4. மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்

      நீக்கு
  14. மிக அருமையான தொகுப்பு. தலைப்போடு ஒத்துப் போகிறேன். காணொளிகள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      தலைப்பு உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

      காணொளிகளை , படங்களை ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  15. அதிகாலை பொழுதில் அற்புத நிகழ்வுகள் கேட்டு சந்திப்பதே ஆனந்தம்.
    பறவைகள் பல கோணங்களில் வர்ணம் காட்டுகின்றன. படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      ஆமாம், அதிகாலை பொழுதை அற்புதமாக்கும் பறவைகள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. பதிவை எடுத்துட்டீங்க போல. திருப்பி ஒரு தரம் பார்த்துடலாம்னு வந்தேன். :( சொல்லி இருக்க வேண்டாமோ? ஆனால் இதே பெருமாள் சுமார் ஐந்து வருடங்களாகச் சுற்றுகிறார். அநேகமாக அடையாறு அனந்தபத்மநாபர்னு நினைக்கிறேன். நான் அங்கே எல்லாம் போனதில்லை. திருமதி துளசி கோபால் அடிக்கடி போயிருப்பதால் அவரைக் கேட்டிருந்தால் தெரிந்திருக்கும். எப்படி ஆனாலும் ஆதிகேசவர் இடக்கையை நீட்டியபடியே சயனக்கோலம் கொண்டிருப்பார். நீங்கள் போட்டிருந்த பெருமாள் வலக்கையைத் தலைக்கு அடியில் மடக்கி வைத்திருக்கிறார் மேலும் பட்டாசாரியார்களும் திருவட்டார் கோயிலில் இருப்பவர்கள் அல்ல. ஶ்ரீரங்கம் பெருமாளுக்கும் நாபியில் பிரம்மா இல்லை. ஒவ்வொரு சயனக்கோலத்திலும் ஒவ்வொரு மாற்றம் இருக்கும். அந்த அந்தக் கோயில் தலவரலாற்றுக்கு ஏற்ப அமைந்திருக்கும். அடையாறு அனந்தபத்மநாபர் சமீபத்தியவர். காணொளியின் விக்ரஹக் கோலமும் புத்தம்புதுசாகவே தெரிவதால் அநேகமாக அடையாறு அனந்தபத்மநாபராகவே இருக்க வாய்ப்புகள் அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      ஐந்து வருடமாக வலம் வருகிறாரா பெருமாள்.!
      அடையாறு அனந்தபத்மநாபர் நன்றாக இருக்கிறார்.
      பார்த்தேன் சயன கோலங்கள் மாறி இருப்பது. கை மாற்றம் எல்லாம்.
      அதனால்தான் தவறான பதிவு வேண்டாம் என நீக்கி விட்டேன்.

      திருவட்டார் பட்டாசாரியார்கள் கேரளமாணியில் இருக்கிறார்கள்.
      இவர்கள் வேறு மாதிரி இருக்கிறார்கள்.ஸ்ரீரங்கம் பெருமாள் என்று வேறு கோயில் பெருமாளை போட்டார்கள் முன்பு.
      காணொளியில் பெருமாள் புத்தம் புதிதாக இருக்கிறார்தான்.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.

      நீக்கு