ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

என் வீட்டு ஜன்னல் வழியே

 







புறாக்கள் இரண்டு கூடு கட்ட தினம் குச்சிகளை கொண்டு வந்து எதிர்வீட்டு பாத்ரூம் ஜன்னலில் வைத்தது, அவை எல்லாம் கீழே விழுந்து கொண்டே இருந்தது. (கூடு கட்ட இடம் வசதி இல்லை) சரி விழுந்த இடத்திலேயே முட்டையிட்டு அடைகாப்போம் என்று அடைகாத்து வந்தது தாய் பறவை.

நானும் குஞ்சைப்பார்க்க ஆவலாக இருந்தேன். குஞ்சு வந்ததும் ஒரு நாள் உணவு ஊட்டுவதைப் பார்த்து விட்டேன்.

அதன் பிறகு என் கண்ணில் காட்டாமல் தன் சிறகின் கீழ் மறைத்து கொண்டு என்னை கவனித்து கொண்டே இருந்தது.

பாதுகாப்பு இல்லாத இடம் மற்ற பறவைகளால் இடையூறூ ஏற்படும் இடம். அதனால் அது தன் சிறகின் கீழ் மறைத்து கொண்டு இருந்தது. (அந்த காணொளியும் இதில் இருக்கிறது பார்க்கலாம்.)


இளம் மஞ்சள் கலரில் குஞ்சு இருந்தது,




காணொளி எடுக்க வசதி இல்லாமல் இருந்தது. ஒரு பால்கனியில் வலை வைத்து தடுத்து இருக்கிறேன், அதன் வழியாக கஷ்டப்பட்டு எடுத்தேன்.


//அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார் // 
இந்த பாடல் தான் நினைவுக்கு வந்தது.


நேற்று தாய் , சேய்கள் அந்த இடத்தில் இல்லை, பறந்து போய் விட்டது.

3 அல்லது 4 வாரங்கள் கழித்து தான் பறந்து போகும் என்று படித்து இருக்கிறேன். மகன் வீட்டிலும் பார்த்து இருக்கிறேன்.

வருத்தமாக இருக்கிறது, ஏதாவது இடையூறு நிகழந்து இருக்குமோ என்று கவலையாக இருக்கிறது.

நன்றாக இருந்தால் சரி. இறையருளால் நன்றாக இருக்க வேண்டும்.


என் வீட்டுக்கு வந்த அமைதி புறா.

ரஷ்யா- உக்ரைன் 4 வது நாள் போர் நீடிக்கிறது. போர் விரைவில் முடிவடைய வேண்டும். மக்கள் உணவு கிடைக்காமல் கஷ்டபடுவதும், கை குழந்தைகளை தூக்கி கொண்டு ஓடுவதை பார்க்கும் போது மனது கனத்து போகிறது. போர் இல்லா உலகம் வேண்டும்.

அமைதி நிலவ வேண்டும். அமைதிக்கு பிரார்த்தனை செய்வோம்.

இந்தியர்கள் இந்தியா திரும்பி வருகிறார்கள்.படிக்க போன மாணவர்கள் திரும்பி வந்து கொண்டு இருக்கிறார்கள். எல்லோரும் நலமாக ஊர் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.
(15,000 பேர் திரும்ப வேண்டுமாம்.)

வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.

-----------------------------------------------------------------------------------------

34 கருத்துகள்:

  1. புறாக்களின் படங்கள் அழகு. சேர்த்திருக்கும் காணொளிகளும் சிறப்பு. தொடரட்டும் பறவைப் பார்வை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. படங்களும், காணொளிகளும் கண்டேன் அருமை.

    போர் நிறுத்தம் வரவேண்டும் உலக மக்கள் விரும்புவதும் இதுவே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்களும், காணொளிகளும் கண்டேன் அருமை.//

      நன்றி.

      //போர் நிறுத்தம் வரவேண்டும் உலக மக்கள் விரும்புவதும் இதுவே...//

      ஆமாம், அதுதான் உலக மக்கள் விருப்பம் , விரைவில் வர வேண்டும்.உங்கள் கருத்துக்கு நன்றி.






      நீக்கு
  3. முகநூலிலும் பார்த்தேன். எங்க வீட்டிற்கும் மாடப்புறாக்கள் வருகின்றன. ஆனால் வந்து உட்கார்ந்துட்டுப்போயிடும். பக்கூம், பக்கூம் என்ற குரல் மத்தியானமெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும். படம் எடுக்கும்படியான வசதியான இடத்தில் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      மாடப்புறாக்கள் இங்கும் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டு ஜன்னலில் அமர்ந்து சத்தம் கொடுக்கும்.

