ஞாயிறு, 19 ஜூன், 2022

மார்டின் லூதர் கிங் தேசிய பூங்கா

அட்லாண்டவில்  உள்ள மார்டின் லூதர் கிங் தேசிய பூங்கா

மகனுக்கு  "தந்தையர் தின வாழ்த்துகள்"சொன்னேன்.

அப்போது மகன் எங்களுக்கு திங்கள் விடுமுறை தினம் .  என்றான் எதற்கு என்று கேட்ட போது  ஜூன் 19 பற்றி சொன்னான்.19ம் தேதி ஞாயிறு விடுமுறை தினமாக   போய்விட்டதால்   திங்கள் விடுமுறை என்றான். 

 தந்தையர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.


மகனிடம் விடுமுறை எதற்கு என்று கேட்டப்போது அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் விடுதலை நாள் ஜூன் 19. அதை நினைவு கூறும் விதமாக 

 "ஜூன்டீந்த் தினம்"( Juneteenth) கொண்டாப்படுகிறது என்றான். ஜூன் 19 1865 அன்று யீனியன் ஆர்மி ஜென்ரல் கார்டன் கிரேஞ்சரால் டெக்சாஸில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு சுதந்திரம்அளித்த நாள்.

 அந்த நாளை கொண்டாட  விடுமுறைதினமாக்கி விட்டனர்.

இதை கேட்டவுடன்  ஆப்பிரிக்கர்களின் சிவில் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிய மார்ட்டின் லூதர் கிங்  நினைவுக்கு வந்தார்.

 அட்லாண்டாவில்  மகள் அழைத்து சென்ற மார்டின் லூதர் கிங் நினைவு பூங்கா போய் வந்ததை பதிவு போடவே இல்லை போட வேண்டும் மகனிடம் சொன்னேன்.

நவம்பர் 22 ம்தேதி (2021ல் )அழைத்து போனாள் மகள்.

இன்று பொருத்தமான நாள் என்று போட்டு விட்டேன்.

வீட்டுவேலைகள், தொலைபேசி அழைப்புகள், மற்றும்  படங்களை தொகுத்து ஆல்பம் செய்து பின் செய்தி சேகரிப்பு என்று நாள் ஓடி விட்டது. எப்படியாவது இன்று பதிவு போட வேண்டும் என்று போட்டு விட்டேன்.

  

கறுப்பு  இனத்தவரின் உரிமைக்கு குரல் கொடுத்தவர். நிறவெறிக்கு எதிராக போர் தொடுத்த போது ஆயுதம் ஏந்தாமல் மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையால் கவரபட்டு அவரை போல அறவழியில்  போராட்டம் நடத்தியவர்.

மார்டின் லூதர் கிங்  அவர்களின் தந்தை தன் இனத்தை காக்க வந்த நம்பிக்கை ஒளிவிளக்கை  தூக்கி காட்டுகிறார் உலகத்திற்கு. 


சிலை அற்புதமாக வடிக்கப்பட்டு இருக்கிறது.


அமெரிக்காவிலுள்ள அட்லாண்டா நகரத்தில்  கிங் ஆல் பெர்ட்டா தம்பதிகளுக்கு 1929 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பிறந்தார்.

அவர் போகும் தேவாலயம்

இந்த கட்டிடத்தில் மார்டின் லூதர்  கிங் வாழ்க்கை வரலாறு ,   காட்சிக்கு வைக்கபட்டு இருக்கிறது. அவர் பேசிய சொற்பொழிவுகளையும் கேட்கலாம் என்று சொன்னார்கள்.

நாங்கள்   போன போது விடுமுறையாம், கொரானா காலம் என்று அடைத்து வைத்து இருக்கிறார்கள்.மற்ற பூங்கா எல்லாம் திறந்து விட்டார்கள், ஆனால் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின்  நினைவு சின்னங்கள் உள்ள இடம் மட்டும் திறக்கவில்லை.,

(இரண்டு வருடமாக திறக்கவில்லை.) அதனால் உள்ளே போக முடியவில்லை . வெளிபக்கம் மட்டும் பார்த்து வந்தோம்.


 
 உலகப் புகழ்பெற்ற  உரையிலிருந்து  கொஞ்சம்:-

//ஆகஸ்ட் 1963-ல் திரண்டிருந்த ஆப்ரிக்க அமெரிக்க மக்களின் முன்னால் `ஐ ஹேவ் எ டிரீம்' என்ற உலகப் புகழ்பெற்ற உரையை வாஷிங்டனில் நிகழ்த்தினார்.

