மார்ட்டின் லூதர் கிங் தேசிய பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை
அட்லாண்டாவில் உள்ள மார்டின் லூதர் கிங் தேசிய பூங்கா . முந்தின பதிவின் தொடர்ச்சி. மேலும் சில தேசிய பூங்கா படங்கள். இந்த பதிவில் இடம்பெறுகிறது.
காந்தியின் சிலை இருக்கும் மேடையில் மார்டின் லூதர் கிங் காந்தியை பற்றி சொன்ன வாசகமும், காந்தியின் கை ராட்டையும் இடம் பெற்று இருக்கிறது.
கருப்பு காந்தி
மார்ட்டின் லூதர் தர் கிங் வாழ்க்கை வரலாறு இணையத்தில் படித்தேன் அவை:-
//டென்னசியில் 1968 - ஆம் ஆண்டு ஏப்ரல் 4- ஆம் நாள் மாலை வெள்ளையினத் தீவிரவாதி மார்டின் லூதர் கிங்கை துப்பாகியால் சுட்டான். அப்போது அவர் வயது 39. அவர் மறைவிற்கு உலக மக்கள் அனைவரும் அஞ்சலி செய்து அவரை கருப்பு காந்தி என்று அழைத்தார்கள்.
மரணத்திற்கு தயாராகும் போதும் அவர் நம்பிக்கையிழக்கவில்லை. "அவரது உரை முழுக்க விரவியிருக்கும் கருத்து: " நாம் பெருமைகொள்ள நிறைய இருக்கிறது" என்பதுதான். "நான் இறந்தாலும் , நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு அருகில் நம்மை இட்டுச்செல்ல என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன்."//
சரித்திரம் படைத்த நல்ல மனிதர் வாழ்க!
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
==========================================================
மிகப்பெரிய தலைவரின் பெயரால் அமைந்த தேசியப் பூங்கா படங்கள் அழகு. ஒடுக்கப்பட்டவர்களுக்கு மார்ட்டின் லூதர் கிங் போல தலைவர்கள் எப்போதும் அமைவார்கள்.
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//ஒடுக்கப்பட்டவர்களுக்கு மார்ட்டின் லூதர் கிங் போல தலைவர்கள் எப்போதும் அமைவார்கள்.//
ஆமாம்.
உங்கள் கருத்துக்கும் நன்றி நெல்லைத் தமிழன்.
காந்தியை மிகவும் மதித்தவர், ஆராதித்தவர் அவரைப் போலவே மரணம் அடைந்தது மிகவும் வருத்தம் தரும் செய்தி. 30 வயதுல்லாம் மாறன் அடையும் வயதா என்ன..
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//காந்தியை மிகவும் மதித்தவர், ஆராதித்தவர் அவரைப் போலவே மரணம் அடைந்தது மிகவும் வருத்தம் தரும் செய்தி. 30 வயதுல்லாம் மாறன் அடையும் வயதா என்ன..//
ஆமாம் , காந்தியை போலவே அவருக்கும் மரணம். 39 வயது
சிறு வயதுதான் மரணம் அடையும் வயது இல்லைதான்.
இறவா புகழ் பெற்று விட்டார்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் வரலாற்று தகவல்கள் சிறப்பு.
பதிலளிநீக்குபடங்கள் மிகவும் தெளிவாக, அழகாக எடுத்து இருக்கிறீர்கள்
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஅவர் வரலாற்று தகவல்கள் படித்தால் எப்படி பட்ட மனிதர்! என்ற வியப்பும் அவர் முடிவு வருத்தமும் கொடுக்கிறது.
//படங்கள் மிகவும் தெளிவாக , அழகாக எடுத்து இருக்கிறீர்கள்//
நன்றி, நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி.
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது.
மார்டின் லூதர் கிங் அவர்களின் சிறப்புக்களை தங்கள் பதிவின் மூலம் விபரமாக அறிந்தேன்.