      இத்தனை வருஷமாய் கூடு கட்ட குச்சி எடுத்துக் கொண்டு அலையும் புறாக்களை பார்த்து இருக்கிறேன். இந்த முறை கட்டியதை பார்த்தேன். புறாக்கள் வளருவதை பார்க்கலாம் என்றால் அதற்குள் போய் விட்டது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. சிரமப்பட்டு எடுத்த காணொளியும் அருமை...

    போர் எந்தக் காலத்திலும் கேடு விளைவிப்பவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்
      போர் எந்தக் காலத்திலும் கேடுதான்.
      போரில்லா அமைதியான உலகம் வேண்டும்.

      காணொளியை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  5. பேஸ்புக்கிலும் பார்த்தேன்.  ஜன்னலில் வைத்த குச்சிகள் கீழே விழுந்தாலும் அவை விழுந்து சேர்ந்த இடத்திலேயே முட்டையிட்டு...    பாவம்..  அதனால் அதற்குமேல் அக்ஷ்டப்பட நேரமில்லை.  அதனால் தளர்ந்து போகவில்லை.  விரும்பியது கிடைக்கவில்லையெனினும் கிடைத்ததை பயன்படுத்தி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //பாவம்.. அதனால் அதற்குமேல் அக்ஷ்டப்பட நேரமில்லை. அதனால் தளர்ந்து போகவில்லை. விரும்பியது கிடைக்கவில்லையெனினும் கிடைத்ததை பயன்படுத்தி இருக்கிறது.//

      உண்மைதான். நிறைய புறாக்கள் இப்படி ஜன்னலில் கொண்டு போய் வைத்து கூடு கட்ட முடியாமல் வேறு இடம் தேடி போய் இருக்கிறது. முன்பு இரு பதிவில் குச்சி வைப்பதை படம் எடுத்து போட்டு இருப்பேன்.
      போகிற போக்கில் மிக அழகாய் வாழ்க்கை பாடத்தை கற்று கொடுப்பது உங்கள் கருத்து வழியாக தெரிகிறது.

      நீக்கு
  6. படங்களும், காணொளியும் கண்டு மகிழ்ந்தேன்.  உன்னதங்கள் காணொளியும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன்னதமானவரே பாடல் அடிக்கடி கேட்டதன் விளைவு. அந்த பாடல் முதலில் நினைவுக்கு வந்தது. தாயும் கடவுளும் ஒன்று இறைவன் காப்பது போல் அந்த புறா தனக்குள் குஞ்சுகளை வெளியே தெரியாமல் வைத்து கொண்டதை பார்த்தவுடன் இந்த பாடல் நினைவுக்கு வந்தது.

      நீக்கு
  7. எங்கள் வீட்டு பால்கனிக்கு புறாக்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றன.  ஒன்றானது, பின் இரண்டாகி மூன்றாகி நான்காகி...   பாஸூக்கு அவை அலர்ஜியாய் இருக்கிறது.  பாஸும் மகனும் அங்கு வலை கட்ட யோசித்து வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாஸூக்கு அலர்ஜி என்றால் என்ன செய்வது ? வலை தடுப்பு போட வேண்டியதுதான். ஒரு பக்க பால்கனிக்கு வலை தடுப்பு போட்டு இருக்கிறோம்.
      பறவைகளால் தொந்திரவும் இருக்கிறது. மகிழ்ச்சியும் தருகிறது.

      நீக்கு
  8. ரஷ்யா உக்ரைன் போர் சீக்கிரம் முடிவுக்கு வர பிரார்த்திப்போம். இரண்டு பாடல்கள் நினைவுக்கு வருகின்றன.

    1) அமைதிப்புறாவே அமைதிப்புறாவே அழைக்கின்றேன் உன்னை... நிம்மதியே நிம்மதியே நான் நேசிக்கிறேன் உன்னை

    2) சாந்தி நிலவ வேண்டும்... சாந்தி நிலவ வேண்டும்

    பதிலளிநீக்கு
  9. //ரஷ்யா உக்ரைன் போர் சீக்கிரம் முடிவுக்கு வர பிரார்த்திப்போம். இரண்டு பாடல்கள் நினைவுக்கு வருகின்றன.//
    பிரார்த்திப்போம்.எனக்கும் இரண்டு பாடல் நினைவுக்கு வந்தது. முன்பு வெள்ளை புறாக்கள் படம் போட்டு அந்த பாடல்களை பகிர்ந்து கொண்டு விட்டேன் ஒரு பதிவில்.