நான் ஒரு கனவு காண்கிறேன்... ஒருநாள் ஜார்ஜியாவின் செம்மலையில், அடிமைகளின் வாரிசுகளும், அடிமை முதலாளிகளின் வாரிசுகளும் சகோதரத்துவ மேடையில் ஒன்றாக அமர்ந்திருப்பார்கள். ஒருநாள் மிசிசிபியின் நிலை, அநீதியின் வெம்மையும், அடக்குமுறையின் வெம்மையும் இல்லாத சுதந்திரமும் நீதியும் நிறைந்த பாலைவனச் சோலையாக உருமாறும்.


 நான் ஒரு கனவு காண்கிறேன்... அது என் நான்கு குழந்தைகளும் வசிக்கும் தேசத்தில், அவர்கள் தோலின் நிறத்தால் பேதப்படுத்தப்பட மாட்டார்கள். பதிலாக, அவர்களின் குணத்தால் மதிப்பிடப்படுவார்கள். இன்று அலபாமாவில் நிற பேதத்தால் வஞ்சிக்கப்படுபவர்கள், ஒருநாள் அதே அலபாமாவில் வெள்ளை இனப் பையன்களுடனும், பெண் குழந்தைகளுடனும் சகோதர- சகோதரிகளாகக் கைகோப்பார்கள்.//


நன்றி- விகடன்.

 




சர்வதேச உலக  அமைதி தோட்டம்



சர்வதேச உலக அமைதி ரோஜா தோட்டத்தில் செடிகளுக்கு கீழே மார்டின் லூதர் கிங் அவர்களின் பேச்சை பள்ளி குழந்தைகள் எழுதி வைத்து இருக்கிறார்கள். 

அவர் பிறந்த வீட்டை பார்க்க முடியவில்லை அதனால் படம் எடுக்கவில்லை. இந்த படம் கூகுள் படம். (நன்றி- கூகுள்)

இன்னும் படங்களும் செய்திகளும் அடுத்த பதிவில்.

2009 ம் ஆண்டு ஜூன் 1 ம் தேதி" திருமதி பக்கங்கள்" வலைத்தளம் ஆரம்பித்தேன். 13 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது. 14 ம் ஆண்டு அடி எடுத்து வைக்கிறது.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன். !
---------------------------------------------------------------------------------------------------

26 கருத்துகள்:

  1. இந்த விவரங்கள் வேறு எங்கோவும் படித்த நினைவு.  படங்களும், விவரங்களும் சுவாரஸ்யம்.  சிலை அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  மார்டின் லூதர்கிங்கின் ஐ ஹேவ் எ ட்ரீம்..  புகழ்பெற்ற வார்த்தை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //இந்த விவரங்கள் வேறு எங்கோவும் படித்த நினைவு.//

      முகநூலில் போட்டு இருந்தேன். அட்லாண்டாவில் இருந்த போது , சில படங்களும் செய்திகளும் போட்டேன்.

      மார்டின் லூதர்கிங்கின் ஐ ஹேவ் எ ட்ரீம்.. புகழ்பெற்ற வார்த்தை..//

      ஆமாம்.

      ஒலிம்பிக் தேதிய பூங்கா போய் இருந்த போது அங்கு ஒரு சுவரில் மார்ட்டின் லூதர் கிங் பொன்மொழிகள் எழுதி இருப்பதை படம் போட்டு இருந்தேன்.
      நல்ல நினைவாற்றல்.

      நீக்கு
  2. அங்கெல்லாம் ஒரு விடுமுறை நாள் ஞாயிற்றுக்கிழமையில் வந்து விட்டால் தொடரும் வேலை நாளில் விடுமுறை கொடுத்து விடுகிறார்கள்.  நம்மூரில் அப்படிச் செய்வதில்லை!  நிறைய லீவு நாட்கள் இரண்டாம் சனிக்கிழமை, ஞாயிறில் கடந்து போய்விடுகின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இதை நீங்கள் நினைப்பீர்கள் என்று நினைத்தேன் அது போல கருத்து சொல்லி விட்டீர்கள். பள்ளி நாளில் விடுமுறை எப்போது வரும் என்று நினைப்போம். . அது போல இப்போது வேலை நாளிலும் விடுமுறையை நினைக்க வைக்கிறது.

      2009 ம் ஆண்டு ஜூன் 1 தான் நான் பதிவு ஆரம்பித்தேன். 13 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் நன்றாக உள்ளது. பூங்காவின் மலர்கள் உள்ள படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. அதில் ஒரு படத்தில் மலர்கள் அருகில் நீங்கள்தானே?

    மார்டின் லூதர் கிங் பற்றி விபரமாக சொல்லியுள்ளீர்கள். நானும் ஏற்கனவே இவரைப்பற்றி படித்தது நினைவுக்கு வந்தது. அந்த சிலை மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள். நீங்களும் ஒவ்வொரு பாகமாக படமெடுத்து போட்டது ரசிக்கத்தக்கதாக உள்ளது.

    நீங்கள் சொல்வது போல் விடுமுறை நாட்களில் விடுமுறை தினமாக வந்து விட்டால், ஆகா.. ஒரு விடுமுறை போயிற்றே என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் அங்கு அதை உணர்ந்து திங்களில் விடுமுறை விடுவது சிறப்பு. பதிவு நன்றாக உள்ளது. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்


    //பதிவு அருமை. படங்கள் நன்றாக உள்ளது. பூங்காவின் மலர்கள் உள்ள படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. அதில் ஒரு படத்தில் மலர்கள் அருகில் நீங்கள்தானே?//

    நன்றி மலர்கள் அருகில் நாந்தான்.

    //மார்டின் லூதர் கிங் பற்றி விபரமாக சொல்லியுள்ளீர்கள். நானும் ஏற்கனவே இவரைப்பற்றி படித்தது நினைவுக்கு வந்தது. அந்த சிலை மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள். நீங்களும் ஒவ்வொரு பாகமாக படமெடுத்து போட்டது ரசிக்கத்தக்கதாக உள்ளது.//

    முன்பு போட்ட பதிவில் கொஞ்சம் மார்டின் நூதர் கிங் பற்றி கொஞ்சம் பகிர்ந்து இருந்தேன்.

    அவர் சிலை நன்றாக இருந்தது தந்தைக்கு மகனை கைகளில் ஏந்தும் போது பெருமிதம் மகிழ்ச்சி இருக்குமல்லவா ! அது அப்படியே தெரிந்தது.
    மாலை நேரம் என்பதாலும் மரங்களின் நிழல் இருப்பதாலும் கொஞ்சம் இருட்டு இருக்கிறது. அதுதான் ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் படம் எடுத்தேன்.


    //நீங்கள் சொல்வது போல் விடுமுறை நாட்களில் விடுமுறை தினமாக வந்து விட்டால், ஆகா.. ஒரு விடுமுறை போயிற்றே என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் அங்கு அதை உணர்ந்து திங்களில் விடுமுறை விடுவது சிறப்பு. பதிவு நன்றாக உள்ளது. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி//

    ஆமாம், விடுமுறைபோயிற்றே! என்று தான் நினைக்க தோன்றும்.
    அதை உணர்ந்து திங்களில் விடுமுறை விடுவது சிறப்புதான். அங்கு வாரவிடுமுறை நாளை மகிழ்ச்சியாக வெளியே கழிப்பார்கள். நாம் வீட்டில் ஓய்வு எடுக்க விரும்புவோம்.

    உங்கள் விரிவான கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான மனிதர்... படங்கள் அனைத்தும் அருமை...

    14ஆம் ஆண்டு வலைப்பூ மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும்.

      நீக்கு
  6. முதலில் 14-ஆண்டில் வலைத்தளம் காலடி வைத்தமைக்கு வாழ்த்துகள்.

    படங்களோடு வரலாறு சிறப்பாக பதிவு செய்தமைக்கு நன்றி

    சிலை வெகுசிறப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      முதலில் 14-ஆண்டில் வலைத்தளம் காலடி வைத்தமைக்கு வாழ்த்துகள்//

      நன்றி வாழ்த்துகளுக்கு.

      படங்களை, வரலாறை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி ஜி.

      நீக்கு
  7. //2009 ம் ஆண்டு ஜூன் 1 ம் தேதி" திருமதி பக்கங்கள்" வலைத்தளம் ஆரம்பித்தேன். 13 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது. 14 ம் ஆண்டு அடி எடுத்து வைக்கிறது.//

    நீங்கள் ஒன்றாம் தேதி..  நாங்கள் அதே வருடம், அதே மாதம் 28 ஆ தேதி தேதி!  வாழ்த்துகள் அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ஸ்ரீராம்., நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.
      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  8. அருமை. உடன் சென்று பார்த்த உணர்வு. நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. 14 ஆம் ஆண்டிற்கு வாழ்த்துகள் கோமதிக்கா. மேலும் மேலும் நிறைய எழுதுங்கள். இறையின் அருளால்..

    கோமதிக்கா அருமையான பதிவு. மார்ட்டின் லூதர் கிங்க் - ஜூனியர் அவரது வாசகங்கள் மிகவும் பிடிக்கும்.

    படங்களும் அருமை கோமதிக்கா...

    ராயசெல்லப்பா சாரும் அவர் நேரில் சென்று பார்த்ததை எழுதியிருந்தார். ஜூனியருக்கு அங்கு ரொம்பவே மரியாதை என்றும், அவர் வீடு இருக்கும் தெருவில் வேறு புது வீடுகள் எதுவும் கட்ட அனுமதி கிடையாது என்றும் சொல்லியிருந்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //14 ஆம் ஆண்டிற்கு வாழ்த்துகள் கோமதிக்கா. மேலும் மேலும் நிறைய எழுதுங்கள். இறையின் அருளால்..//

      இறை அருளாலும்,உங்கள் எல்லோர் ஊக்குவிப்பும் தான் எழுத வைக்கிறது கீதா.

      மார்ட்டின் லூதர் கிங்க் - ஜூனியர் அவரது வாசகங்கள் மிகவும் பிடிக்கும்.//
      ஆமாம், முன்பு ஒரு பதிவில் அவர் வாசகம் பகிர்ந்த போது சொன்னீர்கள் நினைவு இருக்கிறது.

      //ராயசெல்லப்பா சாரும் அவர் நேரில் சென்று பார்த்ததை எழுதியிருந்தார். ஜூனியருக்கு அங்கு ரொம்பவே மரியாதை என்றும், அவர் வீடு இருக்கும் தெருவில் வேறு புது வீடுகள் எதுவும் கட்ட அனுமதி கிடையாது என்றும் சொல்லியிருந்த நினைவு.//

      சாரும் இந்த இடத்திற்கு போய் பார்த்து பதிவு போட்டு இருப்பதை நான் பார்க்கவில்லை. அவர் வலைத்தளம் சென்று வெகு காலம் ஆச்சு.


      நீக்கு
  11. மலர்களும், (அருகில் நீங்கள் நிற்பதும் தெரிகிறது) அவரது வாசகங்களும் சிறப்பாக இருக்கு. வாசகங்கள் என்ன ஒரு அர்த்தம் இல்லையா....இவரைப் பற்றி வாசிக்க வாசிக்க மனதில் இனம் புரியாத உணர்வுகள் எழும். நல்ல பதிவு நாளுக்கு ஏற்ற சிறப்பான பதிவு

    ஆமாம் அங்கெல்லாம் லாங்க் வீக் என்ட் என்று கொடுத்துவிடுகிறார்கள். விடுமுறை ஞாயிறில் வந்தால் கூட ஒரு நாள் கொடுத்துவிடுவார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலர்த்தோட்டம் அருகே நான் நிற்கிறேன்.

      //அவரது வாசகங்களும் சிறப்பாக இருக்கு. வாசகங்கள் என்ன ஒரு அர்த்தம் இல்லையா....இவரைப் பற்றி வாசிக்க வாசிக்க மனதில் இனம் புரியாத உணர்வுகள் எழும். நல்ல பதிவு நாளுக்கு ஏற்ற சிறப்பான பதிவு//

      ஆமாம் கீதா. அன்பால் தான் எதையும் சாதிக்க முடியும் என்று சொன்னவர்.

      ஸ்ரீராமும் எங்கோ படித்த நினைவு என்றார். செல்லப்பா சார் பதிவை படித்து சொல்லி இருப்பார் போலும்.

      வாரம் முழுவதும் வேலை விடுமுறை நாளில் குடும்பத்துடன் வெளி இடங்களை சுற்றிப்பார்த்தல் அவர்களுக்கு பிடித்த பொழுது போக்கு.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  12. பதினான்காம் ஆண்டிற்கான நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      உங்கள் நல் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  13. உலக அமைதி தோட்டத்தில்
    ரோஜா என மலர்ந்த
    மார்ட்டின் லூதர் கிங் அவர்களைப் பற்றிய பதிவு சிறப்பு..

    வாழ்க வையகம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உலக அமைதி தோட்டத்தில்
      ரோஜா என மலர்ந்த
      மார்ட்டின் லூதர் கிங் அவர்களைப் பற்றிய பதிவு சிறப்பு..//

      மார்ட்டின் லூதர் கிங் பற்றி நன்றாக சொன்னீர்கள். உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. பதிவு அருமை. வாழ்பவர்களில் சிலர்தான் சரித்திரம் படைக்கிறார்கள். மாட்டின் லூதர் கிங் அவர்களில் ஒருவர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      ஆமாம். வாழ்பவர்க்ளில் சிலர்தான் சரித்திரம் படைக்கிறார்கள்
      39 வயதில் தன் இன மக்களுக்காக தன் இன் உயிரை தந்தவர்.
      உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

      நீக்கு