/மரணத்திற்கு தயாராகும் போதும் அவர் நம்பிக்கையிழக்கவில்லை. "அவரது உரை முழுக்க விரவியிருக்கும் கருத்து: " நாம் பெருமைகொள்ள நிறைய இருக்கிறது" என்பதுதான். "நான் இறந்தாலும் , நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு அருகில் நம்மை இட்டுச்செல்ல என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன்."///
ஆம் உண்மைதான் . மிக நல்ல மனிதர். இப்படிப்பட்ட பொது நோக்குகள் அமைந்த நல்ல மனிதர்களால்தான் பெரும்பாலும் நிறைய நாள் இப்புவியில் வாழ இயலவில்லை. அவர்களால் மக்களும் நிறைய பயன்களை பெறுவதற்குள்ளாகவே அவர்களை இறைவன் அழைத்துக் கொண்டு விடுகிறான். நம் தேச பிதா காந்தியடிகளின் சிலை இருக்குமிடங்களும் வண்ணம் மிகுந்த மலர்கள் நிறைந்த பூங்காவின் படங்களும் மனதை கொள்ளை கொள்கின்றன. அவரது கைராட்டின படமும், அவரைப்பற்றி மார்டின் லூதர் கிங் எழுதிய வாசகங்கள் அடங்கிய படமும் அழகாக தெளிவாக உள்ளன. தாங்கள் எடுத்த படங்கள் அனைத்துமே மிகத் தெளிவாக இருக்கின்றன. அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கம்லா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குமார்டின் லூதர் கிங் அவர்களின் சிறப்புக்கள் நிறைய இருக்கிறது. நான் சொன்னது துளிதான்.
நீங்களும் படித்து இருப்பீர்கள்.
1968 ம் ஆண்டு பள்ளியில் படித்து கொண்டு இருந்த நேரம் அவர் இறந்து போய் இருக்கிறார். அப்போது எல்லாம் அவர் இனத்தின் உரிமைக்கு பாடு பட்டவர் என்ற அளவில் மட்டும் தான் தெரியும்.
//காந்தியடிகளின் சிலை இருக்குமிடங்களும் வண்ணம் மிகுந்த மலர்கள் நிறைந்த பூங்காவின் படங்களும் மனதை கொள்ளை கொள்கின்றன.//
நிறம் மாறிய இலைகள் அவை. இலையுதிர் காலத்தில் மரங்கள் எல்லாம் நிறம் மாறி அழகாய் காட்சி அளிக்கும்.
படங்களை , பதிவை ரசித்து பார்த்து படித்து விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி.
இடம் மிகவும் அருமையாக இருக்கிறது அம்மா...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், பூங்கா மிக அழகாய் பராமரிக்கப்படுகிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அழகான படங்கள்.. அந்தப் பூங்கா பராமரிக்கப்படும் நேர்த்தி நெஞ்சைக் கவர்கின்றது..
பதிலளிநீக்குவணக்கம் சகோ, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
பெருமை பெற்ற தலைவரின் பெயரால் அமைக்கப்பட்டிருக்கும் பூங்கா அழகு. காந்தி சிலை வைத்திருப்பதும் சிறப்பு.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குமார்ட்டின் லூதர் கிங் காந்தியை நேசித்தார் அவர் கொள்கையை பின் பற்றினார், அதனால் அவருக்கு பிடித்தவரின் சிலை அவர் பூங்காவில் இடம் பெற்று இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.
மார்ட்டின் லூதர் கிங்க் அருமையான தலைவர் ஆனால் பாருங்கள் அவரின் மரணம் மிகவும் சிறு வயதில். அவர் பெயரில் அமைந்திருக்கும் பூங்கா மிக மிக அழகாக அவரைப் போலவே இருக்கிறது. அமைதியான பூங்கா?! அவர் அமைதியை அஹிம்சா வழியில் விரும்பியவர்.
பதிலளிநீக்குதூங்கள் இருபுறமும் உள்ள அந்தப் பாதை, இரு புறமும் சிவப்பு மலர்கள் பூத்திருக்கும் மரங்கள் இடையே செல்லும் பாதை மிக மிக அழகாக இருக்கின்றன. படங்கள் அத்தனையும் அம்சமாக இருக்கின்றன் கோமதிக்கா..ரசித்துப் பார்த்தேன். தகவல்களும் அருமை
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், மரணம் சிறு வயதில், ஆனால் இறவா புகழ் பெற்றுவிட்டார்.
நீங்கள் சொல்வது போல அமைதி பூங்காதான்.
இருபுறமும் உள்ள மரத்தின் இலைதான் வண்ணமாக காட்சி அளிக்கிறது. இலையுதிர் கால பதிவில் இந்த மரங்களை பற்றி சொல்லி இருப்பேன்.
கீழே உதிர்ந்து இருக்கும் இலை சருகுகள் சொல்லும் அதன் வண்ணத்தை.
படங்களை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
படங்களும் பகிர்வும் அருமை. மார்ட்டின் லூதர் கிங் பற்றிய குறிப்புக்கும் நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.