    அமைதிப்புறாவே அமைதிப்புறாவே பாட்டு இடம் பெற்ற படம் போரில் ஏற்பட்ட இன்னலகள் போர் வேண்டாம் என்பதி சொல்லும் படம் தான்.

    வேதாத்திரி மகரிஷி எழுதிய "உலக நல வேட்பு " பாடலில் வரும்
    உலகில் போர் ,பகை ,அச்சமின்றி
    மக்கள் உழைத்துண்டு , வளம் காத்து வாழ வேண்டும்
    உலகெங்கும் மனிதகுலம் அமைதியென்னும்
    ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்ய வேண்டும்.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. கோமதிக்கா புறா படங்கள் எல்லாம் அழகு! பாவம் ஒவ்வொரு உயிருக்கும் இந்தப் பிரசவம் எவ்வளவு கடினமாக இருக்கிறது இல்லையா? அவற்றிற்கு இடம் கூட இல்லாமல்...ம்ம்ம் என்ன சொல்ல?

    பாருங்க குச்சி கீழ விழுந்தாலும் விழுந்த இடத்தில் அழகா முட்டையிட்டு, குஞ்சு வந்து குஞ்சும் அம்மாவும் அழகு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //பாவம் ஒவ்வொரு உயிருக்கும் இந்தப் பிரசவம் எவ்வளவு கடினமாக இருக்கிறது இல்லையா? அவற்றிற்கு இடம் கூட இல்லாமல்...ம்ம்ம் என்ன சொல்ல?//

      ஆமாம், பறவைகளுக்கு பாதுகாப்பான இடம் அமைய வேண்டும். கடினம் தான் அவைகள் வாழ்க்கை.

      குஞ்சுகளும், அம்மாவும் அழகுதான்.

      நீக்கு
  12. அக்கா ஜூம் செய்து எடுத்துருக்கீங்க இல்லையா சிலது? நன்றாக வந்திருக்கிறது.

    வீடியோவும் கொஞ்சம் ஜூம் செய்து எடுத்திருப்பது தெரிகிறது அந்த அசைவிலிருந்து. எனக்கும் இப்படித்தான் ஆகிறது அக்கா ஏரியில் தூரத்தில் இருக்கும் பறவைகளைக் கொஞ்சம் ஜூம் செய்து எடுத்தால் கை கொஞ்சமே கொஞ்சம் அசைந்தாலும் வீடியோ மேலும் கீழும் ஆடுவது தெரிகிறது.

    உங்கள் வீடியோ ரொம்ப நன்றாக வந்திருக்கு அக்கா. கஷ்டப்பட்டு வலை வழியே எடுத்துருக்கீங்க. நல்லா இருக்கு அக்கா.

    குஞ்சு என்ன அழகு. அதுவும் க்ளியராக வந்திருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ஜூம் செய்து எடுத்தேன். கை அசைந்தால் படம் மேலும், கீழும் போகும் தான்.
      வலையின் வழியே எடுத்தேன் பச்சை வலை அதுதான் கலராக வந்து இருக்கிறது.

      குஞ்சு இன்னும் வளர வேண்டும் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் முடியவில்லை.

      நீக்கு
  13. தாய் சேய் ரெண்டையும் காணலையா. அடடா?! என்ன ஆகியிருக்கும்? பூனைகள் உண்டோ வளாகத்தில்?

    வாசித்ததும் எனக்கும் கவலை தொற்றிக் கொண்டுவிட்டது. ஒவ்வொரு உயிரும் பிழைக்க என்ன பாடு? நாம் புலம்பி விடுகிறோம். அவை என்ன செய்யுமோ? இப்படி எல்லாம் யோசனை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூனைகள் மேலே வர முடியாது. முதல்மாடியில் இருக்கிறது . காகம் அல்லது வேறு ஏதாவது பறவை எடுத்து போஉ இருக்குமோ என்று சந்தேகம்.

      ஆமாம், எனக்கும் இரண்டு நாளாக மனசு சரியில்லை, வேண்டிக் கொண்டு இருக்கிறேன் நலமாக இருக்க வேண்டும் என்று.

      நீக்கு
  14. ஆமாம் அக்கா உக்ரைன் அமைதி பெற வேண்டும். பாவம் மக்கள். எதுக்கு இப்படிச் சண்டை போடுகிறார்கள்? ச்சே என்ன மனிதப் பிறப்போ? அப்பாவி மக்கள் கஷ்டபப்டுவார்கள் என்று கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்கள் போலும். என்னவோ போங்க. அமைதி திரும்ப வேண்டும். பிரார்த்திப்போம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போரில்லா உலகம் வேண்டும். எங்கும் அமைதி நிலவ வேண்டும்.
      அமைதி திரும்ப பிரார்த்திப்போம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  15. புறாக்கள் படம் சிரமத்துடன் எடுத்த காணொளி அருமை உயிர்கள் வாழட்டும்.

    போர் காலத்தில் வாழ்ந்த அனுபவங்கள் உண்டு .எங்கும் விரைவில் அமைதி நிலவ வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உயிர்கள் வாழட்டும் என்ற உங்கள் வாக்கு பலிக்கட்டும். நன்றாக இருக்க வேண்டும் புறாவும், குஞ்சுகளும்.

      //போர் காலத்தில் வாழ்ந்த அனுபவங்கள் உண்டு .எங்கும் விரைவில் அமைதி நிலவ வேண்டுவோம்.//

      கொடுமையான காலங்கள் இல்லையா?

      ஆமாம், விரைவில் அமைதி நிலவ வேண்டுவோம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. காணொளிகளும் படங்களும் அருமை. முன்பு வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் எப்போதும் காணக் கிடைக்கும் மாடப்புறாக்கள். ஆனாலும் அதன் குஞ்சுகளைக் கண்டதில்லை. மஞ்சள் நிறத்தில் இருக்குமென்பதை இப்போதுதான் பார்க்கிறேன். குஞ்சுகள் தாய்ப்புறாவுடன் சேர்ந்து காணவில்லையாதலால் எங்கேனும் வேறிடம் சென்று பத்திரமாக இருக்குமென நம்புவோம்.

    போரில்லா உலகத்திற்காகப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      கோவில் கோபுரங்கள் போல அடுக்குமாடி குடியிருப்பில் அதிகமாய் காணகிடைக்கும் மாடப்புறாக்கள். மணிப்புறா மரத்தில்க் தான் வசிக்கிறது.
      நானும் இப்போது தான் மாடப்புறாவின் குஞ்சுகளை பார்த்தேன். கொஞ்ச நாட்கள் ஆனால் அதன் நிறம் மாறலாம் , பார்க்கலாம் என்று கவனித்து கொண்டு இருந்தேன்.
      காலை பார்த்தேன் மாலையில் இல்லை , அவை பூனை குட்டியை போல தூக்கி கொண்டு இடமாறி இருந்தால் நல்லது.

      நீங்கள் சொல்வது போல வேறிடத்தில் பத்திரமாய் இருப்பதாய் நினைத்து கொள்கிறேன்.

      போரில்லா உலகத்திற்காகப் பிரார்த்திப்போம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  17. புறாவின் வேதனை.. பாசப் போராட்டம்..

    மனிதனின் நடைமுறை வாழ்க்கை மாறிப் போனதால் பிற உயிர்களின் வாழ்வியல் சூழ்நிலையும் கேள்விக்குரியதாக பரிதாபத்துக்குரியதாக ஆகி விட்டது..

    மிச்சம் இருக்கின்ற யானை வாழ்விடங்கள் வறண்டு போய் இருக்க காட்டில் 21 இடங்களில் தீ பிடித்து இருக்கின்றதாம்..

    பதிவு மனதை அழுத்துகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது போல மனிதனின் நடைமுறை வாழ்க்கை மாறி போனதால் பிற உயிர்களின் வாழ்வியல் சூழ்நிலையும் கேள்விக்குரியதாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.


      //மிச்சம் இருக்கின்ற யானை வாழ்விடங்கள் வறண்டு போய் இருக்க காட்டில் 21 இடங்களில் தீ பிடித்து இருக்கின்றதாம்..//

      ஆமாம், நீர் தேடி உண்வை தேடி கூட்டம் கூட்டமாக நாட்டுக்குள் வருகிறது, யானை, புலி, சிறுத்தை எல்லாம்.

      விலங்குகள் படும் துன்பம் மனதை வருத்தபட வைக்கிறது.

      நீக்கு
  18. படங்கள் இயல்பாக இருக்கின்றன.. ஏதேதோ கதைகளைச் சொல்கின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் கதை சொல்கிறதா? மனதில் தோன்றியதை கதையாக எழுதுங்கள்.

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு